Jump to content

ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா? வரலாறு என்ன சொல்கிறது?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா? வரலாறு என்ன சொல்கிறது?

 • பிரமிளா கிருஷ்ணன்
 • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராஜராஜசோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா?

ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளத்தைக் கொடுக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியதையடுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னனின் மதம் எது என்பது குறித்த சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனின் 60வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, சோழ மன்னன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது என தமிழர்களின் அடையாளத்தை பறிக்கிறார்கள்" என பேசியிருந்தார். இதற்குப் பதில் சொல்லும் வகையில் பேட்டியளித்த இயக்குனர் பேரரசு, "ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான், இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்தான்" என்றார்.

இதையடுத்து ராஜ ராஜ சோழனின் மதம் எது என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடக்க, பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சிகளின் விவாத மேடைகளை இந்த விவகாரமே பிடித்துக்கொண்டது.

ராஜ ராஜ சோழன் வாழந்த காலத்தையும் இந்து மதத்தின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்த்துதான் இந்த சர்ச்சையில் பேச வேண்டும் என்கிறார் விவேகானந்தா கல்லூரியின் ஓய்வுபெற்ற வரலாற்று துறை பேராசிரியரான அ. கருணானந்தம்.

 

''ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலம் கி.பி. பத்து மற்றும் பதினொன்றாவது நூற்றாண்டு. இந்து என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தபட்ட காலம் ராஜ ராஜ சோழனின் காலத்திற்கு மிகவும் பிந்தைய காலம். ராஜ ராஜ சோழனின் காலத்தில் இந்து என்ற சொல்லாடல் பயன்பாட்டில் இல்லை என்பது உறுதி. இதுவரை கண்டறியப்பட்ட சோழர் காலக் கல்வெட்டு எதிலும், இந்து என்ற சொல் காணக்கிடைக்கவில்லை. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எதிலும் இந்து என்ற சொல் நேரடியாக மதத்தை குறிக்கும் பொருள் கொண்ட சொல்லாக அந்தக் காலத்தில் அறியப்படவில்லை. அதனால், ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை'' என்கிறார் கருணானந்தம்.

மேலும், ராஜ ராஜ சோழனின் காலத்தில் சைவ, வைணவ மதங்களே முதன்மை மதங்களாக இருந்தன என்கிறார் கருணானந்தம். "ராஜ ராஜ சோழனின் காலத்தில் சிவனை முழு முதற் கடவுளாக பார்க்கும் சைவ மதம் தழைத்தோங்கி இருந்தது. அப்போது இந்து என்ற மதமே கிடையாது. சைவம், வைணவம்தான் முதன்மையான மதங்களாக இருந்தன. சமணம் மற்றும் பௌத்த சமயங்கள் அந்த காலகட்டத்தில் அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தன. சைவம், வைணவ மதத்தில் அந்தக் காலத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. ராஜராஜ சோழன் பின்பற்றிய வழிபாட்டு முறைகள் பாசுபத சைவம் என்ற பிரிவை சேர்ந்ததாக உள்ளன. அதனால், ராஜராஜ சோழன் இந்து மன்னனாக இருந்திருக்கவில்லை" என்கிறார் அவர்.

 

பேராசிரியர் அ. கருணானந்தம்

 

படக்குறிப்பு,

பேராசிரியர் அ. கருணானந்தம்

மேலும், தற்போதைய இந்து மதம் என்ற சொல்லாடலுடன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்த மதத்தை இணைத்துப் பார்ப்பது தேவையற்றது; அது ஒரு வரலாற்று பிழை என்கிறார் அவர். ''வடமேற்கு திசையில் இருந்து இந்தியவுக்கு வந்த பாரசீகர்களும் கிரேக்கர்களும் இந்திய நாட்டை அப்போது சிந்து என்று வழங்கினார்கள். அந்த பெயர் சிந்து நதி பகுதியில் வசிப்பவர்கள் என்ற அர்த்தத்துடன் வழங்கப்பட்டது. காலப்போக்கில் சிந்து என்பது, ஹிந்து, இந்து என்று மருவிவிட்டது. சிந்து என்றால் நதி என்று அர்த்தம், ஆனால் இந்து என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. காலப்போக்கில் அரசியல்வாதிகள் இந்து என்பதை மதத்தை குறிக்கும் சொல்லாக மாற்றிவிட்டார்கள்'' என்கிறார் கருணானந்தம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சிவன் கோவில்களில் பின்பற்றப்பட்ட மதம் சைவ மதம்தான் என்கிறார் 'இராஜராஜம்' என்ற நூலை எழுதியுள்ள வெ. ஜீவகுமார்.

''ராஜ ராஜனின் காலத்தில் சிவன் கோயில்களில் பின்பற்றப்பட்ட மதத்தை சைவம் என்றுதான் வழங்கினார்கள். தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களில் சைவம் என்ற சொல்தான் வழங்கப்படுகிறது. இன்றும்கூட சைவத்தை தனி மதமாக கருதுபவர்கள் இருக்கிறார்கள். சிவலிங்கத்தை மட்டும் வழிபடும் லிங்காயத்துகள் கூட தாங்கள் இந்துக்கள் அல்ல என்றுதான் கூறுகிறார்கள். சைவத்தை போலவே, ராஜ ராஜனின் காலத்தில் சமணமும் பௌத்தமும் பின்பற்றப்பட்டது. வைணவமும் பின்பற்றப்பட்டது. கடவுளை வணங்காமல் வாழ்ந்த சித்தர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். தான் சைவத்தை பின்பற்றினாலும், ராஜ ராஜனின் ஆட்சியில் பல மதங்களும் இருந்ததால் ஒரு மதத்தின் மன்னனாக ராஜ ராஜன் அறியப்படவில்லை" என்கிறார் ஜீவகுமார்.

 

ராஜராஜ சோழனின் ஓவியம்

 

படக்குறிப்பு,

ராஜராஜ சோழனின் சதயவிழா நினைவு சிறப்பிதழ் ஓவியம்

சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் முதன்முதலில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிப்பிட இந்து என்ற சொல்லை பயன்படுத்தியதாகச் சொல்கிறார் அவர். "விதவிதமான கடவுள்களை வணங்கும் மக்களை, ஒரே பிரிவாகச் சேர்த்து அழைக்க இந்து என்ற சொல்லை ஆங்கிலேயர்கள்தான் குறிப்பிட்டார்கள். சர் வில்லியம் ஜோன்ஸ் 1790களில் சட்டங்களை தொகுக்கும்போது, கிறிஸ்துவர்கள் அல்லாமல், இஸ்லாமியர்கள் அல்லாமல் இருக்கும் ஒரு பெரும் தொகையான மக்களை இந்துக்கள் என்ற பெயரில் வழங்கினார். அது மதத்தின் அடையாளம் அல்ல, ஒரு பெயர் அல்லது குறியீடு மட்டும்தான்" என்கிறார் ஜீவகுமார்.

தற்போதைய வழக்கங்களை வைத்துக்கொண்டு ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்வது பிழை என்கிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் தத்துவம் மற்றும் மத சிந்தனைகள் பிரிவின் பேராசிரியர் சரவணன்.

''இந்து என்ற சொல்லுக்கு தனியாக ஒரு வழிபாட்டு முறையோ கடவுளோ கிடையாது. இந்து என்று சொல்லில் குறிப்பிடுவது வேத காலத்து வழிபாட்டைத்தான். அதாவது வேள்வி நடத்தி வழிபாடு செய்வது. அது சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பது. அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகத்தான் தமிழர்கள் பின்பற்றிய மத வழிபாடுகள் இருந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் கூட ஆறு மதங்களைக் குறிக்க ஷன்மதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். அதாவது, சிவனை வழிபடுவது சைவம், விஷ்ணுவை வழிபடுவது வைணவம், முருகனை வழிபடுவது கௌமாரம், சூரியனை வழிபடுவது சௌரம், கணபதியை வழிபடுவது காணாபதியம், சக்தியை வழிபடுவது சாக்தம் என்று வகைப்படுத்தியுள்ளார். அதனால், தற்போதைய சொல்லாடலை வைத்துக்கொண்டு ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்வது பிழை" என்கிறார் சரவணன்.

மேலும், சைவம் என்ற மதமே இந்து என்ற சொல்லில் மறைக்கப்பட்டது என்கிறார் சரவணன். ''திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான நூல்களில்கூட இந்து என்ற குறிப்புகள் வரவில்லை. அதனால், பிற்காலத்தில் அரசுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், வேத பிராமணர்கள் உயர்வானவர்கள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தினர். பிறகு ஒரு கட்டத்தில், சைவ மதத்தின் முழு முதற் கடவுளான சிவனை பல இந்து கடவுள்களில் ஒருவராக இணைத்தனர். இப்படித்தான் சைவ மதத்தை இந்து என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து அதனை விழுங்கினர். பின்னர் வைணவத்திற்கும் அதுதான் நேர்ந்தது. சைவத்தை முழுமையாக பின்பற்றுபவர்கள் தாங்கள் இந்துக்கள் என்று தற்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்கிறார் சரவணன்.

''ஹிந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் இந்துக்கள்''

ஆனால், வெற்றிமாறனின் கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலரான எச். ராஜா.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை என்பதால், அந்தச் சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறார் தமிழக பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

''இந்தியா என்கிற ஹிந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம். சைவமும், வைணவமும் மோதிக்கொண்டதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது இந்து என்ற சொல்தானே? குருதிச் சேற்றில் தலைகள் உருண்டதாகவே வைத்து கொள்வோம். அதை தடுத்து, சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல்தானே? அதனால், இந்து என்ற சொல்லை வழங்குவதில் தவறில்லை,'' என்கிறார் நாராயணன் திருப்பதி.

https://www.bbc.com/tamil/arts-and-culture-63147962

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர் பலருக்கு ஹிந்து மதம் சைவ சமயம்  இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு புரிவதில்லை. 

மதம் என்று எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் பிரச்சனைதான். அது எல்லா மதங்களுக்குமே பொருந்தும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கல்வி திணைக்களம் பதிப்பித்த எமது சமய பாடத்தில் சைவ சமயத்தை வளர்த்தார் என்று சொல்லப்பட்டது? 🤔🤔

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ் களத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் கண்டதில் சந்தோசம்.  பல சிரமங்களின் மத்தியிலும் இடைத்தடங்கலை சரி செய்த நிர்வாகத்தினர்க்கு மனமார்ந்த நன்றிகள். ஐயா மோகனுக்கும் நன்றிகள். உறவுகள் அனைவர்க்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள். வீடெங்கும் ஒளி பரவட்டும்.  
  • மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ, எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பகாலத்தில் புகையிலை பொருட்கள் அல்லது மதுபானங்களை பயன்படுத்தத் தொடங்கும் நபர்கள் மரிஜுவானா, கொக்கெய்ன், ஹெரோயின், ஐஸ் போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை அடிக்கடி வளர்த்துக் கொள்வார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என பேராசிரியர் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் 2021 இல் இலங்கையின் மக்கள் தொகையில் 28% ஆனோர் மது அருந்தினர். உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய்கள், செரிமான பிரச்சினைகள், புற்றுநோய்கள் (மார்பகம், வாய், தொண்டை, உணவுக்குழாய்) போன்ற மது அருந்துவதால் ஏற்படும் நோய்களால் இலங்கையில் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக பேராசிரியர் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். , குரல்வளை, கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் போன்றவை) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. அற்ககோல் குடும்பம் மற்றும் வேலை தொடர்பான உறுதியற்ற தன்மை உள்ளிட்ட சமூக பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. புகையிலை அதன் பாவனையாளர்களில் பாதிப்பேரைக் கொல்வதாகவும், புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 60 இலங்கைப் பிரஜைகள் மரணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை பயனர்களின் குடும்ப நல்வாழ்வையும் எதிர்மறையாகப் பாதிக்கின்றன. 2016 இல் புகையிலை வரி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 88.5 பில்லியனாகும் அதேவேளை புகையிலை தொடர்பான நோய்களுக்கான சுகாதாரச் செலவு 15.3 பில்லியனாகும். இந்தத் தொகையில், வரி செலுத்துவோர் ரூ.8.3 பில்லியனைச் சுமக்க வேண்டும், தனிநபர்கள் ரூ.5.9 பில்லியனைச் செலுத்தினர் மற்றும் சுகாதார காப்பீடு ரூ. 1.1 பில்லியன் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/226417
  • இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில் இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம். இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=168438
  • யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!       யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளத்துடன் ,பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.   -யாழ். நிருபர் பிரதீபன் https://tamil.adaderana.lk/news.php?nid=168441
  • 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!       அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168417
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.