Jump to content

தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தாய்லாந்து

பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT

தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய பிறகு தன்னைதானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் அவர் போதைப் பழக்கம் காரணமாக கடந்த வருடம் காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

என்ன நடந்தது?

 

thailand

என்ன நடந்தது என்பதை காவல்துறையினர் விவரித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி நர்சரிக்கு வந்த பிறகு தனது குழந்தை இல்லை என்றவுடன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

அதன்பிறகு அவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். பின் தனது வாகனத்தை செலுத்தி கூட்டத்தில் மோதியுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு சென்று தனது மனைவி மற்றும் குழந்தையை கொன்றுள்ளார் என காவல்துறை செய்தி தொடர்பாளர் பைசன் லுசோம்பூன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் 31 வயது கண்ட பவீனா புரிச்சன் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசுகையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தியதை தான் கண்டதாக தெரிவித்தார்.

"சாலையில் பிறர் மீது மோத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் வாகனத்தை செலுத்தினார்." என்கிறார் பவீனா. அவரின் வாகனம் என்னை நோக்கி வரும்போது நான் தப்பித்துவிட்டேன் என்றும் பவீனா கூறுகிறார்.

மேலும் தாக்குதல் நடத்தியவர், போதை பொருளுக்கு அடிமையானவராக உள்ளூரில் அறியப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-63157536

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.