Jump to content

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்.

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக  யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப் பண்ணைகள் செயற்படுவதாக எண்ணுகிறோம்.

குறித்த கடற்பகுதிகளில் சீனா நேரடியாக அட்டைப் பண்ணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் சீனா மறைமுகமாக   கொழும்பு நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வளமான எமது குடாக்கடலின் பல ஏக்கர் பரவைக் கடல் பகுதிகளை முறையற்ற விதத்தில் அட்டைப் பண்ணைகள் அமைத்து வருவதாக அறிகிறோம்.

இயற்கையாகவே மீனினங்கள் இனப்பெருகத்திற்கேற்ற கண்ட மேடை பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட எமது குடாக்கடல் இயற்கையாகவே இறால் உற்பத்தி பெருகும் இடங்களாகவும் காணப்படுகிறது.

இந்த பிரதேசங்களில் அட்டைப் பண்ணைகளை அமைத்து கடல் நீரோட்டங்களை தடுத்து எமது கடலை நாசப்படுத்தும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதன் ஆரம்ப புள்ளியாக பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சிப் பகுதியில்  சீன முதலீட்டு பிண்ணனியில்  பண முதலைகளினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது  குறித்த பகுதிகளில் பணத்தை வாரி வழங்கி முறையற்ற அட் டை  ப்பண்ணைகளை நிலை நிறுத்துவதற்காக போராட்டங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான போராட்டக்காரர்களால் மீனவ சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் நிலையை சீனா உருவாக்கி தனது இருப்பை தக்க வைக்க முயல்கிறது.

30 வருட யுத்தத்தின் பின்னர் முழுமையாக பொருளாதார ரீதியாக கட்டி எழுப்பப்படாத வடபகுதி மீண்டும் சீனாவின் அபிவிருத்தி என்ற யுத்தத்தினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

மேலும்  சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள்  பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரம் பேர் இன்றும் பொருளாதார ரீதியாக    கட்டியெழுப்புவதற்கு  சீனா உதவி செய்யவில்லை.

சீனா தற்போது உதவி என்ற போர்வையில்  வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள்  ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை தனக்கு சாதகமாக நிகழ்த்துவதற்கு  முன்னகர் வதாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்.

எமது கடல் எமக்குச் சொந்தமான நிலையில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் மீனவ மக்களையும் எமது கடலையும் சீனா கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் மக்களை பொருளாதார நீதியில் அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ  மக்களுடன் சேர்ந்து   எமது கடல் வளத்தை  பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என கூறிக் கொள்ள விரும்புகிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1303302

  • Like 1
Link to comment
Share on other sites

இந்தியா ஒரு பக்கம், சீனா ஒரு பக்கம் என தமிழ் மக்களை உருப்பட விட மாட்டார்கள் போல.

சிங்கள அரசு கையை காட்டி விட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத ஹிந்தியாவிடமும் சொல்லுங்கோ. புண்ணியமாப் போம். 

சீனன் எங்களை அழித்தவனல்ல. கிந்தியாதான் எங்களை அழித்தது. 

யாழ் பல்கலை ஹிந்தியாவின் கூடாரமாக மாறி வருகிறதோ....☹️

😏

  • Like 1
Link to comment
Share on other sites

இப்படிக் கடிதமும் எழுதி ஆர்ப்பாட்டமும் செய்தால் சீனா பயந்து திட்டத்தைக் கைவிடாது. இலங்கை அரசங்கமும் சீனவுடன் தமிழர்களது முரன்பாட்டை ஆதரிக்கும். மாறாக இத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்களை ஆராய்ந்து அதனை ஈடு செய்வதற்கான மாற்று வழிகளைச் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் சீனாவின் உதவிகளை வரவேற்பதுமே புத்திசாலித்தனம்.

6 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடிதத்தை வாசித்தால் அது எழுதப்பட்டதன் நோக்கம் புரியும்.

சட்ட விரோதமான முறையில் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அதனை தமிழ்த் தலைவர்களிடமே முறையிட வேண்டும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இப்படிக் கடிதமும் எழுதி ஆர்ப்பாட்டமும் செய்தால் சீனா பயந்து திட்டத்தைக் கைவிடாது. இலங்கை அரசங்கமும் சீனவுடன் தமிழர்களது முரன்பாட்டை ஆதரிக்கும். மாறாக இத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்களை ஆராய்ந்து அதனை ஈடு செய்வதற்கான மாற்று வழிகளைச் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் சீனாவின் உதவிகளை வரவேற்பதுமே புத்திசாலித்தனம்.

முதலில் அங்கிருப்பவர்களுக்கு புரியணுமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை வசனம் மற்றும் புரியாணி குவாட்டர் தவிர விசேட கவனிப்பு எல்லாம் தமிழர் விரோத தேசம் இந்தியா எனப்போட்டிருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முதலில் அங்கிருப்பவர்களுக்கு புரியணுமே .

புரியிறதுக்கு  முதல் அங்கை இருக்கிற மூத்த பூத்த தமிழ் அரசியல்வாதிகள் அனுமதிக்கணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

 

11 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.

  இப்படியான ஒரு கைபொம்மையை வைத்துக்கொண்டு, நீங்கள் போராடுவது பயனற்றது. இதையெல்லாம் முன்பறிந்தே கோத்தா இவரை துணைவேந்தராக நியமித்தார்!

4 hours ago, இணையவன் said:

சட்ட விரோதமான முறையில் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அதனை தமிழ்த் தலைவர்களிடமே முறையிட வேண்டும். 

  தமிழ்த் தலைமைகளா? அப்படி யாராவது உண்டா? இருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மாணவர்களுக்கு முதல் அவர்களல்லவா இவற்றை கவனித்திருக்க வேண்டியவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகம் , யாழ் ஹிந்துப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும்..

🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைகழகம் சென்றோமா,படிச்சமா என்று இருப்பது சிறந்தது,  இந்த காந்தீய,மாவோ சிந்தனைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் பழகி கொள்ள வேண்டும்....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.