Jump to content

கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1304338

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

நினைவஞ்சலிகள்.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலி. 

இந்தக் கொடுமை நிகழ்ந்த பூமியை நிஜத்தில் தரிசித்த ஞாபகங்கள் இன்றும் உள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக கொடூரமாக கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலிகள் நிச்சயம் ஒரு நாள் அதே இந்திய பெண்ணை படைகள் நாம்  வாழும் காலத்தில்அழிவை சந்திக்கும் சந்திக்கணும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

என்னடா, மொட்டையா படுகொலை என்டு மட்டும் போட்டுட்டு விட்டுட்டாங்கள்?
மக்களை வீதியில் படுக்க வைத்து அவர்களின் மேல் கவசவூர்த்திகளை ஏற்றி ஓட்டினர் இந்தியப் படையினர். வடிவா எழுதுங்கோவன்!

"இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது!"

இதே போல இன்னொன்டு மட்டக்களப்பிலையும் நடந்தது. இது நான் எங்கையோ வாசித்த ஞாபகம். அரைகுறையாகத்தான் ஞாபகத்தில் உள்ளது.

நடந்தது என்னவென்றால், அன்னை பூபதிக்கு ஆதரவாக இரண்டு அண்ணன்கள் உண்ணாநோன்பில் கலந்துகொண்டனர். அவர்கள் அன்னவரின் உறவினர். அவர்களை மிரட்டுவதனே மூலம் அன்னை பூபதியின் உண்ணாநோன்பை கலைத்துவிடலாம் என்று எண்ணிய இந்தியர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து கைகால்களை சுவரோடு - உண்ணாநோன்பு நடந்த இடத்திற்கு அருகில் - இழுத்துக் கட்டி தகரியால் நசிக்கப் போவதாக மிரட்டினர். அன்னை பூபதி பணிய மறுத்திட அவ்விரு அண்ணாக்களையும் தகரியால் சுவரோடு சேர்த்து நசித்தே கொன்றனர், இந்தியக் கவசப்படையினர்! அப்பொழுதும் அன்னை பூபதி பணிந்திடவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்
added a sentence
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது!"

எனது சந்ததிகள் இந்தியாவை எரிக்கும். இந்தியா ஒருநாள் உடையும்.  💪

 

சிங்களம் எனது எதிரி, இந்தியா தமிழினத் துரோகி

😡

  • Thanks 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

“இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது!"

எனது சந்ததிகள் இந்தியாவை எரிக்கும். இந்தியா ஒருநாள் உடையும்.  💪

 

சிங்களம் எனது எதிரி, இந்தியா தமிழினத் துரோகி

😡

அந்த பொன்னான நாளை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்த பொன்னான நாளை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்.

யாரோ ஒருவருக்கு முளி பிதுங்குகிறது. அது யாராக இருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.