Jump to content

நீலகண்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
neelakandan.jpg
 

 

 

முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே நீலகண்டத்தைப் படித்தேன்.

 எந்தவித இரக்கத்தையும் தன்னிரக்கத்தையும் கோராமல் ஊனத்தைப் பார்க்க முயல்வது இந்நாவலின் ஒரு சிறப்பு. மனிதர்கள் அடிப்படையில் தன்னலம் மிக்கவர்களே. அதுவும் குடும்ப அமைப்புக்குள் - அது தியாகத்தைக் கோருவதாலே - அவர்கள் மிகவும் மூர்க்கமாக மாறுவார்கள். குறிப்பாக அந்த மாற்றுத்திறனாளிக் குழந்தையின் அம்மாவின் பாத்திரம் தன் குடும்பத்தினருடன் உறவை சீர்படுத்தியதும் அவர்களின் கைப்பாவையாக மாறி தன் மாற்றுத்திறனாளிக் குழந்தையைக் கைவிட முன்வருகிற இடம் வெகுசிறப்பு. அதுவும்

 

அவரது சாதிப் பின்னணியும், அதனாலே தன் கணவனிடத்து அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தும் ஆதிக்க பாவனைகளும், அது ஒரு தவறென அவருக்குத் தோன்றாதிருப்பதும் நாவலில் சரியாக வந்திருக்கின்றன. இந்த இடங்களை சுனில் எந்த மனிதநேய நெஞ்சுநக்கலும்’, செண்டிமெண்டல் நாடகீயங்களும் இல்லாமல் சித்தரித்திருக்கிறார். இது எதார்த்தத்துக்கு வெகுநெருக்கமாக இருக்கிறது

 

 

இந்த நாவலுக்குள் மூன்று நாவல்கள் உள்ளன: ஒன்று பெற்றோரின் தத்தளிப்புகளை, நெருக்கடிகளை, குற்றவுணர்வைப் பேசுவது. இரண்டாவது, மாற்றுத்திறனாளிக் குழந்தையின் மனநிலையை மொபைல் விளையாட்டுகள், எதார்த்தத்தைப் போன்றே தோன்றும் பகற்கற்பனையான மனவோட்டங்களைச் சித்தரிப்பது. மூன்றாவது, பின்நவீன கதையாடல்களின் தனியான ஒரு தடம். இவற்றில் இரண்டாவதே மிகவும் சிரமமானது என்பதாலே நாவலாசிரியரை அதற்காக வெகுவாகப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது

குழந்தைக்கும் அவளது அப்பாவுக்கும் இடையில் எவ்வளவு முயன்றாலும் எட்ட முடியாத ஒரு தொலைவு தோன்றுகிறது. நாவல் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசத் துவங்கி  - எட்டாவது அத்தியாயத்தில் இருந்து - தடம் புரள்கிறது. பின்னர் பத்துக்கு மேற்பட்ட அத்தியாயங்களில் கதை இந்த அப்பா பாத்திரத்தின் அலுவலக, குடும்ப, பரம்பரைக் கதைகள், பின்நவீன கதையாடல்கள் என அவருடைய குற்றவுணர்வு, நெருக்கடிகள் குறித்த ஒரு தனிப்பயணமாகிறது. இதில் செட்டியார்களிடையே குழந்தையை தத்தெடுக்கிற மரபான சடங்கு, மனவளர்ச்சியற்ற குழந்தைகள் இறந்து தெய்வமாவது போன்ற இடங்கள் நாவலின் கதையின் ஒரு இணைக் கதையாடலாகிறது, அதாவது பிரச்சினையை மீள மீளக் காட்டுகிறது, ஆனால் மேலும் சிக்கலாக்கவில்லை

 

ஒரு உதாரணத்திற்கு, மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதில் பீஷ்மர் போன்றவர்கள் செய்கிற எதிர்பாராத தவறுகள் ஒரு பெரும் பாவமாக உருமாறி அவர்களையும், அடுத்தடுத்த வாரிசுகளையும் வந்து திரும்ப அடிக்கையில் அதன் நியாயமும் அபத்தமும் கதையைத் தீவிரமாக்குகிறது. ஒரு சிறு பிழையின் பெரும் ரத்தக்களறியான விளைவை, துரோகங்களைக் காண்கிறோம். ஜெயமோகனின் ரப்பரில் துவக்கத்திலே அந்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தின் மூத்தவர் தன் முன்னேற்றத்துக்காக செய்கிற சிறிய பாவங்கள் (இயற்கையை அழிப்பது), அவருக்கு முன்பு அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நாயர்கள் செய்த தீண்டாமைக் குற்றங்கள் சித்தரிக்கப்படும். இவற்றின் விளைவு நாவலின் முடிவில் பாத்திரங்களுக்கு நிகழ்வனவற்றுடன் முடிச்சிடப்படும். அப்போது விளைவுகள் வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிற அளவுக்கு இருக்கும். அப்படியொரு சிக்கலை நோக்கி நீலகண்டத்தின் குடும்பக் கதைகள், தொன்மங்களில் வரும் குற்றவுணர்வு சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட திசைகளில் பயணித்ததால் சுனிலால் அதில் அக்கறை செலுத்த முடியவில்லை என நினைக்கிறேன் ஆனால் கடைசி சில அத்தியாயங்களில் தான் அதுவரை குறிப்புணர்த்திய கதையாடல்களுடன் கிளைமேக்ஸை அழகாக முடிச்சிட்டு நிறைவைத் தந்து விடுகிறார்

 

இந்நாவலின் மற்றொரு குறையென்றால் அது மாற்றுத்திறனாளி உடலை மற்றமையாகப் பார்க்கும் போக்கே. மற்றொரு பிரச்சினை விக்கிரமாதித்யன் வேதாளம் உரையாடல் பகுதிகளில் (நாவலுக்குள் வரும் மூன்றாவது நாவல்) சுனில் அறப்பிறழ்வு பற்றி ஒரு தத்துவச் சிக்கலை எழுப்ப முயல்கிறார். ஆனால் அது தீவிரமாக நிகழவில்லை

 

ஒருவேளை இவ்வளவு பேராவலுடன் நாவலின் களத்தை அவர் அமைக்காவிடில் இன்னும் வலுவாக அவரால் மாற்றுத்திறனாளிகளின், அவர்களுடைய பெற்றோரின் உலகைப் பேசியிருக்க முடியும். ஆனால் பேராவல் தானே உன்னதமான நாவல்களை எழுத நம்மை உந்தித் தள்ளுகிறது. அதனால் தவறில்லை. இந்த சிறுகுறைகளைக் கடந்து பார்த்தால் தமிழில் நான் படித்த நாவல்களில் என்னால் மறக்கவே முடியாத, பல படங்களில் மனசாட்சியைப் பற்றி உலுக்கிற நாவலாகநீலகண்டம் உள்ளது.

Posted 6 hours ago by ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2022/10/blog-post_12.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.