Jump to content

கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம்

By VISHNU

12 OCT, 2022 | 07:33 PM
image

!

( எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியை இன்று (12) சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடாத்தியுள்ளனர். 

கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டு, ஸ்தல விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும், பல ஆவணங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சி.ஐ.டி.க்கு இந்த மோசடி தொடர்பில் முதல் முறைப்பாட்டை முன் வைத்த அப்துல் சத்தார் என்பவர் முதல் இதுவரை 9 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை எட்டியுள்ளதாகவும், இது 1000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும்  குறித்த உயரதிகாரி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே இன்று (12) சந்தேக நபரான திலினி பிரியமாலி, திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தை நடாத்தி சென்ற கொழும்பு - கோட்டை உலக வர்த்தக மைய கோபுரத்தின் 34 ஆவது மாடியில்  அமைந்துள்ள சொகுசு அலுவலகத்துக்கு  அழைத்து செல்லப்பட்டார். இதன்போது  அவருக்கு கைவிலங்கு எதுவும் இடப்பட்டிருக்கவில்லை.

அங்கு வைத்து குறித்த அலுவலகத்திலிருந்த பல ஆவணங்கள் சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைவிட மேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள மேலும் 3 இடங்களுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், தற்போதும் பாராளுமன்றில் இருக்கும் செல்வாக்கு மிக்க இளம் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேசப்படும் பெண் ஒருவருக்கும்  திலினிபிரியமாலியின் மோசடிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்து தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

 குறித்த பெண்ணை சி.ஐ.டி.யினர் விசாரணைச் செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அவரிடம் முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, பல நடிகர்கள், நடிகைகள், கலைஞர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டி. நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளது.

திலினி பிரியமாலி மோசடி செய்தோர் அல்லது கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தோர் தொடர்பிலான அனைத்து விபரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசி ஒன்றிலும்,  கணினி ஒன்றிலும் இருப்பதாக நம்பும்  சி.ஐ.டி.யினர். அவற்றை கைப்பற்றி சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணைங்கவின் கட்டுப்பாட்டில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபரான திலினி பிரியமாலி எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மேலதிக வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

https://www.virakesari.lk/article/137533

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், தற்போதும் பாராளுமன்றில் இருக்கும் செல்வாக்கு மிக்க இளம் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேசப்படும் பெண் ஒருவருக்கும்  திலினிபிரியமாலியின் மோசடிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்து தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

அவருக்கு…. அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதால்,
இன்னும் ஒரிரு மாதங்களில் குற்றம் அற்றவராக…
நீதிமன்றமே தீர்ப்பளித்து விடுதலை செய்யும்.
இது வரை… எல்லா குற்றவாளிகளுக்குமே அதுதான் நடந்தது.
பிறகு ஏன்… விசாரணை, மண்ணாங்கட்டி என்று கொண்டு மக்களின் பணத்தை வீணாக்குகின்றீர்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்த பிணைமுறி அர்ச்சுனாவே  வெளியிலை வந்திட்டராம்..இவ நாளைக்கே..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திலினி பியமாலி: இலங்கையில் பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கிய இவர் யார்?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அழகே மூலதனம் நிதி மோசடி

பட மூலாதாரம்,THILINI PIYAMALI FACEBOOK

 

படக்குறிப்பு,

திலினி பியமாலி

இலங்கை பொருளாதார நெருக்கடியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்ததாக பேசப்படும் பெண் குறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரது பெயர் திலினி பியமாலி.

கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, இவர் பல பிரபல்யங்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியதாக திலினி பியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் மாத்திரமன்றி, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

திலினி பியமாலி என்ற குறித்த பெண், பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

யார் இந்த திலினி பியமாலி?

களுத்துறையில் பிறந்த திலினி பியமாலி, பாடசாலை கல்வியை கூட முழுமையாக நிறைவு செய்யாத ஒருவர் என அறிய முடிகின்றது.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு மோசடி நடவடிக்கைகளின் ஊடாகவே செல்வந்தராகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

என்ன மோசடி?

 

திலினி பியமாலி

வெளிநாடுகளில் நிதி முதலீடு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு ஆகியவற்றுக்கு வட்டியை வழங்குவதாக கூறி பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக திலினி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு - உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியை, பல லட்சம் ரூபா வாடகைக்கு பெற்று, அதில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.

இவ்வாறு நடத்திச் செல்லும் நிதி நிறுவனத்தின் ஊடாகவே, நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தற்போது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறப்படும் பலரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, கடந்த 6ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிக்குண்ட பிரபல்யங்கள் யார்?

திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக அரசியல்வாதிகள், பிக்குகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் என பலரது பெயர்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றனர்.

திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறுப்படும் தரப்பினர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த சில தினங்களாக முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கொடஹேவா, சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பொதுபல சேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

திலினி பியமாலியின் திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் நிதி முதலீடு செய்ததாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக மேலும் பலர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு போலீஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

விளக்கமறியலில் திலினியிடம் கைபேசி

 

திலினி பியமாலி

இதற்கிடையே, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி வசமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இருவேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டிருந்தன. திலினி பியமாலியின் சிறை கூடத்தை சோதனையிட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிறையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை உள்ளபோதும் அந்த சானங்கள் அவரிடம் வந்தது எப்படி என்பது குறித்து நேற்றைய தினம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

கொழும்பு மேலதிக நீதவான் தலைமையிலான விசாரணை குழாமினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி விசாரணைக்காக அண்மையில் உலக வர்த்தக மையத்திலுள்ள அவரது திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தின் அலுவலகத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

தைகோ குழுமம் பதில்

தமது நிறுவனம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து முழு நாடும் அறியும் எனவும், தமது நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் தைகோ நிறுவனங்கள் குழும ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

''இந்த சம்பவம் தொடர்பில் முழு நாடும் அறியும். அதனால், திரிகோ குழுமத்தில் கடமையாற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. எமது கடமைகளை நாம் அன்று முதல் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். கடமைகளை அவ்வாறே முன்னெடுத்து செல்லுமாறு நிறுவனத்தின் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிறுவனம் மூடப்படவில்லை. 34வது மாடியிலுள்ள திரிகோ குழுமத்தின் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் தவறிழைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு ஒன்றும் கிடையாது" என தைகோ நிறுவனங்கள் குழுமத்தின் ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-63259821

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கொடஹேவா, சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பொதுபல சேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இவர்களோடு பெரிய தலை ஒன்றின் இளைய தளபதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அவரும் வழமைபோல் நிராகரித்து விட்டார். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெரிய அண்ணர் மகிந்த இவரை சந்தித்த படம் இணையத்தில் உலா வருகிறது…

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இவர்களோடு பெரிய தலை ஒன்றின் இளைய தளபதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அவரும் வழமைபோல் நிராகரித்து விட்டார். 

 

4 minutes ago, MEERA said:

பெரிய அண்ணர் மகிந்த இவரை சந்தித்த படம் இணையத்தில் உலா வருகிறது…

Rajapaksas deny links to nabbed fraudster Thilini Priyamali

Sri Lanka Gossip Pond - Gossip Collection Around Sri Lanka

மகிந்தவின் மனைவி இவருடன்   நிற்கும் படங்களும் நிறைய உள்ளது.
மகிந்த... கொள்ளை அடித்த பணத்தில் கொஞ்சம் இவரிடம்தான் போலுள்ளது.
அல்லது இவரை வைத்து... மகிந்த, மற்றவர்களின் சொத்துக்களையும் 
கொள்ளை அடித்தாரோ தெரியவில்லை.
ஆனால்... விசாரணைகளில் எதுவும் வெளியே வராது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி பண மோசடி விவகாரம் : 75 கோடி ரூபாவை இழந்ததாக கூறி முறையிட்ட வர்த்தகரின் முறைப்பாட்டில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

By T. SARANYA

15 OCT, 2022 | 12:50 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலிக்கு எதிராக நேற்று (14) நண்பகலாகும் போது 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு 9 முறைப்பாடுகளும் நீர் கொழும்பு பொலிஸாருக்கு 2 முறைப்பாடுகளுமாக இந்த 11 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கேசரிக்கு உறுதி செய்தார்.

சி.ஐ.டி.யினருக்கு இறுதியாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடானது கொழும்பு 7, கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால்  முன் வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த வர்த்தகரிடம், சந்தேக நபரான திலினி பிரியமாலி 75 கோடி ரூபாவை மோசடி செய்ததாக  முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்த வர்த்தகரின் முறைப்பாட்டில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மையப்படுத்தி விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும், விசாரணைகளுக்கு பொறுப்பான உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

'75 கோடியை இழந்த வர்த்தகரின் முறைப்பாட்டில் பல முக்கிய விடயங்கள் உள்ளன. அவரை பிரபல நடிகைகளை கொண்டு அச்சுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.' என குறித்த உயரதிகாரி கேசரியிடம் கூறினார்.

இந்நிலையில், திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க  சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலான சி.ஐ.டி. விசாரணைகள் பிரகாரம்,  திலினி பிரியமாலி குறித்த மோசடி நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின்  பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.  

திலினி பிரியமாலியின் கணவராகவும் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக கூறும் சி.ஐ.டி.யினர், அவரை பல தடவைகள் விசாரித்துள்ளதாகவும்  ஓரிரு நாட்களில் அவரைக் கைது செய்ய வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.

கடந்த 12 ஆம் திகதி  சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று திலினியிடம் விசாரணை நடாத்தியுள்ளனர். கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டு, ஸ்தல விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும்,  இதன்போது பல முக்கிய  ஆவணங்கள்  சிக்கியதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்பாக உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மேற்கு கோபுரத்தின் 34 ஆவது மாடியில் உள்ள அவரது அலுவலக சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

இதனைவிட சி.ஐ.டி.யினர் செய்துள்ள விசாரணைகளில், திலினி பிரியமாலிக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு 3 இலட்சம் ரூபா மறுக்கப்பட்ட காசோலை ஒன்றினை, கோட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வழங்கியமை குறித்து வழக்கொன்று இருந்துள்ளமையையும், குறித்த பணத் தொகையை செலுத்தி அவ்வழக்கை அவர் சமாதானமாக முடித்துக்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

திலினி பிரியமாலி மோசடி செய்தோர் அல்லது கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தோர் தொடர்பிலான அனைத்து விபரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசி ஒன்றிலும்,  கணினி ஒன்றிலும் இருப்பதாக நம்பும்  சி.ஐ.டி.யினர். அவற்றை கைப்பற்றி சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கைஎ எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணங்கவின் கட்டுப்பாட்டில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபரான திலினி பிரியமாலி எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மேலதிக வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

https://www.virakesari.lk/article/137702

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின்  பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. 

இவ்வளவு காலம் இவ்வளவு கோடி  மோசடி செய்ய  விட்டு வைத்து, உறவுகளை பேணி, இனி இவரது மோசடியை விசாரிக்க பல கோடிகளையும், காலங்களையும் செலவழித்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை அடையப்போகும் இவாவுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி? ஆரவாரம்? மோசடிகளின் பின் வெளிவரும் படங்களை பாத்தால் அரசியல்வாதிகள், வெள்ளை வேட்டி, உயர் பதவி, பணக்காரர் படங்களை மாறி போட்டு விடுகிறார்கள் போலுள்ளது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : கைதான திலினியின் 'அப்பச்சி' விளக்கமறியலில்

By VISHNU

18 OCT, 2022 | 09:23 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் தொடர்புபட்ட மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்பட்டமைக்காக அவரது கணவர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள  இசுரு சாமிக பண்டார என்பவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.  

'அப்பச்சி' என திலினி பிரியமாலியினால்  அழைக்கப்பட்ட இசுரு சாமிக பண்டார இன்று (18) கோட்டை நீதிமன்றின் பதில் நீதிவான் ஷிலினி பெரேரா முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி விவகாரத்தின் வழக்கு விசாரணைகள் நாளை (19) விசாரணைக்கு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்கான மோசடி தொடர்பில் சி.ஐ.டி.க்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய  கடந்த 5 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று திலினி பிரியமாலியைக் கைது செய்தது. அதன் பின்னரான விசாரணைகள் சி.ஐ.டி.யினருக்கே அதிர்ச்சியளித்தன.  

இதுவரை சுமார் 12 முறைப்பாடுகள் சி.ஐ.டி.யினரின் விசாரணைக்கு உட்பட்டுள்ள நிலையில், அவற்றூடாக மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை நெருங்கியுள்ளது.  

இறுதியாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி 17 ஆம் திகதி திங்கட்கிழமை சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்திருந்தார்.

அதில் சுமார் எட்டரைக் கோடி ரூபாவை திலினி மோசடி செய்துள்ளதாகவும், தான் காணி ஒன்றினை விற்று  குறித்த முதலீட்டை செய்ததாகவும் ஆவணங்களுடன் அசாத் சாலி முறைப்பாடளித்துள்ளார்.

இந் நிலையில் திலினியின் மோசடி நடவடிக்கைகளின் பெறுமானம்   1000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும்  சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர். இந் நிலையில், சி.ஐ.டி.யினர் திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் ஊழியர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

இந் நிலையில், திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க  சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இதுவரையிலான சி.ஐ.டி. விசாரணைகள் பிரகாரம்,  திலினி பிரியமாலி குறித்த மோசடி நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின்  பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

திலினி பிரியமாலியின் கணவராகவும் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பங்களையும் சி.ஐ.டி.யினர் அடையாளம் கண்ட நிலையிலேயே 17 ஆம் திகதி அவரை மீண்டும் அழைத்து விசாரித்தனர்.

சுமார் 9 மணி நேர விசாரணையின் பின்னர், இசுரு சாமிக பண்டார எனும் குறித்த நபரை சி.ஐ.டி.யினர் மாலை 6.30 மணிக்கு கைது செய்தனர்.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், திலினியும் இசுருவும் சட்ட ரீதியாக திருமணம் செய்துள்ளமை தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், திலினி அவரை ' அப்பச்சி' என செல்லமாக அழைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இசுரு சாமிக பண்டார,  2012ஆம் ஆண்டு  அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவிடம் செயலாளராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.

எனினும் உண்மையில் அவர் செயலாளராக செயற்படவில்லை எனவும் குறித்த முன்னாள் அமைச்சரின் பனிக் குழுவில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், திலினி மோசடி செய்ததாக கூறும் வர்த்தகர்களில் பலரை  அவருக்கு அறிமுகம் செய்து மோசடியை முன்னெடுக்க உதவியவர் இசுரு சாமிக பண்டார என தெரியவந்துள்ள நிலையிலேயே சி.ஐ.டி.யினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்த வர்த்தகரான அப்துல் ஹசன் கமல் ஹசன் எனபவர், 60 ஆயிரம் அமரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் அவுஸ்திரேய டொலர்களையும் ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க நகைகளையும் திலினி மோசடி செய்ததாக கூறியுள்ள நிலையில், அதில் நேரடியாக  இசுரு சாமிக பண்டார  தொடர்புபட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

 அதன்படியே அவரை நாளை வரை நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இது குறித்த அவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, இதுவரை திலினியால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கு என்ன ஆனது என்பது மர்மமாக இருந்து வருகின்றது.  மோசடி செய்யப்பட்ட பணம் அவரது வங்கிக்கணக்குக்கோ, நிறுவன கணக்கிலோ வைப்புச் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில், அவை பணமாக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட முழு பணத் தொகையையும் சந்தேக நபர்கள் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என கூறும்

விசாரணையாளர்கள், இவ்வாறான நிலையில் அந்த பணத் தொகை எங்கோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் சி.ஐ.டி.யினர் தொடர்ச்சியாக பணத்தை கண்டுபிடிக்கவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/137945

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விசாரணை விசாரணை என்று சொல்கிறார்கள் ஆனால் ஒன்றுமே உன்மையாக வெளிவருகிறது இல்ல 🤔🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : திலினிக்கு எதிராக முறைப்பாடளிக்க அரசியல்வாதிகள் பிரபலங்கள் தயக்கம்

By T. SARANYA

20 OCT, 2022 | 12:22 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் முதலீடுகளை செய்துள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயங்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம்  கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு நேற்று (19) அறிவித்தது.

திலினி பிரியமாலிக்கு சொந்தமான திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் கீழ் வரும்  ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்தவர்களில் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும்  பிரபலங்கள்  அடங்குவதாகவும்  , கைப்பற்றப்பட்ட திலினியின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து அந்த தகவல்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிஐடி மன்றில் தெரிவித்தது.

இந்த மோசடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திப்பட்டுவெவ தலைமையில், விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகலவின் கீழான குழுவினர் இந்த விடயங்களை மன்றில் முன் வைத்தனர்.

திலினி பிரியமாலிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 12 முறைப்பாடுகளில்  மூன்று முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தே  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர், இந்த விடயங்களை முன் வைத்தனர்.

நேற்றைய தினம்  வழக்கானது, கோட்டை மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையிலேயே விசாரிக்கப்பட்டது.

இதன்போது இரு வழக்குகள் தொடர்பில் திலினி பிரியமாலியும், மற்றொரு வழக்கு தொடர்பில் திலினிக்கு மேலதிகமாக அவரது கணவராக சித்திரிக்கப்பட்டுள்ள இசுரு பண்டாரவும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.  அவர்கள் விஷேட காரணிகளுக்காக மன்றில் நேரில் ஆஜர் செய்யப்படாது ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நீதிவான் முன்னிலையில் காண்பிக்கப்பட்டனர். இதனைவிட நேற்று கோட்டை பொலிசாரும் புதிதாக ஒரு வழக்கை தாக்கல் செய்து அதில் திலினி பிரியமாலியை சந்தேக நபராக பெயரிட்டனர்.

இந்நிலையில் நேற்று நீதிமன்றுக்கு சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன் வைக்கையில்,

'கனம் நீதிவான் அவர்களே, வர்த்தகர் ஒருவரிடம் (அப்துல் சத்தார்) 226 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி சந்தேக நபரான திலினி பிரியமாளியை நாம் ஏற்கனவே மன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய,  நான்கு இடங்களுக்கு அழைத்து சென்று சோதனை செய்து விசாரணை செய்தோம். வத்தளை பகுதியில் அவரது தங்குமிடம்,  கிருலப்பனை சொகுசு தொடர்மாடியில் உள்ள தங்குமிடம், உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 34 ஆவது மாடியில் உள்ள அவரது நிறுவன அலுவலகம்,  கோட்டை செத்தம் வீதியில் உள்ள கிரிஷ் எனும் நிறுவன வளாகத்துக்கு அழைத்து சென்று சோதனை செய்தோம்.

இதன்போது விசாரணைக்கு தேவையான பல ஆவணங்கள், டிஜிட்டல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான திலினியின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட  கணினிகளில் 5 கணினிகளின்  வன் தட்டுக்கள் ( ஹார்ட் டிஸ்க்) இல்லை என்பது எமது பரிசீலனையின் போது தெரியவந்தது. இது குறித்து விசாரித்து வருகின்றோம்.

சந்தேக நபரின் திகோ  குழுமம் எனும் நாமத்தின் கீழ் கட்டுமானம், பொழுதுபோக்கு, ரத்தினம் மற்றும் நகைகள், ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தகம் தொடர்பிலான  7  நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவங்கள் எவை ஊடாகவும் வருமானம் ஈட்டப்படவில்லை.  மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில், வருமானம் ஈட்டாமல் அவற்றை நடாத்திச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வருமானம் ஈட்டாமல் தனது நிறுவனத்தை நடத்துவதற்காக மாதாந்தம் 4.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், சந்தேக நபர் 350 இலட்சம் ரூபாவை செலவிட்டு திரைப்பட அறிமுக விழா ஒன்றினை நடாத்தியுள்ளார். 

இதனைவிட 55 இலட்சம் ரூபாவைச் செலவிட்டு ஒரு காட்சிப்படுத்தல் மற்றும் விரிவாக்கல் வேலைகளை செய்துள்ளார். எனினும் இவற்றுக்கான பணம் எங்கிருந்து எப்படி கிடைத்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.  விசாரணையின் படி, இந்த செலவுகள் அனைத்தும் மோசடி செய்யப்பட்ட பணம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான திலினியின்  கையடக்கத் தொலைபேசி தற்போது, சி.ஐ.டி. பொறுப்பிலேயே உள்ளது. அதில் பல குறுஞ்ச் செய்திகள், குரல் பதிவுகள் உள்ளன.  அதனை ஆராயும் போது பல அரசியல்வாதிகள், பிரபலங்கள்  குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளமையும் அவர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமையும் தெளிவாகிறது. 

எனினும் அவர்களில் பலர் முறைப்பாடளிக்க தயங்குகின்றனர்.  அவ்வாறு அவர்கள் மிகப் பெரும் பணத் தொகை மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்க தயங்குவது பிரச்சினைக்குரியது.  

கடந்த 2022 ஜனவரி மாதம் முதல்  ஜூலை வரையான காலப்பகுதியில் சந்தேக நபரான திலினியின் வங்கிக் கணக்கில் 3,000 மில்லியன் ரூபா பறிமாற்றப்பட்டுள்ளது.   அந்த பணத் தொகை எங்கிருந்து, யாரால், எப்படி அக்கணக்குக்கு வைப்புச் செய்யப்பட்டது மற்றும் அதனை எவ்வாறு எதற்காக சந்தேக நபர் செலவிட்டார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேக நபர் தண்டனை சட்டக் கோவையின் 386,387,400 ஆம் அத்தியாயங்களின் கீழும்,  கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும்  கடனை மீள அறவீடு செய்தல் தொடர்பிலான சட்டத்தின் 25 (1) ஆம் அத்தியாயத்தின் கீழும்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கருதி இவ்விசாரணைகள் நடக்கின்றன.

எனவே விசாரணைகள் ஆரம்ப நிலையில் இருப்பதாலும், மேலும் பலரைக் கைது செய்ய வேண்டி இருப்பதாலும் திலினிக்கு பிணையளிக்கக் கூடாது.

அதற்கு பல காரணங்கள் உள்ளன. பிரதான சந்தேகநபரான திலினி பிரியமாலிக்கு எதிராக தற்போது நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஏழு  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதே போல சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்தபோது 3 கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதில் இரு கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை நடக்கின்றது.

அதன் பிரகாரம் 11 இலக்கங்களுக்கு 22 அழைப்புக்க் ஒரு கையடக்கத் தொலைபேசி ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் 4 பேரை நாம் விசாரித்துள்ளோம்.  சிலருக்கு அழைத்து, சில நபர்களின் தொலைபேசி இலக்கங்களை சந்தேக நபரான திலினி கோரியுள்ளமை அவர்களது வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்தது.

ஒரு நபருக்கு 4 அழைப்புக்கள் எடுக்கப்பட்டிருந்தன. அந்த நபரை அழைத்து விசாரித்தோம்.  இதன்போது தனக்கு பிணைப் பெற 300 இலட்சம் ரூபாவை கோரியுள்ளார்.

2 தொலைபேசிகள் தொடர்பில் மேலதிக அறிக்கை பெற வேண்டியுள்ளது. எனவே சந்தேக நபருக்கு பிணையளித்தால் அது விசாரணைகளை பாதிக்கும். எனவே பிணையளிக்கக் கூடாது. பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் பிணையை மறுப்பதற்கான அத்தனை நிபந்தனைகளும் உள்ளன. இவருக்கு பிணையளித்தால் பொது மக்கள் கூட கொந்தளிப்பர். ' என சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட வர்த்தகர் அப்துல் சத்தார் சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜரானார்.  அவர்  இந்த மோசடிகளில் திலினி பிரியமாலியைப் போன்றே ஜானகி சிறிவர்தன எனும் பெண்ணும் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவரையும் கைது செய்ய வேண்டும் என கோரினார். 

குறித்த பெண்ணே பலரை திலினியிடம் முதலீடு செய்ய தூண்டியுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்பது அவரைக் கைது செய்தால் தெரியவரும் எனவும் அவர் வாதிட்டார்.

திலினி பிரியமாலி சார்பில்  ரகித ராஜபக்சவுடன் ஆஜரான சட்டத்தரணி தசுன் நாகஹவத்த, சி.ஐ.டி தமது கட்சிக்காரருக்கு எதிராக மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக குற்றம் சுமத்தினார்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக் கூடிய குற்றங்கள் என்பதால், பிணையளிக்குமாறு அவர்  கோரினார். அத்துடன் முறைப்பாடளித்தவர்கள் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை தேட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தனது செவை பெறுநர் மோசடி செய்யவில்லை என வாதிட்டார்.

இவ்வாறான நிலையில்  60,000 அமரிக்க டொலர்கள், ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள், தங்க நகைகளை இழந்த வர்த்தகர் கமல்ஹாசன் வழங்கிய முறைப்பாடு தொடர்பிலான வழக்கு தொடர்பில் திலினி மற்றும் அவரது கணவராக அடையாளப்படுத்தப்பட்ட சுரங்க பண்டார தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பத் வங்கியின்  பிரதி பொது முகாமையாளர் ஒருவர் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது சி.ஐ.டி.யினர் கூறினர்.  

இதனைவிட மோசடி செய்யப்பட்ட தங்க நகைகள் ஒரு தங்க நகை காட்சியறைக்கு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  2 ஆவது சந்தேக நபரான சுரங்க பண்டார இந்த சம்பவத்துடன் நேரடி தொடர்புபட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் சுட்டிக்கடடினர்.

எனினும் இதன்போது 2 ஆம் சந்தேக நபரான சுரங்க பண்டாரவுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரொஷான் தெஹிவல , குற்றச்சாட்டை மறுத்து, விசாரணைகளை துரிதப்படுத்த கோரினார்.

இதனைவிட 44 மில்லியன் ரூபா மோசடி ஒன்று தொடர்பிலும் திலினி பிரியமலைக்கு எதிராக மற்றொரு வழக்கு தொடர்பில் சி.ஐ.டி. நேற்று மன்றுக்கு அறிவித்தது. அந்த வழக்கில்  மதுக நிரஞ்சன் எனும் ஒருவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பால் கோரப்பட்டது.

இவ்வாறான நிலையில்  கோட்டை பொலிஸாரால் மற்றொரு வழக்கு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது. பெண்ணொருவரை ஏமாற்றி அவரது 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அபகரித்தமை தொடர்பில் அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கொழும்பு கோட்டை பதில் நீதவான் ஷிலினி பெரேரா, சந்தேக நபர்களான  திலினி பிரியமாலி மற்றும் அவரது வர்த்தக பங்குதாரரான கணவர் என அடையாளப்படுத்தப்பட்ட  இசுரு பண்டார ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/138072

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : திலினிக்கு எதிராக முறைப்பாடளிக்க அரசியல்வாதிகள் பிரபலங்கள் தயக்கம்

இவ்வாறான நிலையில்  60,000 அமரிக்க டொலர்கள், ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள், தங்க நகைகளை இழந்த வர்த்தகர் கமல்ஹாசன் வழங்கிய முறைப்பாடு தொடர்பிலான வழக்கு தொடர்பில் திலினி மற்றும் அவரது கணவராக அடையாளப்படுத்தப்பட்ட சுரங்க பண்டார தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அவர்கள் தயக்கம் காட்டுவதற்கு காரணம்…
தவறான வழியில் பணம் ஈட்டியதாக இருக்கும். ஒன்றில் அரச சொத்தை திருடியது அல்லது…போதைப் பொருள் மூலம் சம்பாதித்த பணமாக இருக்கும்.

கமல்ஹாசன் என்ற ஒருவரும்… பணம் போட்டுள்ளார். தமிழரோ… தெரியவில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

On 18/10/2022 at 12:57, தனிக்காட்டு ராஜா said:

விசாரணை விசாரணை என்று சொல்கிறார்கள் ஆனால் ஒன்றுமே உன்மையாக வெளிவருகிறது இல்ல 🤔🤔

பெரிய கைகள் சம்பந்தப்பட்டதால் எல்லா உண்மைகளையும் அமுக்கி விடுவார்கள். பணம், அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளதால் திலினி விரைவில் வெளியில் வரக்கூடும்.
மக்களின் மனங்களை திசை திருப்ப இந்தப்படம் சில காலம் மீடீயாவில் ஓடும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : சி.ஐ.டி.யினர் மத்திய வங்கியிடம் ஆலோசனை

By DIGITAL DESK 5

25 OCT, 2022 | 08:26 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கி, சி.ஐ.டி.க்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் திப்பட்டுவெவவின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல உள்ளிட்ட குழுவினர் மத்திய வங்கியின் சிறப்புக் குழுவிடம் இது குறித்த ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனம் தொடர்பில்  மத்திய வங்கியிம் பிரத்தியேக விசாரணைகளின் முன்னெடுத்துள்ள நிலையிலேயே, இந்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி, மோசடி செய்யப்ப்ட்டுள்ளதாக கருதபப்டும் பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இதில், சந்தேக நபரான திலினி பிரியமாலி, வேறு நபர்களின் பெயர்கலில் ஏதேனும் வங்கிக் கணக்குகளை  பேணினானாரா என்பது குறித்தும் சி.ஐ.டி.யின் அவதானம் திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/138406

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : திலினியுடன் தொடர்பிலிருந்த ஆறு நடிகைகள் மீது விசாரணை

By T. SARANYA

27 OCT, 2022 | 09:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 நடிகைகளை  சி.ஐ.டி. விசாரணைக்கு அழைத்துள்ளது.

அவர்களில் இருவரிடம் சி.ஐ.டி. வாக்கு மூலம் பதிவு செய்துள்ள நிலையில் ஏனைய நால்வரையும் வாக்கு மூலம் பெற வெவ்வேறு திகதிகளில் அழைத்துள்ளது.

செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்கு அதனை திருப்பிச் செலுத்தாது, நடிகைகளுடன் அவர்களை பாலியல் தூண்டல்களை காட்டும் விதமாக உரையாட செய்து அவற்றை ஒலி, ஒளிப் பதிவு செய்து மிரட்டியுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இந்த 6 நடிகைகளும் இவ்வாறு சி.ஐ.டி. விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/138494

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின

128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி 128 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்தார்.

அவருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1307403

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது! 

By DIGITAL DESK 2

01 NOV, 2022 | 05:26 PM
image

பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின்போது  வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138887

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2022 at 03:44, ஏராளன் said:

அப்துல் ஹசன் கமல் ஹசன் எனபவர், 60 ஆயிரம் அமரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் அவுஸ்திரேய டொலர்களையும் ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க நகைகளையும் திலினி மோசடி செய்ததாக கூறியுள்ள நிலையில், அதில் நேரடியாக  இசுரு சாமிக பண்டார  தொடர்புபட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

 

On 20/10/2022 at 22:49, தமிழ் சிறி said:

கமல்ஹாசன் என்ற ஒருவரும்… பணம் போட்டுள்ளார். தமிழரோ… தெரியவில்லை.

 

பெரிய அரசியல் தலைகளெல்லாம் கடைசியில் வந்து உருளும்போலுள்ளதே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Update : திலினியின் ' தங்கக் கோல் பொருளாளர்' கைது : இரு நடிகைகள் சி.ஐ.டி.யில் ஆஜராகாமல் புறக்கணிப்பு

By DIGITAL DESK 5

02 NOV, 2022 | 09:42 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாக,  கடவத்தை சிறி அரந்தக சமாதி அரண விகாரையில் வசிக்கும் பொரளை சிறிசுமன தேரர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

செவ்வாய்க்கிழமை (நவ.1 ) மாலை அவரைக் கைது செய்ததாகவும், அவரிடம் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், இன்று (2) கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

திலினி பிரியமாலி விவகாரத்தில், வர்த்தகர்களை மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு குறித்த தேரரும் துணை போயுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களுக்கு அமைய, சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு அவரைக் கைது செய்ததாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சில வர்த்தகர்களிடம் திலினி, பணம் பெறும் போது தங்கக் கோல் எனக் கூறி தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கோல்கலை  பிணையாக வழங்கியுள்ள நிலையில், அந்த தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கோல்கள் தங்க கோல்களாக சித்திரிக்கப்பட்டு, பொரளை சிறிசுமன தேரரின் விகாரையிலேயே வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வாறான பின்னணியிலேயே குறித்த தேரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க  சி.ஐ.டி.யினர் தீர்மானித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி மோசடி செய்த பின்னர் வர்த்தகர்களை அச்சுறுத்த நடிகைகளைக் கொண்டு, பாலியல் ஆசைகளை  தூண்டும் வண்ணமாக நடந்துகொண்டு அவற்றை பதிவு செய்துள்ளமை தொடர்பில் விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 அதன்படி நேற்று முன் தினம் ( ஒக்டோபர் 31) பிரபல சின்னத் திரை நடிகை சேமினி இத்தமல்கொடவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை நடாத்தியுள்ளனர். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

திலினியுடனான அவரது தொடர்பு குறித்து இதன்போது விசாரிக்கப்பட்டுள்ளது. எனினும் திலினியின் மோசடி நடவடிக்கையிலோ அல்லது வர்த்தகர்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கையுடனோ தனக்கு தொடர்பில்லை என நடிகை சி.ஐ.டி.யினரிடம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 எவ்வாறாயினும் அவரது வாக்கு மூலத்தின் உண்மை தன்மையை உறுதிச் செய்ய விசாரணைகள் தொடரும் நிலையில், தேவை ஏற்படின் மீண்டும் விசாரணைக்கு அழைக்கபப்டுவார் எனற நிபந்தனையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனைவிட, இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மேலும் இரு நடிகைகள் சி.ஐ.டி.யில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வருவதாக அறிய முடிகின்றது.

 இது இவ்வாறிருக்க,  ச இந்த விவகாரத்தில் திலினிக்கு  பாதுகாப்பளித்ததாக கூறப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும், திலினியிடம் முதலீடு செய்ய வர்த்தகர்களை தூண்டியதாக  நீதிமன்றில் பெயர் குறிப்பிடப்பட்ட, தற்போது வெளிநாட்டு பயணம் தடைச் செய்யப்பட்டுள்ள ஜானகீ சிறிவர்தன எனும் பெண்ணுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படும் உரையாடல் அடங்கிய  முக்கிய குரல் பதிவொன்று விசாரணையளர்கலுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதில் மிக முக்கிய, இரகசிய தகவல்கல் அடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

 இவ்வாறான நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது கணவர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இசுரு பண்டார ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ( 20 கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

https://www.virakesari.lk/article/138903

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

By T. SARANYA

02 NOV, 2022 | 02:06 PM
image

பிரபல வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாததாலும் அவர்களுக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதாலும் சந்தேக நபர்களுக்கான பிணைக் கோரிக்கையை நீதிவான் நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/138944

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

03 NOV, 2022 | 06:55 PM
image

 

கையடக்கத் தொலைபேசிகளை தம்வசம்  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலான விசாரணைக்காக  திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க உத்தரவிட்டுள்ளார். 

 

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையில் இன்று  (03) கூடிய சிறைச்சாலை நீதித்துறை சபையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.

 

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139064

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

By DIGITAL DESK 5

05 NOV, 2022 | 09:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ட்ரான்ஸ் வேர்க் ஸ்கயார் தனியார் நிறுவனத்தின்  நிறைவேற்று  அதிகாரியும்,  கொழும்பு - கோட்டை கிரிஷ் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சனிக்கிழமை (05) உத்தரவிட்டது.  

கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா  முன்னிலையில் அவர் சி.ஐ.டி. அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு - கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில், கிரிஷ் திட்ட அலுவலகத்தில் வைத்து ஜனாதி சிறிவர்தனவை  வெள்ளிக்கிழமை (04) பகல்  சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக  சந்தேகிக்கப்படும், ஜானகி சிறிவர்தனவின்  வெளிநாட்டு பயணம் தடைச் செய்யப்பட்டிருந்த பின்னணியில் அவரை இவ்வாறு   சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதன்படி அவரிடம் விசாரணைகலை முன்னெடுத்த சி.ஐ.டி.யினர்  சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சனிக்கிழமை  ஜானகி சிறிவர்தன மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மன்றில் ஆஜரானார்.

பாதிக்கப்பட்ட தரப்புக்காக சிரேஷ்ட சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி பசன் வீரசிங்கவுடன் பிரசன்னமானார்.

சி.ஐ.டி.யினருக்காக, சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணைப் பிரிவு இலக்கம் ஒன்றின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.

இதற்கு முன்னர்  திலினி பிரியமாலி ,இசுரு பண்டார  மற்றும் திகோ கூறுப் நிறுவன பணிப்பாளர்களில் ஒருவரான கசுன் பெரேரா  ஜா எல பகுதியைச் சேர்ந்த தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான  நல்லையா ஜெயமோகன், கடவத்தை சிறி அரந்தக சமாதி அரண விகாரையில் வசிக்கும் பொரளை சிறிசுமன தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான  நல்லையா ஜெயமோகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நால்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139212

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் மட்டும் ......? பெரிய புள்ளிகள் மாட்டும் வரை இந்தப் படம் ஓடும் என எதிர்பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆசீர்வாத பூஜைக்காக மந்திரவாதிக்கு 80 மில்லியன் வழங்கிய திலினி, ஜானகி!

By T. SARANYA

07 NOV, 2022 | 12:12 PM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 80 மில்லியன் ரூபாவை  தமக்கான ஆசீர்வாத  பூஜை க்காக,  மந்திரவாதி ஒருவருக்கு   வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு மேலதிக நீதிவான்  ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிக்கையாச் சமர்ப்பித்துள்ளது.

மேலும்,  முறைப்பாடு  செய்தவர்களிடமிருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் வைத்து  ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139333

Link to comment
Share on other sites