Jump to content

பிக் பாஸ் போயாச்சா ஜனனி அக்கா.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

bigg-bass-janani.jpg

 

ஜனனி அக்கா

உங்க ஈழத்தம்பி பேசுறன்..

 

ஊரில சிவனேன்னு

சும்மா கிடந்த ஜனனி அக்கா

ஐ பி சி ஜனனி அக்கா ஆச்சு

இப்ப கடல் கடந்து

பிக் பாஸ் போயாச்சு.

 

அதுக்கு என்ன ஆச்சு

பேச்சு வேணாம்..

நாம ஈழத் தமிழங்களாச்சே

பாவப்பட்ட ஜென்மமாச்சே

 

உங்க அக்கா அண்ணா

ஊருக்காய் மடிஞ்சப்போ

இந்த பிக் பாஸெல்லாம்

கிக் பாஸா அடிச்சாங்க..

 

இப்ப மட்டும் என்னே பாசம்

கூப்பிட்டு வைச்சு - உங்க

தமிழை கலாய்க்கிறாய்ங்க

ஏன்...

உங்களையே கலாய்க்கிறாய்ங்க..

கூடவே..

ஈழத்தை அசிங்கம் பண்ணுறாய்ங்க..

தேவையாக்கா இந்த பிழைப்பு நமக்கு..!!

 

ஏதோ போயிட்டீங்க

கடைசி வரைக்கும்

காசுக்காக நம்ம தமிழை மாத்திடாதேங்க

புகழுக்கா புழுப்போல் நெழியாதீங்க

உலகுக்கே அடங்காமல்

போராடி வீழ்ந்த இனம்

இறுமாப்பாய் நில்லுங்க

ஈழத்தமிழிச்சியாய்

அது பிக் பாஸ் ஆனான்ன

இமயம் ஆனான்ன...!!!

Edited by nedukkalapoovan
 • Like 3
 • Haha 3
Link to comment
Share on other sites

 • nedukkalapoovan changed the title to பிக் பாஸ் போயாச்சா ஜனனி அக்கா.
 • கருத்துக்கள உறவுகள்

அவள் தமிழும் அழகு , அவளும் அழகு. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்தப் பொண்ணு ஏற்கனவே ஈழத்தமிழர் என்றால் தமிழ்நாட்டில் அனேகருக்கு அருவருப்பு தவிர ஏளனம் இப்போ லஸ்சியாவை முத்தமிடக் கவினுக்குச் சொல்லி அந்தப்பொண்ணுடைய அப்பனை அனுப்பியாச்சு இனிமேல் இன்னுமொருதனைச் செற் பண்ணி ஆலிங்கனம் செய்யச்சொல்லி யார் யாரை எல்லாம் அசிங்கப்படுத்தப்போறாங்களோ தெரியாது.

நீலப்பட வகையறாக்களில் (ஐயோ இவன் என்ன பச்சை பச்சையாய் கதைக்கிறான் என எண்ணினால் அது உங்கள் தப்பு இந்தக்காலத்தில் அதுகளைப் பார்க்காத புலம்பெயர் ஆண் சிங்கங்கள் குறைவு)வயோயர் எனும் ஒரு ரகம் இருக்கு தவிர இன்செக்ஸ் என்பதும் இருக்கு அதை இப்போ யாழ்ப்பாணத்தில நேரடியாகவே முயற்சி செய்கினம் (எல்லாம் போதை கொடுத்த வில்லங்கம்) 

சரி அதை விடுங்கோ வயோயரில் களவாகக் கமேராக்களைப் பொருத்தி ஒளிச்சிரிந்து பாலியல் ரீதியாகப் பார்ப்பது அல்லது ஒளிப்பதிவு செய்வது பிக் பாஸும் அப்பட்டமாக அப்படித்தான் இதில் பங்கு பற்றுபவர்கள் எதற்கும் துணிய வேண்டும் தவிர அவர்களே ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுப்பார்கள் உதாரணமாக கடந்த முறை புங்குடு தீவுத் தர்சன் என்பவர் தனது ஜிம் மாஸ்டர் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு முயற்சி செய்தவர் என்றும் தான் மறுத்ததால் தனக்குக் கிடைக்கவேண்டிய தகுதியோ என்ன கண்றாவியோ யாருக்கோ போனது எண்டும் தனது ஜிம் செலவுக்கு தங்கச்சிக்காற்தான் புடவைக்கடையில வேலை செய்து காசு தந்தவ எனவும் ஒரு புளுகு புளுகினானே ஆனால் அவர்களது குடும்பத்துக்கு யாழ் நகரில் ஒரு சாப்பாட்டுக்கடை இருக்கு என்பதையும் மிச்சம் சொச்சம் இருப்பவர்கள் எல்லோரும் கனடாவில என்பதையும் அந்த ஸ்கிரிப்ட் ம.றைச்சுப்போட்டுது.

அதேபோல அங்கே நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்ல முடியாது அதுகூட ஸ்கிரிப்ட் படிதான் தேவைப்படின் வெளிவிடுவினம் இல்லாட்டில் பத்திரப்படுத்திவிடுவார்கள்

தவிர பிக்பொஸ் போட்டியாளர் அனைவரும் ஒரு ஒப்பந்தத்தில கையெளுத்துப்போடவேண்டும் அதன்படி அதில் குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில எதையும் சொல்லக்கூடாது சொன்னால் கொடுப்பனவு கட் கொடுப்பனவும் ஒரே தரத்தில் இல்லை பகுதி பகுதியாகவே கொடுப்பினம் வெளியில விடையங்களைச் சொன்னால் ஒளிப்பதிவு செய்த அசிங்கமான காட்சிகள் யாரோ ஸ்காமேர்ஸ் புகுந்து லவட்டி வெளியிட்டுப்போட்டினம் என்று அசிங்கங்களை வெளிவிடுவார்கள்.

இந்த அசிங்கம் பிடிச்ச மலசல கூடத்துக்க எங்கட பெண்டுகள் போய் அசிங்கப்படுகினம் அதுக்கு நெடுக்கரும் கவிதை பாடுகிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இந்த அசிங்கம் பிடிச்ச மலசல கூடத்துக்க எங்கட பெண்டுகள் போய் அசிங்கப்படுகினம் அதுக்கு நெடுக்கரும் கவிதை பாடுகிறார்.

 

வாழ்த்திப் படைக்கப்படவில்லை. இது விஜய் ரீவியின் உக்தியாகிவிட்டது. ஆண்டுக்கொரு ஈழத்தமிழனை சாரி 'சிரி'லங்கா தமிழனையும் கூப்பிட்டு சிரிப்புக் காட்டுறது. 

போனால் அசிங்கப்படனும் என்ற பட்டறிவில்லாமல் போகினம்..முதலும் போயிருக்கினம். உண்மையில்.. போயிருக்கக் கூடாது..!  போயிட்டீங்க.. சூதானமா நடந்துக்குங்க என்று தான் சொல்லி இருக்குது.. அதுவும் பொதுவெளியில் கூட முழுத் தூசணம் பேசி காசு பாக்கிறதுகள் கூட. 

Edited by nedukkalapoovan
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2022 at 02:50, nedukkalapoovan said:

 

 

ஏதோ போயிட்டீங்க

கடைசி வரைக்கும்

காசுக்காக நம்ம தமிழை மாத்திடாதேங்க

புகழுக்கா புழுப்போல் நெழியாதீங்க

உலகுக்கே அடங்காமல்

போராடி வீழ்ந்த இனம்

இறுமாப்பாய் நில்லுங்க

ஈழத்தமிழிச்சியாய்

அது பிக் பாஸ் ஆனான்ன

இமயம் ஆனான்ன...!!!

👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2022 at 12:57, nedukkalapoovan said:

 

வாழ்த்திப் படைக்கப்படவில்லை. இது விஜய் ரீவியின் உக்தியாகிவிட்டது. ஆண்டுக்கொரு ஈழத்தமிழனை சாரி 'சிரி'லங்கா தமிழனையும் கூப்பிட்டு சிரிப்புக் காட்டுறது. 

போனால் அசிங்கப்பனும் என்ற பட்டறிவில்லாமல் போகினம்..முதலும் போயிருக்கினம். உண்மையில்.. போயிருக்கக் கூடாது..!  போயிட்டீங்க.. சூதானமா நடந்துக்குங்க என்று தான் சொல்லி இருக்குது.. அதுவும் பொதுவெளியில் கூட முழுத் தூசணம் பேசி காசு பாக்கிறதுகள் கூட. 

லஸ்லியா போல, சினிமா கனவோட, எதிர்கால திரிசா ஆகும் கனவில் ஜனனி போயிருக்கிறா.

இதில விஜய் ரிவில பண்ணுவது பக்கா வியாபாரம்.

நம்மவர்கள் கனவும், அவர்கள் வியாபாரமும் சந்திக்கும் புள்ளியே பிக்பாஸ்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லஸ்லியா போல, சினிமா கனவோட, எதிர்கால திரிசா ஆகும் கனவில் ஜனனி போயிருக்கிறா.

இதில விஜய் ரிவில பண்ணுவது பக்கா வியாபாரம்.

நம்மவர்கள் கனவும், அவர்கள் வியாபாரமும் சந்திக்கும் புள்ளியே பிக்பாஸ்.

அந்த தொலைக்காட்சியப்பற்றியே நல்ல அபிப்பிராயம் எனக்கில்லை......இதுக்குள்ள அந்த நிகழ்ச்சி வேற......ஏதோ சமூகத்துக்கு அவசியமான நிகழ்சிபோல முட்டுக் குடுக்கிறார்கள்...😃

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.