Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - தமிழர்கள் இருவர் பரிதாபமாக பலி.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - தமிழர்கள் இருவர் பரிதாபமாக பலி | Two People Are Dead On Markham Crash

 

உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கு காரணம் வெளியாகவில்லை

 

மூன்றாவது முன் பயணி 52 வயது பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. டிரக்கின் சாரதி, 46 வயதுடைய நபர், சம்பவ இடத்தில் இருந்துள்ளார், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - தமிழர்கள் இருவர் பரிதாபமாக பலி | Two People Are Dead On Markham Crash

விபத்துக்கு என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. விசாரணை நடந்து வருகிறது, சம்பவத்தின் சாட்சிகள் அல்லது காணொளி காட்சிகள் உள்ள யாரேனும் தகவல் வழங்க முன்வருமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.   

https://tamilwin.com/article/two-people-are-dead-on-markham-crash-1665686212

 • Sad 2
Link to comment
Share on other sites

 

அன்புத் தம்பியே! அழகான தங்கையே! நேற்று நடந்த வீதி விபத்தில் இழந்து விட்டோம் உங்களை நாம். எம்மினத்தில் பல உறவுகள் வீதி விபத்துகளால் மரணிக்கும் நிகழ்வு இன்று உலகெங்கும் அரங்கேறி வருகிறது. அண்ணாவும், தங்கையும் இப்போ மீளாத் துயில் கொள்வீர்கள் . ஆனால் உங்களைப் பெற்றவர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கிறேன். பத்து மாதங்கள் பக்குவமாய் கருவில் சுமந்து , பெற்றெடுத்த உங்களை கொட்டும் பனியில் குளிராது காத்து, பள்ளி வயதை அடைந்ததும் வாகனத்தில் உங்களை ஏற்றி , இறக்கி, நீங்கள் வளர்ந்து உயர்தரப் பாடசாலை செல்ல, தம்மை வருத்தி உழைத்த பணத்தில் பல மடங்கை உங்களுக்காய் செலவழித்து, பல்கலைக்கழகம் நீங்கள் செல்ல……கற்று முடித்ததும் என் மகளும் , என் மகனும் வெகு விரைவில் நல்ல ஆசிரியராக … வைத்தியராக …..கணக்காளராக … சமூக ஆர்வலர்களாக …..சட்டத்தரணியாகப்… பட்டங்கள் பெற்று இப் பாரில் மிளிர்வார்கள்.எங்களை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வார்கள். நாம் பட்ட கஸ்டங்கள் முடிவுக்கு வரப் போகின்றன என்ற கனவோடு தினம் தினம் வேலை , வீடு என்று தூங்க நேரமின்றி ஓய்வின்றி உழைத்த உங்கள் பெற்றோரை யார் தேற்றுவர்? எதைச் சொல்லித் தேற்றுவர்? நீங்கள் வாகனம் ஓட்டுவதற்குரிய அனுமதிப்பத்திரம் பெற்ற பின் car வேண்டும் என்பீர்கள் . அரை மனதோடு அதையும் கடனட்டையில் தான் உங்கள் பெற்றோர்கள் வாங்கித் தருவார்கள். படித்து முடிக்கும் வரை உன் கடனை நான் அடைக்கிறேன் என்று சொல்லி , உடல் தள்ளாடும் வயதிலும் , முழு நேர வேலையோடு , பகுதி நேர வேலை ஒன்றிலும் , புதிதாகச் சேர்ந்து இரவும் , பகலும் , ஓடாய்த் தேய்வார் உங்கள் தந்தை…. அன்புச் செல்வங்களே!!! விபத்தை தவிருங்கள். அவதானமாக வாகனங்களைச் செலுத்துங்கள். ஒரு நொடி போதும் உங்கள் உயிர் பிரிவதற்கு. ஆனால் ஒரு யுகம் போதாது அதன் வலி மறைவதற்கு. தம்பி ! தங்கைகளே! வாகனத்தை கையில் எடுக்கும் போது தொலை பேசியிலோ! வேறெந்த விடயத்திலோ கவனம் செலுத்தாதீர்கள். ஏன்? அருகில் இருப்பவரிடம் கூட அதிகமாகப் பேசாதீர்கள். உங்கள் கவனம் அனைத்தும் வாகனத்திலும், வீதியிலும் இருக்கட்டும். பிழை , சரி யார் பக்கம் இருந்தாலும் பிரிவது உயிர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். தவிருங்கள் விபத்துக்களை! தவிருங்கள் உயிர் இழப்புகளை! நீங்கள் வாழ வந்த பிள்ளைகள். பாதியிலே போகும் போது தவிக்கிறது எம் உள்ளங்கள். இன்று மார்க்கம் நகரே உங்களை இழந்த சோகத்தில் கண்ணீர் வடிக்கிறது. இயற்கை அன்னையும் எம்மோடு சேர்ந்து கண்ணீர் வடிக்கிறாள். இறைவா!!! இரக்கம் சிறிதுமின்றி இவர்களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விட்டாய் . எனியேனும் மனமிரங்கி இப்பிஞ்சிகளின் பெற்றோரை , உறவுகளை , நண்பர்களை , எப்படியாவது தேற்றி விடு.🙏🙏😭😭.( எமக்கு நடக்கும் வரை இது வெறும் செய்தியே!! என எண்ணி விடாதீர்கள். இம் மரணம் உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்ததாய் எண்ணி! பெரியோர்களும் , சிறியோர்களும் அவதானமாக , கொஞ்சம் பொறுமையாக , நிதானமாக வாகனத்தைச் செலுத்துங்கள். எனி வரும் காலங்களில் இது போன்ற இழப்புக்களைத் தவிர்ப்போம். அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோம்). 🙏🙏👍
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விபத்து நடைபெற்ற பகுதி எனக்கு நன்கு பரிட்சயமானது. 

இந்த விபத்து தொடர்பான ஒளிப்பதிவும் மரணித்தவர்களின் படங்களும்  எனக்குக் கிடைக்கப்பெற்றது. அதில் உள்ளதன்படி, Green light light  ஒளிர்ந்தபோது, வரிசையில் முன்னுக்கு நின்ற (விபத்துக்குள்ளான) வாகனம் ஓடத் தொடங்கியபோது,  Red light ல் வந்த பாரவூர்தி (ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு தொடுவைகள்) மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மரணித்தனர். Techinically இவர்களில் பிழை இல்லை. பாரவூர்தி ஓட்டியவரில்தான் பிழை முழுதும். 

 

 Green lightல் வரிசையில் முன் நிற்கும் வாகனமோட்டிகள் இரு கணங்கள் இரு பக்கமும் பார்த்து வாகனத்தை ஓடத் தொடங்கினால் பாரிய விபத்துக்களைத் தவிர்க்கலாம். (இந்த விபத்தும் அந்த வகையினதே)

எங்கள் இனத்தின் மரணங்கள் மனதை மரத்துப்போகச் செய்துவிட்டது. 😥

அந்த இளையோரின் ஆன்மாக்கள் அமைதியில் உறங்கட்டும். 💐💐💐

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

பாரி, நிலா அழகான தூயதமிழ்ப் பெயர்கள். பாரியின் பிறந்தநாள் அன்றே விபத்து நடந்திருக்கிறது. பாரவூர்தி சிவப்பு விளக்கு ஒளிர்ந்த போது வேகமாக வந்திருக்கிறது.  மிக வேதனையான சம்பவம். 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விபத்து நடைபெற்ற பகுதி எனக்கு நன்கு பரிட்சயமானது. 

இந்த விபத்து தொடர்பான ஒளிப்பதிவும் மரணித்தவர்களின் படங்களும்  எனக்குக் கிடைக்கப்பெற்றது. அதில் உள்ளதன்படி, Green light light  ஒளிர்ந்தபோது, வரிசையில் முன்னுக்கு நின்ற (விபத்துக்குள்ளான) வாகனம் ஓடத் தொடங்கியபோது,  Red light ல் வந்த பாரவூர்தி (ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு தொடுவைகள்) மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மரணித்தனர். Techinically இவர்களில் பிழை இல்லை. பாரவூர்தி ஓட்டியவரில்தான் பிழை முழுதும். 

 

 Green lightல் வரிசையில் முன் நிற்கும் வாகனமோட்டிகள் இரு கணங்கள் இரு பக்கமும் பார்த்து வாகனத்தை ஓடத் தொடங்கினால் பாரிய விபத்துக்களைத் தவிர்க்கலாம். (இந்த விபத்தும் அந்த வகையினதே)

எங்கள் இனத்தின் மரணங்கள் மனதை மரத்துப்போகச் செய்துவிட்டது. 😥

அந்த இளையோரின் ஆன்மாக்கள் அமைதியில் உறங்கட்டும். 💐💐💐

என்னிடமும் படங்கள்..வீடியோ  உள்ளது..பிஞ்சுகளில் பிழையே இல்லை...பாவம் பெற்றவளையும் அணைத்துச் சென்று விட்டர்கள் என்றும் கேள்வி...பரிதாபமான விடையம் இரவு கிட்டத்தட்ட 10 மணிவரை அந்தஇடத்தில் பிஞ்சு உடல்கள்  மூடப்பட்டு இருந்தது...வேதனயிலும்  வேதனை...தகப்பனுக்கே மாலை 6 மணிக்குத்தான் பொலிசாரினால் அறிவிக்கப் பட்டது...எஞ்சிய அண்ணன் ஒட்டாவா பல்கலையில்...அந்த இடம் எனது வீட்டிற்கு மிகஅருகில்... 4-6 மணிநேரம் அவ்விடத்தில் நின்றேன்...நெருங்கிய உறவுகள்   யாரும் நின்றதாகவும் தெரியவில்லை....அவர்களுடைய வீடும்  1/2 கிலோமீற்றர் தூரத்தில்தான்....நான் அந்த இடத்தில்3 -4 பெரிய விபத்துக்களை பார்த்துள்ளேன்....இப்படி நடந்ததை நேற்றையதினம்தான் பார்த்தேன்...நித்திரையே கொள்ளவில்லை...மனமும் அமைதியில்லை..அனாதையாக அந்த இரு பிஞ்சுகளும்..முடியவில்லை

 • Sad 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கொடுமையான மரணம்.
படித்து வாழ்க்கையை… ஆரம்பிக்கும் நேரத்தில், குடும்பத்தில் மூவர் மரணம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுகளின் விபத்து காணொளியை பார்த்த போது...
அவர்கள் சரியாக வாகனம் ஓடியும், மற்றவனால் விபத்து ஏற்பட்டு விட்டது.

ஒரு மில்லி செக்கன், முன்  அல்லது பின் 
அதில்...  ஒரு வாகனம், அந்த இடத்திற்கு வந்திருந்தால்...
அவர்கள் இன்று எம்முடன் இருந்திருப்பார்கள்.   

நாம் வீதியில் சரியாக சென்றாலும்... 
மற்றவன் நமது உயிரை பறிப்பான் என்ற எச்சரிக்கை உணர்வுடன்,
வாகனம் என்றாலும், நடந்து சென்றாலும் 
கவனம் முழுக்க எம்மை சுற்றியே இருக்க வேண்டும். 

விபத்து என்பது சில மில்லி செக்கன்களில் நடந்து முடிந்து 
நமது வாழ்க்கையையே... பிரட்டிப் போட்டு விடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

சிவப்பு சிக்னலில் முன்னுக்கு நின்றால் பச்சை விழும்போது ஒரு கணம் இரு பக்கமும் பார்த்து நகர்வது கூடிய பாதுகாப்பைத் தரும். பாரவூர்தி வந்த வேகத்தைப் பார்க்கும்போது சிக்னல் இருந்ததே ஓட்டுனருக்கு தெரியவில்லை. அவ்வளவு அவதானமில்லாமல் ஓடியிருக்கின்றார்😡 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாட்டும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான சம்பவம்......கண்ணீர் அஞ்சலிகள்......! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் அல்லது  அஞ்சலி  சொல்வது மிகமிக  கடினமானது

யாருக்கு  யார்  ஆறுதல்  சொல்வது???

இது எல்லோர் வீட்டிலும்  நடந்தது போல  தவிப்பாக உள்ளது

இரவு நேர காரோட்டம் மிக  மிக  கவனமாக  இருக்கணும் 

எமது  அசதியால்  எமது கவலையீீனம் அதிகரித்திருக்கும் நேரம்

நான்  பார்த்தவரையில் கனடாவின்  சிக்னல்கள்  அதிக பாதுகாப்பானவை ஆனால் தரவைகள் மற்றும்  காட்டுப்பகுதிகளால்  சுழித்து விடலாம்  என்று  மனம்  ஊக்கப்படுத்தக்கூடிய நிலைகள் அதிகம்

 

ஆத்மாக்கள் சாந்தியடைவதாக..

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை எனது வீட்டின் (edmonton alberta )பின்பக்க வீதியில் இதேபோல் ஒரு விபத்து.. 90 வயது பெண்மணி 60km/h போகவேண்டிய பாதியில் 130km/h இல் வந்து சிவப்பு விளக்கில் நிற்க்காது போய் பச்சை விளக்கூடாக போய்க்கோண்டிருந்த ஜீப்பை இடித்து அது இன்னொரு காரை இடித்து அது போய் இன்னொன்றை இடித்து மொத்தம் 2 பேர் பெண்மணி உட்பட அந்த இடத்திலேயே மரணம்.. முன்று பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்.. விபத்துக்கு காரணம் அந்த வயதான பெண்மணிக்கு தீடீர் என்று ஏற்பட்ட வலிப்பாம்.. யாரைச் சொல்லி நோவது? 

Edited by பகிடி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். இளையோர்கள் என்ன கனவுகளோடு.....  மிகவும் மோசமான பாரவூர்த்தி ஓட்டுனர்கள்.

யேர்மனியிலும் அண்மையில்(லோபெல்டன் நகரமென்று நினைக்கிறேன்) காரை அடித்து உருட்விட்டதாக அறிந்தேன். மிகவும் அவதானமாக விலத்துதல் அல்லது உரிய இடம்வரும்வரை பொறுமைகாத்து ஓடுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

நேற்று முந்தினத்தில் இருந்து இந்தச் செய்தி மனதை மிகவும் வருத்திக் கொண்டு இருக்கு. 

கனடா வாழ்க்கையை நான் ஆரம்பித்ததே இந்த மார்க்கம் and எல்சன் பகுதியில் தான். நான் இது வரைக்கும் 1000 தடவையாவது இப் பகுதியை கடந்து இருப்பேன். 

வாகனத்தை செலுத்திய இளையவரில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. 50 கிலோ மீற்றர் வேகம் மட்டுமே செல்லக் கூடிய வீதியில், சிகப்பு விளக்கில் நிற்காமல், அதுவும் traffic அதிகம் இல்லாத மதியம் 2 மணிக்கு கண் மண் தெரியாமல் பாரவூர்தியை செலுத்தி வந்துள்ளார் அதன் சாரதி. 400 மீற்றர் தொலைவில் இன்னுமொரு signal தொகுதி உள்ள பெரிய சந்தியும் உள்ளது. 

இந்த துயரத்தை தந்தையும் கடைசி சகோதரனும் எப்படி தாங்கிக் கொள்ள போகிறார்கள் என எண்ணும் போது நெஞ்சம் அடைக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நவீன கார்களின் தரமும் சந்தேகமாக இருக்கு, குறிப்பாக ஜப்பானிய கார்கள் எடை குறைவாக உள்ளதால் இலகுவில் நசுங்கிவிடுவதாக உள்ளன.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்... கேட்ட நேரத்தில் இருந்து மனதுக்குள் ஒரு அமைதியின்மை.  விபத்து நடந்த நேரத்தில் நண்பரொருவர் பக்கத்தில் உள்ள பிளாசாவில் நின்று இப்படியொரு பெரிய விபத்து நடந்திருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார்.  அந்த பகுதியில் நிறைய நண்பர்கள் உறவினர்கள் வசிப்பதால் உள் மனதில் ஒரே குடைச்சலாக இருந்தது.  மாலை தான் இன்னார் என்று தகவல் வந்தது.  மிகவும் அதிர்ச்சியும் கவலையுமான விடையம்.  யார் என்றாலும் உயிர் தான் என்றாலும் தமிழர்கள் சிறார்கள் என்றதும் என்னையறியாமல் அதிக அழுத்தமும் கவலையும் அளிக்கிறது.

விபத்து நடத்த காணொளிகள் இரண்டு பார்த்தேன் ஒன்று எதிர்திசையில் வந்த வாகனத்தில் இருந்து dash  காம் இல் பதிவு செய்யப்பட்டது.  அதன் படி அந்த வாகனம் நின்று (எதிர் திசையில் என்பதால் ஒரே சிக்னல்) சில வினாடிகள் பின்னர் தான் விபத்துக்குள்ளான கனரக வாகனம் சிக்னல் க்கு கிட்டவே வருகிறது.  அப்போது அம்பர் இல் இருந்து 100% சிவப்பு விளக்கு மாறி இருக்கும்.  ஆனால் வேகத்தை குறைக்கும் எந்த அறிகுறியும் இல்லை.  கவலையீனம் / கவனச்சிதறல்.

இரண்டாவது காணொளி பக்கத்து பிளாசாவில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது பார்த்தேன்.  இவர்கள் பயணித்த வாகனம் சிவப்பு விளக்கில் காத்திருந்து பச்சை மாறியதும் மற்ற வாகனங்களை விட வேகமாக வாகனத்தை எடுக்கிறார்கள் (எனது கருத்து மிக வேகமாக).  சாரதியும் சந்தியின் இருபக்கமும் பார்க்கவில்லை என்பது தெரிகிறது.

இங்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வாகனம் டிரைவ் test  செய்யும் போது இதை முக்கியமாக பார்ப்பார்கள்.  சந்தியை அண்மிக்கும் போது, தொடருந்து கடவையை அண்மிக்கும் போது, நடை பாதையை அண்மிக்கும் போது இரு பக்கமும் பார்க்க வேண்டும் இல்லாவிடில் 95% fail  தான்.

டிபென்சிவ் ட்ரிவிங் என்பதும் மிக முக்கியமானது.  அதை இவர்கள் தவறியுள்ளார்கள்.  சட்டப்படி பாரவூர்தி மீது தான் தவறு ஆனால் இவர்களும் பொறுமையாகவும் கவனமாகவும் வாகனத்தை செலுத்தியிருந்தால் 100% தவிர்த்து இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

 

*எழுத்து பிழை திருத்தம்*

Edited by Sabesh
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இரவு நேர காரோட்டம் மிக  மிக  கவனமாக  இருக்கணும் 

விசுகு இது பகல் 2 மணிக்கு நடந்திருக்கு.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.