-
Tell a friend
-
Topics
-
3
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By vanangaamudi · Posted
போராட்டங்களின் வடிவம் மாறினாலும் இலக்கு என்றும் மாறாது – இரா.சாணக்கியன் உதய கம்மன்பில திரியின் தலைப்பு மாறிட்டோ? -
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்ஜே ஆர் இன் பரிசு - தடை அமிர்தலிங்கத்தின் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்ட புலிகளின் கடிதம் பஸ்டியாம்பிள்ளையைக் கொன்ற புலிகளின் குழு அவரின் காரில் கிளிநொச்சி வரை சென்றுவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் அதனை எரித்துவிட்டுத் தலைமறைவாகியது. சிறு குழுக்களாகப் பிரிந்து சென்ற அவர்கள் இறுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமை அடைந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்ட குழுவை முகாமில் பிரபாகரன் வரவேற்றார். செல்லக்கிளியைக் கட்டித் தழுவிய பிரபாகரன் அவரைப் பார்த்து, "தமிழர்கள் உன்னால் பெருமையடைந்துவிட்டார்கள்" என்று கூறியதாக உமா என்னிடம் தெரிவித்தார். தமது இயக்கம் வெளிப்படையாக இயங்குவதுபற்றிய விவாதத்தினை மத்திய குழுவில் தான் ஆரம்பித்துவைத்ததாக உமா என்னிடம் கூறினார். "நாம் தொடர்ந்தும் இரகசிய அமைப்பாக இயங்கிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் வெளியே வரவேண்டும். இதுவே அதற்கான சரியான தருணம். நாடுமுழுவதுமே எம்மைப்பற்றிப் பேசுகிறார்கள்" என்று மத்தியகுழுவில் தான் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பல தாக்குதல் சம்பவங்களின் பிறகு மக்கள் மத்தியில் வெளித்தெரிந்த பல கெரில்லா இயக்கங்களை உமா சுட்டிக்காட்டிப் பேசியதாகத் தெரிகிறது. தான் கூறியதை பிரபாகரனும் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமா, "பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஐரிஸ் விடுதலை இராணுவம் போன்று நாமும் இப்போது தெரியவந்திருக்கிறோம்" என்று பிரபாகரன் கூறியதாக உமா மேலும் தெரிவித்தார். ஆகவே, தம்மால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உரிமை கோரும் முடிவினை அவர்கள் எடுத்தார்கள். கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தினை வரைவது மற்றும் அதனைப் பிரசுரிப்பது ஆகிய கடமைகள் அமைப்பின் அரசியல்த்துறைத் தலைவரான உமாவிடம் வழங்கப்பட்டது. கொழும்பிற்கு இரகசியமாகச் சென்றிறங்கிய உமா, லண்டனில் இருக்கும் தனது தொடர்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். லண்டனுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதென்பது அந்நாட்களில் அவ்வளவு இலகுவான காரியமல்ல. கொழும்பிலிருக்கும் மத்திய தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையத்திற்குச் சென்ற உமா, லண்டனுக்கான தனது தொலைபேசி அழைப்பிற்கு அனுமதியைப் பெற்று சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்து பேசினார். லண்டனிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் உமாவை உற்சாகப்படுத்தியிருந்தனர். உலகிலுள்ள மற்றைய கெரில்லா அமைப்புக்கள் செய்த விடயங்களை அவர்கள் உமாவுக்குத் தெரியப்படுத்தினர். 1976 ஆம் ஆண்டு சென்னையில் புலிகளால் உருவாக்கப்பட்ட கடிதத் தலைப்பில் உமா தண்டனைக்கான விளக்கக் கடிதத்தினைத் தயாரித்தார். கடிதத் தலைப்பின் இடதுபக்க மேற்புறத்தில் புலிகளின் இலட்சினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரும் தடித்த எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது. கீழே ஆங்கிலத்திலும் அப்பெயர் இருந்தது. தன்னால் தயாரிக்கப்பட்ட கடிதத்தையும், புலிகளின் இலட்சினைக் கொண்ட கடிதத் தலைப்பையும் தன்னுடன் வைத்திருந்த உமா, கொழும்பில் கண்ணாடிக் கடையொன்றில் பணிபுரிந்து வந்த ஊர்மிளா தேவி எனும் தனது தூரத்து உறவுப் பெண் ஒருவரைச் சந்தித்தார். விவாகரத்தாகியிருந்த அந்தப் பெண் கொழும்பில் இயங்கிவந்த தமிழர் இளைஞர் பேரவையில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்ததுடன், பொன் சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமி பொன்னுத்துரையின் தலைமையில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்த மகளிர் அமைப்பின் செயலாளராக அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி பதவி வகித்தார். தான் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தினை ஊர்மிலா தேவியிடம் காட்டிய உமா, அக்கடிதத்தின் 8 நகல்கள் தனக்கு வேண்டுமென்று கூறியதுடன், இது ஒரு இரகசியமான பணி என்றும் கூறினார். அதனை வாங்கிக்கொண்ட ஊர்மிளா, பழைய பாராளுமன்றக் கட்டிதத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்திற்குச் சென்றார். அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நன்கு பரீட்சயமான ஊர்மிளா, அங்கு பல தடவைகள் சென்றிருந்ததுடன், அமிருக்கும், அவரின் செயலாளரான பேரின்பநாயகத்திற்கு பல தட்டச்சு வேலைகளை முன்னர் செய்து கொடுத்திருக்கிறார். ஆகவே, உமா தன்னிடம் கொடுத்த கடிதத்தினைத் தட்டச்சுச் செய்வதற்கு, அமிரின் அலுவலகமே பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார். ஆகவே, பாராளுமன்றம் இயங்காத வேளை ஒன்றில் அமிருக்கோ பேரின்பநாயகத்திற்கோ தெரியாமல் அங்குசென்று புலிகளின் கடிதத்தினைத் தட்டச்சுச் செய்தார். கணிணிகள் அக்காலத்தில் பாவனையில் இருக்கவில்லை, போட்டோப் பிரதி இயந்திரங்களும் அதிகம் புழக்கத்தில் அப்போது இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் அலுவலகத்தில் இரு தட்டச்சு இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. அமிர்தலிங்கத்தின் காரியதரிசி உபயோகிக்கும் தட்டச்சியந்திரத்தையே ஊர்மிளா அன்று பாவித்தார். பிரதிகளை எடுக்க காபன் தாள்களை அவர் பாவித்தார். கடிதங்கள் தயாரிக்கப்பட்டதும், செயலகத்திற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் காத்து நின்ற உமாவிடம் அவற்றைக் கொடுத்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்திற்கு முன்னால் அமைந்திருந்த கொழும்பு பெரிய தபாலகம் நோக்கி நடந்துசென்ற உமா, அக்கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், காங்கேசந்துறைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குநர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்ததுடன், மூலப் பிரதியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார். சித்திரை 28 இல் இக்கடிதத்தினை சிறிய செய்தியாக வீரகேசரி பிரசுரித்திருந்தது. "சம்பந்தப்பட்டவர்களுக்கு" என்று தலைப்பிடப்பட்டு, சித்திரை 25, 1978 அன்று வரையப்பட்ட இக்கடிதம் பின்வருமாறு கூறியது. "புதிய தமிழ்ப் புலிகள் எனும் ஆரம்பப் பெயரினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புதிய பெயரையும் கொண்ட நாம் பின்வரும் கொலைகளுக்கு உரிமை கோருகிறோம்". திரு அல்பிரெட் துரையப்பா - யாழ்ப்பாண மேயரும், சுதந்திரக் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளரும் திரு என். நடராஜா - உரும்பிராய் எரிபொருள் நிலைய உரிமையாளரும் சுதந்திரக் கட்சியின் கோப்பாய்ப் பகுதியின் ஒருங்கிணைப்பாளரும், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். திரு ஏ. கருநாநிதி - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு சண்முகனாதன் - வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார் திரு தங்கராஜா - முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர் திரு கனகரட்ணம் - முன்னாள் பொத்துவில் தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், திரு பஸ்டியாம்பிள்ளை - பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பேரம்பலம் - உப பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு திரு பாலசிங்கம் - பொலீஸ் சார்ஜெண்ட், உளவுப்பிர்வு திரு சிறிவர்த்தனா - பொலீஸ் சாரதி 1978 ஆம் ஆண்டு சித்திரை 7 ஆம் திகதி, பஸ்டியாம்பிள்ளையும் அவரது குழுவினரும் புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கை ஒன்றிற்காக உப இயந்திரத் துப்பாக்கி, ரைபிள்கள், சுழற்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்தனர். ஆனால், தமக்கு உயிரிழப்போ, காயங்களோ ஏற்படாவண்ணம் அக்குழுவை முற்றாக புலிகள் அழித்துவிட்டனர். அவர்கள் பயணம் செய்த காரும் புலிகளால் எரியூட்டப்பட்டது. "வேறு எந்தச் அமைப்புக்களோ, தனிநபர்களோ இந்தத் தாக்குதல்களுக்காக உரிமை கோர முடியாது. புலிகளைத் தவிர இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரினால் கடும்னையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" இப்படிக்குச் செயலாளர், மத்திய குழு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உமா எதிர்பார்த்துபோலவே வீரகேசரி பிரசுரித்த இச்செய்தி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதற்கு அமைப்பு ஒன்று உருவாகிவிட்டதை அறிந்துகொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளியாகி வந்த ஈழநாடு மற்று Saturday Review ஆகிய பத்திரிக்கைகளின் ஊடகவியலாளர்கள் இச்செய்தி மக்களிடம் பெருமையுடன் உள்வாங்கப்பட்டிருந்ததாக என்னிடம் கூறினார்கள். "எங்கட பெடியன்கள் செய்துபோட்டாங்கள்" என்கிற பெருமையான உணர்வே அனைவரிடம் காணப்பட்டது. உளவுப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கும் கொண்டுசெல்லப்பட்டது. புலிகளின் கடிதத்தைக் கண்ணுற்றபோது ஜே ஆர் மிகவும் ஆத்திரப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் உள்ளூர் அலுவல்கள் அமைச்சரான தேவநாயகத்திடம் புலிகளையும் அவர்களைப்போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்யும் சட்டத்தினை உடனடியாக வரையுமாறு உத்தரவிட்டார். தனது இன்னொரு அமைச்சரும் பெயர்போன சிங்கள இனவாதியுமான சிறி மத்தியூவிடம் தமிழருக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைக்குமாறும் உத்தரவிட்டார். தாக்குதலில் இறங்கிய டெலோ அமைப்பு புலிகளின் நடவடிக்கைகளால் தாம் ஓரங்கட்டுப்பட்டுவிடுவோமோ என்று தங்கத்துரை குழுவினர் நினைத்திருந்த வேளை, குட்டிமணியின் மீள்வருகை அவர்களுக்குப் புதுதெம்பினை அளித்திருந்தது. ஜெயவர்த்தனா பிரதமராகிய பின்னர் ரோகண விஜேவீரவுடன் குட்டிமணியையும் விடுதலை செய்திருந்தார். பொலீஸ் பரிசோதகர் பத்மநாதன் புலிகளால் கொல்லப்பட்ட பஸ்டியாம்பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். தமிழ் இளைஞர்கள் தொடர்பாக அதிகம் அறிந்துவைத்திருந்தவர். ஆகவே பஸ்டியாம்பிள்ளையின் இழப்பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலனாய்வுத்துறையின் வேலைகளுக்குப் பொறுப்பாக பத்மனாதன் நியமிக்கப்பட்டார். ஆகவே பதமானதனைக் கொல்வதன் மூலம் தமிழ் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களை வேட்டையாட பொலீஸார் அமைத்திருந்த கட்டமைப்பு பாதிப்படையும் என்று தங்கத்துரை எண்ணினார்.
-
கத்தோலிக்கர் புரட்டஸ்தான்து என்று அவர்கள் தங்களுக்குள் பார்க்கிறார்களோ தெரியவில்லை பிரான்ஸ் லூர்து மாதவிடமும் வொசிங்கம் சேர்சிலும் அழுது பிரார்தனை செய்து சேவிப்பவர்கள் இலங்கை சைவர்கள் தான் அதிகம் . புறாவுக்கு தெரியாது அடிக்கிற மணி சேர்சில் இருந்து வருதா இல்லை சைவ கோயிலில் இருந்து வருதா என்பது போல் இருந்த இலங்கை தமிழர்களுக்குள் புலிகள் இல்லாமல் போன காலத்துக்குள் பிரிவினைகளை உருவாக்க மறவன் புலவு .. வேலன் சுவாமி போன்றவர்கள் இந்திய இலங்கை அரசுகளால் இறக்கி விடபட்டுள்ளார்கள் .
-
நன்றி அருமையான கருத்து .
-
Recommended Posts