Jump to content

வைகாசி நிலவே! வைகாசி நிலவே!!


Recommended Posts

கோவம் இருக்கிற இடத்தில குணம் இருக்குமா? அப்ப சிறீ லங்கா ஆமிக்காரங்கள், சிங்கிள காடையங்கள் எல்லாம் நல்ல குணவான்களோ? ;)

உவங்களுக்கு கோவம் இல்லைங்க. வெறி. :angry:

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

படத்தில் வரும் முதல் கதாநாயகியும் இவ்வாறு ஒரு வெறி பிடித்தவள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கும்.. :mellow:

கோபத்திற்கும் வெறிக்கும் இடைவெளி அதிக தூரம் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் வரும் முதல் கதாநாயகியும் இவ்வாறு ஒரு வெறி பிடித்தவள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கும்.. :mellow:

கோபத்திற்கும் வெறிக்கும் இடைவெளி அதிக தூரம் இல்லை..

கலைஞன், சொன்னதற்கிணங்க பதில் சொல்கின்றேன். 'வெண்ணிலா' எங்கள் விவாதம் 'உன்னாலே உன்னாலே!

படத்தைப்பற்றிய இரு பெண்களின் குணங்கள் பற்றித்தானே? இல்லை அதை தெளிவுபடுத்திக்கொண்டு சொல்கின்றேன்.

எங்கள் பண்பாடு என்று எதைச்சொல்கின்றீர்கள்?!.இல்லை எந்த தரப்பு நியாயத்தைக் கருத்தில் கொண்டு யாம் மேலை நாட்டுக்கலாசாரத்தை விரும்புகின்றோம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்?

" அந்தக்காலத்தில் அதாவது இதிகாச புராண காலங்களில் திருமணம் ஆன ஒரு பெண் இன்னொரு ஆடவனை 'அழகாய் " இருக்கின்றான் என்று சொன்னாலே 'கற்பு" தவறி விட்டவள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

இப்போது எத்தனை பேர் அப்படி இருக்கின்றார்கள்? இல்லை அப்படி இருக்கத்தான் முடியுமா?!

ஒருவன்/ஒருத்தி அழகாய் இருக்கின்றான் என்பதற்காக அவனைக் கட்டிக்கொண்டு வாழ்கின்ற நிலையில் கற்பனை பண்ணிப்பார்ப்பது எத்தனை இழுக்கு?! 'அழகை இரசிப்பதில் தவறென்ன?!.

சரி முதலாம் நாயகிக்கு இருப்பது பிடிவாதம் அதுவும் கடும்பிடிவாதம். அவன் தன் பின்னால் சுற்ற வேண்டும் என்பதற்காகவே அழகு நிலையத்துக்குப் போய் அதிகப்படியான ஒப்பனைகள் செய்வார்!. அழகு இரண்டாம் பட்சம் தான். அவள் உண்மையில் அவனை நேசித்திருந்தால் அவனைத் தன் காதலைக்கொண்டு தன் இயல்புக்கு ஏற்ப மாற்ற முற்பட்டிருக்க வேண்டும்! அதை விடுத்து; அவன் தன்பின்னால் வந்து அதிகமாய்க் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இவங்க கண்டுக்கவே மாட்டாங்க அதுக்கு அப்புறமும் அவனை ஏங்க வைப்பதில் சுகம் காண்பதும்; நல்லாவா இருக்கு?

உண்மையில் நாம் ஒருவரை நேசித்தால் அவரை எந்த விதத்திலும் காயப்படுத்த மனசே வராது, தவறுதலாக ஏதேனும் சொன்னால் கூட மனசு பதறும் கிடந்து துடிக்கும் அதில் உயர்வு,தாழ்வு பேதம் பார்க்காது மன்னிப்புக்கேட்கும். அன்புக்கு முன்னால் வெற்றி எது தோல்வி எது?!

"கலகலப்பா கதைக்கிறது கலாசாரத்துக்கு கேடு" என்று நான் என்றும் கேள்விப்பட்டதில்லை; இயல்பு நிலைகளை ஒருவருக்காக உடனடியாக மாற்றிக்கொண்டால் அது வேஷம் விரைவில் கலைந்து விடும்.

இயற்கையை அதன் இயல்போடு இரசிப்பதுதான் அழகு! அதை ஏற்றுக்கொண்டு வாழும் துணிவு இரண்டாம் நாயகிக்குத்தான் உண்டு! 'நிலவில் கறையை மட்டுமே பார்க்கும் கண்களுக்கு அதன் அழகை இரசிக்க முடியாது.

இரண்டாம் நாயகி சிந்திக்கின்றாள். தான் நெருங்கி வந்துமே அவன் ஒழுக்கமாக இருக்குமிடத்தில் அவளுக்குள் உயர்ந்து விடுகின்றான். அந்த ஒரு இடம் போதும் அவன் அவளை ஏமாற்ற மாட்டான் என்பதற்கான சாட்சி அது!

அதுதான் இயக்குனர் அப்படி ஓர் இடத்தை அங்கு காட்டி இருந்தார். ! ஏன் விமானத்தில் ஏறும் போது கூட அழகான அந்த இரண்டாம் நாயகி தானாய் போய் கதைத்தும் இவன் வழிந்தானா என்ன?!!

இதற்கு மேலும் கேள்விகள் உண்டா? எதற்கும் இன்னொரு தடவை படத்தைப்பார்க்கவும்!..

கலைஞா,,,போதுமா?!!...

நன்றி..

Link to comment
Share on other sites

ஓம் போதும்! போதும்! :huh: போதும் என்போர் மனமே பொன் செய்யும் மருந்து.. ;)

என்றாலும்... இனியும் யாராவது என்னைப் போன்ற ஒரு சிறந்த ஆண் மகனால் பதில் கூறமுடியாத - பெண்கள் மாத்திரமே தெளிவுபடுத்தக்கூடிய கேள்விகளை கேட்டால், உடனடியாக இங்க்கு வந்து ஆஜாராகி உங்கள் தரப்பு வாதத்தை முன்வையுங்கள்.. :P

அதானே! முதலாவது கதாநாயகி எங்க தமிழ் பண்பாட்டோட நடந்துகொள்ளுறா? அடங்காப் பிடாரியாக இருந்துகொண்டு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதா தமிழ் பண்பாடு?? :angry:

முதலாவது கதாநாயகியை ஒரு தமிழ்ப்பெண் என்று கூறமுடியுமா?

உண்மையில் நாம் ஒருவரை நேசித்தால் அவரை எந்த விதத்திலும் காயப்படுத்த மனசே வராது, தவறுதலாக ஏதேனும் சொன்னால் கூட மனசு பதறும் கிடந்து துடிக்கும் அதில் உயர்வு,தாழ்வு பேதம் பார்க்காது மன்னிப்புக்கேட்கும். அன்புக்கு முன்னால் வெற்றி எது தோல்வி எது?!

இயற்கையை அதன் இயல்போடு இரசிப்பதுதான் அழகு! அதை ஏற்றுக்கொண்டு வாழும் துணிவு இரண்டாம் நாயகிக்குத்தான் உண்டு! 'நிலவில் கறையை மட்டுமே பார்க்கும் கண்களுக்கு அதன் அழகை இரசிக்க முடியாது...

ஆஹா அருமையான தத்துவங்கள்!

இதற்காக உங்களுக்கு 'தத்துவ சிகாமணி' என்ற ஒரு பட்டத்தை யாழ் களம் சார்பில் வழங்கி மகிழ்கின்றேன்.. :lol:

மேலும், யாழ் கள நிருவாகிகளில் ஒருவரான வலைஞன் இப்படியான தத்துவ முத்துக்களை யாழில் அடிக்கடி நீங்கள் உதிர்வதற்காக உங்களுக்கு ஓர் பொன்னாடை வாங்கித் தருவார்.. :mellow:

Link to comment
Share on other sites

இந்த படத்தில் எல்லாப்பாட்டுமே எனக்கு பிடிக்கும்! நல்ல பாட்டுகள்.. :mellow:

இந்த படத்தைப் பற்றி கருத்து சொல்ல ஆசை தான்.... ஆனால்.... நான் என்னும் இந்த படத்தை பார்த்து முடிக்கயில்லை ..... ;) அதனால்.... இங்கு அந்த படத்தை பார்ப்பதற்கு இணைப்பையும் குடுத்து விடுங்கள்.... படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க ... படத்தை பார்த்திட்டு கருத்து சொல்லுவம்..... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்காக உங்களுக்கு 'தத்துவ சிகாமணி' என்ற ஒரு பட்டத்தை யாழ் களம் சார்பில் வழங்கி மகிழ்கின்றேன்.. :D

மேலும், யாழ் கள நிருவாகிகளில் ஒருவரான வலைஞன் இப்படியான தத்துவ முத்துக்களை யாழில் அடிக்கடி நீங்கள் உதிர்வதற்காக உங்களுக்கு ஓர் பொன்னாடை வாங்கித் தருவார்.. :mellow:

<<

கலைஞா,

இது 'நக்கல்" இல்லைத்தானே?!! :huh::lol::( நீங்கள் அளித்த பட்டத்தை மன நிறைவோடு பெற்றுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

இல்லை. இல்லை. நக்கல் இல்லை.. உண்மையாகத்தான் சொன்னனான்.

உங்களுக்கு இதுவரை இரண்டு பட்டங்களை தந்துள்ளேன்.

1. காதல் கதை அழகி

2. தத்துவ சிகாமணி

இன்னும் இப்படியான அரிய பல தத்துவ முத்துக்களை உதிர்ந்து பல பட்டங்களை பெற்றுக்கொள்ளுங்கோ.

உண்மையில் இவை நல்ல சிந்தனைகள்..

1. தன் மீது நம்பிக்கை உள்ளவன் அடுத்தவனை சந்தேகப்பட மாட்டான்.

2. சந்தேகமும், காதல் என்ற பெயரைக்கொண்டு அடக்கி ஆளுதலும் காதலே அல்ல!.

3. தூய அன்பு யாரையும் அடிமைப்படுத்தாது!. அது புரிந்துணர்வு நிறைந்தது!.

4. 'எனக்கானவன் என்னை விட்டுப்போகமாட்டான்" என்பதே தெரியாவிட்டால் என்ன காதல் அது?!!

5. உண்மையில் நாம் ஒருவரை நேசித்தால் அவரை எந்த விதத்திலும் காயப்படுத்த மனசே வராது, தவறுதலாக ஏதேனும் சொன்னால் கூட மனசு பதறும் கிடந்து துடிக்கும் அதில் உயர்வு,தாழ்வு பேதம் பார்க்காது மன்னிப்புக்கேட்கும். அன்புக்கு முன்னால் வெற்றி எது தோல்வி எது?!

6. இயற்கையை அதன் இயல்போடு இரசிப்பதுதான் அழகு! அதை ஏற்றுக்கொண்டு வாழும் துணிவு இரண்டாம் நாயகிக்குத்தான் உண்டு! 'நிலவில் கறையை மட்டுமே பார்க்கும் கண்களுக்கு அதன் அழகை இரசிக்க முடியாது...

எனினும், யாழ் கள நிருவாகிகள் உங்களுக்கு பொன்னாடை வாங்கித்தரும் விசயம் எனது கையில் இல்லை.. :mellow:

Link to comment
Share on other sites

வைகாசி நிலவிற்கு ஏதாவது வண்ணம் பூசி வைப்பாங்களா என்ன?..

பரணி அண்ணாற்கு ஒண்ணுமே தெரில.. ;)

நிலவு எப்பவும் போல..மாயைதான்.. :mellow:

Link to comment
Share on other sites

வைகாசி நிலவிற்கு வண்ணம் பூசுவீங்களோ இல்லையோ ? எனக்குத் தெரிஞ்சாகனும் என்ன காரணம் என்று

Link to comment
Share on other sites

வைகாசி நிலவிற்கு வண்ணம் பூசுவீங்களோ இல்லையோ ? எனக்குத் தெரிஞ்சாகனும் என்ன காரணம் என்று

மாஸ்டர் நிலவின் முதுகும் பெண்ணிண் மனதும் என்றும் இரகசியம் தான்.............. :P :P

Link to comment
Share on other sites

பொய் ஜமுனா

நிலவின் முதுகின் பின் எதுவும் இல்லை

பெண்ணின் மனதிற்குள்ளும் எதுவும் இல்லை

எல்லாமே கவிஞர்களின் கற்பனையில் விரிந்தவைதான்

Link to comment
Share on other sites

வைகாசி நிலவே! வைகாசி நிலவே! என்று கவிஞர் கூறியதற்கான காரணம், வைகாசியில் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏதாவது முக்கிய சம்பவம் நடைபெற்று இருக்கலாம். அல்லது மற்றைய நிலவுகளைவிட வைகாசியில் வரும் நிலவு அதிக மகிழ்ச்சியை, சந்தோசத்தை, குளிர்மையை ஏற்படுத்தி இருக்கலாம். வசந்த காலம் என்று சொல்வது வைகாசியில் தானே வரும்? சிலது அதனால் இருக்கலாமோ?

Link to comment
Share on other sites

ஓ அப்படியானால், இந்த பாடலை எழுதிய கவிஞரைத்தான் கேக்க வேணும். இதை எழுதியது வைரமுத்துவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

பொய் ஜமுனா

நிலவின் முதுகின் பின் எதுவும் இல்லை

பெண்ணின் மனதிற்குள்ளும் எதுவும் இல்லை

எல்லாமே கவிஞர்களின் கற்பனையில் விரிந்தவைதான்

ஓ ஒன்றுமே இல்லையா இரண்டிலும் ஆனா இருகிற மாதிரி காட்டி கொள்கீனம் போல மாஸ்டர்......... :P

Link to comment
Share on other sites

என்ன கலைஞன் படத்தை பாடலை ரசித்து இருக்கின்றீர்கள் எழுதியவர் யாரென்று தெரியவில்லையா ?

நம்ம வாலிபன்தான் மன்னிக்கவும் வாலி ஜயாதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகாசி நிலவுக்கு உள்ள சிறப்பு - சித்தார்த்தர் புத்தரானது அன்றைய பெளர்ணமியில் தான் ஆகவே அது புனிதம் நிறைந்தது! அதனால் தான் வைகாசி நிலவே!!ன்னு கவிஞர் வாலி எழுதி இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

அதுதான் உண்மையான விளக்கம். சும்மா விளக்கம் இல்லாமல் எழுதமாட்டார்கள். அதில் ஏதோ விசேடம் இருப்பதாகவே எனக்கும் தோன்றியது. அதுதான் வினாவினேன். தகவலிற்கு நன்றி தமிழ்தங்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.