Jump to content

கோவை காரில் வெடித்த சிலிண்டர்: 6 தனிப்படை அமைத்து விசாரிக்கும் தமிழ்நாடு காவல்துறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவை காரில் வெடித்த சிலிண்டர்: 6 தனிப்படை அமைத்து விசாரிக்கும் தமிழ்நாடு காவல்துறை

23 அக்டோபர் 2022, 07:18 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோவையில் பற்றி எரிந்த கார்

கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறுகிறது. காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அவரின் அடையாளம் தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்குப் பின் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன், சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஸ்டீபன் ஜேசு பாதம் ஆகியோர் கோவை விரைந்தனர்.

இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு இரண்டு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் வெடித்தாகவும், சிலிண்டர் வெடிப்பு நடந்த மாருதி 800 காரின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளர்களை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அந்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ''பால்ரஸ் இல்லை; வேறு சில விஷயங்கள் உள்ளன'' என்று மட்டும் அவர் கூறினார்.

கோவையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் இருந்து கோவைக்கு வரவுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

 

சைலேந்திர பாபு

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநர் கோவை வந்துள்ளார் என்றும் தற்போது தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

முதல்கட்ட விசாரணை மூலம் தெரிந்த தகவல்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ''சதிச் செயலா என்று விசாரணையின் கடைசியில்தான் சொல்ல முடியும், எல்லா கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம்,'' என்று டிஜிபி தெரிவித்தார்.

கார் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் சுமார் காவல் துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சைலேந்திர பாபு நிகழ்விடத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் அங்கு வந்து பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன் ''சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரை ஓட்டிச் சென்றவரின் உடல் முழுமையாக சிதைந்துள்ளதால் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.காவல்துறை மற்றும் தடயவியல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்" எனக் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-63363087

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: இறந்த ஜமேஷா முபின் வீட்டில் வெடிகுண்டு கச்சாப் பொருள்கள் - போலீஸ் தகவல்

8 நிமிடங்களுக்கு முன்னர்
 

செய்தியாளர் சந்திப்பு

கோவை காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்டதாக கருதப்படும் சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜமேஷா முபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், அவருடைய வீட்டில் சோதித்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்ற பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு "கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டை சோதனை செய்தபோது அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டு, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்துள்ளனர். காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து வந்த கார் 9 பேர் கைமாறி உள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது. இவர் மீது முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. அவருடைய செல்போன் தரவுகளை ஆராய்ந்து யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம்" என்றார் சைலேந்திர பாபு.

இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்த போதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால் அங்கே அவர் ஒதுங்கி உள்ளார். அப்போது தான் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. எனினும் இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். ஜமேஷா முபின் எந்த அமைப்பையும் சார்ந்தவர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்."இந்த வழக்கின் விசாரணையிலும் எந்த அமைப்பும் பின்னணியும் இல்லை. இவர் தனிநபராக செயல்பட்டாரா அல்லது வேறு திட்டங்கள் ஏதும் இருந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல்துறையே துரிதமாக செயல்பட்டு வருவதால் என்.ஐ.ஏ விசாரணை தேவையில்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் கூறினார் சைலேந்திர பாபு.

சந்தேக மரணம் , வெடிமருத்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-63367272

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: 5 பேர் கைது; என்.ஐ.ஏ புலனாய்வை நோக்கி நகரும் விசாரணை

25 அக்டோபர் 2022, 02:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சிசிடிவி காட்சி

பட மூலாதாரம்,SCREENGRAB

 

படக்குறிப்பு,

சிசிடிவி காட்சி

கோவையில் அக்டோபர் 23ஆம் தேதி காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் விசாரணையில், நல்ல முன்னேற்றம் இருப்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். ஆனால், சம்பவத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் சிசிடிவி காட்சி வெளியானதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இறந்த நபர், ஏற்கெனவே என்ஐஏவால் விசாரிக்கப்பட்டவர். ஆனால், அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

ஆரம்பத்தில் அந்த காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறியது. ஆனால், காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அப்போது அவரின் அடையாளம் தெரியவில்லை. இந்த நிகழ்வுக்குப் பின் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் இயக்குநர், உளவுப்பிரிவு கூடுதல் இயக்குநர் ஆகியோர் கோவை விரைந்தனர்.

 

வழக்கமாக கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கு இதுபோன்ற உயரதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தாது. அத்தகைய சம்பவத்தை உள்ளூர் காவல்துறையே மாவட்ட அளவிலான வளங்களைக் கொண்டு விசாரிக்கும்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணைக்குப் பின், உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ததில், அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டுகள், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

 

சைலேந்திரபாபு

மேலும், "உயிரிழந்த நபர் ஏதும் அமைப்பைச் சேர்ந்தவரா என்பதெல்லாம் தெரியவில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம்." என்றும் அவர் கூறினார்.

வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் என்ஐஏ இந்த வழக்கை விசாரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நம் விசாரணை முடிந்த பிறகே அது குறித்து தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.

உடல்கூராய்வுக்கு நடவடிக்கை

இதற்கிடையே, கோவை கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உடல், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்டு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்ட போதும் அதை அடக்கம் செய்ய பல இடங்களில் ஜமாத்துகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பூ மார்க்கெட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் பள்ளிவாசலில் ஜமேசாவின் உடலை அடக்கம் செய்தனர். முன்னதாக, உடல் கூராய்வு நடந்தபோது மருத்துவர்கள் குழு மட்டுமின்றி, காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், இறந்தவரின் உறவினர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். உடற்கூராய்வு நிகழ்வு முழுமையாக காணொளியில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூரில் உள்ள முஸ்லிம் மத பெரியவர்கள், ஜமேசாவின் குடும்பத்தினரிடம் பேச முயன்றோம். ஆனால், எவரும் பேசுவதற்கு முன்வரவில்லை. தற்போது கார் தீ பற்றி எரிந்த பகுதி முழுவதும் சீராக்கப்பட்டு அங்கு வழக்கமான தொழில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடமும் நாம் பேச முயன்றோம். அவர்களும் பேசுவதற்கு முன்வரவில்லை.

தனிப்படை விசாரணை

 

கோவை தாக்குதல்

பட மூலாதாரம்,ANI

ஜமோசா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். முபினுக்கு கார் வாங்கி கொடுத்தவர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அனைவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நேற்று ஏழு பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கோவையில் வேறு சில இடங்களில் நேற்று சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

''10,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மாருதி கார்''

இதில் முகமது தல்கா என்பவர் தான் முபினுக்கு மாருதி காரை 10,000 ரூபாய்க்கு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் சிலர் முபின் வீட்டின் முன்பு சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இதற்கு முன்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது.

முபின் உட்பட கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேர் அமைப்பின் பின்னணியில் இயங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் காவல்துறை அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்கள் 2016 , 2019ஆம் ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் என்ஐஏ இவர்களது வீடுகளில சோதனை நடத்தியது.

ஜமேசா முபினுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தந்தை இறந்து விட, தாய் மட்டும் இருக்கிறார். முன்பு பழைய புத்தகம் விற்பனை செய்து கொண்டிருந்தவர். தற்போது பழைய துணி வாங்கி விறகும் பணி செய்து வந்துள்ளார்.

ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் உள்ள ஹாஜி முகம்மது பிள்ளை ராவுத்தர் தெருவில் உள்ள வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார். அதற்கு முன்னர் ஜி.எம்.நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் தீவிரம் கருதி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையிலேயே முகாமிட்டுள்ளனர்.

அத்துடன் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜிக்கள் மற்றும் எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 (Rapid action force) மத்திய அதிவிரைவு படையினர் என சுமார் 3,000 பேர் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிற நிலையில் அதிரடி விரைவு படையினரும் கோவையின் பிரதான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட கோவையின் பிரதானமான இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

 

கோவை தாக்குதல்

இந்த நிலையில், ஜமேசா முபினின் வீட்டின் அருகே சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறிந்து அதில் இருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சிகளில், கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 4 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் இடம்பெற்ற நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

This is an alleged CCTV footage of the cylinders being loaded onto the car by #Mubin and his friends/associates !?#Ukkadam #Coimbatore pic.twitter.com/AwcqD6lt6L

— Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) October 24, 2022

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அக்டோபர் 23ஆம் தேதி இரவு 8.43மணிக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்வீட் ஒன்றில், "கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு வெறும் வெடிப்பு சம்பவம் அல்ல. இதில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதை பொதுவெளியில் வந்து ஒப்புக்கொள்வாரா? 12 மணி நேரமாக தமிழ்நாடு அரசு இந்த தகவலை மறைத்து வருகிறது. இது நுண்ணறிவு பிரிவு மற்றும் திமுக அரசின் தோல்வி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Coimbatore Cylinder blast is no more a ‘cylinder blast’. It’s a clear cut terror act with ISIS links.
Will @CMOTamilnadu come out in the open & accept this?
TN Govt is hiding this info for 12 hours now. Is this not a clear failure of the state intelligence machinery & DMK Govt?

— K.Annamalai (@annamalai_k) October 23, 2022

Twitter பதிவின் முடிவு, 2

மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்திருந்தார்.

 

ஜவாஹிருல்லாஹ்

பட மூலாதாரம்,JAWAHIRULLAH FB

 

படக்குறிப்பு,

ஜவாஹிருல்லாஹ்

என்ஐஏ என்றால் என்ன?

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை 2008ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. தீவிரவாதம், நாடுகளுக்கு இடையிலான கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது, தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக இந்த முகமை உருவாக்கப்பட்டது. இந்த முகமை உருவாக்கப்படும்வரை தீவிரவாதம் தொடர்பான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வந்தது.

இந்த முகமை தொடங்கியது முதல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, 473 வழக்குகள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இந்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

 

என் ஐ ஏ

பட மூலாதாரம்,SCREENGRAB

 

படக்குறிப்பு,

NIA

என்.ஐ.ஏ.வுக்கென்று தனித்த முறைமையுடன் கூடிய விசாரணை வழிகாட்டல்கள், வழக்காடு மன்றங்கள், வழக்கறிஞர்கள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008 வரையறுக்கிறது.

எப்போது என்ஐஏ விசாரிக்கலாம்?

"தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு என்று அரசு கருதும்பட்சத்தில் என்ஐஏ ஒரு வழக்கை தாமாகவே விசாரிக்கலாம். இதற்காக மாநில அரசிடம் இருந்து அனுமதி ஏதும் தேவையில்லை என்கிறார் ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கார்த்திகேயன்.

மேலும் அவர், "ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான விசாரணைகள், சதித்திட்டம் அல்லது தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுகளில் என்ஐஏ ஈடுபடுத்தப்படலாம்.

அதேபோல, ஒரு வழக்கை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ அல்லது தீவிரவாத தொடர்பு கொண்டதாகவோ இந்திய அரசு கருதும்பட்சத்தில், அந்த வழக்கை என்.ஐ.ஏ. மூலம் விசாரிக்கலாம்.

 

என்ஐஏ சட்டம்

பட மூலாதாரம்,SCREENGRAB

 

படக்குறிப்பு,

என்ஐஏ சட்டம்

இதற்காக மாநில அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை. பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் வழக்கை ஒப்படைக்க மாநில காவல்துறை தயாராகவே இருக்கும். அத்துடன், இந்த விசாரணைக்கு மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

"சில சமயங்களில் நீதிமன்ற வழிகாட்டுதலிபடியும் ஒரு வழக்கை, என்ஐஏ விசாரிக்கலாம் என்கிறார் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன்.

என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனியாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. அதன் தலைமை அதிகாரியாக டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் இரண்டு எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும் உள்ளனர்.ஆனால்,தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் சட்ட அனுமதி இல்லாத நிலை இருந்தது.

இதன் காரணமாக எந்தவொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இருந்தாலும், அதற்கு முன்பாக டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதனஅ பேரிலேயே விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளை என்ஐஏ மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 17ஆம் தேதிதான் தமிழ்நாடு முழுவதும் ஒரு காவல் நிலையம் போல என்ஐஏ செயல்படுவதற்கான அனுமதியை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி என்ஐஏ 14 வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த முகமைக்கு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்தபடி இந்த முகமையின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

https://www.bbc.com/tamil/india-63377324

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்- கொல்லப்பட்டவர் ஜஹ்ரான் குழுவினருடனான தொடர்பிற்காக 2019 இல் விசாரிக்கப்பட்டவர்- இந்திய ஊடகங்கள்

By RAJEEBAN

25 OCT, 2022 | 03:41 PM
image

கோயம்புத்தூரில்  காஸ் சிலிண்டர் வாகனமொன்றில் வெடித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமின் குழுவுடன்  தொடர்புவைத்திருந்தமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோயம்புத்தூரில் கோயில் ஒன்றின் முன்னாள் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரை தேசிய விசாரணை முகவர் அமைப்பு  இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புவைத்திருந்தமைக்காக விசாரணை செய்தது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஜமீசா முபின் உயிரிழந்தமை பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்ட சம்பவமா என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.

cylinder-blast.jpg

தமிழ்நாடு டி.ஜி.பிசைலேந்திர பாபு இதுவரை பயங்கரவாத தாக்குதல் முயற்சிக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள்; தெளிவற்றதாக காணப்படுவதால்  பொலிஸார் மௌனத்தை கடைப்பிடிக்கின்றனர்.

ஜமீசா முபின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எதிர்கால திட்டத்திற்கானவையாக இருக்கலாம் என்பதால் பொலிஸார் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்கின்றனர் என சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கோவிலை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியா இது என்ற கேள்விக்கு அந்த இடத்தில் இது இடம்பெற்றது என்பதை தவிர  இதற்கான வேறு ஆதாரங்கள் இல்லை  என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முபின் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் ஆணிகள் உட்பட ஏனைய பொருட்களுடன் செலுத்திக்கொண்டிருந்த  வாகனம் வெடித்து சிதறியது.

முபினை பற்றிய மேலதிக விசாரணையின் பின்னர் ஆலயத்தின் முன்னாள் சம்பவம் இடம்பெற்றமை குறித்து  பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் பொலிஸார் அவரது வீட்டை சோதனை செய்தவேளை வெடிமருந்து தயாரிப்பதற்கான பல பொருட்களை மீட்டுள்ளனர்.

2019 இல் முபின் தேசிய விசாரணை பணியகத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

அவர் கோயம்புத்தூர் மசூதியில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் வகுப்புகளில் கலந்துகொண்டிருந்ததால் முபின் உட்பட ஐந்து பேரை விசாரணை செய்யநேர்ந்தது என தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

இந்த வகுப்புகளை இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியும் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவருமான ஜஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய முகமட் அசாருதீன் நடத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைகுண்டுவெடிப்பின் பின்னர் அசாருதீன் பல தடவை கைதுசெய்யப்பட்டார் - தமிழ்நாடு கேரளாவிலிருந்து இளைஞர்களை இணைத்துக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டார்.

ஐஎஸ் அமைப்பின் தமிழ்நாட்டிற்கான குழுவின் வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/138396

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிப்பாட்டிக் கொண்டுபோய் நடுக்கடலிலை விட்டாலும் இவனுகள் திருந்தவே மாட்டானுகள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: ஐவர் மீது பாய்ந்த புதிய வழக்கு - யுஏபிஏ சட்டம் என்ன சொல்கிறது?

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் நபர்கள் மீது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தும் சட்டமாகும். இந்த சட்டம் சொல்வது என்ன? இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கலாம்?

இவ்விவகாரத்தில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய 5 சந்தேக நபர்களை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (அக். 25) கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, கைதானவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 மற்றும் வெடி மருந்துகள் சட்டப்பிரிவு 3ஏ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஐவர் மீதும் குற்றச்சதிக்கான 120பி, இரு வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு 153ஏ ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.

 
 

இலங்கை

 

இலங்கை

"குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இல்லை"

யுஏபிஏ பிரிவு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இனி இந்த வழக்கின் விசாரணை எந்த கோணத்தில் செல்லும்? இதில் மாநில காவல்துறைக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்குரைஞர் தமிழ்மணி, "யுஏபிஏ சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. யுஏபிஏ அல்லாத மற்ற வழக்குகளில், எவர் மீது மாநில காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டுகிறதோ, அந்த அமைப்புதான் ஒருவர் குறிப்பிட்ட குற்றத்தை செய்ததாக நிரூபிக்க வேண்டும்," என்கிறார்.

 

சிசிடிவி காட்சி

பட மூலாதாரம்,SCREENGRAB

"சாட்சியங்களை கண்டறிந்து குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்புக்குத்தான் உள்ளது. ஆனால், யுஏபிஏ பிரிவு 44-ன்படி, ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டால் அந்த குற்றச்சாட்டிலிருந்து அந்த நபர் வெளியில் வரவேண்டிய பொறுப்பு அந்த நபருக்குத்தான் உண்டு, அவர்தான் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தால் மட்டும் போதும்" என்கிறார்.

ஆனால், இந்த வழக்கில் யுஏபிஏ பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது சரியா, தவறா என்பதை இந்த ஆரம்பகட்ட சூழலில் யாராலும் சொல்ல முடியாது எனவும் தமிழ்மணி தெரிவித்தார்.

ஜாமீன் கிடையாது

பொதுவாக 'உபா' என அறியப்படும் இச்சட்டம், நாட்டுக்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது சமுதாயத்தின் ஒரு பிரிவின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரும் என கருதினால், இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இப்பிரிவில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கிடையாது.

இது குறித்துப் பேசிய வழக்குரைஞர் வெற்றிச்செல்வன், "யுஏபிஏ-வில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கிடையாது. பெரும்பாலும் சிறையிலேயே விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும். காவலில் இருக்கும்போது கைதான நபர் கொடுக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் அவருக்கே எதிராக திரும்பும் நிலையும் ஏற்படலாம்" என தெரிவித்தார்.

 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு

பட மூலாதாரம்,ANI

1998ஆம் ஆண்டில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான முஸ்லிம்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் வழக்குரைஞர் ஞானபாரதி. யுஏபிஏ சட்டம் குறித்து அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"உபா சட்டத்தைப் பொறுத்தவரையில் விசாரணை இல்லாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் ஒருவரை சிறையில் வைத்திருக்கலாம். மற்ற வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். போதைப்பொருட்கள் சம்பந்தமான வழக்குகளில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், யுஏபிஏவில் எத்தனை ஆண்டுகளானாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கூட குற்றம்சாட்டப்பட்டவரை சிறையில் வைத்திருக்க முடியும்" என்கிறார் ஞானபாரதி.

மேலும், "யுஏபிஏவில் கைது செய்திருப்பதாலேயே சதி நடந்திருப்பதாக காவல்துறை கூறலாம். அதனடிப்படையில் இன்னும் சில முஸ்லிம்களை சிறையிலடைப்பது உள்ளிட்டவை நடக்கலாம். மேலும், முன்கூட்டி விடுதலை கோரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இதனை காரணம் காட்டியே அந்த வாய்ப்பு மறுக்கப்படலாம்" என்கிறார் ஞானபாரதி.

பீமா கொரேகான் வழக்கில் மூன்றாண்டுகள் கழித்து கவிஞர் வரவர ராவுக்கு ஜாமீன் கிடைத்தது, எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காதது, ஸ்டேன் சுவாமி சிறையிலிருந்து வெளியில் வராமலேயே உயிரிழந்தது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, யுஏபிஏ எவ்வளவு கடுமையான சட்டம் என்பது குறித்து ஞானபாரதி பேசினார்.

ஏற்கெனவே பெரியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோவை மாவட்டத்தில் ஏன் இன்னும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்ட அமைப்பை உருவாக்காதது குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஞானபாரதி.

யுஏபிஏ பிரிவை உடனே பயன்படுத்தியது அவசியமில்லை எனக்கூறும் ஞானபாரதி, எனினும், பல பின்னணி தகவல்கள் வெளியாகாத நிலையில் அது குறித்த கருத்துகளை கூற இயலாது என்றும் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-63392720

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: சம்பவ பகுதியில் என்ஐஏ - ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை

26 அக்டோபர் 2022, 08:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாம்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறையின் தனிப்படை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த சம்பவத்தின் தீவிரத்தை ஆராய்வதற்காக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கோவையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினுடன் தொடர்புடையவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று ஏற்கெனவே விசாரணையை தொடங்கினர்.

கோயம்புத்தூர் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். கோவை மாநகரின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்களை அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 
 

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்த மு.க. ஸ்டாலின்

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் காவல்துறையில் ஒரு சிறப்பு படையை உருவாக்கிடவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரைப் பற்றியும், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஜமேசா முபின் உறவினரிடம் விசாரணை

இதனிடையே உக்கடம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஜமேசா முபின் உறவினர் அப்சர் கானை உக்கடம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்சர் கானின் உறவினர் பஷீர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அப்சர் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு முபினை சந்தித்துள்ளார். அப்போது முபினுக்கு நெஞ்சு வலியால் உடல்நலம் சரியில்லாததால் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

நேற்று முன்தினமே காவல்துறையினர் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். தற்போது மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்றைய தினமே வீடு முழுவதும் சோதனையிட்டு லேப்டாப் ஒன்றை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்" என்றார்.

ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதன்பின் பிபிசி தமிழிடம் பேசிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பஷீர் அகமது, "கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ள சம்பவம் உளவுத்துறையின் தோல்வியே. இது போன்ற தீவிரவாத செயல்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மற்றபடி கோவை அமைதியாக தான் உள்ளது. கோவையில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக சித்தரிப்பது மிகவும் தவறானது. கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் தீவிரமான எண்ணங்கள் உருவாகுவதை தடுப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

கோவை மாநகர் உக்கடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாருதி கார் சிலிண்டர் வெடித்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைந்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். என்ஐஏ விசாரணை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாலகிருஷ்ணன் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆதியோர் ஜமாஅத் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினர்.

 

ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை

 

படக்குறிப்பு,

பாலகிருஷ்ணன், கோவை மாநகர காவல்துறை ஆணையர்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "கோவை சம்பவத்தைத் தொடர்ந்து சமூக பதற்றம் உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஜமாஅத் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கலந்துரையாடல் நடத்தியது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள் சிலிண்டர் வெடி விபத்தை ஒருமனதாக கண்டித்தனர். இத்தகைய செயல்களுக்கு எப்போதும் ஆதரவில்லை என்றும் தெரிவித்தனர். கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக இது போன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான சூழல் நிலவ அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஜமாத் கூட்டமைப்பினரும் அதற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அனைத்து மத அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் உடன் இது போன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்படும்" என்றார். மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், "ஜமாஅத் கூட்டமைப்பினர் ஒரு மனதாக இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். மேலும் எந்த தகவல் கிடைத்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மத நல்லிணக்க கூட்டம் உள்ளிட்ட நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்றார்.

 

கோவை குண்டுவெடிப்பு

 

படக்குறிப்பு,

இனாயதுல்லா

ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனயத்துல்லா பேசுகையில், "இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உளவுத்துறையும் என்.ஐ.ஏ அமைப்பும் இதை முன்கூட்டியே பிடிக்காமல் விட்டது அதிர்ச்சியாக இருந்தது. மாவட்ட அளவிலும் சரி ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும் சரி ஜமாத் கூட்டமைப்பு இணைந்து பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் மூலம் சமூகத்தில் தனித்திருக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இணைந்து செயல்பட உள்ளோம்" என்றார்.

வெடிப்பு நடந்த இடத்துக்கு வந்த வானதி சீனிவாசன்

சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு பகுதி கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள வானதி சீனிவாசன் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்தார்.

 

வானதி சீனிவாசன்

சங்கமேஸ்வரர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில் வானதி சீனிவாசன், கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் முதல்வர் மு.க ஸ்டாலின் அமைதி காத்து தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறார் என கடுமையாகச் சாடினார்.

அப்போது பேசியவர், "முதலில் உக்கடத்தில் நிகழ்ந்தது சிலிண்டர் விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால் விசாரணையின் போது வெடி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதை ஒரு தனித்த சம்பவமாக பார்க்க முடியாது. இதன் பின்னர் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது.

ஆனால் இந்த சம்பவத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்னும் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது. இப்போது மட்டுமல்ல, கடந்த மாதம் பாஜகவினர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட போதும் முதல்வர் கண்டிக்கவில்லை. முதல்வர் மௌனம் காப்பது தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுப்புகிறது.

திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலருமே சிறுபான்மையினர் வாக்குகளால் தான் தாங்கள் வெற்றி பெற்றதாக பேசுகின்றனர். அதனால்தான் முதல்வர் இந்த குற்றங்களை கண்டிக்காமல் இருக்கிறாரோ என தோன்றுகிறது.

 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாம்

தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தங்கள் சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுவிடுமோ என அமைதி காக்கின்றனர்.

சிறு சிறு நிகழ்வுகளுக்கு கூட கருத்து தெரிவிக்கும் களத்திற்கு செல்லும் திமுகவினர் ஒருவர் கூட இங்கு வரவில்லை. இது உளவுத்துறையின் தோல்வி. முதல்வர் இங்கு வராமல் இந்த சம்பவம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ. ஏ அமைப்பு ஏற்கனவே விசாரித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சர்வதேச தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை என் ஐ ஏ விசாரிப்பது தான் சரி. தமிழக மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாஜக என்ன செய்யும் என்பதை இன்று மாலை தெரிவிக்கிறோம்.

மாநில முதல்வர் கோவைக்கு வருகை தர வேண்டும். உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் சரியான உத்தரவு வழங்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்." என்றார்.

https://www.bbc.com/tamil/india-63397539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எப்பிடித்தான் அடுத்தவனைக் கொல்ல முயற்சிக்க மனம்  வருகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய உள்துறை - முழு விவரம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோவை கார் வெடிப்பு

 

படக்குறிப்பு,

கோவையில் கார் வெடிப்பு நடந்த பகுதியை பார்வையிடும் மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை கமாண்டன்ட் தலைமையிலான அதிகாரிகள் குழு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த ஒரு நாள் கழித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு (சிடிசிஆர்) என்ஐஏவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த விவகாரத்தில் நீடித்து வரும் தீவிரத்தை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள என்ஐஏ காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான புலனாய்வுக்குழுவினர் ஏற்கெனவே கோவையில் முகாமிட்டு ஆரம்பநிலை தகவல்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் வெடிமருந்துகள் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையின் குழுவினரும் என்ஐஏ குழுவினரின் பணிக்கு உதவியாக கோவையில் உள்ளனர்.

இந்த சம்பவத்தை இதுநாள்வரை தமிழ்நாடு காவல்துறையின் கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.என்ஐஏ முறைப்படி வழக்கு விசாரணையை ஏற்கும்வரை இந்த தனிப்படை விசாரணையை மேற்கொள்ளும். ஏற்கெனவே ஐந்து பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்திருந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதான நபரின் பெயர் அப்சர் கான். இவர் சம்பவத்தில் உயிரிழந்த ஜமீசா முபினின் உறவினர். இவருடைய இல்லத்தில் இருந்து லேப்டாப் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல்துறை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"அண்ணாமலையைத்தான் விசாரிக்க வேண்டும்"

கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிந்தைய சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு நிலவரம் மத நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

 

கோவையில் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டம்

மேலும் அவர், "காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். முதலமைச்சர் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி மாலைக்குள்ளாகவே இயல்பு நிலை திரும்பியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் கோவையில் நடந்த சம்பவத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் குறுகிய மனநிலையோடு செயல்பட்டு வருகின்றனர்," என்றார்.

"கோவை அமைதியாக உள்ள நிலையில் இங்கே பதற்றம் இருப்பதாக தவறாக சித்திரிக்க வேண்டாம். காவல்துறை வெளிப்படையாக செயல்படுகிறது. முறையான விசாரணை அடிப்படையில் தான் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லும் செய்திகளை பெரிதாக்கி மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டாம்.

பாஜகவினர் மதுரையில் ராணுவ வீரர் உயிரிழந்ததை எவ்வாறு அரசியல் ஆக்க முயன்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். காவல்துறை விசாரணைக்கு முன்பே தனக்கு எல்லாம் தெரியும் என்பதை போல அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறார். உண்மையில் என்ஐஏ அண்ணாமலையை தான் முதலில் விசாரிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி விசாரணை தகவல்களை வெளியிட முடியும்?" என்கிறார் செந்தில் பாலாஜி.

"பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி"

"நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டம் ஒழுங்கு சிக்கலை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். சமூக ஊடகங்களில் 1998இல் நடந்த சம்பவத்தையும் தற்போதைய சம்பவத்தையும் ஒப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அப்படி யாராவது செய்தி பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியோ, இயக்கங்கமோ இதில் அரசியல் செய்யவில்லை" என்கிறார் செந்தில் பாலாஜி.

அரசியல் கட்சிகள் எதிர்வினை

 

கோவைசம்பவம்

 

படக்குறிப்பு,

டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்

இந்த நிலையில்,கோவை சம்பவம் தொடர்பாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றியிருக்கின்றனர்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழக காவல்துறை விரைவாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது பாராட்டுக்குரியது. இந்த வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்றினாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு தான் உள்ளது. கோவையை மையமாக வைத்து 24 மணி நேரமும் செயல்படும் "பயங்கரவாத எதிர்ப்பு படை'யின் நிரந்தர மையம் ஒன்றை விரைவாக கோவையில் நிறுவ வேண்டும். தமிழக முதல்வர் கோவைக்கு வருகை புரிந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் தீவிரவாதத்தை எதிர்த்து தன்னுடைய அரசு தீவிரமாக செயல்படும் என்பதையும் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் கூறினார்.

 

இந்தியகம்யூநிஸ்ட் கட்சி

 

படக்குறிப்பு,

கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக உளவுப்பிரிவின் செயல்தன்மையை விமர்சித்தார்

"தமிழக அரசு உளவுத்துறையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். என்.ஐ.ஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ கூட கைது செய்யப்பட்டவர்களை முன் கூட்டியே கண்காணிக்காதது கேள்விக்குரியதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அமைதியை நிலை நாட்ட வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது" என்றார் பாலகிருஷ்ணன்.

இதேவேளை, கோவை வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

'1998' சம்பவம் நடக்கக் கூடாது

இந்த நிலையில், கோவையில் 1998இல் நடந்த சம்பவம் போல மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

 

எஸ்.பி. வேலுமணி

 

படக்குறிப்பு,

எஸ்.பி. வேலுமணி, தமிழக சட்டப்பேரவை அதிமுக கொறடா

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயம்புத்தூரில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளனர். 1998இல் நடந்த குண்டுவெடிப்பால் வளர்ச்சியில் நாம் இருபது ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். தற்போதைய அரசியல் உளவுத்துறை வேலை செய்வதே இல்லை," என்று கூறினார்.

"தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் முதலமைச்சருக்கு பிஏவாக தான் வேலை செய்கிறார். உளவுத்துறை சரியாக வேலை செய்யாமல் தோல்வியுற்றதன் விளைவு தான் இது. காவல்துறையினர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவதில் மட்டுமே குறியாக உள்ளனர். கோவையில் மத பிரச்னை என ஏதுமில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறோம். குற்றம் செய்தவர்களை மதம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1998இல் நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது," என்று வேலுமணி கேட்டுக் கொண்டார்.

விரிவடையும் விசாரணை

இந்த நிலையில், இந்திய உள்துறையின் உத்தரவுக்கு ஏற்ப கோவை சம்பவம் மீதான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை ஆவணங்களை தமிழக காவல்துறையிடம் இருந்து பெறும் நடவடிக்கைகளை என்ஐஏ தொடங்கியிருக்கிறது. நடந்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு ஏற்கெனவே இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு மீது அனுதாபிகளாக அறியப்படும் சிலருடன் தொடர்பு இருந்ததாக என்ஐஏ நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், "உயிரிழந்த ஜமேசா முபினின் வாட்ஸ்ப் உரையாடல்கள் சிலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. முபின் தனது வீட்டில் எந்த நோக்கத்துக்காக வெடிமருந்தை வாங்கி பதுக்கி இருந்தார், அதை எங்கே கொண்டு செல்ல திட்டமிட்டார? போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரிப்பர். வழக்கின் விசாரணையை முறைப்படி என்ஐஏ ஏற்றுக் கொண்ட பிறகு இந்த சம்பவத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத சக்திகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த புலனாய்வு முடுக்கி விடப்படும்," என்று தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-63413025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை சம்பவத்தில் என்ஐஏ வழக்குப்பதிவு - ஆளுநர் ரவி அரசுக்கு எழுப்பும் கேள்விகள் - 10 தகவல்கள்

25 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஆளுநர் ஆர்.என். ரவி

கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக கோவையில் நிகழ்ச்சியொன்றில் இன்று பங்கேற்றப் பேசிய மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை மாநில அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

1. "நம்முடைய வளர்ச்சி நம் எதிராளிகளுக்கு பிடிக்கவில்லை. அமைதியான முறையில் 'இந்தியாவின் எழுச்சி' இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களால் இதை எதிர் கொள்ள முடியாது. புல்வாமாவில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான பதிலடி கொடுக்கப்பட்டது. கல்வானில் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான பதிலடி கொடுக்கப்பட்டது. அவர்கள் கையாளும் வழி 'தீவிரவாதம்'. தீவிரவாத செயல் திட்டங்களை தீட்டுகிறார்கள், தீவிரவாத தாக்குதல்களை நடத்துகிறார்கள். தீவிரவாதம் என்பது நேரடி யுத்தம் கிடையாது. மக்கள் மத்தியில் பயத்தை அச்சத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்த பழைய உத்திகள் எல்லாம் தற்போது எடுபடாது.

2. அரசியல் கட்சிகள் அரசியலமைப்பின் வரம்பு உட்பட்டு அரசியல் செய்வதில் தவறில்லை. ஒரு மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அவர்கள் சார்ந்திருந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பு தடை செய்யப்பட்டவுடன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தீவிரமான சம்பவங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாத சக்திகள் தனித்து செயல்படுவதில்லை. இவர்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இயங்குகிறது. 3. கோயம்புத்தூரை மையமாக வைத்து நீண்ட காலமாக தீவிரவாத செயல் திட்டங்கள் தீட்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இங்கே தீவிரவாத தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களும் நீண்ட காலமாக புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்தவர்கள் தான்., புதிதாக அவர்கள் கண்காணிப்பு வலையமைப்பில் வரவில்லை. பிறகு எங்கே தவறவிட்டோம்? நம்முடைய கண்காணிப்பு தோல்வி அடைந்து விட்டதா? இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு இராக், சிரியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அதனால் கோவையில் நடந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 4. கோவை சம்பவம் நடந்த சில நிமிடங்களிலே இது தீவிரவாத தாக்குதல் என்பது தெரிந்து விட்டது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதை விரைவாக விசாரித்த தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன்.

5. தமிழக காவல்துறை மிகவும் நவீனமானது. ஆனால் என்னுடைய கேள்வி - ஏன் சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து தான் என்.ஐ.ஏ வுக்கு ஒப்படைக்கப்பட்டது? தீவிரவாத தாக்குதலில் நேரம் என்பது முக்கியமானது. தமிழக காவல்துறை சிறப்பான பணி செய்தது. தமிழக காவல்துறை ஒரு கருவி தான். அவர்களால் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் ஏன் நான்கு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள்? இதற்கு மேல் இதில் அதிகமாக பேச விரும்பவில்லை.

 

7. விசாரணை அமைப்புகள் திறம்பட உள்ளன. அவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தீவிரவாதத்தை மென்மையாக அணுகக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. தீவிரவாதம் என வரும்போது தெளிவற்ற நிலை இல்லாமல் கடினமாக செயல்படுவோம் என்பதை நம்முடைய பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.

என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு

 

கோவை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

8. இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்திருக்கிறது. வெடிமருந்துகள் தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் என்ஐஏ பதிவு செய்துள்ள இந்த வழக்கு, புகார்தாரராக சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் பூசாரி எஸ். சுந்தரேசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

9. இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக என்ஐஏ சென்னை கிளை ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கை அவர் ஏற்றுக்கொள்வார் என்று என்ஐஏ கண்காணிப்பாளர் டி.ஸ்ரீஜித் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

10. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகளின் தீவிரம் கருதி என்ஐஏ சட்டத்தின் விதிகளுக்கு உள்பட்டு இந்த வழக்கை விசாரிக்க இந்திய உள்துறை அக்டோபர் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

இந்த சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பொட்டாசியம் நைட்ரேட், கருந்தூள், தீப்பட்டி, 2 மீட்டர் நீளமுள்ள வெடி மருந்து திரி, நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், பென்டேரித்ரிடால் டெட்ரா நைட்ரேட், அலுமினிய தூள், தூய்மையான ஆக்சிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், சர்ஜிக்கல் ஸ்டெரைல், கண்ணாடி மார்பிள், 9 வோல்ட் பேட்டரி, 9 வோல்ட் கிளிப், வயர், இரும்பு ஆணிகள், ஸ்விட்டச், இண்டேன் எரிவாயு சிலிண்டர், எரிவாயு ரெகுலேட்டர், இன்சுலேசன் டேப், பேக்கிங் டேப், கையுறைகள், நோட்டு புத்தகங்கள், இஸ்லாமியவாத சித்தந்தங்கள் மற்றும் ஜிஹாத் தகவல்கள் இடம்பெற்ற புத்தகங்கள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-63426262

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பாஜக அண்ணாமலை, போலீஸ் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்": காவல்துறை அறிக்கை

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதற்கு பதிலாக அண்ணாமலையும் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியான இந்த அறிக்கையில்,

அண்ணாமலை, "புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே அதுவும் வெடிந்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசியப் புலனாய்வு முகமைக்கு தாமதமாக அனுப்பியதாக கூறுகிறார்.இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம் ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.கோலையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஷயத்தை விளக்கிய காவல் துறை அறிக்கை,

"சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன்வந்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.

ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார்.இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துக்கூட வழக்குகள் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குண்டுவெடிப்பு

'இது அபத்தம்'

அத்துடன் நில்லாமல், முன்கூட்டியே இந்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து எச்சரித்ததாக அண்ணாமலை கூறியதையும் தமிழ்நாடு போலீஸ் தனது அறிக்கையில் மறுத்துள்ளதுடன், அண்ணாமலையின் கருத்து அபத்தம் என்றும் கூறியுள்ளது.

"திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புது டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாகப் புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது. புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையே ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.18 -10-2022 தேதியிட்ட வழக்கமான கற்றறிக்கை 21 ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவத்தை சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்தால், தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து, வீடுகளை சோதனையிட்டு வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். எனவே இது போன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி(யான அவர்) பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று தமிழில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை ட்வீட்

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும், தமிழ்நாடு போலீஸ் டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி ஆகியோர் அறிவாலயத்தின் விரிவாக்கம் போல செயல்படுவதாகவும் ட்விட்டரில் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இது தொடர்பாக அடுத்தடுத்து தொடர் ட்வீட்டுகளை இட்ட அவர்,

 

அண்ணாமலை ட்வீட்

பட மூலாதாரம்,TWITTER/ANNAMALAI

 

படக்குறிப்பு,

அண்ணாமலை ட்வீட்

போலீஸ் துறையின் உயர்மட்டத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மயமாக்கம் வேதனை தருவதாகவும், தங்களுடைய புகார் உயர் மட்டத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராகத்தான் என்றும், ஆனால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு போலீஸ் துறையின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். போலீசின் மன உறுதியைக் குலைப்பதாக தங்களைக் குற்றம்சாட்டாமல், எங்கே தவறு நடந்தது என்று தங்களைத் தாங்களே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். என்று கூறியுள்ளார் அவர்.

அனுமானமான செய்திகளை வெளியிடவேண்டாம் - ஆணையர்

இதனிடையே பத்திரிகையாளர்கள், உறுதிப்படுத்தப்படாத, அனுமானமான செய்திகளை வெளியிடுவதாக கூறிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வதந்திகளையும், விசாரணையைப் பாதிக்கும் வகையிலான செய்திகளையும் வெளியிடவேண்டாம் என்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இந்த சம்பவம் தொடர்பில், பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகைகளில், புலன்விசாரணை பற்றி, குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ற பெயரில், அனுமானமான, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு தொடர்பாக செய்திகளை வெளியிடும்போது, புலன் விசாரணையைப் பாதிக்காத வகையிலும், வதந்தி பரப்பாத வகையிலும்," வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-63440768

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 9V Battery வேண்டிக்கொடுத்த Receipt மட்டும் மிஸ்சிங்..

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Potassium Nitrate
Major uses of potassium nitrate are in 
fertilizers, tree stump removal, rocket propellants and fireworks. It is one of the major constituents of gunpowder (black powder).[7] In processed meats, potassium nitrate reacts with hemoglobin and myoglobin generating a red color.[8]

கருந்தூள் = கரித்தூள்

தீப்பட்டி = நெருப்புப்பெட்டு

2 மீட்டர் நீளமுள்ள வெடி மருந்து திரி - (சாதாரணமாக) கிணறுகள் தோண்டும்போது பாவிக்கப்படும் டைனமைற்றுக்குப் பாவிக்கப்படும் திரி

நைட்ரோ கிளிசரின் - கிளிசரின்

சிவப்பு பாஸ்பரஸ் - தீக்குச்சி முனையில் பாவிக்கப்படும் சிகப்பு மருந்து Red phosphorus is one of the most common allotropes of phosphorus and is considered to be a derivative of the P4 molecule. It exists in an amorphous (non-crystalline) network of phosphorus atoms. It is found to be more stable than white phosphorus (another naturally occurring phosphorus allotrope).

Plaster Of Paris Chemical Name: Properties Of Oxygen
Redox Reaction Example: Allotropes Of Carbon
What Is Unit Cell: Calcium Carbonate
https://byjus.com › chemistry › red-...

பென்டேரித்ரிடால் டெட்ரா நைட்ரேட் -Pentaerythritol tetranitrate (PETN), also known as PENT, PENTA, (ПЕНТА, primarily in Russian) TEN, corpent, or penthrite (or, rarely and primarily in German, as nitropenta), is an explosive material. It is the nitrate ester of pentaerythritol, and is structurally very similar to nitroglycerin. Penta refers to the five carbon atoms of the neopentaneskeleton. PETN is a very powerful explosive material with a relative effectiveness factor of 1.66.[2] When mixed with a plasticizer, PETN forms a plastic explosive.[3] Along with RDX it is the main ingredient of Semtex.

 அலுமினிய தூள்,

தூய்மையான ஆக்சிஜன் சிலிண்டர் - ஒட்சிசன் சிலின்டர் (வெல்டிங் கடைகளில் எரிவாயுவின் எரிதிறனை அதிகரிப்பதற்காகப் பாவிக்கப்படுவது வழமை)

சல்ஃபர் பவுடர் - Sulfur is used in matches, insecticides, and fungicides. Many sulfur compounds are odoriferous, and the smells of odorized natural gas, skunk scent, grapefruit, and garlic are due to organosulfur compounds. Hydrogen sulfide gives the characteristic odor to rotting eggs and other biological processes.

சர்ஜிக்கல் ஸ்டெரைல் - அறுவைச் சிகிச்சைகளின்போது பாவிக்கப்படும் தொற்று நீக்கி.

கண்ணாடி மார்பிள்,

9 வோல்ட் பேட்டரி, 9 வோல்ட் கிளிப்,

வயர், இரும்பு ஆணிகள், ஸ்விட்டச்,

இண்டேன் எரிவாயு சிலிண்டர் + எரிவாயு ரெகுலேட்டர் - சாதாரண வீட்டுப் பாவனைக்குரிய எரிவாயு கொள்கலன்.

இன்சுலேசன் டேப், பேக்கிங் டேப்,

கையுறைகள், நோட்டு புத்தகங்கள்,

இஸ்லாமியவாதசித்தந்தங்கள் மற்றும் ஜிஹாத் தகவல்கள் இடம்பெற்ற புத்தகங்கள் - இவை எல்லா முஸ்லிம்களின் வீடுகளிலும் இருக்கும் புத்தகங்கள். 

உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

 

இங்கு தரப்பட்ட எல்லாமே மிகவும்  சாதாரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்கள். 

இந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எல்லாமே சாதாரணமாக, ஆழ்கிணறு தோண்டும், கிணறு வெட்டும் ஒருவரின் வீட்டிலிருக்கக் கூடிய பொருட்கள். 

☹️

 

image.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: தமிழ்நாடு காவல்துறைக்கு அண்ணாமலை 'பதில்' அறிக்கை

23 நிமிடங்களுக்கு முன்னர்
 

அண்ணாமலை

தமிழ்நாடு காவல்துறைக்கும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான சொற்போர் தீவிரமடைந்திருக்கிறது.

காவல்துறை மீது அவதூறு பரப்புவதாக அண்ணாமலையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதில்கூறும் வகையில் அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

"பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம்" எனக் கேள்வியெழுப்பியுள்ள அண்ணாமலை, "இந்தக் குண்டு வெடிப்பிற்கு தமிழக ஆளுநர் காரணம் என சமூக வலைதளங்களில் பரப்பிவரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்றும் கேட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி ஞாயிறு அதிகாலை கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி வாகனம் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு வெடித்தது. அதில் வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.

 

இந்த விபத்திற்குப் பின்னால் தீவிரவாத சதிச்செயல்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், காவல்துறை மீது அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் விரைவில் பதிலளிக்கப்படும் என அண்ணாமலை ட்வீட் செய்தார்.

இந்த நிலையில், தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விஷயங்களை இங்கு வழங்கியுள்ளோம்.

"தமிழக காவல்துறையா, அறிவாலயத்தைக் காக்கும் துறையா?" என்ற கேள்வியோடு அந்த அறிக்கையைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, "முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும், தமிழக பாஜகவின் தலைவராகவும்" இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல்துறை தனிப்பிரிவு அறிக்கையைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, "இந்தச் சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அதை தமிழக அரசு மற்றும் காவல்துறை அறிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தனிப்பிரிவின் இந்த அறிக்கையை காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இதுவரை பர்க்கவில்லை என்பதை நேற்றைய அறிக்கை தெளிவுபடுத்துகிறது" அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதுதான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்பிற்கு தமிழக அரசு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இதை தீவிரவாதத் தாக்குதல் அல்லது தற்கொலைப்படைத் தாக்குதல் எனக் குறிப்பிட பல மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

கோவை கார் வெடிப்பு

இந்த மாத 18ஆம் தேதி மத்திய அரசு வழங்கிய சுற்றறிக்கை பொதுவானது என்றும், அதில் கோவை தாக்குதல் பற்றி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என சிறுபிள்ளைத்தனமான வாதத்தை தமிழக காவல்துறை நேற்றைய அறிக்கையில் முன்வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் தனிநபராக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 96 நபர்களின் பட்டியலை அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்னரே காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையிடம் காவல்துறையின் ஒரு தனிப்பிரிவு வழங்கியதாகவும், அந்த அறிக்கையில் ஜமேஷா முபீனின் பெயர் 89ஆம் இடத்தில் இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை கூறியது என்ன?

தமிழ்நாடு காவல் துறை தலைமையகத்தில் இருந்து நேற்று வெளியான அறிக்கையில், அண்ணாமலை, "புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசியப் புலனாய்வு முகமைக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

 

கோவை

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம் ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த விஷயத்தை விளக்கிய காவல் துறை அறிக்கை,"சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன்வந்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.

ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துக்கூட வழக்குகள் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" இது போன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி(யான அவர்) பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/india-63446775

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திமுக, பாஜகவின் அரசியலால் சாதகம், பாதகம் யாருக்கு?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
1 நவம்பர் 2022
 

அண்ணாமலை

 

படக்குறிப்பு,

கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்

கோயம்புத்தூரில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு உரிய வகையில் பதிலடி கொடுப்பதில் திமுக தடுமாறுவதாக ஒரு பேச்சு பரவலாக உள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விவகாரம், தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே மிகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

சிலிண்டர் வெடிப்பு நடந்து சில மணி நேரங்களில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக. இந்த விவகாரத்தைத் தற்கொலைப் படைத் தாக்குதலாகச் சித்திரித்துப் பதிவிட்டார் அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழக உளவுத் துறை தோல்வி அடைந்து விட்டதாகக் குற்றம்சாட்டினார். இந்தியாவிலேயே மிக மோசமான உள்துறை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்றார்.

 

இதற்கு, அண்ணாமலையின் பெயரைச் சொல்லாமல் ட்விட்டரில் பதிலளித்தார் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. "தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது" என்று தனது பதிவில் கூறினார் செந்தில் பாலாஜி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதற்கு அடுத்த நாளே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற முடிவுசெய்து அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதையடுத்து, "தி.மு.கவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்" என்று பதிவிட்டார் அண்ணாமலை.

அதுவரை அண்ணாமலைக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் இருந்த தி.மு.க, இந்தத் தருணத்தில் செந்தில் பாலாஜி மூலம் நேரடியாகப் பதிலளித்தது. செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "அரசுக்குத் தெரியாத விஷயங்கள் அண்ணாமலைக்குத் தெரிந்திருக்கின்றன. அவரிடம் தான் முதலில் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

தீவிரம் அடையும் வார்த்தைப் போர்

 

கோவை கார் வெடிப்பு சம்பவம்

இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, செந்தில் பாலாஜியை 'சாராய அமைச்சர்' என அழைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலகுவாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதியே மத்திய புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக எச்சரித்ததாகவும் ஜமீஷா முபினைக் கண்காணிப்பதை, திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மறுபடியும் ட்விட்டரில் களமிறங்கிய செந்தில் பாலாஜி, "முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை." என்று பதிலளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

இதற்கிடையில், கோவையில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டினார். அந்தத் தருணத்தில் தூத்துக்குடியில் இருந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி சனிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை எழுப்பிவரும் பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை நேரடியாகப் பதிலளித்தது.

"வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக இந்திய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, இந்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்" என்று கூறியது அந்த அறிக்கை.

உளவு ஆவணத்தை வெளியிட்ட அண்ணாமலை

 

கோவை கார் வெடிப்பு சம்பவம்

 

படக்குறிப்பு,

சி. சைலேந்திரபாபு, தலைமை இயக்குநர் - தமிழ்நாடு காவல்துறை

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்," என்று கூறியதோடு, அந்த அறிக்கைக்கு வரிக்கு வரி பதிலளிக்கப்போவதாகக் கூறி, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் இதற்கு முன்பாக கூறியிருந்த தகவல்களைக் கூறி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக கோயம்புத்தூரில் முழு அடைப்பு நடத்தப்போவதாக மாவட்ட பா.ஜ.கவால் அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த அறிவிப்பு ஒரு நீதிமன்ற வழக்கிற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலைமையில்தான், தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை முன்வைத்தார். இந்த நிலையில், கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்த இடத்திற்கு அருகில் இருந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற அண்ணாமலை, "ஜூன் 19ஆம் தேதி 'கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்' என உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் 89ஆவது நபராக ஜமேசா முபின் உள்ளார். அப்படிப்பட்டவர் எவ்வாறு கண்காணிப்பு வளையத்தில் இருந்து தவறினார் என்பதுதான் என் கேள்வி. கோவையில் செப்டம்பர் மாதம் வரை உளவுத்துறைக்கு அதிகாரி நியமிக்கப்படாமலேயே இருந்துள்ளார். இவ்வாறு காவல்துறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்" என்றார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பிற கட்சிகள் ஏதும் பெரிதாக விமர்சிக்காத நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து விவாத நிலையில் வைத்திருக்கிறார் அண்ணாமலை. இத்தனைக்கும் இந்த விவகாரத்தை அக்டோபர் 27ஆம் தேதியே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிவிட்ட நிலையிலும் இது தொடர்பாக தினசரி ஒரு அறிக்கை அளிப்பதையோ, செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுவதையோ அவர் உறுதிப்படுத்தி வருகிறார்.

பொதுவாக பா.ஜ.கவினர் எழுப்பும் கேள்விகளுக்கு தி.மு.க. தலைமை பதிலளிப்பதில்லை. கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களோ, கீழ் மட்ட நிர்வாகிகளோதான் பதில் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்திலும் அமைச்சர்கள் இருவரும் செய்தித் தொடர்பாளரும்தான் பதில் அளித்தார்கள் என்றாலும், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை நேரடியாகப் பதில் அளித்தது பலரது புருவங்களை உயர்த்தியது.

அரசியல் களமாடும் பாஜக, திமுக

 

ஏ.எஸ். பன்னீர்செல்வன்

 

படக்குறிப்பு,

ஏ.எஸ். பன்னீர்செல்வன், மூத்த பத்திரிகையாளர்

தாங்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அண்ணாமலை ஏற்படுத்தியிருக்கிறாரா?

இது குறித்து மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வனிடம் கேட்டபோது, "அப்படி அல்ல," என்கிறார் அவர்.

"பா.ஜ.க. எழுப்பும் அல்லது அண்ணாமலை எழுப்பும் கேள்விகளுக்கு தலைவரோ பொதுச் செயலாளரோ பதில் சொல்கிறார்களா? இல்லை. செய்தித் தொடர்பாளரான ராஜீவ் காந்திதான் பதிலளிக்கிறார். அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள் அளவுக்குத்தான் உங்க கட்சியின் மாநிலத் தலைவர் என்று காட்டுகிறது தி.மு.க." என்கிறார் அவர்.

மேலும், இதுபோலப் பேசுவதால் அரசியல் ரீதியாக தி.மு.க. அதற்கு என்ன விலையைக் கொடுத்திருக்கிறது? அப்படி எந்த விலையும் கொடுக்காத நிலையில், எதற்காக கட்சி கவலைப்பட வேண்டும் என கேள்வி எழுப்புகிறார் அவர்.

ஆனால், ஆளும்கட்சி இந்த விவகாரத்தைக் கையாள்வதில் தடுமாறித்தான் போயிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "எதிர்க்கட்சியான அ.தி.மு.கவைச் சுத்தமாகக் காணவில்லை. ஆகவே அந்த இடத்தை அடையும் முயற்சியை தீவிரமாகச் செய்கிறார் அண்ணாமலை. பதற்றத்தை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும் என கருதுகிறார். இந்தப் பதற்றம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வேண்டுமென நினைக்கிறாரோ என்று தோன்றும் வகையில் அவர் செயல்படுகிறார்.

ஆனால், இந்த விஷயத்தை பொதுவெளியில் கையாளுவதில் தி.மு.கவுக்கு தடுமாற்றம் இருக்கிறது. பா.ஜ.க. இதில் ஆதாயம் அடைந்துவிடக்கூடாது எனக் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படித் தயங்க வேண்டியதில்லை. ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் தவிர, களத்தில் இதை யாரும் பேசவில்லை. கோயம்புத்தூர் அமைதியாகவே இருக்கிறது. இதுபோன்ற வன்முறையை யாரும் விரும்பவில்லை. உதாரணமாக, இதில் இறந்துபோன முபினின் உடலை அடக்கம் செய்ய எந்த ஜமாத்தும் அங்கே முன்வரவில்லை. அதனை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து, பாஜக மதவாத அரசியல் செய்ய நினைப்பதாக கடுமையான அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்" என்கிறார் குபேந்திரன்.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊடகங்களில் அதற்குப் பொருந்தாதவகையில் கூடுதல் இடம் பா.ஜ.கவுக்குக் கிடைப்பதுதான் என்று சுட்டிக்காட்டுகிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதற்காக இந்த இடம் கிடைக்கவில்லை. அப்படியானால் தேசியப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆகவே இது அரசியல் சிக்கல் இல்லை. ஊடகங்களின் சிக்கல்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

https://www.bbc.com/tamil/india-63462606

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: அதிமுக இன்னும் அரசியல் செய்யாமல் அமைதி காப்பது ஏன்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கார் வெடிப்பு

கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை மிகப் பெரிய அரசியல் விவாதமாக பாஜக மாற்றிய நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இது தொடர்பாக பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. இந்த அமைதிக்கு என்ன காரணம்?

கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விவகாரம் அடுத்த ஒரு வாரத்திற்கு மேல் மிகப் பெரிய அரசியல் சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்தது. சிலிண்டர் வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக தமிழ்நாடு அரசும் உளவுத் துறையும் தோல்வியடைந்ததாகக் குற்றம் சாட்டியது.

கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் ஒரு தற்கொலைப் படை தாக்குதல் எனச் சித்தரித்துப் பதிவிட்டார் அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. அண்ணாமலை. இதற்குப் பிறகு தினமும் அறிக்கைகள், பேட்டிகள், ஊடக சந்திப்புகள் என இந்த விவகாரத்தை ஆறவிடாமல் வைத்திருந்தது அக்கட்சி.

ஆளும் கட்சியான திமுகவும் தமிழ்நாடு காவல்துறையும் பதிலளிக்கத் துவங்கிய நிலையில், ஒரு பிரதான எதிர்க்கட்சிக்கான குரலில் பேசியது பாஜக. கோவை விவகாரம் தொடர்பாக, சிபிஎம், காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பு ஒரே ஒரு அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

சிலிண்டர் வெடிப்பு நடந்த தினத்தன்று எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

அதேபோல அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம், "டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது, திமுக ஆட்சியில் 1998இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது. முதல்வர் உடனடியாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, அதிமுகவின் இரு அணிகளில் இருந்தும் கோவை சிலிண்டர் வெடிப்பு குறித்து பெரிதாக அறிக்கையோ, பேட்டிகளோ வரவில்லை.

 

எடப்பாடி செய்தியாளர் சந்திப்பு.

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதைக் கடுமையாக விமர்சிப்பார். அரசுக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்பார். ஆனால், இந்த முறை அந்தப் பாத்திரத்தை பா.ஜ.க. எடுத்துக் கொண்டதைப் போல இருந்தது.

"இப்போது மட்டுமல்ல, இந்த ஆட்சி வந்ததிலிருந்தே தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போல மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் பேசி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எழுந்த அதிகாரப் போட்டியின் காரணமாக பிரதான எதிர்க்கட்சியின் பணியை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருமே சரியாகச் செய்யவில்லை. எப்படி கட்சியைக் கைப்பற்றுவது என்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். டி.டி.வியும் சசிகலாவும்கூட இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா.

"1972ல் திமுகவை பிரதான எதிரி என அறிவித்து கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். அந்த நிலையிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பைத்தான் முன்னிறுத்தி இயங்கினார். ஆனால், அவர் இறப்பிற்குப் பிறகு கட்சி எதார்த்த நிலைக்கு வந்துவிட்டது. வன்ம அரசியலைக் கைவிட்டது. ஆகவே, வலுவான திமுக எதிர்ப்பு என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது," என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு,

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு

ஆனால், இந்த ஒரு விஷயத்தால் பிரதான எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் போய்விடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜி.சி. சேகர்.

"அதிமுக தற்போது பொதுவாகவே எந்தப் பிரச்னையைப் பற்றியும் பெரிதாக பேசுவது கிடையாது. வழக்குத் தொடர்வார்களோ என்ற பயம் இருக்கிறது. எடப்பாடி தரப்பு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆகிய இரண்டுமே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், அண்ணாமலைக்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இமேஜ் வந்துவிட்டது" என்கிறார் ஜி.சி. சேகர்.

அ.தி.மு.கவின் வாக்குகள் இப்போது எடப்பாடி கே. பழனிச்சாமி, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் என பல்வேறு திசைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. எதிர்ப்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால், அந்தத் துணிச்சல் அவர்களிடம் இல்லை என்கிறார் துரை கருணா.

இந்த விவகாரம் குறித்து அழுத்தமாகப் பேசினால், இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சம் காரணமா?

"இப்போது அ.தி.மு.கவிடம் இஸ்லாமிய வாக்குகள் கிடையாது. அவை முழுவதுமாகப் போய்விட்டன. ஆகவே அந்த அச்சம் காரணமல்ல" என்கிறார் துரை கருணா.

ஜி.சி. சேகரும் அதே கருத்தை முன்வைக்கிறார். "இஸ்லாமிய வாக்குகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கணக்கெல்லாம் இவர்களிடம் இல்லை. இவர்கள் ஜெயலலிதாவின் கட்சி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.

கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் குரல் கொடுத்ததால், அ.தி.மு.கவின் அமைதி கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. மின் கட்டண உயர்வு குறித்து போராட்டங்களை நடத்தியது தவிர, பொதுவாக தி.மு.க. ஆட்சியில் எழும் பிரச்சனைகள் குறித்து நீடித்த போராட்டங்கள் எதையும் அ.தி.மு.க. முன்வைக்கவில்லை.

 

குண்டுவெடிப்பு

ஆகவே, பல பிரச்சனைகளில் அ.தி.மு.கவின் எதிர்ப்பு என்பது வெறும் அறிக்கையாகவே கடந்து போகிறது. இதன் காரணமாக, வெகுசில பிரச்சனைகளில் பா.ஜ.க. சற்று உரத்த குரலை எழுப்பினாலும் அது பெரும் ஊடக கவனத்தைப் பெறுகிறது.

ஆனால், இவை எல்லாவற்றையும் மறுக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன். "தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தினமும் ஒரே பிரச்சனையை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று கிடையாது. அதற்குப் பிறகு எவ்வளவோ பிரச்சனைகள் வந்துவிட்டன. வெள்ளம், தேயிலை போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்." என்கிறார் வைகைச் செல்வன்.

இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியைப் போல பா.ஜ.க. செயல்படுவது குறித்துக் கேட்டபோது, "தாங்கள்தான் எதிர்க் கட்சி என்று சொன்னால், அப்படி ஆகிவிடுமா? அண்ணாமலை அரசியலுக்குப் புது வரவு. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இதுபோல போராட்டங்களை நடத்துகிறார். ஆனால், அ.தி.மு.க. 7 முறை ஆட்சியைப் பிடித்த இயக்கம். நாங்கள் அப்படியிருக்க வேண்டியதில்லை. ஆனால், கோவையில் அமைதி திரும்பாவிட்டால், போராட்டம் நடத்துவோம்" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதைப் போலச் செயல்பட்டாலும், அப்படி வெளியில் சொல்வதில்லை. அ.தி.மு.க. அழித்து அந்த இடத்தில் தாங்கள் வளர வேண்டுமென நனைக்கவில்லை என்கிறார்கள் அக்கட்சித் தலைவர்கள். ஆனால், இது எவ்வளவு நாளைக்கு என்பதைப் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-63509312

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை கார் வெடிப்பு: "தப்பு செஞ்சா முகத்தை காட்டுவாங்களா?" - சந்தேக நபர்களின் குடும்பங்கள்

  • பி.சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோவை சம்பவம்

பட மூலாதாரம்,ANI

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள், தவறு செய்வதாக இருந்தால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பகுதியில் முகத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு செயல்படுவார்களா என்று அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்த விவகாரத்தை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கை என்ஐஏ ஏற்கும் முன்பே கோவை காவல்துறை விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்திருந்தது.

இதில் இஸ்மாயில் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஃபிரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், முகம்மது ரியாஸ், முகம்மது தால்கா (காரை விற்றவர்) ஆகியோர் சம்பவத்துக்கு முந்தைய நாள் முபினின் வீட்டில் இருந்து சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில்தான் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசுவதை கைதான சந்தேக நபர்களின் குடும்பங்கள் தவிர்த்து வந்தன. இந்த நிலையில், அதில் உள்ள சிலர் தற்போது ஊடகங்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.

 

ஜமேஷா முபினின் வீட்டில் உள்ள சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவியதாக கூறப்படுவோரில் இஸ்மாயில் சகோதர்கள் முக்கியமானவர்கள் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமது பிள்ளைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அவர்களின் தாயாரான மைமூன் பேகம்.

"எங்களுடைய பிள்ளைகளும் ஜமேஷா முபினும் சிறு வயதில் இருந்தே நன்கு அறிமுகமானவர்கள். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று முபின் சொன்னதால் என் பிள்ளைகளை உதவிக்காக அனுப்பி வைத்தேன்," என்று மைமூன் கூறினார்.

போலீஸ் சந்தேகத்துக்கு என்ன காரணம்?

 

கோவை சம்பவம்

இதில் ஃபிரோஸ் என்பவர் 2020ஆம் ஆண்டுவரை துபாயில் பணியாற்றியவர். அவரது நண்பர்களில் ஒருவர் முகம்மது ரஷீத். இந்த முகம்மது ரஷீதுக்கு 2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை சந்தேக்கிறது.

இத்துடன் தற்போது என்ஐஏ கைது செய்துள்ள நான்கு பேரும் சித்தாந்த ரீதியாக ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதால் அது குறித்து அடிக்கடி தங்களுக்குள்ளாக பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள் என்றும் காவல்துறை தரப்பு கூறுகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் ஒரு ஸ்லீப்பர் செல் போல இயங்கினார்களா அல்லது இவர்களை யாரேனும் மூளைச்சலவை செய்தார்களா என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வந்தாலும், குற்றச்செயல், குற்றச்சதி தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் தனியாகவும் தேவைப்படும்போது என்ஐஏ புலனாய்வுக்கும் உதவியாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சந்தேகம், ஜமேஷா முபின் வாங்கி சிறிய ரக கார் தொடர்பானது. அந்த கார் 10 பேரின் கைகளுக்கு மாறி பிறகு மலிவான விலைக்கு முபின் வசம் வந்துள்ளது. அதுவும் அந்த காரை முபினுக்கு விற்க உதவியவர் முகம்மது தால்கா. இந்த நபரின் தந்தை நவாப் கான், 1998ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டிக்கப்பட்டு தற்போதும் சிறையில் இருப்பவர். எனவே, இந்த கோணத்தையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

காரை விற்றவர் குடும்பம் எழுப்பும் கேள்வி

 

கோவை சம்பவம்

இருப்பினும், புலனாய்வாளர்களின் இந்த கூற்றை திட்டவட்டமாக மறுக்கிறார் தால்காவின் தாயார் ஹஃப்சத் பீவி. எனது பிள்ளை சிறிய அளவில் கார்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருபவன். அதனால் தமது விற்பனை விவரத்தை சரியாக பராமரிப்பது இல்லை. விற்கும் வண்டிக்கு கமிஷன் மட்டுமே வாங்குவான். அந்த கார் முபின் கைக்கு போகும் முன்பு 9 பேர் வசம் கைமாறியிருக்கிறது. ஆனால், இதை சந்தேகமாகக் கருதி அவனை போலீஸார் பிடித்துச் சென்று விட்டனர்," என்கிறார் ஹஃப்சத் பீவி.

இதேவேளை முபினின் உறவினரான அஃப்சர் கான், ஆன்லைன் மூலம் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவதில் உதவியதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து நைட்ரோ கிளிசரின், PETN பவுடர், கருப்புத்தூள், சல்ஃபர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் முபினுக்கு எப்படி வந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய புலனாய்வாளர்கள், சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, சம்பவ நாளன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் தமது மகன் தால்காவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தால்காவின் தாயார் ஹஃப்சத் பிவி கூறினார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், வெடிப்பு சம்பவத்தில் தீயில் கருகிய காரை தால்கா தமது கூட்டாளி முகமது மீரான் குட்டியுடன் சேர்ந்தே முபினுக்கு விற்றுள்ளதாக கூறினார்.

இதற்காக முதலில் 16 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை கட்டாயப்படுத்தியதும் கூடுதலாக முபின் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் தெரிவித்தார். உண்மையில் இப்படியொரு பேரம் நடந்த தகவலையே தாங்கள்தான் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து தால்காவை சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிறகு முபினின் வீட்டை தால்காதான் காட்டினார். அன்று மாலையில் அவரை விடுவித்தனர். ஆனால், மீண்டும் அக்டோபர் 24ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு தால்காவையும் காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்து விட்டனர் என்கிறார் ஹஃப்சத்.

தால்காவின் தந்தை 1993ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பில் கைதாகி கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அப்போது தால்கா 5 மாத குழந்தையாக இருந்தார். தந்தையின் விடுதலைக்காக நடந்த போராட்டத்திலும் அவன் கலந்து கொண்டதில்லை. இப்படிப்பட்ட சூழலில் முழு ஆவணங்களுடன் கூடிய ஒரு காரை அவன் விற்றது தவறா? என கேள்வி எழுப்பினார் ஹஃப்சத் பீவி.

இந்த விவகாரத்தில் தால்காவின் தந்தை மீதான வழக்கை வைத்து, இப்போது எனது மகன் பழிவாங்கப்படுகிறானா என்ற சந்தேகம் எழுகிறது என்கிறார் ஹஃப்சத் பீவி.

 

கோவை சம்பவம்

சந்தேக நபர்களில் இஸ்மாயில் சகோதரர்கள் முக்கியமானவர்கள். இந்த சகோதரர்களின் தாயார் மைமூன் பேகம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார்.

இவரது மூத்த மகனின் பெயர் ஃபிரோஸ் இஸ்மாயில். அவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். மற்றொரு சகோதரர் பெயர் நவாஸ் இஸ்மாயில். "இந்த இருவரும் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் தவறு செய்திருப்பதாக தெரிய வந்தால் நிச்சயம் நானே நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பேன். எனது பிள்ளைகள் பெயர் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்படுவதாக அறிந்தபோது, அவர்களை நானேதான் போலீஸிடம் தகவல் தெரிவிக்க வைத்தேன். கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்து போனது ஜமேஷா முபின் என்பதை நாங்கள் சொல்லித்தான் காவல்துறையே அறிந்தது. எனது மூத்த மகனின் பிள்ளைக்கு நோட்டு புத்தகம் வாங்கும்போதுதான் ஜமேஷா முபினுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது," என்கிறார் மைமூன் பேகம்.

டான்பாஸ்கோ அன்பு இல்லம் அருகே அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டிற்கு அருகே வந்து பெரோஸை அழைத்தார் ஜமேஷா முபின். தன்னை வீட்டை காலி செய்ய உதவிடும்படி அப்போது அவர் கேட்டுள்ளார். ஆனால், இதய பிரச்னை இருப்பதால் கனமான பொருட்களை சுமக்க முடியாது என்று அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஃபிரோஸுக்கு வேலை உள்ளதாகவும் இரவில் அனுப்பி வைப்பதாக தாம் தான் கூறியதாக புலனாய்வாளர்களிடம் மைமூன் கூறியுள்ளார்.

பிறகு வீட்டை காலி செய்யும்போது நவாஸ் சும்மாதான் இருக்கிறான். அவனையும் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸையும் அழைத்துச் செல்லும்படி ஜமேஷா முபினிடம் கூறியதாக மைமூன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு,

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு

இத்தனைக்கும் முபினின் வீடு கூட ஃபிரோஸுக்கு தெரிந்திருக்கவில்லை. முபினின் சித்தி பையன் அசாருதீன் உக்கடம் ஜி எம் நகர் பேக்கரியில் இருந்து ஃபிரோஸுக்கு முபினின் வீட்டை காட்டி விட்டு சென்றுள்ளார். அவர் பொருள் எடுத்து வைக்க வரவில்லை.

இதையடுத்து, முபினின் வீட்டிற்கு சென்ற ஃபிரோஸ், நவாஸ், ரியாஸ் ஆகியோர், வீட்டை காலி செய்யும்போது அதில் உள்ள மின்விசிறி, பீரோ போன்றவற்றை எடுக்காமல் ஏன் சிலிண்டரை மட்டும் எடுக்கிறாய் என முபினிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனது மனைவி வந்தவுடன் நாளை எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களை எடுத்து காரில் வைத்துவிட்டு வந்து விட்டனர்.

என் மகன்கள் தவறு செய்பவர்களாக இருந்தால், முகத்தை மறைந்திருப்பார்கள். முகத்தை மறைக்காமல்தான் பொருட்களை எடுத்து வைப்பார்களா என்று மைமூனும் கேள்வி எழுப்புகிறார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 9.30 மணிக்கு டிவியில் பார்த்து தான் முபின் சென்ற கார் வெடித்த சம்பவத்தை எனது மகன்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். சந்தேகமாக இருக்கிறது என என்னிடம் ஃபிரோஸ் சொன்னதும் நாங்கள் உளவுப்பிரிவு ஆய்வாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தோம். தவறு செய்திருந்தால் எனது பிள்ளைகளே இப்படி செய்திருப்பார்களா என்று கேட்கிறார் மைமூன் பேகம்.

இதன் பிறகு காவல்துறையினர் முபினின் வீட்டை காண்பிக்கும்படி சொல்லி எனது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்திய பிறகு எனது பிள்ளைகளை திருப்பி அனுப்பினர். அன்றைய தினம் காவல்துறையினர் வந்து பழுதடைந்த லேப்டாப்பையும் மூணாவது மகனின் மொபைல் டேப்பையும் கொண்டு சென்றனர். இதையடுத்து இரண்டு பிள்ளைகளை கைது செய்து விட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என்கிறார் மைமூன் பேகம்.

மூன்றாவது நபர் கைது எப்படி நடந்தது?

 

கோவை

பட மூலாதாரம்,NIA

காரில் சிலிண்டர் வைக்க உதவியவர்களில் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸும் ஒருவர். அவரும் இப்போது போலீஸ் காவலில் இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் என் ஐ ஏ சோதனையின் போது உக்கடத்தில் ரஷித் அலி கைது செய்யப்பட்டார். ரஷித் அலியின் செல்போனில் என் மகன் நவாஸின் செல்போன் எண் இருந்ததால், அவனிடம் விசாரித்து விட்டு அனுப்பியுள்ளனர்.

நவாஸ் தோல் பிரச்னை காரணமாக திருச்சூரில் ஹிஜாமா சிகிச்சை பெற்று வந்தார். திருச்சூர் போகும் போது இரண்டு மாதங்களுக்கு முன்பு வியூர் சிறையில் இருக்கும் ரஷித் அலியை பார்த்துள்ளதாக தெரிவித்தார். நவாஸ் இளங்கலை அனஸ்தீஸ்யா படித்துவிட்டு எம்பிஏ முடித்து விட்டு தற்போது வெளிநாட்டில் வேலை தேடி வருகிறார்.

இந்த நிலையில், தனது மகன் முகமது ரியாஸின் தாயார் ஜுனைத் பேகம் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பெரோஸ் மற்றும் நவாஸ் உடன் வீடு காலி செய்ய பொருள் எடுத்து வைக்கும் போது, நான் செல்போனில் எங்கே இருக்கே என விசாரித்தேன். அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக என்னிடத்தில் தெரிவித்தவன். அதுபோலவே 30 நிமிடங்களில் வீட்டுக்கு வந்த பிறகு அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலையில் ஃபிரோஸிடம் இருந்து செல்பேசியில் அழைப்பு வந்து அதில் பேசிய பிறகே கார் வெடிப்பு சம்பவம் பற்றியே ரியாஸுக்கு தெரிய வந்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

ஜமேஷா முபின் வீட்டில் என்ன இருந்தது?

இதற்கிடையே, ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்த சில குறிப்புகள் அடங்கிய காகிதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அல்லாவின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம் என்றும் சிலேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

என்ஐஏ

 

படக்குறிப்பு,

முபின் எழுதியதாக சந்தேகிக்கப்படும் குறிப்புகள்

இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த நாளில் காவல் துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் தொடரும் பதற்றமான சூழலுக்கு முடிவு காணும் வகையில் இந்து, முஸ்லிம் மதப் பெரியவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை மேட்டில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த 3 ஜமாத் சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோட்டை சங்கமேஸ்வரன் கோவிலில், அதன் நிர்வாகிகளை சந்தித்து மதப் பெரியவர்கள் கலந்துரையாடினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இனயத்துல்லா, "இஸ்லாம் எப்போதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். நாங்கள் அனைத்து மக்களுடன் நல்லிணகத்தை பேணவே விரும்புகிறோம். ஜமாத்கள் ஒன்றிணைந்து அனைத்து மக்களுடன் இணைந்து நற்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம். எவ்விதமான பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதத்தை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம். நாங்கள் ஆன்மிகவாதிகள். எங்களை அமைதியாக வாழவிடுங்கள்," என்று கேட்டுக் கொண்டார்.

அனைத்து ஜாமத், இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சபீர் அலி, கோவை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைவரும் விரும்புகிறோம். அதேசமயம், இந்த விவகாரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்," என்கிறார்.

முபின் மனைவி கொடுத்த தகவலால் துலங்கிய துப்பு

இதற்கிடையே, ஜமேஷா முபின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த கோட்டை மேடு வீட்டுக்கு குடி வந்ததாக போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. முபினின் மனைவி மற்றும் உறவினரிடம் புலனாய்வாளர்கள் பேசியபோது, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் முபின் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. அவர் மிகவும் அமைதியானவர். 2019ஆம் ஆண்டு என்ஐஏ சோதனைக்கு பிறகு அவரை யாராவது ஒருவர் மூளச்சலவை செய்து இச்சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோட்டைமேடு பகுதிக்கு குடியேறும் முன்பு முபின் உக்கடம் அல் அமின் காலனி பகுதியில் வசித்து வந்திருக்கிறார். ஜமேஷா முபினுக்கும் உள்ளூரைச் சேர்ந்த நஸ்ரத்துக்கும் 2017இல் திருமணம் நடந்துள்ளது. தெரிந்த உறவினர் மூலமாக ஏற்பட்ட அறிமுகத்துக்குப் பிறகு இந்த திருமண ஏற்பாடு கைகூடியது.

முபினின் வழக்கமான செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததில்லை என அவரது மாமியார் குர்ஷித் கூறுகிறார்.

நஸ்ரத்தின் தாயார் குர்ஷித் கூறும் போது, தனது மகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. முதலில் அவரது பெற்றோருடன் இருந்த முபின் பின்னர் தங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தார். குழந்தைகளை முபின் அடித்ததில்லை. அவர் அது போன்று செய்வாரா என்பதும் தெரியவில்லை. புத்தக கடைக்கு வேலைக்கு சென்ற அவர், நெஞ்சு வலி காரணமாக பிறகு அந்த வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஒரு மாதமாகதான் கார் ஒட்டி பழகினார். 5 வேளை தொழுகை, அடிக்கடி குர்ஆன் வசனம் ஓதிக் கொண்டு இருப்பார். அதிகமாக பேச மாட்டார் என்று கூறினார்.

அவரது உறவினர் அசாருதீன் மட்டுமே அடிக்கடி வீட்டிற்கு வந்து போவார். இந்த தகவலை ஜமேஷா முபீனின் மனைவி நஸ்ரத் புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே அசாருதீன், பிறகு அஃப்சர் கான் என ஒருவர் பின் ஒருவராக புலனாய்வாளர்களின் கைது நடவடிக்கை விரிவடைந்தது. விசாரணையில் முபினுக்கு வெடிமருந்துகள் வாங்கிக் கொடுத்ததில் முக்கியமானவர்களாக இருவரும் செயல்பட்டதாக தெரிய வந்திருப்பதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-63524578

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமில பரிசோதனையில் பா.ஜ.கவா ? தி.மு.கவா ?

By DIGITAL DESK 5

06 NOV, 2022 | 04:39 PM
image

குடந்தையான்

 

கோவையில் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்பட்டதென தமிழக அரசும், கோவையில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலென தமிழக பா.ஜ.கவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. 

இவ்விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஆவேசமான பேச்சுகள் மக்களிடத்தில் குறிப்பாக அறிவார்ந்த மக்களிடத்தில் நேர்நிலையான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, எதிர்நிலையான தாக்கங்களே ஏற்படுத்தி வருகிறது.

இவர் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் உயரதிகாரி என்றாலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உளவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களையும், அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கும் சில ரகசிய விடயங்களை, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்ட விவரங்களையும் உற்று நோக்கினால், தமிழக காவல்துறையின் உயர்மட்டத்தில் இருக்கும் சிலர், இரகசிய தகவல்களை பாஜக தரப்பிற்கும், ஆளுநர் தரப்பிற்கும் கசிய விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு, பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது அவதூறு அல்லது வேறு வகையினதான வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசோ, எந்த ஒரு நடவடிக்கையும், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது எடுக்காமல் நிதானமான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் என்னவென்பது கேள்வியாகிறது.

மேலும் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் துரிதமாக அங்கு செல்வது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்றிருக்கிறார். 

கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை அங்கு செல்ல அரசும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 

அத்துடன் தமிழக அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.க., கோவை சம்பவத்தில் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததுடன், மாநில அரசின் நிர்வாக திறமையின்மை மீது குற்றம் சுமத்துவது தவறாகும்.

இதனிடையே கோவை சம்பவத்தை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க.வின் மாநில தலைவரான அண்ணாமலையின் அதிரடி பேச்சால், அக்கட்சி, உட்கட்சி பூசலை எதிர்கொண்டிருக்கிறது. அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வருகை தந்த போது, அத்தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும், கோவையில் செல்வாக்கு மிக்க பா.ஜ.க. தலைவரான முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.பி.இராதாகிருஷ்ணனும் உடன் வரவில்லை. 

ஏனெனில் சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவை சம்பவத்தை முன்வைத்து, கோவையில் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது ஆஜரான அண்ணாமலை, ‘இந்த போராட்டத்தை மாநில பா.ஜ.க. அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இது அக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களிடையே பெரும் அரசியல் ரீதியான அழுத்தத்தையும், உட்கட்சி பூசலையும் ஏற்படுத்தியது. என்பதும், ஏற்கனவே பா.ஜ.க. மாநில செயலாளரான கே டி ராகவன் விடயத்தில் அண்ணாமலை பக்கம் சார்ந்து மாநில நிர்வாகிகளை கதிகலங்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார். கோவையில் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தமிழக காவல்துறையினர், ஏராளமான விவரங்களையும், தடயங்களையும் சேகரித்தனர். 

இவர்களது விசாரணை துரிதமாகவும், தூய்மையாகவும் நடைபெற்றது. ஆனால் இவ்வகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறதென சந்தேகம் எழுந்ததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது தான் பொருத்தமென தீர்மானித்து அதன் விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அவரது இந்த நடவடிக்கை தமிழக மக்களால் பாராட்டப்படுகிறது.

ஆனால் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் அரசு அல்லாத தனியார் நிகழ்வில் பங்கு பற்றினாலும் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவதை கைவிடவில்லை. கோவை விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட தாமதப்படுத்தியது ஏன்? என்று வினா எழுப்பி இருக்கிறார்.

இதனிடையே கோவை சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை எப்படி இருக்கும்? என்பதற்கு, அந்த முகமையின் கடந்த கால வரலாற்றை பலரும் உற்று நோக்குகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை இதற்கு முன் மலேக்கான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு. போன்ற பல குண்டு வெடிப்புகளை விசாரித்து இருக்கிறது.

இதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான தலைவரான பிரக்யா தாக்கூர் போன்ற தலைவர்களை தேசிய புலனாய்வு முகமை காப்பாற்றி இருக்கிறது என்பதனையும்; கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் கோவை சம்பவத்திற்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை, அரசியல் குறுக்கீடுகள் இன்றி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Kudanthayan_01.jpg

ஆனால் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க., அதிலும் கோவையில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று உறுதியாக நம்பும் பா.ஜ.க., தேசிய புலனாய்வு முகாமையின் விசாரணை நேர்பட நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்பது சந்தேகம் தான்.

அதேதருணத்தில்கோவை சம்பவத்தை, ‘பயங்கரவாத செயல்’ எனக் கருதி, மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரணை என்கிற பெயரில் அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும், இவ்விகாரத்தில் திராவிட முறைமை பாணியிலான ஆட்சியை நன்முறையில் நடத்தி வரும் தி.மு.க. அரசு, ‘கண் கொத்தி பாம்பாக’ கவனித்து செயல்பட வேண்டியுள்ளது.

இதனிடையே கோவை சம்பவம் நடைபெற்ற போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'கோவையில் தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால், இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆகியிருக்கும்” எனப் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலிமையான கண்டனத்தை அறிக்கைகளின் மூலம் பதிவு செய்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/139288

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.