Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனமும் அறிவும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"இராமர் பாலம்" தொடர்பான கருத்தாடலில் இருந்து பிரிக்கப்பட்டு, அத் தலைப்பில் கருத்தாடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது தனித்தலைப்பாக இங்கு இடப்படுகிறது. இத் தலைப்பில் சில இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்கள் http://www.yarl.com/forum3/index.php?showt...6943&st=260 என்ற இணைப்பில் உள்ளன. -வலைஞன்

There are four forces in the nature not two

1. Gravity

2. Electromagnetic

3. Strong nuclear force (energy that holds neutrons and protons together in nucleus)

4. Weak nuclear force (energy that radiates when protons are transformed to neutrons)

In short, the basis of string theory is to put all these 4 forces unified under one equation and later string theorists came up with 5 Super String Theories. M Theory is unification of those 5 super string theories. M theory is probably the best candidate on the way of finding Theory Of Everything (TOE).

உங்கள் விடுமுறை நாட்களில் இது பற்றி (String Theory, M theory) தனித்திரி ஆரம்பித்தீர்களானால் மிகவும் விரிவாக கலந்துரையடலாம். இங்கு நாம் செய்வது கருத்துப்பரிமாற்றங்கள் தான். வெற்றி பெறும் நோக்கில் நடத்தப்படும் பட்டிமன்றங்கள் அல்ல. அதனால் உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நேரம் கிடைக்கும் நேரங்களில் மட்டும் வந்து கருத்துப்பரிமாற்றம் செய்யுங்கள். இது போன்ற கலந்துரையாடல்கள் நமது அறிவை தெளிவுபடுத்திக் கொள்ள கொஞ்சமாவது துணை நிற்குமானால் அதுவே உண்மையான வெற்றி.

உங்கள் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடருங்கள். நிறைய விடயங்களை வாசிக்கும் நாமும் கற்க ஆவலாக உள்ளோம்.

rodinthinkerphilosophymd8.jpg

நம்வர்களிலும் பலர் "சிந்தனையாளர்கள்" ஆக உள்ளது பெருமையளிக்கின்றது.

Link to comment
Share on other sites

 • Replies 64
 • Created
 • Last Reply

வேதம் வேறு வேத நாயகன் வேறு அல்ல, அதனால் தான் வேதங்கள் சப்தபிரம்மம் எனப்படுகிறது. குணப் பிரம்மம், நிர்குண பிரம்மம், சப்தபிரம்மம் என்பதெல்லாம் எங்கும் நிறைந்திருக்கும் ஏகப்பிரம்மத்தையே குறிக்கும். விஞ்ஞானம் முழுதாக வரையரை செய்ய முடியாமல் String theory என்றும் Super String Theory என்றும் M Theory என்றும் இன்று வரை தடுமாறிக் கொண்டிருக்கும் Cosmic Energy யும் அந்த ஏகப்பிரம்மத்திற்குள்ளேயே அடங்கி விடுகிறது.

சரி நண்பரே. எம்மில் பிழை தொடங்குவதே இங்குதான். என்னுடைய கருத்துக்கள் பலவற்றில் "இயற்கை எனும் மாபெரும் அளவிடமுடியா சக்தி இருக்கிறது (It is immeasureable), அது நம் யாரைப்பற்றியும் சிறிதும் கணக்கெடுப்பதில்லை, அதை வழிபடுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை" என்பதை எழுதி இருக்கிறேன். விஞ்ஞானம் என்பது கணிதம் என்ற மொழி மூலம் அந்த இயற்கையை, அதன் அசைவியக்கத்தை எழுத்துருவில் தர முனைகிறது. நான் எந்த இடத்திலும் விஞ்ஞானம் முழுமையானதென்று கூறவில்லை. உண்மையில் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் இந்த இயற்கையின் முற்றுமுழுதான தோற்றத்தை கண்டறிந்துவிடுவோம் என்றோ அல்லது இதற்குமுன் வாழ்ந்த எமது முன்னோர்கள் எமக்கு கண்டறிந்து சொல்லிவிட்டார்கள் என்றோ நான் நம்பவில்லை. ஏன்? சமயத் தலைவர்கள் உருவாக்கிய வேதங்கள் ஆனாலும் சரி, உபநிடதங்கள் ஆனாலும் சரி அல்லது கடவுள் இல்லை என கூறுபவர்கள் தரும் செய்திகள் ஆனாலும் சரி அவை இயற்கையின் உண்மைகளை என்றுமே எமக்கு புலப்படுத்தப் போவதில்லை. ஏன்? நண்பரே. நான் இங்கு கேள்விகளை மட்டுமே விட்டு செல்கிறேன். இதன் விடைகள் (answers) தெரியாமல் நான் இந்த கேள்விகளை கேட்கவில்லை. இவ்வாறான மிக அடிப்படையான கேள்விகளுக்கு விடை எழுதுவதை நான் விரும்புவதும் இல்லை. காலாகாலமாக நீங்கள் கூறும் முனிவர், ரிஷிகள், சான்றோர், சமூகத்தலைவர்கள் இந்த "விடை எழுதும்" வேலையைத்தான் செய்தார்கள். உங்களை சிந்திக்க தூண்டி, "உனக்குள்ளே விடை இருக்கிறது, தேடு, அதைக் கண்டுகொள்ள உன்னால் மட்டும்தான் முடியும், மனிதா நான் காட்டும் எந்தப் பாதையும் உன்னை இயற்கையின் உண்மைகளை தரிசிக்க செய்யாது" என்று யாராவது கூறினாரா? இந்த சமயவாதிகளும், சமயத்தை எதிர்ப்பவர்களும் சொல்லும், சொன்ன அத்தனை வழிமுறைகளும் பொய்த்துப் போனதையாவது அறிவீர்களா?

Description is never be the described. இதை நான் ஆழமாக உணர்கிறேன். மற்றது, சமயம் என்றாலும் சரி விஞ்ஞானம் என்றாலும் சரி என்றுமே இயற்கையினை முழுமையாக அறிந்துகொள்ள உதவாது. ஏன்? சிறிது சிந்தியுங்கள்.

இருந்தபோதிலும், விஞ்ஞானம் இயற்கையின் அசைவியக்கங்களை புரிந்துகொள்ள ("learn", please note that it is not study) முனைகிறது. இதில் ஒவ்வொரு கணத்திலும் வாழும் மக்களுக்கு நன்மை இருக்கிறது. இதனால் தான் நான் விஞ்ஞான அறிவை ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டும் என எண்ணுகிறேன்.

எனக்கு ஏமாற்றத்தை தரும் இன்னொரு விடயம் என்னவென்றால், பலர் "கடவுள் உண்டு" அல்லது "கடவுள் இல்லை" என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். என்னுடைய சில கருத்துக்களில் அந்த இரண்டு தெரிவுகளுக்கும் அப்பால் இன்னொன்றும் இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அதைக்கூட பலர் "கடவுள் இருக்கிறது" என்ற தெரிவுக்குள் இழுத்துவிட நினைக்கிறார்கள். உண்மையில், கடவுள் உண்டா அல்லது இல்லையா என்றதை விடவும் "கடவுள் என்பது அர்த்தமற்றது" (God has no meaning at all) என்பது முன்கூறிய இரண்டு கருத்துக்களில் இருந்து மிக வேறுபட்டதும் உண்மையானதுமாகும்.

ஒரே சக்தி ஏன் வெவ்வேறு அம்சங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டீர்களானால் ........ ஒருவன் மிகவும் பசியால் வாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நல்ல காய் கனிகள் அவன் பசியை தீர்க்கும் அல்லவா? காய் கனிகளுக்கு பசி தீர்க்கும் சக்தி எப்படி வந்தது? மூல சக்தியான சூரிய சக்தி பல்வேறு உயிரியல் மாற்றங்களை அடைந்ததன் விளைவு அல்லவா காய்களும் கனிகளும்.

நாம் முதலில் நிறுத்த வேண்டியது இந்த "கதை சொல்லும் வேலையை". (I have already mentioned that the description is never be the described, Please go deeper into it)

பசியால் களைத்தவனுக்கு காய்களையும் கனிகளையும் வழங்காது, வா காய்களும் கனிகளும் உருவாக காரணமான மூலசக்தியையே உனக்கு தருகிறேன் என்று கூறி அவனை சுட்டெரிக்கும் வெயிலின் கீழ் நிறுத்தினால் அவன் பசி தீருமா? அது போல் தான் மூல சக்தி ஒன்றே ஆனாலும் தேவைக்கேற்ப அது வேறுபட்ட அம்சங்களில் தோற்றுவிக்கப்படும் போது தான் அது வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகிறது.

:):D இதைத்தான் உங்கள் வேதங்கள் காலாகாலமாக செய்கின்றன. கோபம், பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஆசை, மரணம் என்பன மனிதன் தோன்றிய காலம் தொட்டே அவனுடன் இன்றுவரை தொடர்கின்றன. இவற்றில் இருந்து விடுதலை பெறுவதை, அந்த சுதந்திரத்தினை அனுபவிப்பதை உங்கள் வேதங்கள் தந்தனவா? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, நீங்களும் பற்பல "இஸம்" களை உருவாக்கி வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்ட இந்த அடிப்படை பிரச்சனைகள் என்னவோ "என்றும் புதியதாக" அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் வேதங்கள், பூரணமான கடவுளை கண்டறிந்து சொல்லிவிட்டது என கூறுவீர்களானால், இன்று மனிதன் இந்த ஆசை, கோபம், மரணம் என்ப்பவற்றில் இருந்து பூரணமாக விடுதலை பெற்றிருக்க வேண்டும். பெறவில்லையே. பெறவும் முடியாது. ஏன்?

இந்திரன் (இந்திரியம், நீர்), அக்னி(நெருப்பு) பிரக்ருதி (புவியீர்ப்பு) வருணன் (ஆகாயம்) இப்படி எம்மை சூழ உள்ள இயற்கையின் ஒவ்வொரு தோற்றங்களையும் தான் வேதங்கள் ஆராதிக்கிறது. எல்லாம் ஒரே சக்தியின் தோற்றுவாய்கள் என சொல்வதை 21ம் நூற்றாண்டின் M Theory யும் மறுக்கவில்லை.

அப்படியனால் தாகம் வரும் சமயத்தில் கொஞ்சம் நெருப்பை அள்ளி குடித்து பாருங்கள். அப்போது தெரியும் இவை இயற்கையான வேறுபாடா இல்லை நமது எண்ணங்களின் கோளாறால் வந்த வேறுபாடா என்று :)

சகலதையும் கற்று மற என்று வேதாந்தம் சொல்லவில்லை, அப்படி கற்றதும், கற்று விட்டோம் என்ற ஆணவத்தை மற என்று தான் வேதாந்தம் சொல்கிறது, இப்படி தப்பு தப்பாக எங்கே படிக்கிறீர்கள்? :lol:

String theory இருக்கிறது Super String theory இருக்கிறது M Theory இருக்கிறது. அது என்ன K Theory?

There are four forces in the nature not two

1. Gravity

2. Electromagnetic

3. Strong nuclear force (energy that holds neutrons and protons together in nucleus)

4. Weak nuclear force (energy that radiates when protons are transformed to neutrons)

In short, the basis of string theory is to put all these 4 forces unified under one equation and later string theorists came up with 5 Super String Theories. M Theory is unification of those 5 super string theories. M theory is probably the best candidate on the way of finding Theory Of Everything (TOE).

:):)

There are only two forces. Please note that. Strong and weak nuclear forces are the reflections of "open" and "closed" strings. EM force appears as a strong nuclear force because it is an "open-ended" string. The Gravity appears as a week nuclear force because it is a "closed-string". This appearance gives an illusion that EM force is much more greater than (10^39 times) the Gravity.

மற்றது கே-தியறி. தயவு செய்து கே-கல்க்குலஸ் பற்றி படிக்கவும்.

Link to comment
Share on other sites

நண்பரே வெற்றிவேல். !!

நிச்சயமாகவே, அதியுயர் விஞ்ஞான நுணுக்கங்களை எமது மக்கள் அனைவருக்கும் தரவேண்டிய மிகப்பெரும் பணி நம் எல்லோருடையதும் ஆகும். என்னை எழுதத் தூண்டுவது உங்களைப்போல் ஆர்வம் உள்ளவர்கள் தான். மிக்க நன்றி.

மற்றயது, Fall Semester இந்த மாதம் 28ம் திகதி தொடங்குகிறது. அதன் பின் என்னால் தொடர்ந்து கருத்து எழுத முடியுமா என தெரியவில்லை. எனது தனிப்பட்ட கல்வியும், ஆராய்ச்சியும் அத்தோடு கற்பித்தலும் என் காலங்களை விழுங்கிவிடும் என்பதே உண்மை. முயற்சித்து பார்க்கலாம்.

நீங்கள் கூறியபடி, we can discuss the essence of science starting from Newtonian, Relativistic, Quantam, String, and M theories. இதில் பலர் ஆர்வமாக இருப்பது மாகிழ்ச்சி தரும் விடயம். அதோடு மட்டுமல்ல, எனக்கு பிடித்தமான "நனோ , மைக்ரோ டெக்னோலொஜி" பற்றி எழுதவேண்டும் என நினைக்கிறேன். எமது இளஞ்சமுதாயம் அறிவுக்கண்களை திறக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

:lol::) இதைத்தான் உங்கள் வேதங்கள் காலாகாலமாக செய்கின்றன. கோபம், பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஆசை, மரணம் என்பன மனிதன் தோன்றிய காலம் தொட்டே அவனுடன் இன்றுவரை தொடர்கின்றன. இவற்றில் இருந்து விடுதலை பெறுவதை, அந்த சுதந்திரத்தினை அனுபவிப்பதை உங்கள் வேதங்கள் தந்தனவா? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, நீங்களும் பற்பல "இஸம்" களை உருவாக்கி வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்ட இந்த அடிப்படை பிரச்சனைகள் என்னவோ "என்றும் புதியதாக" அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் வேதங்கள், பூரணமான கடவுளை கண்டறிந்து சொல்லிவிட்டது என கூறுவீர்களானால், இன்று மனிதன் இந்த ஆசை, கோபம், மரணம் என்ப்பவற்றில் இருந்து பூரணமாக விடுதலை பெற்றிருக்க வேண்டும். பெறவில்லையே. பெறவும் முடியாது. ஏன்?

நாம் முதலில் நிறுத்த வேண்டியது இந்த "கதை சொல்லும் வேலையை". (I have already mentioned that the description is never be the described, Please go deeper into it)

வேதங்கள் என்ன Wholesale ல் முக்தி விற்பனை செய்கிறது என்று நினைக்கிறீர்களா? :D சைக்கிள் இருக்கிறது, ஓட பாதை இருக்கிறது, ஒரு தடவை ஏறி விழுந்து விட்டவன், இதோ பார் இது என்னை கீழே தள்ளி விட்டது இரண்டு சக்கரம் கொண்ட வண்டி ஓடுமா? என்ன இவ்வளவு முட்டாளாய் இருக்கிறாய்? என்று கேட்பதை போல் இருக்கிறது உங்கள் கேள்விகள். கீழே விழ விழ தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கு மட்டுமே சைக்கிள் ஒட கற்றுக்கொள்ள முடியும்.

விவேகானந்தரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் இன்னும் பலரும் சைக்கிளை இப்படித்தான் ஓடக்கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் சூரர்கள் அல்ல

Description is described when the description describes itself. So when one wants description to be described then the one should become the description itself.

Uh how it is posiible? it is another dimension altogether. That is, if you want to know about an orange, best way is to become the orange itself. :) Confusing! isnt it....

Link to comment
Share on other sites

ஈழத்திருமுருகன்;

கடவுள் என்று ஒன்று இருக்கும் என்றால் அதை சாதாரண மனிதரால் விளங்கிக் கொள்ள முடியாததாக ஆகவே கடவுளை வரையறுக்க முடியாததாகப் பார்த்தல் பொருத்தமாக இருக்காதா?

சரி கடவுள் தான் படைத்தார் எம்மைச் சுற்றி இருப்பவற்றை பூலோகத்தை பிரபஞ்சத்தை என்றால் அவற்றையே பூரணமாக அறிய முடியாதவர்கள் விளங்க முடியாதவர்கள் எப்படி அதை படைத்த கடவுளை விளங்கியிருப்பதாக சொல்ல முடியும்?

அனைத்து மதங்களும் பொதுவாகச் சொல்லும் கடவுளின் அவதாரம் prophet இப்படிச் சொன்னவர் அப்படிச் சொன்னவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை சுத்த மோசடியாகவே பார்க்கிறேன்.

விஞ்ஞானரீதியில் எமது இயற்கையை அறியும் முயற்சியும் இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கங்கள் பற்றி புரிதலும் அந்தந்தக் காலத்தில் எம்மிடம் இருக்கும் முறைகள் கருவிகள் அதைவைத்து அவதானித்து வரும் விளக்கம் தானே. ஒரு theory என்பது நம்பகரமான முறையில் reproduce பண்ணக் கூடிய behaviour தானே? இது எமது புரிதலை பூரணமானது என்று சொல்லவில்லை conditional ஆகத்தான் சொல்கிறது. புதிய dimension அவை சார்ந்த அவதானிப்புகள் அவை தரும் தகவல்களை அவற்றை process பண்ணும் திறன்களை நாம் பெறும்போது எமது புரிதல் விட்டம் அதிகரிக்கிறது ஆனால் அது இன்னமும் infinity அய் தொடவில்லை என்ற humility அய் விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்திப்பவர்களிற்கு தருகிறது.

ஆனால் மதத்திற்கால விளக்கம் தாறவை எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கு அதுவும் அப்பவே சொல்லி வைச்சாச்சு எழுதியும் வைச்சாச்சு எண்ணீனம். அது தான் சகிக்கல... :)

அது சரி micro nano tech இல குறிப்பாக எந்த விடையங்களில் ஆர்வம்? application சார்ந்ததா? :lol:

Link to comment
Share on other sites

கடவுள் என்று ஒன்று இருக்கும் என்றால் அதை சாதாரண மனிதரால் விளங்கிக் கொள்ள முடியாததாக ஆகவே கடவுளை வரையறுக்க முடியாததாகப் பார்த்தல் பொருத்தமாக இருக்காதா?

குறுக்ஸ். "கடவுள் என்ற ஒன்று இருக்குமென்றால்.." என்ற கேள்வியே அடிப்படையில் தவறு. உண்மையில் இந்த கேள்வி எழவே சந்தர்ப்பம் இல்லை. சமயங்கள் மாட்டிக் கொள்வதும் இங்குதான். அவர்கள் மனித உணர்வுகளின் மிக ஆழமான பிரதிபலிப்புக்களான "தொடக்கம்", "முடிவு", "பிறப்பு", "இறப்பு" என்பவற்றை கடவுள் என்ற ஒன்றில் "super-impose" பண்ணிவிட நினைக்கிறார்கள். "கடவுள்" என்பது "தெரிந்ததாக" ("known" to our knowledge) இருக்குமானால் அதை யாரும் தேட மாட்டார்கள். நீங்கள் "வரையறை" என்று தொடங்குவது கூட ஆழமாக "தெரிந்தது", "தெரியாதது" என பிரிவை உண்டாக்கி விடுகிறது. எனவே கடவுள் மீண்டும் "தெரியாதது" என்பதற்குள் தாவிவிடுகிறார். எமக்கு தெரிந்த அறிவை வைத்து அதை தேட நினக்கிறோம். பிரச்சனை வருவது எங்கு என்றால் எமது மனம் எப்பொழுதுமே "தெரிந்த" என்ற field இனுள் வேலை செய்வதுதான். We donot know how to operate the mind in the field of "unknown". எனவே கடவுளை வரையறை செய்ய வெளிக்கிடுவது கூட ஒரு மாயச் சுழியினுள் உங்களை இழுத்துவிடும். இதனால் தான் "God has no meaning at all" என்று எழுதினேன்.

சரி கடவுள் தான் படைத்தார் எம்மைச் சுற்றி இருப்பவற்றை பூலோகத்தை பிரபஞ்சத்தை என்றால் அவற்றையே பூரணமாக அறிய முடியாதவர்கள் விளங்க முடியாதவர்கள் எப்படி அதை படைத்த கடவுளை விளங்கியிருப்பதாக சொல்ல முடியும்?

உண்மையில், ஒருவர் "கடவுளை விளங்கிக் கொண்டேன்" என்று கூறுவாராக இருந்தால் நீங்கள் 150% அவருக்கு அது தெரியவில்லை என உடனேயே நம்பலாம். அவரும் தனது அறிவைக் கொண்டு தனக்கு தெரிந்தவற்றை சொல்ல வருகிறார் என்னதே அதன் சாராம்ஸம். (knowledge is nothing but the past. It is just the accumulation of one's own past experiences. Past is not real.)

அனைத்து மதங்களும் பொதுவாகச் சொல்லும் கடவுளின் அவதாரம் prophet இப்படிச் சொன்னவர் அப்படிச் சொன்னவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை சுத்த மோசடியாகவே பார்க்கிறேன்.

நண்பனே!! சமயம், அது எந்தச் சமயமாக இருந்தாலும் சரி. முதலில் தருவது ஒரு "குருவை". இவர் என்ன செய்கிறார் என்றால், குழம்பிப் போய் அவரிட்டம் போகும் ஒருவரை, தன் குழப்பங்களையும் அந்த அப்பாவியின் மேல் சுமத்தி அவனை இன்னொரு இடத்துக்கு பிடித்து தள்ளிவிடுகிறார். அந்த அப்பாவியும் தன் குழப்பங்களுடன், குருவின் பாரங்களையும் சேர்த்து வாழ்நாள் பூராகவும் அதை காவுவதையே தொழிலாக கொண்டிருப்பான். (Once anyone needs a "help", I mean a model, system or theory, he is totally lost. He will dance for someone else tune. He completely forget to see his "own song")

விஞ்ஞானரீதியில் எமது இயற்கையை அறியும் முயற்சியும் இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கங்கள் பற்றி புரிதலும் அந்தந்தக் காலத்தில் எம்மிடம் இருக்கும் முறைகள் கருவிகள் அதைவைத்து அவதானித்து வரும் விளக்கம் தானே. ஒரு theory என்பது நம்பகரமான முறையில் reproduce பண்ணக் கூடிய behaviour தானே? இது எமது புரிதலை பூரணமானது என்று சொல்லவில்லை conditional ஆகத்தான் சொல்கிறது. புதிய dimension அவை சார்ந்த அவதானிப்புகள் அவை தரும் தகவல்களை அவற்றை process பண்ணும் திறன்களை நாம் பெறும்போது எமது புரிதல் விட்டம் அதிகரிக்கிறது ஆனால் அது இன்னமும் infinity அய் தொடவில்லை என்ற humility அய் விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்திப்பவர்களிற்கு தருகிறது.

ஆமாம். இங்கு பாருங்கள், எமது புரிந்துகொள்ளும் எல்லை (the limits of knowlege and its understanding) விரிகிறது என்பது உண்மை. ஆனால் இன்னமும் infinity என்பது அதற்கு வெளியே தான் இருக்கிறது. சமயத்தில் எப்படி "தெரிந்தது", "தெரியாதது" என்பது பிளவுபடுகிறதோ அதைப் போலதான் இதுவும். இவை சுட்டி நிற்கும் உண்மை என்ன? அறிவு என்றும் முழுமை அடையாது. அது இறந்தகாலத்தின் பதிவுகளே. எனவே விஞ்ஞானி ஒருவன் infinity என்பதை அறிய வெளிக்கிடுவதும், சமயவாதி "கடவுளை" அறிய வெளிக்கிடுவதும் அடிப்படையில் இந்த "அறிவு" சுட்டி நிற்கும் பலவீனங்களே.

ஆனால் மதத்திற்கால விளக்கம் தாறவை எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கு அதுவும் அப்பவே சொல்லி வைச்சாச்சு எழுதியும் வைச்சாச்சு எண்ணீனம். அது தான் சகிக்கல... :)

உண்மையில் மதத்துக்கான எந்த விளக்கமும் இல்லை. மதம் தருவது போலியான ஒரு "உளவியல் பாதுகாப்பு" மட்டுமே. அந்த உளவியல்பாதுகாப்பு தேவைப்படுவது ஏன்??

அது சரி micro nano tech இல குறிப்பாக எந்த விடையங்களில் ஆர்வம்? application சார்ந்ததா? :lol:

:D Design and Fabrication of Micro wireless sensors

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் சார்.. நீங்க அகற்றிட்டுங்க.. நாம கேட்டதில என்ன தப்பு சார்...??!

விசைகள் இரண்டு வகை என்றார்கள். சரி அதைப் பற்றி அறியாத வாசகர்கள் எப்படி சார் விளங்கிக்கிறது.

விசைகள் பிரதானமாக தொடுகையற்ற தொலைவியக்க விசைகள்.. தொடுகையுள்ள விசைகள் என்று வரையறுக்கப்பட்டு... தொடுகையற்ற தொலைவியக்க விசைகளுக்குள் தான்.. ஈர்ப்பும்.. மின் காந்த மற்றும் நிலையான காந்தப் புல விசைகள் அடக்கப்படுகின்றன. இதுதான் அடிப்படை. இதில இருந்து மாறுபடேக்க அதற்காக விளக்கத்தை அளிக்க வேணும்..! அப்படிச் செய்யாமல் அறிவுக்கண்ணை திறக்கிறது என்ற சொற்பதத்தை சும்மா பாவிக்கலாமா..??! ( ஈழத்திருமகன் தான் சொன்னார்.. எல்லாரும் random மா ( எழுந்தமானமா) சொற்களைப் பாவிக்கிறீங்க. விளங்கி நுணுக்கமா பாவிங்க என்று.

நீங்க என்னடான்னா.. எப்படி அணுகுறீங்களோ அப்படித்தான் அவையும் அணுகுவினம் என்றீங்க..!

application இல்லாட்டி education எதற்கு சார்..??!

ஸ்றிங் தியறி.. டி திறறி என்றீங்க.. அதைப் பற்றி ஒரு சுருக்கத்தை தானும் தராமல் எப்படி சார் அதை இராமர் பாலத்தை செயற்கையா இல்ல இயற்கையா என்று கண்டுபிடிக்க அவற்றை யூஸ் ( தமிங்கிலம் என்றீங்க ) use பண்ணப் பாவிக்கிறது (இப்படின்னா OK ஆகிடுறீங்க). :P

Link to comment
Share on other sites

வேதங்கள் என்ன Wholesale ல் முக்தி விற்பனை செய்கிறது என்று நினைக்கிறீர்களா? :lol: சைக்கிள் இருக்கிறது, ஓட பாதை இருக்கிறது, ஒரு தடவை ஏறி விழுந்து விட்டவன், இதோ பார் இது என்னை கீழே தள்ளி விட்டது இரண்டு சக்கரம் கொண்ட வண்டி ஓடுமா? என்ன இவ்வளவு முட்டாளாய் இருக்கிறாய்? என்று கேட்பதை போல் இருக்கிறது உங்கள் கேள்விகள். கீழே விழ விழ தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கு மட்டுமே சைக்கிள் ஒட கற்றுக்கொள்ள முடியும்.

விவேகானந்தரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் இன்னும் பலரும் சைக்கிளை இப்படித்தான் ஓடக்கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் சூரர்கள் அல்ல

Description is described when the description describes itself. So when one wants description to be described then the one should become the description itself.

Uh how it is posiible? it is another dimension altogether. That is, if you want to know about an orange, best way is to become the orange itself. :) Confusing! isnt it....

அப்படியானால், தங்களுக்கான ஒரு பாதையை, ஒரு வழிமுறையை வேதங்கள் வகுப்பது ஏன்? வேதத்தில் கூறப்பட்ட அனுஷ்ட்டானங்கள் ஏன்? அதுமட்டுமல்ல சைவமோ, வைணவமோ அல்லது இஸ்லாம், கிறிஸ்த்தவம் என்று வழிமுறைகளை வெவ்வேறாக வகுப்பது ஏன்? அதைத்தான் நான் கேட்கிறேன். ஒரு மதமோ, அல்லது பாதையோ எதையுமே தராது. மழுங்கடிக்கப்பட்ட மனத்தை தவிர. இதை கண்கூடாக கண்டுள்ளோம்.

உங்களை மதம் சிந்திக்க தூண்டியது என்று மனமறிந்து கூறுகிறீர்களா? மதம் முதலில் மழுங்கடிப்பது உங்கள் மனங்களை. "நம்பு" என்று சொல்வதன் மூலம் அதையும் தாண்டி சிந்தனை செல்வதை கிள்ளி எறிகிறது. இது தெரியவில்லையா? "நம்பு", "நம்பிக்கை" என்பது இல்லாமல் இருக்கும் எந்தவொரு மதத்தையாவது காட்டுங்கள்.

நம்பு என்று சொன்ன அந்தக் கணமே "நீங்கள் நீங்களாக இல்லை" என்ற உண்மை தெரிகிறதா?

நண்பனே!!

( Description can never be the described. Description is just collection of thoughts which is the past and not real. Please see the truth without any immage in your mind. Please see the nature without the observer. The moment you create the immage (the observed by the observer) there is a conflict. That is we all do. )

ஈழத்திருமகன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு ஆய்வாளன் என்ற வகையில் protocols (செய்முறைக்கான வழிகள்) பற்றி அறிந்திருப்பீர்கள். அப்படி ஒரு ஒழுங்கைப் பேணுவது ஏன்..???!

அதேதான்.. மத அனுட்டானங்கள் என்பதும்.. மனக்குழப்பங்களுக்கான மூளை இரசாயனத் தாக்கங்களைக் (protocols used to control or limit some kind of brain chemical reactions: example: meditation and yoga ) கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் (protocols) என்பதாகப் பாருங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

ஈழத்திருமுருகன்

நானும் உங்களது frequency இல் தான் transmit பண்ணுறன் உங்கடை modulation scheme அய் விட எனது narrow band. encoding உம் கொஞ்சம் primitive. :lol:

மேற் கூறிய "கடவுள் என்று ஒன்று இருந்தால்..." என்ற தர்க்கத்தை பாவிப்பது நேர்மையாக திறந்த மனத்துடன் விவாதிக்க வரும் கடவுள் மதங்களின் நம்பிக்கை உள்ள ஒருவரை நோக்கிய எனது ஆரம்ப வாதம்.

அதில் அவரால் இணைந்திருக்க முடிந்தால் விளங்கிக் கொள்ள முடிந்தால் அடுத்து உங்களின் தர்க்கதளத்திற்கு இலகுவ அழைத்துச் செல்லலாம் அல்லவா?

குற்றச்சாட்டாக இல்லை உங்களது தர்க்க தளத்திற்கு "பாய்வது" கடினமாக இருக்காதா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விசைகள் இரண்டு வகை என்றார்கள். சரி அதைப் பற்றி அறியாத வாசகர்கள் எப்படி சார் விளங்கிக்கிறது.

விசைகள் பிரதானமாக தொடுகையற்ற தொலைவியக்க விசைகள்.. தொடுகையுள்ள விசைகள் என்று வரையறுக்கப்பட்டு... தொடுகையற்ற தொலைவியக்க விசைகளுக்குள் தான்.. ஈர்ப்பும்.. மின் காந்த மற்றும் நிலையான காந்தப் புல விசைகள் அடக்கப்படுகின்றன. இதுதான் அடிப்படை. இதில இருந்து மாறுபடேக்க அதற்காக விளக்கத்தை அளிக்க வேணும்..! அப்படிச் செய்யாமல் அறிவுக்கண்ணை திறக்கிறது என்ற சொற்பதத்தை சும்மா பாவிக்கலாமா..??! ( ஈழத்திருமகன் தான் சொன்னார்.. எல்லாரும் random மா ( எழுந்தமானமா) சொற்களைப் பாவிக்கிறீங்க. விளங்கி நுணுக்கமா பாவிங்க என்று.

4interwp0.jpg

ஸ்றிங் தியறி.. டி திறறி என்றீங்க.. அதைப் பற்றி ஒரு சுருக்கத்தை தானும் தராமல் எப்படி சார் அதை இராமர் பாலத்தை செயற்கையா இல்ல இயற்கையா என்று கண்டுபிடிக்க அவற்றை யூஸ் ( தமிங்கிலம் என்றீங்க ) use பண்ணப் பாவிக்கிறது (இப்படின்னா OK ஆகிடுறீங்க). :P

கீழ் வரும் இணைப்பில் சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கம் தந்திருக்கின்றார்கள். தமிழில் மொழிபெயர்க்க நேரமுமில்லை, தேவையான தமிழறிவும் இல்லை. எனவே அதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

http://particleadventure.org/frameless/startstandard.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்ஸ்.

புதிய வகைப்படுத்தலின் கீழ் விசைகள் 4 வகைக்குள் வகைப்படுத்தப்படுகின்றன.

1. மின் காந்த விசை - நேர் எதிர் மின் கூறுகளுக்கிடையே தோன்றும் விசை.

2. பலவீன மின் விசை - மின் காந்த விசையினதும் அணுக்கரு விசையினதும் இடைத்தாக்கதால் உயர் சக்தி நிலையில் பிறக்கும் விசை.

3. ஈர்ப்பு விசை - இரண்டு திணிவுகளுக்கிடயே தோன்றும் விசை. ( மிகப் பலவீனமான விசை)

4. பலமான விசை அல்லது அணுக்கரு விசை - அணுக்கருவின் பிரதான கூறுகளான நியூத்திரனையும் புரோத்திரனையும் அணுக்கருவில் கட்டி வைத்திருக்கும் விசை.( மிகப் பலமான விசை)

பழைய வகைப்படுத்தலின் கீழ் இவை வெவ்வேறான பிரிவுகளில் இடப்பட்டிருந்தன.

புதிய வகைப்படுத்தல் 2004 பெளதீகவியல் நோபல் பரிசுக்கான.. ஒருங்கிணைந்த ஆய்வு வெளியீட்டின் பின்னரே பிரபல்யமாகி அறிமுகமாகி இருப்பதால் இன்னும் பழைய வகைப்படுத்தல்கள் தான் அநேகம் நூல்களில் இருக்கின்றன.

எனவே யாழ் கள வாசகர்களும் இந்த மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டும். என்பது எமது நோக்கம்.

அதைப் புறக்கணிக்காமல் விளக்க முற்பட்ட கிருபன்ஸுக்கு நன்றிகள்.

phypub1lowen.jpg

Fig. 1. The four forces (or interactions) of Nature, their force carrying particles and the phenomena or particles affected by them. The three interactions that govern the microcosmos are all much stronger than gravity and have been unified through the Standard Model.

http://nobelprize.org/nobel_prizes/physics...004/public.html

------------------------

Kinds of fundamental force :

electromagnetism (10 facts) - Force field of the electromagnetic force, consisting of electric and magnetic lines of force at each point in space., Fundamental force of nature that acts on all electrically charged particles. Classical electromagnetics is based on Maxwell's and Faraday's equations, quantum electromagnetics on the theory of quantum electrodynamics (QED).,

electroweak (11 facts) (weak force) - The combination of the electromagnetic force and the weak nuclear force which takes place at high energy., A unification of electromagnetism and the weak nuclear force., The unified description of the weak interactions and electromagnetism, developed between 1967 and 1970 by Sheldon Glashow, Steven Weinberg, and Abdus Salam., Theory demonstrating links between the electromagnetic and the weak nuclear forces.

.

gravity (12 facts) - The weakest of the four fundamental forces of nature, the gravitational force between any two masses is proportional to the product of the masses and varies inversely as the square of the distance between them. The other three fundamental forces are the electromagnetic force and two kinds of nuclear forces.

strong force (11 facts) (nuclear force) - Strongest of the four fundamental forces, responsible for keeping quarks locked inside protons and neutrons and for keeping protons and neutrons crammed inside of atomic nuclei., The short-range nuclear force which is assumed to be responsible for binding the nucleus together.

http://www.site.uottawa.ca:4321/astronomy/...undamentalforce

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு ஆய்வாளன் என்ற வகையில் protocols (செய்முறைக்கான வழிகள்) பற்றி அறிந்திருப்பீர்கள். அப்படி ஒரு ஒழுங்கைப் பேணுவது ஏன்..???!

அதேதான்.. மத அனுட்டானங்கள் என்பதும்.. மனக்குழப்பங்களுக்கான மூளை இரசாயனத் தாக்கங்களைக் (protocols used to control or limit some kind of brain chemical reactions: example: meditation and yoga ) கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் (protocols) என்பதாகப் பாருங்கள்..! :lol:

நண்பனே !!

மிகவும் நல்லது. நான் ஒரு "பொளதீக பரிசோதனையை" அதன் மிகக் கவனமாக ஒழுங்கமைக்க பட்ட வழிமுறைகளை உமக்கு எழுதி தந்ந்துவிட்டு, "அப்பனே, எதையும் யோசிக்காதே. இதை திரும்ப திரும்ப செய்." என்று கூறிவிட்டால், நீங்களும் அதை நம்பி அப்படியே இயந்திர ரீதியில் அதை செய்ய்து வந்தால், அந்த பரிசோதனையை மீறி, அதையும் கடந்து உங்களால் செல்ல முடியுமா? அல்லது சுற்றிச் சுழலும் அந்த இயந்திரமயமான ஓட்டத்தினுள் உங்களை அறியாமல் உங்கள் மனம் ஒருவித தூக்கத்தில் ஆழ்ந்து விடுமா? இதற்கு நான் இன்னமும் பதில் எழுத வேண்டுமா?

பரிசோதனைகள் மிகத் திட்டமிட்டு நிகழ்த்துவதன் நோக்கமே அந்த பரிசோதனைகள் பூரணமானவை அல்ல என்பதால் தான். பூரணமான எந்தவொரு பரிசோதனையும் இல்லை.

எனவே விஞ்ஞானம் கூட, அறியதலைப்படுகிறது. அறிந்துவிடவில்லை. இங்கு பிரச்சனையே சமயம் "அறிந்துவிட்டேன்" என்று கூறுவதுதான்.

இந்த பூஜை, மந்திர உச்சாடனம் எல்லாம் எதை தருகின்றன. அவை "மனத்தை" ஒருவித போதைத் தூக்கத்தில் ஆழ்த்துகின்றன. என்னை பொறுத்தவரை, மந்திரம் சொல்லுவதும் ஒன்றுதான், போதை மருந்து சாப்பிடுவதும் ஒன்றுதான். இரண்டின் வீரியமும் விடுபட்டால் மனிதன் "தடாலென்ன" நிகழ்காலத்துக்கு வந்துவிடுவான். இரண்டிலும் ஆபத்துக்கள்தான் அதிகம்.

இதற்கு தான், நீங்களே உங்கள் செயற்பாடுகளை மிக அவதானமாக கவனியுங்கள் என எழுதினேன். அது ஒன்றுதான் "மனம் செய்யும் பல மாயவேலைகளில்" இருந்து விழிப்பாக இருப்பதற்கான ஒரே வழி.

தயவு செய்து மீண்டும் மீண்டும் அவசரப்பட்டு, "யோகக் கலையை" சமயத்துக்குள் இழுக்காதீர்கள். சமயத்துக்கும் யோகத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நீங்கள் தற்போது பார்க்கும் வியாபார ரீதியிலான "யோகம் என கூறப்படுபனவற்றை" (including meditation. I am so dissapointed to see those who misuse the meditation) தவறாக விளங்கிக் கொண்டால் அதைப்பற்றி சிறிது பேசலாம்.

இங்கு நான் எழுதுவனவற்றை ஒரு விவாதமாக பார்க்கவில்லை. உண்மையான சிந்தனைகளை தூண்ட இவை உதவும் என நம்புகிறேன்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நண்பனே !!

அடிப்படைகளை எப்படி பயில்கிறீர்கள்.. எப்போதும் ஒரே பரிசோதனையில் இருந்துதானே..??! மத அனுட்டானங்களும் அடிப்படை பரிசோதனைக்கான வழிமுறைகள் போன்றது. அவரவர் தங்களின் தேவைக்கேற்ப அடிப்படையை கற்று பின் தேவையெனில் விரிவு படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளதுதானே..! இத்தோடு நிறுத்து என்று மதம் கட்டளை இடவில்லையே..!

பரிசோதனைகள் பூரணமானவை மட்டும் என்பதல்ல திட்டமிடலுக்கு காரணம். பரிசோதனைகள் முடிவுகளைத் எடுக்கக் கூடிய தரவுகளை தர வேண்டும் என்றும் தான் திட்டமிடப்படுகிறது. பல விஞ்ஞான வழிமுறைகள் பழையதை மருவி வந்தவை தானே..!

விஞ்ஞானம் என்பதே அறிதலும் விளங்குதலும் பிரயோகித்தலும் தானே..! சமயம் இவ்வுலகில் மனிதனின் ஆன்மீக நிலையை மட்டும் இனங்காட்டுகிறதே தவிர.. கடவுளைக் கண்டுவிட்டேன் என்று கூறவில்லை. கடவுளிடம் அனைத்தும் அறிந்தேன் என்று கூறிடவில்லை. மதம் மனிதனுக்கு அவனின் வாழ்வின் நிலையாமையை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. மற்றோருக்கு கேடு செய்யும் நிலையை தவிர்க்க அவனுக்கு அன்பை போதிக்கிறது. அன்பைப் பெருக்க வகை சொல்கிறது.

நான் இதை அறிவியலூடு அணுக விரும்பிறன். உதாரணமாக மனித நரம்பு உடற்தொழிலியல் (Neurophysiology and chemistry) சார்ந்த இரசாயனம் மூலம் இதன் விளைவுகள் பற்றித் தெளிவாக அணுக முடியும் என்று நினைக்கிறேன்..!

மனம் என்பதே மாயை தானே. நீங்கள் மனம் என்று எதனைக் கருதுகிறீர்கள்...????????!

முனிவர்கள் யோகக்கலையில் வல்லவர்கள். அவர்கள் மதத்தோடும் இரண்டறக் கலந்தவர்கள். தியான நிலைக்கும் யோகத்துக்கும் இடையில் தொடர்பிருக்கிறது.

விவாதத்துக்காகவே முரண்படவோ அல்ல. முரண்பாடுகள் மிகுந்த உலகில்.. தெளிவுளைத் தேடும் சிந்தனையைத் தூண்ட வேண்டின் விளக்கங்கள் பெறப்படனும் என்பதுதான் பதில்களுக்கான நோக்கம்.

Link to comment
Share on other sites

ஈழத்திருமுருகன்

நானும் உங்களது frequency இல் தான் transmit பண்ணுறன் உங்கடை modulation scheme அய் விட எனது narrow band. encoding உம் கொஞ்சம் primitive. :lol:

மேற் கூறிய "கடவுள் என்று ஒன்று இருந்தால்..." என்ற தர்க்கத்தை பாவிப்பது நேர்மையாக திறந்த மனத்துடன் விவாதிக்க வரும் கடவுள் மதங்களின் நம்பிக்கை உள்ள ஒருவரை நோக்கிய எனது ஆரம்ப வாதம்.

அதில் அவரால் இணைந்திருக்க முடிந்தால் விளங்கிக் கொள்ள முடிந்தால் அடுத்து உங்களின் தர்க்கதளத்திற்கு இலகுவ அழைத்துச் செல்லலாம் அல்லவா?

குற்றச்சாட்டாக இல்லை உங்களது தர்க்க தளத்திற்கு "பாய்வது" கடினமாக இருக்காதா?

குறுக்ஸ். மிகவும் நல்லது.

நான் உங்களில் காண்பது, நீங்கள் விடயங்களை தெளிவாக அறிய நினைக்கிற போதும், நீங்கள் மற்றவர்களின் மீது உள்ள ஈர்ப்பால், அவர்கள் சார்ந்து சிந்திக்க தலைப்படுகிறீர்கள். எந்தக் கணத்தில் அதை நீங்கள் செய்கிறீர்களோ அந்தக் கணத்திலே இருள் சூழ்ந்துவிடுகிறது. உண்மையை அறிவதென்பது இலகுவல்ல. அதை அறியவேண்டும் என்ற ஈர்ப்பு கூட எம்மை சுற்றி ஒரு வளயத்தை போட்டு விடுகிறது. இதில் கவனமாக இருக்க வேண்டாமா?

உண்மையை காண நாம் எந்தவொரு வழிமுறையை கண்டுபிடித்தாலும் அது "சரி", "பிழை", "தெரியும்",

"தெரியாது" என்ற பிரிவுகளை நம்மீது சுமத்திவிடுகிறது. எனவே இந்த சுழிக்குள் அகப்படாமல் தேடுவது எப்படி என்பதே கேள்வி. :):)

வாழ்த்துக்கள்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

இந்த நகைச்சுவையை பாருங்கள்: பலபேரும் எனது பெயர் "ஈழத்திருமுருகன்" என்றே வாசிக்கிறார்கள். சமயம், சாதி என்பதையும் அவற்றின் நிறங்களையும் களைந்துவிட்டு வெற்று உடலுடன் நிற்கும் நான் "முருகன்" என்பதை எனது பெயரில் இணைப்பேனா? கண்கள் ஒவ்வொரு கணத்திலும் ஏமாற்றும். :):D

தாய்த்தமிழீழத்துக்கு என்றும் ஒரு சின்னஞ்சிறு மகனாக இருப்பதையே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

அடிப்படைகளை எப்படி பயில்கிறீர்கள்.. எப்போதும் ஒரே பரிசோதனையில் இருந்துதானே..??! மத அனுட்டானங்களும் அடிப்படை பரிசோதனைக்கான வழிமுறைகள் போன்றது. அவரவர் தங்களின் தேவைக்கேற்ப அடிப்படையை கற்று பின் தேவையெனில் விரிவு படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளதுதானே..! இத்தோடு நிறுத்து என்று மதம் கட்டளை இடவில்லையே..!

பரிசோதனைகள் பூரணமானவை மட்டும் என்பதல்ல திட்டமிடலுக்கு காரணம். பரிசோதனைகள் முடிவுகளைத் எடுக்கக் கூடிய தரவுகளை தர வேண்டும் என்றும் தான் திட்டமிடப்படுகிறது. பல விஞ்ஞான வழிமுறைகள் பழையதை மருவி வந்தவை தானே..!

நாம் சிறிது மெதுவாகவே போகலாம். ஒரு பரிசோதனை முடிந்தது என வைப்போம். அடுத்தது என்ன? வெறுமனே அந்த பரிசோதனை எதாவது முன்னேற்றத்தை தருகிறதா? அல்லது அதை வைத்து "மனித மானம்" சிந்திக்க தலைப்படுகிறதா? மிக நேரடியாக பொளதீக பரிசோதனைகளை "எண்ணங்களின் பரிசோதனைகளுடன்" இணைப்பது மிகச் சிக்கலானது. சமயம் உங்களை சிந்திக்க விடவில்லை என்ற உண்மையை முதலில் நீங்கள் அறிய தலைப்பட வேண்டும். விஞ்ஞானம் சிந்திப்பதை தடுக்கவில்லை.

விஞ்ஞானம் என்பதே அறிதலும் விளங்குதலும் பிரயோகித்தலும் தானே..!

நான் இதை அறிவியலூடு அணுக விரும்பிறன். உதாரணமாக மனித நரம்பு உடற்தொழிலியல் சார்ந்த இரசாயனம் மூலம் இதன் விளைவுகள் பற்றித் தெளிவாக அணுக முடியும் என்று நினைக்கின்றான்..!

மிகவும் நல்லது. இவை அனைத்தும் இரசாயன தொழிற்பாடே அன்றி வேறேதும் இல்லை. சிந்தனை என்பது அப்பழுக்கற்ற இரசாயன தொழிற்பாடே. இதில் எதுவித தடுமாற்றமோ அல்லது குழப்பமோ வேண்டாம். இதை நீங்கள் அறிந்தவுடன், உங்கள் மனதில் தோன்றுவது என்ன? தயவு செய்து இன்னும் ஆழமாக போங்கள். இதில் ஏதும் உண்மை இருக்கிறதா என்பதை பார்த்துவிடலாம்.

மனம் என்பதே மாயை தானே. நீங்கள் மனம் என்று எதனைக் கருதுகிறீர்கள்...????????!

மனம் என்பது என்ன? நீங்கள் கூறும் மாயை என்பது என்ன? தொடருங்கள்.

முனிவர்கள் யோகக்கலையில் வல்லவர்கள். அவர்கள் மதத்தோடும் இரண்டறக் கலந்தவர்கள். தியான நிலைக்கும் யோகத்துக்கும் இடையில் தொடர்பிருக்கிறது.

இது நீங்கள் உருவாக்கும் ஒரு கட்டுப்பாடு (condition). முனிவர்கள் கூட யோகக் கலையை உபயோகித்திருக்கலாம். அப்படி இருப்ப்ப்தால் மட்டுமே யோகத்துக்கும் சமயத்துக்கும் தொடர்பு இருப்பதென்பதல்ல. யோகம் ஒரு இயற்கையின் வழிநிலை. அதை மதம் சார்ந்தவன் செய்தாலென்ன, மதம் சாராதவன் செய்தாலென்ன பயன் ஒன்றுதான். இயற்கையின் அதி அற்புத அழகும் அதுதான். மனிதனென்ன, மிருகம் அவ்வகையில் உடலை வளைத்து தன் உடலினுள் இருக்கும் மருந்து பெட்டகங்களை திறக்க செய்வதை கண்டுதான் சீனாவின் "தாய்ச்-சி" எனப்படும் கலை உருவாகியது. ஒரு மிக நுட்பமான உண்மையை பாருங்கள். இயற்கை விதிகள் எவையும் "ஆள்கூற்று தளங்களில்" தங்கியிருப்பதில்லை. (Natural laws do not depend on coordinate syatem). என்னை மிகக் கவர்ந்த அழகிய பண்பு அது.

விவாதத்துக்காகவே முரண்படவோ அல்ல. முரண்பாடுகள் மிகுந்த உலகில்.. தெளிவுளைத் தேடும் சிந்தனையைத் தூண்ட வேண்டின் விளக்கங்கள் பெறப்படனும் என்பதுதான் பதில்களுக்கான நோக்கம்.

மிக்கவும் நல்லது. உலகம் என்பது என்ன? சிறிது ஆழமாக செல்லலாம். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்: விஞ்ஞானம் என்பதே அறிதலும் விளங்குதலும் பிரயோகித்தலும் தானே..! சமயம் இவ்வுலகில் மனிதனின் ஆன்மீக நிலையை மட்டும் இனங்காட்டுகிறதே தவிர.. கடவுளைக் கண்டுவிட்டேன் என்று கூறவில்லை. கடவுளிடம் அனைத்தும் அறிந்தேன் என்று கூறிடவில்லை. மதம் மனிதனுக்கு அவனின் வாழ்வின் நிலையாமையை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. மற்றோருக்கு கேடு செய்யும் நிலையை தவிர்க்க அவனுக்கு அன்பை போதிக்கிறது. அன்பைப் பெருக்க வகை சொல்கிறது

வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்திருக்கும் நெடுக்காலபோவானை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். உங்கள் கிரகத்தில் இப்படியான ஒரு மதம் இருப்பது குறித்து பெருமையடைகிறேன்.

இங்கே பூமியிலே மதங்கள் இப்படி இல்லை. இங்கே உள்ள மதங்கள் இதுதான் கடவுள் என்று கண்டதை எல்லாம் சுட்டிக் காட்டுகின்றன. வணங்கச் சொல்லி கட்டளையும் இடுகின்றன. மற்றைய மதங்களின் மீது வெறுப்பையும் வளர்க்கின்றன. தங்களுடைய மதத்தவர்களையே கீழ்சாதி என்று கொடுமைப்படுத்துகின்றன.

எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கிரகத்தின் மதத்தைப் பற்றி மேலும் சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?

முக்கியமாக ஒரு வேண்டுகோள்! எங்கள் பூமியிலே பல கோடி மக்கள் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அவர்கள் நீங்கள் திரும்பிப் போகும்போது உங்களோடு அழைத்துச் சென்று உங்களின் கிரகத்தில் தஞ்சம் கொடுப்பீர்களா?

என்றென்றும் நன்றியோடு இருப்போம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் விஷ்ணுபுரத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். அவரின் பார்வை மேலும் கேள்விகளை எழுப்பும்.

------

"அவையினரே! மனிதகுலம் தோன்றிய முதல் நாள், முதல் கணம் மனித மனத்தில் எழுந்த கேள்வி என்ன? அதுவே இன்று இக்கணம் வரை எல்லா ஞானத் தேடலுக்கும் தாரமான கேள்வி. இதெல்லாம் என்ன? இது ஏன்? இவ்வளவுதான். இந்த ஞான சபை அக்கேள்விக்கு விடையாக ஒரு மகாதரிசனத்தை நிறுவி, பல சதம் ஆண்டுகளாக இங்கு நிலை நிறுத்தி வந்துள்ளது. அத்தரிசனத்தின் ஸ்தூலமே இந்தப் பேராலயம். விவாதத்தின் துவக்கமாக அந்தக் கேள்வியை இங்கு எழுப்புவோம். ரிக்வேதத்திலிருந்தல்லவா ஞானம் துவங்குகிறது?" என்று கூறி பவதத்தர் விவாதத்தைத் தொடக்கி வைக்கிறார் (பக்கம் 454).

ரிக்வேதிகள் பிரபஞ்ச உற்பத்தி பற்றிப் பேசி விவாதத்தைத் தொடங்குகிறார்கள்:

"அன்று அசத் இருக்கவில்லை;

சத்தும் இருக்கவில்லை.

அதற்கப்பால் வானும் இருக்கவில்லை.

ஒளிந்து கிடந்தது என்ன

எங்கே?

யாருடைய ஆட்சியில்?"

"அப்போது இரவு பகல்கள் இல்லை. ஒன்றேயான அது தன் அகச் சக்தியினால் வாயு இல்லாமல் மூச்சுவிட்டது. அதுவன்றி ஏதும் இருக்கவில்லை. இருட்டால் போர்த்தப்பட்ட வெளி. வேறு படுத்தும் அடையாளங்கள் இன்மையால் ஏதுமின்மையாக ஆகிவிட்டிருந்த வெளி. அது நீராக இருந்தது. அதன் பிறப்பு வடிவமற்ற வெறுமையால் மூடப்பட்டிருந்தது. தன் சுயமான மகிமையினால் முதல் முடிவற்ற தவத்தால் அது சத்தாக மாறியது. அந்த ஒருமையில் காமம் நுழைந்தது. பின்பு பீஜம் உருவாயிற்று. அவ்வாறு அசத் பிறந்தது" (455)

வைணவ தத்துவம் பேசும் பவதத்தர் "முழுமுதற் காரணமான எம்பெருமான் விஷ்ணுவேதான்.... விஷ்ணுவே சத். மீதியெல்லாம் அசத்" (458) என்கிறார்.

இதன் பின் சாங்கியர்கள் அதனை மறுத்துப் பேசுகிறார்கள். "தூலப் பிரபஞ்சம் பிரமை அல்ல" என்று சத்காரியவாதம் பேசுகிறார்கள் (459). பின் வைசேஷிகர்கள் பேசுகிறார்கள். "பிரபஞ்சம் பதார்த்தங்களால் ஆனது.... இணைவு பிரிவுகள் மூலம் பிரபஞ்சம் உற்பத்தி ஆகிறது... எனவே ஆத்மா மனத்தை உண்டு பண்ணுவதில்லை. மனம் வானத்தையும் நீரையும் உண்டு பண்ணுவதில்லை" (462).

இப்படிப் பல நாட்கள் விவாதங்கள் தொடர்கின்றன. சமணர்கள் பிரபஞ்ச உற்பத்தியை மறுத்து "சர்வாஸ்தி வாதத்தை" (அனைத்தும் என்றும் உள்ளது) முன்வைக்கிறார்கள். சைவ தத்துவத்தைப் பேசும் சாத்தனார் பதி, பசு, பாசம் என்னும் முவ்வுண்மைகளை முன் வைக்கிறார். பௌத்தத்தின் ஒரு பிரிவாகிய வைபாஷிகர்கள் ஆத்மா என ஒன்று இல்லை என்று சாதிக்கிறார்கள். "நாமறியும் எதுவும் எந்நிலையிலும் தங்கள் பூரண நிலையில் இல்லை... எப்பொருளுக்கும் பூரண நிலை என்ற ஒன்று இல்லை.... மாற்றமில்லாத நிறைனிலையாகிய ஆத்மா என்பது இருக்க இயலாது" (489). இதன் பின் சூனிய வாதம் பேசப்படுகிறது. பிரபஞ்சம் என்பது ஒரு அனுமானம்தான். அப்படி ஒன்று இல்லவே இல்லை என அவர்கள் பேசுகிறார்கள்.

இறுதியில் அஜிதன் தமது வாதங்களை விரிவாகக் கூறுகிறார். "மகாதர்மம் என்பது ஒரு இருப்பல்ல. அது ஒரு மூலாதார சக்தியுமல்ல. அது இருக்கிறது எனவே அது செயல்படுகிறது. அது செயல்படுகிறது எனவே அது இருக்கிறது. அது செயல் படாதபோது அது இல்லை என்றல்லவா ஆகும்? கர்மமும் தர்மமும் வேறு வேறு அல்ல. நாம் பார்ப்பது ஒரு ஒழுங்கமைவை. அந்த ஒழுங்கமைவை நிகழ்த்தும் விதிகளை. அவ்விதிகளை உள்ளடக்கிய மாபெரும் பொதுவிதியை. அதுவே மகாதர்மம். விதியிலிருந்து ஒழுங்கா, ஒழுங்கிலிருந்து விதியா? அதை அறிய முடியாது. ஏனெனில் அந்தக் கேள்விக்கான பதில் மானுட இருப்புக்கு வெளியே உள்ளது." (பக்கம்: 553.)

அஜிதனின் வாதம் வென்றதற்கு அடையாளமாக கிருஷ்ணப் பருந்து வருகிறது. அவர் ஆட்சி ஏற்கிறார்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஈழத்திருமகன்

யதார்த்தத்தில் absolute objectivity சாத்தியப்படுமா? அதை எப்படி வரையறுப்பது? அட அதை வரையறுக்க வெளிக்கிடுவதே self defeating process அல்லவோ? :lol:

பூச்சியத்தை அளக்க வெளிக்கிட்டா இதே பிரச்சனை தானோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூச்சியத்தை அளக்க வெளிக்கிட்டா இதே பிரச்சனை தானோ?

"எல்லா கணிதமும் பூச்சியத்தில் தொடங்குகின்றது. பூச்சியத்தில் முடிகின்றது. பூச்சியத்திற்கு இரு புறமும் முடிவின்மை உள்ளது. இரு பூச்சியங்களுக்குள் நாம் சிக்க வைத்துள்ள காலமே கணிதத்தால் அளவிடப்படுகின்றது. உண்மையில் கணிதம் என்பது மாயையை மாயையால் அளவிடும் முயற்சியாகும்."

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஈழத்திருமகன்யதார்த்தத்தில் absolute objectivity சாத்தியப்படுமா? அதை எப்படி வரையறுப்பது? அட அதை வரையறுக்க வெளிக்கிடுவதே self defeating process அல்லவோ? :lol: பூச்சியத்தை அளக்க வெளிக்கிட்டா இதே பிரச்சனை தானோ?

குறுக்ஸ். மன்னிப்பெல்லாம் எதற்கு. :):D சரி. உங்கள் கேள்விகளுக்கு வருவோம். Objectivity, and Absolute Objectivity. இவை இரண்டையும் அறிந்துகொள்ள வேண்டும். தனித்தனியே அல்ல. முதலில் objectivity என நீங்கள் நினைப்பது எதனை? அதன் பிறகு absolute objectivity என ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பூச்சியம் என்பது ஒரு absolute புள்ளியா? or relative? இதன் மிக நெருங்கிய இரு நண்பர்களை பாருங்கள். ஒன்று "நன்மை" மற்றது "தீமை". இவை இரண்டும் absolute ஆ? அல்லது ஒரு கோலின் இரு முனைகளா? தொடருங்கள்.

"எல்லா கணிதமும் பூச்சியத்தில் தொடங்குகின்றது. பூச்சியத்தில் முடிகின்றது. பூச்சியத்திற்கு இரு புறமும் முடிவின்மை உள்ளது. இரு பூச்சியங்களுக்குள் நாம் சிக்க வைத்துள்ள காலமே கணிதத்தால் அளவிடப்படுகின்றது. உண்மையில் கணிதம் என்பது மாயையை மாயையால் அளவிடும் முயற்சியாகும்."

இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் mathematics can never be complete. கோடெல் என்ற கணித மேதையின் Godel's Incompleteness Theorem கூறவருவதும் இத்தான். கிருபன். இன்னொரு விசித்திரத்தை அவதானித்து பார்த்தீர்களா? நாம் காண்பது, பேசுவது, உண்பது, அளப்பது, அறிவது எல்லாமே என்ன? மூளையில் சேமிக்கும் ஒருவித "இமேஜ்" என்பதை தவிர வேறேதும் இல்லை. கவனித்து பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கணிதம்.. அளவுகோலிடல் அறிவியல். உ+ம்: எளிமையான ஒரு விடயத்தையே நோக்குங்களேன்.. இது இவ்வளவுதான் நீளம் என்பதை மூளை ஒப்பீட்டியலில் அறிந்தாலும் கணிதம் தான் அதை குறியிடல் மூலம் அளவிடுகிறது.

எல்லாம் மாயை என்று நிறுவுவதற்காகவா இத்தனை தியறிகளும்...??! இதைத்தானே இந்து மதமும் சொல்லுது சைவமும் சொல்லுது. இது குறித்த தகவல்களை தமிழ் - சைவத்தொண்டன் ஆறுமுக நாவலரின் பெயரில் இயங்கும்..கள உறவு சொல்லியிருக்காரே..! :lol:

ஈழத்திருமகன்..

நாம் உடலை ஒரு இரசாயணத் தொகுதியாகக் காண்கிறோம். நமது உடல் வெறும் காபன்.. ஐதரசன்.. ஒட்சிசன்.. நைதரசன்.. கந்தகம்.. பொசுபரசு..இரும்பு.. மக்னீசியம்.. கல்சியம்.. சோடியம்.. பொட்டாசியம்..குளோரின்.. புளோரின்.. இவற்றைக் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு தொகுதி..??! (one of the thermodynamic system)

அகிலம் என்பது.. இந்தத் தொகுதி இருக்கும் சூழல் (surrounding). அது பல மட்டங்களாகப் பிரிகிறது..!

பெளதீக.. வெப்ப இரசாயன விதிகளுக்கு அமைய.. எமது உடலையும்.. அதன் சக்திப் பரிமாறு நிலைகளையும்.. இரசாயனத் தொகுதி என்ற நிலைக்குள் வைத்துக் கொள்ளலாம்...! அது மூடிய தொகுதி அல்லது திறந்த தொகுதி (closed or opened system)யாக இருக்கலாம்.

இரசாயனம் இல்லையேல் பெளதீகவியலை விளங்க முடியாது..???! அதுபோலத்தான்.. எமது உடலை நாம் உணராவிடில்.. நாம் எமது நிலைகளை உணர முடியாது. அதுதான் எளிமையாகச் சொல்வார்கள்... முதலில் உன்னை நேசிக்கக் கற்றுக் கொள் நீ பிறரை நேசிக்கச் செய்வாய் என்று..!

ஏன் எமது பூமி கூட ஒரு திறந்த இரசாயனத் தொகுதிதான்... (thermodynamically opened system)( அதற்குள் நாம் ஒரு உப தொகுதி..!). இதுதான் உலகம்.. எம்மைப் பொறுத்தவரை. system (தொகுதி) dynamic (இயங்குநிலையில ) இருக்கனும் என்றால் disturbance ( disordered) குழப்பங்கள் இருக்கனும்). இங்கும் அதுதான் நடக்கிறது..! :P :)

வெப்ப இரசாயனம் பெற்றிப் பேசியதால் அதன் விதிகளையும் சொல்லி விடுகிறேன்..

முதலாம் விதி: In any process, the total energy of the universe remains constant.

இரண்டாம் விதி: The entropy of an isolated system not in equilibrium will tend to increase over time, approaching a maximum value at equilibrium.

மூன்றாம் விதி: As temperature approaches absolute zero, the entropy of a system approaches a constant.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாம் உடலை ஒரு இரசாயணத் தொகுதியாகக் காண்கிறோம். நமது உடல் வெறும் காபன்.. ஐதரசன்.. ஒட்சிசன்.. நைதரசன்.. கந்தகம்.. பொசுபரசு..இரும்பு.. மக்னீசியம்.. கல்சியம்.. சோடியம்.. பொட்டாசியம்..குளோரின்.. புளோரின்.. இவற்றைக் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு தொகுதி..??! (one of the thermodynamic system)

நல்லது. மனித உடல் ஒரு இரசாயனத் தொகுதி என்பது உண்மைதான். ஆனால் இரசாயனத் தொகுதி மாத்திரம் மனிதன் ஆக முடியுமா? அப்படிப் பார்த்தால் நானும் (இறந்த பின்னர்) எனது சடலமும் ஒன்றாகிவிடுமே.. கேள்வி என்னவென்றால் மனிதனுக்கும் மனித சடலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அந்த வித்தியாசம் இரசாயானத்தால் ஆனதா? இன்னும் குறிப்பாகச் கேட்பதனால் "உயிர்" என்னத்தால் ஆனது?? அது எங்கிருந்து வந்தது? அதன் ஆதி வடிவம் என்ன? இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் எல்லா இடமும் இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் எவை?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் mathematics can never be complete. கோடெல் என்ற கணித மேதையின் Godel's Incompleteness Theorem கூறவருவதும் இத்தான். கிருபன். இன்னொரு விசித்திரத்தை அவதானித்து பார்த்தீர்களா? நாம் காண்பது, பேசுவது, உண்பது, அளப்பது, அறிவது எல்லாமே என்ன? மூளையில் சேமிக்கும் ஒருவித "இமேஜ்" என்பதை தவிர வேறேதும் இல்லை. கவனித்து பார்த்தீர்களா?

கணிதம்.. அளவுகோலிடல் அறிவியல். உ+ம்: எளிமையான ஒரு விடயத்தையே நோக்குங்களேன்.. இது இவ்வளவுதான் நீளம் என்பதை மூளை ஒப்பீட்டியலில் அறிந்தாலும் கணிதம் தான் அதை குறியிடல் மூலம் அளவிடுகிறது.

பிரபஞ்சம் அளக்கமுடியாத அளவு பெரிதானது. அதனைக் மனிதர்களால் உருவாக்கப்பட்ட "கணிதம்" என்ற அளவுகோலால் அளக்க முடியுமா? அளக்க முடியாததை ஓர் அளவு கோலால் அளக்க முயற்சிப்பது ஒரு வீண்வேலையாக இருக்குமே. :lol:

மேலும் எம்மிடம் உள்ள ஐந்து புலன்களை வைத்துத்தான் நாம் ஐம்பூதங்களை அறிகிறோம். அதற்கு மேலும் "பூதங்கள்" இருந்தால் அதனை அறிய நம்மிடம் "புலன்" இல்லை. எனவே எமது மட்டுப்படுத்தப்பட்ட அறிவாற்றலைக் கொண்டும் பூரணமற்ற கணித அளவுகோலைக் கொண்டும் எவ்வாறு இயற்கையின் ஆதித் தோற்றத்தையும் அதன் விசித்திரமான செயற்பாடுகளையும் அறிய முடியும்?

மனிதன் தோன்றிய கணம் முதல் விடை காண முயலும் அடிப்படைக் கேள்வியான "நான் எங்கிருந்து வந்தேன்?" என்பதற்கு விடை எப்போதுமே கிடைக்கப் போவதில்லை. எனினும் விடையை அறிய முனைப்படும்போது மனித குலத்திற்குத் தேவையான பல விடயங்களை அறிய முடியும்.

தேடல்கள் நமது வாழ்வை சுவாரசியம் மிக்கதாக மாற்றும். இல்லாவிடில் சாதாரண பிற உயிர்கள் போல் பிறந்து, வளர்ந்து, இனம் பெருக்கி, மரணத்தில் முடியும் வாழ்வுதான் மிஞ்சும். அது கூட கேள்விகளை கிளறுகின்றது. சிந்தனையாற்றல் இல்லாத பிற உயிர்கள் ஏன் இந்த சுழற்சிக்குள் சிக்குப்பட்டுள்ளன? இந்தச் சுழற்சியின் தேவை என்ன?

கிருபன்.!!

இதைத்தான் முதலில் இயற்கை என்பது அளவிடமுடியா பெரும் சக்தி என எழுதியிருந்தேன்.

மற்றது நீங்கள் அறிய முயற்சிக்கும் "உயிர்" தொடர்பானது. உண்மையில் "மரணம்" என்பதை அறியாமல் யாருமே "வாழ்க்கை", "காதல்" என்பவற்றை அறியமுடியாது. இந்த மரணம் என்பது பிடித்து உலுக்காத உயிரினமே இல்லை எனலாம். இது மிகவும் ஆழமானதும், பலரும் எண்ணமறுப்பதுமான பகுதி. ஆனால் மிக அற்புதமானது. "யார் மரணத்தை அறிந்து கொள்கிறானோ, அவனே வாழ்க்கையை வாழ்கிறான்" என நான் நம்புகிறேன்.

மிக நுணுக்கமான பல விடயங்களை "இராமர் பாலம்........" என்ற தலையங்கத்தினுள் எழுதுவது சரியென தெரியவில்லை. இதைப்பற்றி வாசிக்க நினைக்கும் பலரும் இதை தவறவிடுவதற்கான சந்தர்ப்பமே அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.