Jump to content

மனமும் அறிவும்


Recommended Posts

நீங்கள் கூறுவதில் உண்மை இருக்குமா இல்லையா என்று நான் ஏன் சிந்திக்க வேண்டும்?

இங்கு பலர் பல கருத்து கூறுகிறார்கள். அதில் இது சிறந்தது என்று தெரிவு செய்யக் கூடாது என்கிறீர்கள்.

இந்த திரியில் கருத்துப் பகிர்வதால் ஒரு தெளிவு கிட்டும் விடயங்களை சிந்திப்பதால் அதில் இருக்கும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ளவும், அவற்றில் இருந்து விடுபட்டுகொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பது நல்லதா கூடாதா?

அப்படி ஒரு நம்பிக்கையை வைக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள்?

அப்படி ஒரு நம்பிக்கை இல்லாத இடத்து நான் ஏன் இங்கு கருத்து எழுதி மினக்கெட வேண்டும்?

ஆமாம் பண்டிதர். !!

நீங்கள் "நல்லது", "தீயது" என நினைப்பது என்ன? உண்மையில் நீங்கள் உள்மனதில் விரும்புவது நல்லதாக தெரிகிறதா? அல்லது வேறு ஏதாவதா? நீங்கள் "நல்லது" என நினைக்கும் கணத்தில் "விருப்பு" என்ற கட்டுப்பாடும் வந்துவிடுகிறது.அப்படியா?

அதைவிட "உண்மை" என்பதில் உங்களுக்கு ஏதும் "விருப்பு வெறுப்பு" இருக்கிறதா? இதில் இருக்கும் சிக்கலை பாருங்கள்.

நீங்கள் நம்பிக்கை என எண்ணியவுடன், உங்கள் மனதில் "நம்பிக்கையீனம்" என்பதும் சேர்ந்தே வருகிறது. சிறிது அவதானித்து பாருங்கள். எப்பவெல்லாம் இவ்வாறான பிரிவுகள் தோன்றுகின்றனவே அப்பொழுதே பிரச்சனையும் தோன்றிவிடுகிறது. (It is division but difference).

"சரி" அல்லது "பிழை" என்பது எப்பொழுதுமே ஒரு comparison. உண்மை என்பது அவ்வாறல்ல. Truth is not comparable.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

மிகவும் நல்லது. இன்னுமொருவன்.!!

உங்கள் இந்தப் பதிவை ஒரு தகுந்த தலையங்கத்தின் கீழ் இணைத்துவிட்டால் அங்கிருந்து தொடரலாம்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

தொடர்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்...

Link to comment
Share on other sites

தொடர்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்...

ஆமாம் இன்னுமொருவன். !!

நீங்கள் எழுதிய பதிவில் வாழ்க்கையின் மிகவும் அத்தியாவசியமான பலவிடயங்களும் சேர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து நோக்காது, ஒவ்வொரு விடயமாக ஒரு முடிவுக்கு வருவோம். எமது கருத்தாடல்கள் எல்லாம் நிறைவு செய்யும் பொழுது அந்தக் கேள்விகளுக்கான விடைகளும் தெரியலாம்.

முதலில், நாம் விளங்கிக் கொள்ளுவதற்கு சிக்கலான, "மனம், எண்ணம், அறிவு" என்பவற்றை சிறிது ஆழமாக பார்க்கலாம். அதை நிறைவு செய்துவிட்டு "வாழ்க்கை" எனும் பகுதிக்குள் செல்லும்போது உங்களின் பல கேள்விகளும் அங்கு எதிர்ப்படும்.

மனித மூளை, அதன் வடிவமைப்பு தொழிற்பாடு என்பன விசித்திரமானவை. மூளையின் கலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாடல் செய்வதில்லை. ஆனால் "நியூரோன்கள்" இரசாயன தாக்கங்கள் மூலம் தொடர்பாடல் செய்கின்றன. எண்ணம் என்பதே இந்த இரசாயன தாக்கம் தான். இந்த இணையப் பக்கத்தில் சிறிது வாசிக்கலாம்.

http://www.pbs.org/wgbh/nova/mind/electric.html

எனவே எண்ணம் (thought) என்பது ஒரு இரசாயன தாக்கம். அவ்வளவே. அதில் உன்னதமானதென்றோ அல்லது மிகச் சாதாரணமானதென்றோ இல்லை.

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன்,

பதிலிற்கு நன்றி.

நீங்கள் இணைத்திருந்த இணைப்பினை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் நான் வாசித்தவரை அங்கும் ஒருவரது அபிப்பிராயங்கள் தான் பதிவாகின்றனவே அன்றி திட்டவட்டமான நிறுவல்கள் ஏதும் நான் வாசித்தது வரை இல்லை. பேட்டி கொடுப்பவருடைய கல்வித் தகமை முதலியவற்றை வைத்து அவர்பற்றி ய விம்பங்கள் எதனையும் நான் எடுக்கவிரும்பவில்லை. மேலும் நீங்கள முன்னர்

கூறியுள்ளது போன்று, வெறும்கருதுகோள்களை அல்லது தத்துவங்களை எந்த நம்பிக்கையில் நாம் நம்புவது? எனினும் நேரங் கிடைக்கும் போது முற்றாக வாசித்துப் பார்க்கிறேன். ஒரு வேளை இறுதியில் நான் எதிர்பார்ப்பன போன்ற விடயங்கள் வரலாம்.

ஆனால் அதற்கு முன்பு, ஆர்வ மிகுதியால் உங்களிடம் ஒரு கேள்வி. எனது கடந்த இணைப்பில் நான் எழு;பியிருந்த கேள்விகள் அனைத்தும் தொடர்பான திட்டவட்டமான பதில் இப்போதே உங்களிடம் இருக்கின்றன என்ற போதும், என்னைக் குழப்பிவிடும் என்பதனால் மட்டும் அவற்றை இப்போது இணைக்காது உள்ளீர்களா? அல்லது அக்கேள்விகள் பற்றி உங்களிற்குள்ளும் இப்போது தேடல்கள் அல்லது சிந்தனைகள் நடக்கின்றனவா? அறிவதற்கு மிகவும்

ஆவலாய் உள்ளேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதற்கு முன்பு, ஆர்வ மிகுதியால் உங்களிடம் ஒரு கேள்வி. எனது கடந்த இணைப்பில் நான் எழு;பியிருந்த கேள்விகள் அனைத்தும் தொடர்பான திட்டவட்டமான பதில் இப்போதே உங்களிடம் இருக்கின்றன என்ற போதும், என்னைக் குழப்பிவிடும் என்பதனால் மட்டும் அவற்றை இப்போது இணைக்காது உள்ளீர்களா? அல்லது அக்கேள்விகள் பற்றி உங்களிற்குள்ளும் இப்போது தேடல்கள் அல்லது சிந்தனைகள் நடக்கின்றனவா? அறிவதற்கு மிகவும் ஆவலாய் உள்ளேன்.

திட்டவட்டமான பதில்கள் முன்னமே இருந்தால் ஈழத்திருமகனை "ஞானி" என்றே கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன்,

பதிலிற்கு நன்றி.

நீங்கள் இணைத்திருந்த இணைப்பினை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் நான் வாசித்தவரை அங்கும் ஒருவரது அபிப்பிராயங்கள் தான் பதிவாகின்றனவே அன்றி திட்டவட்டமான நிறுவல்கள் ஏதும் நான் வாசித்தது வரை இல்லை. பேட்டி கொடுப்பவருடைய கல்வித் தகமை முதலியவற்றை வைத்து அவர்பற்றி ய விம்பங்கள் எதனையும் நான் எடுக்கவிரும்பவில்லை. மேலும் நீங்கள முன்னர் கூறியுள்ளது போன்று, வெறும்கருதுகோள்களை அல்லது தத்துவங்களை எந்த நம்பிக்கையில் நாம் நம்புவது? எனினும் நேரங் கிடைக்கும் போது முற்றாக வாசித்துப் பார்க்கிறேன். ஒரு வேளை இறுதியில் நான் எதிர்பார்ப்பன போன்ற விடயங்கள் வரலாம்.

ஆனால் அதற்கு முன்பு, ஆர்வ மிகுதியால் உங்களிடம் ஒரு கேள்வி. எனது கடந்த இணைப்பில் நான் எழு;பியிருந்த கேள்விகள் அனைத்தும் தொடர்பான திட்டவட்டமான பதில் இப்போதே உங்களிடம் இருக்கின்றன என்ற போதும், என்னைக் குழப்பிவிடும் என்பதனால் மட்டும் அவற்றை இப்போது இணைக்காது உள்ளீர்களா? அல்லது அக்கேள்விகள் பற்றி உங்களிற்குள்ளும் இப்போது தேடல்கள் அல்லது சிந்தனைகள் நடக்கின்றனவா? அறிவதற்கு மிகவும் ஆவலாய் உள்ளேன்.

நன்றி

என்னைப்பொறுத்தளவில் அவ்வாறான கேள்விகளுக்கும், அதன் உள்ளார்ந்த விடயங்களுக்க்கும் காரணம் என்ன என்பதை தேடியிருக்கிறேன். அதை நான் சொல்வதை விட, நீங்களே கண்டுகொள்ள வேண்டும் என்பதே சரியானது என நினைக்கிறேன். அத்தோடு , "முற்றுமுழுதான" கவனத்தை செலுத்தும் வழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அல்லாதுவிட்டால், மிகமேலோட்டமாக ஒவ்வொரு விடயங்களையும் "சேகரிப்பதில்" ஆர்வமாக இருப்போமேஒழிய அதை ஊடுருவிச் செல்லும் தன்மையை இழந்துவிடுவோம். இது மிக இலகுவானதும் நாம் செய்ய மறுப்பதுமான ஒரு நிகழ்வு.

எங்கள் மனம் எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பான நிலை இருக்கும்போதுதான் தொழிற்படும். இதை அப்படியே ஏற்றுக்கொள்லாமல், அதில் "உண்மை" இருக்கிறதா என பாருங்கள். பாதுகாப்பு இல்லை என தெரிந்தவுடன், அதிலிருந்து தப்புவததற்கு பார்க்கும். சிலர் பயத்தில் மயங்கி விடுவதுகூட இதனால்தான். பாருங்கள், மனம் எப்போதும் "தெரிந்த" என்ற எல்லைக்குள்தான் வேலைசெய்கிறது. தினமும் அந்த "தெரிந்த" என்ற எல்லையை மீண்டும் மீண்டும் பலப்படுத்துவதிலேயே தனது செயற்பாடுகளை நடத்துகிறது. நாம் எமது மனங்களில் இந்த "விம்பங்களை" சேகரித்து வைப்பதும் இந்த பாதுகாப்பு முறையை பலப்படுத்தத்தான். மனம் "தெரியாத" என்ற எல்லையில் வேலைசெய்ய மறுப்பது அதில் "பாதுகாப்பு" இல்லை என்பதால்தான். அப்படியான சந்தர்ப்பத்தில் அது எப்படியாயினும் ஒரு "முடிவை", "பதிலை" எதிர்பார்க்கும்.

நாம் நித்திரை கொள்ளும்போது உண்மையில் conscious mind ஓய்வெடுக்கிறது. ஆனால் subconscious mind தான் கண்ட, அனுபவித்த எல்லாவற்றையும் மீளவும் ஒழுங்கமைக்க ஆரம்பிக்கிறது. மனம் நேர்த்தியாக தொழிற்பட அதற்கு ஒருவித பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே "ஒழுங்கு" என்பது மீண்டும் மீண்டும் மறுசீரமைக்கப் படுகிறது. கனவு தோன்றுவதும் இதனால் தான். உண்மையில் நாம் செயல்ப்படும் விடயங்கள் அத்தனையையும் புரிந்துகொண்டோமானால், இந்த விம்பங்கள் உருவாகா, அத்தோடு கனவும் தேவையில்லை. ஒருமணி நேர ஓய்வு கூட புத்துணர்ச்சியை தந்துவிடும்.

சரி. இந்த தரவுகளை (அது "இமேஜ்" ஆக இருந்தாலும் சரி, "உண்மையாக" இருந்தாலும் சரி) மூளை எப்படி சேமிக்கிறது? இவை தனித்துவமான patterns ஆக மூளைக் கலங்களில் சேமிக்கப் படுகின்றன. நாம் உண்பது, பேசுவது, பார்ப்பது என சகல தொழிற்பாடுகளும் ஒவ்வொருவகை patterns (பலர் இதை நம்பமாட்டார்கள்). நாம் பழைய நினைவுகளை மீட்டும் போது இவற்றை ஒப்பிட்டு பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே !!

பல்கலைக்கழகங்கள் தொடங்குவதால், அதிக நேரம் செலவுசெய்து எழுத முடியவில்லை. சனி, ஞாயிறுகளில் சிறிது அதிகமாக எழுதலாம். முயற்சிப்போம்.

சரி. எண்ணங்கள் என்பன எம்மூளையில் நிகழும் இரசாயன தாக்கங்கள் என பார்த்தோம். இனி, மனம் என்பதையும் அறிவு என்பதையும் பார்க்கலாம்.

எங்கள் நாளாந்த செயற்பாடுகளை நாம் இருவிதமாக எமக்கு தெரியாமலே பிரிக்கிறோம்.

"எமக்கானவை", "எமக்கு தேவையற்றவை" ("for me" and "not for me") என்றவாறு இந்த பிரிவுகள் அமைகின்றன. இந்த "me" என்பது, அதன் சேர்க்கையான தரவுகளின் தொகுப்பு, எமக்குள்ளே ஒரு வட்டத்தை உண்டாக்கிவிடுகிறது. இதுதான் மனம். வேறெதுவும் அல்ல. எப்போதுமே எமது மனம், இந்த எல்லையை தாண்டி சிந்திப்பதில்லை.

அறிவு என்பது முற்றுமுழுதாகவே நம் ஒவ்வொருவரினதும் "பழைய அனுபவங்களே". அறிவு என்றுமே முழுமையானதோ அல்லது புதியதோ அல்ல. அது என்றுமே பழையது. ஒரு கணத்தில் புத்தம்புதியதாக ஒன்றை சந்தித்தால் அந்தக் கணமே அது பழையதாகி, எமது "மெமரி"யில் சேர்க்கப்பட்டு விடுகிறது. எனவே யாராவது "நான் புதியதாக கண்டுகொண்டேன்" என கூறினால் உண்மையில் அவர் தன் "பழைய நினைவுகளில் இருந்து" மீட்டுச்சொல்கிறார் என்பதே உண்மை.

நாம் "சிந்திக்கிறோம்" என கூறும்போது நிகழ்வது என்ன? உண்மையில் எமக்கு "என்றுமே தெரியாத" ஒன்றைப்பற்றி சிந்திக்கிறோமா? அல்லது "தெரிந்த"வற்றினுள் பல்வேறு சேர்மானங்களை செய்கிறோமா? அல்லது "என்றுமே தெரியாத" ஒன்றைப்பற்றி சிந்திக்க முடியுமா?

உண்மையில் எமது மனம் சிந்திப்பது "தெரிந்த" என்ற வட்டத்தினுள். அதாவது "அறிவு" என்பதை தாண்டி நாம் சிந்திக்க பழகவில்லை. அவ்வாறான எந்த அனுபவமும் எமக்கு இல்லை.

எங்கள் "உள்ளிருக்கும் வெளியில்" (inner space), எம் அனுபவங்கள், விருப்பு வெறுப்பு, பொறாமை, போன்ற பல்வேறு தரவுகளால் அமைக்கப்பட்ட இந்த "மனம்", தன் அறிவு ஆழுமைக்கேற்றவாறு இயற்கையின் மற்றைய அம்சங்களுடன் (மனிதர்களும் அதனுள் அடக்கம்) தொடர்புகளை ஏற்படுத்துகிறது. பாருங்கள், சாதி சமயம் என்பது கூட எம்மீது நாமே பூசிக்கொள்ளும் ஒரு வர்ணமே அன்றி வேறில்லை. மனிதன் என்று எடுத்தால் சகலரும் சர்வசமமே. சிந்திக்கும் தன்மை, ஆழுமைகள் வேறுபடலாம் ஆனால் இது பிரிவு (division) அல்ல.

உலகத்தின் "அசைவு" (movement) என நாம் எண்ணுவது எதை? வெறும் கட்டடங்கள், வாகனங்கள், மனிதர்கள் என்பனவா? அல்லது நாம் ஒவ்வொருவரும் எமக்குள்ளே அமைத்து, வெகு இறுக்கமாக பராமரித்துவரும் இந்த "சின்னஞ்சிறு மனங்களின்" ஒன்றுசேர்ந்த தொகுப்பா? எதை உணர்கிறீர்கள்? நாம் வேறொரு நபருடன் தொடர்பை ஏற்படுத்தும் அந்தக் கணத்தில், உண்மையில் இந்த மனம்தான் தொடர்பை ஏற்படுத்துகிறது. அதன் அறிவு, ஆழுமை என்பனவுக்கு ஏற்றமாதிரி மற்றவரை எடைபோடுகிறது. அத்தனை செயல்களும் இந்த மனத்தின் உள்ளே இருந்தே ஆரம்பமாகிறது. எனவே இரு நபர்களுக்கிடையேயான தொடர்பாடல், பலநபர்களுக்கு இடையே என்று மாறி, நகரம், நாடு, உலகம் எனமாறுகிறதா? எனவே உலகம் என்பது, அதன் அசைவியக்கம் என்பது, எமது ஒவ்வொருவர் மனங்களினாலும் கட்டப்பட்ட ஒரு அமைப்பா?

பிரச்சனைகள் எழுவதே "இரு மனங்கள் சந்திக்கும்போதுதான்". இல்லையா? "வேறுவேறான கொள்கைகள், விருப்புவெறுப்பு.... " போன்ற அத்தனையும் இருவேறு தளங்களில் சந்திக்கும் போது பிரச்சனை எழுகிறது. இன்னொரு மனிதனை "புரிந்துகொள்" என புறப்படுவது என்றுமே சாத்தியம் இல்லை ஏன்? மற்றவரை நான் புரிந்துகொள்வது என்ப்பது முற்றுமுழுதாகவே "என் மனம் சார்ந்தது". இதில் அவரின் தாக்கம் ஏதும் இல்லை. அவர்மீதான எனது சொந்த "விருப்பு வெறுப்பு, கோபம், பொறாமை ...." போன்றனவே அவரை எடைபோட முயற்சிக்கின்றன. எனவே அது முற்றுமுழுதான "புரிதல்" அல்ல. அது இறுதியில் இன்னொரு புதிய பிரச்சனையை உண்டாக்கிவிட்டு போகிறது. இதில் உள்ள சிக்கல்களை பாருங்கள். எனவே இன்னொரு நபரை புரிந்து கொள்வதென்பது முடியாதது.

என்வே இந்த சகல பிரச்சனைகளுக்கும் (conflicts) அடிப்படைக்காரணமான, என்னுள்ளே இருக்கும் "விருப்பு வெறுப்பு, கோபம், பொறாமை...." என்பவற்றை பூரணமாக "புரிந்துகொண்டு" அவற்றில் இருந்து விடுபட்டுவிட்டால், எமக்குள்ளே பிரச்சனைகள் எழுவதற்கு சாத்தியமே இல்லை. அதாவது நாம் எந்தவித பிரச்சனைகளையும் இன்னொரு நபருடனான தொடர்புகளில் ஏற்படுத்தப் போவதில்லை. எமது மனம் எப்போதுமே "பூரண அமைதியை" அனுபவித்தவாறே இருப்பதை உணருவீர்கள். அதிக சக்தியுடன், நிதானத்துடன் எல்லோரையும் கவர்ந்தவாறே உங்கள் வாழ்க்கை அமைவதை உணர்வீர்கள்.

நான் ஏற்கெனவே எழுதியபடி, இன்னொரு நபரை திருத்தவோ அல்லது மாற்றவோ எத்தனிக்கும் போது (அந்தக் கணத்தில் நான் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறேன் என்பதே உண்மை) என்னை நான் முற்றாக உணர்ந்து, "கோபம், விருப்பு வெறுப்பு.." போன்றனவற்றில் இருந்து விடுபடாவிட்டால், அவருடனான தொடர்புகளில் நானும் எதிர்வினையாற்ற (react) தொடங்குவேன் என்பதே உண்மை. இது ஏற்கெனவே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக புதிதாக இன்னொரு பிரச்சனையை உருவாக்கிவிடும். காலாகாலமாக நடைபெற்று வருவதும் இதுதான். சமூகம் பிழையான வழியில் போகிறது என்பதை உண்ணர்ந்து கொள்வது மிகப்பெரிய நிகழ்வு. அதை எப்பாடுபட்டாவது திருத்த வேண்டும் என நினக்கும் முன்பாக "நான் என்னை முழுவதுமாக அறிந்து, தனி நபர்களினூடான தொடர்புகளில் எதிர்வினையாற்றாமல் இருக்க என்னை தயார்படுத்த வேண்டும்". இல்லையேல் சமூகத்தின் ஒவ்வொருவருடனும் புதுப்புது பிரச்சனைகளை நாமே உருவாக்கி விடுவோம்.

எனவே எண்ணங்கள் என்பது என்ன?, மனம் என்பது என்ன?, அறிவு என்பது என்ன? உலகம் என்பது என்ன? பிரச்சனைகள் எங்கு உருவாகின்றன? போன்றவற்றை சிறிது ஆழமாக பார்த்தோம். இவை எழுதுவதற்கு மிக நன்றாக இருந்தாலும், சாத்தியமானதா? இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? உணர்வுகள் அற்று சடம் போன்ற வாழ்க்கையாகவல்லவா இருக்கப்போகிறது போன்ற பல கேள்விகள் உடனே மனதில் எழுந்துவிடும்.

என்னை எப்படி முழுமையாக அறிந்துகொள்வது? முடியுமா? இந்த கோபம், பொறாமை, விருப்பு வெறுப்பு என்பவற்றில் இருந்து என்னை எப்படி விடுவிப்பது?

இவற்றினை என் அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அப்படியானால், தங்களுக்கான ஒரு பாதையை, ஒரு வழிமுறையை வேதங்கள் வகுப்பது ஏன்? வேதத்தில் கூறப்பட்ட அனுஷ்ட்டானங்கள் ஏன்? அதுமட்டுமல்ல சைவமோ, வைணவமோ அல்லது இஸ்லாம், கிறிஸ்த்தவம் என்று வழிமுறைகளை வெவ்வேறாக வகுப்பது ஏன்? அதைத்தான் நான் கேட்கிறேன். ஒரு மதமோ, அல்லது பாதையோ எதையுமே தராது. மழுங்கடிக்கப்பட்ட மனத்தை தவிர. இதை கண்கூடாக கண்டுள்ளோம்.

வேதங்களில் முழுவதும் அனுட்டானங்களே உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? வேதங்களில் நான்கு நிலைகளில் முதல் நிலையே இந்த அனுட்டானங்கள். மனித வாழ்வின் ஆரம்ப படியின் லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான வழிமுறைகளே இந்த அனுட்டானங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

"நானே சத்தியமும் மார்க்கமுமாய் இருக்கிறேன்; என் மூலம் அல்லாது எவனும் தந்தையை அறிய மாட்டான்"

என்றெல்லாம் சொல்லி வேதங்கள் பயமுறுத்தவில்லை.

வேதங்களை மறுப்பவர்களை நரகத்தில் தள்ளி விடுவதாக பூச்சாண்டி எல்லாம் காட்டவில்லை.

பிரபஞ்ச சக்தியை அறிந்து கொள்ள வேதங்கள் மட்டுமே ஒரே வழி என்று கூட வேதங்கள் சொல்லவில்லை.

வேதம் என்ற சொல்லின் மூலம் வித். வித் என்றால் அறிவு என்று பொருள். உன்னை கடந்தால் உள்ளே இருப்பது

கட-வுள். அப்படியான உள் நோக்கிய தேடல் செய்வதற்கான வழிமுறைகள் தான் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது

அப்படியான உள்முகமான தேடலுக்கு உடலையும் மனதையும் ஒருமைபடுத்தும் பயிற்சிமுறைகளில் ஒன்று தான் யோகம். யோகா என்ற சொல்லின் அர்த்தமே ஒருமைப்படல் (Union) என்பது தான்.

முனிவர்கள் கூட யோகக் கலையை உபயோகித்திருக்கலாம். அப்படி இருப்ப்ப்தால் மட்டுமே யோகத்துக்கும் சமயத்துக்கும் தொடர்பு இருப்பதென்பதல்ல.

யோகம் வேதத்துடன் சம்பந்தப்படாத தனி ஒரு அங்கம் என்று நீங்கள் கூறியது தவறு.

வேதத்தின் கருப்பொருளான சாங்கியா (Philosophy) வின் பிரயோக சூத்திரம் தான் யோகா. பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டது. 4 பிரிவுகளும்196 சூத்திரங்களும் அடங்கியது. யோகம் 8 படிகள் கொண்டது அதில் மூன்றாம் படி தான் (யோகா)ஆசனம்

1. Yama or Eternal Vows:

- Ahimsa (non-violence)

- Satya (truth)

- Asteya (non-stealing)

- Brahmacharya (continence) and

- Aparigraha (non-avariciousness);

2.Niyama or Observances:

- Saucha (purity)

- Santosha (contentment)

- Tapas (austerities)

- Svadhyaya (study)

3.Asana (firm, comfortable meditative posture);

4. Pranayama (the regulation of the Vital Force);

5.Pratyahara (abstraction of the senses and mind from objects);

6.Dharana (concentration);

7.Dhyana (meditation)

8.Samadhi (superconscious state or trance)

knowledge is nothing but the past. It is just the accumulation of one's own past experiences. Past is not real

Yes you are right! how can you find The Real with unreal knowledge? According to your quote all the science knowledge is unreal as it is merely an accumulation of past experiences. If so how the science can find The Real with its unreal knowledge.?

உங்கள் கூற்று சரிதான். வெளியில் இருந்து பெறும் அறிவை (knowledge) வைத்து உள்முகமாக தேடல் எப்படி சாத்தியம். ஞானம் (Wisdom) உள்ளிருந்து வெளிவருவது. அறிவு (Knowledge) வெளியிருந்து உள்செல்வது. இந்த உள்முக தேடலுக்கு உடலையும் மனதையும் இன்னொரு Dimension க்கு அழைத்து செல்வது தான் வேதங்கள் சொல்லும் இந்த பயிற்சிகளின் நோக்கம்

முதலில் எனக்கு ஒரு "இமேஜ்" தருவதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். இவன் "முட்டாள்", "நல்லவன்",

"அறிவில்லாதவன்", "அறிவாளி" போன்ற எதையும் உங்கள் மனதில் தயவுசெய்து ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பெயரையே பாருங்கள் "ஈழத்திருமகன்" இந்த பெயரிலேயே Image Creation முயற்சி மறைந்திருப்பது உங்களுக்கு புரியவில்லையா? :lol:

The impression I get about you is, you got a shriek in search of the truth, and of course you have gathered lots of knowledge in search of the truth, which I appreciate. But again, the knowledge without application is useless and too much of information is sometimes confusing too. Sometimes they tend to put you in a strong belief system and in an inescapable mental frame work. I think you should try to realize that your mindset and thinking pattern have been overly influenced by that belief system.

Link to comment
Share on other sites

வேதங்களில் முழுவதும் அனுட்டானங்களே உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? வேதங்களில் நான்கு நிலைகளில் முதல் நிலையே இந்த அனுட்டானங்கள். மனித வாழ்வின் ஆரம்ப படியின் லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான வழிமுறைகளே இந்த அனுட்டானங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதைத்தான் பிழை என்று சொல்கிறேன். முதற்படியிலேயே "இதைச் செய்" என கூறப்பட்டு விடுகிறது. அதையும் தாண்டி எம்மால் போக முடிவதில்லை. அப்படி போகலாம் என நினைப்பதுகூட அந்த முறைமையில் இருக்கும் ஒரு "முரண்" தான்.

"நானே சத்தியமும் மார்க்கமுமாய் இருக்கிறேன்; என் மூலம் அல்லாது எவனும் தந்தையை அறிய மாட்டான்" என்றெல்லாம் சொல்லி வேதங்கள் பயமுறுத்தவில்லை. வேதங்களை மறுப்பவர்களை நரகத்தில் தள்ளி விடுவதாக பூச்சாண்டி எல்லாம் காட்டவில்லை. பிரபஞ்ச சக்தியை அறிந்து கொள்ள வேதங்கள் மட்டுமே ஒரே வழி என்று கூட வேதங்கள் சொல்லவில்லை.

இதோ, சரியான ஒரு உதாரணம். நீங்கள் எதை எப்படி குறிப்பிடுகிறீர்கள் எனத்தெரிகிறது. எந்தவொரு கணத்தில் நமக்கென ஒரு "வழிமுறை" யை அமைத்துக் கொண்டோமோ அப்பொழுதே "பிரிவுகள்" ஏற்பட்டுவீடுகின்றன. இவை தவிர்க்க முடியாதவை. "கிறிஸ்தவர்", "இந்து","பொளத்தர்",..... போன்று பிரிப்பதால் உண்மையில் அவற்றிற்கிடையே முரண்பாடுகளையே தோற்றுவிக்கிறோம். நாம் தேடுபவற்றை விட்டு "சண்டை சச்சரவுகளில்" காலத்தையும் சக்தியையும் வீணடிக்கிறோம்.

வேதம் என்ற சொல்லின் மூலம் வித். வித் என்றால் அறிவு என்று பொருள். உன்னை கடந்தால் உள்ளே இருப்பது கட-வுள். அப்படியான உள் நோக்கிய தேடல் செய்வதற்கான வழிமுறைகள் தான் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அறிவையும் கடந்து செல்லும் ஒரு முறையை (வேதங்கள் கூறிய) கூறுங்கள்.

அப்படியான உள்முகமான தேடலுக்கு உடலையும் மனதையும் ஒருமைபடுத்தும் பயிற்சிமுறைகளில் ஒன்று தான் யோகம். யோகா என்ற சொல்லின் அர்த்தமே ஒருமைப்படல் (Union) என்பது தான். யோகம் வேதத்துடன் சம்பந்தப்படாத தனி ஒரு அங்கம் என்று நீங்கள் கூறியது தவறு.

நான் அதைமட்டும் சொல்லவில்லை. நாம் "யோகக் கலையின் அங்கமான தியானத்தை" கூட சரியாக அறிந்துகொள்ளவில்லை எனவும் நினைக்கிறேன்.

வேதத்தின் கருப்பொருளான சாங்கியா (Philosophy) வின் பிரயோக சூத்திரம் தான் யோகா. பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டது. 4 பிரிவுகளும்196 சூத்திரங்களும் அடங்கியது. யோகம் 8 படிகள் கொண்டது அதில் மூன்றாம் படி தான் (யோகா)ஆசனம்

வேதங்களுக்கு முதலும் "யோகக் கலை" இருந்திருக்க வேண்டும். பதஞ்சலி எழுதினார் என்றால் அவர் தன்னால் மீள நினைக்கக்கூடிய ஒன்றையே எழுதினார். தன் "பழைய" அறிவின்மூலமே எழுதினார் என்றாகிறது.

Yes you are right! how can you find The Real with unreal knowledge? According to your quote all the science knowledge is unreal as it is merely an accumulation of past experiences. If so how the science can find The Real with its unreal knowledge.?

முதலில், "அறிவு" என்பதை "உண்மை" என்கிறோமா? அறிவு என்பது பழையா அனுபவங்கள், அதாவது "பழைய" என்றே கூறுகிறோம். உண்மை என்பது பழையதல்ல. அது காலம் சார்ந்து இருப்பதல்ல. உண்மை ஒவ்வொரு கணமும் "புதியதாக" இருக்கிறது. நான் இன்னமும் "reality" (இதற்கு மிகச்சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. நண்பர்கள் யாராவது திருத்தின்னால் மிகவும் நன்று), "உண்மை", "கூர்ந்த அறிவு" என்பனபற்றி எனது கேள்விகளை இன்னமும் எழுதிவிடவில்லை. அதற்கான சரியான நேரம் இதுவல்ல என நினைக்கிறேன். இவற்றை பின்பு கருத்தாட எடுக்கலாம்.

உங்கள் கூற்று சரிதான். வெளியில் இருந்து பெறும் அறிவை (knowledge) வைத்து உள்முகமாக தேடல் எப்படி சாத்தியம். ஞானம் (Wisdom) உள்ளிருந்து வெளிவருவது. அறிவு (Knowledge) வெளியிருந்து உள்செல்வது. இந்த உள்முக தேடலுக்கு உடலையும் மனதையும் இன்னொரு Dimension க்கு அழைத்து செல்வது தான் வேதங்கள் சொல்லும் இந்த பயிற்சிகளின் நோக்கம்

ஆமாம். ஞானம் என்பது அறிவு என்பதிலும் வேறுபட்டது. நாமெல்லாம் "அறிவின்" துணைகொண்டுதான் வாழ்கிறோம். ஆனால் "ஞானம்" என்பதை அடிப்படையாக வைத்து வாழ்வதே வாழ்க்கை.

உங்கள் பெயரையே பாருங்கள் "ஈழத்திருமகன்" இந்த பெயரிலேயே Image Creation முயற்சி மறைந்திருப்பது உங்களுக்கு புரியவில்லையா? :o

The impression I get about you is, you got a shriek in search of the truth, and of course you have gathered lots of knowledge in search of the truth, which I appreciate. But again, the knowledge without application is useless and too much of information is sometimes confusing too. Sometimes they tend to put you in a strong belief system and in an inescapable mental frame work. I think you should try to realize that your mindset and thinking pattern have been overly influenced by that belief system.

ஈழத்தில் பிறந்த அத்தனை பேரும் "திரு" என அழைக்கப்படக் கூடியவர்களே. :lol::D

தயவுசெய்து என்னைப்பற்றி நினைப்பதை தவிர்த்துவிடுங்கள். அதனால் எந்தப் பிரையோச்சனமும் ஏற்படப்போவதில்லை.

ஒவ்வொரு மனிதனுடனான தொடர்பாடல்களிலும் நாம் சேர்துவைக்கும் விம்பங்கள் எவ்வாறான விகாரங்களை ஏற்படுத்துகிறது என்பதை உங்கள் எல்லோருடனும் கலந்துரையாடுவதே என் நோக்கம். அதிலும் சிறிது ஆழமாக சென்று "உண்மை" என்பது என்ன என்பதை உங்களுடன் சேர்ந்து சிந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

ஏற்கனவே பலதடவைகள் குறிப்பிட்டுவிட்டோம் - இது தமிழில் கருத்தாடுவதற்கான களம். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்க்கவும். இந்தத் தலைப்பில் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் கருத்து எழுதப்பட்டால் - அந்தக் கருத்து முழுவதும் நிர்வாகத்துக்கு நகர்த்தப்படும். புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே பலதடவைகள் குறிப்பிட்டுவிட்டோம் - இது தமிழில் கருத்தாடுவதற்கான களம். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்க்கவும். இந்தத் தலைப்பில் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் கருத்து எழுதப்பட்டால் - அந்தக் கருத்து முழுவதும் நிர்வாகத்துக்கு நகர்த்தப்படும். புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆமாம் வலைஞன். !!

தவறு என்னுடையதும்தான். இறுதியாக பதிந்த கருத்துக்களில் முடிந்தளவு ஆங்கில வசனங்களை மாற்றி தமிழில் எழுதிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது ஏனையனவற்றை திருத்தி எழுதிவிடுகிறேன்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் எம் உறவுகள் வருவதால், நாம் ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்த்துக் கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • 10 years later...

ஈழத்திருமகன்,
பத்து வருடங்களிற்கு முன்னர் நிகழ்ந்த இந்த உரையாடலை எதேச்சையாக இன்று பார்க்க நேர்ந்தது.  இந்தப் பத்து வருடங்களில் இம்முனையில்உங்களின் தேடல் எவ்வாறு பயணித்தது என்று அறிய ஆவல். நேரம்கிடைப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு உரையாடல் யாழ் களத்தில் நடந்ததா என்று ஒரு கணம் வியப்பு ஏற்பட்டது. ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்னுமொருவன் மற்றும் கிருபன் !!

ம்ம். 

நாம் பத்து வருடங்களை கடந்து வந்துள்ளோம்.  அவை இலேசான பாதைகள் அல்ல. அப்போதெல்லாம் தேடல்கள் நிறைந்த வெளியும் ஆர்வமிக்க இளையோரும் ஒன்றாக கருத்தாடிய களமிது. எனது ஆர்வ மிகுதியால் எழுதத்துணிந்தேன். இப்போது பார்க்கும் போது எனக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைத்தது என வியக்கின்றேன். மனதின் வேகம் ... உடல் எழுதியது.

2008இன் பின்பு, நான் களத்தின் வாசகனாக மட்டுமே வந்து போகிறேன். மிக அரிதாக எழுதுவதுண்டு. ஆனாலும் எனது தேடல்கள் என்னை விட்டு போகவில்லை. இந்த பத்து வருடங்களில் கண்டுகொண்ட, தரிசித்த விடயங்கள் என்னை மென்மையாக்கி இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். 

இயற்கை எனும் பேரதிசயத்தை ஒவ்வொரு கணமும் வியப்பதை தவிர வேறென்ன வேலை. புரியும் என்று நினைக்கிறேன் நண்பர்களே.

 

அன்புடன்

- ஈழத்திருமகன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.