Jump to content

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு கிடைத்த உயர் அரச விருது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு உயர் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் இன்று அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை அவர் தன்வசப்படுத்திக் கொண்டார். 

ஆதுரசாலைக்கு விருது

சிவலிங்கம் ஆருரன் என்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரே தான் எழுதிய நூலுக்காக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார் . 

 ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலாக விருது வழங்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு கிடைத்த உயர் அரச விருது | Highest Recognition For A Tamil Political Prisoner

 

கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/highest-recognition-for-a-tamil-political-prisoner-1666971258

ஒரு புத்தகம் வாசிக்கவே மனம் இல்லாமல் இருக்கும் வேளையில் அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் 8 புத்தகங:கள் எழுதி விருதும் வாங்கிய ஆருரனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறகடித்து பறக்கவேண்டியவர்களின் சிறகை ஒடித்து வேடிக்கை பார்ப்பது அவர்களின் குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது. அங்காலை இந்தியா அப்பாவிகளை சிறையிலடைத்து பழிவாங்குது, இதுக்கு அஹிம்ஸை நாடு என்று பெயர் வேற, இங்கு புத்ததர்மம் தழைத்தோங்குது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆருரனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் அரசியல் சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.

 சிறையில் இருந்து, எட்டுப் புத்தகங்களை எழுதியதே ஒரு சாதனை.
ஆரூரன் எழுதிய… “வலசைப் பறவைகள்” என்ற புத்தகமும்,
பெரும் வரவேற்பை பெற்றது என நினைக்கின்றேன். பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதி பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது!

தமிழ் அரசியல் கைதி பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது!

இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் அரசியல் கைதி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது கிடைத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் அதில் ஆதுரசாலை என்ற தமிழ் நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1307699

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் உள்ள சிவலிங்கம் ஆரூரனின் படைப்பிற்கு அரச இலக்கிய விருது

By DIGITAL DESK 5

29 OCT, 2022 | 02:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனின் படைப்பிற்கு அரச இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.சிறையில் இருந்தவாறு இவர் எழுதிய ஆதுரசாலை சுய நாவல் இலக்கியத்துக்கு அரச இலக்கிய விருது கிடைக்கப்பெற்றது.

2022ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது  தமிழ் மொழியில் படைப்பிற்காக '2022 சாகித்திய ரத்னா விருது' யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாக கொண்ட திரு.ஞானசேகரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஆங்கில மொழி படைப்பிற்கான 2022 சாகித்திய ரத்னா விருது பேராசிரியர் கமினி ஜயசேகரவிற்கும்,சிங்கள மொழி படைப்பிற்கான சாகித்தியரத்னா விருது பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுருவிற்கும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

307834738_1551626601952208_6417171591297

65ஆவது வருட அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (28) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

310413731_864421554580045_81230922610582   

2006 ஆம் ஆண்டு கொழும்பு பித்தளை சந்தியில்   அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குல் சம்பந்தமாக சந்தேகநபராக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆருரன் எழுதிய 'ஆதுரசாலை' நூலுக்கு சுய நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.

307108827_3323185061254432_4715353744680

மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியான இவர்இ பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரும் போது கைது குறித்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேக  நபராக கைது செய்யப்பட்டார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் ஏழு தமிழ் மொழி மூலமான நூல்களையும்,ஒரு ஆங்கில மொழி நூல் அடங்களாக 8 நூல்களை எழுதியுள்ளார்.2016 இலும் சிறந்த தமிழ் நாவலுக்கான அரச சாஹித்திய விருதையும் வென்றார்.

மெகசின் சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்கவின் பாதுகாப்புக்கு மத்தியில்  இந்த விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/138644

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆருரனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

(தவறுக்கு  வருந்துகின்றேன் - நன்றி  ஏராளன்)

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய காரணங்களுக்காக அவர்களால் கைது செய்யப்பட்டு, அவர்களது சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, இலங்கை அரசால் வழங்கப்படும் அங்கீகாரத்திற்கு நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைகிறோம் எனும்போது, இது எங்கள் சிந்தனையில்  எங்கோ முரண்பாடு இருப்பதாக உணர்கிறேன். 

(ஆரூரானின் திறமைக்கான அங்கீகாரமாக இதைக் கொள்ளலாமா ?)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

(ஆரூரானின் திறமைக்கான அங்கீகாரமாக இதைக் கொள்ளலாமா ?)

ஆரூரானின் திறமைக்குத்தான்… வாழ்த்துகிறோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:
16 minutes ago, Kapithan said:

(ஆரூரானின் திறமைக்கான அங்கீகாரமாக இதைக் கொள்ளலாமா ?)

ஆரூரானின் திறமைக்குத்தான்… வாழ்த்துகிறோம்.

இதில் என்ன சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஆரூரானின் திறமைக்குத்தான்… வாழ்த்துகிறோம்.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இதில் என்ன சந்தேகம்?

உங்கள் நோக்கங்களில் சந்தேகம் இல்லை. ஆனால் ஆரூரனை சிங்களம் அங்கீகரித்ததன் பின்னர் வாழ்த்தும்போது கொஞ்சம் நெருடலாக உள்ளது. அம்புட்டுதே.

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

 

உங்கள் நோக்கங்களில் சந்தேகம் இல்லை. ஆனால் ஆரூரனை சிங்களம் அங்கீகரித்ததன் பின்னர் வாழ்த்தும்போது கொஞ்சம் நெருடலாக உள்ளது. அம்புட்டுதே.

😉

அவர்களது வாழ்த்துக்களுக்கப்பால் சிங்களத்தின் சிறையில் இருந்து 8 புத்தகங்களை எழுதியிருக்கிறாரே அதுக்காகவே வாழ்த்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியான இவர்இ பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரும் போது கைது குறித்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேக  நபராக கைது செய்யப்பட்டார்.

அவர் எழுதிய புத்தகங்கள் எதைப்பற்றியது என்று இங்கு குறிப்பிடப்படவில்லை, சிங்களம் விருது கொடுக்குது. கூட்டில் அடைபட்ட புலி அடைத்தவரை கடித்து குதற முயற்சிக்கும், அதனது வீரம், ஆற்றல் புடுங்கியெறியப்பட்ட பின் தான் வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கும்! ஆரூரனை இங்கு புலியாக கருதவில்லை,  தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக இத்தனையாண்டுகள் தன் கல்வியை, எதிர்காலத்தை கம்பிக்குள் தொலைத்துவிட்டு துளிர் விட துடிக்கும் ஒரு தளிராகவே நான் கருதுகிறேன். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரூரனின் முயற்சிக்கும் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தலை வணங்குகின்றோம். பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

மெகசின் சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்கவின் பாதுகாப்புக்கு மத்தியில்  இந்த விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

இனியாவது அவரை வெளியில் விடுவிப்பார்களா?

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

அவர் எழுதிய புத்தகங்கள் எதைப்பற்றியது என்று இங்கு குறிப்பிடப்படவில்லை, சிங்களம் விருது கொடுக்குது. கூட்டில் அடைபட்ட புலி அடைத்தவரை கடித்து குதற முயற்சிக்கும், அதனது வீரம், ஆற்றல் புடுங்கியெறியப்பட்ட பின் தான் வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கும்! ஆரூரனை இங்கு புலியாக கருதவில்லை,  தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக இத்தனையாண்டுகள் தன் கல்வியை, எதிர்காலத்தை கம்பிக்குள் தொலைத்துவிட்டு துளிர் விட துடிக்கும் ஒரு தளிராகவே நான் கருதுகிறேன். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்!

 

 ஆரூரன் எழுதிய நூல்கள் போரின் பாதிப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த எழுத்துக்கள். 

3 hours ago, பெருமாள் said:

இனியாவது அவரை வெளியில் விடுவிப்பார்களா?

அவர் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்கிறார். தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து மேடைக்கு வந்ததே அவருக்கு மாற்றம் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வழக்கறிஞர்கள் இருந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் தமிழர்கள்.

வாழ்த்துக்கள் ஆரூரன்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.