Jump to content

நோர்டிக் கல்வியும் சமூகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோர்டிக் கல்வியும் சமூகமும்

விஜய் அசோகன்

லகில் மக்கள்நல அரசுகளுக்கான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுபவை நோர்டிக் நாடுகள். நார்டிக் என்றால் வடக்கு. ஐரோப்பாவின், அட்லாண்டிக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளை ‘நார்டிக் நாடுகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் மேலும் சில தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிராந்தியம் இது. 

இந்த நாடுகள் சமூகச் சூழலில் ஒரு பொதுவான பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன. பொது கல்வி, பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை; உயரிய தனிநபர் சுதந்திரம், மதிப்புக்குரிய சமூக நல்லிணக்கம் என்று மேம்பட்ட ஜனநாயகத்துக்கான முன்னுதாரணமாக உலக நாடுகளால் பார்க்கப்படும் நாடுகள் இவை.

இங்குள்ள கல்விச் சூழல் மிகப் பிரமாதமானது. பல நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய சமூகத்தில் உண்டாக்க வேண்டிய மாற்றங்களுக்காக இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டுச் செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க கல்விச் சூழலை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவே இந்தத் தொடரை வெளியிடுகிறோம். கட்டுரையாளர் விஜய் அசோகன் இந்தப் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதோடு, இந்த நாடுகளில் பணியாற்றுபவரும்கூட. தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தத்துக்கு இத்தொடரும் உதவட்டும்!

பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால், எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்!

இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.

இன்றைய நார்வேயின் நிலப்பரப்பானது, டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் 400 வருடங்களுக்கு மேலாகவும், ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளாகவும் இருந்தது. அதேபோல, பின்லாந்து 600 ஆண்டுகளுக்கும் மேலாக  சுவீடனின் கட்டுப்பாட்டிலும், 100 ஆண்டுகள் ரஷ்ய நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஆயினும்கூட நார்வே, பின்லாந்து இரண்டும் தனித்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பிருந்தே கல்வி, தாய்மொழி, சமூகக் கட்டமைப்பு, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு என முக்கியமான சில விஷயங்களில் தத்தமது தனித்தன்மையினை நிலைநாட்டுவதில் ‘விடாப்பிடியான’ உறுதியுடன் இருந்தனர். 

நோர்டிக் நாடுகள்

ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மூன்றும் இணைந்த பகுதிகளை ‘ஸ்காண்டினேவியன் நிலம்’ என்றும் வகைப்படுத்துகின்றனர். இந்தோ-ஐரோப்பியக் கூட்டில் இருந்துவந்த ஜெர்மானிய மொழிப் பிரிவின் கிளை மொழிகள் ‘ஸ்காண்டினேவியன் மொழிகள்’ (ஸ்வீடிஷ், டேனீஷ், நோர்வேஜியன்) ஆகும். 1950களுக்குப் பின்னர், ஸ்காண்டினேவியன் கூட்டில், ஐஸ்லாந்தும் பின்லாந்தும் இணைந்த பின், நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 

நோர்டிக் நாடுகள் மொழிகளிலும் வரலாற்றிலும் பிணைந்திருப்பதுபோல, கல்வித் துறை வளர்ச்சியிலும் பல காரணங்களால் ஒருங்கிணைந்தவர்களே!  கல்வியுரிமை, தாய்மொழிக் கல்வி, சமத்துவக் கல்வி ஆகியவற்றையும் மனித உரிமையின் அடிப்படையாயாக வகுத்துவைத்திருக்கின்றன இந்த நாடுகள்.

உலகின் முன்னணிப் பட்டியலில் நோர்டிக் நாடுகள்

உலகின் தலைசிறந்த கல்வியைக் கொடுக்கும் நாடுகளின் முதன்மைப் பட்டியலில் மட்டுமல்ல, ஆண்-பெண் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட பல சமூக மேம்பாட்டு அளவுகோல்களிலும் முதன்மையான இடத்தில் இருப்பதால், உலகின் மகிழ்வான நாடுகளில் இந்த நாடுகள் முன்வரிசையில் இருக்கும். 2022இல் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதல் இடம். டென்மார்க் இரண்டாம் இடம். ஐஸ்லாந்து மூன்றாம் இடம். ஸ்வீடன் ஏழாம் இடம். நோர்வே எட்டாம் இடம்.  

உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையிலும் இந்த நாடுகள் முதன்மையில் இருக்கும். உலகின் சமூக நலத் திட்டங்களுக்கான மேற்கோள்கள் இந்த நோர்டிக் நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன.

நோர்டிக் சமூக உருவாக்கமும் கல்வித் துறையும் 

ல்வித் துறையை மனித உரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திய நாடு என்பதால், தாய்மொழிக் கற்றலைத் தங்கள் நாட்டில் வாழும் எல்லா நாட்டினருக்கும் எல்லா இனத்தினருக்கும் மனித உரிமை அடிப்படையிலான ‘மொழியியல் மனித உரிமை’ (Linguistic Human Rights) என இந்நாடுகள் வகைப்படுத்தியுள்ளன.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமத்துவக் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்புள்ள கல்வி எனும் கொள்கையை இவை கொண்டுள்ளன.

அனைவரையும் உள்ளடக்குதல், சமூக நீதி இந்த இரு விஷயங்களையும் ஒரு ஆசிரியரானவர் ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்கும்போதே இந்நாடுகளில் அளிக்கப்பட்டுவிடுகின்றன. நோர்டிக் நாடுகளின் கல்வித் துறை வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றும் இரண்டு காரணிகள் 1) தொடக்கக் கல்வியும் 2) ஆசிரியர் பயிற்சிக் கல்வியும்.

அரசியலும் பாலின சமத்துவக் கல்வியும்

நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அடுத்த செய்தி, அரசியல். ஆம், கல்வியும் சமூக அரசியல் பாடங்களும் பிரிக்க முடியாதவை. பின்லாந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பாக, மாணவர்களுக்காக அரசியல் வகுப்புகள், விலைவாசி முதல் சுகாதாரக் கட்டமைப்பு வரையிலான விவாதங்கள், அதனைத் தொடர்ந்து மாணவத் தேர்தல், வாக்குப் பிரச்சாரங்கள் எனச் செயல்படுத்தப்படுகிறது. 

1944இல் இரண்டாம் உலகப் போர் காலகூட்டத்தில் அமைந்த பின்லாந்து கூட்டணிக் கட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் அரசியல் கல்வி தொடர்பில் விவாதித்தது. கல்வித் துறை வடிவமைப்பில் அரசியல் குழுவினரின் வழிகாட்டலை இது உறுதி செய்தது. ‘கல்வி – சமூகம் - அரசியல்’ என்ற இணைப்பை இது கல்வித் திட்டத்தில் கொண்டுவந்தது. இதன் தாக்கம் இன்றைய சமூக மேம்பாட்டில் பிரதிபலிக்கிறது

அடுத்தடுத்தக் கட்டுரைகளில் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்ப்போம்!
 

https://www.arunchol.com/vijay-ashokan-on-nordic-education-and-society

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மொழியை எப்படிக் காத்தது ஃபின்லாந்து?

விஜய் அசோகன்
 23 Oct 2022, 5:00 am
 
 
 

spacer.png

 

மனித உரிமைகளின் அடிப்படையில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது கல்வி. அதோடு, மானுடவியல், சமூகவியல், பொருளியல் மேம்பாடுகளுக்கான அச்சாணியாகவும் அது திகழ்கிறது. பாலின சமத்துவத்தின் கருவியாகவும், சமூக அமைதிக்கான அச்சாரமாகவும், தனி மனிதர்களின் வாழ்வியல் மேம்பாடுகளுக்கானதாகவும் கல்வியே மாபெரும் சக்தியாக விளங்குகிறது!

இப்படித்தான் விவரிக்கிறது ‘பன்னாட்டுக் கல்விக் கூட்டாண்மை’யின் வரையறை.

ஐக்கிய நாடுகள் சபையில் 1948இல் நிறைவேற்றப்பட்ட 26வது சட்டப் பிரிவின்படியும், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின்படியும், “அனைவருக்கும் கல்வியை வழங்குவதும் அனைவரும் கல்விப் பெறுவதும் அடிப்படை உரிமை. கல்விக்கான முதலீடே எல்லாவற்றையும்விட சிறந்த முதலீடு!”

ஏன் இந்தச் சுட்டல்?

இது போன்ற விஷயங்களை ஏன் இங்கே சுட்ட வேண்டியிருக்கிறது என்றால், நாம் கல்வி சார்ந்து செய்யும் ஒவ்வொரு செலவின்போதும் இதை நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படியான மதிப்பீடுகளைக் கொண்டு செயல்பட்டதால்தான் ஃபின்லாந்து இன்று உலகம் பேசும் கல்வி கேந்திரமாக நிற்கிறது. 

தம் நாட்டின் கல்வித் துறைச் செயல்பாடுகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறு சிறு மாற்றங்களைப் படிப்படியாக நிறைவேற்றினார்கள் ஃபின்லாந்து நாட்டினர். இன்றும் இந்த மாற்றங்கள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் வேகமாகத் தொடர்கிறது.

ஃபின்லாந்து ஏற்கனவே சிறப்பான கல்வியை வழங்கி உலகின் முதன்மை இடத்தில் இருக்கும் நிலையில் ஏன் மாற்றங்களை உள்ளடக்கிக்கொண்டே ஓடுகிறார்கள்? இதற்கு அவர்கள் சொல்லும் பதில்: “உலகம் மாறிக்கொண்டே செல்கிறது. உலக ஓட்டத்தின் வேகத்தோடு நாமும் இணையாவிட்டால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சுணங்குவதோடு, நாட்டின் வளர்ச்சியும் சுருங்கிவிடும்!”

மதமும் கல்வியும்

ஏனைய கிறிஸ்துவ / ஐரோப்பிய நாடுகளைப் போல, ஸ்வீடனிலும் பின்லாந்திலும் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 1850 வரை, கல்விச் செயல்பாடுகளின் கட்டுப்பாடு தேவாலயங்களிடம்தான் இருந்தது. 15ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான், பைபிளை வாசிப்பதற்கான கல்வியறிவு எல்லா குடிநபர்களுக்கும் உரியதானது. ஃபின்லாந்தும் அனைவருக்குமான கல்வியை இந்தப் பின்னணியில் இருந்தே தொடங்கியது. 

தேவாலயங்களில் திருமணம் செய்வதற்கான அடிப்படைத் தகுதியாக கற்றல் அறிவுச் சான்றிதழ் இருந்தது. 

மார்டின் லூதுரிடம் கற்றவர் பேராயர் மைக்கேல் அகிரிகோல. பிற்காலத்தில் பைபிளை பின்லாந்தின் தாய்மொழியான ஃபின்னிஷ் மொழியில் கி.பி.1548இல் இவர்தான் கொண்டுவந்தார். அதுவரை சமூக மொழியாக ஃபின்னிஷ் தொடர்ந்திருந்தாலும், ஃபின்னிஷ் மொழியைப் பேசுவது இரண்டாம் தரமாகவே பார்க்கப்பட்டது. நிர்வாக மொழியாக ஸ்வீடிஷ், பேராலய மொழியாக லத்தீன் இருந்துவந்தன.

வீட்டு வழக்கிலும், கதை கூறலிலுமே இருந்த ஃபின்னிஷ் மொழிக்கு, மைக்கேல் அகிரிகோலவின் படைப்பின் வழி ஒரு திறப்பு ஏற்பட்டது. 

ஆனாலும், கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக ஸ்வீடன் நாட்டின் ஆதிக்கத்தில் பின்லாந்தின் பெரும் பகுதிகள் இருந்ததால், தொடக்கக் கல்வி மொழியாக ஸ்வீடிஷ்; உயர்கல்வி மொழியாக கிரேக்கம், லத்தீன் ஆகியவையே தொடர்ந்தன.

கற்பித்தலுக்கான உத்வேகம் 

குழந்தைகளுக்கான கற்றல் திறன், குறிப்பாக, வாசிப்புத்திறனை உருவாக்குவதில் பெற்றோர்களுக்குத்தான் பொறுப்பு உண்டு என்கிற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. குழந்தைகளின் திறனை சோதனை செய்யும் பணியை பாதிரியார்கள் மேற்கொண்டனர்.

17ஆம் நூற்றாண்டில் இருந்து, கிறிஸ்தவப் பேராலயங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளு ஆசிரியர்களும் கிராமங்கள் தோறும் குழந்தைகளின் கற்றல்திறன் வளர்ப்புக்காக நியமிக்கப்பட்டனர். எழுத்து, வாசிப்பு, கணக்குகள் கற்றலோடு, கிறிஸ்துவம் தொடர்பான அடிப்படை புரிதல்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வகையில் அந்தக் காலகட்டத்தின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கற்பித்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

இத்தகைய மாற்றங்களால், 18ஆம் நூற்றாண்டில் 50% பேர்; 19ஆம் நூற்றாண்டில் 80%-90% பேர் எனும் அளவுக்கு கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஃபின்லாந்து சமூகத்தில் அதிகரித்தது.

கல்வி மொழியும் விடுதலை உணர்வும்

1809 வரை ஸ்வீடிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தை, ரஷ்யப் படை கைப்பற்றியது. ரஷ்ய அரசில் ஃபின்னிஷ் அமைச்சகம் என்று ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, அங்கிருந்து ஆட்சி நிர்வாகம் கவனிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால், ஃபின்லாந்து கல்வி முறையானது ரஷ்யாவின் கல்வித் துறைக் கோட்பாட்டின்படி இயங்கலானது. இப்போது ஸ்வீடிஷ் மொழியில் இருந்து ரஷ்ய மொழியாகக் கல்வி மொழி மாற்றமடைந்தது. 

இப்படி ஸ்வீடிஷ், ரஷ்ய மொழிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பின்லாந்தின் ஃபின்னிஷ் மொழியைக் காப்பாற்றியதில் பின்லாந்தின் ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஃபின்லாந்து சமூகத்தில், கதைசொல்லிகளுக்கு முக்கியமான இடம் இருந்தது. அவர்கள் ‘கலெவாலா’ என்றொரு காவியத்தை ஃபின்னிஷ் மொழியில் சொல்வார்கள். மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்கள் சொல்லும் கதைகள் வழி இந்த ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் ஃபின்னிஷ் மொழி உயிர்த்திருந்தது. ஆசிரியர்களும் இப்படி கதைசொல்லிகளாகச் செயல்பட்டுவந்தனர்.

இதன் பின்பு படித்தவர்கள் மத்தியில், ஃபின்னிஷ் மொழிப் பேச்சுவழக்கத்தை உருவாக்க ஸ்னேல்மென் உள்ளிட்டோர்  போராடினர். சமூக மொழியாக மட்டுமில்லாமல், கல்வி மொழியாகவும் ஃபின்னிஷ் இருக்க வேண்டும் என்ற குரல்களும் எழலாயின. 

ஃபின்னிஷ் தேசிய உணர்வெழுச்சிப் போராட்டக் காலங்களில் ஒலிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, “நாங்கள் ஸ்வீடிஷ் இல்லை, ரஷ்யர்களாக மாற முடியாது, ஆகவே நாங்கள் ஃபின்னிஷாக மட்டுமே இருக்க முடியும்!”

மொழிக்கு முக்கியத்துவம்

ஆகையால், ஃபின்லாந்து தாங்களே தங்களை ஆண்டுகொள்ள ஆரம்பித்த பின் உருவாக்கிய முக்கியமான மாற்றங்களில் ஒன்று, ஃபின்லாந்து மொழியை ஃபின்லாந்து நாட்டின் ஆட்சிமொழியாக்கி சட்டம் இயற்றியது ஆகும். தாய்மொழிவழிக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் நிலைநாட்டினர். இதன் பின்னரே, தாய்மொழிக் கல்வி அடிப்படையில் ஸ்வீடிஷ் மொழிக்கும் ரஷ்ய மொழிக்கும் மாற்றாக ஃபின்னிஷ் மொழி பள்ளிக்கூடங்களில் இடம்பெறலாயிற்று. 

ஒரு சமுகத்தில் தாய்மொழிக் கல்விக்கும் தேசிய இறையாண்மை உணர்விற்கும் உலக வரலாற்றில் எப்பொழுதும் பெருந்தொடர்பு இருக்கும். ஃபின்லாந்து வரலாற்றிலும், ஸ்வீடிஷ் ஆக்கிரமிப்பும் ரஷ்ய ஆக்கிரமிப்பும் கற்றுத் தந்தப் படிப்பினையின் பின்னர், மொழியையும் தனித்த பண்பாட்டையும் காக்க வேண்டிய சூழலுக்கு நகர்ந்திருகிறார்கள்.

தேசிய உணர்வெழுச்சி மலர்ச்சிப் பெற்ற, ஃபின்னிஷ் மொழி ஆட்சிமொழியாக்கப்பட்ட, அதே காலக்கட்டத்தில்தான், ஃபின்லாந்து கல்வித் துறையின் ஏனைய சீர்த்திருந்தங்கள் நடக்கலாயின.

https://www.arunchol.com/vijay-ashokan-on-finland-education-history

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிச் செதுக்கப்பட்டது பின்லாந்தின் கல்வித் துறை

விஜய் அசோகன்

பின்லாந்தின் நிகழ்கால வெற்றிக்கு சென்ற ஒரு நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட பல்வேறு கல்வியியல் சீர்திருத்தங்களே முன்னணிக் காரணங்களாக அமைந்தன. 1910இல் விவாதிக்கப்பட்டு, 1920லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மிக முக்கியமான கல்வித்திட்டம், ‘சமூகப் பொதுமையாக்கம்’ (Socialization) ஆகும். அதாவது, அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கற்கும் சூழல் மற்றும் அவரவர் வாழும் நிலப்பரப்பு சார்ந்த கல்விச் சூழல். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு வகுப்பறையும் ‘சிற்றுருச் சமூகம்’ (miniature society). மாணவ, மாணவிகளுக்கான மெய்வலித் தண்டனைகள் (physical punishment) முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. 

பின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும், யூனோ சைக்னெயெஸ்  - 1863 முதல் 1869 வரை தலைமை கல்வித் துறை ஆணையராக இருந்தபோது சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்து, தொடக்கக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் குறித்த ஆய்வுகள் செய்துவந்தார். 

பின்லாந்து கல்வியின் தொடக்கநிலை வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு அன்றைய கால ஜெர்மானியத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்று அவர் கணக்கிட்டார். ஜெர்மன் அறிஞர்களான ஹெர்பர்ட், சில்லர் மற்றும் சுவிட்சர்லாந்து அறிஞரான பெசுடாலோசியன்  வரையறுத்த கல்வியியல் கோட்பாடுகளின் வெற்றிக் களமாக பின்லாந்தின் 20ஆம் நூற்றாண்டுக் கல்வி இப்படியாக மாறியது. சமூக வளர்ச்சிக்கான தனிமனிதர்களின் மேம்பாட்டினை வடிவமைப்பதே கல்வி என்ற முடிவை நோக்கி பின்லாந்து சென்றது. 

வார்த்தைகள், எழுத்துகள், வரைபடங்களைக் காட்டிலும், செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு குழந்தைகளின் தனித்த திறன் பாதிக்காத வகையில் வகுப்பறைக் கற்றல் கூட்டுச் செயல்பாடாக மாற வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர். “குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை அவர்களே திட்டமிட்டு, பதில்களை அவர்களே தேடும் விதமாக வகுப்பறைப் பயிற்சிகள் இடம் பெற வேண்டும், மாறாக, முன்பே தயாரிக்கப்பட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கருவிகளைப் போல குழந்தைகள் இருக்கக் கூடாது” என்றார் பெசுடாலோசியன்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்  

பின்லாந்தின் கல்வித் துறை வளர்ச்சியில் அடுத்து பெருந்தாக்கம் செலுத்தியவை, ஆசிரியர் பயிற்சி! 

சிறந்த ஆசிரியர் பயிற்சி வகுப்புகளால் உருவாக்கப்படும் தரமான ஆசிரியர்களாலேயே தலைசிறந்த கல்வியை வழங்க முடியும் என்பது பின்லாந்தின் திடமானக் கோட்பாடுகளில் ஒன்று.

பின்லாந்து கல்வித் துறைச் சார்ந்த பல்வேறு ஆய்வுகள் இருப்பினும், அதனை அப்படியே ஏனைய நாடுகள் பின்பற்ற முடியாததற்கான முதன்மைக் காரணம், பின்லாந்தின் பயிற்சிக் கல்லூரிகள் வழியே உருவாக்கப்படும் பொறுப்புணர்வுகொண்ட, தொடர் கற்றலுக்கு உட்படும் ஆசிரியர்கள்தான் என்று பல்வேறு கல்வியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

அருகமைப் பள்ளிகள் எப்படி எல்லா குழந்தைகளும் வந்தடைய வழிவகுத்தனவோ, அப்படிப் பரவலாக பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆசிரியர்கள் உருவாகும் வண்ணம் அருகமை ஆசிரியர் கல்லூரிகளும் அமைந்தன. இது பின்லாந்தின் பெரும்பாலோருக்கும் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வாய்ப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக, பல்வேறு மகளிர் கல்வியியல் கல்லூரிகளும் உருவாக்கப்பட்ட பின், பின்லாந்தின் ஆண்-பெண் சமத்துவ மேம்பாடும் இதனால் வளர்ந்தது.

மிக முக்கியமாக, “வகுப்பறை ஆசிரியர்களே நாட்டின் பொறுப்புள்ள குடிமகக்களுக்கான நடைமுறை எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்” என்றும் “நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் அடுத்தத் தலைமுறைகள் அறிந்து நற்சிந்தனைக் குடிமகனாக உருவாகிவருவதற்கான அடிப்படையை விதைப்பதே ஆசிரியர்களின் கடமை” என்றும் பின்லாந்து தன் ஆசிரியர்களுக்கான அடிப்படையை வகுத்தது.

மத வகுப்புப் பாடத்திட்ட மாற்றங்கள்

அடுத்து, மதங்கள் தொடர்பான வகுப்புகளுக்கான நேரம் குறைக்கப்பட்டது. 1925இல் மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு இருந்த 170 மணி நேரத்தில் 20 மணி நேரம் மத வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது, 1994இல் இது 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. 1970இல் மத அடிப்படைப் பாடத்திட்டத்தை பள்ளிகளே வகுக்க வேண்டும், தேவாலயங்கள் வகுக்கக் கூடாது என்ற முக்கியமான பரிந்துரையும் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த சீர்திருத்தம் மேலும் முக்கியமானது. பல்வேறு நாட்டினரும், மொழியினரும், மதத்தினரும் பின்லாந்துக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு, எல்லோருக்கும் பொதுவாக ஒரு மத வகுப்பு என்பது ழிக்கப்பட்டது. அனைத்து நோர்டிக் நாடுகளிலும் பல மதங்களைப் பற்றின அடிப்படை புரிதலைத் தரும் பாடங்கள் வகுக்கப்பட்டன. எல்லோரையும் இணைத்தும், எவர் ஒருவர் மீதும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளங்களையும் திணிக்காதபடியும், வகுப்பறைப் பாடங்கள் மாற்றப்பட்டுவிட்டன.

ஆசிரியர் பயிற்சிகளின் அடிப்படை

அன்றைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரையில், பின்லாந்து ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் பல்வேறு படிநிலை மாற்றங்களையும் உள்ளடக்கிவருகின்றனர். ஓர் ஆசிரியர் உருவாவதற்கான அடிப்படையாகவும் பாடவேளைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதியாகவும் இருக்கும் சில கூறுகளை மட்டும் கீழே தருகிறேன்.

  1. மாணவ, மாணவிகள் தன் இயல்பில் கற்க அனுமதிக்க வேண்டும், அவரவருக்கான இலக்குகளை அவர்களையே தேர்ந்தெடுக்கப் பழக்க வேண்டும்.
  2. மாணவ, மாணவியரின் பள்ளிக்கு வெளியேயான வாழ்வியலோடு ஒப்பிட்டு வகுப்புத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
  3. மாணவ, மாணவியரின் தனித்திறனை அவரவர் வாழ்க்கைச் சூழல், இயற்கைச் சூழல், சமூகச் சூழல் ஆகியவற்றோடு கலந்து சிந்தித்து, அவரவர் தனித்துவத்தை வளர்க்க வேண்டும்.
  4. வகுப்பறையினுள் ஆசிரியரானவர் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கசக்தியாக திகழ வேண்டும். வகுப்பறைச் சமத்துவம், அமைதியைப் பேணுதலைச் சாத்தியப்படுத்தும் முகமாக அவர் நிலைக்க வேண்டும்.
  5. ஆசிரியர்-பெற்றோர் உறவு மேம்பட, கூட்டுச் செயல்பாடுகளையும் தேவை ஏற்படின் வடிவமைக்கலாம், ஆசிரியர்-பெற்றோர் உறவில் சம மதிப்பு, சம நம்பிக்கை, சம புரிதலைப் பேண வேண்டும். பள்ளிக்கும் பெற்றோர்களுக்குமான உறவின் நம்பிக்கை மிகு அடையாளமாக ஆசிரியர்களே நிற்க வேண்டும்.
  6. மாணவ, மாணவிகளுக்கு தண்டனை என்பதைவிட, அங்கீகாரமும், ஊக்கமும், மதிப்புகளையும் வழங்கும் விதமாக ஆசிரியர்கள் தங்களை உளவியல்ரீதியில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இப்படியாக, ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் அடிப்படை விதிகளையும் தொடக்கக் கல்விப் பாடத்திட்டத்தையும் வகுத்த பின்லாந்து கல்வித் துறை, 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவப் பாய்ச்சலுக்கும் தயாரானது. அடிப்படையில், சமூகநீதி, சமூகநலத் திட்டங்கள் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் என்னும் மைய முடிச்சுக்களால் கட்டப்பட்ட அந்த நவீன வடிவ சீர்த்திருத்தங்களே இன்றைய பின்லாந்தின் அனைத்துச் சாதனைகளுக்கும் அடித்தளமிட்டுள்ளன.

தொடர்ந்து ஒவ்வொரு விஷயமாகப் பார்ப்போம்!

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-finland-education-20th-century

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபின்லாந்து கல்வி: போட்டியிலிருந்து விடுதலை

விஜய் அசோகன்

லகின் மதிப்புக்குரிய கல்வி ஆய்வுகளில், ஃபின்லாந்து கல்வித் துறை தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையை வந்தடைய வரலாற்றில் எத்தகைய பாதையை ஃபின்லாந்து சமூகம் கட்டமைத்துவந்தது என்பதை முந்தைய மூன்று அத்தியாயங்களில் வாசித்தோம். இந்த முதல் நிலையில் ஃபின்லாந்து தொடர்ந்து நீடிக்க அந்நாட்டின் கல்வித் துறை எத்தகு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் வாசிப்போம்.

கல்வித் துறையின் அணுகுமுறை

  1. அரசு எந்த ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளும் முன்னரும் பல்வேறு கல்வியியல், உளவியல், சமூகவியல் ஆய்வுகளைச் செய்து, எல்லோருடனும் முடிவுகளை விவாதித்து அதன் பின்பே நடைமுறைக்குக் கொண்டுவருவர்.
  2. ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வியானது முனைவர் பட்ட ஆய்விற்கு இணையான கள ஆய்வுகளையும் ஆய்வறிக்கைகளையும் உள்ளடக்கி இருக்கும்.
  3. பல்வேறு கல்வித் துறைச் செயற்பாடுகளை, பல்கலைக்கழக, பயனுறுப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களோடு இணைந்தே ஆய்வுசெய்து நடைமுறைக்குக் கொண்டுவருகின்றனர். 

முறைசார் பாடத்திட்டங்கள் அற்ற வகுப்புத் திட்டங்கள்

ஃபின்லாந்தின் இன்றைய கல்விமுறைக்கான அடிப்படை 1945இல், மேட்டி கோஸ்கென்னிமியின் தலைமையில் அமைக்கப்பட்ட தொடக்கநிலைக் கல்விக் குழுவால் உருவாக்கப்பட்டது. கோஸ்கென்னிமி, அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கக் கல்வி, பயிற்சிகள், ஆசிரியர்களுக்கான கல்வி ஆகியவற்றினை உள்ளடக்கிய வழிகாட்டி நூலை எழுதியிருந்தார். இந்தக் குழு பரிந்துரைத்த விஷயங்களில் மிக முக்கியமானவை:

  1. எல்லோருக்கும் தரமான, சமமான, பாரபட்சமற்ற கல்வி.
  2. பாடத்திட்டங்கள் தனித்து வகுக்கப்படாமல், ஒவ்வொரு தனிமனிதருடைய உள்ளார்ந்த செயற்பாடுகளை ஊக்குவித்தும், அந்தத் தனிமனிதர்களைச் சமூகத்தின் அங்கமாக மாற்றவும் ஏதுவாகக் கல்வித்திட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.
  3. ஒவ்வொரு காலகட்டத்தின் மாணவ, மாணவியரின் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் செயல்திட்டங்களும் பாடத்திட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.
  4. ஃபின்லாந்தின் வருங்காலத்தின் வளர்ச்சியினை மையப்படுத்தி மாணவ, மாணவிகளின் அறிவு, திறன் வளர்க்கும் விதமாக வகுப்பறைக் கல்வித் திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

 

6352905a1931b.jpeg

ஃபின்லாந்துக் கல்வி – மாபெரும் கனவு

பல நாடுகளில் கல்வியாளர்களும், குழந்தை நேயச் செயற்பாட்டாளர்களும் கனவாகப் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களை எப்போதோ நிறைவேற்றிவிட்ட இடம் ஃபின்லாந்து. ஆம், குழந்தைநேய அணுகுமுறைதான் அங்குள்ள கல்வியின் அடித்தளம்!

குழந்தையின் 7 வயதிற்கு மேலேதான் பள்ளிக்கல்வி தொடங்குகிறது. 

மிகக் குறைந்த நேரம், குறைந்த நாட்களே இயங்கும் வகுப்பறைச் செயல்பாடுகள். வீட்டுப்பாடங்கள் இல்லை, பெற்றோர்களின் அழுத்தமோ, ஆசிரியர் /ஆசிரியைகள் வழியே உருவாக்கப்படும் மன அழுத்தமோ இல்லை. தேர்வுகளோ, மதிப்பெண்களோ ஒவ்வோர் ஆண்டின் வகுப்பையும் நிறைவுசெய்யவில்லை. மாறாக, அவ்வாண்டு குழந்தைகள் புதிதாகக் கற்றவை என்ன, கிடைத்த அனுபவங்கள், பட்டறிவு என்ன?  ஏனைய குழந்தைகளுடனும் சமூகத்துடனும் எத்தகைய சமூக இணைவைக் குழந்தைகள் பெற்றிருக்கின்றனர்? விளையாட்டுகளில் எத்தகைய ஆர்வத்தையும், பங்களிப்பையும் அவர்கள் தந்திருக்கின்றனர்? கலை மற்றும் அறிவியல் செயல்பாடுகளில் காட்டிய ஆர்வம் என்ன?

இந்த விஷயங்களையெல்லாம் ஆசிரியர்கள் கணக்கிடுகிறார்கள்.

இப்படித்தான் மாணவர்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் மதிப்பிடுகிறார்கள். மிக முக்கியமாக, பாலின, மொழி, இன, பொருளாதார வேறுபாடுகள் அற்ற சிந்தனையைப் பெருக்கி, சமத்துவமான மனநிலையை உருவாக்குதலை வகுப்பறைச் செயல்பாடுகளில் ஒன்றாக வகுத்து வைத்திருக்கிறார்கள்.

 

63527553eed69.jpg

போட்டிகளும் தேர்வுகளும் மதிப்பீடுகளும் இல்லை

அடுத்து, ஃபின்லாந்து கல்வித் துறையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், போட்டியைத் தவிர்த்தல்!

வகுப்பறையிலோ பள்ளியிலோ கல்வி சார்ந்த போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குள் புகுந்துவிடாதபடி, எவர் ஒருவரின் மதிப்பீடுகளும் எவர் ஒருவருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். மாணவ, மாணவிகளில் அறிவானவர், நன்றாக படிக்கக்கூடியவர், உயர்வானவர் என்று யாரையும் தரம் பிரித்துக் காட்ட மாட்டார்கள். 

ஆண்டு நிறைவில் மாணவ, மாணவியரின் அவ்வாண்டுச் செயற்பாடுகளை அவரவர் பெற்றோருடனான தனிப்பட்ட சந்திப்பில் விளக்கும்போதும்கூட, அந்த ஆண்டு குழந்தை என்ன கற்றுக்கொண்டது என விளக்குகிறார்களே தவிர, குழந்தை கற்றுக்கொள்ளாத அம்சங்களை முன்வைத்துப் பெற்றோரைக்  குற்றஞ்சாட்ட மாட்டார்கள். அதனினும் முக்கியம், குழந்தைக்கு எவ்விதத் தர மதிப்பீட்டையும் வழங்க மாட்டார்கள். 

ஃபின்லாந்துக் கல்வியியல் அறிஞரான பாசி சாஹ்ல்பர்க் அடிக்கடி சுட்டிக்காட்டும் சமுலி பரோனெனின் வரி இது: “உண்மையான வெற்றியாளர்கள் போட்டிகளில் மூழ்குவதில்லை!”

ஆசிரியர்களின் பொறுப்புடைமை தொடர்பாக பாசி கூறுவது இது: “தங்கள் சுயப்பொறுப்புகளை (responsibility) உணராதவர்களிடம் மட்டுமே பொறுப்புடைமை (accountability) கணக்கிடப்பட வேண்டும். எங்கள் ஃபின்லாந்து ஆசிரிய, ஆசிரியைகளைக் கண்காணித்துக் கணக்கிட வேண்டியதில்லை!”  

 

63419a1bddb20.jpg

பள்ளிகள் தொடர்பான பார்வைகளிலும் ஃபின்லாந்து முற்றிலும் ஏனைய பன்னாட்டுக் கல்வியமைப்பில் இருந்து மாறுபடுகிறது. பள்ளிகளின் செயல்பாடுகள் கூட்டுறவால் நிகழ்பவை என்பதால், ஆசிரியர்களுக்கும் தனித்த அங்கீகாரமோ, தனித்த முத்திரைகளோ வழங்கப்படுவது இல்லை; பள்ளிகளுக்கும் அப்படியே! 

அனைத்துப் பள்ளிகளும் சமூகத்தின் அங்கமாக நின்று சமூக மேம்பாட்டிற்கான கருவியாக இயங்க வேண்டும் என்பதால், பள்ளிகள் இடையே போட்டி மனப்பான்மையை உருவாக்குவதில்லை என்கிறார்கள் ஃபின்லாந்துக் கல்வித் துறையினர். 

ஃபின்லாந்துக் கல்வித் துறையின் கூர்நோக்கு

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமத்துவச் சமூகம் படைப்பதைப் பள்ளிக்கல்வி மையப்படுத்தி நிற்பதால், பின்வரும் விஷயங்கள் கடமைகளாகக் கருதப்படுகின்றன.

  1. அனைவருக்குமான கட்டணமில்லா உணவு.
  2. அனைத்துக் குழந்தைகளுக்குமான உடல்நிலையைக் கண்காணிக்க மருத்துவக் கட்டமைப்பு.
  3. உளவியல் மேம்பாடு மற்றும் ஆலோசனை வகுப்புகள்.
  4. மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான  வழிகாட்டுதல்.
  5. கட்டாயக் கல்வி 7 வயது முதல் 16 வரை என்பதால் முற்றிலும் கட்டணமில்லா கல்வி.

எல்லாப் பெற்றோர்களுமே அருகமைப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், குழந்தைகள் பஸ்ஸில் ஏறி பயணப்படும் அவஸ்தை இங்கே இல்லை. மதியம் 2:00 - 2:45 மணிக்கெல்லாம் பள்ளிகளின் செயற்பாடுகள் நிறைவடைந்துவிடுவதால், மாலை நேரத்தை உற்சாகமாக விளையாட்டுக்குக் குழந்தைகள் செலவிடுகிறார்கள். குழந்தைகளின் 1ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரையிலான தொடர் கற்றலுக்கு ஒரே ஆசிரியர் இருப்பதால், குழந்தைகளின் தொடர் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவரவருக்கு ஏற்ற உளவியல், தனித்திறன், கல்விக் கற்றல் பயிற்சிகளைப் பெறுகிறார்கள். 7 முதல் 13 வயது வரை ஒன்றாகப் பயணிக்கும் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தைகளுக்கு குடும்ப உறுப்பினர்போல மாறிவிடுகிறார். 

இப்படியாக ஆசிரியர் என்பவர் குழந்தைகளுக்கான முழுமையான வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-finland-education-21st-century

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஃபின்லாந்து பள்ளி உணவு: எதிர்காலத்துக்கான முதலீடு

ஃபின்லாந்துக் கல்வித் துறையினை நாம் முழுமையாகப் புரிந்துக்கொள்ள, மூன்று அடிப்படைகளை அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவை தாய்மொழிவழிக் கல்வி, சமூக நீதி - சமூக நலத் திட்டங்கள், அதிகாரப்பரவலாக்கம் ஆகும். 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிலும் இந்திய ஒன்றியம் முழுமைக்குமான கல்வி, சமூக மேம்பாடுகளில், எதையெல்லாம் பேசிக்கொண்டும், போராடிக்கொண்டும் இருக்கிறோமோ, அவற்றைப் பரிசோதித்து முழுமையாக வெற்றியடைந்த துறையாக ஃபின்லாந்துக் கல்வித் துறையினை நாம் முன்மொழியலாம். 

நாம் முழுமையான சுதந்திரத்தை அடைந்த 1947களின் அதே காலக்கட்டத்தில்தான் ஃபின்லாந்தும் தன்னுடைய பள்ளிக்கல்விக்கான நவீன படிநிலையை எடுத்துவைத்தது எனலாம். பொதுவுடமைக் கட்சி, 1944இல் ஆட்சிக்கு வந்த பிறகு, “ஃபின்லாந்துக் கல்வித் துறையின் வழியாக மட்டுமே ஃபின்லாந்தின் சமத்துவச் சமூகத்தைப் படைக்க முடியும்” என அறிவிக்கிறார்கள். 1948இல், பொதுவுடமைக் கட்சி (49 இடங்களும்), சமத்துவ ஜனநாயகக் கட்சி (50 இடங்களும்) வேளாண் மையக் கட்சி (49 இடங்களும்) பெற்றுக் கூட்டணி ஆட்சி அமைக்கின்றனர்.

 

63527553eed69.jpg

இதுவே, ஃபின்லாந்து நாட்டின் மறுக்கட்டமைப்புக்கான காலமாக மறுமலர்ச்சி பெற்றது. அதன் முக்கிய அங்கமாக, ஃபின்லாந்து நாட்டின் எவ்விதமான சீர்த்திருத்தங்களுக்கும் பொதுவான அரசியல் இணக்கப்பாடு / கருத்திசைவு (political consensus) தேவை என வரையறுத்தார்கள். 1950க்கு பிறகு மரபியக் கட்சியும் ஃபின்லாந்தின் நான்காவது பெரிய கட்சியாக களத்தில் இணைந்தாலும், கல்வி - அரசியல் இணக்கம் – சமூக மேம்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவில்லை. ஃபின்லாந்துக் கல்வித் துறையின் சீர்த்திருத்தங்களில் ஒன்றாக, இந்தக் காலக்கட்டங்களில் அமைக்கப்பட்ட அரசியல் கல்விக் குழுவும் (political education committee) சுட்டிக்காட்டப்படுகிறது. 

இந்தக் குழுவின் மிக முக்கியமான வழிகாட்டல்கள்: 

  • 7-16 வயதினருக்கான இலவச பரவலாக்கக் / விரிவாக்கக் கல்வி (Free Comprehensive school) என்பதாகும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த இலக்கணக் கல்வி மற்றும் சமூகவியல் பள்ளிகள் வகையான கல்வித் திட்டங்கள் கைவிடப்பட்டன. 
  • கல்வித் துறையில் மைய அரசின் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு முற்றிலுமாக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் நேரடியான அதிகாரத்திற்கும் ஆசிரியர்களின் சுதந்திரச் செயற்பாடுகளுக்கும் என மாற்றங்கள் நடந்தேறின.

 

63661210ade97.jpeg

உணவுத் திட்டம்

ஃபின்லாந்துக் கல்வித் துறையின் வெற்றிக் கதைகளை எழுதுவோர் சுட்டும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஃபின்லாந்து 1948இல் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம். 70 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்படும் உணவுத் திட்டம் இது.

இதனை “உணவு, பசியாறுதல் என்ற அளவுகோலில் மட்டுமே மதிப்பிட முடியாது. குழுவாக இணைந்து ஒரே அளவுகோலில் பகிர்ந்து உண்பது, சமூக நல்லிணக்கம், பொதுச் சமூக கலந்துரையாடல், பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் நேரம் தவறாமை, முறையாக உண்ணுதல் எனப் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன. அதேபோல, மதிய உணவு நேரத்தில் குழந்தைகளிடையே நடத்தப்படும் உரையாடல்களினால் தகவல் பரிமாற்றும் திறனை மேம்பாடு டைந்து, பொது அறிவு விரிவடைகிறது என்றும் சொல்கின்றனர். 

ஃபின்லாந்துக் கல்வித் துறையின் பிரபலமான வாசகங்களில் ஒன்று, “பள்ளியில் வழங்கப்படும் உணவு சமூகச் சமவத்துவத்துக்கும் எதிர்காலத்துக்குமான முதலீடு. இதன் வழியாகவே பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகள் சமத்துவமான வாய்ப்பினை பெற்று சமூக நல்லிணக்கத்தை அடைகின்றனர்!” 

 

632021d92625f.gif

ஃபின்லாந்தும் தமிழ்நாடும்

ஃபின்லாந்து பள்ளிகளில் உணவு இடைவேளை 1 மணி நேரத்திற்குக் குறையாமல் இருக்கும். மாணவ, மாணவியர்கள் தங்கள் வகுப்பறைச் செயற்பாடுகளாக, சமைப்பது, உணவு வீணாக்காமல் இருப்பது, வீட்டு உணவுப் பொருளாதரம் தொடர்பான அறிவினைப் பெறுவது, சூழலியல் சார்ந்தப் பார்வைகளைக் கற்பது, உடல்நலன், பல்வேறு சமூக மக்களின் உணவுப் பண்பாட்டினைப் பற்றி அறிவது என உணவு சார்ந்த கல்வி ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மிகப் பிரபலமானவை. 

ஒவ்வொரு நகராட்சியும், மாநகராட்சியும் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம், சமமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து காலத்திற்கும் பிராந்தியச் சூழலுக்கும் ஏற்ற மாறுதல்களை உள்ளடக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.

உலகளவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இத்தகைய உணவுத் திட்டத்தின் வேறு சில அம்சங்களை நாம்  புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

 

625323ca4bf99.jpg

உலக அளவில், பள்ளிகளில் உணவு வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் சபையும், ‘யுனிசெப்’ (UNICEF) நிறுவனமும் சுட்டிக்காட்டிய பல ஆய்வறிக்கைகளில், “1) மாணவ, மாணவிகள் இடைநிற்றல் தடுக்கப்படும், 2) நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு, மாணவ, மாணவியரின் ஆரோக்கியத்தைப் பேணுவதோடு, கல்விக் கற்றலில் திறன் மேம்பாடு அடையும், 3) சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற வகுப்பறைகள் உருவாகும், அதனால் சமத்துவ வகுப்பறைக்கு வித்திடும்” என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர். 

முக்கியமாக இந்த உணவுத் திட்டமானது, சமூக நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இளம்பருவத்திலேயே உணர்த்திவிடுகிறது. இது ஒவ்வொரு தளத்திலும் சமூக நலத் திட்டங்களின் தேவையைச் சமூகத்திடம் உணர்த்துகிறது. உலகில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடியாகவும் எப்படி ஃபின்லாந்து திகழ்கிறது என்பதற்கான சூட்சமம் இங்கே ஆரம்பிக்கிறது!

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-midday-meal-scheme-in-finland

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபின்லாந்து கல்வியில் ஆசிரியருக்கான முக்கியத்துவம்

ஃபின்லாந்துக் கல்வித் துறையில் அடுத்து நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அம்சம், ஆசிரியர்களுக்கான அதிகாரம்.

ஃபின்லாந்தின் புகழ்பெற்ற அரசியலர்களில் ஒருவர் பேர் ஸ்டேன்பேக்.  1979-1983இல் கல்வி அமைச்சராக இருந்தவர்.  சர்வதேச அளவில் 2015இல் போர்டோ ரிகோவில் நடந்த கல்வியாளர் மாநாட்டில் பங்கேற்ற அவரிடம், “ஃபின்லாந்து கல்வியின் வெற்றிக்கான ரகசியத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், “கல்விக்கும் ஆசிரியர்களுக்குமான மரியாதைக்குரிய பிணைப்பு; அதை நாங்கள் உருவாக்க 150 ஆண்டுகள் ஆனது!”  

 

636fb3eb3add0.jpg

கல்வித் துறையின் அதிகாரப்பரவலாக்கம் 

ஃபின்லாந்து கல்வித் துறை அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது.  ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கல்வித் துறையின் தன்னாட்சி உரிமைகள் உள்ளாட்சி வலையத்திற்குள் வருபவை. பள்ளிக்கூட நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகளே முக்கியப் பங்கு வகிக்கும். ஃபின்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகளின் அதிகாரங்கள் இன்னும் கீழே இறங்கிபோய் ஆசிரியர்கள் இடத்தில் மிகுந்து இருப்பவை.

ஃபின்லாந்தில், தேசியப் பாடத் தொகுப்பு (national curriculum framework) என்பது, 1970க்குப் பிறகு ஒரு வழிகாட்டியாக உண்டே தவிர, பள்ளிக்கூடங்களில் ஒரே மாதிரியான பாடங்கள் இருப்பதில்லை. அரசின் வழிகாட்டலை ஒரு திசைகாட்டியாக எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பகுதிகள், அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பாடங்களை ஆசிரியர்களே வகுத்துக்கொள்கிறார்கள்.  எந்தப் பள்ளியில் எம்மொழிகளில் பாடம் இருத்தல் வேண்டும், துணை மொழிப்பாடங்கள் எவையவை இருத்தல் வேண்டும், எந்த வயதில் எந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தொடங்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தது ஆகும். உள்ளாட்சி அமைப்புகள் ஆசிரியர்களின் வழிகாட்டல்படி இந்த முடிவுகளை எடுக்கின்றன. 

குறிப்பாக, அரசியல் அதிகாரப்பரவலாக்கச் சீர்த்திருத்தங்கள் வலுவாகக் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில், கல்விக்கான அதிகாரப்பரவலாக்க நடைமுறைகளும் இங்கே வலுவாகின. இதன் காரணமாக 320 உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளை நடத்தும் முழுமையான தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன. 

 

63661210ade97.jpeg

உள்ளூர் பண்பாடு, உள்ளூர் மொழி, உள்ளூர் பொருளாதாரம் இவையெல்லாம் கல்வியில் பிரதிபலிப்பது முக்கியம் என்பதில் உறுதிபட இருக்கிறது ஃபின்லாந்து. இன்னும் சொல்லப்போனால், அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பிற நாட்டினர், பிற மொழியினரையும் கருத்தில் கொண்டு, பள்ளியில் பயிலும் பல்வேறு நாட்டினருக்கும் ஏற்றார்போல கல்வி வழங்குகின்றனர்.

 

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-finland-social-welfare-schemes

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன்: பள்ளிக்கல்வியில் அரசியல் பாடம்

ந்தக் கட்டுரைத் தொடர் தொடங்கும்போது, ஃபின்லாந்து மட்டுமல்ல நோர்வே, சுவீடன், டென்மார்க் நாடுகளிலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக அமைப்புகளில் பொது ஒற்றுமைத்தன்மை உண்டென விளக்கியிருந்தேன். அவைகளில், ஜனநாயக விழுமியங்களை உள்ளுணர்ந்தச் சமூக அமைப்பும் ஒன்று. காலனியாதிக்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பெரும்பாலுமான நாடுகள் இழந்தவற்றில் முதன்மையானது வெளிப்படையான சமூக ஜனநாயகக் கட்டமைப்பும் தாய்மொழி உணர்வும்!

நோர்வே நாடு, டென்மார்க் கட்டுப்பாட்டில் 400 ஆண்டுகளும், சுவீடன் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளும், அதேபோல ஃபின்லாந்து சுவீடன் கட்டுப்பாட்டில் 600 ஆண்டுகளும் ரஷ்யா கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் தங்களின் தாய்மொழியையும் சமூகத்தின் ஜனநாயக அமைப்பையும் கட்டிக்காத்து உள்ளதை 15 ஆண்டுகளாக நேரில் கண்ட தருணங்களில் எல்லாம் கல்வித் துறைக்கும் இவற்றுக்குமான தொடர்புகளைத் தேடியதன் விளைவே எனது முந்தைய நூலான ‘தாய்மொழிக் கல்வி’யை எழுதியிருந்தேன்.

இந்தக் கட்டுரையில், கல்வித் துறையில் இந்நாடுகள் பின்பற்றும் ஜனநாயகக் கருத்துருவாக்கப் பாடங்கள் குறித்தான செய்திகளைக் காண இருக்கிறோம். மிகச் சமீபத்தில் எங்கள் மூத்த மகன் 6ஆம் வகுப்பு பயிலும் பள்ளியில் நடந்த தேர்தல் ஒன்றினைக் காண்போம். தொடக்கப் பள்ளியில் 6ஆம் வகுப்பு வரை இருக்கும். அதன்பிறகு, அடுத்த படிநிலை வகுப்பிற்காக நடுநிலைப் பள்ளிக்குச் செல்வார்கள். 

பள்ளிக்கல்விக் காலங்களில் அரசியல், சமூகம், உலக ஓட்டங்கள் சார்ந்த பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வண்ணம் நோர்டிக் நாடுகளில் செய்முறைப் பயிற்சிகளை வழங்குவார்கள். அதன்படி, தேர்தல் அரசியல் கட்சிகள் சார்ந்தும் பயிற்சிகளின் வழியே கற்றுக்கொடுக்கிறார்கள்.

 

636fb3eb3add0.jpg

சுவீடன் பள்ளியில் அரசியலும் தேர்தலும்

தேர்தல் பிரச்சாரங்களின்போது வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தி தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொள்வர். அப்போது எங்கள் மகனின் வகுப்பில் உள்ளவர்களை வீதி உலா அழைத்துச் சென்று, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மக்களிடம் பழகும் விதம், பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் விதம், என்னென்ன அரசியல் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க வைத்திருக்கின்றனர்.

அதன் பிறகு தொடக்கப் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்குள் கட்சிகளை உருவாக்கியுள்ளனர். எங்கள் மகனும் அவன் வகுப்பு நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சி, விளையாட்டுக் கட்சி என்று சொன்னார். அவரது வகுப்புத் தோழர்கள் உருவாக்கிய ஏனைய கட்சி, உணவுக் கட்சி, பள்ளி வளாகக் கட்சி, நிர்வாகக் கட்சி. ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் விவாதித்து, பள்ளியில் இருக்கும் ஏனைய தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் என்னென்ன செயல்பாடுகளைப் பள்ளி நிர்வாகத்திற்குக் கொண்டு செல்வோம் என்பதை விளக்கம் கொடுத்து பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

விளையாட்டுக் கட்சி, விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தொடர்பான பள்ளிகளின் செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் உணவுக் கட்சி பள்ளியில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பாகவும் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பள்ளி வளாகக் கட்சி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர் ஆசிரியர்களின் செயல்பாடுகளில் வர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு மோதிக்கொண்டன, நிர்வாகக் கட்சி தங்கள் பள்ளி நிர்வாகத்தைத் தாங்கள் நடத்தினால் எதனையெல்லாம் செய்வார்கள் என்றும் விவாதித்ததாக எங்கள் மகன் விளக்கிக் கூறினார்.

அடுத்த கட்டமாக, தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்து தேர்தலும் நடந்திருக்கிறது. முடிவைப் பற்றி நாங்களும் கேட்கவில்லை, அதனை இங்கே சொல்லப்போவதும் இல்லை. நோர்டிக் நாடுகளில் ஜனநாயகம் கற்றுக்கொடுக்கும் விதம் தொடர்பான பேச்சு திசை மாறி, சுவீடனின் பள்ளிக் குழந்தைகள் எதனை விரும்பி வாக்களித்தார்கள் என விவாதம் மாறிவிடுமோ என்ற அச்சமும் காரணம்.

இந்த ஜனநாயகம் எத்தகையதாக வளர்ந்த தலைமுறையினரிடம் உள்ளது என்பதற்கான எனது நேரடி அனுபவம் நான் பணியாற்றிய சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் எங்கள் வேதியியல் பிரிவில் கண்டேன்.

 

63661210ade97.jpeg

சுவீடன் பல்கலைக்கழக ஜனநாயகம்

2018, நான் சுவீடனில் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தத் தொடக்கம் அது. சுவீடன் பல்கலைக்கழகமோ, நிறுவனங்களோ பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையும் காலை 08:30 மணிக்கு குழு செயற்பாடுகள் குறித்தான விவாதம் நடக்கும். அவை நடக்கும் விதம் குறித்தான சீராய்வினை மேற்கொள்ளப் போகிறோம் என மின்னஞ்சல் வந்தது. குழுவின் பொதுக்கணக்கிற்கு வந்த அந்த அழைப்பில், முக்கியக் குறிப்பாக, ஆய்வுக் குழுத் தலைவர்கள், ஆய்வுத் திட்டத் தலைவர்கள், மூத்தப் பேராசிரியர்கள், மூத்த ஆராய்ச்சியாளர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது எனவும் முதுநிலை ஆய்வு மாணவ, மாணவியர்கள், இளநிலை ஆராய்ச்சியாளர்கள், மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவ, மாணவியர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் என்றும், என்னைப் போன்று சமீபத்தில் இணைந்த முதுமுனைவு ஆராய்ச்சியாளர்கள் விருப்பப்பட்டால் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூத்தப் பேராசிரியர்களும், குழுத் தலைவர்களும் சிறிய கலந்துரையாடல் கூட்டமே நடத்தினாலும் அதனை சீராய்வினை இளநிலை மாணவ, மாணவியர்கள் மேற்கொள்ளலாம் என்ற அளவிலான ஜனநாயகத்தன்மை அன்றைய பொழுதில் பெரிதும் ஈர்த்தது. அதுவும், அனைவருக்கும் தெரிந்தே, ஆய்வுக் குழுவின் கூட்ட அரங்கில், அலுவல் நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடந்தது சிறப்பான செய்தியினை எனக்கு வழங்கியது.

அடுத்த வாரம், எங்கள் வாரந்திரக் கூட்டத்தில், ஆய்வுக் குழுத் தலைவர் சிரித்துக்கொண்டே, “எங்களுக்கு எதிராக என்னவெல்லாம் குண்டு இன்று வெடிக்கப்போகிறது” என வினவித் தொடங்கிவைத்தார். சீராய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஒருவர் வாசித்தார், அதற்கு விவாதம் தேவைப்பட்டால், தாராளமாக முதலில் குழுத் தலைவர்களும் பேராசிரியர்களும் தனியேக் கூடிப் பேசிவிட்டு, அனைவரோடும் கலந்து விவாதிக்க நாள், நேரம் குறித்துச் சொல்லலாம் என்றும் அம்மாணவி முடிவுரை வழங்கினார்.

 

6352905a1931b.jpeg

இளநிலை ஆராய்ச்சியாளர்களும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்ட சீராய்வுக் கூட்டத்தின் முடிவில் முக்கியமான தீர்மானம், “குழுத் தலைவர் தலைமை தாங்கி நடத்தும் வாராந்திரக் கூட்டம் நேரம் ஒழுங்கின்மையோடு நடக்கிறது” என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அதற்கு, தலைமை பேராசிரியர் ஒருவர் வாராந்திரக் கலந்துரையாடல் கூட்டத்தினை அடுத்தடுத்த வாரங்களில் நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஜனநாயக மதிப்பினை வழங்கும் அடிப்படைக் கல்வி

பல்வேறு மொழி, இன, பண்பாட்டுப் பின்னணியில் இருந்து சுவீடன், ஃபின்லாந்து, நோர்வே, டென்மார்க் நாடுகளுக்குக் கல்விப் பயிலவரும் குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பாடலைச் சமத்துவப்படுத்துவதன் வழியாகவும், உரையாடல்கள், விவாதங்களை வளர்ப்பதன் வழியாகவும், அவரவர் கருத்தினை பிறர் மீது திணிக்காத வகையிலும் எவர் ஒருவரின் எதிர் கருத்தையும் உள்வாங்கும் நிதானத்தையும் கற்றுக்கொடுப்பதற்கு என களமாக பள்ளியினை வரையறுத்து, அதற்கேற்ற வகையிலான ஆசிரியர் பயிற்சிகளையும், குறிப்பாக, சமூகக் கட்டமைப்பு சார்ந்த கோட்பாட்டு வடிவிலான பாடங்களோடு, கள ஆய்வுச் செயற்பாடுகளையும் நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.

எங்கள் மூத்த மகனிடம் அவரது வகுப்பறைகளின் செயற்பாடுகளைப் பற்றி வினவியபோது, அவர் சொன்னவற்றைத் தொகுத்தால், ‘ஒரு வகுப்பறையின் குழந்தைகள் பல்வேறு மாறுபட்ட சமூகப் பின்னணியில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளதால், அவர்களுடனான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்துவதோடு, ஆசிரியரின் முன்னிலையில் குழந்தைகள் பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளும் வகையில் வகுப்பறையை அமைத்துக்கொள்கிறார்கள்’ என்பது எனக்கு புலனாகியது.

 

63527553eed69.jpg

தொடர்ந்து ஒரே ஆசிரியர் ஒவ்வொரு பள்ளி ஆண்டிலும் அதே குழுவினரோடு தொடர்ந்து இயங்கும்போது, ஆசிரியர் - மாணவப் பிணைப்பினால், தனிப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் உளவியலையும் ஓர் ஆசிரியர் கற்று அதற்கேற்ற வகையில் வாத-விவாதக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, வகுப்பறை ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் என் கேள்விக்கு எங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு கலாச்சாரக் குழந்தைகளின் சமத்துவமாக மதிப்பதின் வழியாகவும் வகுப்பறை ஜனநாயகச் செயற்பாடுகளின் வழியாக மட்டுமே கல்வி ஜனநாயகத்தை (Educational Democracy) உணரவைத்து, சமூக ஜனநாயகத்தை (societal democracy) நிலைநாட்ட முடியும் என சுவீடன் பள்ளிக்கல்வியின் ஜனநாயகப் போக்குக் குறித்தான் ஆய்வறிக்கைகளும் பள்ளிக்கல்விச் சட்டங்களும் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-sweden-school-education

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்வி

ரோப்பிய நாடுகளின் ஒன்றியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றச் சட்டத்தில், தாய்மொழி வழியிலான கல்வி முக்கியமான ஒன்று.  நோர்டிக் நாடுகளான சுவீடன், நார்வே, ஃபின்லாந்தில் மேலும் வலுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. 

நார்வே நாட்டில் வசித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் மொழிக்கான பாடங்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை ஈழத் தமிழர்களால் நடந்தது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆதலால், அங்கு வசிக்கும் வரை தாய்மொழிக் கல்விக்கானத் தேடலை ஆய்வு நோக்கில் நடத்தவில்லை. சுவீடன் புலம்பெயர்ந்தபோது, அங்கு இருந்த ஆச்சர்யமூட்டும் தாய்மொழிகளுக்கான கல்வித் திட்டங்கள் வழியாக ஆழமான தேடுதலை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

நவீன உலக ஒழுங்கில், ஆங்கில மொழியால் மட்டுமே சாதிக்க இயலும் என்கிற அசைக்க முடியாத கருத்தாக்கம் காலனியாதிக்கச் சுவட்டில் இருந்து உருவானது என்கிற புரிதல் இதன் பின்னரே எனக்கு ஏற்படத் தொடங்கியது. அதோடு, சீன நாட்டின் பல்கலைக்கழக அனுபவமும் தாய்மொழிக் கல்விக்கான வலுவான கருத்தினை எனக்குள் விதைத்தது.

நார்வேவின் அனுபவமே அனைத்திற்கும் தொடக்கம்

நார்வே நாட்டினில் எங்கள் குழந்தைகள் கருவாகி, பிறந்து, வளர்ந்தக் காலங்களில் மருத்துவர்களும் மழலையர் பள்ளிகளிலும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவையும் நாங்கள் உணர்ந்தவையும் எங்கள் குடும்பத்தில் தமிழ்மொழி தொடர்பான புத்துணர்வை ஊட்டியது.

 

 

குழந்தைகள் கருவில் இருக்கும் தருவாயில் நார்வே அரசு மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர் உடல்நலச் சோதனை மேற்கொள்வர், கருவில் வளரும் குழந்தை குறித்தும், தாயின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த புரிதலும் தந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சில சோதனைகளின் பொழுதும் தந்தையும் உடன் இருத்தல் அவசியம். 

அப்போது, வீட்டில் மொழி உச்சரிப்புகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சித் தொடர்பான கேள்விகளுக்கு, “பன்மைக் காலாச்சாரச் சூழலில் வாழ்வதால், குழந்தையின் மனநல வளர்ச்சியில் நேர்மறையான உறுதியினை வளர்க்க தாய்மொழியில் உரையாடுவது அவசியம்” என மருத்துவர்களும், “நோர்வேஜிய மொழி தொடர்பான குழந்தைகளுக்கான பயிற்சியினை மேற்கொள்வது எங்கள் பொறுப்பு; அதற்கு அடித்தளமாக குழந்தைகளோடு வீட்டினில் தாய்மொழியில் உரையாடி, குழந்தையின் அடிப்படைச் சிந்தனைக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும்” எனப் பள்ளியிலும் கற்றுக்கொடுத்தார்கள்.

தாய்மொழியும் குழந்தையின் செயல்பாடுகளும்

குழந்தை பிறப்பதற்கு 10 வாரங்கள் முன்பிருந்தே, ஒலியினை கேட்கத் துவங்குகிறது. பிறந்தது முதலே, தாயின்மொழியின் ஓசையால், தன்னைப் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதுகிறது. இத்தகைய தருணங்களில் இருந்தே, குழந்தையின் தாய்மொழியும் மூளையின் செயல்பாடும் ஒன்றாகிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒலியின் அடிப்படையில் அனைத்தையும் பகுத்துணரத் தொடங்குகிறது. இவ்வுலகில் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கினால், மொத்தமாக 800 விதமான ஒலிகள் உள்ளன. குழந்தை இயற்கை வரம், இத்தகைய 800 ஒலிகளையும் பிரித்து உணரும் ஆற்றல் கொண்டது.

பிறந்தது முதல் இத்தகைய ஆற்றல் உண்டு என்றபோதிலும், குழந்தை பிற மொழியினைக் கற்க, பகுத்துணர, தொடர்ச்சியான மூளையின் செயல்பாடுகளில் வாய்ப்பு உள்ளது எனினும், முதல் ஆறு மாதத்தில் தன்னைச் சுற்றி ஒலிக்கப்படும் மொழியில் இருந்துதான் மூளையின் தொடக்கக்கால செயலோட்டங்கள் உருவாகிறது. அதனாலேயே, பிற மொழியினை கல்வி மொழியாக ஏற்கும் முன்னர், குழந்தையின் அடிப்படை மூளையில் பதிந்துள்ள மொழியின் வழியே தொடக்கக்கால கல்வியின் மூலம் அறிவூட்டுவது நீண்ட கால ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உகந்ததாகிறது.

 

 

இதில் மிகக் குறிப்பாக, குழந்தை பிறந்தது முதலான மூளையின் செயல்பாட்டின்படி, அந்தக் குழந்தையுடன் நேரடியாக உரையாடும் சொற்கள், ஒலி, மொழியில் இருந்துதான் அக்குழந்தை தன் சிந்தனைக்கும், தன் உச்சரிப்பிற்கும், செயல்பாட்டிற்கும் எடுக்கிறது. தன்னுடன் நேரடியாக பேசப்படாத எந்த ஒலியினையும் அது தாய்மொழியின் ஒலியே எனினும் அக்குழந்தையின் மூளையின் செயலோட்டத்தில் இடம்பெறாது.

குழந்தை தனது இரண்டாம் வயதில் இருந்து, தான் பார்க்கும் பொருட்களின் பெயரை, தன் சுற்றத்தார் சுட்டிக்காட்டி தன்னுடன் உச்சரிக்கும் வார்த்தையையும் பொருத்திப்பார்த்து, தனக்குத் தெரிந்த தாய்மொழியோடு தன் வாழ்வின் அனைத்து நொடிகளையும் இணைத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட, இத்தருணத்தில் இருந்து குழந்தை தாய்மொழி வழியே தனது கற்றலைத் தொடங்குகிறது எனலாம்.

இத்தகைய நிலையில் இருந்தே, அக்குழந்தை பள்ளிக்கு வரும் முன் 3,000 சொற்களை மூளையில் பதிந்து வளர்ந்துவருகிறது.

மருத்துவக் கல்வியும் தாய்மொழி மதிப்பெண்ணும்

நார்வேயில் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வு எழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம் / பொறியியல் சேர்க்கைக்கான கூட்டு மதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதாவது, நார்வே நாட்டில் தமிழ் மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. சமீபத்தில் நார்வே நாட்டில் மருத்துவக் கல்வியியல் சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமாக என் அனுபவத்தில் இருந்து பார்த்தால்கூட, எனக்குத் தெரிந்து நான் தமிழாராசிரியராக வகுப்பெடுத்த பலரும் தமிழால் உயர்வு பெற்றவர்களே!

 

 

சுவீடனில் நடந்த தமிழ் நேர்முகத் தேர்வு!

இத்தகைய அனுபவம் தந்த பாடத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில், தமிழ்வழிப் பிரிவில் என் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தேன். பிறகு, மீண்டும் சுவீடன் வர வேண்டும் என்ற சூழலில், அவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரிந்திருந்தது. 

சுவீடன் பள்ளியில் சேரும் குழந்தைகளோடு பள்ளி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் ஆசிரியர்கள் கலந்துரையாடி அவர்களின் எண்ண ஓட்டம், அவர்களின் அன்றைய கல்வியின் நிலை, செயற்பாடுகள் குறித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கவும் வளர்த்தெடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுப்பர்.

சுவீடனிற்குப் புதிதாக வந்திருந்த எங்கள் குழந்தைக்கும் அத்தகைய நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ந்தது, ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் தமிழாசிரியர் துணை கொண்டு, முழுக்க முழுக்க தமிழில் நடந்தது. பிறகு, தமிழ் தவிர வேறு மொழியே தெரியாததால், பள்ளி நிர்வாகம் எங்கள் மகன் ஒருவருக்காக வாரத்தில் ஒருநாள் மாவட்ட நிர்வாக தமிழாசிரியர் கொண்டு சிறப்பு வகுப்பினை தமிழ் வழியில் நடத்தி மெல்ல மெல்ல சுவீடிஷ் மொழி அறிவினையும் பாட அறிவினையும் வளர்த்தெடுத்தார்கள்.

இன்றும்கூட, அரசுப் பள்ளியில் பயிலும் அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் வாரத்தில் ஒருநாள், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறான மாணவ எண்ணிக்கையினைக் கொண்டு, பொது வகுப்பினைத் தமிழ் மொழிப் பாடத்தில் நடத்துகிறார்கள். 
 

 

https://www.arunchol.com/vijay-ashokan-on-sweden-government-school

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.