Jump to content

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 2023 டிசம்பருக்குள் முடிவிற்கு கொண்டுவரப்படும் -அமெரிக்கத் தூதரிடம் நீதியமைச்சர் விஜயதாஸ வாக்குறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 2023 டிசம்பருக்குள் முடிவிற்கு கொண்டுவரப்படும் -அமெரிக்கத் தூதரிடம் நீதியமைச்சர் விஜயதாஸ வாக்குறுதி

By DIGITAL DESK 5

04 NOV, 2022 | 11:39 AM
image

(நா.தனுஜா)

 

காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதை  இலக்காகக்கொண்டு அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்பதாக நீதியமைச்சரிடம் தெரிவித்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தற்காலத்திற்குப் பொருந்தக்கூடியவகையில் சட்டக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்தக்கூடியவாறான பல்வேறு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்தும் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

அதேவேளை நாட்டில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளையும் அமெரிக்கத்தூதுவர் பாராட்டினார்.

மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்கத்தூதரகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்றமைக்காக நீதியமைச்சருக்கும், அக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் நன்றி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் நோக்கில் நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவை வழங்கலையும், அதன் முன்னேற்றத்தையும் அமெரிக்கத்தூதுவர் பாராட்டினார். 

அவருக்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139075

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லப்போகினம் காணாமல் போன எல்லாரும் செத்திட்டினம். இழப்பீடு 2இலட்சம் வாங்குங்கோ. ஆனால் எப்பிடிச் செத்தவை என்டு தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாதவூரான் said:

என்ன சொல்லப்போகினம் காணாமல் போன எல்லாரும் செத்திட்டினம். இழப்பீடு 2இலட்சம் வாங்குங்கோ. ஆனால் எப்பிடிச் செத்தவை என்டு தெரியாது

காணாமற் போனோர் என்று யாருமில்லை என்றுஅறிக்கை விட்டவருக்கு இது தெரியுமோ? முதல்ல அவரிடம் இதை தெரிவிக்கும்படி ஜுலி சங் கோரிக்கை வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.