Jump to content

வரிக் கொள்கையுடன் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரிக் கொள்கையுடன் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள்

ச.சேகர் – business.tamilmirror@gmail.com

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வருமான வீதத்துக்கு நிகரான அரச வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நாடு திவாலாகியுள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரி வருமான அதிகரிப்பு தவிர்க்கப்படமுடியாத விடயமாக மாறியிருந்தது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, இந்த வரிமறுசீரமைப்புகளினூடாக அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது பற்றிய நிபந்தனைகளும் கண்டிப்பாக முன்வைக்கப்பட்டிருக்கும்.

image_73c4f5989b.jpg
புதிய வரிக் கொள்கையின் பிரகாரம், மாதாந்தம் ரூ. 100,000 க்கு அதிகமான வருமானம் பெறும் எந்தவொரு நபரும் வரி செலுத்த வேண்டும். இதற்கு மேலதிகமாக, கூட்டாண்மை வரி ஆகக்குறைந்தது 24 சதவீதம் என்பதிலிருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கும் வரிக்குமிடையிலான விகிதம் 2019 ஆம் ஆண்டில் 12.7% ஆக காணப்பட்டது. இது 2021 ஆம் ஆண்டில் 8.7% ஆக வீழ்ச்சியடைந்தது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் வரிக் குறைப்புகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதுடன், பொருளாதாரத்தின் சரிவும், தற்போதைய நெருக்கடி நிலையும் ஆரம்பமாகியது என்றே குறிப்பிடலாம்.

தற்போதைய தேவையாக அமைந்துள்ள அரச வருமானத்தை அதிகரிப்பது மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வரிக் கட்டமைப்பை மீள நிறுவுவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி முன்மொழிவுகள் அமைந்துள்ளன. ஆனாலும், 2019 ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார, மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது வரலாற்றில் இதுவரை காலமும் பதிவாகியிருக்காத மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள நிலையில் பிரேரிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் 69.8% ஆக பதிவாகியிருந்த நுகர்வோர் பணவீக்கச் சுட்டெண், நடப்பு ஆண்டில் முதன் முறையாக ஒக்டோபர் மாதத்தில் 66% ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த மூன்று வருடங்களில் ராஜபக்சவின் நிர்வாகத்தில் நாணயமும் 100%க்கு மேலாக மதிப்பிறங்கியுள்ளது. இவ்வாறான அனைத்து காரணிகளும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரி அதிகரிப்பை மக்களுக்கு அதிகளவு சுமையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.
image_f99e6297da.jpgஎவ்வாறாயினும், நாட்டுப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது என்பது தற்போது பெரும்பாலான அனைவருக்கும் தெரிந்த விடயமாக அமைந்திருப்பதால், கடினமான இந்த வரி அறவீட்டை வெளிப்படையானதாகவும், அரசாங்கத்தின் எந்தப் பிரிவுகளில் செலவிடப்படுகின்றது என்பதை பொது மக்களுக்கு அறியப்படுத்துவதனூடாக அவர்களின் ஆதரவை ஓரளவேனும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அரச துறைகளில் கடந்த காலங்களில் அளவுக்கதிகமாக தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக அரசியல் ஆதரவாளர்கள் பெருமளவில் அரச பணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். தற்போது சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அரச நிறுவனங்களில் பணி புரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பெருமளவு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் போன்றன, தாம் செலவிடும் பணத்துக்கு எவ்விதமான பெறுமதியையும் ஏற்படுத்துவதில்லை என்பதுடன், மாறாக பொது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும், நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், இந்த நெருக்கடியான காலப்பகுதியில் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு முன்மாதிரியான எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஒரு சிலர் மாத்திரம் தாம் அமைச்சுக்குரிய சம்பளமின்றி சேவையாற்றுவதாக கூறினாலும், அவற்றை உறுதி செய்யும் பொறிமுறை, வெளிப்படைத்தன்மை இல்லை.

அரசின் செலவில் பெருமளவு பங்கைக் கொண்டுள்ள பாதுகாப்புத் துறையினால், பொருளாதார ரீதியில் பங்களிப்புச் செய்வதில்லை. இந்தத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகின் 17ஆவது மிகப் பெரிய இராணுவப் படையணியை இலங்கை பேணி வருவதுடன், அதனூடாக இராணுவத்தின் தேவைகள் அல்லது நாட்டு மக்களின் பாதுகாப்புத் தேவைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது புலனாகவில்லை. குறிப்பாக, நாட்டில் குற்றச் செயல்களும், சட்ட விரோதச் செயற்பாடுகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளன. தொடர்ச்சியாக நஷ்டமீட்டி வரும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை போன்றன நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களாக அமைந்திருப்பதுடன், வரி செலுத்துவோரின் வரிப் பணத்தையும் விரயமாக்குவதாக அமைந்துள்ளன.

அரச நிறுவனங்களிலும், துறைகளிலும் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துமானால் செலுத்தப்படும் வரிப் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். முன்னைய நிர்வாக காலப்பகுதியில் மோசடிகளிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களும், அடையாளம் காணப்பட்டவர்களும், தற்போதும் அந்த பதவிகளில் பொறுப்பு வகிக்கின்றமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

நாளாந்தம் பணிபுரியும் மக்களிடமிருந்து அறவிடும் வரியை அதிகரிப்பது என்பது, அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதுடனும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை தணிப்பதுடனும் இடம்பெற வேண்டும். அல்லாவிடின், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு அவசியமான சரியான கொள்கைகளுக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும்.

 

https://www.tamilmirror.lk/வணிகம்/வரிக்-கொள்கையுடன்-அரசினால்-ஏற்படுத்தப்பட-வேண்டிய-ஏனைய-சீராக்கங்கள்/47-306763

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.