Jump to content

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் 18 பேரடங்கிய புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு நாட்டிற்கு வருகை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் 18 பேரடங்கிய புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு நாட்டிற்கு வருகை

By T. SARANYA

05 NOV, 2022 | 10:10 AM
image

(நா.தனுஜா)

மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளல், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்களுக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் புலம்பெயர் கனேடியத்தமிழர்கள் உள்ளடங்கலாக கனடாவில் முன்னணியில் திகழும் 18 வர்த்தகப்பிரமுகர்கள் அடங்கிய குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

சுமார் ஒருவாரகாலம் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள இக்குழு, பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றின் ஊடாகவே அரசியல் ரீதியான சமத்துவத்தைத் தோற்றுவிக்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய வர்த்தகப் பிரமுகர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. 

PHOTO-2022-11-04-19-28-38-600x399.jpg

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸின் தலைமையில் நாட்டிற்கு வருகைதந்துள்ள இக்குழுவில் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிற்குச்சென்று, அங்கு வணிகத்துறையில் முன்னணியில் திகழும் 17 வர்த்தகப்பிரமுகர்கள் உள்ளடங்குகின்றனர்.  

அதன்படி நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல், கனடாவில் இலங்கையின் வணிகங்களை ஊக்குவித்தல், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுதல், இலங்கையை ஓர் சுற்றுலாத்துறை நாடாகப் பிரபல்யப்படுத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களின் இலங்கைக்கான விஜயம் மற்றும் அவர்களது நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இச்சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பொருளாதார விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் கலாநிதி ஏ.சாஜ்.யூ.மென்டிஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தவகையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்துத் தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நல்லிணக்கத்தைப் பொறுத்தமட்டில் இது மிகமுக்கிய நகர்வாகும் என்று சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பேசும்போது புலம்பெயர் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதும் அதில் முக்கியமானதோர் விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

'அண்மையகால மக்கள் போராட்டத்தைத் (அரகலய) தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் எமது நாடு குறித்த தவறான பிம்பமொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு வருகைதருவதோ அல்லது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதோ எதிர்மறையானதொரு கோணத்திலேயே நோக்கப்படுகின்றது. 

எனவே இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் அத்தகைய பிம்பத்தை மாற்றியமைப்பதற்கும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் கனேடிய வர்த்தகர்கள் குழுவின் இந்த வருகை முக்கியமாகப் பங்களிப்புச்செய்யும். அதேபோன்று இவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துசென்ற போதிலும், இலவசக்கல்வி, இலவச சுகாதாரம் போன்ற சேவைகளால் தாமடைந்த பயனைத் திருப்பிச்செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வருகைதந்திருக்கின்றார்கள். அதனை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம்' என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேலும் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து இலங்கைக்கான தமது விஜயத்தின் நோக்கம் குறித்து கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை பின்வருமாறு எடுத்துரைத்தார்.

'அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, எம்மை இலங்கைக்கு வருகைதருமாறும் இங்கு எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளமுடியும் என்பது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார். பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துசென்ற நாம், நீண்டகாலம் கனடாவில் வசித்தாலும்கூட 'இலங்கையர்' என்ற அடையாளத்தை எம்மால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது. நான் பிறந்தபோது இந்த நாடுதான் எனக்கு இலவச சுகாதாரசேவையை வழங்கியது. பின்னர் இலவசக்கல்வியையும் உணவையும் வழங்கியது. அதனைத்தொடர்ந்து நாம் புலம்பெயர்ந்து சென்றபோது கனடா எமக்குச் சிறப்பான வாழ்க்கையை வழங்கினாலும், நாம் வெறுமனே 'கனேடியர்'களாகவன்றி 'இலங்கை கனேடியர்'களாக அடையாளப்படுத்தப்படுவதையே விரும்புகின்றோம். எமது பிள்ளைகள் 'இலங்கையர்' என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டுமென விரும்புகின்றோம். எனவே அதனை முன்னிறுத்தி இலங்கையுடனான இணைப்புப்பாலத்தை உருவாக்கவேண்டும் என்ற சுயநல நோக்கத்துடன், நாம் ஏற்கனவே இலங்கையிலிருந்து பெற்றவற்றை திருப்பிச்செலுத்தவேண்டுமென எண்ணுகின்றோம்' என்று தெரிவித்தார்.

அதன்படி அடுத்தவார நடுப்பகுதி வரை நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், நேற்று பிற்பகல் இலங்கை முதலீட்டுச்சபையுடனும் நாட்டிலுள்ள சில முக்கிய வணிக நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். அதுமாத்திரமன்றி எதிர்வரும் நாட்களில் வணிகத்துறைசார்ந்த பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருக்கும் அவர்கள், அதன்பின்னரேயே எந்தெந்தத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதெனத் தீர்மானிப்பர். 

இருப்பினும் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க சக்திவலு, சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் போன்றவற்றில் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் இவ்வர்த்தகப்பிரமுகர்கள், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள், புதிய வணிக முயற்சியாண்மைகள் திறம்பட இயங்குவதற்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளனர்.

மேலும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தாம் தொடர்புபடவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இலங்கையிலும் பொருளாதார ரீதியான சமத்துவத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே அரசியல் ரீதியான சமத்துவத்தை எட்டமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்தோடு வட, கிழக்கில் விடுதலைப்போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதன்பின்னர் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஒன்றிணைப்பதற்கும் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139168

  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்...  தமிழருக்கு, சிங்களவர்களால் பிரச்சினை என்று 
கனடாவில் அகதி அந்தஸ்து எடுத்து, நாலு பணத்தை சம்பாதித்து...
சிங்கள நாட்டுக்கு  பொருளாதார பிரச்சினை என்றவுடன்...
கோட்டு, சூட்டு  போட்டுக் கொண்டு, முதல் ஆட்களாக கொழும்பில் போய் நிற்கிறார்கள்.
எங்கள் இனம் இப்படித்தான். குறுக்கு வழியில் ஓடி, இனத்தை விற்றுப் பிழைப்பார்கள்.
இந்த மக்களுக்காக போராடிய... அந்தத் தலைவன் தான் பாவம். 😢

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்...  தமிழருக்கு, சிங்களவர்களால் பிரச்சினை என்று 
கனடாவில் அகதி அந்தஸ்து எடுத்து, நாலு பணத்தை சம்பாதித்து...
சிங்கள நாட்டுக்கு  பொருளாதார பிரச்சினை என்றவுடன்...
கோட்டு, சூட்டு  போட்டுக் கொண்டு, முதல் ஆட்களாக கொழும்பில் போய் நிற்கிறார்கள்.
எங்கள் இனம் இப்படித்தான். குறுக்கு வழியில் ஓடி, இனத்தை விற்றுப் பிழைப்பார்கள்.
இந்த மக்களுக்காக போராடிய... அந்தத் தலைவன் தான் பாவம். 😢

இந்த குழுவில் யாழ் கள உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனார்களா.?அட...சக்கை...ஒரு சிங்களவன். கூட கனடா இலங்கை கூட்டமைப்பில். உயர் பதவியில் இல்லை    இது சம்பந்தமாக. யாழ் கள கனடா வாழ் உறவுகளின்  கருத்துகள் என்ன?.   போரின் போது புலிகள் இயக்கத்துக்கு காசு சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இருந்தால் எதிர்காலத்தில் கைது செய்து சிறையினுள்ளே  போட இருக்கும் 

Just now, Kandiah57 said:

வசதியாக இருக்கும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

Man is Showing His Head into the Open Mouth of the Crocodile. Showing in  Thailand Editorial Stock Photo - Image of head, crazy: 147035268

Accident at the Crocodile Show | Funny gif, Funny picture ... 

Accidents happen | FAIL / Epic Fail | Know Your Meme

யாழ்.கள உறுப்பினர்கள்.. "முதலை வாயில், தலை கொடுக்க"  அவ்வளவு முட்டாள்கள் இல்லை. 😂
திலானி என்ற பெண்ணிடம் 1000 கோடி ரூபாவுக்கு மேல் கொடுத்த 
இலங்கை சிங்கள, முஸ்லீம் வர்த்தகர்களும், பிக்குகளும்... ஏமாந்து போய் நிற்கிறார்கள்.
புலம் பெயர் தமிழரை ஏமாற்றுவது  ஒரு பொருட்டே அல்ல.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையில்...  தமிழருக்கு, சிங்களவர்களால் பிரச்சினை என்று 
கனடாவில் அகதி அந்தஸ்து எடுத்து, நாலு பணத்தை சம்பாதித்து...
சிங்கள நாட்டுக்கு  பொருளாதார பிரச்சினை என்றவுடன்...
கோட்டு, சூட்டு  போட்டுக் கொண்டு, முதல் ஆட்களாக கொழும்பில் போய் நிற்கிறார்கள்.
எங்கள் இனம் இப்படித்தான். குறுக்கு வழியில் ஓடி, இனத்தை விற்றுப் பிழைப்பார்கள்.
இந்த மக்களுக்காக போராடிய... அந்தத் தலைவன் தான் பாவம். 😢

இவர்கள் யார் யார் என அறிந்தால் மல வாசலால் சிரிப்பீர்கள்.

அத்தனைபேரும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே இலங்கை அரசுடன் பகிரங்கமாக  இணைந்து செயற்பட்டவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டுவதில்லை. நாங்கள் மட்டும்தான் அவர்களது பெயரை வைத்து தமிழர் என கூறிக்கொள்கிறோம். 

இங்கே விவாதப் பொருளாக்குவதற்கு உரிய ஆட்கள் இவர்கள் இல்லை. 

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

இவர்கள் யார் யார் என அறிந்தால் மல வாசலால் சிரிப்பீர்கள்.

அத்தனைபேரும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே இலங்கை அரசுடன் பகிரங்கமாக  இணைந்து செயற்பட்டவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டுவதில்லை. நாங்கள் மட்டும்தான் அவர்களது பெயரை வைத்து தமிழர் என கூறிக்கொள்கிறோம். 

இங்கே விவாதப் பொருளாக்குவதற்கு உரிய ஆட்கள் இவர்கள் இல்லை. 

போராட்ட காலத்திலேயே... இவர்கள், சிங்களத்துடன் இணைந்து செயல் பட்டமையால்...
அந்த நன்றிக் கடனுக்காக...இவர்கள் போடும் முதலீட்டுக்கு, 
ஸ்ரீலங்கா இவர்களை ஏமாத்தாது   என்று  சொல்லலாமா?  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

போராட்ட காலத்திலேயே... இவர்கள், சிங்களத்துடன் இணைந்து செயல் பட்டமையால்...
அந்த நன்றிக் கடனுக்காக...இவர்கள் போடும் முதலீட்டுக்கு, 
ஸ்ரீலங்கா இவர்களை ஏமாத்தாது   என்று  சொல்லலாமா?  🤣

வங்குரோத்தில இருக்கும் நிறுவனத்தில் யாரும் முதலிடுவார்களா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தாம் தொடர்புபடவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள்,

🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கும்  titanic   கப்பலுக்கு, காப்பாற்ற ...கயிறுகட்டி இழுப்பது  போல 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இவர்கள் யார் யார் என அறிந்தால் மல வாசலால் சிரிப்பீர்கள்.

அத்தனைபேரும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே இலங்கை அரசுடன் பகிரங்கமாக  இணைந்து செயற்பட்டவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டுவதில்லை. நாங்கள் மட்டும்தான் அவர்களது பெயரை வைத்து தமிழர் என கூறிக்கொள்கிறோம். 

இங்கே விவாதப் பொருளாக்குவதற்கு உரிய ஆட்கள் இவர்கள் இல்லை. 

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தாம் தொடர்புபடவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள்.

இதற்கு மேல் இவர்களை இனம் காண்பது கடினமா என்ன?

Link to comment
Share on other sites

கனடா வர்த்தகர்களின் முக்கிய நோக்கம் இலங்கையின்மீட்சி அல்ல. முதலிட்டு இலாபம் பார்ப்பதே. பேச்சுவார்த்தை நடப்பதைப் பார்த்தால்  எழுதப்படாத சட்டங்களினூடாக வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளது. இவர்களின் ஆலோசனைகள் மூலம் தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான வழிகள் இருக்குமானால் வரவேற்கத்தக்கது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

 இவர்களின் ஆலோசனைகள் மூலம் தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான வழிகள் இருக்குமானால் வரவேற்கத்தக்கது.

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

கனடா வர்த்தகர்களின் முக்கிய நோக்கம் இலங்கையின்மீட்சி அல்ல. முதலிட்டு இலாபம் பார்ப்பதே. பேச்சுவார்த்தை நடப்பதைப் பார்த்தால்  எழுதப்படாத சட்டங்களினூடாக வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளது. இவர்களின் ஆலோசனைகள் மூலம் தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான வழிகள் இருக்குமானால் வரவேற்கத்தக்கது.

On 5/11/2022 at 09:12, Kapithan said:

அத்தனைபேரும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே இலங்கை அரசுடன் பகிரங்கமாக  இணைந்து செயற்பட்டவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டுவதில்லை. நாங்கள் மட்டும்தான் அவர்களது பெயரை வைத்து தமிழர் என கூறிக்கொள்கிறோம். 

கிடைச்ச சந்தில் கடா வெட்ட வருகிறார்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர்களின் கடந்த 2௦ வருட வாழ்க்கையை பார்த்தால் நடக்கபோவது நல்லதா கெட்டதா என்று மற்றது இங்கு கோட்டு போட்டுகொண்டு திரியும் நம்மவர்களின் அரைவாசி கூட்டம்  வெட்டி பந்தா கூட்டம் சமர் நேரம் வெள்ளையோ கறுப்பனோமிகப்பெரும் பதவியில் இருப்பவர்கள்  சோர்ட்ஸ் உடன் சைக்கிளில் போவார்கள்  நம்மவர்கள் அந்த வெக்கையிலும் கோர்ட்டும் டையும் கட்டிக்கொண்டு அரைகுறை இங்கிலீசில் பினாத்தி கொண்டு கல்யாண வீடுகளில் பந்தா பரமசிவனாய் இருப்பார்கள். உண்மையில் பணமுள்ளவன் அர்த்த ராத்தரியில் குடைபிடிக்க மாட்டன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கிடைச்ச சந்தில் கடா வெட்ட வருகிறார்கள் 

இவர்கள் 5வருடங்களுக்கு முன்னரும் இதைப்போல ஒருமுறை இலங்கை சென்று வந்தவர்களே. இந்தமுறை ஓரிரு புதிய முகங்கள். இதில் ஒருவர் வீடு விற்பனை முகவர. 

. அம்புட்டுதே. 

  • Haha 1
Link to comment
Share on other sites

32 minutes ago, பெருமாள் said:

வந்தவர்களின் கடந்த 2௦ வருட வாழ்க்கையை பார்த்தால் நடக்கபோவது நல்லதா கெட்டதா என்று மற்றது இங்கு கோட்டு போட்டுகொண்டு திரியும் நம்மவர்களின் அரைவாசி கூட்டம்  வெட்டி பந்தா கூட்டம் சமர் நேரம் வெள்ளையோ கறுப்பனோமிகப்பெரும் பதவியில் இருப்பவர்கள்  சோர்ட்ஸ் உடன் சைக்கிளில் போவார்கள்  நம்மவர்கள் அந்த வெக்கையிலும் கோர்ட்டும் டையும் கட்டிக்கொண்டு அரைகுறை இங்கிலீசில் பினாத்தி கொண்டு கல்யாண வீடுகளில் பந்தா பரமசிவனாய் இருப்பார்கள். உண்மையில் பணமுள்ளவன் அர்த்த ராத்தரியில் குடைபிடிக்க மாட்டன் .

இருக்கலாம். இவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தேடி அறிவது தேவையற்றது.

மிக முக்கியமானது இவர்கள் கனடிய தமிழர் வர்த்தகர்களின் பிரமுகர்கள். இலகுவில் தமிழர்களுக்கு எதிரானவர்களாக ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. ஏனென்றால் கனடிய வர்த்தகர்களின் பலம் இவர்களின் பின் உள்ளது.

மொத்தத்தில் மறுபடியும் ஒரே கேள்வியில் வந்து முடிக்க வேண்டியுள்ளது. அதாவது ஏன் தமிழர் நலன்சார்ந்த சர்வதேச கட்டமைப்பை எம்மால் உருவாக்க முடியாமல் உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அவல நிலை

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வது எளிதல்ல. ஓரிரு வருடங்களில் முடிந்துவிடப் போவதில்லை. இதற்கு பத்து அல்லது இருபது வருடங்கள் அல்லது ஒரு தலைமுறை ஆகலாம் என்றும் கலாநிதி ரொஹான் பெத்தியகொட குறிப்பிட்டார்.

2009 ல் இருந்து போய்ப் போய் வாறாக்கள்...இவை . மேலே உள்ளதை ஒரு சிங்கள ஆள்தான் சொன்னது...இது தெரியும் தானே...தெரிந்தும் ஈரப்பலாக்காய் கறியும் கட்ட சம்பலும் சாப்பிடப் போனவையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இருக்கலாம். இவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தேடி அறிவது தேவையற்றது.

மிக முக்கியமானது இவர்கள் கனடிய தமிழர் வர்த்தகர்களின் பிரமுகர்கள். இலகுவில் தமிழர்களுக்கு எதிரானவர்களாக ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. ஏனென்றால் கனடிய வர்த்தகர்களின் பலம் இவர்களின் பின் உள்ளது.

மொத்தத்தில் மறுபடியும் ஒரே கேள்வியில் வந்து முடிக்க வேண்டியுள்ளது. அதாவது ஏன் தமிழர் நலன்சார்ந்த சர்வதேச கட்டமைப்பை எம்மால் உருவாக்க முடியாமல் உள்ளது?

இவைக்குப் பின்னால் வார்த்தக சமூகம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...ஆனால் நாட்டாமைத்தன்மை நிறைய..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

வர்த்தக சமூகம்  என்பது Mகவும் பிழையான கூற்று. 

குண்டூசி விக்கிறவனெல்லாம் பிஸ்னெஸ் மக்னெற் பகிடிதான் நினைவிற்கு வருகிறது. 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

வர்த்தக சமூகம்  என்பது Mகவும் பிழையான கூற்று. 

குண்டூசி விக்கிறவனெல்லாம் பிஸ்னெஸ் மக்னெற் பகிடிதான் நினைவிற்கு வருகிறது. 

தமிழினம்  மிகவும் கவனமாக இருக்கவேண்டிய விடயம்

யாரை வளர்த்து  விடக்கூடாது

எமக்கு  தலைமை  தாங்க விடக்கூடாது  என்பதே....

Link to comment
Share on other sites

7 hours ago, alvayan said:

இவைக்குப் பின்னால் வார்த்தக சமூகம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...ஆனால் நாட்டாமைத்தன்மை நிறைய..

1 hour ago, Kapithan said:

வர்த்தக சமூகம்  என்பது Mகவும் பிழையான கூற்று. 

குண்டூசி விக்கிறவனெல்லாம் பிஸ்னெஸ் மக்னெற் பகிடிதான் நினைவிற்கு வருகிறது. 

பிசின் இல்லாதவர்கள் இவ்வளவு செலவில் ஜனாதிபதி முதற்கொண்டு சந்தித்துள்ளனர். ஒருவர் இருவரல்ல 17 பேர். அதுவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸின் தலைமையில் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரைச் சந்திக்கப் போகின்றனர். இதையும் சாராரணமாகக் கடந்து போவோம். 😕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

பிசின் இல்லாதவர்கள் இவ்வளவு செலவில் ஜனாதிபதி முதற்கொண்டு சந்தித்துள்ளனர். ஒருவர் இருவரல்ல 17 பேர். அதுவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸின் தலைமையில் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரைச் சந்திக்கப் போகின்றனர். இதையும் சாராரணமாகக் கடந்து போவோம். 😕

சிங்களவனை மோட்டு சிங்களவன் எண்டமாதிரித்தான்… கடைசியா அந்த மோடன் தான் கடைசியா உலகநாடுகளுடன் சேர்ந்து தந்திரமா கதைய முடிச்சவன்..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

பிசின் இல்லாதவர்கள் இவ்வளவு செலவில் ஜனாதிபதி முதற்கொண்டு சந்தித்துள்ளனர். ஒருவர் இருவரல்ல 17 பேர். அதுவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸின் தலைமையில் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரைச் சந்திக்கப் போகின்றனர். இதையும் சாராரணமாகக் கடந்து போவோம். 😕

இணை,

இவர்களின் பெரும்பாலானவர்களின் பின்புலம் அறிந்தவன் என்கின்ற வகையில் கூறுகிறேன், இவர்கள் எவரும் கனேடிய தமிழ்வர்த்தக சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் ஆட்களல்ல. 

ஆனால், 

இலங்கையில் மீண்டும் கால்பதிக்கும் எண்ணத்துடன் பெருமளவான தமிழர்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழர்களாக அல்ல, கனேடியத் தமிழர்களாக. 

நீண்ட கால நோக்கில் இவை எங்களுக்கு பலம் சேர்க்கக் கூடியவை என்கின்ற வகையில் இந்த முயற்சிகளை நான் வரவேற்கிறேன். (உந்த குழுவினரை நான் குறிப்பிடவில்லை )

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இலங்கையில் மீண்டும் கால்பதிக்கும் எண்ணத்துடன் பெருமளவான தமிழர்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழர்களாக அல்ல, கனேடியத் தமிழர்களாக. 

நானும்தான்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிங்களவனை மோட்டு சிங்களவன் எண்டமாதிரித்தான்… கடைசியா அந்த மோடன் தான் கடைசியா உலகநாடுகளுடன் சேர்ந்து தந்திரமா கதைய முடிச்சவன்..

சேர்ந்து கதை  முடித்தவர்களில் ஓட்டு  மற்றும் ஒட்டாத  தமிழ்க்குழுக்களின்  பங்கு  தான் 90 வீதம்

இது நமக்கு முன்னால்  நடந்த  வரலாறு

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.