Jump to content

பால் மாற்றிய தாய் கைது


Recommended Posts

‘பால்’ மாற்றிய தாய் கைது

 

‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர்.

பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை, பதவியைச் சேர்ந்த தாய் மாற்றிக்கொண்டார் என கலன் பிந்துனுவைச் சேர்ந்த தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட தாய்,  1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். வழக்கு 2023 மே மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளியு பஸ்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.  

https://www.tamilmirror.lk/செய்திகள்/பல-மறறய-தய-கத/175-306945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலையங்கம், குழந்தையை மாற்றி எடுத்துச் சென்ற தாய் என்று போடலாமே தமிழ்மிரர்?

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நல்ல தலையங்கம், குழந்தையை மாற்றி எடுத்துச் சென்ற தாய் என்று போடலாமே தமிழ்மிரர்?

கூகிளில் மொழிபெயர்க்கும்போது அது Gender என்பதை பால்(ஆண்பால் / பெண்பால் ) என மொழிபெயர்த்திருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நல்ல தலையங்கம், குழந்தையை மாற்றி எடுத்துச் சென்ற தாய் என்று போடலாமே தமிழ்மிரர்?

 

17 minutes ago, Kapithan said:

கூகிளில் மொழிபெயர்க்கும்போது அது Gender என்பதை பால்(ஆண்பால் / பெண்பால் ) என மொழிபெயர்த்திருக்கும் 🤣

 

2 hours ago, nunavilan said:

பொறுப்பதிகாரி டப்ளியு பஸ்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.  

மேலே இருக்கும் பந்தியில்… டப்ளியு பஸ்நாயக்க என்று உள்ளது. 
உண்மையில் அது, w. பஸ்நாயக்க என்று வந்திருக்க வேண்டியது என நினைக்கின்றேன்.
எங்களது தமிழ் ஊடகங்கள் எதை நோக்கிச் செல்கிறது என்று புரியவில்லை.
செய்யத் தெரியாத வேலைக்கு இவர்கள் ஏன் போகின்றார்கள்.
இப்படியான வேலைகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி ஒன்று நிர்ணயிக்க வேண்டும்.
மொழியுடன் இவர்கள்… குரங்குச் சேட்டை விடுவது ஆபத்தானது. அதை அனுமதிக்க முடியாது.

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "பாலினம்  மாற்றிய தாய்" என்று வந்திருக்கலாமோ? ஒழுங்கா தமிழ் எழுத தெரியாதவனெல்லாம்   பத்திரிகையாளர்...ஆகினால் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

கூகிளில் மொழிபெயர்க்கும்போது அது Gender என்பதை பால்(ஆண்பால் / பெண்பால் ) என மொழிபெயர்த்திருக்கும் 🤣

கூகிளில் மொழிபெயர்த்து செய்தி போடுமளவுக்கு சிங்களவன் எழுதுகிறானோ? நம்ம ஆக்கள் வாள்வெட்டு, போதைப்பாவனை செய்திபோட கூகிள். இனிமேல்  பிரசவ விடுதிக்கு இராணுவ காவல் போடச் சொல்லி ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பவேண்டும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
    • உண்மை, நலன்களையல்ல, தமது பகுதிகளில் கட்டுப்பாட்டிற்குற்பட்ட அபிவிருத்தி. இது அனுமதிக்கப்பட்டதற்கான ஒற்றை காரணம், தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்களை தமிழர்களுடன் இணைய விடாது பிரித்தெடுத்து, தமிழரூகெதிரான போரில் அவர்களைப் பயன்படுத்தி தமிழ‌ர்களின் அபிலாஷைகளை முற்றாக அழிப்பதற்காகத்தான். 2009 வரை அரசின் செல்லபிள்ளைகளாக இருந்த  ஹிஸ்புள்ளா, ரவூப் ஹக்கீம், பதிருதீன் ஆகியோர் இப்போது எங்கே? 2009 இற்குப் பின்னர் முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தபோதும் கூட அச்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட களுத்துறை, உகணை உள்ளிட பிரதேசங்கள் மீதான வன்முறைகளை அவர்களால் தடுக்க முடிந்ததா? தமது சொந்தப் பைகளை நிரப்பி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்வம் ஏற்படுத்தியதை விட அவர்கள் முஸ்லீம் இனத்தின் நலன்களைக் காக்க செய்த நடவடிக்கைகள் என்ன? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் தீகவாபியை அஷ்ரப்பின் காலத்திலேயே அரசு அடாவடியாக வளைத்துப் போட்டதே? அப்போது அஷ்ரப்பால் செய்ய முடிந்தது என்ன? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.