Jump to content

நேபாளத்தில் நிலநடுக்கம், 6 பேர் பலி: டெல்லியில் உணரப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் நிலநடுக்கம், 6 பேர் பலி: டெல்லியில் உணரப்பட்டது

 

டெல்லியில் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

50 நிமிடங்களுக்கு முன்னர்

நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது.

டெல்லி தேசிய தலைநகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை இரண்டு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில நடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

பிபிசி நேபாளி சேவையிடம் பேசிய நேபாளத்தின் டோட்டி மாவட்ட தலைமை மாவட்ட அதிகாரி கல்பனா ஷ்ரேஸ்தா

 

டெல்லி தலைநகர் பகுதியில் சுமார் 20 விநாடிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கம் நவம்பர் 9ஆம் தேதியன்று 1:57 மணிக்கு ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.

டெல்லியில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு பலமாக இருந்தது. பல பகுதிகளில் இரவு நேரத்திலேயே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/ce9q6q9rz4ko

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.