கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி பதியப்பட்டது November 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது November 10, 2022 லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு! லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார். நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பிலும், 4பேர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் விடுதலை குறித்து இந்த சந்திப்பில் நன்றி தெரிவித்த லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன், எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் வலியுறுத்தி உள்ளார். அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தைப்பொங்கலுக்கு மற்றும் ஒரு தொகுதி அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் வடக்கு கிழக்கின் சமகால அரசியல் நிலை, பொருளாதார அபிவிருத்தி, முதலீடு குறித்த விடயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை அல்லிராஜா சுபாஸ்கரனின் வேண்டுதலுக்கு அமைய விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பது உணரப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, விடுதலை பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த வாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1309723 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பாலபத்ர ஓணாண்டி Posted November 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 10, 2022 இது பொய் என்று யாழ் இணையத்தில் இன்னொரு திரியில் பலர் மறுத்து எழுதி இருந்தனர்.. ஆனால் இங்கு அரசே ஒத்துகொண்டதுபோல் இருக்கு.. எது உண்மை..? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted November 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 10, 2022 3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said: இது பொய் என்று யாழ் இணையத்தில் இன்னொரு திரியில் பலர் மறுத்து எழுதி இருந்தனர்.. ஆனால் இங்கு அரசே ஒத்துகொண்டதுபோல் இருக்கு.. எது உண்மை..? @shanthy அந்த செய்தியை பிரசுரித்தவர் நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலேயே அதை இங்கு எழுதியிருந்தேன். அப்போது அது நக்கலாக இங்கே பார்க்கப்பட்டது ஆனால் இந்த முறையில் அரசு நடவடிக்கைகள் தவறு என்பது எனது சொந்த கருத்து Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 11, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 11, 2022 18 hours ago, தமிழ் சிறி said: லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழரின் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு பெற்றுத்தந்து விடுவாரெல்லே. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 11, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 11, 2022 18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said: இது பொய் என்று யாழ் இணையத்தில் இன்னொரு திரியில் பலர் மறுத்து எழுதி இருந்தனர்.. ஆனால் இங்கு அரசே ஒத்துகொண்டதுபோல் இருக்கு.. எது உண்மை..? ஒருவரே எதிர்த்தும் ஆதரித்தும் கருத்து எழுதி இருக்கிறார், பொறுத்திருந்தால் உண்மை வெளிவரும்! Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts