Jump to content

ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 06:24 PM
image

இலங்கையரான பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என இந்திய அமுலாக்கத் துறையினரிடம் டெல்லி நீதிமன்றமொன்று இன்று கேள்வி எழுப்பியது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சுமத்தப்பட்டவர்களின் பெயருடன் அமலாக்கத்துறை பணியகம் இணைந்திருந்தது

 இவ்வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக  ஜாக்குலின் பெர்னாண்டஸ் (37) மீது இந்திய அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டி இருக்கிறது. அதோடு சுகேஷிடமிருந்து 10 கோடி  ரூபா மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால பிணை பெற்றுள்ளார். இவ்வழக்கில் நிரந்தர பிணை வழங்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்,  தெரிவித்தனர். மொபைல் போனில் உள்ள விடயங்களை அழித்து விசாரணையை தாமதப்படுத்தியதாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 

ஜாக்குலின் நாட்டை விட்டு செல்ல விரும்பினார் என்றும், ஆனால் அவர் பெயர் வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றதால் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்றும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் முன்பு நிறுத்தி விசாரித்தபோது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டது.

ஜாக்குலின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் இன்று நவம்பர் 10 ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன் அதுவரை ஜாக்குலினுக்கான பிணை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜாக்குலினின் மனு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, '50 லட்சம் ரூபாவை நாங்;கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் நாம் கண்டதில்லை. ஆனால், ஜாக்குலின் 7.14 கோடி ரூபாவை வேடிக்கையாக செலவுசெய்துள்ளார். அவரிடம் பணம் உள்ளதால், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அவர் செய்து பார்க்கிறார்' என  அமுலாக்கத்துறை சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.

அதையடுத்து.  வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் சுற்றறிக்கை (எல்ஓசி) ஜாக்குலினுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஜாக்குலினை இன்னும் கைது செய்யாமல் இருப்து ஏன் என கேள்வி எழுப்பியது.

குற்றம்சுமத்தப்பட்ட ஏனையோர் சிறையில் உள்ளனர்.  ஒவ்வொருவருக்கும் ஏன் வித்தியாசமான அளவுகோல்களை பயன்படுத்துகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் நாளை தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு வாங்கியதோடு, அவருக்காக மும்பையின் உயர்மட்ட ஜூஹூ பகுதியில் உள்ள பங்களாவுக்கு முன்பணம் கொடுத்ததாக இந்திய அமலாக்கப் பணியகத்தின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுகாஷ் சந்திரசேகர் 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139673

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.