Jump to content

மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்துரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்துரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல்

8-9.jpg

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம் மற்றும் அலுவலகம் என்பன அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ளன.

அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை இரத்துச்செய்தார்.

நாட்டில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி விண்ணப்பத்திருந்தார்.

எனினும் அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. இவ்வாறான நிலைமையில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டால், அவருக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கடமையாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://akkinikkunchu.com/?p=230592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வும் இலங்கையின் தரத்திற்கு வந்து விட்டதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, alvayan said:

ஐ.நா.வும் இலங்கையின் தரத்திற்கு வந்து விட்டதோ?

ஐ நா அதுக்கும் கீழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அமெரிக்க சார்ப்பு மற்றும் இதர பல கொள்ளையர்கள் பதுங்குமிடமாகி விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தந்துரோபாய காய்நகர்த்தல்"

🤣

 

உந்தச் செய்தி உண்மையோ பொய்யோ யார் கண்டது? 

🤨

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஐநா அமெரிக்க சார்ப்பு மற்றும் இதர பல கொள்ளையர்கள் பதுங்குமிடமாகி விட்டது. 

கேட்டால் திறமைசாலிகளை உள்வாங்குகின்றோம்  எண்டுவானுகள்....:cool:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.