Jump to content

மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்!…


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்!… முதல் சந்திப்பு …. முருகபூபதி.

1498991_1454500634777514_178310239_o-1-7

thumbnail_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0

யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன்.

அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு.

அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார்.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%

இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளானவர். கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் – ஊடகவியலாளர் – பதிப்பாளர் – இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர்.

கலை , இலக்கிய நண்பர்களின் விசுவாசத்திற்குமுரியவர். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானதற்கு இக்காரணங்களே போதும்

கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக எனக்கு அறிமுகமானது 2008 இல்தான்.

முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில், மறைந்த செம்பியன் செல்வனைப் பற்றி கருணாகரன் எழுதியிருந்த கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தமான அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள் லண்டனுக்கு தொலைபேசி தொடர்பெடுத்து முல்லை அமுதனிடம் விசாரித்தேன்.

கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009 இல் நான் வதியும் மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் இலக்கியப்பூக்கள்

அறிமுகப்படுத்தப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன், தமிழகம் திரும்பியதும் எழுதிய புல்வெளிதேசம் நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.

2009 மே மாதம் வன்னியுத்தம் பேரவலத்துடன் முடிவுக்கு வந்தவுடன் கருணாகரன் என்னவானார்..? என்ற கவலையுடன் ஆழ்ந்து யோசித்தேன். ஜெயமோகனுடன் தொடர்புகொண்டு கருணாகரனைப்பற்றி அறிவதற்கு தொலைபேசி இலக்கம் பெற்றேன். அச்சமயம் வவுனியாவில் நின்ற அவரை ஒருவாறு தொலைபேசியில் பிடித்துவிட்டேன்.

பின்னர் 2010 இறுதியில் இலங்கை சென்று கருணாகரனை யாழ். பல்கலைக்கழக வாயிலில் சந்தித்தேன்.

அங்கே கைலாசபதி நினைவு மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலக்கிய நண்பர்கள் எம். ஶ்ரீபதி, பேராசிரியர்கள் சிவச்சந்திரன், துணைவேந்தர் என். சண்முகலிங்கன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இவர்களை அன்று சந்தித்தேன்.

அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், யாழ். பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் கருத்தரங்கிற்கு நானும் வரவிருப்பதாக கருணாகரனுக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தேன்.

அச்சமயம் போரின் வலிசுமந்தவராக சுன்னாகத்தில் தமது குடும்பத்தவருடன் ஒரு வீட்டில் அகதிக் கோலத்தில் அவர் இருந்திருக்கிறார்.

நீர்வேலியில் மதுவன் என்ற கிராமத்தில் வசித்த மல்லிகை இதழின் அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரம் அண்ணரையும், உடல் நலக் குறைவோடிருந்த எழுத்தாளர் சி. சுதந்திர ராஜாவையும் நான் பார்க்கவேண்டும் என விரும்பியதும், அழைத்துச்சென்றார்.10995901_855673341157042_893791411642226

வன்னி பெருநிலப்பரப்பில் போர் ஏற்படுத்திய வடுக்களை காணவேண்டும் எனக்கேட்டதும், அங்கும் அழைத்துச்சென்றார். இரணைமடுக்குளம் முதல் கிளிநொச்சியில் உருவாகிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் வரையில் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச்சென்றார்.

அந்த முதல் சந்திப்பிலேயே இவ்வாறு தனது நேரத்தையும் விரையம் செய்து என்னோடு அலைந்த கருணாகரனைவிட வயதால் நான் மூத்தவன் என்பதனால், அன்று முதல் “ அண்ணாச்சி “ என்றே என்னை விளிப்பதும் அவரது வழக்கமாகியது

.thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

மல்லிகை சந்திரசேகரம் அண்ணருடன் என்னை நிற்கவைத்து கருணாகரன் எடுத்த ஒளிப்படம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்தது.

அவ்வேளையில் மல்லிகை, கொழும்பு – ஶ்ரீகதிரேசன் வீதியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது.

கருணாகரன் எழுதிய செம்பியன் செல்வன் பற்றிய கட்டுரையிலிருந்து தொடர்ச்சியாக அவரது சமூக ஆய்வுகள் – இலக்கியப் பிரதிகள் – பத்தி எழுத்துக்கள் – கவிதைகள் – தமிழக இதழ்களில் வெளியான அவரது இலக்கியக் கடிதங்கள் உட்பட அவர் சம்பந்தப்பட்ட பிரதிகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருகின்றேன்

.thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0

பதினான்கு சிறுகதைகளைக் கொண்ட அவரது வேட்டைத் தோப்பு நூலில் 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் 14 ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கில் போர் உக்கிரமாக நடந்த காலப்பகுதியில்தான் அவை எழுதப்பட்டன என்பது தெளிவு.

ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் – ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் – பலியாடு – எதுவுமல்ல எதுவும் – ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் , நெருப்பின் உதிரம் , இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் , படுவான்கரைக் குறிப்புகள், நினைவின் இறுதி நாள் , உலகின் முதல் ரகசியம், கடவுள் என்பது துரோகியாயிருத்தல் , இரவின் தூரம் , மௌனத்தின் மீது வேறொருவன் முதலான கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டு கவிஞராகவே நன்கு அறியப்பட்ட கருணாகரன், வேட்டைத்தோப்பு மூலம் தன்னை சிறந்த சிறுகதைப் படைப்பாளியாகவும் அழுத்தமாக அடையாளம் காண்பித்திருக்கிறார்

.thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%

அவருடைய கவிதைகள் சிங்களம் – ஆங்கிலம் – மலையாளம் – கன்னடம் – பிரெஞ்சு மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

அதுபோன்று அவரது சிறுகதைகளும் பிறமொழிகளில் பெயர்க்கப்படவேண்டியது என்பதே எனது வாசிப்பு அனுபவம் கூறும் செய்தி.

சில கதைகளை எந்த ஒரு வரியையும் நீக்காமல் தனித்தனி வரியாக பதிவுசெய்தால் ஒரு நெடுங்கவிதையை அங்கு காணமுடியும். அவர் இயல்பிலேயே ஒரு கவிஞர்தான் என்பதையே அவை நிரூபிக்கின்றன

.thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0

ஈழ அரசியலையும் அது எம்மக்களுக்கு திணித்த ஆயுதப்போராட்டத்தையும் அதன்விளைவில் விடிவே தோன்றாமல் அவலமே எஞ்சிய கொடும் துயரத்தையும் கருணாகரனின் கதைகள் பேசுகின்றன.

கருணாகரன் மூலமே எனது சொல்ல மறந்த கதைகள்

,thumbnail_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0

சொல்லத்தவறிய கதைகள் ஆகிய நூல்களும் வெளிவந்தன.

1963 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்திருக்கும் கருணாகரனுக்கு, இனிவரும் ஆண்டு மணிவிழாக்காலமாகும்.

வாழ்த்துக்கள்.

( நன்றி: யாழ். தீம்புனல் )

 

 

https://akkinikkunchu.com/?p=230544

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

இந்த நூல்களை எங்கே வேண்டலாம்.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • https://www.facebook.com/100001034390116/posts/pfbid02erYLr4AFaaNQikWP1rFPxi2tQZ4BjYqyxuQS9E6b7dkPmeASKq6FNbV9F22JwNqol/https://www.facebook.com/1797810269/posts/pfbid0STW3dCxy77fUJewMZqDSRRs3ESrNNZMrRNcxiuPixU3Hmbz76vhDmCw4NZgcug2kl/
  • வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி       தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ         அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு.  குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு.  இந்தியாவில் மோடியின் இந்து தேசியவாதம், பிலிப்பைன்ஸில் டுடெர்ட்டின் போதைப்பொருள் போரும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும்,  தாய்லாந்து அரசியலில் இராணுவம் மற்றும் முடியாட்சியின் மறுபிரவேசம், ஜப்பானில் ஷின்சோ அபேயின் பழைமைவாதம் நோக்கிய திருப்பம், ஜைனிச்சி கொரியர்கள் (பின்கொலனித்துவ ஜப்பானில் வசிக்கும் கொரிய சிறுபான்மையினர்) மீதான வெறுப்பரசியல் - எதிர்ப்புப் போராட்டங்கள், தென் கொரியாவில் மத்திய இடது அரசாங்கத்துக்கு எதிராக அதிவலதுசாரி டேகியூக்கி (தென் கொரிய தேசிய கொடி) அமைப்பால் அணிதிரட்டப்பட்ட பேரணிகள் போன்றவை, தீவிர வலதுசாரிகளின் அரசியல் செயற்பாட்டிலிருந்து, ஆசியா விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.  மேற்சொன்ன இவ்வரசியல் முன்னேற்றங்கள் உதாரணங்கள் மட்டுமே! ஆசிய ஜனநாயக நாடுகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில், அதிவலதுசாரிகளின் எழுச்சி, புதிய அரசியலை நோக்கி நகர்த்துகிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்கின்றது.  இந்தப் பிராந்தியத்தின் எதேச்சதிகாரப் போக்கின் மையப் பங்குதாரர்கள் யார்? அவர்கள் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் கதையாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? ஜனநாயக அரசியலில் அவற்றின் தாக்கங்கள் என்ன ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில், எங்களின் அறிவு கணிசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.  அதிவலதுசாரி அரசியலை ஆதரிக்கும் நிறுவன உயரடுக்குகள், தமக்கான அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் கீழ்மட்ட சிவில் சங்கங்கள் போல அணிதிரட்டுகின்றன. இந்த இயக்க வகை குழுக்கள், ஜனநாயகச் சீரழிவுடன் தொடர்புடையவை. இவ்வகைப்பட்ட அதிவலதுசாரி குழுக்களின் எழுச்சிக்கு, ஜனநாயகச் செயற்பாட்டில் அக்கறையற்ற மக்கள் திரளும் பங்களிக்கிறது.   உலகெங்கிலும் தீவிரவாதம் மற்றும் ஜனநாயக பலவீனத்தின் தொந்தரவான அரசியலைப் பற்றி பேசும்போது, ஆசிய சூழலில் தீவிர வலதுசாரி என்பதன் அர்த்தம், விளக்கத்தை வேண்டி நிற்கிறது.  மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ள அதிவலதை, ஜனரஞ்சக, தேசியவாத, இனவெறி என விவரிக்கின்றனர். இந்தியாவின் வலதுசாரி அரங்காடிகள் பற்றிய ஆய்வுகளில், இதே போன்ற விளக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்தக் கருத்தியல் கட்டமைப்புகள், ஆசியா முழுவதும் உள்ள தாராளவாத சக்திகளுக்கு சமமாகப் பொருந்துமா? ஆசியா முழுவதிலும் உள்ள தீவிர அதிவலதுசாரி குழுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகோரல்கள், மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அவர்களது சகாக்களுக்கு ஒத்ததா அல்லது வேறுபட்டதா? அவர்களின் கூற்றுகள், சித்தாந்தங்கள் வேறுபட்டால், அவை எங்கிருந்து பெறப்படுகின்றன? இந்த வரலாற்று தருணத்தில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிர வலதுசாரி அணிதிரட்டலை ஏற்படுத்தும் செயல்முறைகள் மற்றும் காரணங்கள் என்ன? தென்னாசியா எவ்வாறு ஏனைய ஆசியப் பிராந்தியங்களில் இருந்து வேறுபடுகிறது? மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தற்போதைய ஆய்வுகள், நவீன தாராளமய உலகமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை மாற்றத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இன வெறுப்பு ஆகியவையே அதிவலதின் எழுச்சியின் பின்னணியில் இருப்பதாக வாதிடுகின்றன.  அடிப்படையில் இவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய பிற ஆய்வுகள், அரசியல் கட்சிகளின் உத்திகள், இடதுசாரி-முற்போக்குக் கட்சிகளின் தோல்விகள், கவர்ச்சியான தலைவர்களின் பங்கு போன்ற மேல்-கீழ் செயல்முறைகளில் கவனம் செலுத்துகின்றன.  கேள்வி யாதெனில், ஆசியாவில் தீவிர அரசியலை செயற்படுத்துவதற்குப் பின்னால், இதே போன்ற காரண காரியங்களும் சக்திகளும் செயற்படுகின்றனவா அல்லது தாராளவாத சித்தாந்தத்தின் ஒரு குறிப்பிட்ட பாதிப்பைத் தூண்டும் தனித்துவமான நிலைமைகள் உள்ளதா? இந்தப் பிராந்தியத்தின் அதிவலதை ஒரு பரந்த ஒப்பீட்டு அளவுகோலில் எவ்வாறு வைக்கலாம்? இந்த வினாக்கள் முக்கியமானவை. இவற்றை விளங்க, ஆசியா என்ற பெருங்கண்டத்தின் பிராந்தியப் பிரிவுகளை மனங்கொண்டு, அதனடிப்படையில் வலதுசாரி தீவிரவாதத்தின் இயங்குதிசைகளை இனங்காணவியலும்.  ஒருதளத்தில் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்தில் தீவிர தாராளவாத அரசியலின் வெளிப்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மூன்று ஆசிய நாடுகளும், தீவிர வலதுசாரி அணிதிரட்டலின் வடிவங்களைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நிகழ்வுகளை முன்வைக்கின்றன. ஏனெனில் அவற்றின் புவிசார் அரசியல் வரலாறுகள், அதற்கான பொதுவான தளத்தை வழங்குகின்றன, அதேநேரத்தில், நிறுவன வேறுபாடுகள் தனித்துவமான நிலைமைகளை அமைக்கின்றன. மிக முக்கியமாக, அவை அனைத்தும் பிராந்தியத்தில் கெடுபிடிப்போரின் குறிப்பாக கடுமையான மோதல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.  கெடுபிடிப்போர் காலத்தில், ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக, மூன்று நாடுகளும் ஓர் அரசியல் நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை, கெடுபிடிப்போர் கூட்டணி உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்திலிருந்து, இந்நாடுகளில் அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதிலும், உலகளாவிய கம்யூனிச எதிர்ப்பு திட்டத்துடன் இணைந்த அரசியல் உயரடுக்குகளை வளர்ப்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காணப்பட்டது.  ஜப்பான், தாய்லாந்தில் பழைமைவாத தாராளவாத அரசியலுக்கான முடியாட்சி மரபுகள், சித்தாந்தத்தின் மையத்தன்மையை கெடுபிடிப்போர் புவிசார் அரசியல் ஏற்பாடுகள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. கொலனித்துவ மற்றும் போர்க் குற்றங்களின் பொறுப்புக்கூறலில் இருந்து, ஜப்பானின் ஹிரோஹிட்டோ பேரரசரை அமெரிக்கா காப்பாற்றியது, மேலும், ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகளின் மைய அரசியல் சின்னமாக, பேரரசர் பணியாற்றினார்.  தாய்லாந்தில், இராணுவ ஜெனரல்களுடனும் முடியாட்சியுடனும் அமெரிக்கா  கூட்டுச் சேர்ந்தது. 1932இல் முழுமையான முடியாட்சியைத் தூக்கியெறிந்த பிரிடி பானோமியோங்கின் நாடுகடத்தலுக்கு உதவியதோடு, அவரது ஆதரவாளர்களின் அடக்குமுறைக்கும் ஒத்துழைத்தது. தாய்லாந்தில் ஓர் அரசியலமைப்பு முடியாட்சி, இராணுவத்துடன் தனது கூட்டாண்மை மூலம் மாநில விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.  சமகால ஆசியாவில் தீவிர தாராளவாத அரங்காடிகளை அடிபணிய வைக்க, அமெரிக்கா இராணுவத்தைப் பயன்படுத்துவது கெடுபிடிப்போர் அரசியலின் மற்றொரு மரபு. ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைத்த இராணுவத் தலைவர்களின் கறைபடிந்த சாதனைகளை மீறி, தாய்லாந்திலும் தென் கொரியாவிலும் இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் தயாராக இருந்தது.  எனவே, அமெரிக்கா இந்த எதேச்சதிகார நிறுவனங்களை பலப்படுத்தியது. அவை அரசியலில் அடிக்கடி தலையிட்டு, அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டன. போருக்குப் பிந்தைய தாய்லாந்தில் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இராணுவ சதிப்புரட்சிகளுக்கு இடையே நீண்ட கால ஊசலாட்டம் தொடர்ச்சியாக இருந்தது.  இராணுவம் சமீபத்தில் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்குத் திரும்பியது. இவையனைத்தும் கெடுபிடிப்போரின் விளைவிலான புவிசார் அரசியலின் உறுதியான தன்மையை நிரூபிக்கின்றன. இருந்தாலும், 1980களின் பிற்பகுதியில் தென்கொரியா, பல தசாப்தங்களாக நீடித்த இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு மாறியது. 21ஆம் நூற்றாண்டின் வலதுசாரி அரங்காடிகள், 1960களில் தென்கொரியாவை ஆண்ட பார்க் சுங் ஹீ போன்ற எதேச்சதிகார இராணுவத் தலைவர்கள் மீது, தங்கள் அரசியல் பார்வையை மையப்படுத்தினர். 1970களில் அவரது மகள் பார்க் கியூன்-ஹே இதன் நீட்டிப்பாகக் கருதப்பட்டார்.  அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் கீழ், இந்த மூன்று நாடுகளிலும் கெடுபிடிப்போர் ஒழுங்கு வெளிப்பட்டது. பாகுபாடான விவாதங்கள், அரசியல் ‘மற்றவர்களை’ உருவாக்கும் தீவிர வலதுசாரி நிகழ்ச்சிநிரல் ஊக்குவிக்கப்பட்டது.  மேற்குலகில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளைப் போல், பெரும்பாலும் மக்கள் என்ற பெயரில் அணிதிரளும் ஜனரஞ்சக சொல்லாட்சியுடனான அரசியலில், ஆசியாவில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள் இயங்கவில்லை.  மாறாக, ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகள், கொலனித்துவ காலத்தில் ஜப்பானுக்கு முதன்முதலில் குடிபெயர்ந்த இன சிறுபான்மையினரின் உடல் ரீதியாக வேறுபடுத்த முடியாத ஜைனிச்சி கொரியர்களைத் தாக்குகிறார்கள். தென் கொரிய தீவிர வலதுசாரிகள், கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான இராணுவக் கூட்டணியின் தீவிர ஆதரவாளர்களாக, பல தசாப்தங்களாக ‘மக்கள்’ என்ற பெயரில் ஜனநாயகத்துக்காகப் போராடிய மத்திய-இடது முற்போக்காளர்களை சட்டபூர்வமற்றதாக மாற்றுவதற்கு கம்யூனிச எதிர்ப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.  தாய்லாந்தில், முடியாட்சி மற்றும் இராணுவத்தின் கூட்டணி மன்னராட்சிக்கு விசுவாசமற்றவர்கள் என, இராணுவ அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கிறது. இவ்வாறு ஆசியாவில் அதிவலது, ஆழமான விசாரணையை வேண்டி நிற்கிறது.  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-12-ஆசியாவில்-அதிவலதின்-எழுச்சி/91-311474
  • சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்?   சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட அவகாசத்துக்கு பதிலாக, சீனாவின் எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கடனை 15 வருட காலத்துக்கு மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளதாகவும் நிலையில் சீன எக்ஸிம் வங்கியின் அவகாசம் இலங்கையின் பொருளாதார வலிகள் மேலும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க, இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதாக இந்தியா ஏற்கெனவே எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. 10 வருட கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு கால அவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வுக்கு இந்தியா ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/சககலல-தளளம-சனவன-அவகசம/175-311500
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.