Jump to content

முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம்

 

இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது.

வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இக்காணொளியில் இவர் பேசுகிறார்.

அடிப்படையில் சிங்கள பெளத்தரான இவரது கருத்துக்கள் தமிழருக்கு எதிரானவை. ஆனால் தனது எதிரிகளான மகிந்த கோத்தா போன்றோருக்கு எதிரான இவரது குற்றச்சாட்டுக்களில் எமக்கு நடந்த அவலங்களும் வெளிக்கொணரப்படுவதால் இதனை இணைக்கிறேன்.

சிங்களம் தெரிந்தவர்கள் கேட்டுப்பாருங்கள்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, ரஞ்சித்.

இந்த காணொளியினை உங்களுக்கு நேரம் இருக்கும் போது மொழி பெயர்த்து பதிவிடமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

நன்றி, ரஞ்சித்.

இந்த காணொளியினை உங்களுக்கு நேரம் இருக்கும் போது மொழி பெயர்த்து பதிவிடமுடியுமா?

முடியும், பலரை வருத்தக்கூடிய தகவல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் . அதனால் யோசிக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

முடியும், பலரை வருத்தக்கூடிய தகவல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் . அதனால் யோசிக்கிறேன்.

வேண்டாம், உங்கள் முடிவு சரியாகத்தானிருக்கும் என கருதுகிறேன், இறுதியுத்தம் கொடுமையானது (அனைத்து யுத்தமும் கொடுமையானதுதான்) அதன் வலிகளை தொடர்வதில் அர்த்தம் இல்லைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுதித்த :  உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் அடைக்கலம் கோரியிருக்கிறீர்களா?

ஹசித : இல்லை. ஆனால், நாட்டு மக்களுக்கு நண்மை பயக்கவேண்டும் என்பதற்காக சில காரியங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால், பாதுகாப்பான நாடொன்றில் இருந்து பணியாற்றுகிறேன்.

சமுதித்த :   யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டீர்கள், ஏன் இது நடந்தது?

ஹசித : ராணுவத்தில் பலவருடங்கள் பணியாற்றியவன். இதுவரை மக்கள் பார்த்திராத கோணத்திலிருந்து பல உண்மைகளை கொண்டுவருபவன். முன்னால் தளபதி பொன்சேக்காவுக்கெதிரான படுகொலை முயற்சி பற்றி பின்னாள் ராணுவத் தளபதிக்கு தகவல் வழங்கியவன்.

சமுதித்த : சற்றுப் பொறுங்கள், பொன்சேக்காவைக் கொல்ல முயற்சித்தது யார்?

ஹசித : வேறு யாருமல்ல, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராகபக்சதான். ஜப்பானில் பதுங்கியிருந்த முன்னாள் கடற்படை அதிகாரியொருவரை இதற்காக வரவழைத்து சிறையில் வைத்து பொன்சேக்காவைக் கொல்ல கோத்தா திட்டமிட்டார். நான் ஹெயிட்டியில் ஐ நா பாதுகாப்புப் படையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு இந்த தகவல் கிடைத்தது.

சமுதித்த : நீங்கள் ராணுவத்தில் கீழ்நிலை அதிகாரி. உங்களுக்கு இவ்வளவு முக்கியமான தகவல் கிடைத்தது என்று நீங்கள் கூறுவதை நாம் ஏன் நம்ப வேண்டும்?

ஹசித : நான் சொல்வது நம்பகத்தன்மையற்றது என்றால், என்னை எதற்காக ராஜபக்சேக்கள் 19 மாதம் சிறையிலடைத்துவைத்து சித்திரவதை செய்ய வேண்டும்? எதற்காக ஐந்து தடவைகள் என்னை கொல்ல முயற்சிக்க வேண்டும்? யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் புகைப்படத்தை சர்வதேச ஊடகங்களுக்குக் கொண்டுவந்தது நான் தான். யுத்தம் நடந்த அனைத்து இடங்களிலும் நான் இருந்திருக்கிறேன். அங்கு நடந்தவைபற்றிய பூரண அறிவைக் கொண்டிருக்கிறேன். கடைசி 160 கிலோமீட்டர் யுத்தத்தை நான் வந்தே முடித்து வைத்தேன். 

சமுதித்த : நீங்கள்தான் ஏதோ யுத்தத்தை வென்று முடித்த மாதிரி பேசுகிறீர்கள்? ராணுவம் என்று வந்தால், உங்கள் அதிகாரிகளான கமல் குணரட்ண, சவேந்திர சில்வா, கால்லகே, ஜகத் டயஸ் போன்றவர்களின் கட்டளையின்கீழ்த்தான் நீங்கள் யுத்தம் செய்தீர்கள், அதனால்த்தான் யுத்தம் முடிவிற்கு வந்தது. வெறுமனே 160 கிலோமீட்டர் பிடித்தேன், அதைச் செய்தேன் , அதனால்த்தான் யுத்தம் முடிந்தது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? தேவையற்ற கதைகளை பேசுவதை விட்டு, உங்களுக்கு பொன்சேக்காவின் கொலை முயற்சிபற்றி எப்படித்தெரியும் என்று கூறுங்கள்?

ஹசித : எனக்கு ராணுவ புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்த யுத்தம் சாதாரண முறையில் வெல்லப்பட முடியாதது என்பதை நான் உணர்ந்துகொண்டிருந்தேன். அதற்கான காரணம் இந்த யுத்தத்தின் பின்னால் அரசியல் சூழ்ச்சியொன்று இருந்ததையும், அதனைச் செய்பவர்கள் யாரென்பதனையும் நன்கு தெரிந்திருந்தேன். உங்களுக்கு பிரபாகரனின் மனைவிக்கு நடந்த கதி தெரியுமா? அவரது இறந்த உடலின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியான தகவல்களை நான் வெளியில் கொண்டுவரமுடியும் என்றால், யுத்தம் நடந்த முறை தொடர்பாக எனக்கு தகவல்கள் தெரிந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அமெரிக்காவில் வைத்து 2010, மார்கழி 25 இல் சவேந்திர சில்வாவிடம் பேசும்போது பொன்சேக்காவைக் கொல்லச் சதி நடக்கிறது என்று கூறினேன். அதைக் கேட்ட அவர், "சும்மாயிரு, அதற்குள் நீ தலையைப் போடாதே" என்று என்னை எச்சரித்தார். நான் அதன் பிறகு இலங்கைக்கு வந்து அன்றைய தளபதி ஜகத் ஜயசூரியவிடம் நான் அறிந்த உண்மைகளைக் கூறும்போது அவர் அச்சப்பட்டார். "உன்னால் எனது வேலைக்கு உலைவைக்கப்போகிறார்கள், உன்னையும் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார். அவர் தளபதியாக வந்த காலத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்புகளை அவர் கொண்டிருந்தார்.  

சமுதித்த : உங்களை யார் கொல்லப்போகிறார்கள் என்று அவர் கூறினாரா? 

ஹசித : வேறு யார், கோத்தாதான். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து பேரைக் கொல்லத் திட்டமிருந்தது. சரத் பொன்சேக்கா, சவேந்திர சில்வா, மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன ஆகியோரையும் கொல்லத் திட்டம் தீட்டியிருந்தார்கள். ஜப்பானில் பாதாள உலகக் கோஷ்ட்டிகளுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் கடற்படை அதிகாரியொருவரை கோத்தா நாட்டிற்கு வரவழைத்து இக்கொலைகள் பற்றித் திட்டமிட்டபோது இதனை நான் அறிந்துகொண்டேன். மைத்திரிபால, நிமால், ஜோன் செனிவிரத்ன ஆகிய மூவரும் மகிந்த பிரதமராவதை எதிர்த்தவர்கள். சந்திரிக்கா கட்சியின் தலைவராக இருந்தபொழுது மகிந்த அவரிடமிருந்து பிரதமர் பதவி தனக்கு வேண்டுமென்று பலாத்காரமாக பெற்றுக்கொண்டவர். இதனை சந்திரிக்க பலமுறை சொல்லி அழுதிருக்கிறார். நான் இலங்கையில் இருந்த காலத்தில் ராஜபக்ஷேக்களின் அட்டூழியங்கள் குறித்து புத்தகம் ஒன்றினை வெளியிட்டேன். 

  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதித்த : நீங்கள் தளபதியிடம் இக்கொலைத் திட்டங்கள் பற்றிப் பேசும்போது அவர் என்ன சொன்னா?

ஹசித : இதுபற்றி யாரிடம் பேசவேண்டாம், உன்னுடைய வேலையை மட்டும் நீ பார் என்று கூறினார். ஆனால், நானோ, வேலையைப் பார்க்கமுடியாது, இந்த சூழ்ச்சிகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறினேன். உடனே அவர் என்னை ராணுவ பட்டப்படிப்பு முகாமான மின்னேரியாவுக்கு அனுப்பப்போவதாக கூறினார். நானோ, என்னை விலக்கி விடுங்கள், ஆனால் எனது விலகல் கடிதத்தில் ராஜபஷேக்களின் அட்டூழியங்கள் பற்றி நிச்சயம் குறிப்பிடுவேன், எனது விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளும்போது எனது கடிதத்தையும் அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

முடித : சாதாரண கீழ்நிலை அதிகாரியான நீங்கள் உயர் அதிகாரிகளை சந்தித்தீர்கள் என்பதையும், அவர்களுக்கு அறிவுரை கூறீனீர்கள் என்பதையும் எங்களை நம்பச் சொல்கிறீர்களா?

ஹசித : அதுதான் எனது சாமர்த்தியம். எனக்கு எந்த உயரதிகாரியையும் சந்திக்கும் திறமை இருந்தது 59 ஆம் படைப்பிரிவின் தளபதி நந்தன உடவத்த முல்லைத்தீவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த கடுஞ்சமர் ராணுவத்திற்குச் சவாலாக மாறுகிறதே, என்ன செய்யலாம் என்று கேட்டபோது, "சேர், இச்சண்டையினை கஞ்சாவை புகைத்துக்கொண்டு செய்யமுடியாது, நான் சொல்வதுபோல மூன்று பிரிகேட்டுக்களை தனித்தனியாக இறக்கி, கனரக ஆயுதங்களை அனுப்பி அடியுங்கள்" என்று அவரிடம் கூறினேன். நான் சொன்னதுபோல அவர் செய்ததால் 48 கிலோமீட்டர் நீளமான பகுதியை நான் கடுமையான சண்டையின் பிடித்துக்கொண்டோம். அதன் பின்னர் நான் 58 ஆம் படைப்பிரிவிற்குச் சென்றுவிட்டேன். வன்னியின் கடுமையான சண்டைக் களத்திற்கு நான் போக எத்தனித்தபோது பல தளபதிகள் என்னைத் தடுத்தார்கள். போகாதே, போனால் கொல்லப்பட்டுவிடுவாய் என்று கூட என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் பிடிவாதமாகப் போனேன். போய், சவேந்திர சில்வாவின் படையணியுடன் இணைந்துகொண்டே. மன்னாரிலிருந்து முழங்காவில் வரையான வெறும் 40 கிலோமீட்டர்  தூரத்தையே ஒருவருடம், இரு மாத காலம் சண்டையிட்டு பிடித்து வைத்திருந்தார். ஆனால், நான் சென்ற பின்னர், 59 ஆம் படையணியினர் செய்த அதேவகையான தாக்குதல் வியூகங்களை வகுத்து வெறும் இரு வாரங்களில் 120 கிலோமீட்டர்கள் முன்னேறி முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். 

சமுதித்த : அப்படியானால், உங்களின் திறமையினால் மட்டுமே 120 கிலோமீட்டர்களை வெறும் இரு வாரங்களில் கைப்பற்றினீர்கள் என்று கூறுகிறீர்களா?

ஹசித : ஆம். நிச்சயமாக. எமக்கு முப்படையினர், பொலீஸார், பொதுமக்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் ஆதரவும், ஆசீரும் இருந்தது. புத்த பெருமானின் நல்லாசியுடன் நாம் அதனைச் செய்துமுடித்தோம்.

சமுத்தித்த : அப்படியானால், யுத்தத்தின் இறுதிக் கணங்களில் நீங்கள் யுத்த களத்தின் இதயப் பகுதியில் இருந்திருக்கிறீர்கள். அங்கே நடந்த அனைத்துச் சம்பவங்களையும் பார்த்திருக்கிறீர்கள். அப்படியானால் அங்கே நடந்ததாகச் சர்வதேசத்தில் எம்மீது முன்வைக்கப்படும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொன்றது போன்றவற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லவா? 

ஹசித : யுத்தத்தின் இறுதிநாட்களில் அங்கே நடந்த பாரிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசம் நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. நாட்டு மக்களுக்கும் நடந்தவைபற்றி நன்கு தெரியும். ஆனால், அவர்களை வாய்மூடி, மெளனிகளாக வைத்திருப்பதால் யாரும் பேசுவதில்லை. வெள்ளைக்கொடி சரணடைதல் தொடர்பாக  நாமிருக்கும் முன்னரங்கிற்கு சிலர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய வருகிறார்கள் என்று பிரிகேட் மேஜரான எனக்கே தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அதனை எனது பிரிகேட் தளபதிக்கும், பின்னர் 58 ஆவது படையணியின் உயர் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் தெரியப்படுத்தினேன். நான் தெரியப்படுத்தி சில நிமிடங்களின் பின்னர் எமது முன்னரங்கில் காவலில் இருந்த ராணுவ வீரர்கள் தம்மிடம் சரண்டைந்த பல புலித் தலைவர்கள் உட்பட்ட பலரின் வீடியோக்களை எம்மிடம் வந்து காண்பித்தார்கள். 

சமுதித்த : அப்படி அங்கு சரணடைய வந்திருந்தவர்கள் யார்?

ஹசித்த : நடேசன், புலித்தேவன் ஆகிய தலைவர்களுடன் ஒரு பெரும் அணியே வந்திருந்தது. அவர்களை மட்டுமே என்னால் சரியாக அடையாளம் காண முடிந்தது, ஏனையோரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்களைக் கண்டவுடன், ராணுவத்தை அரசியலுக்காகப் பாவிக்கும் நபரான சவேந்திர சில்வா உடனேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவருடன் மறுமுனையில் பேசிய கோத்தபாய, அவர்கள் அனைவரையும் உடனேயே கொன்றுவிடுங்கள், ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறினார்.

சமுதித்த : கொஞ்சம் பொறுங்கள், வெள்ளைக்கொடியுடன் பல புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்திருக்கிறார்கள் என்று சவேந்திர சில்வா பாதுகாப்புச் செயலாளர் கொத்தாபயவுடன் கூறியபோது, அவர்களை அனைவரையும் கொல்லுங்கள் என்று அவர் கூறினார், அப்படித்தானே?

ஹசித : ஆம், நிச்சயமாக. கோத்தாதான் அவர்களைக் கொல்லும்படி சவேந்திரவிடம் கூறினார்.  அங்கிருந்த ஏனைய படை உயரதிகாரிகள் மெளனித்திருக்க, நடக்கப்போவதை அறிந்துகொண்ட நான் உடனேயே சவேந்திர சில்வாவிடம், " சேர், வென்றுவரும் யுத்தத்தை எதிர்த்திசையில் திருப்ப வேண்டாம். இறைச்சிக்காகக் கொல்லக் கொண்டுபோகும் மாட்டையே விடுவிக்கும் நாட்டில் வசிக்கும் நாம், எம்மிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொல்ல முடியாது. அது தர்மம் அல்ல" என்று அவருடன் வாதித்தேன் . கடும் சினங்கொண்ட அவர், "அப்பாலே போடா" என்று என்னை விரட்டினார். பின்னர் இரு மணித்தியாலங்கள் கழித்து, "அவர்களை இங்கே இழுத்து வா " என்னிடம் கூறினார். நான் உடனடியாக அவர்களை அழைத்துவர முன்னரங்கிற்குப் போனேன், ஆனால் அங்கே அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். இந்த தகவல்களையெல்லாம் நான் திரட்டிவைக்கத் தொடங்கினேன். 

46 நிமிட நேர காணொளியில் வெறும் 18 நிமிடங்களையே இதுவரை மொழிபெயர்த்திருக்கிறேன். சிறு வேலையாக வெளியில் போகிறேன், மாலை தொடரலாம்.  இந்த அதிகாரி சிங்கள பெளத்தத்தின் காவலனாக தன்னைப் பார்ப்பவன். ஆதலால் இவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை.

Edited by ரஞ்சித்
  • Like 4
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

46 நிமிட நேர காணொளியில் வெறும் 18 நிமிடங்களையே இதுவரை மொழிபெயர்த்திருக்கிறேன். சிறு வேலையாக வெளியில் போகிறேன், மாலை தொடரலாம்.  இந்த அதிகாரி சிங்கள பெளத்தத்தின் காவலனாக தன்னைப் பார்ப்பவன். ஆதலால் இவன் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை.

எங்கோ சில புள்ளிகளை இணைத்து யாரையோ பலிக்கடாவாக்கிவிட்டு நகருவதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். போர்க்குற்றம் நடைபெற்றது. அதற்கான தண்டனை கொடுத்தாயிற்று. நீங்கள் சேர்ந்து வாழலாம் என்ற இலக்குக்கான பரப்புரைக்கான முன் ஆயத்தம். தமிழினத்தினது இன அழிப்பை ஏற்க மறுக்கும் உலக வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்படியே பொருந்திப்போகும் செயற்பாடாக இருக்கிறது இந்தப்போட்டியின் இதுவரையான மொழிபெயர்ப்பு. மிகுதியையும் பார்ப்போம். ரஞ்சித் அவர்களே, உங்கள் நேரத்திற்கும் முயற்ச்சிக்கும் நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தை ஒதுக்கி, மொழி பெயர்ப்பு செய்தமைக்கு நன்றி ரஞ்சித். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மொழிபெயர்ப்பிற்கு மிக்க நன்றி ரஞ்சித் ஐயனே... தொடர்ந்து இணையுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹசித்த : எமது ராணுவத்திற்கெதிரான போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தில் வெளிவந்தபோது, நான் சிலருடன் இதுதொடர்பாகப் பேசியிருந்தேன். எம்மீது மிகப்பலமான அழுத்தத்துடனான குறச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சமுடித்த : சரத் பொன்சேக்கா ஒரு முறை ராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களைக் கொன்றது உண்மைதான் என்று பேசியது குறித்து உங்கள் கருத்தென்ன?

ஹசித : அவர் கூறியது உண்மைதான். முதலில் அப்படி நடந்ததை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் அரசியல் அழுத்தங்க்களால் அப்படி நடக்கவில்லையென்று கூறியிருந்தார். பிரெட்ரிக்கா ஜான்ஸிடம் ராணுவத்தினர் சரணடைந்தவர்களைக் கொன்றதாகக் கூறியபோது, ஜே வி பி யினர், ராணுவத்தை பொன்சேக்கா காட்டிக்கொடுத்துவிட்டார், நாட்டிற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று போராடவும், பொன்சேக்கா பயந்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் தான் கூறியதையே இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. எமது ராணுவத்தினர் இறுதி சில நாட்களில் குறைந்தது 40,000 பொதுமக்களைக் கொன்றதாக பாரிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. ஆனால், அதுபற்றி விசாரித்த நான் , அது நடந்ததா இல்லையா என்பதை தீர்க்கமாகக் கண்டறிந்தேன். இறுதி நாளில் வெள்ள முள்ளிவாய்க்காலில் பாரிய தீயொன்று உருவாக்கப்பட்டிருந்தது. செய்மதியூடாகக் கூட அதை நாம் பார்த்தோம். ராணுவத்தினர் மக்களைக் கொன்று எரிக்கிறார்கள் என்று பிரச்சாரமும் செய்யப்பட்டது. ஆனால், நடந்தது என்னவெனில் பயங்கரவாதிகள் தம்மிடமிருந்த ஆயுதங்கள், குண்டுகள், எரிபொருட்கள் நிரம்பிய வாகனங்கள் எம்மிடம் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவற்றைத் தாங்களே தீயிட்டார்கள். நான் வெறும் 30 வயோதிபர்களின் உடல்களை மட்டுமே அங்கு கண்டேன். என்னால் இவற்றையெல்லாம் நிழற்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுக்க முடிந்தது. ஆகவேதான் 40,000 பேரைக் கொன்றோம் என்கிற குற்றச்சாட்டிலிருந்து ராணுவத்தை என்னால் காப்பாற்ற முடிந்தது.

சமுடித்த : அப்படியானால் சரத் பொன்சேக்கா கூறியதுபோல வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது என்பது சரிதானே?

ஹசித்த : இல்லை, அவர்களைச் சுட்டுக் கொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்கிற உத்தரவு வந்தவுடன், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் அதிகாரிகளும் இருந்தார்கள். ஆகவே, ராணுவத்தினர் சரணடைந்த புலிகளை அடித்தே கொன்றார்கள். சிலர் உடனேயே மரணிக்க, இன்னும் சில ரெண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை அனுங்கியவாறே கிடந்து இறந்தார்கள். இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கையர்களாகிய நாம் கூர்ந்து அவதானிப்பது தேவையானது. முதலில் உண்மையை ஒப்புக்கொண்ட பொன்சேக்கா பின்னர் அச்சத்தில் இல்லையென்று கூறினாலும்கூட, மீண்டும் தேர்தல் வந்தபோது அப்படி நடந்தது உண்மைதான் என்று கூறினாரே? ஆகவே, அவருக்கும் நடந்த இந்தப் படுகொலைகள் பற்றி யாரோ முழுதுமாக அறியத்தந்திருக்கிறார்கள். 

சமுடித்த : அப்படியானால் பிரபாகரனுக்கும் அவரது பாரியாருக்கும் என்ன நடந்தது? 

ஹசித்த : பிரபாகரனின் மனைவியின் உயிரற்ற உடலை நானே புகைப்படமாக அன்று பதிந்து வைத்திருந்தேன். அதனையே 13 வருடங்கள் கழிந்து தற்போது சர்வதேசத்திற்கு வெளியிட்டிருக்கிறேன். உண்மைகளை வெளியிட வேண்டிய காலம் வந்துவிட்டது. யுத்தத்தை யார் சரியாகச் செய்தது என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரபாகரனின் மனைவி இறந்துகிடந்த இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பின், அதனை எனது மடிக் கண்ணியில் சேமித்து வைக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, கொல்லப்பட்டது அவர்தான் என்பதனை உறுதிப்படுத்தினேன். அவரது உடல் 57 ஆம் படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள்ளேயே கிடந்தது. ஆகவே இதுகுறித்து சவேந்திர சில்வாவிடம் நான் தெரிவித்தபோது, மறுநாள் காலைவரை இதனை வெளியிடவேண்டாம் அன்று கட்டளையிட்டார். ஆகவே, எனது உயர் அதிகாரியின் கட்டளையினைத் தட்டமுடியாமல், மறுநாள் காலையிலேயே கமல் குணரட்ணவிடம் பிரபாகரனின் மனைவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதுபற்றிக் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுடித : அப்போ பிரபாகரனுக்கு என்ன நடந்தது ?

ஹசித்த : உங்களுக்கு அவரது மரணம் பற்றித் தெரிந்திருக்காவிட்டாலும்கூட, உலகிற்கு நன்றாகவே தெரியும். பிரபாகரனின் இளைய மகனும் இன்னும் சிலரும் 12 வி அர் எனும் இடத்திற்குச் சரணடைய வந்திருந்தார்கள். 57 ஆம் படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிரபாகரனின் இளைய மகன் தனது அப்பா இறந்துவிட்டார் என்று அங்கிருந்த ராணுவத்தினரிடம் கூறினார். அவர் உயிருடன் இருந்த புகைப்படங்களையும், சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் எடுத்த புகைப்படங்களையும் ராணுவத்தினரே எடுத்தனர். பிரபாகரனையும் கொன்று அவரது மகனையும் கொன்றது ராணுவத்தினரே. ஆனால், இன்று இன அரசியல் பேசும் ஜே வி பி யினர் ரோகண விஜேவீர கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறார்கள், ஆனால் அவரது மகனோ இன்று வெளிப்படையாகவே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

சமுடித : நான் கேட்கும் கேள்விக்கு நேரடியான பதிலைக் கூறுங்கள். ராணுவத்தினரிடம் சரணடைய வந்த பிரபாகரனின் இளைய மகனை உங்களின் பங்கர் ஒன்றிற்குள் வைத்திருந்துவிட்டுச் சுட்டுக் கொன்றீர்கள், அப்படித்தானே?

ஹசித்த : நான் கொல்லவில்லை. ஆனால் கொன்றது 57 ஆவது படைப்பிரிவினர். நான் வெளிநாட்டில் இருக்கும்போது தம்மிடம் இருந்த புகைப்படங்களைக் காட்டி பாலச்சந்திரனைக் கொன்றதில் உங்கள் பங்கு என்ன என்று கேட்டார்கள், நான் அவர்களிடம் தெளிவாகக் கூறினேன், இது எனது படைப்பிரிவல்ல, கமால் குணரட்ணவின் 57 ஆவது படைப்பிரிவே அவரைக் கொன்றது என்று. ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்ட விடயம் பாலச்சந்திரன் மூலமே எமக்குத் தெரியவந்தது. ஆகவே, அச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட களப்புப் பகுதிக்குச் சென்றபோது அவரது உடலை ராணுவத்தினர் வெளியே கொண்டுவந்துகொண்டிருந்தனர். எம்மிடமிருந்த பிரபாகரனின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கொல்லப்பட்டுக் கிடந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அவர் காலை 1 அல்லது 2 மணிக்கு கொல்லப்பட்டிருக்கலாம். அவரை நாம் கண்டெடுத்தது காலை 5 மணி அள்வில்த்தான். அவரது ஒரு கை நீரில் கிடந்து வெண்ணிறமாக உப்பியிருந்தது. தலையில் சூடு பட்டு மூளை சிதறியிருந்தது. சிங்களத்தில் அடிக்கடி பாவிக்கப்படும் "தலை ஏழு எட்டுத் துண்டுகளாகச் சிதறி கொல்வோம்" என்று நாம் கூறுவதில்லையா? அவ்வாறே அவர் இறந்து கிடந்தார். அவரைக் கொன்றது யாரென்று தெரியாது, அவர் கொல்லப்பட்டதைப் பார்த்தது ஒருவருமில்லை, ஆனால் தலை மட்டும் சிதறிக் கிடந்தது

சமுடித்த : சரி, அப்படியானால் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்பதுபற்றிய தகவல்களை நீங்களை வைத்திருக்கிறீர்களா?  ஏனென்றால் இன்றுவரை பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி ராணுவத்தினரிடம் எந்தத் தகவலும் இல்லையென்று சொல்கிறார்கள்

ஹசித்த : பொட்டு அம்மான் கொழும்பில்த்தானே தனது விளையாட்டைக் காட்டிக்கொண்டிருந்தார். மிக விரைவில் பொட்டு அம்மான் யாரென்பதை நான் மக்களுக்குக் காட்டுவேன்

சமுடித்த : என்ன சொல்கிறீர்கள்? பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று கூறுகிறீர்களா

ஹசித்த : பொட்டு அம்மான் என்பவர் நிழல் போன்ற ஒருவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் தொடர்பாக என்னிடம் நிறையவே தகவல்கள் இருக்கின்றன. அதனால்த்தான் என்னை நெடுங்காலம் சிறையில் அடைத்துவைக்க ராஜபக்ஷேக்களால் முடியாமல்ப் போனது. மகிந்த ராஜபக்ஷவின் வாகனத்தில் புலிகள் கொழும்பிற்குக் குண்டுகளை எடுத்து வந்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன

சமுடித்த : என்னது, மகிந்தவின் வாகனத்தில் புலிகள் குண்டுகளை கொழும்பிற்குக் கொண்டுவந்தார்களா

ஹசித்த : மகிந்த ராஜபக்ஷேக்கள் 1987 இலிருந்து புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருபவர்கள். 2005 தேர்தல்களுக்கு முன்னர் 200 மில்லியன்களையும், தேர்தலின் பின் பில்லியன்களையும் புலிகளுக்கு மகிந்த வழங்கினார் என்று டிரான் அலஸ் மற்றும் சிறிப்பதி சூரியராச்சி ஆகியோர் பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாகவே கூறியிருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? 2005 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் நான் காங்கேசன்துறையில் கடமையில் இருந்தேன். ஒரு நாள் அதிகாலை 1 மணியளவில் யாழ்ப்பாணத்திற்குப் போகலாம் என்று எண்ணி நான் சென்றபோது கொழும்பிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட பல சிங்களவர்கள் யாழ்ப்பாண நகரில் தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதில் சிலர் எனது வீட்டின் அருகில் குடியிருந்த சுதந்திரக் கட்சி இளைஞர் அணியின் செயலாளர் மற்றும் அவரது நண்பர்கள். ஆகவே, இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? உண்மையாகவே 1978 இல்த்தான் புலிகள் தோற்றம் பெற்றார்கள். சிறிமாவும் இந்திரா காந்தியும் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கை ஒன்றின் மூலம் 10,000 தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. அதே காலத்திலேயே நாமும் இந்தியாவில் பயிற்சிக்காகப் போயிருந்தோம். சில இந்திய அதிகாரிகள் என்னிடம் வந்து நீங்கள் தமிழா அல்லது சிங்களமா என்று கூடக் கேட்டார்கள்

சமுடித்த : உங்களது சரித்திரக் கதையினைப் பேசிக்கொண்டிருக்க எம்மிடம் நேரம் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள், மகிந்தவின் வாகனத்தில் புலிகள் கொழும்பிற்கு ஆயுதம் கொண்டுவந்தது உண்மையா இல்லையா?

ஹசித்த : ஆயுதங்கள் இல்லை, குண்டுகள். கொழும்பில் வெடித்த அனைத்துக் குண்டுகளின் பின்னாலும் மகிந்தவே இருந்தார்

சமுடித : என்னது, கொழும்பில் நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் செய்தது மகிந்தவா? அப்படியானால் மத்தியவங்கிக் குண்டுத்தாக்குதல், ரயில், பஸ் குண்டுத்தாக்குதல், கோத்தா மீதான குண்டுத்தாக்குதல், இவையெல்லாவற்றையும் செய்தது மகிந்தவா?

ஹசித்த : அவரேதான். இல்லாவிட்டால், கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சரத் பொன்சேக்கா மீது புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடிந்தது? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அண்மைய காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தினூடாக கோத்தாவையும் மகிந்தவையும் மக்கள் கலைத்தபோது, புலம்பெயர் தமிழர் தாமே அவர்களைக் கலைத்ததாக உரிமை கோரியிருந்தனர். இதற்கான காரணம் மகிந்தவைக் காப்பாற்ற, இலங்கையில் மீண்டும் இனவாத சிக்கலை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். ராஜபக்ஷேக்கள் தடுமாறும் ஒவ்வொரு தருணத்திலும் புலிகளே அவர்களைக் காப்பற்றி வருகின்றனர்

சமுடித : அப்படியானால், மத்திய வங்கி, கொலொண்ணாவை, கோத்தா மீதான தாக்குதல், விமான நிலையத்தின் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு எல்லாமே புலிகளால் அன்றி, ராஜபக்ஷேக்களினால் நடத்தப்பட்டவை  என்று கூறுகிறீர்களா?

ஹசித்த : ராஜபக்ஷேக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டவை என்று கூறுகிறேன்

சமுடித : அப்படியானால், ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே யின் மீதான குண்டுத்தாக்குதலை யார் செய்தது?

ஹசித்த : ஜெயராஜ் மீதான தாக்குதல் மட்டுமல்ல, சந்திரிக்காவைச் சுற்றியிருந்த அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக மகிந்த கொன்றார். சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மகிந்த விஜேசேகர, தாமு தசநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர்  ஆகியோர் உட்பட பலரை புலிகளின் உதவியுடன் மகிந்த கொன்றுதள்ளினார்

சமுடித்த : பல அரசியல்ப் படுகொலைகளை புலிகள் நடத்தியிருந்தாலும்கூட, அவற்றின் பின்னால் மகிந்தவே இருந்தார் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

ஹசித்த : நிச்சயமாக. அதனால்த்தானே 2005 இல் அவர் புலிகளுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கியிருந்தார்

சமுடித்த : நீங்கள் கூறுவதை என்னால் சிறிதும் நம்ப முடியவில்லையே? புலிகளுக்கும் மகிந்தவுக்கும் கொடுக்கல் வாங்கள் இருந்ததென்றால், 2009 இல் பிரபாகரனையும், அவரது பாரியாரையும், மகன்களையும், இன்னும் பலரையும் கொன்று யுத்தத்தை முடித்துவைக்க வேண்டிய தேவை மகிந்தவுக்கு ஏன் வந்தது

ஹசித்த : நீங்கள் மகிந்த யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தார் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. என்னிடம் இவை எல்லாவற்றிற்குமான தகவல்கள் இருக்கின்றன. புரபாகரனின் மனைவியின் உடலை 13 வருடங்களின் பின்னால் என்னால் வெளியிட முடிந்ததென்றால், இன்னும் பல விடயங்களையும் நான் மிக விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுடித : சரி, அப்படியானால் லசந்த விக்கிரமதுங்க, பிரகதீத் எக்னெலிகொட ஆகியோரைக் கொன்றது யாரென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

ஹசித்த : நிச்சயமாகத் தெரியும். அவரைக் கொன்றது ஒரு ஓய்வுபெற்ற பொலீஸ் அதிகாரியும் அவரது உதவியாளர்களான இரு ராணுவத்தினரும் தான். கோத்தாவின் உத்தரவின் பேரிலேயே இதனைச் செய்தார்கள். அவர்களின் கொமேர்ஷல் வங்கிக் கணக்கிற்கு 20 லட்சம் ரூபாய்களை கோத்தா வைப்பிலிட்டார் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே? இவரின் தலைமையிலேயே வெள்ளைவானில் பல ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று கொன்றார்கள். மகிந்தவின் மிக நெருக்கமான உறவினரான பெண்ணை அந்த பொலீஸ் அதிகாரி மணம் முடித்திருந்தார். 

சமுடித்த : சரி, லசந்தவைக் கொன்றவர்கள இப்போது எங்கே? அல்லது எக்னெலிகொடவை என்ன செய்தார்கள் என்றாவது தெரியுமா?

ஹசித்த : லசந்தவைக் கொன்றவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று கூறுவதற்கு நான் மந்திரவாதியல்ல. அதுபோல எக்னெலிகொடவைக் கொன்றது யாரென்று தனக்குத் தெரியும் என்று மகிந்தவே பாராளுமன்றத்தில் கூறியிருந்தாரே? அவரிடமே அதனைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த அதிகாரியின் தகவல்கள் குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கின்றன. இந்தப் பேட்டியின் பிற்பகுதியில் பெளத்த மதம் இலங்கையில் தோன்றியதற்கான சாட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், புத்தபிரான் இந்தியாவில் இல்லாமல் இங்கேயே பிறந்தார் என்பதற்குத் தகவல் உள்ளதாகவும் கூறுகிறான். ஆகவே, இவன் சொல்வதை முழுதுமாக நம்பமுடியாது. ஆனால், பலருக்கும் தெரிந்த சில விடயங்களை நாம் கேள்விப்பட்டவாறே கூறுகிறான். இதனை நம்புவதும், விடுவதும் உங்களின் விருப்பம். இவனது பேட்டியை முழுதுமாகக் கேட்ட பின்னர் எனக்கே இவனை நம்புவது கடிணமாக இருக்கிறது.

நன்றி

  • Like 2
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அரசியல்வாதி ஆக ஏதோ எத்தனிக்கிறார் போலத் தெரிகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில எதுவுமே புதுக்கதை இல்லை.

சகலமும், முன்னரே தெரிந்த தகவல்கள். சில வேலை சிங்களவருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டருக்கலாம்.

யூரியூப்பில வீயுவைக் கூட்டி காசு பார்க்க அவிச்சு இறக்கிறார் போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 14/11/2022 at 02:11, ரஞ்சித் said:

சமுடித்த : அப்படியானால் பிரபாகரனுக்கும் அவரது பாரியாருக்கும் என்ன நடந்தது? 

ஹசித்த : பிரபாகரனின் மனைவியின் உயிரற்ற உடலை நானே புகைப்படமாக அன்று பதிந்து வைத்திருந்தேன். அதனையே 13 வருடங்கள் கழிந்து தற்போது சர்வதேசத்திற்கு வெளியிட்டிருக்கிறேன். 

இவர் வெளியிட்ட படிமம் எங்கே கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2022 at 00:41, நன்னிச் சோழன் said:

இவர் வெளியிட்ட படிமம் எங்கே கிடைக்கும்?

ஹசித்தவின் மடிக்கணிணியில்தான்!

இவர் பல புருடாக்களை விட்டு பேய்காட்டப் பார்க்கின்றார்.

ரஞ்சித், மினக்கெட்டு மொழிபெயர்ப்பு செய்தமைக்கு நன்றிகள். 🙏🏽

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, கிருபன் said:

ஹசித்தவின் மடிக்கணிணியில்தான்!

இவர் பல புருடாக்களை விட்டு பேய்காட்டப் பார்க்கின்றார்.

😂🤣🤣

நன்றி.

இவனிட்டை படிமங்கள் எல்லாம் இருக்குமென்டு நான் நம்பேலை.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.