Jump to content

ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி

 

நளினி

30 நிமிடங்களுக்கு முன்னர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டம், ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் கொல்லப்பட்டது போன்றவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் நளினி ஸ்ரீகரன். பேட்டியிலிருந்து.

கே. 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..

ப. அதற்கு முன்பு நான் சிறையைப் பார்த்ததே கிடையாது. சிறை என்றால் என்னவென்றே தெரியாது. முதன் முதலில் ரிமாண்ட் செய்து தனி செல்லில் அடைத்தபோது மிகவும் பயந்து போய்விட்டேன். கத்தி, அமர்க்களம் செய்து வெளியில் ஓடிவந்துவிட்டேன். எனக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிரை, அதற்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எனது அம்மா ஆகியோரும் கத்திக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்கள். ஆனால், நீங்கள் உள்ளேதான் போகவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பதிலாக அங்கிருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ரைஃபிளை வாங்கி எங்களைச் சுடுங்கள் என்று சொன்னேன்.

கத்திக் கத்தி தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு அது ஒரு கஷ்டமான காலகட்டம். கைதானதற்குப் பிறகு ஐந்து நாட்கள் காய்ச்சல் ஏற்பட்டது. படுத்த படுக்கையாகக் கடந்தேன். இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தூங்கவிடாமல் செய்தார்கள். அதைச் சமாளிக்கும் தன்மை அப்போது எனக்கு இல்லை. தலைவாராமல், பல் தேய்க்காமல் கிடந்தேன். அதிலிருந்து தேறி வருவதற்குள் நெஞ்சு வலி வந்துவிட்டது. நான் நடிப்பதாக பலரும் நினைத்தார்கள். அப்போது அங்கிருந்த மருத்துவர் என்னைப் பரிசோதித்துவிட்டு, எனக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி இருப்பதை உறுதிசெய்தார்.

அதற்குப் பிறகு நிலைமை கொஞ்சம் மேம்பட்டது. அதற்குப் பிறகு கோடியக்கரை சண்முகம் இறந்துவிடவே, கையில் விலங்கெல்லாம் போட ஆரம்பித்தார்கள். எனக்கு வளைகாப்பு நடத்துகிறீர்களா என வேடிக்கையாகக் கேட்பேன்.

அதற்குப் பிறகு அந்த ஒப்புதல் வாக்குமூலம் விவகாரம். நான் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தரவேயில்லை. அதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கடவுளுக்கும் எனக்கும் நிஜம் தெரியும். அதற்குப் பிறகு வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கே மரண தண்டனைக் கைதிகளைப் போல 24 மணி நேரமும் பூட்டியே வைப்பார்கள். இதற்குப் பிறகு எனக்கு குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு நிலைமை சற்று மேம்பட்டது. விசாரணை நடக்கும்போது விடிய விடிய சிகரெட் ஊதிக்கொண்டே இருப்பார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து கஷ்டம்தான்.

கே. உங்களுடைய குடும்பம், ஒரு எளிய செவிலியர் குடும்பம். இந்த விவகாரத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டு, பெரிய பிரச்சனையான நிலையில் அதனை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ப. ரொம்பவும் சிரமப்பட்டோம். குடும்பமே சிதைந்து போனது. அம்மாவின் வாழ்க்கை போனது. என் தங்கை வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கை நாசமானது. நான், எனது கணவர், அம்மா, தம்பி ஆகிய அனைவரும் கைதுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், ஒரு குடும்பம் என்ன ஆகும். பொருளாதாரமும் கிடையாது. யாரும் உதவிசெய்ய வரவில்லை. பணபலம் இல்லை. ஆள்பலம் கிடையாது. எவ்வித ஆதரவும் கிடையாது. குடும்பம் சிதைந்துவிட்டது. இன்றுவரை சரிசெய்ய முடியவில்லை.

கே. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டது தெரிந்தபோது உங்கள் தாயார் அதை எப்படி எதிர்கொண்டார்? ப. எல்லோருக்கும் பெரிய அச்சம் இருந்தது. அம்மாவுக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர், தன் வேலை உண்டு, தான் உண்டு என இருப்பார். இந்த மாதிரி பெரிய சிக்கல் வரப்போவது அவருக்குத் தெரியாது. நாங்கள் எல்லோருமே வயதில் சிறியவர்கள். பெரிய அனுபவம் கிடையாது. இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல்தான் நாங்கள் தவித்தோம்.

கே. எந்த காலகட்டத்தில் இதில் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்..

ப. சிறைக்குள் வழக்கறிஞர் துரைசாமி வந்துபார்த்தார். ஆனால், என்னுடைய வழக்கை எடுக்க அவர் மிகவும் பயந்தார். அவருக்கு பயங்கரமாக  எதிர்ப்பு வந்தது. கொலைமிரட்டல் வந்தது. வீட்டை அடித்து நொறுக்கினார்கள். பாட்டில்களை வீசினார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்றார்கள். அவ்வளவு பரபரப்பான வழக்காக இது இருந்தது. ஆனால், விசாரணை காலகட்டத்திலேயே இந்த வழக்கை நாங்கள் எதிர்கொண்டாக வேண்டும். இருந்தபோதும் துரைசாமியை அமர்த்தவோ, பணம் கொடுக்கவோ எங்களுக்கு வழியில்லை. குழந்தை வேறு இருந்தது. சம்பாதிக்கக்கூடிய வயதில் இருந்த, படித்திருந்த நான்கு பேரும் சிறையில் இருந்தோம். தங்கைக்கு மட்டும் திருமணமாகி, அவர் ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். வழக்கறிஞரே வைக்க முடியாத நிலையில், இலவச சட்ட உதவி மையத்தில் முயற்சி செய்தோம். பெரிய, பெரிய வழக்கறிஞர்களைக் கேட்டுப்பார்த்தோம். பிறகு துரைசாமியையே இலவச சட்ட உதவி மையம் மூலமாகக் கேட்டு வாங்கினோம். விசாரணை ஆறு வருடம் நடந்தது. 300 சாட்சிகள்.

 

நளினி

கே. விசாரணை நீதிமன்றத்தில் உங்கள் 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது என்ன நினைத்தீர்கள்.. அடுத்தகட்டமாக என்ன செய்வதென யோசித்தீர்களா? ப. எல்லோருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி. என் கணவர் அழ ஆரம்பித்தார். ஏ1 (நளினி) என்று சொல்லி, சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு மரண தண்டனை என அறிவித்தார்கள். அதற்கடுத்தபடி ஏ2வுக்கு தூக்கு என்றார்கள். அதற்குப் பிறகு ஏ 3க்கும் தூக்கு என்றவுடன் அவர் சந்தோஷமடைந்தார். இரண்டு பேருமே ஒன்றாகத்தான் சாவோம் என்றார். ஆனால், அந்தத் தீர்ப்பு வந்தவுடன் எல்லோருமே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். வழக்கறிஞர் துரைசாமியும் சோர்ந்துவிட்டார். ஆனால், அதற்குப் பிறகு மேல் முறையீடு செய்யலாம் என்று சொன்னார்கள். தீர்ப்பு வரும் முன்பாக எல்லோருமே நம்பிக்கையுடன் இருந்தோம். அபராதம் மட்டும் விதிப்பார்கள். அதைக் கட்டிவிடலாம் என எல்லோருமே பணமெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கே. ஒரு மிகப் பெரிய கொலை வழக்கில் எப்படி அபராதம் மட்டும் விதிப்பார்கள் எனக் கருதினீர்கள்? ப. அப்படியில்லை. நாங்கள் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தோம். அதைத் தண்டனைக் காலமாக கருதுவார்கள் என நினைத்தோம். மேலும், சிறையில் இருக்கும்போது தண்டனைக் குறைப்புப் பற்றி ஆராய்வதற்கான அதிகாரிகள் எல்லோருமேகூட வந்துவிட்டார்கள். ஏழு வருடம் தண்டனை அளித்தால், அதை ஏற்கனவே அனுபவித்துவிட்ட நிலையில், அபராதம் ஏதாவது விதித்தால், அதை கட்டிவிட்டுச் செல்லலாம் எனக் கருதினோம். யாரோ ஒரு வழக்கறிஞர் சொன்னார், நளினிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கும் அளவுக்குக்கூட வாய்ப்புகள் இல்லை என்றார். ஏ1ஆன எனக்கே அந்த வாய்ப்பு இல்லை எனும்போது மற்றவர்களுக்கும் வாய்ப்பு இல்லை எனக் கருதியிருந்தார்கள். ஆகவே, எல்லோருக்கும் தூக்கு என அறிவித்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூடத் தெரியாது.

கே. இந்த வழக்கில் தொடர்ந்து போராடி, விடுதலையாகலாம் என்ற நம்பிக்கை எப்போது வந்தது?

ப.  தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் அழுதுகொண்டே இருந்தேன். தண்டனை விதிக்கப்பட்ட பிறகு எல்லோரும் பிரிந்துவிட்டோம். வழக்கு நடந்தபோதாவது ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகு யாரையும் பார்க்க முடியவில்லை. அப்போது எந்தவிதமான நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. அப்போது நெடுமாறன் பலரை ஒருங்கிணைத்து, பொருளாதாரத்திற்கு ஏற்பாடு செய்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஏற்பாடு செய்தார். வெளியில் இதெல்லாம் நடக்கிறது என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. சந்திரசேகர், இளங்கோ போன்றவர்கள் தொடர்ந்து எங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். சில சமயம் தேவைப்படும் பொருட்களை அவர்கள்தான் வாங்கித்தருவார்கள்.

கே. உங்களுக்கான தூக்குத் தண்டனை ரத்தான பிறகு, உங்கள் கணவருக்கான போராட்டத்தை எப்படி ஆரம்பித்தீர்கள்?

ப. எனக்கான தூக்குத் தண்டனை ரத்தான பிறகு, மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை வந்தது. ஏனென்றால் நான்தான் ஏ1. எனக்கு மட்டும் ஏழு முறை மரண அறிவிப்பு வந்தது. மூன்று - நான்கு முறை தேதியெல்லாம் குறித்திருக்கிறார்கள். பாதிரியார் வந்து ஆசீர்வதித்து, கடைசி ஆசை என்ன என்றெல்லாம் கேட்டார்கள். பிறகு சிறையில் எல்லோரையும் எங்கே தொங்க விடுவது என்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. கயிறுகள் வாங்கப்பட்டன. மரண தண்டனைக் கைதிகளுக்கான அறை தயார் செய்யப்பட்டது. என்னுடைய எடையைப் போட்டு, அதே எடைக்கு மணல் மூட்டையைத் தொங்கவிட்டுப் பார்த்தார்கள். என் கண் முன்பே இதெல்லாம் நடந்தது. இன்னும் இரண்டும் நாட்கள்தான் இருக்கிறது என்ற நிலை வந்தது. ஆனால், நான் நம்பிக்கையோடு இருந்தேன். எந்தத் தவறும் செய்யவில்லை. இதுபோன்ற அசம்பாவிதமான முடிவு வராது எனக் கருதினேன்.

 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே. 2011ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உங்கள் கணவருக்கான தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ப. மிகக் கடினமாக இருந்தது. அவர்கள் மூவருக்கும் மரண வாரண்ட் அனுப்பப்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் இருந்த சிறையில் இருந்து, உங்கள் கணவரை இந்தத் தேதியில் தூக்கிலிடப் போகிறோம் என மெமோ வந்துகொண்டே இருக்கும். முழுமையாக நான் நிலைகுலைந்துவிட்டேன். அவரைப் பார்க்க முடியாது, பேச முடியாது என்பதைத் தாங்கவே முடியவில்லை. எந்த நேரமும் அழுதுகொண்டே இருப்பேன். தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைக்க வேண்டிய நிலை இருந்தது.

அப்போது வைகோ பலத்த முயற்சி செய்து, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வந்தது.  செங்கொடியின் உயிர்த் தியாகம், மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பன் தீர்ப்பளித்தார். அது ஒரு உன்னதமான நாள். வைகோதான் இதை முன்னின்று செய்தார். பல அரசியல் கட்சிகளும் பெரும் பங்களிப்பைச் செய்தார்கள்.

கே. உங்கள் குழந்தையை ஒரு காலகட்டம் வரை சிறையில் வளர்த்திருக்கிறீர்கள்.. அந்த காலகட்டம் எப்படி இருந்தது?

ப. சிறை என்பது குழந்தைகள் வளர்வதற்கான இடமில்லை. குழந்தைக்கு எதையுமே காட்ட முடியாது. அதற்கு வெறும் கம்பிதான் தெரியும். மண்ணில்கூட மிதிக்க முடியாது. எல்லாவற்றையும் புத்தகத்தில்தான் காட்டுவேன். நான் சிறைக்கு வரும்போது 53 நாள் கர்ப்பம். போலீஸ் காவலில் 56 நாட்கள் இருந்தேன். அப்போது ஆறு நாட்களுக்கு ஒரு முறைகூட சாப்பிட்டிருக்கிறேன். மிக மோசமான நாட்கள் அவை. அதனால், குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சீர்கெட்டுவிடும். மஞ்சள் காமாலை, பிரைமரி காம்ப்ளக்ஸ் வந்தது. ஆறு நாட்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து, காப்பாற்றிக் கொடுத்தார்கள். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அதற்கு உதவினார்.

அந்த காலகட்டத்தில் என் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. உடலே வளைந்துவிட்டது. எழுந்துகூட நடக்க முடியவில்லை. என் அம்மாதான் மருத்துவமனைக்குப் போவார். அந்தக் குழந்தைக்கு தாய்ப்பாலைக் குடிக்கக்கூட முடியாது. பத்து மாதங்களுக்குப் பிறகு நிலைமை மேம்பட்டது.

சிறை உணவு குழந்தைக்கு பிடிக்காது. பார்த்தவுடன் வாந்தி எடுத்துவிடும். குழந்தைக்கு எவ்வளவு நாட்களுக்கு டின் உணவுகளைக் கொடுக்க முடியும்? அந்தத் தருணத்தில் விசாரணையும் துவங்கிவிட்டது. காலையும் மாலையும் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். அதனால்தான் குழந்தையை இரண்டு வயதிலேயே வெளியில் கொடுக்க வேண்டிவந்தது.

கே. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உங்கள் கணவர் மூலமாகத்தான் அறிமுகமானார். எந்தத் தருணத்திலாவது அவர் மீது இதற்காக ஆத்திரப்பட்டதுண்டா?

ப. "சாதாரணமாக சாராயம் விற்பவள்கூட, என் புருஷனால்தான் இது நடந்து என்று சொல்கிறாள். ஆனால், நளினி அவரால்தான் இந்த நிலை என்று தன் கணவரைச் சொன்னதே இல்லை" என்றுதான் சிறையில்  பேசுவார்கள். என் கணவரைப் பற்றி அப்படி நினைத்ததே இல்லை.

கே. அப்படி அவர் மீது அன்புசெலுத்தக்கூடிய நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நீங்கள் பழகிய காலம் மிகக் குறுகிய காலம்தான்..

ப. பழகிய காலம் குறைவுதான். அவருடைய மொழியும் எனக்குப் புரியாது. அவர் பேசுவது விளங்குவதுபோல தலையாட்டுவேன். இப்படியெல்லாம் இருந்தாலும்கூட, மனம் என்ற ஒன்று இருக்கிறதே.. வாழ்வோ, துக்கமோ, நல்லதோ, கெட்டதோ - ஒருவரை நம்பி வந்துவிட்டோம். அதுதான் நம் வாழ்க்கை என்பது என்னுடைய எண்ணம்.

 

 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே. உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ப. என் குடும்பமே சிதைந்துவிட்டது. பூஜ்யத்திலிருந்து எல்லாவற்றையும் துவங்க வேண்டும். என் கணவரோடும், குழந்தையோடும் சேர வேண்டும். எல்லாவற்றையும்விட என் குழந்தைக்குத்தான் மிகுந்த பாதிப்பு. எந்தத் தவறும் செய்யாமல் சிறையில் இருந்தது. சிறையிலிருந்து போன பிறகும் கஷ்டம்தான். தாய் - தந்தை இருந்தும் அவர்கள் அன்பு கிடைக்கவில்லை.

நான் அவளுக்கு மிக நெருக்கமாக இருந்தேன். யாரும் அவளைத் தூக்க முடியாது. திடீரென அவள் பிரிந்துசென்றாள். ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டிவந்தபோது, அவளுக்கு என்னை மறந்துவிட்டது. (அழுகிறார்) என்னுடன் வர மறுத்துவிட்டாள். மிகக் கொடூரமான நிலை அது.

அவளுக்கு கிடைக்காத தாயின் அன்பைத் தர வேண்டுமென நினைக்கிறேன். ஆனால், இனி அவளுக்கு அந்த அன்பு கிடைத்து என்ன பலன்? அவளுக்காக எதையுமே செய்யவில்லை. அவள் எங்களுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னாள், அவளுக்காக எதையுமே செய்யாமல், அவளிடமிருந்து பணம் வாங்க எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவளோடு சேர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறேன். எங்கள் உறவை மேம்படுத்த நினைக்கிறேன்.

 

கே. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உங்கள் விடுதலையை கடுமையாக எதிர்க்கிறார்கள். அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப. நான் அவர்கள் குடும்பத்தை நினைத்து அனுதாபப்படுகிறேன். வருத்தப்படுகிறேன். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைத்ததா, உதவி கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு மிகப் பெரிய இழப்புதான். குடும்பத் தலைவரை இழப்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதை என்னால் உணர முடிகிறது. அவர்கள் எங்களை புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

கே. இது குறித்து வருத்தப்படுகிறீர்களா, அல்லது குற்ற உணர்வடைகிறீர்களா?

ப. நான் இது குறித்து வருத்தப்படுகிறேன். 17 பேரைக் கொல்வதற்கு எனக்கு என்ன நோக்கம் இருக்கிறது? கொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் படிக்கவில்லையா, வேலைக்குப் போய் சம்பாதிக்க மாட்டேனா? அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொலைசெய்துதான் வாழ வேண்டுமா? அப்படியெல்லாம் ஏதும் இல்லை. அவர்கள் பெயர்கள்கூட எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களைக் கொலைசெய்த குற்றம் என் தலைமேல் விழுந்துவிட்டது. இதை விதி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களை நான் பார்த்ததுகூட இல்லை. அவர்களைத் துன்புறுத்த வேண்டுமென்ற நினைப்பே இல்லையே. அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

கே. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் இந்தச் செயலைச் செய்யக்கூடியவர்கள், தீங்கு செய்யக்கூடியவர்கள் என்று தோன்றவில்லையா?

ப. அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு முதிர்ச்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் பரபரப்பாக இருந்தேன். படித்துக் கொண்டிருந்தேன். வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கல்வி, புள்ளியியல் வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தேன். டியூஷனுக்குப் போய்விட்டுவந்து தூங்குவதற்கே மணி 11 ஆகிவிடும். என் வழக்கமான வாழ்க்கைக்குள் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை.

கே. அடுத்து உடனடியாக என்ன செய்யப் போகிறீர்கள்?

ப. உடனடியாக என் கணவரையும் மகளையும் சேர்த்து வைக்க வேண்டும். அவருடைய குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கவேண்டும். அதுதான் என் ஆசை.

https://www.bbc.com/tamil/articles/cw0w49vj0jeo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rajiv Gandhi Case: 32 Years Jail எப்படி இருந்தது? Nalini Interview

தமிழைச் சிதைக்கிறதா பிபிசி தமிழ்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான காலகட்டம்......இனியாவது நிம்மதியாக வாழட்டும்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து வந்த காலம் மிகவும் துன்பமானது . இனியாவது ...? விடிவு காலம் வருமா ?  நான்கு இலங்கையருக்கும் இன்னும் துன்பத்திரை   விலக வில்லை . 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.