Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்கு அனுப்பிய மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,க. சுபகுணம்
 • பதவி,பிபிசி தமிழ்
 • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை அரையிறுதியில் வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்த அரையிறுதி ஆட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த ஒன்றை நினைவுகூற விரும்புகிறேன். 2018ஆம் ஆண்டில், குரூப் ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா குரோஷியாவை எதிர்கொண்டது.

இப்போது போலவே, அப்போதும் இரு அணிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள் இருந்தனர். அர்ஜென்டினாவிடம் லியோனெல் மெஸ்ஸி. குரோஷியாவிடம் லூகா மோட்ரிச். ரஷ்யாவின் நிஷ்னி நோவ்கோரோட் மைதானத்தில் போட்டி நடந்தது.

அதற்கு முந்தைய ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்திடம் டிரா செய்திருந்ததால், இந்த வெற்றி அர்ஜென்டினாவுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஆனால், குரோஷியா, 0-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அவர்களுக்குப் பரிசளித்தது.

 

இப்போது இந்த அரையிறுதிச் சுற்றுக்கு வருவோம். அதேபோல் குரோஷியாவும் அர்ஜென்டினாவும் மோதின. முடிவு அதேபோல் மூன்று கோல்களுடன் முடிந்தன. ஆனால் அடித்தது அர்ஜென்டினா. 3-0 என்ற கோல் கணக்கில், லியோனெல் மெஸ்ஸியும் ஹூலியன் ஆல்வாரெஸும் அர்ஜென்டினா அணியை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

லியோனெல் மெஸ்ஸியும் லூகா மோட்ரிச்சும் முதல்முறையாக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மோதினார்கள். அந்தப் போட்டியில் தான், சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸி தன்னுடைய முதல் கோலை அடித்தார். மோட்ரிச்சுக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதுதான் முதல் ஆட்டம்.

அது முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இருவரும் இன்னமும் அதே அளவு வேகத்துடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்போடு களத்தில் போரிட்டனர். இரண்டு அணிகளிலும் இருந்த எல்.எம்10 (LM10) ஜெர்சிகளில் எது வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய கால்பந்து ரசிகர்களிடையே இருந்தது.

ஆல்வாரெஸின் அதிரடி ஆட்டம்

குரோஷியா அணியில் கோவாசிச், ப்ரோசோவிச், லூகா மோட்ரிச் என்று அபாரமான மிட் ஃபீல்டர்கள் இருந்தனர். அவர்களை மீறி, குரோஷியாவின் கோல் போஸ்டுக்கு பந்தை எடுத்துச் செல்வது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அர்ஜென்டினா இந்த முறை ஒவ்வோர் ஆட்டத்திலுமே லைன்-அப்களை எதிரணிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருந்தனர்.

இந்தமுறையும் அதேபோல், டி பால், பரேடெஸ், ஃபெர்னாண்டெஸ், மெக் ஆலிஸ்டர் என்று எதிரணியின் பலம் மிக்க மூன்று மிட்ஃபீல்டர்களை சமாளிக்க நான்கு மிட் ஃபீல்டர்களை களமிறக்கினார், லியோனெல் ஸ்கலோனி. அது நல்ல பலனையும் தந்தது.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரோஷியா கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச், ஆல்வாரெஸ் கோல் அடிக்க முயன்றபோது செய்த தவறைத் தொடர்ந்து 34வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. அவர் எடுத்துக் கொடுத்த அந்த பெனால்டியில் இருந்துதான், அர்ஜென்டினா தனது வெற்றிக்கான முதல் கோலை அடித்தது. அதை அடித்தவர், மெஸ்ஸி.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி அடித்த ஐந்து கோல்களில் நான்கு கோல்களை, அரையிறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் அடித்திருந்தார். இந்தப் போட்டியிலும் அவர் கோல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை 34வது நிமிடத்திலேயே ஹூலியன் ஆல்வாரெஸ் வாங்கிக் கொடுத்த ஒரு பெனால்டி ஷாட் மூலம் அடித்துக் காட்டினார்.

அந்த பெனால்டி ஷாட் அவ்வளவு துல்லியமாக இருந்தது. கோல் போஸ்டுக்குள் வலது புறத்தின் மேற்புற முனையை நோக்கி அடித்தார். கோல்கீப்பர் எதிர்பார்க்க முடியாத ஷாட் அது. ஆனால், சற்று அபாயகரமானதும்கூட. கொஞ்சம் தவறினாலும், கம்பத்திற்கு வெளியே சென்றுவிடக்கூடும். ஆனால், பெனால்டி ஷாட்களில் வல்லுநரான மெஸ்ஸியின் துல்லியம் தவறாகவில்லை.

அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே ஆல்வாரெஸும் ஒரு கோலை அடித்தார். மைதானத்தின் நடுவே, மெஸ்ஸி பாஸ் செய்த பந்தை டிரிப்பிள் செய்துகொண்டே சென்ற ஆல்வாரெஸ், அவரைத் தடுத்த ஜோசிப் ஜூரனோவிச்சை தாண்டி பந்தை குரோஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல் போஸ்டுக்கு அருகே சென்றபோது, போரா சோசாவின் தற்காப்பு ஆட்டத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலிருந்தும் அவர் பந்தை லாகவமாக தட்டிச் சென்று கோல் அடித்தபோது, கிட்டத்தட்ட கோல் கீப்பர் லிவாகோவிச்சுடன் மோதிக் கீழே விழும் அளவுக்குச் சென்றுவிட்டர். அந்த நிமிடத்தில் விழுந்தது அர்ஜென்டினாவின் இரண்டாவது கோல்.

இந்தத் தருணத்தில் தான் அவர் அர்ஜென்டினா அணி தேடிக் கொண்டிருந்த ஸ்டிரைக்கராக இருப்பாரோ என்ற ஆச்சர்யம் எழுந்தது.

மெஸ்ஸியின் மேஜிக்

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்புக்காக ஆடும் 22 வயதான ஹூலியன் ஆல்வாரெஸ் என்ற ஸ்டிரைக்கர் இந்தப் போட்டியின் மூலம், அர்ஜென்டினா நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு தரமான ஸ்டிரைக்கராக தன்னை நிரூபித்துள்ளார்.

மெஸ்ஸி பாஸ் செய்த பந்தில் இரண்டாவது கோலையும் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளின் கோல் ஸ்கோரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கூடவே, மெஸ்ஸி அடித்த பெனால்டி ஷாட் கிடைக்கவும் ஆல்வாரெஸ் காரணமாக இருந்துள்ளார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹூலியன் ஆல்வாரெஸ்

ஆட்டத்தின் 40வது நிமிடத்திலேயே ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து மூன்றாவதாக விழுந்த கோல், ஏதோ தற்செயலானது என்றோ அதிர்ஷ்டவசமானது என்றோ புறந்தள்ளிவிட முடியாத அளவுக்கு அபாரமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.

அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.

குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார் எனக் கூறினால் அது மிகையில்லை. அப்படிப்பட்ட வசீகரிக்கக்கூடிய விளையாட்டைக் காட்டி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதிலிருந்து 69வது நிமிடத்தில் விழுந்தது மூன்றாவது கோல்.

குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினாவின் வியூகம்

இரண்டாவது பாதி தொடங்கியதில் இருந்தே குரோஷியாவிடம் பதற்றமும் வேகமும் அதிகமாக இருந்தது. ஆனால், அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக, தங்கள் வியூகத்தைத் திறம்பட வகுத்திருந்தனர்.

அர்ஜென்டினா வீரர்களின் கால்களுக்கு பந்து வந்தால், அதை குரோஷியா மீட்பதற்கு ஆன நேரம் சராசரியாக 15 விநாடிகள். அதுவே, குரோஷியாவிடம் இருந்து அர்ஜென்டினா பந்தை மீட்பதற்கு சராசரியாக 22 விநாடிகள் ஆனது. ஆகையால், பந்தை குரோஷியா கால்களுக்குச் செல்வதை இயன்ற அளவுக்குத் தடுத்துக் கொண்டேயிருந்தனர்.

பந்து அதிக நேரம் தங்களிடம் இருந்திருந்தால், எதிரணிக்கு நம்பிக்கை வளர்ந்திருக்கும். அந்த நம்பிக்கை ஆட்டத்திலும் பிரதிபலித்திருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் அர்ஜென்டினா தடுத்துக் கொண்டேயிருந்தது. இத்தகைய அனுபவமிக்க ஆட்டத்தைக் காட்டியதோடு மட்டுமின்றி, மூன்று கோல்களை அடித்துவிட்டோம், இனி கவலையில்லை என்று அணியினர் கவலையின்றி நின்றுவிடவில்லை.

பிரேசில் செய்த அந்தத் தவறை அவர்கள் செய்யவில்லை. ஆட்டத்தின் இறுதி வரை, யார் பந்தை எதிரணியிடம் தவற விடுகிறார்களோ அவர்களே அதைப் பின்தொடர்ந்து சென்று பந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1978, 1986 உலகக் கோப்பை வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுத் தருவதற்காக, தங்கள் ரசிகர்களின் 36 ஆண்டுகால கனவை நனவாக்குவதற்காக, இறுதிச் சுற்றுக்குள் சாவகாசமாக அர்ஜென்டினா நுழைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக, “நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பதற்றத்தோடு விளையாடப் போவதில்லை. ஆட்டங்களை நன்கு அனுபவித்து, மகிழ்ச்சியோடு ஆடப் போகிறோம்,” என்று தெரிவித்திருந்தார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் ஸ்கலோனி. அது எந்தளவுக்கு உண்மை என்பதை நேற்றைய ஆட்டத்தில் அவருடைய வீரர்கள் காட்டினர்.

1990இல் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் கேமரூனுடனும், இப்போதைய உலகக் கோப்பையில் சௌதி அரேபியாவிடம் தோல்வியடைந்து திகைப்பை ஏற்படுத்தியபதைப் போலவே நிகழ்ந்தது. பிறகு அதிலும் இதேபோல் இறுதிப் போட்டிக்குள் சென்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போது, உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால், அப்போதைய ஆட்டத்தைவிடச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பை என்னும் கிரீடத்தைச் சுமக்க மெஸ்ஸிக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு இது என்பதால், அவரோடு மனதளவில் ஒத்துப்போயிருக்கும், அவரைக் காதலிக்கும் அணியினர் இந்த ஆட்டத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோற்றாலும் இதயங்களை வென்ற குரோஷியா

அரையிறுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் தங்கள் ஆட்டத்தை குரோஷியா தொடங்கியிருந்தாலும், மெஸ்ஸியும் அவருக்குப் பக்கபலமாக நின்ற ஆல்வாரெஸும் வெளிப்படுத்திய புத்திசாலித்தனமான ஆட்டத்திற்கு வீழ்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் முதல் இரண்டு கோல்களின் மூலம், அவர்களுடைய தற்காப்பு நுணுக்கமாக விலக்கப்பட்டது. அவர்களுடைய சிறந்த இளம் தற்காப்பு ஆட்டக்காரர் கவார்டியோல் கூட, மெஸ்ஸியின் ட்விஸ்டிங் ஓட்டத்தில் எதையும் செய்ய முடியாமல் போனது.

எப்படியிருப்பினும், குரோஷியா மீண்டுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 40 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் ஒரு நாடு 2018இல் ரஷ்யாவில் நடந்த இறுதிப் போட்டி வரை சென்றது, இப்போது கத்தாரில் அரையிறுதி வரை வந்து, முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடிக்கப் போகிறது.

அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி என்றால், குரோஷியாவுக்கு லூகா மோட்ரிச் என்ற ஜாம்பவான் இருக்கிறார். ஒன்பது நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், தனது ஆட்டத்திற்காக லுசைல் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அன்பு நிறைந்த கைத்தட்டல்களைப் பெற்றார்.

அர்ஜென்டினாவை இறுதிச்சுற்றுக்குள் இட்டுச்சென்ற மெஸ்ஸி, ஆல்வாரெஸின் மேஜிக் கோல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த முறை தோல்வியின் வலியை எதிர்கொண்ட பிறகு, மெஸ்ஸியை போலவே அவரும் உலகக் கோப்பை மீது கண் வைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.

குரோஷியா, தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இறுதிவரை மேற்கொண்ட முயற்சியை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டும். 20 வயதான ஆர்.பி லைப்சிக், டிஃபெண்டர் கவார்டியோல் போன்ற நட்சத்திரங்களை அவர்களுக்கு இந்த உலகக் கோப்பை வெளிக்காட்டியுள்ளது.

அடுத்ததாக, பிரான்ஸ் அல்லது மொராக்கோவை அர்ஜென்டினா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருவரில் எவர் இறுதிச்சுற்றுக்கு வந்தாலும் அது மிகக் கடினமான ஆட்டமாகவே இருக்கும்.

கடந்த முறை கோப்பையை வென்ற பிரான்ஸ், சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக்கொள்ள முழு வேகத்துடன் ஆடி வருகிறது. இன்னொருபுறம், மொராக்கோ அனைவரின் யூகங்களையும் உடைத்து, தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது.

பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற பெரிய அணிகளிடம் எதிர்பாராத ஆட்டத்தைக் காட்டியுள்ளது மொராக்கோ. ஆகவே, இறுதிச்சுற்றுக்குள் இரண்டில் எந்த அணி வந்தாலும், கோப்பைக்கான இறுதி ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு எளிதானதாக இருந்துவிடாது.

https://www.bbc.com/tamil/articles/clj3xpglww7o

Link to comment
Share on other sites

 • Replies 54
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

மெஸியின் அற்புத ஆற்றல்களால் குரோஷியாவை வீழ்த்திய ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண இறுதிக்கு முன்னேறியது

14 DEC, 2022 | 07:05 AM
image

(நெவில் அன்தனி)

குரோஷியாவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (13) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அணித் தலைவர் லயனல்  மெஸியின் அற்புத ஆட்டத் திறனின் உதவியுடன் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்ற ஆர்ஜன்டீனா, 6 ஆவது தடவையாக பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

1312_argentina_vs_croatia.jpg

போட்டியின் முதலாவது பகுதியில் 5 நிமிட இடைவெளியில் 2 கோல்களையும் இடைவெளையின் பின்னர் ஒரு கோலையும் ஆர்ஜன்டீனா புகுத்தியது.

இந்த வெற்றியை அடுத்து உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு மெஸிக்கு கிட்டியுள்ளது.

1312_argentina_vs_croatia__messi_and_alv

அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பிரான்ஸுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா எதிர்த்தாடவுள்ளது.

1312_argentina_messi_in_action.jpg

போட்டியின் ஆரம்பத்தில் தசைப்பிடிப்பினால் அவதிக்கு மத்தியில் விளையாடிய லயனல் மெஸி, பின்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி திறமையாக விளையாடி 35 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.

1312_arg_vs_croatia__2_.jpg

ஜுலியன் அல்வாரெஸை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து குரோஷிய கோல்காப்பாளர் டொமினிக் லிவாகோவிச் முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை லயனல் மெசி கோலாக்கி தனது அணியை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

1312_arg_vs_croatia__1_.jpg

5 நிமிடங்கள் கழித்து பந்தை வேகமாக நகர்த்திச் சென்ற அல்வாரெஸ், ஆர்ஜன்டீனா சார்பாக 2 ஆவது கோலலைப் புகுத்தினார்.

அதன் பின்னர் ஆர்ஜன்டீனாவின் இரண்டு முயற்சிகளும் குரோஷியாவின்  இரண்டு முயற்சிகளும் தடுக்கப்பட்டது.

1312_argentinianas_celebrate_in_buenors_

இடைவேளையின் போது ஆர்ஜன்டீனா 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடும் பிரயத்தனம எடுத்துக்கொண்டன. ஆனால் அந்த பிரயத்தனங்களை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் தடுத்த வண்ணம் இருந்தனர்.

1312_croatia_supprters_dejected.jpg

எவ்வாறாயினும் போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸி பரிமாறிய பந்தை மிக வேகமாக அல்வாரெஸ் கோலினுள் புகுத்த, ஆர்ஜன்டீனாவின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

croatia_semi_final__2_.jpg

எனினும் தளராமல் விளையாடிய குரோஷியா கோல் போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்தது. ஆனால், குரோஷியாவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

argentina_semi_final___2_.jpg

இந்தத் தோல்வியுடன் குரோஷிய அணித் தலைவர் லூக்கா மொட்றிச்சின் உலகக் கிண்ண கனவு கலைந்துபோனதுடன் அவரது 16 வருட சர்வதேச கால்பந்தாட்ட வாழ்க்கை பெரும்பாலும் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் இறுதிச் சுற்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

https://www.virakesari.lk/article/143029

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரு அணிகளின் விளையாட்டும் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது........!  👏

நன்றி ஏராளன் ......!  

Link to comment
Share on other sites

 
2022 ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 6வது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. 

தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது ஃபிஃபா உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் அவர் விளையாடி வருகிறார். 

மேலும், ஆட்டம் முழுவதும் வாய்ப்புகளை உருவாக்கிய மெஸ்ஸி, 2 முறை சிறப்பாக பந்தை சக வீரர் அல்வாரெசிடம் பாஸ் செய்து கோல் போட முடிவு எடுத்தார். 

இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 

என்னுடைய உலகக்கிண்ண பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலகக்கிண்ணம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை பைனலுக்கு வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது. 

வரும் 18ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலகக்கிண்ணத்தை வென்று தருவேன் என நம்புகிறேன். உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார். 

தனது சாதனை குறித்து பேசிய மெஸ்ஸி, சாதனைகள் படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால், உலகக்கிண்ணத்தை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். 

அது தான் அனைத்தையும் விட மிகவும் அழகானது. இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று மெஸ்ஸி கூறினார்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன் இணைப்பிற்க்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பரவலாக பார்த்த அளவில் ஆர்ஜென்ரினா உலக உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டுவதை ஐரோப்பிய நாடுகள்  விரும்பவில்லை போல் தெரிகின்றது.😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோவால் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி கோப்பையை நெருங்க முடியுமா?

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,க. சுபகுணம்
 • பதவி,பிபிசி தமிழ்
 • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
மொராக்கோவால் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே (இடது), அஷ்ரஃப் ஹக்கிமி

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பையின் முதல் அரையிறுதி முடிந்து அர்ஜென்டினா இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. அடுத்த அரையிறுதி ஆட்டம் நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மோதப்போகும் பிரான்ஸ், மொராக்கோ ஆகிய இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள்?

பிரான்ஸ், மொராக்கோவுக்கு இடையிலான ஆட்டம், இரண்டு சிறந்த தற்காப்பு அணிகளுக்கு இடையிலான போராட்டமாக இருக்கக்கூடும்.

நாக் அவுட் ஆட்டங்களில் ஒரு கோலைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் பிரான்ஸ் ஆடியது. போலந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் பெனால்டி ஷாட் கோல்களை மட்டுமே கொடுத்தது.

இந்த உலக கோப்பையின் மொத்த போட்டிகளிலும் மொராக்கோ அணிக்கு எதிராக கனடாவுக்கு கிடைத்த ஒரு கோலை தவிர வேறு எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

 

அந்த ஒரு கோலும் கூட, மொராக்கோ அணியைச் சேர்ந்த நயெஃப் அகேர்ட் தவறுதலாக அடித்ததால் கனடாவுக்குக் கிடைத்தது.

கத்தாரில் அதிக கோல் அடித்த கிலியன் எம்பாப்பே (5 கோல்கள்) மற்றும் ஒலிவியே கிரூட்(4 கோல்கள்) ஆகிய இருவரும் பிரெஞ்சு அணியில் உள்ளனர்.

கிலியன் எம்பாப்பே, தனக்குப் பழக்கமான அஷ்ரஃப் ஹக்கிமியுடன் மோதவிருக்கிறார். இருவரும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் ஒன்றாக விளையாடுபவர்கள். ஹக்கிமியும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக தனிக்கவனம் பெற்று நிற்கிறார்.

இவர்களின் வேகத்தைக் குறைப்பது, மொராக்கோவின் டிஃபண்டர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். மொராக்கோ அணியின் ஸ்டிரைக்கர்களில் ஒருவரான வலீத் செத்தீரா, போர்ச்சுகலுடனான காலிறுதி ஆட்டத்தில் ரெட் கார்ட் வாங்கியதால், அவர் அரையிறுதியில் ஆட முடியாது.

பிரான்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு ஏற்பட்ட காயங்களால், இளம் வீரர்கள் அவர்களுடைய இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கிலியன் எம்பாப்பே

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக, ஊஹெலியான் சூவெய்மென்னி. அவர் சென்ட்ரல் மிட்ஃபீல்டரான என்கோலோ கான்டேவுடைய இடத்தில் பங்கெடுத்து, ஒரு தற்காப்பு மிட்ஃபீல்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர் அருமையான ஒரு கோலை அடித்தார்.

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன். இந்த உலகக் கோப்பையில் பிரான்சின் சிறந்த வீரராக, ஐந்து கோல்களை அடிப்பதற்கான வாய்ப்புகளை ஒரு ரைட் மிட்ஃபீல்டராக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதை ரசிகர்களும் கவனித்து வருகின்றனர். காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், பிரெஞ்சு அணியின் ரசிகர்கள் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பாராட்டி வருகின்றனர்.

இதுவரையிலான ஆட்டங்களில் செய்ததைப் போலவே, மொராக்கோ பொறுத்திருந்து ஆடி, எதிர்த்தாக்குதலைப் பயன்படுத்தி வாய்ப்புகளை உருவாக்க முயலக்கூடும்.

ஆனால், அவர்கள் இதுவரை செய்ததைப் போல், பிரெஞ்சு அணியின் தாக்குதல் ஆட்டம் அவ்வளவு எளிதில் உடைக்கக்கூடியதாகவோ எதிர்த்தாக்குதல் நடத்த ஏற்புடையதாகவோ இல்லாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சோஃபியான் பூஃபால் காலிறுதிப் போட்டியில் கிடைத்த வெற்றிக்கான கொண்டாட்டத்தின்போது...

இருப்பினும், மொராக்கோவின் தற்காப்பு ஆட்டம் இதுவரை இந்த உலகக் கோப்பையில் சிறந்த தற்காப்பு ஆட்டமாக இருந்து வருகிறது.

அட்லஸ் லயன்ஸ் எனப் பெயர் பெற்ற அவர்களுடைய அந்தத் தற்காப்பு ஆட்டமே, குரோஷியா, ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல் என்று எந்த அணியையும் கோல் அடிக்க விடாமல் தடுத்துள்ளது.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக மொராக்கோ பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது, அதன் கோல் கீப்பர் யசின் பூனோ இரண்டு ஸ்பாட் கிக்குகளை தடுத்துக் காப்பாற்றினார்.

அவர்களுடைய தற்காப்பு யுக்தியையும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் பேக் ஃபோரில் ஆடிய நயெஃப் அகேர்டும் நுசேர் மஸ்ரவி இருவரும் போர்ச்சுகலுடனான போட்டியில் காயம் காரணமாக பங்கு பெறவில்லை.

சென்டர்-பேக் ரொமைன் சைஸ், அந்தப் போட்டியின்போது காயமடைந்தார். இவர்கள் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் பங்கெடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேவேளையில், மொராக்கோவை பொறுத்தவரை, வீரர்கள் மாறினாலும் ஆட்டம் மாறுவதில்லை. அவர்களுடைய தற்காப்பு ஆட்டத்தை உடைப்பது மிகவும் கடினமானது என்ற பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்கள்.

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸிலுள்ள மற்றொரு முக்கிய வீரர் அன்டோய்ன் க்ரீஸ்மேன்

1958, 1962 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை பிரேசில் வென்றது. அதைப் போன்ற சாதனையை நடப்பு சாம்பியனான பிரான்ஸ் செய்ய வேண்டுமென்ற இலக்கோடு ஆடி வருகிறது.

கால்பந்து உலக கோப்பையில் ஏழாவது முறையாக பிரான்ஸ் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு குரோஷியாவை இறுதிச்சுற்றில் எதிர்கொண்டது. அரையிறுதியில் வென்றால், இந்த முறை அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.

ஃபிஃபா 2022 தொடங்கிய நேரத்தில், தரவரிசைக்கு வெளியே மொராக்கோ இருந்தது. இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பிரான்சும் மொராக்கோவும் இதுவரை, உலகக் கோப்பை போட்டிகளில் மோதியதில்லை. இதற்கு முன்பு 1963ஆம் ஆண்டில் மட்டுமே மொராக்கோ பிரான்ஸை தோற்கடித்துள்ளது.

பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிமான நேரம் பந்து இருக்க விட்டாலும்கூட, எதிரணியைத் தாக்குவதற்கான தருணத்திற்குக் காத்திருப்பதே அதன் யுக்தியாக இதுவரை இருந்துள்ளது.

அஷ்ரஃப் ஹக்கிமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது இங்கிலாந்துக்கு எதிராக பயனுள்ள உத்தியாக இருந்தது. இதே அணுகுமுறை கடந்த உலக கோப்பையிலும் அவர்களுக்குப் பலனளித்தது.

ஆனால் மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில், பந்தை தன் வசம் அதிகமாக வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுகூட, பிரான்ஸில் உள்ள அட்டாக்கிங் வீரர்களுக்குக் கடினமாக இருக்காது.

ஆனால், மொராக்கோவின் யுக்தியாக இன்னமும் கடுமையான தற்காப்பு ஆட்டமே உள்ளது. அது கடந்த ஐந்து போட்டிகளிலும் சராசரியாக 32 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.

இது எந்த அணியிடமும் இல்லாத அளவுக்குக் குறைவான நேரம். அதிலும் காலிறுதியில் போர்ச்சுகலை வெளியேற்றிய ஆட்டத்தில், வெறும் 26 சதவீதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.

இதில் மொராக்கோ வீரர்களின் ஊடுருவ முடியாத தற்காப்பு ஆட்டமும் சோஃபியான் பூஃபால் போன்றோரின் வேகமான எதிர்த்தாக்குதல் திறனைச் சார்ந்திருக்கும் யுக்தி வேலை செய்ததே வெற்றி பெறக் காரணம்.

இரண்டு அணிகளுமே சிறப்பான எதிர்த்தாக்குதலையும் தற்காப்பையும் கொண்டிருக்கும் சூழலில், இந்த அரையிறுதிப் போட்டி ஒருவேளை அர்ஜென்டினா-குரோஷியா போட்டியை விடவும் சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c51qzee3v3wo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பலவான்களை வீழ்த்திய மொரோக்கோவிடம் பிரான்ஸ் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்

By DIGITAL DESK 5

14 DEC, 2022 | 04:13 PM
image

(நெவில் அன்தனி)

பலவான்களை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரக்க நாடான மொரோக்கோவிடமிருந்து பீபா உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ்  கடும்  சவாலை எதிர்கொள்ளலாம் என கருதப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டி கத்தார் அல் பெய்த் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று புதன்கிழமை (14) நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் வெற்றிகொண்ட பிரான்ஸ், 60 வருடங்களின் பின்னர் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய இரண்டு நாடுகளே உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்த இரண்டு அத்தியாயங்களில் வென்றிருந்தன.

ஒரு காலத்தில் பிரான்ஸின் காலனித்துவ ஆட்சியியின்கீழ் மொரோக்கோ இருந்தது. தற்போது நூறாயிரக்கணக்கான மொரோக்கோ வம்சாவழிகள் பிரான்ஸில் வாழ்ந்து வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வரலாறுகளைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இன்றைய உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி மற்றைய போட்டிகளை விட வியத்தகு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம், விவேகம், சிறந்த பந்துபரிமாற்றம் ஆகியவை கலந்த வியூகங்களுடன் பிரான்ஸ் அணியினர் விளையாடிவரும் அதேவேளை, மொரோக்கோ அணியினர் ஆக்ரோஷ குணாம்சத்துடன் கடுமையாக விளையாடிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.. எனவே, பிரான்ஸின் விவேகத்திற்கும் மொரோக்கோவின் ஆக்ரோஷத்திற்கும் இடையிலான போட்டியாக இன்றைய அரை இறுதி அமையவுள்ளது.

பிரான்ஸும் மொரோக்கோவும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த இரண்டு நாடுகளும் இதற்கு முன்னர் விளையாடிய 5 சர்வதேச சிநேகபூர்வ போட்டிகளில் பிரான்ஸ் 3 போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

மேலும், உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆபிரிக்க நாடுகளுடன் விளையாடிய 6 போட்டிகளில் பிரான்ஸ் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2002 உலகக் கிண்ணப் போட்டியில் செனகலிடம் 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிரான்ஸ், இந்த வருடம் டியூனிசியாவிடம் 0 - 1 என தோல்வி அடைந்தது.

ஆனால், உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே அத்தியாயத்தில் இரண்டு ஆபிரிக்க நாடுகளிடம் எந்தவொரு நாடும் தோல்வி அடைந்ததில்லை. அந்த வரலாற்றை மொரோக்கோ மாற்றி அமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதியில் 7ஆவது தடவையாக விளையாடும் பிரான்ஸ், தனது முதல் 3 முயற்சிகளில் (1958, 1982, 1986) தோல்வி அடைந்தது. கடைசியாக விளையாடிய 3 சந்தர்ப்பங்களில் (1998, 2006, 2018) பிரான்ஸ் வெற்றிபெற்றதுடன் 1998இலும், 2018இலும் உலக சம்பியனாகியிருந்தது.

மொரோக்கோவைப் பொறுத்த மட்டில் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளதுடன் முதலாவது ஆபிரிக்க நாடாக இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு முயற்சிக்கவுள்ளது.

2022 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை மொரோக்கோ மாத்திரமே தோல்வி அடையாத அணியாக இருக்கிறது. அத்துடன் அவ்வணிக்கு எதிராக 5 போட்டிகளில் எந்த ஒரு அணியும் கோல் போடவில்லை. கனடாவுக்கான கோலை மொரோக்கோ வீரர் நயெவ் அகுவர்ட் சொந்த கோலாக போட்டுக்கொடுத்திருந்தார்.

அரை இறுதிக்கு கடந்த வந்த பாதை

டி குழுவில் இடம்பெற்ற பிரான்ஸ் தனது முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவையும் (4 - 1), டென்மார்க்கையும் (2 - 1) வெற்றிகொண்டு 2ஆம் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துகொண்டிருந்தது. ஆனால் கடைசிப் போட்டியில் டியூனிசியாவிடம் (0 - 1) தோல்வி அடைந்தது.

16 அணிகள் சுற்றில் போலந்தை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற  கோல்கள்   வித்தியாசத்திலும் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட பிரான்ஸ் தகுதிபெற்றது.

எவ் குழுவில் குரோஏஷியாவுடனான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி  (0 - 0)  முடித்துக்கொண்ட மொரோக்கோ, அடுத்த இரண்டு போட்டிகளில் பெல்ஜியத்தையும் (2 - 0) கனடாவையும் (2 - 1) வெற்றிகொண்டு 2ஆம் சுற்றுக்கு முன்னேறியது.

2ஆம் சுற்றில் மேலதிக நேரம்வரை நீடித்த ஸ்பெய்னுடான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 - 0) முடித்துக்கொண்ட மொரோக்கோ, 3 - 0 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

கால் இறுதியில் போர்த்துக்கலை 1 - 0 என வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அணிகள் (பெரும்பாலும் முதல் 11 வீரர்கள்)

france_...jpg

பிரான்ஸ்: ஹியூகோ லோரிஸ், ஜூல்ஸ் கௌண்டே, ரபாயல் வரேன், டெயோட் உப்பாமெக்கானோ, தியோ ஹெர்னாண்டெஸ், ஒரேலியன் டிச்சவாமெனி, ஏட்றியன் ரேபியட், உஸ்மான் டெம்பேல், அன்டொய்ன் கிறீஸ்மான் (தலைவர), கிலியான் எம்பாப்பே, ஒலிவர் கிரூட்.

2311_morocco_squad.jpg

மொரோக்கோ: யாசின் பூனூ, அஷ்ரப் ஹக்கிமி, ஜவ்வாத் எல் யாமிக், ரொமெய்ன் சாய்ஸ் (தலைவர்), நவ்செய்ர் மஸ்ராவூய், அஸேதின் ஒளனாஹி, சொபியான் அம்ராபத், சலிம் அமல்லா, ஹக்கிம் ஸியெச், என்-நெசிரி, பவ்பல்.

https://www.virakesari.lk/article/143096

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோவின் சிங்கம் போன்ற ஆட்டம் – தோற்றாலும் வரலாறு படைத்த வீரர்கள்

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,க. சுபகுணம்
 • பதவி,பிபிசி தமிழ்
 • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் வெற்றியைத் தொடர்ந்து, மொராக்கோ வீரரும் கிலியன் எம்பாப்பேவுடன் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியவருமான அஷ்ரஃப் ஹக்கிமியை அரவணைக்கும் எம்பாப்பே

பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.

மொராக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் கால்பந்து அணிக்கு அட்லஸ் லயன்ஸ் என்று பெயர். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே, பிரான்ஸ் உடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் செயல்பட்டார்கள்.

இந்த ஆண்டின் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, தனக்கு எதிராக ஆடிய எந்த அணிக்கும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் ஆடிய மொராக்கோ அணியின் எல்லைக்குள் புகுந்த தியோ ஹெர்னாண்டெஸ், அரையிறுதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

யசின் பூனோவின் தற்காப்பைக் கடந்து அதைச் சாத்தியமாக்கியதன் மூலம் கத்தாரில் மொராக்கோவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பெருமையை அவர் பெற்றார்.

 

ஆறு மொராக்கோ  வீரர்கள் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை தடுத்து கோல் பாக்ஸ் எல்லைக்குள் இருந்து வெளியே தள்ளினார்கள். ஆனால், அந்த நேரம் பார்த்து அந்த இடத்திற்கு அருகில் வந்த தியோ ஹெர்னாண்டெஸ் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

கோல் கீப்பர் யசின் பூனோ, தற்காப்பு ஆட்டக்காரர்களான அஷ்ரஃப் தாரி, ரொமைன் சைஸ் ஆகியோர் அதைத் தடுக்க முயன்றபோதும், அவர்களுக்கு நடுவில் புகுந்து சென்ற பந்து மொராக்கோவுக்கு முதல் இடியாக இறங்கியது.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில், ஒரு கோல் முயற்சியைத் தடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத தருணத்தில் விழுந்த அந்த கோல், பிரான்ஸ் ரசிகர்களுக்கு அபாரமான நம்பிக்கையையும் மொராக்கோ ரசிகர்களின் முகத்தில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

ஆரம்பத்திலேயே நிகழ்ந்த அந்தப் பின்னடைவை நிவர்த்தி செய்ய, கடுமையான எதிராட்டத்தை மொராக்கோ நிகழ்த்தியது. வழக்கமாக குறைந்த நேரமே பந்தை தங்கள் ஆளுமையில் வைத்திருக்கும் அவர்கள், இந்தப் போட்டியில் அதிக நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆட்டத்தை ஆடினர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மொராக்கோவுக்கு எதிரான முதல் கோலை அடித்த பெருமையைப் பெற்றார், பிரெஞ்சு வீரர் தியோ ஹெர்னாண்டெஸ்

முதல் பாதி முடிந்தபோது, இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருந்தது. மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோலை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியாது என்ற அழுத்தத்தில் பிரான்ஸ். ஒரு கோல்கூட எடுக்காமல் இருந்ததால், எப்படியாவது ஒரு கோல் அடித்து சமன் செய்து, வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் மொராக்கோ.

பிரான்ஸ் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தபோதிலும், ராண்டால் கோலோ முவானி, 79வது நிமிடத்தில் களமிறங்கி கோல் அடிக்கும் வரை அவர்களால் மொராக்கோவுக்கு எதிராக இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை.

அந்த கோலின் மூலம், 1962ஆம் ஆண்டில் பிரேசில் செய்த சாதனைக்குப் பிறகு, உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாகத் தக்க வைக்கும் வாய்ப்பு பிரான்சுக்கு கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்ற மொராக்கோ, சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு குரோஷியாவுடன் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக மோதுகிறது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிர்ச்சியில் உறைய வைத்த முதல் கோல்

முதல் கோலுக்காக, ஹெர்னாண்டெஸ் தனது இடது பாதத்தை உயரமாக உயர்த்தி, மொராக்கோ வீரர்கள் தட்டிவிட்டுப் பறந்து வந்த பந்தை உதைத்தார். அன்டோய்ன் கிரேஸ்மேன் தொடங்கி வைத்து, அவரிடமிருந்து பந்தைப் பெற்று கிலியன் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை, அவர் அந்த நகர்வின் மூலம் முடித்து வைத்தார்.

அந்த நிமிடம், உலகக்கோப்பையில் அவர்களுக்கு எதிராக விழுந்த அந்த கோல், மொராக்கோ அணியை வலுவிழக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து கேப்டன் ரொமைன் சைஸ் 20வது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதோடு, கடைசி நிமிடத்தில் நயீஃப் அகேர்டை அஷ்ரஃப் தாரிக்கு பதிலாகக் களமிறக்கியது, முந்தைய போட்டியில் இருந்த டிஃபண்டர் வரிசையைக் கொஞ்சம் குலைத்தது.

அகேர்டுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய செயல்பாடு குறித்து கவலைகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர் அணியின் முதல் வரிசையில் கொண்டுவரப்பட்டார்.

இந்த இடையூறுகளை பிரான்ஸ் ஸ்டிரைக்கர் ஒலிவியே கிரூட் நன்கு பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து மொராக்கோவின் கோல் போஸ்டை  தாக்கினார். மிட்ஃபீல்டர் ஊஹெலியான் சூவெய்மென்னியிடம் பெற்ற பந்தை தெளிவான கோல் ஷாட்டில் அடிக்க முயன்றார். ஆனால், அது தவறியது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படியாக, பிரெஞ்சு அணி எதிரணியிடம் இருந்த சின்னச்சின்ன சறுக்கல்களைக்கூட விடாமல் நன்கு பயன்படுத்தியது.

இருப்பினும், இதற்கெல்லாம் அஞ்சாமல் மொராக்கோ எதிர்த்தாக்குதல் ஆட்டத்தையும் கடுமையான தற்காப்பு ஆட்டத்தையும் ஆடியது. அஸெடின் ஒனாஹியின் இரண்டு அருமையான கோல் ஷாட்கள், பிரெஞ்சு கேப்டன் ஹுயூகோ லோரிஸின் முயற்சியால் தடுக்கப்பட்டது. அவருடைய தடுப்பு ஊகத்தினால் நடந்திருந்தாலும், அது பிரெஞ்சு அணிக்கு அதிர்ஷ்டமாகவும் மொராக்கோவுக்கு துரதிர்ஷ்டமாகவும் அமைந்துவிட்டது.

பிரெஞ்சு வெற்றி பெற்றிருந்தாலும், போட்டி முழுவதுமே மொராக்கோவின் ஆட்டம் அவர்களை அச்சுறுத்தியது. நடப்பு சாம்பியன், மிகவும் விரும்பப்படும் அணி. ஆனால், அதை அசைத்துப் பார்த்துவிட்டது, அட்லஸ் லயன்ஸ் சிங்கங்களின் வேகம். இபாஹிமா கொனாடே, ரஃபேல் வரானே ஆகியோர், என்-நெசிரி, பூஃபால் ஆகியோர் பற்ற வைத்த நெருப்பை அணைக்க முயன்றன.

நேரம் போகப் போக, பிரெஞ்சு அணி மொராக்கோவின் தாக்குதலைத் தடுப்பதற்கு அவர்களுடைய கணிப்புகளையும் முடிவுகளையும் விட அதிர்ஷ்டத்தைப் பெரிதும் நம்பும் அளவுக்கு, எதிரணியின் ஆட்டம் எதிர்பார்க்க முடியாத வகையில் இருந்தது. ஆம், அந்த சிங்கங்களின் கர்ஜணை அவர்களை அந்த அளவுக்கு அச்சுறுத்தியது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோற்றாலும் வரலாறு படைத்த சிங்கங்கள்

மொராக்கோ தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், உலக கால்பந்து ரசிகர்களிடையே ஒரு நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. கால்பந்து உலகில் மரியாதையைப் பெற ஒரு அணிக்கு இருப்பது வெறும் 90 நிமிடங்களே. அந்தத் தொன்னூறு நிமிடங்களில் இருக்கும் மரியாதை போகலாம் அல்லது வானளாவிய மரியாதை கிடைக்கலாம்.

அப்படிப்பட்ட அந்த 90 நிமிடங்களுக்குள் தோற்றிருந்தாலும், வரலாற்றுக் கவனம் பெற்றுள்ளது மொராக்கோ. தாங்கள் வரலாறு படைத்துள்ளதாக மொராக்கோ ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாதாரண வரலாறல்ல. கால்பந்து ஜாம்பவான் அணிகளில் ஒன்றான பிரான்ஸை மிரள வைத்து, வரலாறு படைத்திருக்கிறார்கள்.

தங்கள் அணியினர் நாடு திரும்பும்போது, அவர்களைக் கைநீட்டி, அன்பைப் பொழிந்து வரவேற்க அவர்கள் காத்திருக்கின்றனர். கால்பந்து உலகில் தங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிவிட்டு வீடு திரும்பும் அவர்களைக் கொண்டாட மொராக்கோ மக்கள் காத்திருக்கின்றனர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மொராக்கோ ரசிகர்களை நோக்கியவாறு தரையில் தலை தாழ்த்தி மரியாதை செலுத்தும் மொராக்கோ அணியினர்

ஸ்பெயின், போர்ச்சுகல் என்று தோற்கடிக்க முடிந்த மொராக்கோ, பிரான்ஸ் போன்ற அணியைத் தோற்கடிக்க இன்னும் மேம்பட வேண்டும். ஆனால், அதற்காக அவர்களைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

அணியின் மேனேஜர் வலித் ரெக்ரகீ, வீரர்களிடம் “மொராக்கோ அரசர் உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறார். மொராக்கோ மக்கள் பெருமைப்படுகிறார்கள். மொத்த உலகமும் இந்த அணியைப் பார்த்து பெருமைப்படுகிறது” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, மொராக்கோ வீரர்கள் அனைவரும் இணைந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர். முன்னால் நகர்ந்து வந்து, ரசிகர்களை நோக்கியவாறு மண்டியிட்டு, தரையில் தலையைத் தாழ்த்தி, ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். ரசிகர்களின் கொண்டாட்ட கோஷங்கள் மைதானம் முழுக்க எதிரொலித்தன.

https://www.bbc.com/tamil/articles/ckdr45kd881o

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,க. சுபகுணம்
 • பதவி,பிபிசி தமிழ்
 • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போ, அப்போ என இந்த ஆண்டு முழுக்கக் காத்துக் கொண்டிருந்தோம். பிறகு இப்போதுதான் தொடங்கியதைப் போலிருந்தது.

ஆனால், ஆட்டம் எப்படி 90 நிமிடங்களுக்குள் விறுவிறுப்பாகச் செல்லுமோ அதேபோல் உலகக்கோப்பை போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, 32 அணிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதப்போகும் இறுதிப்போட்டியும் வந்துவிட்டது.

கத்தாரில் நடைபெறும் இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை ஏராளமான தோல்விகளைச் சந்தித்தது, வெற்றிகளை ருசித்தது. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கால்பந்து உலகில் பாரம்பரியமாக முன்னணியில் இருந்து வரும் இரண்டு பெரிய அணிகள் மோதவிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ், தொடர் வெற்றியோடு சாதனை படைக்க வேண்டுமென்று, கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்குக் கனமான அழுத்தம் அவர்கள் தலையில் உள்ளது. அதைவிட அதிகமான அழுத்தம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. ஆம், 36 ஆண்டுகால கனவாயிற்றே!

 

ஆக, இந்தப் போட்டி, மறுக்க முடியாத ஒன்றாக, கவர்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது.

பிரான்ஸ் தரப்பில் கிலியன் எம்பாப்பே சிறந்த வீரராக, இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார். அர்ஜென்டினா தரப்பில், கால்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரராகக் கூறப்படும் லியோனெல் மெஸ்ஸியும் இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார்.

மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு முன்பாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியபோது, இருவரும் ஒன்றாக விளையாடினார்கள்.

கால்பந்து இறுதிப்போட்டி எங்கு நடக்கிறது?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடக்கவுள்ளது. உள்ளூர் நேரப்படி, டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும்.

இரண்டு அணிகளும் இந்தத் தொடரில் இதுவரை எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன, எவ்வளவு கோல்களை அடித்துள்ளன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிலியன் எம்பாப்பே

அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை, இந்தப் போட்டிகளில் மெக்சிகோ(2-0), போலாந்து(2-0), ஆஸ்திரேலியா(2-1), காலிறுதியில் நெதர்லாந்து(2-2, 4-3 பெனால்டிகள்), அரையிறுதியில் குரோஷியா(3-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளது. குரூப் சுற்றில் ஆடிய முதல் போட்டியில் மட்டும் சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தத் தொடரில் இதுவரை அர்ஜென்டினா அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 12. அர்ஜென்டினாவுக்கு எதிராக இதுவரை அடிக்கப்பட்ட கோல்களின் எண்ணிக்கை, 5.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா(4-1), டென்மார்க்(2-1), போலாந்து(3-1), காலிறுதியில் இங்கிலாந்து(2-1), அரையிறுதியில் மொராக்கோ(2-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளனர். குரூப் சுற்றின் மூன்றாவது போட்டியில், துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடர் முழுவதும் பிரான்ஸ் இதுவரை 13 கோல்களை அடித்துள்ளது. அதற்கு எதிராக இதுவரை 5 கோல்கள் அடிக்கப்பட்டன.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியை எதிர்கொள்ளப் போகும் எம்பாப்பே

கால்பந்து உலகின் இந்த இரண்டு முக்கியமான சக்திகள் மோதும் போட்டி ஒரு காவியமாக இருக்கலாம். கடந்த உலகக்கோப்பையில் பிரான்சும் அர்ஜென்டினாவும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதியது ஒரு மறக்கமுடியாத போட்டியாக அமைந்தது.

பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிக நேரம் பந்தை இருக்க விட்டாலும்கூடஅந்த முறையும் எதிரணியைத் தாக்குவதற்குச் சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்து, கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் துல்லியமாகப் பயன்படுத்தும். அவர்களுடைய இந்த யுக்தியை வைத்து தான், கடந்த உலகக் கோப்பையில் வெற்றியடைந்தார்கள், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தினார்கள்.

அப்போது, ஆட்டம் முழுவதும் 39% தான் பந்து பிரான்ஸ் வசமிருந்தது, மீதி 61% நேரத்திற்கு அர்ஜென்டினாவின் கால்களில் தான் பந்து இருந்தது. இரண்டு அணிகளுமே கோல் போஸ்டை நோக்கி துல்லியமான 4 ஷாட்களை அடித்தன. அதில், அர்ஜென்டினாவால் மூன்று முறை கோலாக்க முடிந்தது. ஆனால், பிரான்ஸ் இலக்கைக் குறி வைத்து அடித்த நான்கு ஷாட்களையுமே கோலாக்கியது.

2018ஆம் ஆண்டில் தன்னை வீழ்த்திய குரோஷியாவை அதேபோல 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. இப்போது இறுதிப்போட்டியிலும் அதேபோல், 2018ஆம் ஆண்டில் தங்களைத் தோற்கடித்து, நாக் அவுட் செய்த பிரான்ஸ் அணியையும் வீழ்த்துவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. அது சாத்தியமா?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹுலியன் ஆல்வாரெஸ்

இரண்டு பக்கமும் பெரும் நட்சத்திரங்கள் உள்ளன. எம்பாப்பேவால் சுயமாக கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாலும், பிரான்ஸ் சமநிலையான தாக்குதல் யுக்தியைக் கொண்டுள்ளது.

அர்ஜென்டினா அணி முற்றிலும் மெஸ்ஸியை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணமும் உண்டு. அவர் இந்தத் தொடரில் நிறைய பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார்.

அணிகளாக மட்டுமின்றி, மெஸ்ஸியும் எம்பாப்பேவும் இந்தத் தொடரின் அதிக கோல் ஸ்கோரர் ஆவதற்காகவும் மோதுகின்றனர். அவர்கள் இருவருமே ஐந்து கோல்களுடன், இந்தத் தொடரின் முன்னிலையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே, பிரான்ஸ் அணியின் ஒலிவியே கிரூடும் அர்ஜென்டினாவின் ஹூலியன் ஆல்வாரெஸும் நான்கு கோல்களுடன் இருக்கின்றனர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் அணியின் ஒலிவியே கிரூட்

அர்ஜென்டினாவின் 36 ஆண்டுகால கனவு

1934, 1938 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தாலி உலகக்கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 1958, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பிரேசில் உலகக்கோப்பையை வென்றது. இப்போது மூன்றாவது முறையாக பிரான்சுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறையும் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினால், பிரான்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை உயர்த்தும். கடந்த ஏழு உலகக்கோப்பை தொடர்களில், 1998, 2018 ஆகியவற்றில் பிரெஞ்சு அணி வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியடைந்தது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினா, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை வந்துள்ளது. இறுதிச்சுற்றுக்குள் அர்ஜென்டினா ஆறாவது முறையாக வருகிறது.

அர்ஜென்டினாவில் ஒட்டமெண்டி, டி பால், ஸ்டிரைக்கர் ஆல்வாரெஸ், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ், பரேடெஸ், மெக் ஆலிஸ்டர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். அவர்கள் கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற துடிப்போடும் இருக்கின்றனர்.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை தியோ ஹெர்னாண்டெஸ், கிரேஸ்மேன், கிரூட், கொனாடே, வரானே, சூயிமென்னி என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். இவர்களும் இரண்டாவது முறை சாம்பியனாகவும் வேண்டுமென்ற வெறியோடு ஆடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவை பொறுத்தவரை, தாக்குதல் ஆட்டம் நன்றாக இருக்கும் என்றாலும் தற்காப்பு ஆட்டம் பிரான்சிடம் சிறப்பாக உள்ளது. அர்ஜென்டினாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களான மொலினா, ஒட்டமெண்டி, ரொமேரோ போன்றோர் அதற்கு ஈடுகொடுக்க கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும்.

அதேவேளையில், பிரான்சின் எதிர்த்தாக்குதல் நன்றாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டம் அபாரமானது. ஆட்டத்தின் எந்த நேரத்திலும் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் மேஜிக்கை மெஸ்ஸி, ஆல்வாரெஸ் நிகழ்த்தி வருகின்றனர். ஆகவே பிரான்சுக்கும் சவால்களில் குறை ஏதுமில்லை.

https://www.bbc.com/tamil/articles/cldnq7zxrvno

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,பீட்டர் பால்
 • பதவி,பிபிசி உலக சேவை
 • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,REUTERS

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மைதானத்துக்கு 300 டன் அளவுக்கு மிகவும் தாராளமாக தண்ணீர் உபயோகிக்கப்பட உள்ளது.

பாலைவன பிரதேசமாக அறியப்படும் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அங்கு இப்போது குளிர்காலம். ஆனாலும் சராசரியாக 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே நிலவுகிறது. இந்த வெப்பத்தை கூட அங்கு தாங்க முடியவில்லை என்று சொல்கின்றனர்.

எனவே மைதானத்தையும், மைதானத்தில் உள்ள பிட்சுகளையும் குளிர்விக்க லிட்டர், லிட்டராக தண்ணீர் செலவிடுகிறது போட்டிக்கான அமைப்புக்குழு.

கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.

 

சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் முயற்சி, தங்களின் சொந்த வளர்ச்சி, முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவதை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையே உலகிலேயே மிகவும் அதிக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கத்தாரில் இது போன்று அதிக அளவிலான தண்ணீரை உபயோகிப்பது முக்கியத்துவம் வாய்ந்த சவாலாக கருதப்படுகிறது.

பாலவன தேசம்

முதலில் திட்டமிட்டபடி கோடையில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால், 136 பயிற்சி ஆடுகளங்களுடன் ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டிருக்கும்.

இதர நாடுகளில் இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை தயாரிப்பதை விடவும் கத்தாரின் முதல்தரமான விளையாட்டு மைதானத்தை தயாரிப்பது பல்வேறு கட்ட சவால்களை கொண்டிருந்ததாக மைதானத்தின் ஊழியர்கள் சொல்கின்றனர்.

போட்டிகளின் போது அவசர தேவைக்கு என 40 பிட்ச்களுக்காக தாகாவுக்கு வடக்கே புல்வெளி பராமரிக்கப்பட்டது. 4,25,000 சதுர மீட்டரில் வளர்க்கப்பட்ட புற்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் உபயோகிக்கப்பட்டது.

போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான பிட்ச்களுக்கு கடல் நீர் செயற்கைமுறையில் நல்ல நீராக மாற்றப்பட்டு பயன்படுத்ததப்பட்டது.

"இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதாக உள்ள தண்ணீர் வளத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தால், கத்தாரில் 14000 பேர் மட்டுமே வசிக்க முடியும்," என கத்தார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியல் இணைப் பேராசிரியர் ரதுவான் பென்-ஹமடோ கூறினார்.

"கொஞ்சம் தண்ணீரை மட்டும் சார்ந்திருந்தால் உலகக் கோப்பைக்கு என அமைக்கப்பட்ட மைதானங்களில் கால் பங்கைக்கூட தயார் செய்திருக்க முடியாது, கத்தாரில் ஆறுகள் இல்லை. ஆண்டுக்கு 10 செ.மீ அளவுக்கு குறைவாகவே மழை பெய்கிறது," என்றும் அவர் கூறினார்.

கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகரிக்கும் பிரச்னைகள்

இந்த பாலவன தேசத்தில் 29 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இயற்கையாகவே கிடைக்கக் கூடிய கத்தாரின் நீர் ஆதாரங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றும் உண்மையான மக்கள் தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தில் கூடுதலாகத் தேவைப்படும் தண்ணீரை எங்காவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொருளாக இருக்கிறது.

"அதிக அளவிலான தண்ணீர், சுத்திகரிக்கப்படுவதன் மூலமே கிடைக்கிறது. ஏறக்குறைய 100 சதவிகித தண்ணீர் தனிப்பட்ட வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் சுற்றுச்சூழல், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு அறிவியலுக்கான இங்கிலாந்து மையத்தின் மத்திய கிழக்கு திட்ட இயக்குநர் டாக்டர் வில் லீ கியூஸ்னே.

சுத்திகரிப்பு முறையில் கடலில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அதில் இருந்து உப்பு மற்றும் இதர அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன‍. அதன் பின்னர் இந்த தண்ணீர் குடிப்பதற்கு அல்லது கழுவுதற்கு உகந்ததாக மாற்றப்படுகிறது. இந்த வழியில்தான் கத்தார் அதிக அளவுக்கு தண்ணீரை உற்பத்தி செய்கிறது.

ஆனால், உலக கோப்பை போன்ற விளையாட்டு நிகழ்வுகள் திட்டமிடும்போது தொடர்ந்து தேவை அதிகரிக்கிறது. எனவே மேலும் அதிக அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.

கத்தாருக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் போட்டிகளை காண வருகை தந்ததால் தண்ணீர் உபயோகம் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தது.

 

2050 ஆம் ஆண்டில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 80 பில்லியன் லிட்டராக நான்கு மடங்கு அதிகரிக்கும். ஆனால், கத்தாரில் வரம்பற்ற கடல் நீர் விநியோகம் உள்ளது. மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பை கொண்டுள்ளது. இதே போல பெரிய அளவிலான தண்ணீரை உற்பத்தி செய்யத் தேவையான பெரும் அளவு நிதி ஆதாரங்கள் தேவை.

இந்த செயல்முறைக்கு பெரும் அளவுக்கு எரிசக்தி தேவைப்படும் என்பது ஒரு பெரிய குறைபாடாக உள்ளது.

உப்புநீக்கும் சுத்திகரிப்பு முறைக்கு வளைகுடா பிராந்தியம் முழுவதும் 99.9% எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவாகவே ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் கிடைக்கின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய், எரிவாயு போன்ற ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் மிகவும் மாசுபடுத்துகின்றன. ஆனால், அதே நேரத்தில் கத்தார் தங்கள் நாட்டுக்கென சுற்றுச்சூழல் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 25 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது.

உலக கோப்பை போட்டி அமைப்புக் குழு, போட்டிகளின் போது கார்பன் சமநிலையாக இருக்கும் என்று கூறியது.

கார்பன் மார்க்கெட் வாட்ச் போன்ற சுற்றுச்சூழல் குழுக்களால் அந்தக் கூற்று பரவலாக மறுக்கப்பட்டது.

ஆனால் இதில் மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், கத்தார் தனது கார்பன் தடயத்தைக் குறைக்க மிகவும் உண்மையான மாற்றங்களைச் செய்து வருகிறது, அதில் நீர் உற்பத்தியும் அடங்கும்.

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,REUTERS

பசுமை இலக்குகள்

"பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்கிறார் டாக்டர் வில் லீ கியூஸ்னே.

"அவர்கள் கடல்நீரை குடிநீராக மாற்ற சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான வழியை தேடுகிறார்கள். இதற்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உருவாக்கி, அதை எதிர்சவ்வூடு பரவலுக்கு அவர்கள் பயன்படுத்தலாம். அல்லது நீரை ஆவியாக்க சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

 

எதிர்சவ்வூடு பரவல் செயல்முறையில் கடல்நீர் ஒரு சவ்வு வழியாக கொண்டு செல்லப்பட்டு அசுத்தங்கள் திறம்பட நீக்கப்படுகிறது. அதே சமயம் ஆவியாதல் முறையில் நீரை ஆவியாகும் வரை சூடாக்கி, பின்னர் அதை ஒடுக்கி, அதில் இருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகிறது.

 

சூரிய சக்தி, அத்துடன் புதிய, அதிக ஆற்றல் திறன் கொண்ட உப்புநீக்கும் ஆலைகள் கட்டமைப்பை கொண்டு வருவது, கத்தார் நாட்டின் வளர்ந்து வரும் தாகத்தைத் தணிக்கும் என நம்பப்படுகிறது, இது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது.

 

அரசியல் சர்ச்சை காரணமாக தனது அண்டை வளைகுடா நாடுகளால் அண்மையில் பொருளாதாரத்தடை விதிப்புக்கு உள்ளானபோது கத்தார் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது.

 

இதன் விளைவாக அது இப்போது தனது வறண்ட நிலப்பரப்பில் பால் மற்றும் விவசாயப் பண்ணையின் அளவை வேகமாக விரிவுபடுத்துகிறது. ஆனால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களை மட்டுமே கொண்டுள்ள நிலையில் இது தேவையை மட்டுமே அதிகரிக்கும்.

"கத்தாரில் உள்ள நீர் ஆதாரங்களில் மூன்றில் ஒரு பகுதி விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%, கிட்டத்தட்ட 0.1% -க்கும் குறைவாகவே பங்களிக்கிறது" என்கிறார் டாக்டர் பென்-ஹமடூ.

பெரும்பாலான நாடுகளைப் போல அல்லாமல், உணவு உற்பத்திக்காக அதன் இயற்கை வளங்களில் கத்தார் அதிக அளவு முதலீடு செய்துவருகிறது. இது அந்த நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவோ அல்ல.

ஆனால் அவசரகாலத்தில் தனது மக்களுக்கு உணவளிக்க முடியும் என்று கத்தார் அறிந்திருக்கிறது.

கத்தார் உலக கோப்பை 2022

பட மூலாதாரம்,REUTERS

கத்தாரின் எரிசக்திக்கான தீவிரமான திட்டங்கள் பிற நாட்டினருக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை விட சில வழிகளில் இது சற்று வித்தியாசமானது என்று டாக்டர் லு கியூஸ்னே கூறுகிறார்.

கத்தார் மற்றொரு பெரிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வான 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு இன்னும் பல சவால்கள் வரக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c1ve1k45x4ro

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆல்வரேஸ்: மெஸ்ஸியை நாயகனாக பற்றிக்கொண்ட சிறுவனின் கனவு மெய்ப்பட்ட தருணம்

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

16 டிசம்பர் 2022, 07:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

அந்தக் காணொளியில் வரும் சிறுவனிடம் கேட்கிறார்கள்.

 

“கால்பந்தில் உனது கனவு என்ன?”

 

 

“உலகக் கோப்பையில் ஆட வேண்டும்”

 

“உனது லட்சிய நாயகன் யார்?”

 

“மெஸ்ஸி”

 

பத்தாண்டுகளுக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட இந்தக் காணொளியில் வரும் சிறுவன் ஜூலியன் ஆல்வரேஸ். இப்போது கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக ஆடிக் கொண்டிருப்பவர். 

 

“சிறுவனாக இருந்தபோது எனக்கு மெஸ்ஸிதான் லட்சிய நாயகர்.அவருடன் தேசிய அணியில் ஆட வேண்டும் என்பது என கனவு” என்று பேட்டி ஒன்றில் ஆல்வரேஸ் கூறியிருக்கிறார்.

 

இளம் வயதில் ஆல்வரேஸுக்கு இரண்டு கனவுகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆட வேண்டும். மற்றொன்று தனது லட்சிய நாயகன் மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும். இந்த இரண்டில் முதலாவது வெற்றிகரமாகவே நிறைவேறிவிட்டது. 

 

உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார். மெஸ்ஸியைப் போல ஆக வேண்டும் என்ற மற்றொரு கனவும் நிறைவேறிக் கொண்டிருப்பதையே அவரது ஆட்டம் காட்டுகிறது.

 

தனது கனவு மாத்திரமல்ல, தனது லட்சிய நாயகனான மெஸ்ஸியின் கனவை நனவாக்குவதற்கும் இப்போது ஆல்வரேஸ் உதவிக் கொண்டிருக்கிறார். குரேஷியா அணியுடன் அவர் அடித்த இரண்டு கோல்களும் மெஸ்ஸியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை நேரலையிலேயே பார்த்திருக்க முடியும்.

 

பெனால்ட்டி முறையில் முதல் கோலை மெஸ்ஸி அடித்து முன்னிலை கொடுத்தாலும், தன்னந்தனியாக நெடுந்தொலைவுக்குப் பந்தைக் கடத்திவந்து இரண்டாவது கோலை ஆல்வரேஸ் அடித்ததுதான் அர்ஜென்டினாவுக்கு கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

 

10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சிறுவனாக இருந்த ஆல்வரேஸ் இன்று அவரே முத்தமிட்டுப் பாராட்டும் வகையில் உயர்ந்திருக்கிறார். கனவு மெய்ப்படுவது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அர்ஜென்டினா ரசிகர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட், தடகளம், கால்பந்து, நீச்சல் என பல விளையாட்டுகளிலும் தனது ஆதர்ச நாயகர்களைப் போல ஆக முயன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களுக்கு நிகராகவே வளர்ந்த உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறார் ஆல்வரேஸ்.

 

ஆல்வரேஸுக்கும் மெஸ்ஸிக்கும் இடையிலான் ஆடுகளப் புரிதலை, குரோஷியா அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

 

ஒரு த்ரோ மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்த பந்தை, உலகின் முன்னணி தடுப்பரண் வீரர்களைத் தாண்டி மிகவும் லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு வந்தார் மெஸ்ஸி. அப்போதை அது “அற்புதமானது” என்று தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். 

 

சில நொடிகளில் கோல் லைன் எனப்படும் கடைசி எல்லைக் கோடு வரை பந்தைக் கொண்டு சென்ற மெஸ்ஸி, தடுப்பரண் வீரர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஆல்வரேஸை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். இமைக்கும் நேரத்தில் அதைக் கோலுக்குள் தள்ளினார் ஆல்வரேஸ். 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நம்ப முடியாத கோல்” என்று அப்போது வர்ணணையாளர்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். “அபாயகரமான” ஆட்டத்தை மெஸ்ஸி வெளிப்படுத்தியதாக எதிரணியான குரோஷியாவின் மேலாளர் லாட்கோ டேலிக் வியந்து கூறினார். இப்படி மெஸ்ஸியின் உச்சநிலைப் போட்டி ஒன்றில் அவருக்கு பெருந்துணையாக இருந்திருக்கிறார் ஆல்வரேஸ்.

 

ஜூலியன் ஆல்வரேஸுக்கு இப்போது 22 வயதாகிறது. பண்பாட்டு ரீதியாக கால்பந்துடன் பிணைந்திருக்கும் பகுதியில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர், மிக இளம் வயதிலிலேயே கால்பந்தில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார். 16-வயதாக இருக்கும்போது அர்ஜென்டினாவின் கிளப் ஒன்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது அற்புதமான ஆட்டத்தால், கோப்பா அமெரிக்கா தொடருக்காக கடந்த ஆண்டில்தான் அர்ஜென்டினா தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பந்தை மிக வேகமாகக் கடத்திச் செல்வதற்குப் பெயர்பெற்ற ஆல்வரேஸ், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது கோலை அடித்தபோது இதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். 

 

கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினாவின் முதல் இரு போட்டிகளில் ஆட்டத்தைத் தொடங்கும் 11 பேரில் ஆல்வரேஸ் இடம்பெறவில்லை. ஆனால் போலந்துக்கு எதிராக களமிறங்கி போட்டியிலேயே கோல் அடித்தார். அதன் பிறகு மூன்று கோல்களை அடித்திருக்கிறார். இறுதிப் போட்டியிலும் கோல்களை அடித்து அர்ஜென்டினாவுக்கு வெற்றி தேடித் தந்தால் அது தன்னைக் கவர்ந்த லட்சிய நாயகனுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய நன்றியாக அமையும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தார் உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், தனது வாழ்நாள் கனவின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

 

கத்தார் உலகக் கோப்பை போட்டி அவருக்குக் கசப்பாகத் தொடங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிவரை அர்ஜென்டினாவைக் கொண்டுவருவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

 

 

பெனால்ட்டி கோல்கள் முதல் பல அற்புதமான பாஸ்கள் வரையிலும் மெஸ்ஸியின் கால்வண்ணம் இல்லாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். பெரும்பாலான போட்டிகளில் அவர் அதிகமான தரப் புள்ளிகளைப் பெற்ற வீரராகவும் இருந்திருக்கிறார். 

 

கத்தாரில் அர்ஜென்டினா ஆடிய ஆறு போட்டிகளில் அவர் நிகழ்த்திய 5 மாயாஜாலங்களை இங்கே பட்டியலிடுகிறோம். 

 

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆல்வரேஸுக்கு அற்புத பாஸ்

குரோஷியாவுடனான அரையிறுதிப் போட்டியில் 40வது நிமிடத்திலேயே 2 கோல்களை அடித்து ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது. 

எனினும் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் அற்புதமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.

அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.

குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார். 

த்ரோ மூலமாகக் கிடைத்த பந்தை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு சென்று, கோல் லைன் பகுதியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில்  பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதன் மூலம் 69வது நிமிடத்தில் விழுந்தது அந்த அற்புதமான கோல்

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முகத்தை திருப்பாமல் கடத்திய தருணம்

நெதர்லாந்துடனான காலிறுதிப் போட்டியில் மெஸ்ஸியால் ஆட்ட நேரத்தில் கள கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பெனால்ட்டியில் ஒரு கோலும், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒன்றும்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனாலும் அவர்தான் அர்ஜென்டினா வீரர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற வீரர்.

அதற்கும் காரணம் உண்டு. போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமாக பந்தைக் கடத்தி மொலினா கோல் அடிக்க உதவினார். பந்தை முன்புறமாக கோலை நோக்கி கடத்திக் கொண்டு வந்து பின்னர் முகத்தைத் திருப்பாமலேயே வலது புறமாக சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த மொலினாவை நோக்கி பந்தைத் தட்டி விட்டார். 

அது நெதர்லாந்து வீரர்கள் பலரைக் கடந்து சரியாக மொலினாவைச் சென்றடைந்தது. இதனை அற்புதமான பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து நிபுணர்கள் பாராட்டினார்கள்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிரணியை வியக்க வைத்த தருணம்

‘அவர் வியக்கத்தக்கவர், தலைசிறந்த ஆட்டக்காரர்’ என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியைப் புகழ்ந்தவர் அவரது ரசிகரோ, அவரது அணி வீரரோ அல்ல. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்.

“அவர் தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதில் எங்களது வீரர்கள் சிறப்பாகச் செல்பட்டார்கள். ஆனால் முடியவில்லை. அவர் அற்புதமானவர் ” என்று கூறினார் கிரஹாம். 

பந்தைக் காலால் கடத்தியபடி மெஸ்ஸி தொலைக்காட்சித் திரைகளில் தோன்றும்போது அவரை ‘மந்திரக்காரர்’ என்று வர்ணணையாளர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது. 

“ஒரு அங்குல இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாகப் பந்தைக் கோலுக்குள் கொண்டு செல்லும் திறன் படைத்தவர் மெஸ்ஸி” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கூறியது.

“நான் மாரடோனா ஆடியபோது அவருக்கு எதிராக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது மெஸ்ஸி ஆடும் அணிக்கு எதிராக பயிற்சியளிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இருவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களைப் பெற்றதற்காக அர்ஜென்டினா பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார் கிரஹாம் அர்னால்ட்.

இந்தப் போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்து ஆஸ்திரேலிய கோலுக்கு அருகே சென்று மீண்டும் மெஸ்ஸியிடமே திரும்பி வந்தது. அதை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கடத்திச் சென்ற மெஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் சூழ்ந்து நிற்கும்போதே கோலுக்குள் அடித்தார்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரையோடு தரையாக அடித்த கோல்

மெக்சிகோ அணியுடனான லீக் போட்டியின் முதல் பாதி வரை மெஸ்ஸி எங்கே என்று கேட்கும் அளவுக்குத்தான் அவரிடம் பந்து இருந்தது. ஆனால் பிற்பகுதியில் உண்மையிலேயே வாழ்வா சாவா என்ற கட்டத்தை அர்ஜென்டினா அணி எட்டிவிட்டது.

முதல் பாதியில் பல முறை அர்ஜென்டினாவின் கோலுக்கு அருகே மெக்சிகோ வீரர்கள் பந்தைக் கடத்திக் கொண்டு சென்றார்கள். அப்போதெல்லாம் அரங்கில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் பதற்றத்தில் தவித்ததை அவர்கள் எழுப்பிய சத்தத்திலேயே உணர முடிந்தது.

அதுவும் 45-ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அடித்த ஒரு ப்ரீ கிக் நேராக கோலை நோக்கிச் சென்றபோது பலருக்கு இதயமே நின்று போயிருக்கக்கூடும். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் அதை துல்லியமாகக் கைகளால் பிடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

64-ஆவது நிமிடத்தில் டி மரியா கடத்தித் தந்த பந்தை சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்து தரையை ஒட்டி, பல மெக்சிகோ வீரர்களின் கால்களை ஒட்டியபடி பந்தை கோலுக்குள் அடித்தார் மெஸ்ஸி. 

அது கோல் அடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லாத ஒரு தருணம் என்றுதான் கருதப்பட்டது. பல மெக்சிகோ வீரர்கள் சுற்றியிருந்தார்கள். கோலுக்கான தூரமும் அதிகமாக இருந்தது. ஆனால் மரியா கொடுத்த பந்தை அமைதியாக வாங்கிய மெஸ்ஸி, 4  மெக்சிகோ வீரர்களை போக்குக் காட்டி கோல் கீப்பருக்கு இடது புறமாக தரையோடு தரையாக பந்தை அடித்துக் கோலாக்கினார்.

அந்த நேரத்திலேயே ட்விட்டரில் அந்த கோலைப் பற்றிய விவாதம் ட்ரெண்டானது. பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அடித்த கோலைப் போல மெஸ்ஸியின் கோலையும் வியந்து பேசினர்.

 மெஸ்ஸி கோல் அடித்ததும் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்த அரங்கில் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடினர்.  களத்துக்குள்ளும் அரங்கிலும் எழுந்த ஆராவாரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆகின.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின்னல் வேக பெனால்ட்டி கிக்

கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி நான்கு முறை பெனால்ட்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். அதில் போலாந்து அணியுடனான போட்டியில் அவருக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. 

37-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் கோல் அடிக்க முயன்றபோது போலாந்து கோல் கீப்பரின் கை மெஸ்ஸியின் தலையில் பட்டதால் காணொளி நடுவரின் ஆய்வுக்குப் பிறகு  அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது.

பெனால்ட்டியை கோலாக்குவதில் வல்லவரான மெஸ்ஸியே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். வலுவாகவும் துல்லியமாகவும் மெஸ்ஸி பந்தை அடித்தார். ஆனால் போலாந்து கோல்கீப்பர் செசஸ்னி அதைப் பாய்ந்து சென்று ஒரு கையால் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். 

சமூக வலைத்தளங்களில் மெஸ்ஸியை கேலி செய்யும் பெஸ்ஸி என்று ஒரு ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. மெஸ்ஸியின் தவறு பற்றி ஏராளமானோர் விமர்சித்தார்கள்.

கத்தாரில் மெஸ்ஸி நிகழ்த்திய 5 மாயஜாலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான பெயரை அவர் பெற்றார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி அடித்த பெனால்ட்டியை அந்நாட்டு கோல்கீப்பர் ஹேல்டோர்சன் கோல் ஆகாமல் தடுத்துவிட்டார்.

இத்தகைய மோசமான அனுபவத்தைப் பெற்ற மெஸ்ஸி அதன் பிறகு இரண்டு பெனால்ட்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றினார். அதிலும் குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் அடித்த அதிவேக பெனால்ட்டி மிகவும் அபாயகரமானது என்று கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள். சற்று தவறினாலும் கோல்வலைக்கு மேலே பந்து பறந்து சென்றுவிடும் வாய்ப்பு உண்டு.  கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டி ஒன்றில் அவர் இப்படியொரு அதிவேக உதையால் பெனால்ட்டியை தவறவிட்ட தருணம் உண்டு.

ஆனால் குரோஷியாவுடனான போட்டியில் அதே வேகத்தில் கோல்கீப்பரின் இடதுபுறமாக கோல்வலையின் மேற்பகுதியில் துல்லியமாக அடித்தார் மெஸ்ஸி. கோல்கீப்பரால் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை. 

https://www.bbc.com/tamil/articles/ckm4vlm5kkmo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா?

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான மொரக்கோவின் வெற்றியின் ஒவ்வொரு தருணத்துக்குப் பின்னரும் அக்ரஃப் ஹக்கிமி அவரது தாயை அன்புடன் கட்டித்தழுவும் புகைப்படங்கள் வைரல் ஆகின.

கத்தாரில் மொரோக்கோ அணிக்கான  மறக்கமுடியாத வரலாற்று சிறப்பு மிக்க போட்டியின்போது சிறப்பான பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில மட்டும் வைரல் ஆகின.  மொரோக்கோவுக்கு இன்னும் ஒரு கடைசியான ஆட்டம் மிச்சம் இருக்கிறது.

மொரோக்கா அணியும் ஹக்கிமியும் குரோஷியாவை சனிக்கிழமை எதிர்கொள்வது, வீடு திரும்பும் ஆப்ரிக்க தரப்பின் ரசிகர்களை பொறுத்தவரை இது இன்னொரு கொண்டாட்ட மாலைவேளையாக இருக்கும் வாய்ப்பாக கருதப்படுகிறது.

மொரோக்கோ அணியின் மையமாக ஹக்கிமி திகழ்வதற்கான பின்னணியில் பாரீசின் செயின்ட்-ஜெர்மைன் கிளப் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடனான அரையிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஒட்டு மொத்த நாடு, அணியின் கனவு முடிவுக்கு வந்து விட்டது என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை ஏற்கனவே பெற்று விட்ட மொரோக்கோவுக்கு இன்னும்  ஒரு சிறப்பான இரவு வருமா?

'தியாகங்கள் தந்த வெற்றி'

மொரோக்கோவின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து வீரர் என்ற அந்தஸ்தை ஹக்கிமி ஏற்கனவே பெற்று விட்டார். ஸ்பெயினுக்கு எதிரான அவர்களின் வரலாற்று வெற்றியை அவர் உறுதி செய்தார்.

120 நிமிட விளையாட்டுக்குப் பின்னர் வெற்றியா, தோல்வியா என்று கணிக்க முடியாத பரபரப்பான நிலையில் பதற்றமான பெனால்டி ஷூட்அவுட்டுக்கு மத்தியில் ஹிக்கிமி, தேசத்தின் நிறைய எதிர்பார்ப்புகளை தமது தோளில் சுமந்தபடி  வெற்றியை நோக்கி கோலை அடித்தார்.

3-0 ஷூட்அவுட் வெற்றியை தனது தாயுடன் உணர்வுபூர்வமாக கொண்டாடும் முன், பந்தை ஒரு டிராப் ஷாட் மூலம் உதைத்தார். அவரது இந்த வெற்றிக்கான உதை ரசிகர்களிடையே உற்சாக ஆரவாரத்தை தூண்டியது.

பெல்ஜியத்துக்கு எதிரான வெற்றிக்கு முன்பும் பின்பும், ஐ லவ் யூ மாம் என்ற வாசகத்துடன் தனது தாய் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை  தமது சமூக வலைதளத்தில் ஹக்கிமி பகிர்ந்து கொண்டார்.

ஹக்கிமியின் கால்பந்து பயணத்தில் அவரது குடும்பத்தின் பாரம்பரியம் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. மொராக்கோ மீது அவர் ஏன் அதிக அன்பு வைத்திருக்கிறார்?

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாட்ரிட்டின் புறநகர்ப் பகுதியான கெடாஃபே பகுதியில் வளர்ந்த போதிலும் - ஹக்கிமி ஸ்பெயின் அணிக்கு விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்தார். அவரது தாயார் ஸ்பெயினின் தலைநகரில் வீடுகளை சுத்தம் செய்யும் பணியாளாராக இருந்தார். அவரது தந்தை ஒரு தெரு வியாபாரியாக உள்ளார்.

"நாங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறோம்," என்று ஹக்கிமி 2018ஆம் ஆண்டு கூறினார். "இன்று நான் அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடுகிறேன்,"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

"என் பெற்றோர் எனக்காகத் தியாகம் செய்தார்கள். நான் வெற்றிபெறுவதற்காக என் சகோதரர்களுக்குப் பல விஷயங்கள் கிடைக்கவில்லை," என்றும் கூறினார்.

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹக்கிமியின் தந்தை, "அக்ராஃப் மாட்ரிட் வந்தடைந்தபோது, நான் அவரை தினமும் 16:30 மணிக்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, நான் 21:30 மணிக்கு வீட்டிற்கு வருவேன். பயிற்சி முகாமிற்கு அவரை அழைத்துச் சென்று விட்டு வீட்டிற்கு 50 கிமீ பயணித்து திரும்புவது வழக்கம்," என்று கூறியுள்ளார்.

"பெற்றோர்களுக்கு எனது செய்தி என்னவென்றால்,  தங்கள் குழந்தைகள் வெற்றிபெற விரும்பினால் பெற்றோர் தியாகங்கள் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் நான் செய்த தியாகங்கள் நல்ல முடிவுக்கு வழிவகுத்தன," என்றார்.

மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு தந்த வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"குறிப்பாக அரேபியர்களுக்கும் மொராக்கோ மக்களுக்கும் ஹக்கிமி முன்மாதிரி என்று சொல்லும் நபர்களை நான் சந்திக்கும் போது. அக்ராஃபின் வெற்றி என்னைப் பெருமைப்படுத்துகிறது," என்றார் அவரது தந்தை.

தாய்வழி அன்பு சனிக்கிழமை இரவில் மீண்டும் வெளிப்படலாம்.  ஏனெனில் மூன்றாவது இடத்துக்கான பதக்கத்தைப் பெற்று, சிறந்த ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றாகத் தங்கள் நிலையை கத்தாரில் உறுதிப்படுத்தி விட்டு செல்ல வேண்டும் என்று மொரோக்கோ அணி நினைக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cer4w7d34vlo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

“எங்களது அணியில் பல வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை , ஆனால்...” - வெற்றிக்கு பிறகு பேசிய குரேஷியா பயற்சியாளர்

croatia

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

“குரேஷியா அணிக்கு எதிர்காலம் குறித்த எந்தப் பயமும் இல்லை. இதை சகாப்தத்தின் முடிவாக நான் நினைக்கவிக்லை. 2024ஆம் ஆண்டு தேசிய லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடர்கள் உள்ளன. குரேஷியா அணிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்”.

மொராக்கோ அணியுடனான போட்டிக்குப் பிறகு குரேஷிய அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் இவ்வாறு கூறினார்.

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டி நேற்று இரவு கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இப்போட்டியில் மோதின.

10 நிமிடத்திற்குள்ளாகவே இரு அணிகளும் முதல் கோல்

குரோஷியா மற்றும் மொராக்கோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ க்வார்டியோல் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து போட்டியின் 9ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணி வீரர் அச்ரஃப் டாரி ஒரு கோல் அடிக்க போட்டி சமன் ஆனது.

 

போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி விறுவிறுப்படைந்தது.

பின்னர், 42ஆவது நிமிடத்தில் குரேஷியா வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக முயற்சித்த நிலையில், இருவரது தடுப்பரண்களும் வலுவாக இருந்ததால் எந்தக் கோலும் அடிக்கவில்லை.

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முடிவில் 2-1 என்ற கணக்கில் குரேஷியா அணி போட்டியை வென்றது.

பேரழிவாக இருந்திருக்கும்

போட்டியின் பிறகு பேசிய குரேஷியா அணியின் மேலாளர் ஸ்லாட்கோ டாலிக், "நாங்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றோம், அதில் தங்க அடுக்கு உள்ளது. இது நாங்கள் தங்கப் பதக்கம் வென்றதை போன்றது. மூன்றாம் இடத்துக்கான ப்ளே-ஆஃப் போட்டியில் தோல்வி கண்டிருந்தால் பேரழிவாக இருந்திருக்கும்” என்றார்.

4 மில்லியனுகும் குறைவான மக்கள் தொகை கொண்ட குரேஷியா இதுவரை 6 முறை ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதுவே உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

குரேஷியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

37 வயதான குரேஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் உட்பட பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்க வாய்ய்புள்ளதால் இந்தத் தொடரில் கோப்பை வெல்ல முடியாதது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

மூத்த வீரர்கள் குறித்து பேசிய குரேஷிய அணியின் பயிற்சியாளர் டாலிக், “வயது காரணமாக எங்களது சில வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடர். ஆனால், எங்கள் அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். எனவே குரேஷியாவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்” என்றார்.

ஒரு நாள் உலகக் கோப்பை வெல்வோம்

கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை இந்தத் தொடரில் மொராக்கோ பெற்றது.

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியிடம் தழுவிய தோல்வியையடுத்து, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் குரேஷியாவை சந்தித்தது மொரோக்கோ. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி அந்த அணியினருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என அந்த பணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மொரோக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெகுராகி போட்டிக்குப் பிறகு பேசுகையில், “இந்த போட்டிக்கு முன்பு அனைவரிடமும் சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னேறிவிட்டோம். இது போதாது. எதிர்காலத்திற்கு இது முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாங்கள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளோம். ஆனால் மீண்டும் அதை செய்ய விரும்புகிறோம். தொடர்ந்து அரையிறுதி அல்லது காலிறுதியை எட்ட முடிந்தால் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வோம்” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c720pdy34z5o

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸி அதிர்ந்தது முதல் ரொனால்டோ அழுதது வரை கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 சம்பவம்

fifa worldcup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அனல்பறந்த ஆட்டங்கள்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. எதிர்பாராத திருப்பங்கள்.. சொல்லில் அடங்காத உணர்வுகள் என நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களையும் ஆச்சரியங்களையும் தந்து கொண்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என வர்ணிக்கின்றனர் கால்பந்து பிரியர்கள். அதற்கு மிக முக்கிய காரணம். 90 நிமிடங்களில் நடந்த அதிரடி திருப்பங்கள்தான். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டங்கள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கும் என்கிற நிலைப்பாட்டை மாற்றி எழுதியிருக்கிறது இந்த தொடர்.

பலம் வாய்ந்த முன்னணி அணிகளை பெரிய அனுபவம் ஏதுமில்லாத சிறிய அணிகள் வீழ்த்தியிருக்கின்றன. அந்த வகையில் நடப்பு தொடரில் நிகழ்ந்த 7 சுவாரஸ்யமான திருப்பங்களை இங்கே காணலாம்.

1. அர்ஜென்டினாவை அதிர வைத்த செளதி

அர்ஜென்டினா - செளதி அரேபியா போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதி கோல் கணக்கு எப்படியிருக்கும் என்று கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். காரணம், சௌதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது.

அர்ஜென்டினா தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு 1 - 2 கோல் கணக்கில் அதிர்ச்சியளித்தது சௌதி அரேபியா. அது செளதியின் கால்பந்து வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது. எந்த அளவுக்கு எனில், தேசிய விடுமுறை அறிவித்து கொண்டாடும் அளவுக்கு ஆனந்தத்தில் திளைத்தது செளதி அரேபியா.

 

2. ஜப்பானிடம் ஏமாந்த ஜெர்மனி

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது. ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன.

ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. சௌதி அரேபியாவின் ஆச்சர்யமளிக்கக்கூடிய வெற்றியைத் தொடர்ந்து, 1 - 2 கோல் கணக்கில் ஜப்பானும் ஜெர்மனியை வீழ்த்தி உலக கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

3. பிரான்சுக்கு கசப்பு மருந்து கொடுத்த துனீசியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 92 ஆண்டுகால வரலாற்றில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை துனிசீயா அணி வீழ்த்தியதை யாருமே துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரான்ஸ் அணி முன்னணி வீரர்களை பெஞ்சில் அமரவைத்துவிட்டு குரூப் சுற்றின் கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத வீரர்களைக் கொண்டே விளையாடியது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை போட்டியின் முடிவில் அந்த அணி உணர்ந்திருக்கும்.

58வது நிமிடத்தில் கோல் அடித்து, 1 - 0 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது துனீசியா. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் துனீசியாவால் அடுத்த சுற்றுக்கு நுழைய முடியவில்லை. அரங்கில் இருந்த துனிசிய ரசிகர்கள் பலர் கண்ணீர் வடித்து அழுததை தொலைக்காட்சித் திரைகளில் காண முடிந்தது.

4. ஸ்பெயின் தோல்வியும் 4 முறை சாம்பியனுக்கு நேர்ந்த கதியும்

fifa football world cup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புல்லின் நுனி அளவிலான கால்பந்தின் வளைவு கத்தார் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜெர்மனிக்கு அதிரவைக்கும் முடிவுகளைத் தந்தது.

எல்லைக் கோட்டை தாண்டிய பிறகு கிடைத்த பாஸில் ஜப்பான் கோல் அடித்ததாக கருதப்பட்டது. ஆனால் நடுவர் VAR உதவியுடன் அதனை கோலாக அறிவிக்க ஸ்பெயினுக்கு 2 - 1 கோல் கணக்கில் தோல்வியைத் தந்து அதிர்ச்சியளித்த கையோடு 4 முறை சாம்பியனான ஜெர்மனியையும் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய விடாமல் செய்தது ஜப்பான்.

5. உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்திய கேமரூன்

யாருமே எதிர்பார்த்திராத மற்றொரு திருப்பம் பிரேசில் - கேமரூன் குரூப் ஆட்டத்தில் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் பிரேசிலால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கூடுதலாக கிடைத்த 2 நிமிடத்தில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் அடித்த கோல் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

உலகின் நம்பர் 1 அணியான பிரேசில் கேமரூனிடம் வீழ்ந்தது. இருந்தபோதிலும் அது நாக் அவுட் வாய்ப்புக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கோல் அடித்த மகிழ்ச்சியில் கேமரூன் வீரர் வின்செண்ட் அபுபக்கர் தனது சட்டையை கழற்றி கொண்டாடினார்.

ஏற்கனவே மஞ்சள் அட்டை வாங்கியிருந்த அவருக்கு 2வது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டையையும் கள நடுவர் காட்டினார்.

fifa football world cup final

பட மூலாதாரம்,GETTY IMAGES

வின்செண்ட் அபுபக்கருக்கு கைக்கொடுத்து கள நடுவர் வழியனுப்பி வைத்த காட்சி பலரையும் கவனிக்க வைத்தது. சமூக ஊடகங்களிலும் வைரலானது.

6. போர்ச்சுகலை புரட்டியெடுத்த தென் கொரியா

போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில், தென்கொரிய வீரர் தங்களது கோல் பகுதியில் இருந்து எதிரணியின் கோல் பகுதி வரைக்கும் பந்தைக் கடத்திக் கொண்டு வந்து கோலடிக்க உதவியது அந்நாட்டு ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தது.

இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது. தென் கொரிய அணியினரை கோல் அடிக்க விடாமல் தடுக்க முயன்ற ரொனால்டோ தவறுதலாக கோலை நோக்கியே பந்தைத் திருப்பியதால், அந்த வாய்ப்பை தென்கொரியா பயன்படுத்திக்கொண்டது.

ரொனால்டோவின் தவறைத் தொடர்ந்து அவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் எளிமையாக வெல்லும் எனக் கருதப்பட்ட போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் தென் கொரிய கேப்டன் சன் களத்தில் அழுத காட்சி பலரையும் நெகிழ வைத்தது.

7. ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோவும் கண்ணீரும்

ronaldo crying

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் உலகக் கோப்பையில் சந்தித்தார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ். அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

இதுமட்டுமின்றி மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 11 வீரர்களில் ரொனால்டோ இடம்பெறவில்லை. மாற்று வீரராக களமிறக்கப்பட்டாலும் குறைவான அளவிலேயே அவருக்கு பந்தை தொடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் மொராக்கோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் களத்தைவிட்டு கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ.

வரலாறு படைத்த மொராக்கோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்த்திராத ஓர் அணி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியது என்றால் அந்த பெருமை மொராக்கோவையே சாரும்.

சிறப்பான தடுப்பாட்டம், எதிர்பாராத தருணங்களில் கோல் ஸ்கோர் செய்வது, கொண்டாட்டத்தின்போது தங்களது தாய் மற்றும் குடும்பத்தினருடன் நடனமாடுவது, களத்திலேயே மண்டியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவது என பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது மொராக்கோ.

morocco

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாக் அவுட் சுற்றில் முதலில் ஸ்பெயினை வீழ்த்தி அதிர்ச்சி தந்தது. பிறகு காலிறுதியில் போர்ச்சுகலையும் வென்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்கிற பெருமையை படைத்தது. இணையத்தில் பலரது மனங்களையும் வென்றிருக்கிறது மொராக்கோ அணி.

https://www.bbc.com/tamil/articles/cl4g038mjplo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பையை வெல்லப்போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா அல்லது எம்பாப்பேவின் ஃபிரான்ஸா?

கத்தார் கால்பந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரின் லுசைல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30க்கு நடக்கவிருக்கும் அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதி போட்டியை உலக கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதி போட்டியில் களம் காண்பதால் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கப்போவது உறுதி.

அர்ஜென்டினாவின் கால்பந்து கதாநாயகர் மெஸ்சி தனது 35ஆவது வயதில் இருக்கிறார். இதுவரை அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பலோன் டி'ஓர் விருதினை ஏழுமுறை வென்றுள்ளார். எனினும் ஒருமுறை கூட உலகக் கோப்பை போட்டியில் மிகப்பெரிய அணிக்கான பரிசை அவர் வென்றதில்லை.

"ஃபிரான்ஸ் அணியே தங்களுக்கு விருப்பமான அணி என சிலர் சொல்லலாம். ஆனால், எங்களிடம்தான் ஆகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான ஒன்று," என்கிறார் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்.

 

"ஏனென்றால் நாங்கள் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்வாகவோ உணரவில்லை. ஆகவே, எதிரணிதான் விருப்பமான அணி என்று கேட்பதையே நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம்," என்றும் கூறினார்.

" ஆனால், நான் எப்போதுமே நாங்கள்தான் ஆக சிறந்த அணி என்று சொல்வேன்," என்று உறுதிபடக் கூறும் எமிலியானோ மார்டினெஸ், "சிறந்த தடுப்பாட்டத்துடன், எங்கள் இலக்கை அடைவதற்கு எங்களுக்கு சாதகமாக பல வாய்ப்புகள் உள்ளன," என்றும் தெரிவித்தார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம்,PA MEDIA

1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அணியின் கேப்டனாக டிடியர் டெஷாம்ப்ஸ் இருந்தார். இப்போது அவர்தான் பிரான்ஸ் அணியின் மேலாளராக இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் பிரான்ஸ் மேலும் ஒரு வெற்றியைப் பெற்றது.

"அர்ஜென்டினா அணியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மட்டுமின்றி சில பிரான்ஸ் நாட்டு மக்களும் கூட லியோனல் மெஸ்ஸிதான் உலகக் கோப்பையை வெல்வார் என்கின்றனர். ஆனால், எங்களுடைய நோக்கத்தை அடைய முழு மூச்சுடன் செயல்படுவோம்," என்றார் பிரான்ஸ் மேலாளர்.

உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மெஸ்ஸி உதவுவாரா?

இந்த தொடரில் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். எனவே இந்த இறுதிப் போட்டியில் அதிக கோல்களை எடுத்த வீரர் யார்? என்ற கேள்விக்கான விடையும் தெரிந்துவிடும்.

 

ஃபிரான்சின் ஒலிவியர் ஜிரோட் மற்றும் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்து தங்களின் அணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர்.

மெஸ்ஸி இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது அர்ஜென்டினா அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். ஜெர்மனியின் மரியோ கோட்ஸே ஒரே ஒரு கோலைப் போட்டாலும், கூடுதல் நேரத்திற்குப் பிறகு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் அர்ஜென்டினா கடந்து வந்த பாதை

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் நடைபெற்று வரும் தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார் மெஸ்ஸி.

செளதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்து, பின்னர் மெக்சிகோவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து அர்ஜென்டினா, 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது, குழு C பிரிவில் முதலிடம் கண்டது, அதன்பின் ரவுண்ட் 16 நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது.

காலிறுதியில் நெதர்லாந்து உடனான போட்டி அர்ஜென்டினாவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. போட்டியில் 82 நிமிடங்களுக்குப் பிறகு 2-0 என முன்னிலையில் அர்ஜென்டினா இருந்தது. ஆனால் நெதர்லாந்தின் வூட் வெகோர்ஸ்ட் இரண்டு முறை கோல் அடித்தார். சம நிலையில் பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.

அரையிறுதியில் குரோஷியா அணியுடனான போட்டியில் மெஸ்ஸியின் ஒரு கோல், அல்வாரெஸின் இரண்டு கோல்கள் உதவியுடன் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றிப் பெற்றது. அர்ஜென்டினா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியிலும், 1986 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளது. இன்றைய போட்டியில் மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்து அர்ஜென்டினா காத்திருக்கிறது. "நாங்கள் வெல்வோம் என்று நம்புகின்றோம், அது முடியாவிட்டாலும் அணி வீரர்கள் பெருமையடைய வேண்டும். ஏனென்றால் இது அனுபவிப்பதற்கான ஒரு தருணம்," என நடைமுறையை புரிந்து கொண்டவராக சொல்கிறார் அணியின் மேலாளர் லியோனல் ஸ்கலோனி.

ஃபிரான்ஸின் முன்னெடுப்புகளைத் தடுக்கிறதா நோய்தொற்று?

ஃபிரான்ஸை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ள 23 வயதான எம்பாப்பே, தனது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியை சுவைக்க இன்று போராடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-1 வெற்றியில் ஒரு முறையும், டென்மார்க்கிற்கு எதிரான 2-1 என்ற போட்டியில் இரண்டு முறையும் அவர் கோல் அடித்தார்.

காலிறுதியில் இங்கிலாந்தின் வலுவான கரேத் சவுத்கேட்டினை எதிர்கொண்டனர் ஃபிரான்ஸ் அணியினர். எனினும் ஆரேலியன் டிச்சௌமேனி அணியை முன்னணியில் நிறுத்தினார். ஆனால் ஹாரி கேன் பெனால்டி மூலம் போட்டியை சமன் செய்தார். கேன் இரண்டாவது ஸ்பாட்-கிக்கை தவறவிட்டாலும் ஆலிவியர் கிராட், பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வழிசெய்தார்.

அரையிறுதியில் ஃபிரான்ஸ், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது

1998ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு என இரண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் ஃபிரான்ஸ் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால், 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸ் தோல்வியடைந்தது. இப்போது நான்காவது முறையாக இறுதி போட்டிக்குள் ஃபிரான்ஸ் நுழைந்திருக்கிறது.

ஃபிரான்ஸ் அணியின் பக்கபலமாக திகழும் அட்ரியன் ராபியோட், டேயோட் உபமேகானோ மற்றும் கிங்ஸ்லி கோமன் ஆகியோருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அணியின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

"நாங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், அது பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்," என அணியின் மேலாளர் டெஷாம்ப்ஸ் தெரிவித்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில்

இரு அணிகளும் இதற்கு முன் மூன்று முறை உலகக் கோப்பையில் சந்தித்துள்ளனர். அர்ஜென்டினா 1930 மற்றும் 1978 இல் இரண்டு குழு போட்டிகளிலும் வென்றது. ஆனால் 2018ஆம் ஆண்டு 4-3 என்ற கணக்கில் பிரான்ஸ் தனது ஒரே நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

அர்ஜென்டினா அணி சார்பில் இதற்கு முன்பு 1930 இல் கில்லர்மோ ஸ்டேபில் மற்றும் 1978 இல் மரியோ கெம்பஸ் ஆகியோர் கோப்பையை கைப்பற்றினர். இப்போது உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வென்றால் ‘கோல்டன் பூட்’ வென்ற மூன்றாவது அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார்.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51gnxl22kvo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டி: 52 இலட்சம் ரூபா வரையான விலையில் கறுப்புச் சந்தையில் ரிக்கெட் விற்பனை; பிரான்ஸ் வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள்;

By SETHU

18 DEC, 2022 | 01:38 PM
image

உலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில்  52 லட்சம் இலங்கை ரூபா (12 லட்சம் இந்திய ரூபா) வரையான விலையில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் இறுதிப் போட்­டியில் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் முன்னாள் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் இன்று மோது­கின்­றன. கத்­தாரின் தலை­நகர் தோஹா­வி­லி­ருந்து 23 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள, அந்­நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நக­ரான லூசெய்லின், லூசெய்ல் அரங்கில் உள்ளூர் நேரப்­படி இன்று மாலை 6.00 மணிக்கு (இலங்கை நேரப்­படி இரவு 8.30 மணிக்கு இப்­போட்டி ஆரம்­ப­மாகும்.

பீபா­வினால் 22 தட­வை­யாக நடத்­தப்­படும் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி இது. இந்­நி­லையில், ஆர்­ஜென்­டீனா, பிரான்ஸ் ஆகிய இரு அணி­களும் 3 தட­வை­யாக உல­கக் கிண்­ணத்தை வெல்ல முயற்­சிக்­கின்­­றன.  

ஆர்­ஜென்­டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 1930, 1990, 2014 ஆம் ஆண்­டு­களின் இறு­திப்­போட்­டி­களில் ஆர்­ஜென்­டீனா தோல்­வி­யுற்­றது.

பிரான்ஸ் 1998, 2018 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 2006 ஆம் ஆண்டு இறு­திப்­போட்­டியில் பிரான்ஸ் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.
இச்­சுற்­றுப்­போட்­டியில் சம்­பி­ய­னாகும் அணிக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 42 மில்­லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்­ப­ரிசு   வழங்­கப்­படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்­லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்­கப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


நேருக்கு நேர்

ஆர்­ஜென்­டீ­னாவும் பிரான்ஸும் 1930 முதல் இது­வரை 12 தட­வைக‍ேள சர்­வ­தேச போட்­டி­களில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­யுள்­ளன. இவற்றில் ஆர்­ஜென்­டீனா 6 தட­வை­களும் பிரான்ஸ் 3 தட­வை­களும்  வென்­றுள்­ளன.

உல­கக்­ கிண்­ண வரலாற்றில் 3 தட­வைகள் இவ்வணிகள் மோதி­யதில் 2 தட­வைகள் ஆர்­ஜென்­டீ­னாவும், ஒரு தடவை பிரான்ஸும் வென்­றன.

எனினும், இவ்­விரு அணி­களும் இறு­தி­யாக 2018 உலகக்கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் 2 ஆவது சுற்றில் மோதின. அப்­போட்­டியில் 4:3 கோல் விகி­தத்தில் பிரான்ஸ் வென்றது.

1958, 1962 ஆம் ஆண்­டு­களில் தொடர்ச்­சி­யாக 2 தட­வைகள் உலகக் கிண்­ணத்தை வென்ற பின்னர் இது­வரை எந்த நடப்புச் சம்­பி­யனும் கிண்­ணத்தை தக்­க­வைத்துக் கொள்­ள­வில்லை.

1990 இல் அப்­போ­தைய நடப்புச் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் 1998 இல் நடப்புச் சம்பியன் பிரே­ஸிலும் இறுதிப் போட்­டியில் தோல்­வி­யுற்­றன.

FIFA-world-cup-final---Argentina--vs-Fra

கால்­பந்­தாட்­டத்­து­றையில் பெரும் சாத­னை­களைப் படைத்த, ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி இது­வரை உலகக் கிண்­ணத்தை வெல்­ல­வில்லை. 2014 ஆம் ஆண்டின் இறு­திப்­போட்­டியில் மெஸி தலை­மை­யி­லான ஆர்­ஜென்­டீனா, ஜேர்­ம­னி­யிடம் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.

இது தனது கடைசி உல­கக்­கிண்ணப் போட்டி என லியோ மெஸி அறி­வித்­துள்ள நிலையில், உலக சம்­பி­ய­னாக, உலகக் கிண்­ணத்­தி­லி­ருந்து விடை­பெற மெஸியும் அவரின் ரசி­கர்­களும் விரும்­பு­கின்­றனர்.
35 வய­தான மெஸி இச்­சுற்­றுப்­போட்­டியில் 5 கோல்­களைப் புகுத்தி, இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­திய 2 வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கிறார்.

மறு­புறம் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் மிகப் பலம் வாய்ந்த அணி­யாக திகழ்­கி­றது.

அவ்­வ­ணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் எதிர்­வரும் 26 ஆம் திகதி தனது 36 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டு­கிறார். இம்­முறை பிரான்ஸ் சம்­பி­ய­னானால் 2 தட­வைகள் பீபா உலகக் கிண்­ணத்தை வென்ற முதல் அணித்­த­லை­வ­ராக ஹியூகோ லோறிஸ் சாதனை படைப்பார். பிரெஞ்சு அணியின் கோல்  காப்­பாளர் அவர்.

தங்கப் பாத­ணியை நோக்கி...

பிரான்ஸின் கோல் மெஷி­னாக கரு­தப்­ப­டுவர் கிலியன் எம்­பாப்பே, நாளை மறு­தினம் (20) தனது 24 ஆவது பிறந்த  தினத்தைக் கொண்­டா­ட­வுள்ள எம்­பாப்பே, இந்த உலகக் கிண்­ணத்தில் 5 கோல்­களைப் புகுத்­தி­யுள்ளார். இச்­சுற்­றுப்­போட்­டியில் இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­தி­ய­வர்­களில் மெஸி­யுடன் முதல் இடத்தை பகிர்ந்து­கொண்­டுள்ளார்.

இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களைப் புகுத்­தி­யர்­களில் 2 ஆம் இடத்தில் உள்­ள­வர்கள் ஆர்­ஜென்­டி­னாவின் ஜூலியன் அல்­வா­ரெஸும் பிரான்ஸின் ஒலிவர் கிரூட்டும். இவர்கள் தலா 4 கோல்­களைப் புகுத்­தி­யுள்­ளனர். இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களை புகுத்­திய பட்­டி­ய­லி­லுள்ள முதல் 4 வீரர்­களும் இறு­திப்­போட்­டியில் விளை­யாட வாய்ப்­புள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நால்­வரின் ஒருவர் தங்­கப்­பா­தணி விருதை வெல்ல அதிக வாய்ப்­புள்­ளது.

 

மத்­தி­யஸ்தர்

இறுதிப் போட்­டியின் மத்­தி­யஸ்­த­ராக போலந்தைச் சேர்ந்த சிமோன் மர்­சி­னியாக் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
முதல் சுற்றில் பிரான்ஸ் வெற்­றி­பெற்ற டென்­மார்­க்குக்கு எதி­ரான போட்டி, 2 ஆவது சுற்றில் ஆர்­ஜென்­டீனா வென்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்டி ஆகி­ய­வற்­றிலும் மத்­தி­யஸ்­தராக, 41 வய­தான மர்­சியாக் பணி­யாற்­றி­யி­ருந்தார்.
அவரின் சக நாட்­ட­வர்­க­ளான பவெல் சோகோல்­னிக்கி, தோமஸ் லிஸ்­தி­கீவிக்ஸ் ஆகியோர் உதவி மத்­தி­யஸ்­தர்­க­ளாக பணி­யாற்­ற­வுள்­ளனர்.

Szymon-Marciniak-world-cup-final-referee

 

52 இலட்சம் ரூபா ரிக்கெட்

இறு­திப்­போட்­டியை பார்­வை­யிட விரும்பும் ஆர்­ஜென்­டீன ரசி­கர்­க­ளில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோர் ரிக்கெட் கிடைக்­கா­ததால் அதி­ருப்­தி­யுற்­றுள்­ளனர். ரிக்கெட் பெற உத­வு­மாறு

ஆர்­ஜென்­டீன கால்­பந்­தாட்டச் சம்­மே­ள­னத்தை வலி­யு­றுத்­து­வ­தற்­காக, தோஹாவில் ஆர்­ஜென்­டீன குழாத்­தினர் தங்­கி­யுள்ள ஹோட்­ட­லுக்கு வெளியே  2 நாட்­க­ளாக ஆர்­ஜென்­டீன ரசி­கர்கள் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இறு­திப்­போட்­டிக்­கு­ரிய மலி­வான ரிக்­கெட்­க­ளுக்கு பீபா 750 டொலர்கள்  (278,000 இலங்கை ரூபா) விலை நிர்­ண­யித்­துள்­ளது. ஆனால் அவை 4,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 15 லட்சம்  இலங்கை ரூபா) கறுப்புச் சந்­தையில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக ரசி­கர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

மிக அதிக விலை­யுள்ள 5,850 டொலர்கள் (சுமார் 21 லட்சம் ர