Jump to content

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரேபியாவிடம் 'கால்பந்துக் கடவுள்' வீழ்ந்தது எப்படி?

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்படியிருக்கும் என்ற கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார்.

அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபிய வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். ஏன், ஒரு கோல் அடிப்பதுகூட சாத்தியமில்லை என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக முடிந்துவிட்டது அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டி.

சௌதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது. அர்ஜென்டினா அணி தரவரிசையில்  3-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். கூடுதலாக கால்பந்து உலகில் இப்போது ‘கடவுள்’ என்று அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி இருக்கும் அணி என்பதால் யாருக்கும் அந்த அணியின் வெற்றி மீது சந்தேகமே எழவில்லை.

சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத அணி, அடுத்ததாக 37-ஆவது போட்டியில் வெற்றியைப் பெற்று இத்தாலி அணியின் முந்தைய சாதனையைச் சமன் செய்யும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சியளித்துவிட்டது சௌதி அரேபியா.

 

சௌதி அரேபிய கால்பந்து வரலாற்றில் இது மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துவிட்டது. தேசிய விடுமுறை அளித்துக் கொண்டாடும் அளவுக்கு சௌதி அரேபியாவில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்கிறது என்றே சொல்லலாம்.

மெஸ்ஸி பறிகொடுத்த பந்து!

போட்டி முழுவதும் சௌதி அரேபியாவின் கை ஓங்கியிருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 48 ஆவது நிமிடத்துக்கும் 53-ஆவது நிமிடத்துக்கும் இடைப்பட்ட ஆறு நிமிடங்களில் மெஸ்ஸியின் அணியினரை நிலைகுலைய வைத்துவிட்டது சௌதி அரேபியா.

48-ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மையத்தில் இருந்து சௌதி அரேபிய வீரர்கள் கடத்தி வந்த பந்து, பெரிய அளவில் அர்ஜென்டின வீரர்களின் எதிர்ப்பின்றி பத்துப் பதினைந்து நொடிகளிலேயே கோல் வலைக்குள் சென்றது.  சௌதி வீரர்களிடம் மெஸ்ஸி பந்தைப் பறிகொடுத்ததில்தான் அது கோல் வரை சென்றது. அல் சேஹ்ரி துல்லியமாக அதைச் செய்து முடித்தார். அடுத்த 5-ஆவது நிமிடத்தில் கிட்டத்தட்ட அதேபோன்ற இடத்தில் இருந்து சலேம் அல்-தாவ்சாரி மற்றொரு கோலை அடித்தார்.

 

அர்ஜென்டினா அணி சறுக்கியது எங்கே?

போட்டியில் விசில் ஊதப்பட்ட தருணத்தில் இருந்தே அர்ஜென்டினாவின் கால்கள்தான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. சில நிமிடங்களிலேயே கோலை நோக்கிய அதிரடியான ஷாட்களை காண முடிந்தது. 10-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மெஸ்ஸி எந்தப் பதற்றமும் இல்லாமல் கோல் அடித்து அணியின் நம்பிக்கையை உயர்த்தினார்.

 

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸி அடித்த பந்து ஒருபக்கமாகச் சென்றபோது, மற்றொருபக்கமாகப் பாய்ந்து விழுந்தார் சௌதி அரேபியாவின் கோல் கீப்பர்.   அதன் பிறகும் அடுத்தடுத்து இரண்டு முறை சௌதி அரேபியாவின் கோல் வளைக்குள் பந்தைத் திணித்து அர்ஜென்டினா அணி. அப்போதும்கூட திகைத்து நின்றிருந்தார் சௌதி கோல்கீப்பர். அவை ஆப்சைடாக அறிவிக்கப்பட்டதுதான் சௌதிக்கு பலம் தந்தது.

ஆனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் அதே சௌதி அரேபிய கோல் கீப்பர் கோலை நோக்கி வந்த பந்துகளை 5 முறை தடுத்தார்.  ஆட்டம் முழுவதும் அர்ஜென்டினா அணி 69 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சௌதி அரேபியாவிடம் 31 சதவித நேரம்தான் பந்து இருந்தது. 

அர்ஜென்டினா அணி கோலை நோக்கி 15 முறை அடித்திருக்கிறது. அவற்றில் 6 ஷாட்கள் துல்லியமானவை. சௌதி அணியால் மூன்று முறைதான் கோலை நோக்கி அடிக்க முடிந்திருக்கிறது. அதில் இரண்டு துல்லியமான ஷாட்களும் கோல் கீப்பரால் தடுக்கப்படாமல் கோலாக மாறியதுதான் சிறப்பு. அவ்விரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஷாட்கள். ஒரே மாதிரி அடிக்கப்பட்டவை.

அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஆசிய அணிகள் வீழ்த்திய வரலாறு இல்லை. இதற்கு முன் ஆசிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி பெற்றிருக்கின்றன.

 

 

அர்ஜென்டினா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த உலகக் கோப்பை போட்டியில் தென் கொரிய அணி, அப்போதைய சாம்பியனான ஜெர்மனியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனி போட்டியை விட்டு வெளியேறுவதற்கு அந்தத்  தோல்வியே காரணமாக அமைந்தது. இதே சௌதி அரேபிய அணி 1994-ஆம் ஆண்டு பெல்ஜியம் அணியை வீழ்த்தியிருக்கிறது. 

ஆனால் அவை எல்லாவற்றையும் விட அர்ஜென்டினாவின் தோல்வி மிக மோசமானதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த அணியும் 36 முறை தோல்விகளைச் சந்திக்காத பிறகு மோசமான தோல்வியைச் சந்திக்கவில்லை. வேறு எந்த அணியிலும் ‘மிகச் சிறந்த வீரர்’ என்று புகழப்படும் ஒரு வீரர் இருந்ததில்லை. 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினாவுக்கு அடுத்து என்ன நடக்கும்?

உலகக் கோப்பை சி பிரிவில் அர்ஜென்டினா, சௌதி அரேபியா, போலாந்து, மெக்சிகோ ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் இரு போட்டிகள் முடிந்திருக்கின்றன. இதில் அர்ஜென்டினா - சௌதி அரேபியா போட்டியைத் தவிர போலந்து - மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் டிரா ஆகியிருக்கிறது. 

போட்டியில் வெல்லும் அணிகளுக்கு மூன்று புள்ளிகளும், ட்ரா செய்யும் அணிகளுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 4 அணிகளும் ஒரு போட்டியில் மோதியிருக்கும் நிலையில் சௌதி அரேபிய அணி மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. போலந்தும், மெக்சிகோவும் தலா ஒரு புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தோல்வியடைந்த அர்ஜென்டினா அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

அர்ஜென்டினா அணி வரும் சனிக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. அந்த அணி தர வரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த போட்டியில் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் போலாந்து அணியுடன் மோத வேண்டும்.  அந்த அணி தர வரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கிறது.

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால் இவ்விரு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றாக வேண்டும். தோல்வியடைவது அல்லது டிரா செய்வது ஆகியவை அடுத்த சுற்றுக்குச் செல்வதைப் பாதிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c4n6dkj58n7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் - டுனீசியா போட்டி சமநிலையில் முடிவு

By DIGITAL DESK 3

22 NOV, 2022 | 08:28 PM
image

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற, குழு டி இலுள்ள, டென்மார்க்  - டுனீசியா போட்டி சமநிலையில் முடிவுற்றது.

கத்தாரின் எடியுகேசன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

https://www.virakesari.lk/article/140912

வானவில் நிறம் கொண்ட ஆடையுடன் உலகக் கிண்ண அரங்கில் டென்மார்க் முன்னாள் பிரதமர்

By DIGITAL DESK 3

23 NOV, 2022 | 03:23 PM
image

கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டப்போட்டியின்போது, டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் ஹெல் தோனிங் ஸ்மித், வானவில் நிறங்களைக் கொண்ட கைகளைக் கொண்ட ஆடையுடன் போட்டியை பார்வையிட்டார்.

நேற்று (22) நடைபெற்ற டென்மார்க், டுனீசியா அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்வையிட்டபோது, இந்த ஆடையை அவர் அணிந்திருந்தார்.

Helle-Thorning-Schmidt-FIFA--world-cup-i

ஓரின சேர்க்கையாளர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் முதலானோரை கொண்ட, LGBTQ  சமூகத்தினரின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களின் கொடியாக வானவில் நிறம் கொண்ட கொடி உள்ளது.

ஓரின சேர்க்கையாளர்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளுக்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

LGBTQ சமூக்ததின் உரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக 'வன் லவ்' எனும் கைப்பட்டியை தமது அணித்தலைவர்களை அணிவிக்கச் செய்வதற்கு அணிவதற்கு இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 7 ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டிருந்தன. எனினும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வீரர்கள் வெளியேற்றப்படலாம் என பீபா தெரிவித்ததால் இறுதி நேரத்தில் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த திங்கட்கிழமை மேற்படி 7 நாடுகளின் கால்பந்தாட்டச் சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.

Helle-Thorning-Schmidt-FIFA---AFP-photo.

எனினும், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டென்மார்க் - டுனீசியா போட்டியின்போது, வானவில் நிறத்தை கைப்பகுதிகளில் கொண்டிருந்த ஆடையை ஹெல் தோர்னிங் ஸ்மித் அணிந்திருந்தார்

55 வயதான ஹெல் தோர்னிங் ஸ்மித், டென்மார்க்கின் முதலாவது பெண் பிரதமராவார். 2011 முதல் 2015 வரை அவர் பிரதமராக அவர் பதவி வகித்தார்.

Helle-Thorning-Schmidt--Fifa-President-G

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (பீபா) தலைவர் ஜியானி இன்பன்டினோவை இதே ஆடையுடன் ஹெல் தோர்னிங் ஸ்மித் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. (-சேது)

https://www.virakesari.lk/article/141002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெவண்டோவ்ஸ்கி தவறவிட்ட பெனல்டியால் போலந்து - மெக்சிகோ ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவு

By DIGITAL DESK 2

23 NOV, 2022 | 08:52 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த போலந்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான சி குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் 57ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனல்டியை ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி தவறவிட்டது போலந்துக்கு பேரிடியாக அமைந்தது.

2018இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அறிமுகமான லெவண்டோவ்ஸ்கியால் அவ் வருடம் விளையாடிய 3 போட்டிகளிலும் கோல் போட முடியாமல் போனது.

2211_lewandowski_misses_the_penalty.jpg

கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் கோல் போட கிடைத்தால் அது தனது கனவை நனவாக்குவதாக அமையும் என போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், 34 வயதான அவரது கனவு, ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் தவறவிடப்பட்ட பெனல்டியால் கலைந்துபோனது.

கடந்த இரண்டு தொடர்ச்சியான போட்டிகளில் லெவண்டோவ்ஸ்கி தவறவிட்ட இரண்டாவது பெனல்டி இதுவாகும். இந்த மாத முற்பகுதியில் ஆல்மேரியா கழகத்துக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா சார்பாக லெவண்டோவ்ஸ்கி பெனல்டியைத் தவறவிட்டிருந்தார்.

2211_poland_vs_mexico_lewandowski_brough

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் முதலாவது கோலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி உதைத்த பெனல்டி பந்தை நோக்கி சரியான திக்கில் இடதுபுறமாகத் தாவிய மெக்சிகோ கோல்காப்பாளர் கிலேமோ ஒக்காவா பந்தை தடுத்து நிறுத்தி தனது அணியைக் காப்பாற்றினார்.

போலந்து சார்பாக அதிக கோல்களைப் போட்டவர்கள் வரிசையில் 76 கோல்களுடன் 2ஆம் இடத்திலுள்ள லெவண்டோவ்ஸ்கி, பார்சிலோனாவில் இணைந்த பின்னர் 19 போட்டிகளில் 18 கோல்களைப் போட்டுள்ளார். அதற்கு முன்னர் 8 பருவகாலங்களில் பயேர்ன் மியூனிச் சார்பாக 344 கோல்களை லெவண்டோவ்ஸ்கி போட்டிருந்தார். ஆனால் உலகக் கிண்ணத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவரால் ஒரு கோலையும் போட முடியாமல் போயுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு சி குழு போட்டியில் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சவூதி அரேபியா எதிர்பாராத வெற்றியை ஈட்டியதன் காரணமாக அக் குழுவிலிருந்து 2ஆவது சுற்றுக்கு எந்த அணியும் செல்லலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

2211_Poland_vs_mexico___1___1_.jpg

அப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தமை பொலந்துக்கும் மெக்சிகோவுக்கும் பெரும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது. லெவண்டோவ்ஸ்கி பெனல்டியை தவறவிட்ட அதேவேளை, எதிரணியின் கோல் எல்லையை அதிகமாக ஆக்கிரமித்த மெக்சிகோவினால் கோல் போடமுடியாமல் போனது.

சமபலம் கொண்ட போலந்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிப்பதாக அமைந்தது.

இந்த வருடம் இதுவரை நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தப் போட்டியிலேயே இரண்டு அணி வீரர்களும் அதிவேகமாக விளையாடியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

2211_Poland_vs_mexico___2___1_.jpg

2211_Poland_vs_mexico___3___1_.jpg

https://www.virakesari.lk/article/140916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோ, குரோஷியா போட்டி சமநிலையில் முடிவு

By DIGITAL DESK 3

23 NOV, 2022 | 05:37 PM
image

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற மொரோக்கோ, குரோஷியா போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

குழு எவ் இலுள்ள இவ்வணிகளுக்கு இடையிலான போட்டி கத்தாரின்  தலைநகர் தோஹாவிலுள்ள அல் பாயித்  நகரில் நடைபெற்றது. 

இப்போட்டியில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. இதனால் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

https://www.virakesari.lk/article/141036

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்:  ஜேர்மனியை வென்றது ஜப்பான்

By DIGITAL DESK 3

23 NOV, 2022 | 08:51 PM
image

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.

கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.

போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.

இடைவேளையின் போது ஜேர்மனி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

எனினும், 76 ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் ரிட்ஸு டோவன் கோல் அடித்து, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.

அதன்பின் 83 ஆவது நிமிடத்தில் டகுமா அசானோ, ஜப்பானின் இரண்டாவது கோலை புகுத்தி ஜேர்மனிக்கு அதிர்ச்சியளித்தார்.

உலகக் கிண்ண போட்டிகளில் பதிவான மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறு இது. 

சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஜேர்மனி 11 ஆவது இடத்திலும் ஜப்பான் 24 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (-சேது)

https://www.virakesari.lk/article/141045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானிடம் யேர்மனி தோற்றது அதிர்ச்சியாக தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தியது எப்படி? வெற்றிக்கு காரணமான ஜெர்மனி கிளப் வீரர்கள்

 

ஜெர்மனி - ஜப்பான் உலகக் கோப்பை போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜப்பானின் வெற்றியைக் கொண்டாடும் டுகுமா அசானோ

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது.

ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன. ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. ஆட்டம் முடிந்திருக்கவில்லை. இருந்தாலும் என்னவோ அவர்களுடைய உள்ளத்தில் வெற்றி உறுதியாகிவிட்டது.

சௌதி அரேபியாவின் ஆச்சர்யமளிக்கக்கூடிய வெற்றியைத் தொடர்ந்து, நேற்று ஜப்பானும் ஜெர்மனியை வீழ்த்தி உலக கால்பந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்தது.

நேற்று நடந்த ஆட்டத்தின் 33வது நிமிடத்தில், சௌதி உடனான ஆட்டத்தில் அர்ஜென்டினா பெனால்டி மூலம் முன்னிலைக்கு வந்ததைப் போலவே, இல்காய் குண்டொகான் பெனால்டி ஷாட்டில் ஒரு கோல் அடித்தபோது, ஜெர்மனி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

 

இருந்தாலும் அதற்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கோட்டை விட்டனர். ஆனால் ஜப்பான் அணி அப்படிச் செய்யவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.

ஜெர்மனியின் ஜமால் மூசியாலாவிடம் இருந்த பந்து 59வது நிமிடத்தில் குண்டொகான் கால்களுக்குக் கிடைத்தபோது, அவர் அதை கோல் போஸ்டுக்குள் தட்டிவிட முயன்றார். ஆனால், அது வலதுபக்க கோல்போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றுவிட்டது.

அந்த கோலை அடித்திருந்தால், அவருடைய உலகக் கோப்பைக்கான கோல் கணக்கு தொடங்கியிருக்கும். அந்த வாய்ப்பு குண்டொகானால் பறிபோனது.

 

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இல்காய் குண்டொகான்

ஜெர்மனி, ஜப்பான் இரண்டு தரப்புமே எதிர்த் தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டனர். சௌதி அரேபியாவின் அர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி அளவுக்குப் பெரிய அபாரத்தை இந்தப் போட்டி வழங்கவில்லை என்றாலும், ரிட்சூ டோவான் 75வது நிமிடத்திலுன் அசானோ 83வது நிமிடத்திலும் அடித்த கோல்கள் இந்த உலகக் கோப்பையில் மற்றுமொரு தனித்துவமான வெற்றியை ஜப்பான் அணி பதிவு செய்யக்காரணமானது.

கோல் கீப்பர் மேன்வெல் நோயு, தாமஸ் முல்லர் ஆகியோர் தங்கள் நான்காவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள்.

இது எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜெர்மனி அடித்த கோலும் விடாது தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டதும் வெற்றி யார் பக்கம் என்பதைத் தவறாகக் கணிக்க வழி வகுத்திருக்கலாம்.

 

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், ஜப்பானிய ரசிகர்கள் விடவில்லை. அவர்களுடைய அனைத்து ஆற்றலையும் செலவழித்து தொடர்ந்து பாடிக் கொண்டேயிருந்தார்கள். தங்கள் வீரர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டேயிருந்தார்கள். 74வது நிமிடத்தில் களத்திற்குள் நுழைந்த டகுமி மினாமினோ, கவோரூ மிடோமாவுக்கு பாஸ் செய்யவே அதைத் தடுக்க முயன்ற ஜெர்மனி கோல் கீப்பர் மேன்வெல் நோயுவை தாண்டி டோவான் 75வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

அந்த நொடியில் தொடங்கிய ஜெர்மனியின் வெற்றிக்கான கேள்விக்குறிக்கு 83வது நிமிடத்தில் அசானோ இரண்டாவது கோலின் மூலம் ஜெர்மனிக்கான முற்றுப்புள்ளியாக மாறியது.

ஆட்டத்தின்போது ஜெர்மனிக்கு 26 முறை கோல் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் ஒன்றைத்தான் அவர்களால் கோலாக மாற்ற முடிந்தது. ஆனால், ஜப்பான் அணிக்குக் கிடைத்த 12 வாய்ப்புகளில் இரண்டு கோல்களை அடித்தனர். அதில் 4 முறை இலக்கில் சரியாக அடித்தனர். இவ்வளவுக்கும் அவர்கள் தரப்பில் பந்து இருந்தது ஆட்ட நேரத்தில் 26 சதவீத நேரம் மட்டுமே.

அவர்களுடைய பாஸ் கணக்கும் ஜெர்மனியை விட குறைவுதான். ஜெர்மனி 771 முறை பாஸ் செய்தது. ஆனால், ஜப்பான் 169 முறை தான் பாஸ் செய்தது.

 

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மேன்வெல் நோயு

ஆட்டத்தின் அதிகபட்ச நேரத்திற்கு ஜெர்மனியின் கால்களில் தான் பந்து இருந்தது. இருந்தாலும் அர்ஜென்டினாவை போலவே ஜெர்மனியாலும் எதிரணியின் அதிரடியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெர்மனிக்கு எதிராக ஜப்பானை வெற்றி பெறச் செய்துள்ள இரண்டு வீரர்களுமே ஜெர்மனியின் கால்பந்து கிளப்பான புண்டேஸ்லீகாவில் விளையாடி வருபவர்கள்.

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது, ரவுண்ட் ஆஃப் 16-இல் வெளியேறிய ஜப்பானுக்கு இந்தத் தொடக்கம் நம்பிக்கையளிக்கக்கூடியதாக உள்ளது.

தங்களது அந்த மோசமான அனுபவத்தில் இருந்து ஜப்பான் பாடம் கற்றுக் கொண்டு, அணியின் சுய மதிப்பாய்வைச் செய்துள்ளது என்பதை இந்த ஆட்டம் காட்டியது. ஏனென்றால், கால்பந்து உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற ஜெர்மனியை வீழ்த்துவது சாதாரண காரியமல்ல.

 

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அணி வெற்றியடைந்த மகிழ்ச்சியில் ஜப்பான் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசூ

அந்த அணி அடுத்ததாக ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிகாவுடன் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 2ஆம் தேதிகளில் ஆடவுள்ளது. அவை இரண்டிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் இப்போது ஜெர்மனி பூஜ்ஜிய புள்ளியோடு உள்ளது.

ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசூ இதை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகப் பார்க்கிறார். இதுவும் சௌதியின் வெற்றியும் உலகத் தரத்திற்கு ஆசிய நாடுகள் உயர்ந்து வருவதைக் காட்டுவதாகவும் அவர் பார்க்கிறார்.

ஜப்பான் அணியின் 6 வீரர்கள், ஜெர்மனியின் புண்டேஸ்லீகா கிளப்பை சேர்ந்தவர்கள். அந்நாட்டின் கௌரவமிக்க ஒரு கிளப்பில் விளையாடியது அந்த வீரர்களுக்கு நல்ல பயிற்சியை வழங்கியுள்ளது என்பதை இந்த ஆட்டம் காட்டியது.

அங்கு விளையாடிய போட்டிகள் தமது வீரர்களுக்கு அளித்துள்ள முன்னேற்றத்தால் புண்டேஸ்லீகா மீது தான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக, ஜப்பான் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசூ தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cg38l413xvjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ்டாரிக்காவை பந்தாடிய ஸ்பெய்ன் கோல்மழை பொழிந்து வெற்றியீட்டியது

By DIGITAL DESK 2

24 NOV, 2022 | 09:17 AM
image

(நெவில் அன்தனி)

தோஹா அல் துமாமா விளையாட்டரங்கில் நேற்று (நவ.23) இரவு நடைபெற்ற  கொஸ்டா ரிக்காவுக்கு எதிரான ஈ குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆரம்பம் முதல் கடைசிவரை ஆதிக்கம் செலுத்திய ஸ்பெய்ன் கோல் மழை பொழிந்து 7 - 0 என்ற  கோல்கள்    கணக்கில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

ஃபெரான் டொரெஸ் 2 கோல்களையும் மார்க்கோ அசென்சியோ, டெனி ஒலிமோ, காவி, கார்லொஸ் சோலர், அல்வாரோ மொராட்டா ஆகியோர் தலா ஒரு கோலையும் புகுத்தினர்.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பதிவான மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை இரண்டாவது தடவையாக வென்றெடுக்கும் தனது முயற்சியை ஸ்பெய்ன் ஆரம்பித்துள்ளது.

ஈ குழுவில் ஜப்பானிடம் முன்னாள் சம்பியன் ஜேர்மனி 0 - 2 என தோல்வி அடைந்தமை ஸ்பெய்னுக்கு மேலும் சாதகத் தன்மையை தோற்றுவித்துள்ளது.

2311_Dani_Olmo_spain_vs_costa_rica.jpg

2010இல் முதல் தடவையாக உலக சம்பயின் பட்டத்தை சூடிய ஸ்பெய்ன் அதன் பின்னர் உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியது. எனினும் இம்முறை பயிற்றுநர் லூயிஸ் என்ரிக்கினால் தெரிவுசெய்யப்பட்ட 3 முன்கள வீரர்களும் முதலாவது ஆட்டநேர பகுதியில் கோல் போட்டு தங்கள் மீது பயிற்றுநர் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது என்பதை நிரூபித்தனர்.

முதலாவது ஆட்ட நேர பகுதியில் 10 நிமிடங்களுக்கு ஒரு கோல் விகிதத்தில் 31ஆவது நிமிடம்வரை 3 கோல்களைப் போட்ட ஸ்பெய்ன், இடைவேளையின் பின்னர் மேலும 4 கோல்களைப் போட்டது. அவற்றில் 2 கோல்கள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் 2 நிமிட இடைவெளியில் பெறப்பட்டது.

ஆட்டம் ஆரம்பித்து 11 நிமிடங்களே ஆன நிலையில் இளம் வீரர் காவி பரிமாறிய பந்தை ஓல்மோ கோலாக்கி ஸ்பெய்னை முன்னிலையில் இட்டார்.

2311_Carlos_Solers_spain_vs_costa_rica.j

பத்து நிமிடங்கள் கழித்து கொஸ்டா ரிக்கா பின்கள வீரர்களின் தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஜோர்டி அல்பா தாழ்வாக பரிமாறிய பந்தை மார்க்கோ அசென்சியோ கோலினுள் புகுத்த ஸ்பெய்ன் 2 - 0 என முன்னிலை அடைந்தது.

கொஸ்டா ரிக்கா பெனல்டி எல்லைக்குள் பந்தை நகர்த்திச் சென்ற அல்பாவை டுவார்ட்டோ விதிகளுக்கு முரணாக வீழ்த்தியதால் ஸ்பெய்னுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. பெனல்டியை 31ஆவது நிமிடத்தில் ஃபெரான் டொரெஸ் கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்பெய்ன் வீரர்கள் எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தபோதிலும் கொஸ்டா ரிக்காவின் தடுத்தாடல் வியூகத்தால் அவர்களால் இடைவேளைக்கு முன்னர் மேலதிக கோல் போட முடியாமல் போனது.

இடைவேளையின் பின்னர் 54ஆவது நிமிடத்தில் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்ற ஃபெரான் டொரெஸ் மிகவும் அலாதியாக தனது 2ஆவது கோலைப் போட்டார். (ஸ்பெய்ன் 4 - 0)

2311_Ferran_Torres_spain_vs_costa_rica.j

இதனை அடுத்து ஸ்பெய்ன் வீரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொஸ்டா ரிக்கா தடுத்தாடலில் ஈடுபட்டது. எவ்வாறாயினும் 74ஆவது நிமிடத்தில் அல்வாரோ மொராட்டா பரிமாறிய பந்தை 'வொலி' முறையில் உதைத்து ஸ்பெய்னின் இளம் வீரரான 18 வயதுடைய காவி, ஸ்பெய்னின் 5ஆவது கோலைப் போட்டார்.

உலகக் கிண்ண வரலாற்றில் ஸ்பெய்ன் சார்பாக மிகக் குறைந்த வயதில் கோல் போட்ட வீரர் என்ற சாதனையை  காவி    நிலைநாட்டினார்.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் 90ஆவது நிமிடத்தில் கார்லோஸ் சோலரும் உபாதையீடு நேரத்தில் (90+2 நி.) அல்வாரோ மொராட்டாவும் 2 கோல்களைப் போட கொஸ்டா ரிக்காவை 7 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸ்பெய்ன் துவம்சம் செய்தது.

உலகக் கிண்ண போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் முதல் தடவையாக 7 கோல்களைப் பொட்டதுடன் உலகக் கிண்ண வராற்றில் பதிவான நான்காவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும். 

spain.jpg

உலகக் கிண்ண வரலாற்றில்  பதிவான

மிகப் பெரிய வெற்றிகள்

1982 - ஹங்கேரி 10 - 1 எல் செல்வடோர்

1954 - ஹங்கேரி 9 - 0 தென் கொரியா

1974 - யூகோஸ்லாவியா 9 - 0 ஸய்ரே

1938 - சுவீடன் 8 - 0 கியூபா

1950 - உருகுவே 8 - 0 பொலிவியா

2002 - ஜேர்மனி 8 - 0 சவூதி அரேபியா

1954 - உருகுவே 7 - 0 ஸ்கொட்லாந்து

1954 - துருக்கி 7 - 0 தென் கொரியா

1974 - போலந்து 7 - 0 ஹெய்ட்டி

2010 - போர்த்துக்கல் 7 - 0 வட கொரியா

2022 - ஸ்பெய்ன் 7 - கொஸ்டா ரிக்கா 0

cista_rica.jpg

2311_costa_rica_supporter.jpg

https://www.virakesari.lk/article/141051

Edited by ஏராளன்
மாற்றிப் பதிந்தது மாற்றப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெனல்டி உள்ளிட்ட பல வாய்ப்புக்களை கனடா தவறவிட பெல்ஜியம் வெற்றியை ஈட்டியது

By DIGITAL DESK 2

24 NOV, 2022 | 10:00 AM
image

(நெவில் அன்தனி)

அல் ரய்யான், அஹ்மத் பின் அலி விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் இறுக்கமான எவ் குழு உலகக் கிண்ணப் போட்டியில் கனடாவின் வேகத்துக்கும் கடும் சவாலுக்கும் மத்தியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் பெல்ஜியம் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டி முழுவதும் கனடா ஆதிக்கம் செலுத்திய போதிலும் ஒரு பெனல்டி உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் தோல்வி அடைய நேரிட்டது.

போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெரஸ்கோ பந்தை கையால் தட்டியதாக மத்தியஸ்தரினால் கனடாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

2311_Michy_Batshuayi_goal_scorer_belgium

ஆனால் அல்போன்சோ டேவிஸின் பெனல்டி உதையை நோக்கி சரியான திக்கை நோக்கித் தாவிய பெல்ஜியம் கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் பந்தை தடுத்து நிறுத்தினார்.

பெனல்டியைத் தவறவிட்டபோதிலும் கனடாவின் ஆட்டத்திறன் மங்கவில்லை. அலஸ்டெயார் ஜோன்ஸ்டனின் முயற்சியையும கோர்ட்டொய்ஸ் அலாதியாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக பெல்ஜியம் கோல் எல்லையை ஆக்கிரமித்த கனடா பல தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இது கனடாவின் துரதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.

belgium.jpg

2311_thibaut_courtoise_canada_gk_vs_belg

மறுபுறத்தில் அவ்வப்போது கோல் போடுவதற்கு முயற்சி எடுத்த பெல்ஜியம் போட்டியின் 44ஆவது நிமிடத்தில் வெற்றிகண்டது.

அல்டர்வயரெல்ட் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி பரிமாறிய பந்தை நோக்கி கனேடிய பின்கள வீரர்களை முந்திக்கொண்டு  வேகமாக ஓடிய மிச்சி பட்ஷுஆயி புத்திசாதுரியத்துடன் பந்தை நகர்த்தி கோலினுள் புகுத்தி பெல்ஜியம் அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 48ஆவது நிமிடத்தில் கனடாவுக்கு கிடைத்த கோல் நிலையை சமப்படுத்தும் வாய்ப்பு தவறிப்போனது. ஜோனதன் டேவிட் தலையால் முட்டிய பந்து கோல் காப்பின் இடது பக்கத்தால் வெளியில் சென்றது.

2311_alphonso_davies_canada_vs_belgium.j

தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த கனடா வீரர்கள் எடுத்த பல முயற்சிகள் தவறிய வண்ணம் இருந்தது. இறுதியில் பெல்ஜியம் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி எவ் குழுவுக்கான அணிகள் நிலையில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அக் குழுவில் குரோஏஷியாவும் மொரோக்கோவும் தமக்கு இடையிலான போட்டியை வெற்றிதோல்வியின்றி  முடித்துக்கொண்டதால் அணிகள் நிலையில் தலா ஒரு புள்ளியுடன் 2ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

belgium.jpg

https://www.virakesari.lk/article/141057

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக் கொண்டாட்டத்துக்கு முன் அரங்கை சுத்தமாக்கிய ஜப்பானிய ரசிகர்கள்

By SETHU

24 NOV, 2022 | 04:12 PM
image

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜேர்மனியை ஜப்பான் தோற்கடித்து வியக்க வைத்தநிலையில், ஜப்பானிய ரசிகர்கள் தமது வெற்றிக்கொண்டாட்டத்துக்கு முன்னர் அரங்கை துப்புரவாக்கியமை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற குழு அணிகளுக்கு இடையிலான போட்டியில், 4 தடவைகள் சம்பியனான ஜேர்மனியை ஜப்பான் 2:1 கோல்களால் வென்றது.

இப்போட்டியைக் காண்பதற்கு கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா அரங்கில் திரண்டிருந்த ஆயிரகணக்கான ஜப்பானிய ரசிகர்கள் உடனடியாக தமதுவெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக, அரங்கை சுத்தப்படுவதற்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர்.

அரங்கிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியவுடன் ஜப்பானிய ரசிகர்கள் நீலநிற குப்பைப் பைகளை சுமந்துகொண்டு, ஏனையோர் விட்டுச் சென்ற கழிவுப்பொருட்களை அதில் சேகரிக்க ஆரம்பித்தனர்.

japan-fans-5.jpg

விளையாட்டரங்களை ரசிகர்கள் சுத்தப்படுத்துவது பலருக்கு வியப்பாக இருந்திருக்கும். ஆனால், ஜப்பானியர்களுக்கு இது சாதாரணமானது.

ஜப்பானிய ரசிகரான டன்னோ, இது தொடர்பாக அல் ஜெஸீராவிடம் கூறுகையில், 'விசேடமானது என நீங்கள் நினைக்கும் விடயம், எமக்கு வழக்கமானது' என்றார்.

'கழிவறையை நாம் பயன்படுத்தும்போது நாமே அதை சுத்தமாக்குகிறோம். ஓர் அறையிலிருந்து வெளியேறும்போது அதை துப்புரவாக்கிவிட்டுச் செல்வோம். அது எமது வழக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/141128

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெமரூனை 1:0 விகிதத்தில் வென்றது சுவிட்ஸர்லாந்து

By SETHU

24 NOV, 2022 | 05:46 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கெமரூன் அணியை சுவிட்ஸர்லாந்து அணி 1:0 கோல் விகிதத்தில் வென்றது.

குழு ஜி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் அல்-வக்ரா நகரிலு;ளள அல் ஜனோப் அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து வீரர் ப்றீல் எம்போலோ கோல் புகுத்தினர்ர.

இப்போட்டியின் ஒரேயொரு கோல் அதுவாகும்.

https://www.virakesari.lk/article/141149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 உலக கோப்பைகளில் கோல் அடித்து ரொனால்டோ புதிய சாதனை

5-24.jpg

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=231391

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவை மிரளவைத்த உலகக் கோப்பையின் ‘கடைசி அணி’

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர வரிசையில் கடைசியாக இருக்கும் கானா.

எதிர்பாராத வகையில் பதில் கோல்களை அடித்த கானா அணி, கடைசி நிமிடத்தில்கூட போட்டியைச் சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. 

கடைசி நிமிடத்தில் போர்சுகல் கோல்கீப்பர் பந்தைப் பிடித்து கோலுக்கு அருகே அடிக்க முயன்றபோது பின்னால் இருந்த கானா வீரர் பந்தைக் காலால் பறித்து கோலை நோக்கித் தட்டிவிட்டார். ஒரு கணம் போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் உறைந்து போயிருந்தனர். அந்த நேரத்தில் களத்துக்கு வெளியே இருந்த ரொனால்டோ அதிர்ச்சியில் தலையிலேயே கைவைத்துவிட்டார். 

இருப்பினும் கோல்கீப்பரைக் கடந்து கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பந்தை ஒன்றிரண்டு அடிக்கு முன்பாக போர்ச்சுகல் வீரர் தடுத்துவிட்டார். அது கோலாக மாறியிருந்தால், அது கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சியான முடிவாக அமைந்திருக்கும்.

 

 

முதல்பாதி ஆட்டம் கோல் இல்லாமலேயே முடிந்து போக இரண்டாவது பாதி ஆட்டம் கோல் மழையால் நனைந்தது என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்துக் கொண்டிருந்தன. 

இறுதியாக 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் நடந்தது என்ன?

உலகக் கோப்பை தர வரிசையில் 61-ஆவது இடத்தில் கானா இருக்கிறது. போர்சுகல் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. 

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பந்தை அதிகமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்சுகல் அணி. 10-ஆவது நிமிடத்திலேயே கடத்தி வரப்பட்ட பந்தை ரொனால்டோ கோலாக்க முயன்றபோது கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதை தடுத்து கோலுக்கு வெளியே திருப்பிவிட்டார். சில நிமிடங்களில் ரொனால்டோவின் மற்றொரு முயற்சியும் கோலாகவில்லை.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

31-ஆவது நிமிடத்தில் கானா கோல் கீப்பரைக் கடந்து ரொனால்டோ பந்தை கோலுக்குள் அடித்தார். ஆனால் கடைசி உதைக்கு முன்பாக நடுவர் விசில் ஊதியதால் அது கோலாக கருதப்படவில்லை. முதல் பாதி முழுவதும் கானாவின் தடுப்பரணை வெற்றிகரமாகக் கடப்பதற்கு போர்சுகலால் முடியவேவில்லை. 

65-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பகுதியில் ரொனால்டோவின் காலை கானா வீரர் தட்டிவிட போர்ச்சுகலுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தவற விடாமல் கோலாக மாற்றினார் ரொனால்டோ. எனினும் கானா கோல்கீப்பரின் கைகளுக்கு மிக அருகில்தான் அந்தப் பந்து சென்று கோலுக்குள் புகுந்தது.

அடுத்த 8-ஆவது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரே ஆயேவ் இரண்டு போர்சுகல் வீரர்களையும் கோல்கீப்பரையும் கடந்து வந்த பந்தை கோலாக மாற்றினார். சில நிமிடங்களில் போர்சுகல் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.

ஆனால் 89-ஆவது நிமிடத்தில் கானா வீரர் ஓஸ்மான் புகாரி மற்றொரு கோலை அடித்ததால் கடைசி நேர பதற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி வரை எவ்வளவோ முயன்றும் கானாவால் கோல் அடிக்க முடியவில்லை. 

இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் போர்சுகல் வென்றது.

 

போர்ச்சுகல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரலாறு படைத்த ரொனால்டோ

இந்தப் போட்டியில் பெனால்ட்டி முறையில் அடித்த கோலின் மூலமாக 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரொனால்டோ.

37 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக உலகக் கோப்பையில் ஆடிய 18-ஆவது போட்டி இது. 2003-ஆம் ஆண்டில் முதன் முதலாக போர்ச்சுகல் அணியில் அறிமுகமானார் ரொனால்டோ. 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன் முதலாகப் பங்கேற்ற அவர், இரானுக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி மூலமாக தனது முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வடகொரியாவுக்கு எதிராக இரண்டாவது கோலை அவர் அடித்தார். 

 

கானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2014-ஆம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பையில் இதே கானா அணிக்கு எதிராக தனது அடுத்த உலகக் கோப்பை கோலை ரொனால்டோ அடித்தார். 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான்கு கோல்களை அவர் அடித்தார். ஸ்பெயின் அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல்களும் இவற்றில் அடங்கும்.

இப்போது கானா அணிக்கு எதிரான ஒரு கோலையும் சேர்த்து அவர் உலகக் கோப்பையில் மொத்தம் 8 கோல்களை அடித்துள்ளார். 

https://www.bbc.com/tamil/articles/crg8dl43djeo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் கோல் போட்டு சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 

25 NOV, 2022 | 09:59 AM
image

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைக்க, கானாவுக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற எச் குழுவுக்கான மிகவும் பரபரப்பான உலகக் கிண்ணப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போர்த்துக்கல் வெற்றிபெற்றது.

2311_leao_port_vs_ghanana.jpg

ஐந்தாவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் இம்முறை விளையாடும் போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐந்து உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் போட்டு சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடப்படாத நிலையில் இடைவேளைக்குப் பின்னர் 16 நிமிட இடைவெளியில் 4 கோல்கள் உட்பட 5 கோல்கள் போடப்பட ஆட்டத்தில் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டதுடன் இரசிகர்களுக்கு இப் போட்டி பெரு விருந்தாக அமைந்தது.

2311_bukari_ghana_vs_port.jpg

போட்டியின் முதலாவது பகுதியில் போர்த்துக்கல் சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதேவேளை, கானா பின்கள வீரர்கள் திறமையாக விளையாடி போர்த்துக்கல்லை கட்டுப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை கோலினுள் புகுத்தியபோதிலும் அவர், கானா விரர் ஒருவரை விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் அந்த கோல் கருத்தில் கொள்ளப்பட்வில்லை.

2311_Joao_felix_port_vs_ghana.jpg

இடைவேளை நெருங்கியபோது கானா   கோல்   எல்லையை போர்த்துக்கல் ஆக்கிரமித்த வண்ணம் இருந்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது.

இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடப்படாத நிலையில் இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

2311_ayev.jpg

போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது.

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் கானா பெனல்டி எல்லைக்குள் பந்தை நகர்த்திச் சென்ற ரொனால்டோவை மொஹம்மத் சலிசு வீழ்த்தியதால் மத்தியஸ்தர் உடனடியாக பெனல்டி வழங்கினார்.

2311_ayew_ghanavs_portugal.jpg

இதனை கானா வீரர்கள் ஆட்சேபிக்க, வீடியோ உதவி மத்தியஸ்தர் அதனை பெனல்டி என உறுதிப்படுத்தினார்.

இதனை அடுத்து 65ஆவது நிமிடத்தில் அந்தப் பெனல்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கி 5 உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட முதலாவது வீரர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார். சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் அது அவரது 118ஆவது கோலாக அமைந்தது.

2311_christian_ronaldo_port_vs_ghana.jpg

அத்துடன் உலகக் கிண்ண போட்டியில் கோல் போட்ட இரண்டாவது வயதான (37 வருடங்கள், 292 நாட்கள்) வீரர் என்ற பெருமையையும் ரோனால்டோ பெற்றுக்கொண்டார். 1994 உலகக் கிண்ணப் போட்டியில் கோல் போட்ட கெமறூன் வீரர் ரொஜர் மில்லா என்பவரே அதிகூடிய வயதில் (42 வருடங்கள், 39 நாட்கள்) கோல் போட்ட வீரராவார்.

ரொனால்டோ போட்ட கோலினால் போர்த்துக்கல் அணி வீரர்களும் அரங்கில் குழுமியிருந்த போர்த்துக்கல் இரசிகர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஆனால் அந்த ஆனந்தம் 73 ஆவது நிமிடத்தில் கானா அணித் தலைவர் அண்ட்றே அயேவ் போட்ட கோலினால் மறைந்துபோனது.

மொஹமத் குத்துஸ் இடதுபுறத்திலிருந்து தாழ்வாக பரிமாறிய பந்து போர்த்துக்கல் வீரர் டெனியெலோ பெரேய்ரா பாதத்தை உராய்ந்தவாறு அண்ட்ரே அயேவை நோக்pச் சென்றது. அவர் 6 யார் கட்டத்துக்குள் இருந்து பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

ghana_wc.jpg

எனினும் 77ஆவது நிமிடத்தில் புரூனோ பெர்னாண்டஸ் பரிமாறிய பந்தை ஜோவா பீலிக்ஸ் கோலாக்கி போர்த்துக்கல்லை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

அடுத்த 2 நிமிடங்களில் ரபாயல் லியோ அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஆட்டத்தின் பிடியை போர்த்துக்கல் பக்கம் திருப்பினார்.

எவ்வாறாயினும் போர்த்துக்கல்லுக்கு கடும் சவாலாக விளங்கிய கானா 88ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர் ஒஸ்மான் புக்காரி மூலம் கோல் போட்டு   போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உபாதையீடு நேரம் உட்பட அடுத்த 10 நிமிடங்கள் இரண்டு அணிகளும் உக்கிரமமாக மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. போர்த்துக்கல்லுக்கு 3 வாய்ப்புகளும் கானாவுக்கு ஒரு வாய்ப்பும் கோல் போடுவதற்கு கிடைத்தது. ஆனால் இரண்டு அணிகளினதும் பின்கள வீரர்கள் அவற்றை முறியடித்தனர்.

Portugal_wc.jpg

போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது போர்த்துக்கல் கோல்காப்பாளர் டியகோ கொஸ்டா, கோல் கிக்குக்காக பந்தை உருட்டிவிட கானா வீரர் ஒருவர் கடுகதி வேகத்தில் பந்தை கோலினுள் புகுத்த முயற்சித்தார். கோலை நோக்கி உருண்டுசென்ற பந்தை போர்த்துக்கல் பின்கள வீரர் திசை திருப்பி போர்த்துக்கல்லின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தப் போட்டி முடிவுடன் எச் குழுவுக்கான அணிகள் நிலையில் போர்த்துக்கல் 3 புள்ளிகளுடன் முதலிட்த்தை வகிக்கிறது.

இந்தப் போட்டி முடிவுடன் எச் குழுவுக்கான அணிகள் நிலையில் போர்த்துக்கல் 3 புள்ளிகளுடன் முதலிட்த்தை வகிக்கிறது.

உருகுவேக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இந்தக் குழுவுக்கான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவைடைந்ததால் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் அணிகள் நலையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன.

https://www.virakesari.lk/article/141164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாகச் சுழன்று பிரேசில் வீரர் அடித்த ‘மந்திரக்’ கோலை பார்த்தீர்களா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் செர்பிய அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அடித்த ஒரு கோல் கால்பந்து ரசிகர்களாலும் நிபுணர்களாலும்  மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறது.

தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த பந்தை கிட்டத்தட்ட தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோலுக்குள் திணித்த அற்புதத்தை கால்பந்து உலகம் இப்போது திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

செல்போன்கள், கணினிகள், தொலைக்காட்சித் திரைகளில் அந்தக் காட்சியை கால்பந்து ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஃபிபா தர வரிசையில் செர்பிய அணி 21-ஆவது இடத்தில் இருக்கிறது. கோப்பையை வெல்லும் கணிப்புகளில் அந்த அணி இல்லை. ஆனால் முதல் நிலையில் இருக்கும் பிரேசில் அணிக்கு எதிரான செர்பியாவின் ஆட்டம் சில தவறுகளைத் தவிர சிறப்பாகவே இருந்தது.

 

இந்தப் போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

இப்போதைய பிரேசில் அணி நெய்மார் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. கத்தாரில் மிகவும் விருப்பத்துக்குரிய அணியாக இருப்பதையும் லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள் மூலமாகக் காண முடிந்தது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அரங்கத்தில் இருந்தவர்களால் எதையும் கொண்டாட முடியவில்லை.

 

அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் அதிர்ச்சிகரமான தோல்விகளைச் சந்தித்த நிகழ்வுகளால் பல கால்பந்து நிபுணர்கள் உறுதியான கணிப்புகளைக் கூறுவதையே தவிர்த்து வருகின்றனர்.

செர்பியாவின் முதல்பாதி ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. நெய்மார், வினிசியஸ், ரிச்சர்லிசன் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும் 62-ஆவது நிமிடம் வரை செர்பிய அணிக்கு எதிராக பிரேசிலால் கோல்கள் எதுவும் அடிக்க முடியவில்லை. 

செர்பியாவின் காப்பரணை தகர்க்க முடியாமல் முதல் பாதியில் திணறிக் கொண்டிருந்து உலகின் முதல்நிலை அணி. கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோல் கீப்பரின் உடலிலும் சில நேரங்களில் கோல் கம்பத்திலும் பட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. 

 

பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மார் எவ்வளவோ முயன்று் கோல் வலைக்குள் பந்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. முதல் பாதியில் ஆட்டம் கோல் இல்லாத இன்னொரு சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றியது.

 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

55-ஆவது நிமிடத்தில் பெனால்டி இடத்துக்கு அருகே இருந்து ப்ரீகிக் மூலம் நெய்மர் உதைத்தும் கோலாக மாறவில்லை. 60-ஆவது நிமிடத்தில் கோல் வலைக்கு மிக அருகில் இருந்து அலெக்ஸ் சாண்ட்ரோ அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பிவிட்டது. 

 

முதல் கோலை அடிக்க 62-ஆவது நிமிடம் வரை பிரேசில் காத்திருக்க வேண்டியிருந்தது. 62-ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கடத்திக் கொடுத்த பந்தை செர்பிய வீரரின் கால்களைத் தாண்டி கோலுக்குள் அடித்தார் ரிச்சர்லிசன். 

அதன் பிறகு 73-ஆவது நிமிடத்தில்தான் அந்த அதிசயமான கோல் அடிக்கப்பட்டது. இப்போதும் வினிசியஸ்தான் கோல் அடிப்பதற்கு உதவி செய்தார். அவர் நேரத்தியாகக் கடத்தி அளித்த பந்தை ரிச்சர்லிசன் தடுத்து நிறுத்தும்போது, அது தலைக்கு மேலே உயர்ந்துவிட்டது. உடனடியாகச் சுதாரித்து தலைகீழாக பக்கவாட்டில் சுழன்று காற்றில் பறந்து கொண்டிருந்த பந்தை வலதுகால் மூலமாக கோலுக்குள் உதைத்தார். 

பிரேசில் வீரர்களின்  பல நேர்த்தியான உதைகள் கோலாக விடாமல் தடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்த செர்பிய கோல்கீப்பர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் கணிக்காத திசையில் சென்ற பந்து வலைக்குள் புகுந்தது.

 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காற்றில் பறந்து கொண்டிருக்கும் பந்தை உதைப்பதை ஆங்கிலத்தில் “வாலி” (Volley) என்பார்கள். அத்தகைய உதைகளுள் இது அற்புதமான உதை என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கோலுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் கூறுகளை சிலர் ஆராய்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

 

நெய்மாரின் காயம்

செர்பியாவுடனான போட்டியின்போது நெய்மாருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 80-ஆவது நிமிடத்தில் அவர் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். தலையில் கைவைத்து கண்கலங்கியபடி இருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. 

கணுக்காலில் அவருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகு அவரது நிலை பற்றிய அறிவிப்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலின் அடுத்த ஆட்டம் சுவிட்சர்லாந்து அணியுடன் வரும் திங்கள்கிழமை நடக்க இருக்கிறது.

 

நெய்மார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரேசிலின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்படும் அணிகளில் அர்ஜென்டினாவும் பிரேசிலும் முதல் வரிசையில் இருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் பலம் குறைந்த சௌதி அரேபிய அணியிடம் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்திருப்பதால், அந்த அணியின் அடுத்த இரு ஆட்டங்கள்தான் அதன் அடுத்த சுற்று வாய்ப்பை உருவாக்கப் போகின்றன.

பிரேசில் அணி இருக்கும் ஜி பிரிவில் செர்பியா தவிர சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகள் இருக்கின்றன. சுவிட்சர்லாந்து அணி 15-ஆவது இடத்திலும்,  கேமரூன் அணி தர வரிசையில் 43-ஆவது இடத்திலும் இருக்கின்றன. முதல் போட்டியில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை வைத்திருக்கும் பிரேசில் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

 

பிரேசில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற நாடு பிரேசில். இதுவரை 5 முறை சாம்பியனாகி இருக்கிறது. இதுவரையிலான எல்லா உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு உண்டு.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரராக நெய்மார் களமிறங்கும் மூன்றாவது உலகக் கோப்பை போட்டி இது. இந்த மூன்று போட்டிகளிலும் பிரேசில் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2002-ஆண் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு காலிறுதியிலும் அரையிறுதியிலும் தோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cw0wqnjy1dgo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிச்சர்லிசனின் அபார கோல்களுடன் சேர்பியாவை வீழ்த்தியது பிரேஸில் ; ஆனால் நேமார் உபாதையினால் அவதியுறுகிறார்

By DIGITAL DESK 5

25 NOV, 2022 | 10:06 AM
image

(நெவில் அன்தனி)

சேர்பியாவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுக வீரர் ரிச்சர்லிசன் போட்ட அசத்தலான கோல் உட்பட 2 கோல்களின் உதவியுடன் பிரேஸில் வெற்றியீட்டியது.

ஆனால், அப் போட்டியின்போது நட்சத்திர வீரர் நேமார் உபாதைக்குள்ளானது பிரேஸிலுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

2411_richarlison_scisor_kick_goal_brazil

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் அப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடமுடியாமல் தடுமாறியபோதிலும் இரண்டாவது பகுதியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் கழக முன்கள வீரர் ரிச்சர்லிசன் 62ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் முன்னிலை அடைந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் வினிசியஸ் ஜுனியர் கோலை நொக்கி உதைத்த பந்தை சேர்பிய கோல்காப்பாளர் மிலின்கோவிச் சாவிச் தடுத்தபோது முன்னோக்கிவந்த 'ரீபவுண்ட்' பந்தை ரிச்சர்லிசன் கோலாக்கினார்.

2411_richarlison_scisor_kick_goal_brazil

11 நிமிடங்கள் கழித்து அவர் போட்ட இரண்டாவது கோல் இந்த வருட உலகக் கிண்ணத்தில் போடப்பட்ட அற்புதமான கோலாக பதிவானது. சேர்பிய கோல் வாயிலை நோக்கி வினிசியஸ் பரிமாறிய ஆள் உயர பந்தை 'சிசர்' கிக் மூலம் ரிச்சர்லிசன் கோலாக்கி அசத்தினார்.

1998இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் நோர்வேயிடம் அடைந்த தோல்வியின் பின்னர் நான்கு அத்தியாயங்களில் முதல் சுற்றில் தோல்வி அடையாமல் இருந்த பிரேஸில், இந்த வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை 6ஆவது தடவையாக வென்றெடுப்பதற்கான தனது முயற்சியை ஆரம்பித்துள்ளது.

2411_neymiar_...jpg

வேகம், விவேகம் மற்றும் அற்புதமான பந்துபரிமாற்றங்களுடன் விளையாடிய பிரேஸில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. சேர்பியாவின் சாதுரியமான தடுத்தாடும் வியூகமே அதன் முயற்சிகளை தடுத்த வண்ணம் இருந்தது.

ரஷ்யாவில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்டபோதும் இதே கோல் எண்ணிக்கையில் பிரேஸில் வெற்றிபெற்றிருந்தது.

2411_richarlison.jpg

நேற்றைய போட்டியில் நேமார், ரிச்சர்லிசன், ரஃபின்ஹா, வினிசியஸ், லூக்கஸ் பக்கேட்டா ஆகியோர் அதிவேக நகர்வுகளுடனான பந்து பரிமாற்றங்கள் மூலம் சேர்பியாவை திக்குமுக்காட வைத்தனர்.

பிரேஸில் சார்பாக அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் 77 கோல்களுடன் முதலிடத்தல் இருக்கும் பேலேயின் சாதனையை சமப்படுத்த நேமாருக்கு 2 கோல்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தப் போட்டியை எதிர்கொண்டார்.

2411_neymar_ankle_injurey_vs_serbia.jpg

ஆனால், உலகின் மிகவும் விலையுயர்ந்த வீரரான நேமாருக்கு அந்த சாதனையை சமப்படுத்த மேலும் காத்திருக்க நேரிட்டுள்ளது.

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் வலது கணுக்காலில் உபாதைக்குள்ளான நேமார் கடுமையான வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவரது கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அவரது நிலை குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களின் பின்னரே அறியக்கூடியதாக இருக்கும் என வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

2411_brazil.jpg

பிரேஸில் - சேர்பியா போட்டியுடன் முதல் சுற்றின் முதலாம் கட்டப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளதுடன் இன்றிலிருந்து அடுத்த நான்கு தினங்களுக்கு இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2411_serbia.jpg

ஜீ குழுவில் பிரேஸிலும் சுவிட்சர்லாந்தும் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் பிரேஸில் முதல் இடத்தில் இருக்கிறது.

2411_brazil_supprters.jpg

பிரேஸில் அதன் இரண்டாவது போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்வரும் 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/141172

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2022 உலகக் கிண்ணத்தில் முதல் சிவப்பு அட்டை: வேல்ஸை வென்றது ஈரான்

By SETHU

25 NOV, 2022 | 06:14 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வேல்ஸ் அணியை 2:0 கோல்களால் ஈரான் அணி வென்றது.

குழு பி இலுள்ள அணிகளுக்கு இடையிலான இப்போடடி கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள அஹ்மத் பின் அலி அரங்கில்  நடைபெற்றது. 

இப்போட்டியில் இடைவேளை வரை எந்தவொரு அணியும் கோல் புகுத்தவில்லை. 

முதல் சிவப்பு அட்டை

இப்போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் வேல்ஸ் வெய்ன் ஹென்னஸி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரர் இவராவார். 

Wayne-Hennessy---Wales---Iran-FIFA-2022-

வெய்ன் ஹென்னஸி வெளியேறியதால் 10 பேருடன் விளையாடும் நிலைக்கு வேல்ஸ் அணி தள்ளப்பட்டது. டெனி வர்ரட் அவ்வணியின் புதிய கோல் காப்பாளராக பணியாற்றினர். 

அதன் பின்னர்  ஈரானிய 2 கோல்களை அடித்தது.

உபாதை ஈடு நேரத்தின் 8  ஆவது நிமிடத்தில் ஈரானின் ரூபே செஸ்மி முதலாவது கோலைப் புகுத்தினார். மேலும் 3 நிமிடங்கள் கடந்த நிலையில், ஈரானின் ரமின் ரெஸாயன் 2 ஆவது கோலை புகுத்தினார்.

குழு பி இல் ஈரானிய அணி தற்போது இங்கிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

https://www.virakesari.lk/article/141250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022: சிவப்பு அட்டையால் தடுமாறிய வேல்ஸை சூப்பர் கோலால் வீழ்த்திய இரான்

 

இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கத்தார் உலக கோப்பையில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேல்ஸ் அணிக்கு எதிராக ஈரான் வீரர் ரூஸ்பே சேஷ்மி அடித்த கோல்தான் பெனால்ட்டி கட்டத்துக்கு வெளியே இருந்து அடிக்கப்பட்ட முதல் கோல்.

தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை, அரசு ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் மோதல் என மைதானத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் அரசியலாக்கப்பட்டிருக்கும் இரான் கால்பந்து அணிக்கு வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் பெரும் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

முதல் போட்டியில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணித்த இரான் வீரர்கள், இந்தப் போட்டியில் தேசிய கீதம் பாடினர். அந்த நேரத்தில் அரங்கத்தில் இருந்த இரானிய ரசிகர்கள் அதைக் கேலி செய்யும் விதமாக உரத்த குரல் எழுப்பினார்கள்.

இவற்றுக்கு இடையே, கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் மூலம் இரான் அணி கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

 

போட்டியின் இறுதி நேரத்தில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வேய்னி ஹென்னெஸ்ஸி இரானிய வீரர் மீது வேகமாக மோதி உதைத்ததால் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

கத்தார் கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட முதல் சிவப்பு அட்டை இதுவாகும். இதனால் கடைசி நேரத்தில் மாற்று கோல்கீப்பரைக் கொண்டு, 10 பேருடன் வேல்ஸ் அணி விளையாட நேர்ந்தது.

சேஷ்மி அடித்த கோலை இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட கோல்களில் இரண்டாவது மிகச் சிறந்த கோல் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். 

செர்பியா அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் தலைக்கு மேல் இருந்த பந்தை தலைகீழாகச் சுழன்று அடித்த கோல் இதுவரையிலான கோல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டுப் பெற்றிருக்கிறது.

 

போட்டியில் என்ன நடந்தது?

வேல்ஸும் இரானும் சமபலம் கொண்ட அணிகளாகவே கருதப்படுகின்றன. போட்டியின் ஆட்ட நேரம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளின் காப்பரணை பேணியதுடன் எதிரணியின் கோலை நோக்கியும் பந்தைக் கடத்திக் கொண்டிருந்தன.

 

இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13-ஆவது நிமிடத்தில் வேல்ஸின் கீஃபர் மூர் தலையால் முட்டி கோலை நோக்கித் திருப்பிய பந்தை இரானிய கோல் கீப்பர் ஹுசைனி அற்புதமாகத் தடுத்தார். முதல்பாதி முழுவதுமே கோல் ஏதும் போடப்படாமல் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கோலடிக்க முடியாமல் இரு அணி வீரர்களுமே திணறிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்ட நேரம் முடிய 5 நிமிடங்கள் மாத்திரமே இருந்த போதுதான் வேல்ஸ் அணிக்கு பெரும் சோதனை வந்தது. இரானின் மெஹ்தி தரேமி கோலை நோக்கி பந்தைக் கடத்திச் சென்று கொண்டிருந்தபோது அதைத் தடுப்பதற்காக காலை உயர்த்தி வந்த வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னஸி அவர் மீது மிக வேகமாக மோதினார்.

முதலில் அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரிக்கப்பட்டது. பின்னர் காணொளி உதவி மூலம் அதை சிவப்பு அட்டையாக மாற்றினார் நடுவர். அதன் பிறகு மாற்று கோல்கீப்பரை வரவழைத்து 10 பேரைக் கொண்டு ஆடியது வேல்ஸ் அணி. 

ஆட்ட நேரம் முடிந்த பிறகு நிறுத்த நேரமாக 9 நிமிடங்கள் கூடுதலாகத் தரப்பட்டன. அதில் 98-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து நேராக கோலுக்குள் பந்தை அடித்தார் சேஸ்மி. சில வேல்ஸ் வீரர்களையும், கோல்கீப்பரையும் தாண்டி பந்து கோல்வலைக்குள் புகுந்தது.

அதன் பிறகு 101-ஆவது நிமிடத்தில் பாதுகாப்பு அரண் தளர்ந்திருந்த வாய்ப்பை பயன்படுத்தி ரமீன் ரேஸியன் மற்றொரு கோலை அடித்தார். 

 

இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் அடுத்த சுற்றுக்கு போக முடியுமா?

பி பிரிவில் இடம்பெற்றுக்கும் வேல்ஸும் இரானும் ஃபிபா தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

வேல்ஸுக்கு 19-ஆவது இடம், இரானுக்கு 20-ஆவது இடம். கத்தார் உலகக் கோப்பை போட்டியில் இரான் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 6-2 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  மற்றொருபுறம் வேல்ஸ் அணி தனது முதலாவது போட்டியில் அமெரிக்காவுடன் தலா ஒரு கோல் அடித்து சமன் செய்தது. 

இப்போதைய நிலையில் இங்கிலாந்தும் இரானும் 3 புள்ளிகளுடன் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றன. இரான் அணியும் இங்கிலாந்து அணியும் அமெரிக்க அணியுடன் மோத வேண்டியிருக்கிறது. வேல்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியுடனான ஆட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

 

 

இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலமான இங்கிலாந்து அணியை அதிக கோல் கணக்கில் வீழ்த்தினால் இரானை கடந்து அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு வேல்ஸுக்கு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.

கடந்த 5 உலக கோப்பை போட்டிகளில் இரான் அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை. ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இரானுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

கூடவே, செளதி அரேபியா, ஜப்பான் ஆகிய அணிகளும் தங்களது பிரிவில் ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலமாக அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்னும் ஒரு போட்டியில் இந்த அணிகள் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்வது எளிதாகிவிடும். குறைந்தபட்சம் அடுத்துவரும் போட்டிகளில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும்.

 

 

இரான்

https://www.bbc.com/tamil/articles/cydmqrn92g2o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி சமநிலையில் முடிந்தது

By SETHU

25 NOV, 2022 | 11:48 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற நெதர்லாந்து, ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.

குழு ஏ அணிகளுக்கு இடையிலான இப்போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா சர்வதேச அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கொடி கெப்கோ கோல் புகுத்தினார். கத்தார் 2022 சுற்றுப்போட்டியில் இதுவரை ஆட்டமொன்று ஆரம்பிக்கப்பட்ட மிக சொற்ப வேளையில் வேகமாக அடிக்கப்பட்ட கோல் இதுவாகும். 

எனினும், பின்னர் ஈக்வடோர் அணி நெதர்லாந்துக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. அதன்பின் கூடுதலான நேரம் ஈக்வடோர் அணியை பந்தை தம்வசம் வைத்திருந்தது.

இடைவேளைக்கு சற்று முன் ஈக்வடோர் வீரர் பேர்விஸ் எஸ்துபினன் அடித்த பந்து கோல் கம்பத்தக்குள் புகுந்தது. எனினும், ஈக்வடோர் வீரர்  ஜக்சன் பொரோஸோ ஓவ் சைட்டில் நின்றிருந்ததால் அந்த கோல் அனுமதிக்கப்படவில்லை. 

இடைவேளையின்போது நெதர்லாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

எனினும் இடைவேளையின் பின்னர் 49 ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் வீரர் என்னேர் வலன்சியா கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இச்சுற்றுப்போட்டியில் வலன்சியா புகுத்திய 3 ஆவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் அணியுடனான போட்டியில் அவர் 2 கோல்களை புகுத்தியிருந்தார்.

இறுதியில் நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.

https://www.virakesari.lk/article/141258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்பு நாடான கத்தார் உலகக் கிண்ண தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறுகிறது

By SETHU

26 NOV, 2022 | 01:07 PM
image

(நெவில் அன்தனி)

 

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட முதல் சுற்றில் 2ஆவது தோல்வியை எதிர்கொண்ட வரவேற்பு நாடான கத்தார் முதலாவது நாடாக உலக கிண்ணப் போட்டியிலிருந்து நொக் அவுட் செய்யப்பட்டுள்ளது.

 

அதேவேளை, ஈக்வடோர், செனகல் (ஏ குழு), ஈரான், ஐக்கிய அமெரிக்கா (பி குழு) ஆகிய நாடுகள் 2ஆம் சுற்றுக்கு செல்வது அந்த நாடுகளின் கடைசி லீக் போட்டிகளின் முடிவுகளில் தங்கியிருக்கிறது.

எவ்வாறாயினும் நெதர்லாந்தும் (ஏ குழு), இங்கிலாந்தும் (பி குழு) 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.

ஏ மற்றும் பி குழுக்களுக்களில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற    போட்டி முடிவுகளை அடுத்தே இந் நிலை தோன்றியுள்ளது.

ஏ குழுவில் கத்தாருக்கு எதிரான போட்டியில் செனகல் 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதுடன் நெதர்லாந்துக்கும் ஈக்வடோருக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் பங்குபற்றிய கத்தார், உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சுற்றுடன் வெளியேறும் இரண்டாவது வரவேற்பு நாடானது.

2010 இல் தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது. அத்துடன் லீக் சுற்றில் 2 போட்டிகள் மாத்திரம் நிறைவடைந்த நிலையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் முதலாவது நாடு கத்தார் ஆகும்.

கத்தார் சார்பாக இதுவரை ஒரே ஒரு கோலை மொஹமத் முன்டாரி போட்டுள்ளார்.

இக் குழுவுக்கான மற்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே கோடி கெக்போ (6ஆவது நிமிடம்) போட்ட கோலின் உதவியுடன் நெதர்லாந்து முன்னிலைய அடைந்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் 49ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணித் தலைவர் என்னர் வெலென்சியா கோல் நிலையை சமப்படுத்தினார்.

இந்த கோலுடன் என்னர் வெலென்சியா 3 கொல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளை அடுத்து ஏ குழுவில் நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்தல் இருப்பதுடன் அதன் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகக் காணப்படடுகிறது.

ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டிகளில் நெதர்லாந்து கத்தாரை எதிர்கொள்ளவுள்ளதுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள ஈக்வடோரை 3 புள்ளிகளைப் பெற்றுள்ள செனகல் எதிர்த்தாடவுள்ளது.

பி குழுவில் வேல்ஸுக்கு எதிரான போட்டியில் ஈரான் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

வெய்ன் ஹெனெசே 86ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டைக்கு இலக்கானதை அடுத்து  வெல்ஸ் அணி   பத்து வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதனை சாதகமாக்கிக் கொண்ட ஈரான், உபாதையீடு நேரத்தின் 8ஆவது நிமிடத்தல் ரூஸ்பே செஷ்மி, 11ஆவது நிமிடத்தில் ரமின் ரீஸாயீயான் ஆகியோர் மூலம் 2 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

உலகக் கிண்ண வரலாற்றில் நான்காவது அத்தியாயத்தில் விளையாடும் ஈரான் பெற்ற ஒட்டுமொத்த 3ஆவது வெற்றி இதுவாகும்.

இது இவ்வாறிருக்க அல் பெய்த் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான பி குழு லீக் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. அப் போட்டியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட அப் போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகள் வீண் போயின.

இந்தப் போட்டி முடிவுகளை அடுத்து பி குழுவில் இங்கிலாந்து, ஈரான், ஐக்கிய அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய நான்கு அணிகளும் 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் ஒரு புள்ளியுடன் இருக்கும் வேல்ஸை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய போட்டியில் 3 புள்ளிகளுடன் இருக்கும் ஈரானும் 2 புள்ளிகளுடன் இருக்கும் ஐக்கிய அமெரிக்காவும் மோதவுள்ளன.

ஏ மற்றும் பி குழுக்களுக்கான அணிகள் நிலை

25_11_points_table_a_b.png

https://www.virakesari.lk/article/141275

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022: சூப்பர் ஹீரோ போல முகமூடி அணிந்து களமிறங்கிய தென்கொரியா கேப்டன் - என்ன காரணம்?

 

தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இது சினிமாவில் நாம் பார்க்கும் அசாத்திய திறன்கள் கொண்ட சூப்பர் ஹீரோக்கள் அணிந்துவரும் முகமூடி போல உள்ளதா? கத்தாரில் நடைபெற்றும் வரும் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின் கடந்த வியாழன்று நடந்த போட்டியில் இந்த முகமூடியை அணிந்து விளையாடினார். என்ன காரணம்?

கடந்த வியாழன்று நடந்த போட்டியில் குரூப் எச் பிரிவில் உள்ள தென்கொரியா மற்றும் உருகுவே அணிகள் மோதின. இது இந்தத் தொடரில் இரு அணிகளுக்குமே முதல் போட்டியாகும். இந்தப் போட்டியில் தென்கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின் தன்னுடைய முகத்தின் மேற்பகுதியை மறைக்கும் முகமூடியை அணிந்து களமிறங்கினார்.

இந்தப் போட்டி கோல் ஏதுமின்றி ட்ராவில் முடிந்தது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி யூரோப்பியன் சாம்பியன் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக அவர் விளையாடியபோது, எதிரணி வீரர் சான்சல் எம்பெம்பா மீது எதிர்பாராத விதமாக மோதினர். அதில், இடது கண் குழி அருகே அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

இதையடுத்து, 30 வயதான சன் ஹியுங்-மின்னுக்கு நவம்பர் 4ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. உலகக் கோப்பை தொடர் தொடங்க மூன்று வாரங்கள் மட்டுமே இருந்ததால் சன் ஹியுங்-மின் பங்கேற்பது குறித்து பலரும் சந்தேகித்த நிலையில், இந்தத் தொடரில் நிச்சயம் பங்கேற்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.

 

சன் ஹியுங்-மின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை தொடரில் என்னுடைய அழகான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த என்னால் காத்திருக்க முடியவில்லை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

“தங்கள் நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது பல வளரும் குழந்தைகளின் கனவு. எனக்கு அப்படித்தான்” என்றும் அப்பதிவில் சன் ஹியுங்-மின் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல் அடித்ததற்கான தங்க காலணியை அவர் கூட்டாக வென்றார். ஆனால், இந்த ஆண்டு தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக 19 போட்டிகளில் 5 கோல்கள் மட்டுமே அடித்துள்ள சன் ஹியுங்-மின், தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்டெடுக்க போராடி வருகிறார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சன் ஹியுங்-மின் மட்டுமல்ல, பெல்ஜியம் அணியைச் சேர்ந்த தாமஸ் மியூனியரும் கனடாவுக்கு எதிரான போட்டியில் இதே போல முகமூடி அணிந்து விளையாடினார்.

ஜெர்மன் லீக் தொடரில் பொருசியா டார்ட்மண்ட் அணிக்காக விளையாடிய போது, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, தாமஸ் மியூனியரும் தற்காப்பு முகமூடி அணிந்து களமிறங்கினார்.

https://www.bbc.com/tamil/articles/c9799jqr899o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்பாப்பேயின் 2 கோல்களின் உதவியுடன் டென்மார்க்கை வீழ்த்திய பிரான்ஸ் முதல் அணியாக 2 ஆம் சுற்றுக்குள்

By SETHU

27 NOV, 2022 | 07:15 AM
image

(நெவில் அன்தனி)

டென்மார்க்குக்கு எதிராக  ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் எம்பாப்பே போட்ட 2 கோல்களின் உதவியுடன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் முதலாவது அணியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகதிபெற்றது.

 

Kylian-Mbappe--Qatar-2022---AFP-Photo.jp

ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டியின் முதலாவது பகுதியில் பிரான்ஸ் குறைந்தபட்சம் 6 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட அதேவேளை டென்மார்க்குக்கு கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பை தவறவிட்டது.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 61ஆவது நிமிடத்தில் ஹேர்னண்டெஸ் இடது புறத்திலிருந்து தாழ்வாக பரிமாறிய பந்தை மிக சாமர்த்தியமாக கிலியான் எம்பாப்பே கோலினுள் புகுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார்.

ஆனால், சொற்ப நேரத்தில் டென்மார்க் போட்ட கோல் பிரான்ஸின் மகிழ்ச்சியை இல்லாமல் செய்தது.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் எரிக்சனின் கோர்ணர் கிக் பந்தை தலையால் முட்டிய அண்டர்சன், பந்தை கோல் வாயிலை நோக்கி நகர்த்தினார். மிக வேகமாக செயற்பட்ட கிறிஸ்டென்சன் பலமாக தலையால் பந்தை முட்டி கோல் நிலையை டென்மார்க் சார்பாக சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி கோல் எண்ணிக்கையில் முந்துவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அடுத்த 17 நிமிடங்களில் அந்த முயற்சிகள் கைகூடாமல் போனது.

எவ்வாறாயினும் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் சிரேஷ்ட வீரர் கிறீஸ்மான் பரிமாறிய பந்தை எம்பாப்பே தனது தொடையால் தட்டி 2ஆவது கோலைப் போட்டு பிரான்ஸை மீண்டும் முன்னிலையில் இட்டார். அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது.

இந்த வெற்றியுடன் இரண்டாம் சுற்றல் விளையாட முதலாவது அணியாக பிரான்ஸ் தகுதிபெற்றது.

 

டென்மார்க்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி டி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக இராண்டாம் சுற்றில் விளையாட தகுதபெறும்.

https://www.virakesari.lk/article/141340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரையோடு தரையாக மெஸ்ஸி அடித்த ‘நிம்மதி’ கோல்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடர்ந்து 36 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் இருந்த ஓர் அணி பலம் குறைந்த அணியுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அர்ஜென்டினாவும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் தணித்திருக்கிறார்கள்.

வாழ்வா சாவா போட்டியில், மெக்சிகோ அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுவிட்டது. அதில் மிக முக்கியமான முதல் கோலை அடித்து, தான் அணியில் முதன்மையான ஆட்டக்காரராக இருக்கிறேன் என்பதை தனது ரசிகர்களுக்கு  நிரூபித்தார் மெஸ்ஸி.

ஆட்டத்தின் 64-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பகுதிக்கு வெளியே இருந்தபடியே மெக்சிகோ அணியின் வலுவான காப்பரணைத் தாண்டி கோலுக்குள் பந்தை அடித்தார் மெஸ்ஸி.  

இந்த கோல் மூலம் 21 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடி 8 கோல்களை அடித்த மாரடோனாவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி. 

 

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது அர்ஜென்டினா அணி. வரும் புதன்கிழமை போலாந்து அணியுடன் மோதும் கடைசி போட்டி அர்ஜென்டினா அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.

 

மெஸ்ஸி எங்கே?

மெக்சிகோ அணியுடான போட்டியின் முதல் பாதி வரை நட்சத்திர வீரர் மெஸ்ஸி எங்கே என்று கேட்கும் அளவுக்குத்தான் அவரிடம் பந்து இருந்தது. ஆனால் பிற்பகுதியில் உண்மையிலேயே வாழ்வா சாவா என்று கட்டத்தை அர்ஜென்டினா அணி எட்டிவிட்டது.

முதல் பாதியில் பல முறை அர்ஜென்டினாவின் கோலுக்கு அருகே மெக்சிகோ வீரர்கள் பந்தைக் கடத்திக் கொண்டு சென்றார்கள். அப்போதெல்லாம் அரங்கில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் பதற்றத்தில் தவித்ததை அவர்கள் எழுப்பிய சத்தத்திலேயே உணர முடிந்தது.

அதுவும் 45-ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அடித்த ஒரு ப்ரீ கிக் நேராக கோலை நோக்கிச் சென்றபோது பலருக்கு இதயமே நின்று போயிருக்கக்கூடும். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் அதை துல்லியமாகக் கைகளால் பிடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார்.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

64-ஆவது நிமிடத்தில் டி மரியா கடத்தித் தந்த பந்தை சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்து தரையை ஒட்டி, பல மெக்சிகோ வீரர்களின் கால்களை ஒட்டியபடி பந்தை கோலுக்குள் அடித்தார் மெஸ்ஸி. 

அது கோல் அடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லாத ஒரு தருணம் என்றுதான் கருதப்பட்டது. பல மெக்சிகோ வீரர்கள் சுற்றியிருந்தார்கள். கோலுக்கான தூரமும் அதிகமாக இருந்தது. ஆனால் மரியா கொடுத்த பந்தை அமைதியாக வாங்கிய மெஸ்ஸி, 4  மெக்சிகோ வீரர்களை போக்குக் காட்டி கோல் கீப்பருக்கு இடது புறமாக தரையோடு தரையாக பந்தை அடித்துக் கோலாக்கினார்.

அந்த நேரத்திலேயே ட்விட்டரில் அந்த கோலைப் பற்றிய விவாதம் ட்ரெண்டானது. பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அடித்த கோலைப் போல மெஸ்ஸியின் கோலையும் வியந்து பேசினர்.

 மெஸ்ஸி கோல் அடித்ததும் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்த அரங்கில் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடினர்.  களத்துக்குள்ளும் அரங்கிலும் எழுந்த ஆராவாரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆகின.

கடைசி நிமிடங்களில் மாற்று வீரராகக் களமிறங்கிய என்ஸோ ஃபெர்னான்டெஸ் கடைசி நேரத்தில் அடித்த மற்றொரு கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. 

அதன் பிறகு மெக்சிகோவால் பதில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

 

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘நிம்மதி அளித்த வெற்றி’

மெக்சிகோவுடனான போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, ‘எங்களது தோளில் பெரும் சுமை இருந்தது. இப்போது மன நிம்மதி கிடைத்தது. இப்போது ஆட்டம் எங்கள் கைக்கு வந்திருக்கிறது’ என்றார்.

“முதல் பாதியில் எங்களுக்கு கோல் அடிப்பதற்கான இடமே கிடைக்கவில்லை. குறுகிய இடைவெளியில் இடத்தைத் தேடத் தொடங்கினோம். முதல் கோல் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இனி போலாந்துடனான போட்டியில் வேறொரு முறையில் அணுக முடியும்” என்றார் மெஸ்ஸி.

 

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜென்டினாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

உலகக் கோப்பை சி பிரிவில் அர்ஜென்டினா, சௌதி அரேபியா, போலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கின்றன. போலாந்து அணி மெக்சிகோ அணியுடன் சமன் செய்தது மூலமாக கூடுதலாக ஒரு புள்ளியைப் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் போலாந்து 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜென்டினா 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் சௌதி அரேபியா 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மெக்சிகோ அணி 1 புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன. அடுத்து வரும் போட்டிகளில் மெக்சிகோ அணி சௌதி அரேபியாவுடனும், அர்ஜென்டினா அணி போலாந்துடனும் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் சௌதி அரேபியா, அர்ஜென்டினா, போலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றால் அவை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். சமன் செய்யப்பட்டால் கோல்கள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படும் நிலை ஏற்படும்.

மெஸ்ஸி

https://www.bbc.com/tamil/articles/c88kknz3k58o

மெக்ஸிகோவை வென்ற ஆர்ஜன்டீனாவின் 2ஆம் சுற்றுக்கான வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது

By DIGITAL DESK 2

27 NOV, 2022 | 09:16 AM
image

(நெவில் அன்தனி)

மெக்ஸிகோவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (நவ. 27) இரவு நடைபெற்ற மிக முக்கியமான சி குழு போட்டியில் லயனல் மெஸி தனக்கே உரித்தான அற்புதமான ஆற்றலைக் கொண்டு போட்ட கொலின் உதவியுடன் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிகவும் அவசியமான வெற்றியை ஆர்ஜன்டீனா ஈட்டிக்கொண்டது.  

இந்த வெற்றியுடன் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஆர்ஜன்டீனா இப்போதைக்கு தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2611_lionel_messi___1_.jpg

சவூதி அரேபியாவுடனான ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்தால் 16 அணிகளைக் கொண்ட நொக் அவுட் சுற்றுக்கு செல்லமுடியாமல் முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும் என்பதை மெஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா நன்கு அறிந்திருந்தது.

அத்தகைய ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், ஆர்ஜன்டீனாவை பதற்றத்தில் ஆழ்த்தும் வகையில் மெக்ஸிகோ கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இருந்தது.

இரண்டு அணிகளினதும் வீரர்கள் சற்று முரட்டுத்தனமாக விளையாடியதால் பல சந்தர்ப்பங்களில் மத்தியஸ்தர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி எச்சரிக்க நெரிட்டது.

2611_enzo_fernendez__3_.jpg

முதலாவது பகுதியில் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியாமல் போனது.

இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதுடன் மீண்டும் ஆக்ரோஷமும் முரட்டுத்தனமும் வெளிப்பட்டன.

எவ்வாறாயினும் இடைவேளையின் பின்னர் ஆர்ஜன்டீனா சிறப்பான ஆடடத்திறனை வெளிப்படுத்தி  மெக்ஸிகோவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.

அதன் பலனாக 64ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா முதலாவது கோலைப் போட்டு அசத்தியது.

2611_lionel_messi___4_.jpg

ஏஞ்சலோ டி மரியா பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட லயனல் மெஸி, பெனல்டி எல்லைக்கு வெளியில் இருந்து இடதுகாலால் பலமாக உதைத்து அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.

இந்த கோலினால் ஆர்ஜன்டீனா உற்சாகம் அடைந்ததுடன் மெக்ஸிகோ அதிர்ச்சிக்குள்ளாகி கோல் நிலையை சமப்படுத்த முயற்சித்தது. ஆனால், அதன் முயற்சிகளை ஆர்ஜன்டீன வீரர்கள் தடுத்த வண்ணம் இருந்தனர்.

போட்டி முழு நேரத்ததைத் தொடுவதற்கு 3 நிமிடங்கள் இருந்தபோது கோர்ணர் கிக் மூலம் பந்தைப் பெற்றுக்கொண்ட லயனல் மெஸி, அதனை என்ஸே பெர்னாண்டஸுக்கு பரிமாறினார். பெனல்டி எல்லைக்குள் இடது புறத்தில் இருந்த பெர்னாண்டஸ் பந்தை வேமாக உதைக்க பந்து கோலின் வலது மேல் மூலைக்குள் புகுந்தது. (ஆர்ஜன்டீனா 2 - 0)

இதனைத் தொடர்ந்து உபாதையீடு நேரம் உட்பட ஆட்டம் 10 நிமிடங்களுக்கு தொடர இரண்டு அணிகளும் பதற்றத்துடன் விளையாடின. ஆர்ஜன்டீனா வெற்றியைத் தக்கவைக்க முயற்சித்த அதேவேளை கோல் நிலையை சமப்படுத்த மெக்சிகோ கடுமையாக முயற்சித்தது. இறுதியில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு செல்வதறகான தனது வாய்ப்பை உயிர்பெறச் செய்துகொண்டது.

2611_enzo_fernendez__1_.jpg

https://www.virakesari.lk/article/141344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியத்துக்கு  அதிர்ச்சியளித்தது மொரோக்கோ

By SETHU

27 NOV, 2022 | 08:53 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 கோல்களால் வென்றது.

இந்த உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் இது மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறாகும். 

பீபா உலகத் தரவரிசையில் பெல்ஜியம்  2 ஆம் இடத்திலும் மொரோக்கோ 22 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழு எவ் இலுள்ள பெல்ஜியம், மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் நடைபெற்றது. 

இப்போட்டியின் 73 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் அப்தெல்ஹமீத் சபிரி முதலாவது கோலை புகுத்தினார்.

போட்டியின் உபாதை ஈடு நேரத்தில் 92 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ஸகாரியா அபோக்லால் அவ்வணியின் 2 ஆவது கோலையும் புகுத்தினார்.

https://www.virakesari.lk/article/141433

Link to comment
Share on other sites