Jump to content

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்!

jeyamohan1.jpg

Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான்.

புளிச்ச மாவு

2020-6-aqdep22uoan-fb.jpg

எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன்.

அறைகலனும் ஜெயமோகனும்

இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது ஃபர்னிச்சர் விவகாரம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், Furnitureக்கு அர்த்தம் அறைகலன் என்பதை வெண்முரசுவில் பயன்படுத்தினேன். அதில் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சொல்லை நான்தான் கண்டுபிடித்தேன் என்றார். அதாவது அறைகலன் என்ற சொல்லை தமிழுக்கு நன்கொடையாக கண்டுபிடித்து வழங்கியவர் ஜெயமோகன் என்பது அவரது கருத்து.

மனுஷ்யபுத்திரன்

manushyaputhiran-165500085616x9.jpg

அவ்வளவுதான்.. சமூக வலைதளங்களில் அமளி துமளிதான்.. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஃபர்னிச்சர் விவகாரம்தான். திமுகவை சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஜெயமோகனுக்கு பதிலடி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.

என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள். நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்குற காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி? என சீறியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு நூலில்..

IMG-20221116-213330.jpg

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை தளபதிராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அறைகலன் என்ற சொல்லை உருவாக்கியது ஜெயமோகனா?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1974 -ஆம் ஆண்டு எழுதிய 'ஆட்சித் துறைத் தமிழ்' என்னும் நூலின் மூலம் 'அறைகலன்' என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் ! (படம்: கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நால். வெளியான ஆண்டு 1978. பக்கம் 94) என பதிவு செய்துள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர் மகுடேசுவரன், அறைக்குள் மட்டுமே வைத்துப் பயன்படுத்தத் தக்க பொருள் அறைகலன் எனப்படும். அறைகலன் (அறையினது கலன்), அறைக்கலன் (அறையின்கண் வைக்கும் கலன்) என இருவாறும் எழுதலாம். உள்ளிருக்கும் பயன்பொருள். இச்சொல்லினைத் தமிழாய்ந்த பெருமக்கள் பலர் நெடுங்காலமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

மணவை முஸ்தபா வெளியிட்ட 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற நூலில் 'அறைகலன்' என்ற சொல் பதினெட்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பதிப்பு செப்டம்பர் 1993ஆம் ஆண்டு வெளிவந்தது என எழுதியுள்ளார். இப்படியான விவாதங்களால் சமூக வலைதள பக்கங்கள் ரத்த பூமியாகி கிடக்கிறது!

https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-rightwing-writer-jeyamohan/articlecontent-pf807095-485596.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலைச்சொல் - ஜெயமோகன்

MeenaNovember 17, 2022

Mudhalavin-001.jpeg

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன. அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன். அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.
 
https://www.jeyamohan.in/175825/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:49, கிருபன் said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தான். 

நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை,

ஜெய மோகன் என்பவர் யார்?

முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இது காய்ச்சல் மிஞ்சிய கருத்து கோசான் ஜீ!😂

ஆள் வலதுசாரி தான். ஆனால், தமிழில் இன்று இருக்கும் ஒரேயொரு prolific எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

🤣

முடியாதுதான். அதுதான் பாவம் எண்டு “சுமாரான” எழுத்தாளர் என்றேன்🤣.

சரி நல்ல எழுத்தாளர்தான். கருத்தாளர் அல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஜெய மோகன் என்பவர் யார்?

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

3 hours ago, goshan_che said:

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

வெண்முரசை எழுதிய போதும் சரி, கோவிட் பெருந்தொற்றின் போது ஒரு நாளுக்கு ஒரு சிறுகதை என்ற வேகத்தில் எழுதிய போதும் சரி, ஜெயமோகனின் சலிக்காத எழுத்துழைப்பு வியக்க வைத்தது. இதே போல ஆங்கிலத்தில் எழுதும் பெயர் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே! ஒரு prolific எழுத்தாளராக அறியப் பட்ட ஹருகி முறகாமி என்கிற ஜப்பானிய எழுத்தாளர் கூட, வருடத்தில் சில மாதங்கள் தான் தினசரி உட்கார்ந்து எழுதி முடிப்பாராம் என்று அறிந்திருக்கிறேன்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

அதுதானே பார்த்தேன் நந்தினியை குடும்பிக் கூட்டத்தின் வளர்ப்பு மகளாக்கி.. குடும்பிகளின் ஆதிக்கத்தையும் படத்திற்குள் திணித்ததை. நந்தினி கல்கி உருவாக்கிய செருகல் பாத்திரத்திற்கு இவர்... கூடக் குடும்பிச் சாயம் பூசி விட்டிருக்கிறார்.

அதேபோல்.. பல்லவர்களை சிங்களவர்களின் காலடியில் கெஞ்சுவது போலக் காட்டி இருப்பதும் இவரின் சித்துவிளையாட்டாகத்தான் இருக்கும். ஏனெனில்.. இவர் தமிழீழ எதிர்ப்பு ஆள். சிங்களத் தீவு விசுவாசி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

தொல்காப்பியருக்கு ஏடு தொடக்கினதே பு.மோ தா

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

 நன்றி

16 minutes ago, வாலி said:

இதில டபிள் மீனிங்க் எதுவுமில்லையே?😂

அது உங்க பார்வையில இருக்கு வாலி🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

உங்களுக்கு புளித்தமாவு ஜெயமோகனை தெரியாதா?

@கிருபன்ஜியிடம் கேட்டால் உங்கள் வாழ்க்கையின் 90% ஐ வேஸ்ட் ஆக்கி விட்டீர்கள் என்பார் 🤣.

நமது ஜியின் குருஜிதான் பு.மோ.

கடைந்தெடுத்த பிராமண மேலதிக்க, வலதுசாரி பிற்போக்குவாதி.

தமிழர் வரலாற்றை சிறுமை படுத்தி, அதெல்லாம் அவர்கள் பேரரசர்கள் இல்லை, சோழர் அரண்மனையே இல்லாதவர்கள் - வெறும் ஓட்டு வீட்டில் வாழ்ந்தார்கள் என்ற ரேஞ்சில் கரடி விடுவார்.

குருமூர்த்தி நீங்கலாக தமிழ் நாட்டில் இருக்கும் சங்கிகளிலேயே மிக ஆபத்தான (மறைமுக) சங்கி.

பெயர்காரணம். ஜெமோ என அழைக்கப்பட இவர் தோசை மாவு வாங்க போன பெண்ணிடம் தனது சாதி திமிரை காட்டி, அந்த பெண்ணிடமும் கணவரிடமும் வாங்கி கட்டி கொண்டார்🤣.

அன்றுமுதல் பு மோ என அழைக்கப்படுகிறார்.

ஆ…மறந்து போச்சு…ஆள் ஒரு சுமாரான எழுத்தாளர். பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுத இவர்தான் சரியான “வகுப்பு தோழன்” என சக சாதிக்காரர் மணி ரத்தினத்தால் தெரிவு செய்யபட்டவர். 

நன்றி கோசான்.

4 hours ago, கிருபன் said:

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஆசான் ஜெயமோகன்!

அவரது இலக்கிய பங்களிப்பை தெரியாமல் இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் புளித்தமாவு என்று தெரிவதை விட பொன்னியின் செல்வன், பாபநாசம், வெந்து தணிந்தது காடு, எந்திரன் 2.0 போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் என்றாவது தெரிந்து வைத்திருக்கலாம்!

இதில் எதிர்க் கருத்து என்னிடம் இல்லை!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடரை தொடர்ந்து படிப்பதால் யாழில் மெனக்கெடுவது குறைவு!

வெண்முரசு நாவல் தொடரில் உள்ள 26 நாவல்களையும் செம்மைப் பதிப்பில் வாங்கியுள்ளேன். அதைவிட அவர் எழுதிய எல்லா நாவல்களும் என்னிடம் அச்சுப் புத்தகங்களாக உள்ளன!

large.F720377D-F6E3-4D0D-9338-F06AAAA66245.jpeg.0a9649936550aa3bd6e5364ea5bacb3c.jpeg

நன்றி கிருபன், நான் பன்னாடை மாதிரி, நல்லவற்றை விட்டு விட்டு குப்பைகளை எடுப்பது, கதைகள் வாசிப்பதை 5 அல்லது 6 வருடங்களாக பெரும்பாலும் நிறுத்திவிட்டேன், யாழ்கள உறவுகள் கதைகள் சில சமயம் வாசிப்பதுண்டு, சிலவேளை ஜெயமோகனின் கதையினை எங்காவது வாசித்திருப்பேன்.

ஆனால் பொதுவெளியில் இந்த பெயர்களை அதிகம் கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அறைக்கலன் -அவதூறு

MeenaNovember 17, 2022

கலைச்சொல்

பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.

கிருஷ்ணன் ஈரோடு

*

நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.

அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நான் சொன்னேன்…

“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.

https://www.jeyamohan.in/175839/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருஞ்சொல்லுக்கு வழங்கிய           பேட்டியில்(https://youtu.be/lMgQ9QVIjdQ)  ஜெயமோகன் மிகத்தெளிவாகவே அறைக்கலன் என்ற சொல்லை தானே உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். பேட்டியின் 13.28 க்கும் 13.45 க்கும் இடையில் அவர் சொன்னதன் எழுத்து வடிவம் கீழே

"உதாரணமாக Furniture க்கு அறைக்கலன் என்கிற வார்த்தை வெண்முரசில இருக்கு.  பிறகு அது டிக்சனரிக்கு போகிறது. பிறகு தினத்தந்தி விளம்பரத்தில் வருகிறது. என் கண்முன்னாலேயே தினத்தந்தியில் அறைக்கலன்கள் விற்பனை அப்படீன்னு. அது நான் உருவாக்கிய வார்த்தை"

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் பேட்டி: நடந்தது என்ன?

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம். வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

சமீபத்தில் ‘அருஞ்சொல்’ தளத்தில் வெளியான ஜெயமோகன் பேட்டி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ‘அறைக்கலன்’ எனும் சொல்லை உருவாக்கியதாகப் பேட்டியில் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் சொல் ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். காணொளியில், பேட்டியின்போது நீங்கள் தலையாட்டியபடி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் பேட்டியின்போதே சுட்டிக்காட்டியிருக்கக் கூடாதா?

கண்ணன், சென்னை 

அன்புள்ள கண்ணன், சரியான கேள்வி.

சமூகத்தளங்களிலும் சிலர் இதைக் கேட்டிருந்தனர்.

அடிப்படையில் ‘உரையாடு உலகாளு’ நிகழ்ச்சியானது இதழியல் அடிப்படையில் எடுக்கும் பேட்டி வகைமையைச் சார்ந்தது இல்லை. மாணவர்கள் மத்தியில் மாதம் ஒரு ஆளுமை என்று ஒவ்வொரு துறையைச் சார்ந்தவரையும் அழைத்துப் பேசச் சொல்லி, அவர்களுடைய உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி. அங்கே பரபரப்பான கேள்விகள், குறுக்கு விசாரணைகள் இவற்றுக்கெல்லாம் இடம் இல்லை. 

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஓர் அரசியல் தலைவரின் அன்றாட நாள் எப்படித் தொடங்குகிறது; ஒரு நாளைக்கு எத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க வேண்டியிருக்கிறது; எத்தனை தரப்பு மக்களுடன் உரையாட வேண்டியிருக்கிறது; காலையில் எத்தனை மணிக்கு அவர் படுக்கையிலிருந்து எழுகிறார்; இரவு எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறார்; இவ்வளவு வேலைகளுக்கு இடையே உடல்நலனை எப்படிப் பராமரிக்கிறார்; குடும்பத்துக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்; வாசிப்பதற்கான நேரத்தை எப்படி ஒதுக்கிக்கொள்கிறார்; அதிகாரிகளுக்கும் அரசியலர்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது; சட்டங்கள் எந்தத் தரப்புகளிலிருந்து எல்லாம் உருவாகின்றன இப்படிதான் அந்த உரையாடல் அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்றார். அந்த ஒன்றரை மணி நேரக் காணொளியை முழுமையாகப் பார்த்திருந்தவர்களுக்குத் தெரியும்; அவருடைய அன்றாட வாழ்க்கை, எழுத்து, சினிமா உலகத்தைத் தாண்டிய ஒரு கேள்வி அதில் இருக்காது. சொல்லப்போனால், இங்கே நெறியாளரின் பணி இதற்கு வெளியில் உரையாடல் செல்லாமல் பார்த்துக்கொள்வதே ஆகும். விவாதங்களுக்கு இடம் இல்லை.

ஜெயமோகன் உரையாடல் பெருமளவில் அப்படித்தான் வந்திருக்கிறது. மாணவர்களுக்கான பல நல்ல கருத்துகள் அந்த உரையாடலில் உள்ளன. இதற்கு வெளியே ஒவ்வொரு விஷயத்தையும் சாரம்சப்படுத்துவதும், பல விஷயங்களைப் பொதுமைப்படுத்துவதும், சில விஷயங்களில் எகிறிப் பேசுவதும் நடந்தது. அது ஜெயமோகனின் பாணி. அதற்கு என்ன எதிர்வினை உண்டாகுமோ அது எப்போதும்போல உண்டாகிறது. ஜெயமோகன் இப்படி வெளியாகும் எதிர்வினைகளைச் சங்கடமாகப் பார்ப்பவர் இல்லை. பிரக்ஞையுடனேயே அவர் பேசுகிறார். அதனால் அவை அப்படியே வெளியாகியிருக்கின்றன.

பொதுமைப்படுத்திப் பேசும் முறை ஆபத்தானது. ஒருவரை மானாங்கானியாகப் புரிந்துகொள்ள அது வழிவகுக்கும்.

இந்த உரையாடலிலேயே அப்படி நாசூக்காகச் சுட்டப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை வாசகர்கள் கவனிக்க முடியும். ஓரிடத்தில், “மலையாள பத்திரிகைகள் ‘வெண்முரசு’ வந்தபோது பெரும் செய்திகளை வெளியிட்டன. அட்டைப் படப் பேட்டிகளை வெளியிட்டன. தமிழில் ஒரு பெரிய இதழ்கூட அப்படிச் செய்யவில்லை” என்று ஜெயமோகன் குறிப்பிடுவார். இதைப் பல ஆண்டுகளாக அவர் சொல்லிவருகிறார்.

தமிழில் பல இதழ்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அந்தச் சமயத்தில் இரு பேட்டிகளை வெளியிட்டது. இதற்கென்றே சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று ஜெயமோகனிடம் பேட்டி கண்டவர் ஷங்கர்ராமசுப்ரமணியன். பேட்டியின் ஒரு பகுதி நடுப்பக்கத்தில் அரைப் பக்க அளவிலும் இன்னொரு பகுதி தீபாவளி மலரில் விரிவாகவும் இடம்பெற்றிருந்தது. இதைச் சில சந்தர்ப்பங்களில் ஷங்கர்ராமசுப்ரமணியனும் சுட்டிக்காட்டிவிட்டார். ஜெயமோகன் பொருட்படுத்துவதே இல்லை. எல்லா இதழ்களையும் பொதுமைப்படுத்துகிறார்.

இந்த உரையாடலிலும் அது நிகழ்ந்தது. “எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை” என்றார். நான் அடுத்தடுத்த கேள்விகளை நோக்கிச் செல்லும்போது, “உங்களுடைய ‘வெண்முரசு’ ஆரம்பித்த  சமயத்தில் ‘தி இந்து’ தமிழில் உங்களுடைய ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அதில் நீங்கள் எழுத்தாளர்கள் உடல்நலம் பேணுவது மிக முக்கியம் என்று கூறியிருப்பீர்கள். இதைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா?” என்பதுபோலக் கேட்டிருப்பேன். இப்படியான நிகழ்ச்சிகளில் இந்த அளவுக்குத்தான் சுட்டிக்காட்டல் சாத்தியம்.

மேற்கண்ட விஷயத்தில் ஜெயமோகன் பொய் சொல்கிறார் என்று நான் கருதவில்லை. பொதுமைப்படுத்துகிறார். அதை அவர் தவிர்க்க வேண்டும். அதைத் தாண்டி இதுவெல்லாம் ஒரு விவாதத்துக்கான விஷயம் இல்லை.

வாஸ்தவத்தில் ஜெயமோகன் பேச்சுக் காணொளியின் ஆரம்பத்தில் வரும் சுவாரஸ்ய காட்சிகளில் விவாதத்துக்கு உரிய விஷயங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1. ஒரு சமூகத்தில் எழுத்தாளர்தான் உச்சம்; 2. முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இன்னாள் முதல்வர் ஸ்டாலினும் வரலாற்றில் அடிக்குறிப்பாகலாம்; நான் ஆக மாட்டேன்; 3. தமிழ்நாடு முழுக்க முருகன் கோயில்களில் மூல விக்கிரகமாக இருந்தது கொற்றவை; 4. விஷுவல் மீடியம் டோட்டல் வேஸ்ட்.

இப்போது சர்ச்சை ஆகியிருக்கும் சொற்பயன்பாடு விஷயம் என்னளவில் இப்படிப் பொருட்படுத்தத் தக்க விவாதப் பொருள் இல்லை. நீங்கள் அந்தக் கேள்வி – பதிலை முழுமையாகப் பாருங்கள். எதற்கான கேள்விக்கு என்ன பதில் ஜெயமோகன் சொல்கிறார் என்பது புரியவரும். “ஒரு மலையாளியான நீங்கள் எழுத்தாளார்கள் கொண்டாடப்படும், பெரும் வாசகத் திரளைக் கொண்ட மலையாளத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் தமிழை உங்கள் எழுத்து மொழியாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்பது கேள்வி. அதற்கு ஜெயமோகன் அளிக்கும் பதில் சுருக்கம்: “மலையாளத்தைவிட தமிழ் வளமான மொழி. தமிழிலுள்ள தொல் சொற்கள் ஓர் எழுத்தாளனுக்கு விரிந்த களத்தைக் கொடுப்பவை. ஆகையால் தமிழை எனக்குரியதாக ஆக்கிக்கொண்டேன். நான் என் எழுத்துகளில் கூடுமானவரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகிறேன். பத்தாயிரம் சொற்கள் வரை உருவாக்கவும் மீளப் பயன்படுத்தி பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் செய்திருக்கிறேன். ஊழ்கம், அறைக்கலன் அப்படியானவை.”

தமிழ் மீதான ஜெயமோகனின் நேசமே எனக்கு இதில் அடிப்படையாகத் தோன்றுகிறது. 

பத்தாயிரம் சொற்கள் என்பது ஜெயமோகனின் மிகைக் கூற்றாக இருக்கலாம். அறைக்கலன் தவறான உதாரணமாக இருக்கலாம். இதுவரை பல லட்சம் வார்த்தைகளை எழுதிக் குவித்திருக்கிற அவர் நிச்சயம் சில ஆயிரம் சொற்களையேனும் புதிதாகவும், மீட்டுருவாக்கியும் சமகால மொழிக்கு இப்படிக் கொண்டுவந்திருக்கக் கூடும். மேலும், தன் படைப்புகளில் கூடுமானவரை தமிழ்ச் சொற்களைக் கையாளுபவர் அவர். அவருடைய எழுத்துகளை வாசித்திருப்பவர்களுக்கு இது தெரியும். 

ஜெயமோகன் என்றில்லை; மொழி மீது பிரக்ஞையோடு செயல்படும் எந்த எழுத்தாளரும் தன் வாழ்வில் இப்படிப் பல வார்த்தைகளை சமூகத்தின் மையத்துக்குக் கொண்டுவருகிறார். பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து செய்கிறார்கள்; அரசும் அலுவலர்களும் தொடர்ந்து செய்கிறார்கள்; அரசியலர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தமிழ்ப் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கின்றன.  விவசாயம், கட்டுமானத் தொழில் தொடங்கி விஞ்ஞான மையங்கள், சமூக வலைதளங்கள் வரை ஒவ்வொரு தளத்திலும் இது நடக்கிறது. 

ஒரு சமூகம் பிரக்ஞையோடும் இயல்பிலும் இப்படித் தொடர்ந்து உருவாக்கும் / பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சொற்களாலேயே அந்த மொழி உயிர்ப்போடு இருக்கிறது. உயிர் பிழைத்திருப்பதற்கான மூச்சு சுவாசம்போல மொழிச் செயல்பாட்டில் இது இடையறாது தன்னியல்பில் நடக்கும் பணி. மொழியின் தேவையை உணர்ந்து கூடுதல் அக்கறையோடும் பிரக்ஞையோடும் இதைச் செய்பவர்கள் சந்தோஷம் கொள்ள என்ன தடை இருக்கிறது?

இதையெல்லாம் மறுத்துப் பேச எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

ஜெயமோகனோடு விவாதிக்கவும் சண்டை செய்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இது சல்லி. 

காணொளியைக் கவனமாகப் பார்த்தால், ‘அறைக்கலன்’ உதாரணம் ஒரு ஸ்லிப் என்பது புரியவரும். அன்றைக்குக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மாணவர்களிடம் ஜெயமோகன் கலந்துரையாடினார். ஒரு நீண்ட பேச்சில் இப்படி ஒருவர் ஸ்லிப் ஆகும் எவ்வளவோ தருணங்கள் இருக்கும். அதேபோல, நான் காட்சி ஊடகத்தில் பழக்கப்பட்ட ஆள் கிடையாது. கேமராவுக்கு முன் செயல்படுவதில் போதிய பிரக்ஞை இல்லை. உடல்மொழி நாளடைவில் சரியாகலாம்.

இந்த விஷயத்தை மையமிட்டு என் பார்வைக்குப் பட்ட பதிவுகள் கிண்டல் அடிக்கக் கூடியவையாக இருந்தன. ஜெயமோகனோடு என்னையும் சேர்த்து அப்படிக் கிண்டல் அடிக்கும் ஒரு காணொளியை நானேகூட ஜாலியாக முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதற்கு மேல் இந்த விஷயத்தில் பொருட்படுத்த ஏதும் இல்லை!
 
https://www.arunchol.com/samas-on-jeyamohan-interview-controversy

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2022 at 07:25, கிருபன் said:

"உதாரணமாக Furniture க்கு அறைக்கலன் என்கிற வார்த்தை வெண்முரசில இருக்கு.  பிறகு அது டிக்சனரிக்கு போகிறது. பிறகு தினத்தந்தி விளம்பரத்தில் வருகிறது. என் கண்முன்னாலேயே தினத்தந்தியில் அறைக்கலன்கள் விற்பனை அப்படீன்னு. அது நான் உருவாக்கிய வார்த்தை"

உங்கள் ஆசான், பொரிஸ் ஜோன்சனை விட மோசமான, தான் சொன்னதை தானே மறுத்து, பின் ஏற்று, பின் சடையும் ஒரு பொய்யர் என்பதை ஏற்கிறீர்களா ஜி?

இதில ஆள் Finish Lapland இல வேற நிக்கிறாராம்🤣

நாளைக்கு வந்து சாண்டா கிளோசுக்கு சிவப்பு சட்டை போட பழக்கினதே நான் தான் என எடுத்து விடுவாரோ🤣.

இண்டைக்கு நான் cannon fodder இற்கு பீரங்கி-தீனி என எழுதினேன்.

இதை நான் தான் கண்டு பிடித்தேன்.

பார்ப்போம், நானா பு மோ வான்னு🤣

* Finnish 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்கள் ஆசான், பொரிஸ் ஜோன்சனை விட மோசமான, தான் சொன்னதை தானே மறுத்து, பின் ஏற்று, பின் சடையும் ஒரு பொய்யர் என்பதை ஏற்கிறீர்களா ஜி?

ஆசான் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பதால் நம்பகமான சீடப்பொடிகளை நம்பி சிலவற்றை எடுத்தியம்புவார். அதனால் அவருக்கே எது உண்மை, பொய் என்பதில் குழப்பம் இருக்கலாம்😁

இன்று  வெண்முரசு நாவல்களில் அறைகலன் என்ற வார்த்தையே இல்லை என்று பதிவு வந்துள்ளது. நான் வாசித்தவரையில் காணவில்லை!

 • Haha 2
Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.