Jump to content

அமெரிக்காவில் இந்திய ஆட்டா மாவுக்கு தட்டுப்பாடு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை.

ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது.

நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார்.

நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை.

இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள்.

உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜூலை மாதம் என்ற்று நினைக்கிறேன், உக்ரெய்ன் போரினால் உலகில் தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்தியா தனது உள்நாட்டுத் தேவையைப் போர்த்தி செய்வதற்காகத் தனது தானிய உற்பத்தியினை ஏற்றுமதி செய்வதை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன் தொடற்சியாக இருக்கலாம். 

உங்கள் குடும்ப நண்பரைச் சொஞ்ச நாள் சப்பாத்தியை விட்டு வேறு உணவுகளை உண்ணச் சொல்லுங்கள், நீரிழிவு நோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறையும். 😄

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் கூறியது போல், இந்தியா கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதியை நிறுத்தி உள்ளது.

இதனால் கோதுமை மா (மைதா), அவித்த கோதுமை மா, ஆட்டா மா மற்றும் ரவை என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சிலவகையான அரிசிக்கு தற்போது 20% ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

சிறி நாமும் இடைஇடை ரொட்டி சுடும் போது சப்பாத்தி மாவும் அரைக்கரைவாசி சேர்ப்போம்.

ஆனால் நாங்கள் வாங்குவது கனடாவிலிருந்து வரும் கோல்டன் ரெம்பிள் எனும் மாவு தான்.

1 hour ago, இணையவன் said:

உங்கள் குடும்ப நண்பரைச் சொஞ்ச நாள் சப்பாத்தியை விட்டு வேறு உணவுகளை உண்ணச் சொல்லுங்கள், நீரிழிவு நோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறையும். 😄

எனது நண்பர் தமிழ்நாட்டுகாரன் தான். உணவுவகை எம்மைப் போலவே.இருந்தாலும் சப்பாத்தி கூடவே சாப்பிடுவார்கள்.

6 minutes ago, MEERA said:

இணையவன் கூறியது போல், இந்தியா கோதுமை மற்றும் அரிசி ஏற்றுமதியை நிறுத்தி உள்ளது.

இதனால் கோதுமை மா (மைதா), அவித்த கோதுமை மா, ஆட்டா மா மற்றும் ரவை என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சிலவகையான அரிசிக்கு தற்போது 20% ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

ஓ சரி சரி .

தகவலுக்கு நன்றி மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கு… அருமையான அரிசி மா இருக்க, இந்தியனின் ஆட்டா மா எதற்கு? 😂

அடுத்த முறை… தமிழ்க்கடைப் பக்கம் போனால் விசாரித்து பார்க்கின்றேன். 🙂

அந்த அருமையான அரிசி அடுத்த வருடம் அருமையாகத்தான் கிடைக்கும்  என எதிர்பார்க்கலாம். 😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

நல்ல காலம் மைசூர் பருப்புக்கு பிரச்சனை வராது.ஏனெண்டால் இருக்கவே இருக்கு  பிரதர் துருக்கியின்ர பருப்பு..😂

Suntat - Orientalische Rote Linsen aus der Türkei 1 kg, 3,95 €

3 minutes ago, Kapithan said:

அந்த அருமையான அரிசி அடுத்த வருடம் அருமையாகத்தான் கிடைக்கும்  என எதிர்பார்க்கலாம். 😉

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

நல்ல காலம் மைசூர் பருப்புக்கு பிரச்சனை வராது.ஏனெண்டால் இருக்கவே இருக்கு  பிரதர் துருக்கியின்ர பருப்பு..😂

Suntat - Orientalische Rote Linsen aus der Türkei 1 kg, 3,95 €

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

எல்லாக்ப்கருமமும் உந்த இந்தியனிடம் இருந்துதான். 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கனடா பக்கமும் இந்தியாவிலிருந்தா அரிசி வரத்து?
உங்கை  மெக்சிக்கோ பக்கம் எண்டு கேள்விப்பட்டன்

அரிசி கூடுதலாக இந்தியா பாகிஸ்தான் தான்.

2 hours ago, குமாரசாமி said:

ஆட்டா மா மட்டுமில்லை.......இனி உளுந்து பயறு கடுகு பெருஞ்சீரகத்துக்கு எல்லாம் தட்டுப்பாடு வருமாம்.

விலையை தாறுமாறாக ஏத்தப் போறாங்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அரிசி கூடுதலாக இந்தியா பாகிஸ்தான் தான்.

விலையை தாறுமாறாக ஏத்தப் போறாங்கள் போல.

சீக்கருக்க வறுத்த கோதுமைவை கொடுத்து, உது தான் சிலோன் ஆட்டா மா எண்டு கொடுத்து விடுங்கோ... 
 
****

அரிசி, அதிகமாக தாய்லாந்து, மியான்மார் பகுதியில் இருந்தும் வருகிறது. தவிர முன்னர் லாங் கிரைன் அரிசி பயிரிட்ட அமேரிக்காவில் அதிகளவில் பாஸ்மதி பயிரிடுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் உள்நாட்டு தேவை கூடுதலாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

சீக்கருக்க வறுத்த கோதுமைவை கொடுத்து, உது தான் சிலோன் ஆட்டா மா எண்டு கொடுத்து விடுங்கோ... 

திருப்பதிக்கே லட்டு மாதிரி

சீக்கியருக்கே சப்பாத்தியா

முடியுற காரியமா சொல்லுங்க நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

திருப்பதிக்கே லட்டு மாதிரி

சீக்கியருக்கே சப்பாத்தியா

முடியுற காரியமா சொல்லுங்க நாதம்.

ஜோக்குகளை கவனிக்கவில்லை போல..... சீரியசாக கவலைப்படுறீங்க போல.....

அட விடுங்க...... சீக்கன் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாட்டி என்ன.😁

நமக்குத் தான் வீச்சு ரொட்டி, கொத்துரொட்டி இருக்குதே. பழக்கி விட வேண்டியது தான்....🤑😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க முட்டைக்கு தட்டுப்பாடாமே?...சுப்ப மார்க்கெட்டில் 2 க்கு மேல் வாங்க முடியாதாம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இங்க முட்டைக்கு தட்டுப்பாடாமே?...சுப்ப மார்க்கெட்டில் 2 க்கு மேல் வாங்க முடியாதாம் 

இங்கேயும் கொஸ்கோவில் 2 கேசுக்கு மேல் இல்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:38, ஈழப்பிரியன் said:

உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

இரண்டு நாட்களுக்கு முன்… இரண்டு  தமிழ் கடைகளுக்கு போயிருந்த போது…
அங்கு ஆட்டாமா 10 கிலோ, 20 கிலோ சாக்குகளில் நிறையவே இருந்தது.
கடைக்காரரிடம் ஆட்டா மா தட்டுப்பாடோ என்று கேட்க யோசித்து விட்டு, கேட்கவில்லை. 
கேட்டால்… விலையை கூட்டினாலும், கூட்டிப் போடுவார். 😁

  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்… இரண்டு  தமிழ் கடைகளுக்கு போயிருந்த போது…
அங்கு ஆட்டாமா 10 கிலோ, 20 கிலோ சாக்குகளில் நிறையவே இருந்தது.
கடைக்காரரிடம் ஆட்டா மா தட்டுப்பாடோ என்று கேட்க யோசித்து விட்டு, கேட்கவில்லை. 
கேட்டால்… விலையை கூட்டினாலும், கூட்டிப் போடுவார். 😁

உங்களிடம் சமூக நலன் சார்ந்த சிந்தனை இருக்கிறது, அது சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது ......!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்… இரண்டு  தமிழ் கடைகளுக்கு போயிருந்த போது…
அங்கு ஆட்டாமா 10 கிலோ, 20 கிலோ சாக்குகளில் நிறையவே இருந்தது.
கடைக்காரரிடம் ஆட்டா மா தட்டுப்பாடோ என்று கேட்க யோசித்து விட்டு, கேட்கவில்லை. 
கேட்டால்… விலையை கூட்டினாலும், கூட்டிப் போடுவார். 😁

இங்கே இன்னமும் இந்தியன் கடைகளில் தட்டுப்பாடாக உள்ளது.

ஆனாலும் வேறு கடைகளில் வோல்மாட் ராக்கட் போன்ற கடைகளில் கிடைக்கிறது.

ரதி சொன்ன மாதிரி முட்டை தட்டுப்பாடு.ஏன்னென்று தெரியவில்லை.

எனது நண்பரிடம் கொஸ்கோ காட் இல்லை.வழமையில் நாங்கள் கொஸ்கோ போகும் போது அவரும் வருவார் அல்லது அவருக்கும் சாமான்கள் வாங்கி வருவோம்.

இம்முறை அவருக்கு 2 கேஸ் முட்டை எமக்கு ஒன்று என்று கொண்டு போனால் இரண்டு தான் தரலாம் என்றார்கள்.ஏனென்று புரியவில்லை.

இருந்தாலும் நத்தார் நெருங்கிறபடியால் எல்லோரும் கேக் அடிக்க வாங்குவார்கள் தானே.அதனால் தட்டுப்பாடாக இருக்குமென்று எண்ணிவிட்டோம்.

லண்டனிலும் இதே பிரச்சனை என்றால் வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம்.

15 minutes ago, suvy said:

உங்களிடம் சமூக நலன் சார்ந்த சிந்தனை இருக்கிறது, அது சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது ......!  👍

சுவி சரியாக சொன்னீர்கள்.நான் என்றால் கேட்டே இருப்பேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

சுவி சரியாக சொன்னீர்கள்.நான் என்றால் கேட்டே இருப்பேன்.

நீங்களும் என்னை மாதிரித்தான் வீட்டில நின்றால் இருந்தால் திட்டு வாங்கிற கேசுகள் .......சிறியர் முன்பு அப்படிதான் இப்ப கொஞ்சம் உசாராயிட்டார் .......!  😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாய் சொன்னியள். 😂

7 minutes ago, suvy said:

நீங்களும் என்னை மாதிரித்தான் வீட்டில நின்றால் இருந்தால் திட்டு வாங்கிற கேசுகள் .......சிறியர் முன்பு அப்படிதான் இப்ப கொஞ்சம் உசாராயிட்டார் .......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

நீங்களும் என்னை மாதிரித்தான் வீட்டில நின்றால் இருந்தால் திட்டு வாங்கிற கேசுகள் .......சிறியர் முன்பு அப்படிதான் இப்ப கொஞ்சம் உசாராயிட்டார் .......!  😂

தோசையும் இட்லியும் தான்.

அண்ணனும் தம்பியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

அது சரி கேக்கோணுமெண்டு மறந்து போனன்....கனக்க ஆட்டா மா வாங்கி என்ன செய்யிறனியள்?
ஆட்டா மா என்னத்துக்கு நல்லது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

இங்க முட்டைக்கு தட்டுப்பாடாமே?...சுப்ப மார்க்கெட்டில் 2 க்கு மேல் வாங்க முடியாதாம் 

பறவை காய்ச்சல் காரணமாய் என்கிறார்கள் .

11 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்… இரண்டு  தமிழ் கடைகளுக்கு போயிருந்த போது…
அங்கு ஆட்டாமா 10 கிலோ, 20 கிலோ சாக்குகளில் நிறையவே இருந்தது.
கடைக்காரரிடம் ஆட்டா மா தட்டுப்பாடோ என்று கேட்க யோசித்து விட்டு, கேட்கவில்லை. 
கேட்டால்… விலையை கூட்டினாலும், கூட்டிப் போடுவார். 😁

அவர்களுக்கு வந்த அடக்க விலை அதுவாக இருக்கும் சத்தம் போடாமல் வாங்கி விடுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே இன்னமும் இந்தியன் கடைகளில் தட்டுப்பாடாக உள்ளது.

ஆனாலும் வேறு கடைகளில் வோல்மாட் ராக்கட் போன்ற கடைகளில் கிடைக்கிறது.

ரதி சொன்ன மாதிரி முட்டை தட்டுப்பாடு.ஏன்னென்று தெரியவில்லை.

எனது நண்பரிடம் கொஸ்கோ காட் இல்லை.வழமையில் நாங்கள் கொஸ்கோ போகும் போது அவரும் வருவார் அல்லது அவருக்கும் சாமான்கள் வாங்கி வருவோம்.

இம்முறை அவருக்கு 2 கேஸ் முட்டை எமக்கு ஒன்று என்று கொண்டு போனால் இரண்டு தான் தரலாம் என்றார்கள்.ஏனென்று புரியவில்லை.

இருந்தாலும் நத்தார் நெருங்கிறபடியால் எல்லோரும் கேக் அடிக்க வாங்குவார்கள் தானே.அதனால் தட்டுப்பாடாக இருக்குமென்று எண்ணிவிட்டோம்.

லண்டனிலும் இதே பிரச்சனை என்றால் வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம்.

கடை திறந்தபின் உள்ளே போங்க லிமிட் பண்ணமாட்டினம்  பின்னேரங்களில் போனால் அப்படித்தான் லண்டனில் பறவை காய்ச்சல் அப்படி இப்படி .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி கேக்கோணுமெண்டு மறந்து போனன்....கனக்க ஆட்டா மா வாங்கி என்ன செய்யிறனியள்?
ஆட்டா மா என்னத்துக்கு நல்லது?

இடைக்கிடை ரொட்டி சுடுவோம்.

கோதுமை ஆட்டா மாவு அரைக்கரவாசி போட்டு குழைத்தால் ரொட்டி கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

20 இறாத்தல் பை வாங்கினால் 6 மாதத்துக்கு காணும்.

இந்திய நண்பர்கள் மாவுக்காக அலைந்து திரிவதையே எழுதினேன்.

1 hour ago, பெருமாள் said:

கடை திறந்தபின் உள்ளே போங்க லிமிட் பண்ணமாட்டினம்  பின்னேரங்களில் போனால் அப்படித்தான் லண்டனில் பறவை காய்ச்சல் அப்படி இப்படி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்… இரண்டு  தமிழ் கடைகளுக்கு போயிருந்த போது…
அங்கு ஆட்டாமா 10 கிலோ, 20 கிலோ சாக்குகளில் நிறையவே இருந்தது.
கடைக்காரரிடம் ஆட்டா மா தட்டுப்பாடோ என்று கேட்க யோசித்து விட்டு, கேட்கவில்லை. 
கேட்டால்… விலையை கூட்டினாலும், கூட்டிப் போடுவார். 😁

6 hours ago, குமாரசாமி said:

அது சரி கேக்கோணுமெண்டு மறந்து போனன்....கனக்க ஆட்டா மா வாங்கி என்ன செய்யிறனியள்?
ஆட்டா மா என்னத்துக்கு நல்லது?

முன்பு ஒருக்கா நம்ம சிறியர் ஆட்டாமாவை மாறி கனக்க வாங்கிப்போட்டு அவஸ்த்தைப் பட்டவர்.கேட்டால் சொல்லுவார்.😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.