Jump to content

ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு

 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

29 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. 

 

 

இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmm67jd2722o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையாடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்திரத்தை குடித்து குடித்து மனச்சாட்சியே இந்த ......களை விட்டு ஓடி விட்டது 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களென்றால் அழியவேண்டும் என்பதே கிந்தியாவின் திட்டம். அதனை அனைத்துவிடயங்களிலும் எந்தப் பிசகுமின்றிக் கடைப்பிடித்துவருகிறது. கிந்தியா இல்லாமற்போனாற்றான் ஈழத்தமிழருக்கு விடிவுவரும்போல் உள்ளது.  

  • Like 1
Link to comment
Share on other sites

அவர்களை நோக முதல் தமிழ் நாட்டில் இருந்து நளினியின் செவ்விக்கு வந்த பின்னூட்டங்களில் சில.................

ஆமா இவ அப்படியே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தர ஜெயிலுக்கு போனா... அதனால் பிள்ளைய பாக்க முடியல... கொலைகார நாய்...

கொலையாளிகளின் விடுதலையை வரவேற்பது கொலையை நியாயப்படுத்தும் செயல்.
கேவலம். தூ 😡

இந்திய மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பதவியில் இருக்கும் போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொலை செய்த தீவிரவாதிகளை தூக்கில் போட வேண்டும் அவர்களை விடுதலை செய்யக்கூடாது கொலையாளிகள் டீவி பத்திரிகை போன்ற சமூகவலைதளங்களில் தியாகிகள் போல் பேட்டி கொடுப்பதை எழுதுவதை தடை செய்ய வேண்டும் இதுவே அந்த தீவிரவாத தாக்குதலில் இறந்த ஆன்மாக்களுக்கு செய்யும் நீதியாகும் கொலையாளிகளுக்கு பணெளதவி செய்யும் தீவிரவாதிகளையும் தண்டிக்க வேண்டும்

இங்கு நம் தேச பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதே ஊடகத்திற்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

இந்த கொலைகார கூட்டத்தை விடுதலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது

ஊடக நண்பர்களே அவர்களைக் கொண்டு இலங்கையில் விட்டு விட்டு காலை கழுவி விட்டு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்

ஆமா ஒரு நாட்டு பிரதமரையும் அவரை சுற்றியுள்ள பலரையும் கொன்ற குளைக்கார கூட்டத்தை சும்மா விடுதலை செய்யும் இந்திய வாழ்த்துக்கள் ஆனால் ஒரு கைக் குண்டு வைத்துருந்த குற்றவாளியை தூக்கிளிட்டு கொன்றதும் அதெ இந்திய தான் வாழ்க இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்
தியாக தலைவி அம்மையார் நளினிக்கு ட்ம்க் சார்பில் ம்ப் பதவியோ அல்லது கவர்னர் பதவியோ கொடுத்து கௌரவிக்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் என்பது கூட தெரியல போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக இந்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

By DIGITAL DESK 2

18 NOV, 2022 | 10:55 AM
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன் சிறை நன்னடத்தை, சிறையில் இருந்தபடி கல்வி கற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டியும், ஆளுநர் அவரது விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை முடிவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்ததையும் சுட்டிக்காட்டியும், உச்ச நீதிமன்றத்தால் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதை அடிப்படையாகக் கொண்டு சாந்தன், முருகன், நளினி, ரோபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் 6 பேரும் கடந்த 12ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

rajiv-gandhi-1235.jpg

இதற்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது.

சிறையிலிருந்து வெளி வந்ததற்கு பிறகு நளினி செய்தியாளர்களை சந்தித்தது உள்ளிட்டவையும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே முந்தைய தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவின் இந்திய அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு சொலிஸ்ட்டர் ஜெனரல், கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140416

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.