Jump to content

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் 

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 09:37 AM
image

வ.சக்திவேல்

 

முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு  என்பது நோக்கர்களின் கருத்தாகும்.

2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு   மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாவியும்,139 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கடற்கரையோரமும் காணப்படுகின்றன. இதில் சுமார்  56 கிலோ மீற்றர் நீளமான கடற்பரப்பு மாத்திரம்தான் மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

மொத்தமாக இம்மாவட்டத்தின் நீர் நிலைகளின் பரப்பளவு 244 சதுரக்கிலோ மீற்றர்களாகும். நாட்டின் மொத்த நிலப்பரப்பின் 4.35 வீதம் பரப்பளவைக் கொண்டமைந்துள்ள பிரதேசம் இது. இங்கு 14 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 345 கிராம சேவர்கள்  பிரிவுகளும் அமைந்துள்ளன. மாவட்டத்தில் 51,959 ஹெக்டேயர்கள் வயல் நிலப்பரப்பாக உள்ளன. 

இதன் மூலம் இங்கு மேற்கொள்ளப்படும் இருபோக நெற்செய்கை களிலுமிருந்தும் அண்ணளவாக வருடாந்தம் 349,895 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்கின்றது.

 

Poverty__4_.jpg

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரவியல் கையேட்டின்  தகவல்களின்படி  மாவட்டத்தில்   574,836 பேர் வாழ்கின்றார்கள். இவர்களில் 98,773 குடும்பங்கள் சமூர்த்தி பயனாளிகளாக  உள்ளனர்.

சமூர்த்திப் பயனாளிகளின் சேமிப்பின் மூலம் திரட்டப்பட்ட 6,200.19 மில்லியன் ரூபாய் நிதி சமூர்த்தி வங்கிகளில் உள்ளது.  அந்த நிதியில் 29,951 பேருக்கு 2,181.93 மில்லியன் ரூபாய் நிதி கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

குறைந்த கடன் தொகையாக 5,000 ரூபாவும் கூடியகடன் தொகையாக  2 மில்லியன் ரூபாய் வரையும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. வறியவர்களின் சேமிப்பாக சமூர்த்தி வங்கிகளில் உள்ள பணம் சமூர்த்திப் பயனாளிகளுக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் கடன்களாக வழங்கப்படுகின்றன. இந்நிலையிலும் இம்மாவட்டத்தில் 8.1 வீதமாக வறுமைச் சுட்டி கட்டுவதாக மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு தனி நபர் ஒருவரின் வாழ்வாதாரத்துக்கு  கடந்த ஆகஸ்ட் மாத புதிய தகவலின்படி 13,534 ரூபா செலவாகின்றது என “தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்”

அதன் உத்தியோக பூர்வ இணைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையிலுள்ள  25 மாவட்டங்களிலும், மட்டக்களப்பு மாவட்டதில் இவ்வாறு வளங்கள் அமைந்திருந்தாலும், தொடர்ந்தும் வறுமையான மாவட்டமாகத்தான் காணப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கணக்கெடுப்பின்படி 2016 ஆம் ஆண்டு 11.3 வீதமானோர் அதாவது 60,912 பேர் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களாகவும், 2019 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 20.8 வீதமானோர் அதவது 117,500 பேர் மாட்டத்தில் வறுமைக்குட்பட்ட மக்களாகக் காணப்படுவதாக “தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின்” மாவட்ட அலுவலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

போஷாக்கின்மை

மட்டக்களப்பில் 10 சத வீதமாக காணப்பட்ட நிறை குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை தற்போது 20 சத வீதமாக அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சுகுணன் தெரிவிக்கின்றார். 

கடந்த ஒரு வருட காலமாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், நிறை குறைந்த சிறுவர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த திரிபோஷா மா இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாத கால தரவுகளின் அடிப்படையில் பிள்ளைகளின் வளர்ச்சி வீதத்தில் பாரிய தொய்வு நிலை காணப்படுகிறது.  இந்த அடிப்படையில் ஒரு சந்ததி அல்லது ஒரு பரம்பரை இந்த காலப்பகுதியில் வளர்கின்ற பின்னடைவில் புத்திகூர்மை குறைந்தவர்களாக இந்த நாட்டில் உருவாக வாய்ப்புள்ளன.

Poverty__1_.JPG

சத்து மாவை நாங்கள் வெளி இடத்திலிருந்து பெற்றுக் கொடுத்திருந்தாலும் நமது மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்தி நமது சொந்த தயாரிப்பாக திரபோஷாவிற்குப் பதிலாக “தேனகபோஷா” எனும் ஒரு சத்துமாவை  வழங்கவுள்ளோம். என  வைத்திய அதிகாரி  மேலும் தெரிவிக்கின்றார்.

அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வளங்களின் பயன்பாடுகளை முறையாக பயன்படுத்துவதற்கு தகுந்த திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர வேலியே பயிரை மேயும் செயற்பாடுகளுக்கு அவர்கள் இட்டுச் செல்லக்கூடியதாக இனிமேலும் அவர்களின் செயற்பாடுகள் இருந்து விடக்கூடாது.

மக்கள் இன்னுமின்னும் கடன்படும் நிலமைக்கும், பிறரிடம் கையேந்தும் நிலமைக்கும் தள்ளப்படுவதைக் இல்லாதொழிக்க வேண்டும். காகித உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். பிரம்பு, பனை, பன், மட்பாண்ட உற்பத்திகளும் உள்ளன. எனவே கிராமங்களிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும், வீட்டுத்தோட்டங்களையும், உற்பத்திகளையும், சிறு கைத்தொழில் முயற்சிகளையும், ஏற்படுத்தப்படல் வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியில் செல்வாக்குச் செலுத்துவதற்கு மாவட்டத்தில் கணிசமான வாய்ப்புக்கள் இருந்தும், 0 5 சத வீதமான பங்களிப்பில்தான் உற்பத்திகள் இங்கு இடம்பெறுகின்றது என்று துறைசார்ந்தோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள  மட்டக்களப்பு அலுவலகத்தின் தகவலின் அடிப்படையில் இம் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் விவசாயமே முக்கிய இடம் வகிக்கின்றது. 26,767 ஹெக்ரேயர் நிலப்பரப்பு  நீர்ப்பாசன  நெற்காணியும், 42,457 ஹெக்ரேயர் மழை வீழ்ச்சி பெறக்கூடிய  நெற்காணியும் உள்ளன. மாவட்டத்தில் 2,610 கிலோமீற்றர் நிலப்பரப்பும், 244 கிலோமீற்றர் நீர் நிலைகளின் பரப்பளவும், மொத்தமாக 2,854 கிலோமீற்றர் நிலப்பிரதேசம் உள்ளன.  

மாவட்டத்தில் கடந்த 2,020 ஆம் ஆண்டு 9,565 சிசுக்கள் பிறந்துள்ளன, 2,703 மரணங்கள் நிகழ்ந்துள்ளன, 16.8 வீதம் குறைப்பிரசவமும், 4.7 குறைப்பிரசவ இறப்பு வீதமுமாகக் காணப்படுகின்றது. இங்கு 54.5 வீதமானோர் தங்கி வாழ்கின்றார்கள். 9,562 குடும்பங்களுகள் இன்னும் குடிசை வீடுகளிலேயே வழ்ந்து வருகின்றனர். 20,425 குடும்பங்கள் மண் வீடுகளிலும், 11,147 குடும்பங்கள் கிடுகு மற்றும் வைக்கோல் வேயப்பட்ட வீடுகளிலும், வாழ்ந்து வருகின்றார்கள்.

Poverty__2_.JPG

இதுபோன்று 1,724 இடங்களில் இம்மாவட்டத்திலுள்ள மக்கள், இன்னும் ஆறு மற்றும் குளங்களில் நீர் பெற்று வருகின்றனர். அதேபோன்று தற்போதைய நவீன யுகத்திலும், 43,671 குடும்பங்கள் மண்ணெண்ணெய் விளக்குளைப் பயன்படுத்துபவர்களாகவும், 16,925 குடும்பங்கள் மலசலகூடம் பாவிக்காத மக்களுமாக உள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 4.6 வீதமானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அதே ஆண்டில் 3452 பேர் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்களுக்காகச் சென்றுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

எனவே 2012,2013 ஆம் ஆண்டுகளின் 19.4 வீதமாகவிருந்து, 2016 ஆம் ஆண்டு 11.3 வீதமாகவும், காணப்பட்ட வறுமை வீதம் 2019  ஆம் ஆண்டு 20.8 வீதமாகவும் உயர்ந்துள்ளதை மாவட்டத்தின் “வறுமையின் வளர்ச்சி” என்றுதான் கூறவேண்டும்.

கிழக்கு பகுதியில் அதிக சூரிய ஒளி, காற்று, கடல் அலை, கழிவுகள், உள்ளிட்ட வளங்கள் அதிகமுள்ளன இவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம். களுகங்கையில் இருந்து பாவிக்கும் நீரைவிட மட்டக்களப்பில் 19 மடங்கு நீர் கடலுடன் கலக்கின்றது. அதபோல் மாவட்டத்தில் வருடாந்தம் கிடைக்கும் மழை வீழ்ச்சி நீரில் கூடுதலான நீர் கடலைச் சென்றடைகின்றது, இந்நீரைத் திசை திருப்பினால் அல்லது தூர்ந்துபோயுள்ள குளங்களைப் புனருத்தாரணம் செய்து மழை நீரைத் தேக்கினால், இன்னும் பல ஏக்கர் நிலங்களில் நெல்லுற்பத்தியை மேற்கொள்ள முடியும்.  

மட்டக்களப்பின் வறுமையைக் குறைப்பதற்காக கடந்த காலங்களிலிருந்து மாறி மாறி வந்த அரசாங்கங்களால் சமூர்த்தி நிவாரண வேலைத்திட்டம், சமூகப்பாதுகாப்பு வேலைத்திட்டம், சிப்தொர புலமைப் பரிசில் வேலைத்திட்டம், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம், வீட்டுத்தோட்ட அபிவிருத்தி, சௌபாக்கியா வீடமைப்பு, திரிய பியச வீடமைப்பு, மற்றும் வங்கிக்கடன் உள்ளிட்டவை அமுல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வறுமை ஒழிப்புக்காக கடந்த காலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனசக்தி, டேர்பா, நேர்ப், நியாப், நெக்டெப், போன்ற பல அரச செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

Poverty__3_.jpg

இதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்களான ஐ. நா. உதவித் திட்டம், யூ.எஸ்.எயிட், ஐ.சி.ஆர்சி, வேர்ள்ட் விஷன் உள்ளிட்ட இன்னும் பல சர்வதேச நிறுவனங்களும் பல உள்நாட்டு உதவி அமைப்புக்களும் களத்தில் இறங்கிப் பணியாற்றிருக்கின்றன. எனினும் இற்றைவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை குறைந்தபாடில்லை.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், தொடர்ந்து 30 வருடங்களாகப் பீடித்த கோர யுத்தம், வரட்சி, சுனாமி, மற்றும் வெள்ளம், சமீபத்திய கொரோனா வைரஸ் உலகாளவிய தொற்று, உள்ளிட்ட பல இடர்களினால் மக்களின் வாழ்க்கை நிலைமையில் தொடரான  தாக்கங்களும், பாதிப்புக்களும் தொடர் கதையாகிப் போனதால் வறுமையும் மக்களை விட்டபாடில்லை.

அதேவேளை மக்களைக் காரணம்காட்டி வடிவமைக்கப்படும் செயற்றிட்டங்களும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் மக்களுக்கே செலவு செய்யப்பட்டிருந்தால் இம்மாவட்ட மக்கள் தற்போது இத்தகைய வறுமை நிலையை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் என்று ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

மாவட்டத்தின் அரிசித் தேவையின் 3 மடங்கு நெல் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் விலையை அயல் மாவட்டங்களான, பொலான்னறுவை மற்றும் அம்பாறை, மாவட்ட நெல் வர்த்தகர்களும், அதுபோல் இங்கு விழைகின்ற மரக்கறிகளின் உற்பத்திகளை கல்முனை மொத்த வியாபாரிகளும், தீர்மானிக்கிறார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமங்களிலும் மக்கள் கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையில் எங்குமில்லாத வளங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் வறுமை ஊசலாடுகின்றது என்பதை எவராலும் ஜீரணிக்க முடியாது. வளங்களை முறையாகப் பகிர்ந்து, முறையாகப் பயன்படுத்தி அதன் உச்சப் பயன்களை மக்கள் பெறும் பட்சத்திலேயே வறுமையை முற்றாக மட்டக்களப்பிலிருந்து விரட்டமுடியும்.வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல்  | Virakesari.lk

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ?

கல்வியறிவின்மையும் சுயநலனும்தான். வேறென்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் 

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சுரண்டி தின்ற, தின்கின்ற சிங்கள, தமிழ் பெருச்சாளிகளும்.

கூடவே இருந்து சுரண்டுகின்ற முஸ்லீம் பெருச்சாளிகளும்.

இவர்களை எதிர்ப்பதாக காட்டி கொள்ளை அடிக்கும் உள்ளூர் தலைமை பெருச்சாளிகளும்.

சில தமிழ் பேசும் மாவட்ட மக்களை போல நான், எனது குடும்பம் என சுயநலமாக சிந்தித்து, கிராமம், கிராமமாக புலம் பெயராமல் இனம், பிரதேசம், மதம் என நினைத்து போராடும் குணமும்.

இலகுவில் உணர்சிவசப்பட்டு இனம், பிரதேசம், மதம் என்ற கோசங்கள்பால் இழுபடுவதும்.

முதன்மை காரணங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

 

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ?

கல்வியறிவின்மையும் சுயநலனும்தான். வேறென்ன ? 

 

5 hours ago, goshan_che said:

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சுரண்டி தின்ற, தின்கின்ற சிங்கள, தமிழ் பெருச்சாளிகளும்.

கூடவே இருந்து சுரண்டுகின்ற முஸ்லீம் பெருச்சாளிகளும்.

இவர்களை எதிர்ப்பதாக காட்டி கொள்ளை அடிக்கும் உள்ளூர் தலைமை பெருச்சாளிகளும்.

சில தமிழ் பேசும் மாவட்ட மக்களை போல நான், எனது குடும்பம் என சுயநலமாக சிந்தித்து, கிராமம், கிராமமாக புலம் பெயராமல் இனம், பிரதேசம், மதம் என நினைத்து போராடும் குணமும்.

இலகுவில் உணர்சிவசப்பட்டு இனம், பிரதேசம், மதம் என்ற கோசங்கள்பால் இழுபடுவதும்.

முதன்மை காரணங்கள்.

நல்ல தேடல், அனைத்து யாழ்கள உறவுகளிடமும் இதற்கான வேறுபட்ட பார்வை இருக்கும் என நம்புகிறேன்.

கோசான் நீங்கள் கூறுவது போல நிகழாமல் இருக்க உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினால் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?

தேவையினை விட கூடுதலான உற்பத்தி அதிகரிக்கும் போது தானாக விலை குறையும் அதனால் உற்பத்தியாளர் நட்டமடைவர், 90 இலங்கை அரசின் பொருளாதார தடையினை எதிர்கொள்ள மேற்கொண்ட பதில் நடவடிக்கையின் போது 91 காலப்பகுதியில் இதே நிலை யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டது.

அப்போது அதற்கு மாற்றீடாக ஒரு சந்தை படுத்தும் சபை ஒன்று உருவாக்கி அதற்கு உற்பத்தியாளருக்கு அடிப்படை இலாபத்தினை உறுதி செய்யவும் அதிகமான பொருளை களஞ்சியபடுத்த தீர்மானம் ஒன்றை உற்பத்தியாளர்களிடம் முன் வைக்கப்பட்ட போது அதனை உற்பத்தியாளர்கள் நிராகரித்து விட்டார்கள் (இது கற்பிதன் நிங்கள் கூறிய காரணம்).

பொதுவாக உற்பத்தியாளர்கள் மிகவும் இறுக்கமான நிதி பின்புலம் கொண்டவர்கள், ஒரு தடவை நட்டம் ஏற்பட்டால் (இயற்கை பேரிடர், அதிகரித்த உற்பத்தியினால் விலை வீழ்ச்சி) அவர்கள் கடனுக்குள் தள்ளப்படும் நிலை உருவாகும், அதன் பின் அவர்கள் மீள எழ முடியாதவாறு கந்து வட்டிகாரர்கள் பார்த்து கொள்வார்கள்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விவசாயிகள் தமது பொருள்களுக்கு ஏற்படும் நட்டத்தினை Future contract hedge மூலம் தவிர்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

 

வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ?

கல்வியறிவின்மையும் சுயநலனும்தான். வேறென்ன ? 

இது தவறான கருத்து ...தற்போது அவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் .

சுயநலனா அவர்களுக்கா?...உங்களால் தான் அவர்கள் அழிந்து போனார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

1) இது தவறான கருத்து ...

2) தற்போது அவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் .

3) சுயநலனா அவர்களுக்கா?...உங்களால் தான் அவர்கள் அழிந்து போனார்கள் 

1) நிச்சயமாக இல்லை. மட்டக்களப்பு என்பது வெறுமனே மட்டக்களப்பு நகர்ப்பகுதி மட்டுமே அல்ல. நகரத்திற்கு அப்பாலுள்ள பகுதிகள்தான் மட்டக்களப்பின் பெரும்பகுதி. அங்கேதான் மட்டக்களப்பின் அரைப்பங்கினருக்கும் அதிகமானோர் வாழ்ந்துவருகிறார்கள். அங்கேதான் வறுமையும் கல்வியின்மையும் அதிகம். குறிப்பாக எல்லைக் கிராமங்களிளின் நிலை மிகவும் மோசமானது. 

2) தற்போது எனும் தங்களின் கூற்றே எனது கருத்தைச் சரி எனக் கூறி நிற்கிறது. 

3) நீண்ட நாட்களின்பின்னர் கண்டது மகிழ்ச்சி. சண்டை வேண்டாமே? 😀

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இது தவறான கருத்து ...தற்போது அவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் .

சுயநலனா அவர்களுக்கா?...உங்களால் தான் அவர்கள் அழிந்து போனார்கள் 

ரதி வறுமைக்கான காரணமாக நீங்கள் கருதும் காரணங்கள் என்ன என்பதை உங்களிடமும், தனியிடமும் அறிய ஆவல்.

https://www.ig.com/en/trading-strategies/japanese-candlestick-trading-guide-200615

இந்த மெழுவர்த்தி ஆய்வு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய அரிசி விற்பனையாளர்களால் அரிசியின் விலையினை கணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது, தற்போது பங்கு வர்த்தகம் போன்ற அனைத்துவிதமான நிதி வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது.

விவசாய உற்பத்தி பொருள்கள் அத்தியாவசிய பொருள்கள் எனும் கட்டமைபிற்குள் வரும், விலை மாற்றம் பெரும்பாலும் கேள்வியில் தாக்கம் செலுத்தாது அதனால் உற்பத்தியாளர்களின் மிகுதியான உற்பத்தியினை சந்தைபடுத்துவதற்கு புலம்பெயர் தமிழர் முன்வரவேண்டும், உதாரணமாக புலம்பெயர் தமிழர்கள் இந்திய பாகிஸ்தான் அரிசி வகைகளுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் அரிசியினையும் வாங்க முன்வந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

 

நல்ல தேடல், அனைத்து யாழ்கள உறவுகளிடமும் இதற்கான வேறுபட்ட பார்வை இருக்கும் என நம்புகிறேன்.

கோசான் நீங்கள் கூறுவது போல நிகழாமல் இருக்க உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினால் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?

தேவையினை விட கூடுதலான உற்பத்தி அதிகரிக்கும் போது தானாக விலை குறையும் அதனால் உற்பத்தியாளர் நட்டமடைவர், 90 இலங்கை அரசின் பொருளாதார தடையினை எதிர்கொள்ள மேற்கொண்ட பதில் நடவடிக்கையின் போது 91 காலப்பகுதியில் இதே நிலை யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டது.

அப்போது அதற்கு மாற்றீடாக ஒரு சந்தை படுத்தும் சபை ஒன்று உருவாக்கி அதற்கு உற்பத்தியாளருக்கு அடிப்படை இலாபத்தினை உறுதி செய்யவும் அதிகமான பொருளை களஞ்சியபடுத்த தீர்மானம் ஒன்றை உற்பத்தியாளர்களிடம் முன் வைக்கப்பட்ட போது அதனை உற்பத்தியாளர்கள் நிராகரித்து விட்டார்கள் (இது கற்பிதன் நிங்கள் கூறிய காரணம்).

பொதுவாக உற்பத்தியாளர்கள் மிகவும் இறுக்கமான நிதி பின்புலம் கொண்டவர்கள், ஒரு தடவை நட்டம் ஏற்பட்டால் (இயற்கை பேரிடர், அதிகரித்த உற்பத்தியினால் விலை வீழ்ச்சி) அவர்கள் கடனுக்குள் தள்ளப்படும் நிலை உருவாகும், அதன் பின் அவர்கள் மீள எழ முடியாதவாறு கந்து வட்டிகாரர்கள் பார்த்து கொள்வார்கள்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விவசாயிகள் தமது பொருள்களுக்கு ஏற்படும் நட்டத்தினை Future contract hedge மூலம் தவிர்ப்பார்கள்.

மேலே கற்ப்ஸ் கூறியிருப்பது போல் மட்டகளப்பில் நகரம், நகரத்தில் இருந்து காரைதீவு வரையான கடலோர ஊர்களில் இருக்கும் நிலமை வேறு, நகருக்கு மேற்கே  திருகோணமலை வீதியின் இருபுறமும், காரை தீவுக்கு தெற்கான கடலோர ஊர்கள், படுவான்கரை என அழைக்கப்படும் வாவியின் மறுகரையில் உள்ள பெரும்பகுதி ஊர்களின் நிலை வேறு.

நான் மேலே சொன்ன ஊர்களில் இருக்கும் விவசாய நிலம், பண்ணைகள், ஆதாரம் தரகூடிய வளங்கள் பல அந்த ஊர் மக்களின் கையில் இல்லை. அப்படி அந்த மாவட்டத்தவரின் கையில் இருந்தாலும் அது போடியார்கள் என படும் ஒரு சிறு கூட்டத்திடமே உள்ளது.

கட்டுரை சொல்வது போல பல வளங்கள் இருந்தாலும் அந்த வளங்களில் அந்த மக்கள் பலர் பங்குதாரராக இல்லை. அநேகம் பேர் வேலையாட்கள் என்ற நிலையோடு சரி. அதிகம் கூடினால் குத்தகை எடுப்போர். அவ்வளவுதான்.

மீன்பிடி வாடிகளிலும் இதுவே நிலமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

புலம்பெயர் தமிழர்கள் இந்திய பாகிஸ்தான் அரிசி வகைகளுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் அரிசியினையும் வாங்க முன்வந்தால் நல்லது.

நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியானதொரு யோசனை. புலம்பெயர் தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். கேரளாவிலிருந்து 'பூநகரி மொட்டைக்கறுப்பன்' என்ற பெயரில் அரிசி வருகிறது. எங்கள் மண்ணிற்குரிய பாரம்பரிய நெல்லினம் எப்படி எடுத்தாளப்படுகிறது. எனவே எமது தாயக உற்பத்திகளைகளை உரியமுறையிற் களஞ்சியப்படுத்துவதோடு, புலத்திலே சரியான முறையிலான சந்தைப்படுத்தலை மேற்கொண்டால் தாயகம் பொருளாதார பலத்தைப்பெறுவதோடு, புலத்துக்கும், தாயகத்துக்கும் ஒரு நெருக்கமான உறவு வளர்வதோடு, மற்றவர்களது கையை எதிர்பார்க்கும் நிலையையும் மாற்றலாம்.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியானதொரு யோசனை. புலம்பெயர் தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். கேரளாவிலிருந்து 'பூநகரி மொட்டைக்கறுப்பன்' என்ற பெயரில் அரிசி வருகிறது. எங்கள் மண்ணிற்குரிய பாரம்பரிய நெல்லினம் எப்படி எடுத்தாளப்படுகிறது. எனவே எமது தாயக உற்பத்திகளைகளை உரியமுறையிற் களஞ்சியப்படுத்துவதோடு, புலத்திலே சரியான முறையிலான சந்தைப்படுத்தலை மேற்கொண்டால் தாயகம் பொருளாதார பலத்தைப்பெறுவதோடு, புலத்துக்கும், தாயகத்துக்கும் ஒரு நெருக்கமான உறவு வளர்வதோடு, மற்றவர்களது கையை எதிர்பார்க்கும் நிலையையும் மாற்றலாம்.
நன்றி

உண்மைதான்.

Link to comment
Share on other sites

விடியலைத் தேடும் மட்டக்களப்பு – மேனன்

 

விடியலைத் தேடும் மட்டக்களப்பு

மேனன்

விடியலைத் தேடும் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், யுத்த காலத்திற்கு முன்பான, யுத்த காலத்திற்கு பின்பான காலப்பகுதியென இரு பகுதிகளாக பிரிக்கமுடியும். யுத்த காலப்பகுதியில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்கள், யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் மற்றவரில் தங்கிவாழும் நிலையினை அதிகளவில் காணமுடிகின்றது.

இந்தப் பிரச்சினையானது, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுவதாக அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடியலைத் தேடும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதியானது, இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. இப்பகுதியை இலக்கு வைத்து இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும் படையெடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இந்த வீதியில் உள்ள மக்கள் மத்தியில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 

அதிலும் வறுமை காரணமாக எழும் பிரச்சினைகள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பினையே கேள்விக்குறி யாக்குவதுடன், அவர்களின் எதிர்காலம் நோக்கிய செயற்பாடுகளும் மிகவும் பாதிக்கப்படும் நிலைமைகள் உருவாகியுள்ளதாக அங்குள்ளவர்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

குறிப்பாக செங்கலடி – பதுளை வீதியை எடுத்துக் கொண்டால், சுமார் 25இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. படுவான்கரையாக கணிக்கப்படும் இப்பகுதியானது, செங்கலடி-தொடக்கம் புல்லுமலை வரையான மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக கணிக்கப்படுகின்றது. இப்பகுதியில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி, விவசாயம், சேனைப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதானமாக கொள்ளப்படுகின்றன.

 

இப்பகுதியில் உறுகாமம், கித்துள் போன்ற பிரதான குளங்களும், பல பாய்ச்சல் குளங்களும் காணப்படுவதன் காரணமாக இப்பகுதியானது என்றும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது.

ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. குறிப்பாக வறுமை காரணமாக இங்குள்ள இளைஞர்கள் தவறான பாதைகளுக்கு வழிநடத்தப்படுவதுடன், இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகளில் இடைவிலகல் நிலை அதிகரித்து வருவதாகவும் அங்குள்ள பொது அமைப்புகளினால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் செங்கலடி – பதுளை வீதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக, இந்த நிலைமை தொடர்ச்சியாக ஏற்படுவதாகவும், சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துவருவதுடன் போதைப்பொருள் பாவனையும் இளம் சமூகம் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

 

செங்கலடி – பதுளை வீதியில் மண் அகழ்வு என்பது சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும், சட்டத்திற்குப் புறம்பான வகையிலும், சட்டத்திற்கு உட்பட்டு அதனை சட்டத்திற்கு புறம்பான வகையிலுமாக இந்த மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

விடியலைத் தேடும் மட்டக்களப்பு

இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான கியூப் மணல்கள் அகழப்பட்டு, இலங்கையின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுவதுடன், சில வேளைகளில் வெளிநாடுகளுக்கும் கடத்தப் படுகின்றது. இந்த மண் அகழ்வு காரணமாக இப்பகுதியில் உள்ள ஒரு பகுதியினர் வேலைவாய்ப்பினைப் பெற்றாலும், அதன் ஊடாகவே சமூகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருவதாகவும், இந்த மண் அகழ்வு காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு எந்தவிதமான நன்மையுமில்லை யெனவும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த மண் அகழ்வு நடவடிக்கைகளில் கூடுதலாக வயது குறைந்த இளைஞர்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். ஆறுகளில் இறங்கி மண் அள்ளிக்கொண்டு வந்து வெளியில் குவிக்கவேண்டியது இவர்களின் வேலையாக இருக்கின்றது. அதிகளவான மண் குவிப்பவர்களுக்கு அதிகளவான சம்பளம் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா தொடக்கம் ஐந்தாயிரம் ரூபா வரையில் இந்த மண் அகழ்வினால் ஒரு இளைஞர் வருமானம் பெறும் நிலை காணப்படுகின்றது.

இந்தப் பகுதியைப் பொறுத்த வரையில், அதிகளவான வறுமையில் உள்ளவர்களும், கல்வியறிவு குறைந்தவர்களும் அதிகளவு உள்ள பகுதி என்ற காரணத்தினால், சிறுவர்கள் கல்வி ரீதியாக ஊக்கப்படுத்தல் என்பது கிராம மட்டத்தில் குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாக இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மண் மாபியாக்கள் இவ்வாறான சிறுவர்களைப் பயன்படுத்தி இந்த மண் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கின்றனர்.

இந்த மண் அகழ்வு வேலையானது, மிகவும் சிரமம்மிக்க வேலையென்ற காரணத்தினால், இந்த மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகும் சம்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. போதைப்பொருள் பாவித்துவிட்டு மண் அகழ்வு முன்னெடுக்கும்போது, அதிளவில் மண்அகழ முடிவதன் காரணமாக இளையோர் போதைப் பழக்கதிற்கு மண்மாபியாக்களினால் தூண்டப்படும் நிலையும் காணப்படுகின்றது.

விடியலைத் தேடும் மட்டக்களப்பு

இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் அதிகளவான பணப்புழக்கம் காணப்படுவதால், ஏனைய சிறுவர்களும் தொழில் துறைக்குள் நுழைவதன் காரணமாக பாடசாலை இடை விலகல் நிலை அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

“செங்கலடிச் சந்தியிலிருந்து கித்துள் சந்தி வரையான சுமார் 16 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட பிரதான வீதியில் சின்னவன்துறை, உகந்தனாறு, கொக்குறுந்திமடு, கல்வாடித்துறை ஆகிய பகுதிகளில் பிரதான வீதியிலிருந்து உட்பக்கமாக எட்டுக் கிலோ மீற்றருக்கு அப்பால் மண் அகழ்வுகள் நடைபெறுகின்றன.

இப்பகுதியில் சட்ட ரீதியானதும், சட்ட ரீதியற்றதுமான மண் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதிளவான பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவதுடன், அவர்கள் போதைக்கும் அடிமையாகும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் மண் அகழ்வில் ஈடுபடும் இளைஞர்கள் பாடசாலை மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்தி இளவயதுத் திருமணமும் அதிகரிக்கின்றது. அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை இடைநிறுத்தி, மண் அகழ்வில் ஈடுபடுவதன் காரணமாக மாணவர்கள் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக” இப்பகுதியில் செயற்பட்டு வரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிராமிய இணைப்பாளர் சாரதா தெரிவித்தார்.

 “மண் அகழ்வில் ஈடுபடும் இளைஞர்கள் தொழில் இல்லாத காலத்தில் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக அன்றாட வருமானத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் களவாடப்படும் சம்பவங்களும் இப்பகுதியில் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கித்துள், சர்வோதய நகர் ஆகிய பகுதிகளில் ஒரு மாதத்தில் மட்டும் 28மாடுகள் களவாடப்பட்டுள்ளது”எனவும் அவர் தெரிவித்தார். “30வருட யுத்த காலத்தினை நாங்கள் அனுபவித்துள்ளோம்.

https://www.ilakku.org/batticaloa-looking-for-dawn/

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.