Jump to content

இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுகிறது – மு.க.ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுகிறது – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2022 நவம்பர் 16ஆம் திகதி 14 தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து, அவர்களின் இயந்திர படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்கள், அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் படகுகளை இலங்கை கடற்படை சேதப்படுத்துவதும் மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டதாக தமிழக முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தின் 100 படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1311119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் கண் பார்வை இழந்ததாக தமிழக மீனவர் புகார் - என்ன நடந்தது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க  சென்றபோது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் படகில் ஏறி நடத்திய தாக்குதலில் வலது கண் நரம்பு பாதிக்கப்பட்டு தாம் முற்றிலும் கண் பார்வையை இழந்துள்ளதாக கூறுகிறார் தங்கச்சிமடம் மீனவர் ஒருவர்.

கண்பார்வை இன்றி தவிக்கும் தமக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அந்த மீனவர் குடும்பத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் தாக்குதல்

கச்சத்தீவுக்கு தனுஷ்கோடிக்கும் இடையே மீனவர்கள் மீன் பிடித்து  கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர்  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தார். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நாளா புறமும் சிதறி ஓடினர்.

 

அப்போது அந்தோணியார் அடிமை  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஏறிய  இலங்கை கடற்படை வீரர்கள் படகில் இருந்த எட்டு மீனவர்களையும் சரமாரியாக தாக்கி படகில் இருந்த மீன் பிடி சாதனங்கள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தி படகோட்டி ஜான்சன் மீது தாக்குதல் நடத்தியதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாக மீனவர் ஜான்சன் தெரிவிக்கிறார்.

பின்னர்  செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பிய மீனவர் ஜான்சன் விசாரணைக்கு அஞ்சி மீன் வளத்துறை மற்றும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை ஜான்சனுக்கு கண் வலி அதிகமானதால் சிகிச்சைக்காக மதுரை சென்று கண் மருத்துவமனையில் ஸ்கேன்; செய்து பார்த்தபோது ஜான்சன் வலது கண்ணில் உள்ள முக்கிய நரம்பு இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கியதில் சிதைந்துள்ளதாகவும், இனிமேல் அந்த கண்ணில் அறுவை சிகிச்சை செய்தாலும் கண் பார்வை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவருக்கு கண் பார்வை பாதிக்க காரணம்

இதனால் மனமுடைந்த மீனவர் ஜான்சன் வீட்டிற்கு திரும்பினார். இலங்கை கடற்படை தாக்குதலில் முழுமையாக கண்பார்வை இழந்த மீனவர் ஜான்சனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கண்பார்வையை இழந்த மீனவர் தனது குடும்பத்துடன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை காரணமாக தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லவதால் ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் இலங்கை கடற்படை தாக்கியதில் மீனவர்கள் முழுமையாக கண் பார்வை இழந்ததுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கண் பார்வையை இழந்த மீனவர்

கண் பார்வை இன்றி வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வேன்?

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் ஜான்சன் பிபிசி தமிழிடம்  பேசுகையில், "கடந்த திங்கட்கிழமை காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று  மீன் பிடிக்க கடலுக்குள் சென்றோம்.

இரவு 10 மணி அளவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது; இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று படகின் மீது மோதியது. பின்னர் அந்த ரோந்து படகில்; இருந்த இலங்கை கடற்படை  வீரர்கள் படகில் இருந்த  மீன்களை அள்ளிக்கொண்டு படகில் இருந்த எட்டு மீனவர்களையும்  கயிறு மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கினர்.

படகின் ஓட்டுநர் நான் என்பதால் என்னை கடுமையாக தாக்கினர். இதில் எனது வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த பின்னர்; கண் வலி அதிகமானதால் புதன்கிழமை காலை மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது கண் பார்வைக்கு வரும் முக்கிய நரம்பு பகுதி சிதைந்துள்ளது ஒரு வார காலம் மருந்து சாப்பிட்டு பார்த்து ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்யும் போது பார்வை கிடைக்கவில்லை என்றால் முழுமையாக கண் பார்வை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பார்வையை இழந்தால் எப்படி என்னுடைய மூன்று குழந்தைகளையும் என் மனைவியை காப்பாற்ற முடியும். மத்திய , மாநில அரசுகள் இலங்கை கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுத்து தன்னுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ செலவுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்; என மீனவர் ஜான்சன் கோரிக்கை வைத்தார்.

 

கண் பார்வையை இழந்த மீனவர்

இலங்கை கடற்படையால் விதவைகளான மீனவப் பெண்கள்

இது குறித்து ஜான்சன் மனைவி மேரி பிபிசி தமிழிடம் பேசுகையில், மீன்பிடி தொழிலுக்காக சென்ற என் கணவரை இலங்கை கடற்படை தாக்கி  தற்போது கண் பார்வை முற்றிலும் இழந்துள்ளார். கண்பார்வையற்ற கணவரை வைத்து எப்படி எங்கள் குடும்பத்தை நடத்த முடியும்.

இதே போல் எங்கள் மீனவ கிராமம்மான  தங்கச்சிமடத்தில் வாழும் பல பெண்கள் இலங்கை கடற்படையினரால் கணவரை இழந்து விதவை களாகவும், ஊனமுற்ற கணவர்களுடன்  வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு பயந்து மீன்பிடி  தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழிலை அழியும்  நிலையில் உள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் இங்குள்ள மீனவ  பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக மேரி  தெரிவித்தார்.

10 வருடத்திற்கு முன் கடலுக்கு சென்ற மகன் இதுவரை கரை திரும்பவில்லை:

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய ஜான்சன் தாய் மடிய ராணி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எனது இளைய மகன் இதுவரை கரை திரும்பாமல் கடலில் காணாமல் போய் விட்டான்.

இந்நிலையில் எனது குடும்பத்தை கவனித்து வந்த  வந்து எனது மூத்த மகனும் கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படை தாக்கியதில்  கண் பார்வை இழந்துவிட்டார்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு கணவர் இல்லை எனது மகனை நம்பி தான் நானும் அவரது குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில் கண் பார்வை பாதிக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசு உடனடியாக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.; எனது மகனுக்கு உதவி செய்ய வேண்டும் என தாயார் மடிய ராணி கேட்டுக்கொண்டார்.

படகில் தவறி விழுந்ததால் கண்ணில் ஏற்பட்ட காயம்

இலங்கை கடற்படை தாக்கியதால் மீனவர் கண் பார்வை இழந்ததாக மீனவர் கூறுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்  வர்கீஸ்யிடம் பிபிசி தமிழ் கேட்ட போது பேசிய அவர்,  ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கும்  தனுஷ்கோடிக்கு அருகே உள்ள பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படை எச்சரித்து சென்ற படகில் இருந்த  தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் படகில் கீழே விழுந்ததில்  வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்டதன் காரணமாக ராமேஸ்வரத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டது.

மீனவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் ஒரு வார காலம் முடிந்து அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக் மீனவர் குடும்பத்திடம் இருந்து தகவல்  பெறப்பட்டது.

ராமேஸ்வரம் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்கள் மீனவரின் வீட்டிற்கு நேரில் சென்று மீனவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மருத்துவரின் அறிக்கை பெற்று நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடும்பத்தினர் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை - இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்குதல் நடத்தவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா  தெரிவிக்கின்றார்.

இலங்கை கடற்படை அதிகாரிகளின் தாக்குதலினால் தமிழக மீனவர் ஒருவரின் பார்வை இல்லாது போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வாவிடம் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ், குறித்த தினத்தில் 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், வெற்றிலைகேணி, பகுதியில் வைத்தே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தமது விரைவு படகுகளை பயன்படுத்தி, தமது கடற்பரப்பிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்திய மீனவர்கள் மீது தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்குதல் நடத்தவில்லை என கூறிய அவர், தாக்குதல் நடத்துவதற்கான தேவை தமக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, கடல் வளங்களை அழிப்பதுடன், தமது நாட்டு மீனவர்களின் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இதனால், தமது நாட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும், தமது நாட்டு மீனவர்களின் தொழிலை பாதுகாக்கும் நோக்கிலும் தமது கடற்பரப்பிற்குள் வருகைத் தரும் மீனவர்களை விரட்டுதல் மற்றும் கைதுசெய்யும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை மேலும் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cl5vd99ez78o

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.