Jump to content

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 03:05 PM
image

இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலனறுவையில்  ஏழு சிவாலயங்களை நிறுவினான்.

இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் மொழியே இருந்தது. 

நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

வரலாற்றை நோக்குகின்ற போது பத்தாம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இந்தியாவில் இருந்து படையெடுத்த இராஜராஜ சோழன் இலங்கை தலைநகராக இருந்திருந்த அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்தினான்.

பின்னர் போரில் அனுராதபுரம் வீழ்ச்சியுற தெற்கே உள்ள பொலனறுவையை கைப்பற்றி தலைநகரமாக்கினான்.

SAVE_20221112_162724.jpg

1007 காலப் பகுதியில் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன்  இலங்கையை கைப்பற்றி முழு இலங்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.

அக் காலத்தில் ராஜேந்திர சோழன் அங்கு ஏழு சிவன் ஆலயங்களை உருவாக்கினான். அது மாத்திரம் அல்ல இலங்கையின் பல பாகங்களிலும் ஆலயங்களை அமைத்ததில் ராஜேந்திர சோழனுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.

1070 ஆண்டு வரை ராஜேந்திரசோழன் அதனை சிறப்பாக பராமரித்து வந்தான். இலங்கையில் 77 ஆண்டுகள் சோழர் ஆட்சி காலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

SAVE_20221112_162432.jpg

அதன் போது இலங்கையில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்த ஆலயங்களின் எச்சங்கள் பொலன்னறுவை நகரில் காணப்படுகிறது.

 கடந்த வாரம் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற பொழுது அதனை காண முடிந்தது. அதன் சில பாகங்களை இங்கு நீங்கள் காணலாம்.

சோழர்கள் ஆட்சிகாலத்தில் "ஜனநாதமங்கலம் " என பொலனறுவை அழைக்கப்பட்டது. அந்தளவிற்கு இலங்கையில் சைவசமயம் மேலோங்கி இருந்தது.

SAVE_20221112_162251.jpg

SAVE_20221112_162647.jpg

SAVE_20221112_162352.jpg

SAVE_20221112_162425.jpg

SAVE_20221112_162339.jpg

SAVE_20221112_162329.jpg

SAVE_20221112_162448.jpg

SAVE_20221112_162521.jpg

SAVE_20221112_162601.jpg

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நொச்சி.

இதை விட புராதனமான, சோழர் கருங்கல் கட்டிடகலைக்கு மாற முன்னம் கட்டிய செங்கல் சிவாலயம் ஒன்று குருநாகல மாவட்டத்தில் இருக்கிறதாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக மேலோட்டமாக தெரிந்தாலும்,

1. சோழர்கள் இராஜராஜன், இராஜேந்திரன் காலத்தில் முதல் முதலாக இலங்கை வந்தவர்கள் இல்லையே ? கிமு 205 இலேயே எல்லாளன் பொலநறுவையில் ஜனநாதமங்களம் என்ற தலை நகரை நிருமாணித்து ஆட்சி செய்தார் என சிங்கள் நூல்களே ஏற்கிறனவே?

2. இதை கூட சோழர் படை எடுப்பு என்று பார்த்தால் - அதற்கு முன்னும் தேவநம்பிய தீசன் என்ற தமிழ் மன்னந்தானே இலங்கையில் பெளத்தத்தை ஏற்ற முதல் மன்னன்? அவர் பெளத்தத்தை தழுவிய மிகுந்தலை (மிகிந்தலே) வடமத்திய மாகாணத்தில்தானே உள்ளது?

3. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் (கிமு 367) ஆண்ட தலைநகர் அனுராதபுரம் அல்லவா?

மேலே நான் சொன்னவை எல்லாமுமே மஹாவம்சம் கூட ஏற்கும் தரவுகள்.

ஆகவே இலங்கையில் சிங்கள இனம், மொழி தோன்ற முன்பே தமிழர்களும், தமிழ் மொழியும், ஆட்சி பீடம் ஏறிவிட்டன, குறிப்பாக வடமத்திய மாகாணத்தில்.

உண்மையில் வடக்கு, கிழக்கு, புத்தளத்தை போல தமிழர் பாரம்பரிய மண்தான் வடமத்திய மாகாணமும்.

ஆனால் இப்போ நாம் அவற்றை இழந்து விட்டோம் (சேர்பியர்கள் கொசோவொவை இழந்தது போல்). 

ஆகவே சோழர்கள் தமிழ் மண்ணில்தான் கோயில் கட்டினார்கள். அதேபோல் விகாரைகளையும் போசித்தே வந்துள்ளார்கள்.

உண்மையில் இடைக்கால சோழர்கள் மிலேச்சர்களாக இருந்திருந்தால் இலங்கை தீவில் இருந்து பெளத்த மதத்தையும், சிங்கள இனத்தையும் வழித்து துடைத்திருப்பார்கள். ஆனால் அப்படி செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

@goshan_cheசோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

முன்னோர் செய்த பாவங்கள் இப்போது பலிக்கின்றதோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2022 at 06:39, island said:

சோழர்கள் செய்ததும் ஒருவகையில் ஆக்கிரமிப்பு தானே. இன்று சிங்கள பெளத்த பேரினவாதிகள் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு முன்னோடி இந்த சோழர்கள் தானே! 

 சரியாகச் சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.