Jump to content

“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை”: அமெரிக்கா அறிவிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை”: அமெரிக்கா அறிவிப்பு

Screenshot-2022-11-19-at-7.56.08-AM.png

உக்ரைன் மீது ரஷியா மாதக்கணக்கில் போர் செய்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “(ரஷிய அதிபர் விளாடிமிர்) புடின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு அடுத்த சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.

“பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதையும் ஜெலென்ஸ்கி தீர்மானிக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்” என்று கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், “உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷியர்களுடன் கலந்துரையாடப் போவதில்லை என்று அவர் கூறினார். “அந்த உரையாடல்கள் நடக்கவில்லை. ஏனெனில் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். “நீங்கள் ஜெலென்ஸ்கியைப் குறை கூற முடியாது”. ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=231051

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரெஞ்சு செய்தி  மற்றும்  அதனைத்தொடர்ந்த ஆய்வுகளின்படி

ரசியா தனது  அயல் நாடுகள்  ஊடாக                                                                                                                    ஐரோப்பிய மக்களால் இனிப்பாவனைக்கு உதவாது என ஒதுக்கப்பட்ட பழைய இரும்பு  மற்றும் தகரப்பொருட்களை (குளிர்சாதனப்பெட்டி மற்றும் ........???)  வாங்குகிறார்களாம். இதுவரை 7 மில்லியன்  தொன் பொருட்கள் வாங்கப்பட்டு  ரசியாவுக்குள் கொண்டு  வரப்பட்டுள்ளனவாம்.

இதன்படி போருக்கான ஆயுத  தயாரிப்பில் பின் தங்கியுள்ளார்கள்.  இனி உக்ரேனின்  கை  தான் வலுவடையும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

39 minutes ago, விசுகு said:

 நீண்ட கால அமைதிக்கான சமாதான பேச்சுவார்த்தைக்கு செலன்ஸ்கி கனடாவின் உதவியை நாடி உள்ளார்.

https://www.theglobeandmail.com/canada/article-ukrainian-president-zelensky-calls-on-canada-to-help-with-long-term/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

 நீண்ட கால அமைதிக்கான சமாதான பேச்சுவார்த்தைக்கு செலன்ஸ்கி கனடாவின் உதவியை நாடி உள்ளார்.

https://www.theglobeandmail.com/canada/article-ukrainian-president-zelensky-calls-on-canada-to-help-with-long-term/

அடுத்து கிரிமியை உக்ரைன்  படைகள்  கைப்பற்றும்

அத்துடன் ரசியா பேச்சுக்கு  வரும்

அல்லது  போர் முடிவுக்கு  வரும் என்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

 நீண்ட கால அமைதிக்கான சமாதான பேச்சுவார்த்தைக்கு செலன்ஸ்கி கனடாவின் உதவியை நாடி உள்ளார்.

https://www.theglobeandmail.com/canada/article-ukrainian-president-zelensky-calls-on-canada-to-help-with-long-term/

எங்கள் போராட்டத்தை அழித்ததுபோல இரஸ்யாவை அழிக்க முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைதான் இந்தப் போரை நிறுத்துவதற்கான  ஒரே ஒரு வழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஆயுதங்களை கீழே வைத்து, சரண் அடையும் மட்டும்…
அதி உத்தமர், மாண்பு மிகு புட்டின் ஐயா அவர்கள் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது.

அது மட்டும், இந்த வின்ரர் முழுக்க… ரஷ்யா, உக்ரைன் மீது…
வாண வேடிக்கை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஆயுதங்களை கீழே வைத்து, சரண் அடையும் மட்டும்…
அதி உத்தமர், மாண்பு மிகு புட்டின் ஐயா அவர்கள் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது.

அது மட்டும், இந்த வின்ரர் முழுக்க… ரஷ்யா, உக்ரைன் மீது…
வாண வேடிக்கை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
ஐயா பழைய மத்தாப்புக்களை  வைத்து  தகரம் உருட்ட🤣

உக்ரைன் வானிலும்  தரையிலும்  கடலிலும்  வேடிக்கை  காட்டும்போலத்தான் களநிலை😂

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை”: அமெரிக்கா அறிவிப்பு

Screenshot-2022-11-19-at-7.56.08-AM.png

உக்ரைன் மீது ரஷியா மாதக்கணக்கில் போர் செய்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “(ரஷிய அதிபர் விளாடிமிர்) புடின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு அடுத்த சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.

“பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதையும் ஜெலென்ஸ்கி தீர்மானிக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்” என்று கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், “உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷியர்களுடன் கலந்துரையாடப் போவதில்லை என்று அவர் கூறினார். “அந்த உரையாடல்கள் நடக்கவில்லை. ஏனெனில் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். “நீங்கள் ஜெலென்ஸ்கியைப் குறை கூற முடியாது”. ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=231051

ரைட்டு……

அப்ப அமெரிக்கா சமாதானமாக போகும் படி செலனஸ்கியை போட்டு நசுக்க ஆரம்பித்து விட்டது……

இதை வாசிக்க அர்ஜூன் அண்ணா டெல்லி பேச்சுவார்த்தையில் இந்தியர் தம்மிடம் நடந்து கொண்ட விதம் பற்றி சொல்லியதே நினைவு வருகிறது.

நேரடியாக சொல்ல மாட்டர்கள். ஊடகத்துகு என்ன சொலிகிறார்களோ,  அதன் நேர் எதிர் நிலையைதான் நம்மிடம் எதிர்பார்த்தார்கள்.

செலன்ஸ்கி யை இப்போ அமெரிக்கா அசோகா ஹோட்டலில் வைத்திருக்க ஆரம்பித்து விட்டது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.