Jump to content

காசி தமிழ்ச் சங்கமம் யோசனை மோதிக்கு எப்படி வந்தது என வியக்கிறேன்: இளையராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசி தமிழ்ச் சங்கமம் யோசனை மோதிக்கு எப்படி வந்தது என வியக்கிறேன்: இளையராஜா

 

மோதி

19 நவம்பர் 2022, 10:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

"பெருமை மிகுந்த காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தும் யோசனை பிரதமர் நரேந்திர மோதிக்கு எப்படி வந்தது என்று வியந்துகொண்டிருக்கிறேன்" என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் நூற்றாண்டு கால தொடர்பு நீடித்து வருவது பெருமை தருவதாக உள்ளது என்றும் காசியில்  தமிழ்  சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோதி நடத்த முடிவு செய்ததை எண்ணி வியப்பதாகவும் இசைஞானி இளையராஜா வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

 

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட இளையராஜா,  பாரதியார் காசியில்  தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் பலவற்றை கற்றுக்கொண்டார், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்ஷிதர் காசியில் தேசாந்திரியாக திரிந்து அனுபவங்களை பெற்றவர் என்றார்.

 
 

மோதி

''இந்தியாவில் நதிநீர் இணைப்பு குறித்து 22 இளவயதில் பாரதியார் பாடி சென்றார். தற்போதுதான் நாம் அது பற்றி பேசுகிறோம். காசி நகரத்திற்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடிப்பது பெருமைக்குரியது,''என்றார் இளையராஜா. 

 

அது தவிர, நிகழ்ச்சியில், நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற ஓம் சிவகோம் பாடலை இளையராஜா வழங்கினார். கலைமாமணி ஷேக் சின்ன  மௌலானா குடும்பத்தை சேர்ந்த காசிம் நாதஸ்வரம் வாசித்தார். 

 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோதி. மதுரை ஆதீனத்திடம் அவர் ஆசி பெற்றார்.

முன்னதாக, கெமர் என்ற கம்போடிய மொழி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் வெளியிட்டார்.

 

நரேந்திர மோதி பேசியது என்ன?

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ''நம் நாட்டில் ஒரு கொள்கை உள்ளது. ஒரே உண்மை அது பல ரூபங்களில் வெளிப்படும். அதுபோல, காசியும்,தமிழ்நாடும் இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகின்றன. காசியும்  தமிழ்நாடும் சிவமயமமானவை, சக்திமயமானவை. காசியில் விஸ்வநாதரும், ராமேஸ்வரத்தில் ராமநாதரும் இருப்பதால்  இரண்டு இடங்களுக்கும் பெருமை.

மொழி, பண்பாடு என எல்லா விஷயத்திலும் பாரம்பரியம் மிகுந்த  காசியும், தமிழ்நாடும் பல ஞானிகள் பிறந்த நிலமாக இருந்துள்ளன. காசியில் துளசிதாசர் பிறந்தார், தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பிறந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் திருமண சடங்குகளில், காசிக்கு செல்வது என்ற சடங்கு உள்ளது. இதுபோல இந்த இரண்டு நகரங்களுக்கும் பல தொடர்புகள் உள்ளன. பனாரஸ் புடவைகள் போலவே காஞ்சிபுரம் புடவைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை,'' என்றார்.

 

ஒற்றுமை உணர்வு ஓங்கவேண்டும் என்று கூறிய அவர், இரண்டு இடங்களிலும் உள்ள ஞானிகள் ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்சிகள் செய்தனர் என்றார். ''காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்திற்கு தமிழ்நாட்டை  சேர்ந்த ராதாகிருஷ்ணன் அரும்பணி ஆற்றியுள்ளார். காசியில் உள்ள ஹனுமான்கட் பகுதியில் பல தமிழர்கள் இன்றும் வசிக்கிறார்கள். கேதார்நாத் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் செயல்படுகிறது.

இதுபோல பலகாலமாக இரண்டு இடங்களுக்கும் நட்பு தொடர்கிறது. பாரதியார் காசியில் இருந்த சமயத்தில்தான் முறுக்கு மீசை வைத்துக்கொண்டார் என்று சொல்வார்கள். இதுபோன்ற சங்கமம் நிகழ்ச்சி மூலம்தான் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தமுடியும். தேசஒற்றுமையைதான் மந்திரங்கள் கூறுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பல்வேறு காரணங்களால் அவை நடக்கவில்லை. தற்போது, நாம் இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் அதனை உறுதிபடுத்துவோம்,''என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c721j14xel5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“பெருமை மிகுந்த காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தும் யோசனை பிரதமர் நரேந்திர மோதிக்கு எப்படி வந்தது என்று வியந்துகொண்டிருக்கிறேன்" என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.“

BJB எப்படியெல்லாம் ஆடினால் தMழ்நாட்டிற்குள் ஊடுருவலாம் என தெளிவாக சிந்தித்துச் செயற்படுகிறத. இளையராசாவுக்குத்தான் இது விளங்கவில்லை

பாவம் இளையராஜா, அவரின் வயதிற்கு இந்த யோசனையெல்லாம் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

மோதியை தூக்கி வைக்கும் அளவுக்கு இளையராஜா இறங்கி விட்டாரா?

He is a nominated Member of Parliament in the Indian upper house, Rajya Sabha, since July 2022.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மோதியை தூக்கி வைக்கும் அளவுக்கு இளையராஜா இறங்கி விட்டாரா?

 

அது தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற எலும்பைப் போட்டிருக்கிறாரில்ல.

அப்புறம் என்ன வாலை ஆட்ட வேண்டியது தானே.

2 hours ago, Kapithan said:

பாவம் இளையராஜா, அவரின் வயதிற்கு இந்த யோசனையெல்லாம் தேவையா?

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2022 at 14:29, nunavilan said:

மோதியை தூக்கி வைக்கும் அளவுக்கு இளையராஜா இறங்கி விட்டாரா?

அந்தாளுக்கு திறமையிருந்தும்  சக்கரவாக பறவை மழையை தேடுவது போல் புகழை தேட தொடங்கி விட்டார் .

அதன் பின்னாலே 2கோடி வட இந்தியர் தமிழகம் நோக்கி படையெடுப்பு அந்த செய்தி மழுங்கடிப்பு ஏன் ?

அப்படி வருபவர்களுக்கு ஓட்டுரிமையும் உடனே என்கிறார்கள் அதை வன்னியன் சார் போன்றவர்கள் தான் விளங்க படுத்தனும் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.