nunavilan பதியப்பட்டது December 6, 2022 Share பதியப்பட்டது December 6, 2022 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168417 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 6 hours ago, nunavilan said: 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168417 மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67 என அதிகரித்து செல்வதால்.... ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன. ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா? கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 4 hours ago, தமிழ் சிறி said: மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67 என அதிகரித்து செல்வதால்.... ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன. ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா? கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂 சிறிலங்கா எப்ப காசு வைச்சுக்கொண்டு பிளான் போட்டது? 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 அப்பாடா வாற தையில் இருந்து பார்லிமெண்டில் முக்கால்வாசி இருக்கைகள் காலியாக இருக்கும்.......இளைஞர்கள் அங்கு வருவது நாட்டிற்கு நல்லது.......! 👍 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 5 hours ago, தமிழ் சிறி said: மேற்கத்தைய நாடுகள்... ஓய்வூதிய வயதை, 65 - 67 என அதிகரித்து செல்வதால்.... ஓய்வூதிய கொடுப்பனவை சேமிக்கலாம் என கருதுகின்றன. ஸ்ரீலங்காவில்... 60 வயதில் வீட்டுக்குப் போனால்... அவர்களுக்கு கொடுக்க போதுமான அளவு ஓய்வூதியப் பணம் அரசிடம் உள்ளதா? கடன் வாங்கி காலத்தை ஓட்டுபவனுக்கு... இந்தக் கவலைகள் இராது என நினைக்கின்றேன். 😂 உண்மையில் நவீன மருத்துவ வசதிகள் மேற்கில் சராசரி ஆயுட்காலத்தை கூட்டி விட்டதாலும், பிறப்பு வீத குறைவு, சனதொகையில் வயசாளிகள் அதிகம் என்பதால் மேற்கில் இப்படி செய்ய வேண்டி உள்ளது. இங்கே முன்பு 65 (இப்போ 67) பென்சன் எடுத்து விட்டு 85-95 வரை கூட வாழ்வார்கள். இலங்கை போன்ற சராசரி ஆயுட்காலம் குறைந்த, சனத்தொகை ஒப்பீட்டளவில் இளமையான நாட்டில் இந்த பிரச்சனை மேற்கை போல இல்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஏராளன் Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 1 hour ago, suvy said: அப்பாடா வாற தையில் இருந்து பார்லிமெண்டில் முக்கால்வாசி இருக்கைகள் காலியாக இருக்கும்.......இளைஞர்கள் அங்கு வருவது நாட்டிற்கு நல்லது.......! 👍 இல்லை அண்ணை, இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். அரசியல்வாதிகளுக்கு அல்ல. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 27 minutes ago, ஏராளன் said: இல்லை அண்ணை, இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். அரசியல்வாதிகளுக்கு அல்ல. அதாவது வேலையிடத்தில், அரைவாசி நேரம் வேலை, மீதி நேரம் தூக்கம் என இருப்பவர்களுக்கு பொருந்தும். முழுநேரமும் தூங்குபவர்களுக்கு பொருந்தாது🤣. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 இங்கே சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுக்கு மேலும் பணிபுரிகிறார்கள். (அவர்களின் நிபுணத்துவமும், அனுபவமும் நிறுவனத்திற்கு தேவையாக இருக்கும் பட்சத்தில்). ஆனால் இன்சூரன்ஸ் பணம் மட்டும் அவர்களுக்கு மிக அதிகமாக செலுத்த வேண்டும். (எனக்கும் இன்னும் 70 ஆகவில்லை 😜😎) Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 Just now, ராசவன்னியன் said: இங்கே சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுக்கு மேலும் பணிபுரிகிறார்கள். (அவர்களின் நிபுணத்துவமும், அனுபவமும் நிறுவனத்திற்கு தேவையாக இருக்கும் பட்சத்தில்). ஆனால் இன்சூரன்ஸ் பணம் மட்டும் அவர்களுக்கு மிக அதிகமாக செலுத்த வேண்டும். (எனக்கும் இன்னும் 70 ஆகவில்லை 😜😎) இங்கே 67 (68 விரைவில்) வரை வேலை கட்டாயம். ஓய்வூதியம் 67 க்கு மேல்தான் தருவார்கள். முன்னர் நிறுவனங்கள் 67 உடன் வேலையால் அனுப்பலாம் (ஊழியர் விரும்பாவிட்டாலும்). ஆனால் இப்போ இதை மாற்றி விட்டர்கள். ஊழியர் விரும்பினால் 67 க்கு மேலும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். உச்ச வரம்பு என்று இல்லை. Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts