Jump to content

தடங்கலும் தாமதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் எழுதியவை எதுவும் உங்களுக்கு வரலாற்று ஆவணமாக தெரியவில்லை. அந்த உடான்ஸ் சாமியார் பிரயாணகுறிப்பு கூட?

# ஓரவஞ்சனை 🤣

வரலாற்று ஆவணங்கள் என்பதை விட காத்திரமான கருத்துக்கள் என்றுதான் கொள்ளலாம். அவற்றை மீள 10 வருடங்களுக்குப் பின்னர் வாசித்தால் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்🤣

2 hours ago, goshan_che said:

@ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்.

நான் உண்மையாகவே ஆசானின் வெண்முரசு நாவலில் பல அத்தியாயங்களை வாசித்து முடித்திருந்தேன்! இப்போது கிறிஸ்மஸ் கொலிடேயில் தோழர் ஷோபாசக்தியின் நாவலைப் படிக்கத் திட்டம் போட்டுள்ளேன். 

இருவரும் இரு துருவங்கள். ஆனால் எனக்கு ஆசானும் தோழருமாவார்கள்!!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

நேற்றைய லண்டன் குளிரிலும் காலையில் சைக்கிள் எடுக்கபோக திட்டு வாங்கியது மறக்கலை ஆனாலும் இன்றும் போனேன் என்னமோ தெரியலை அந்த விடிகாலையில் கோப்பி கொஞ்சம் கொஞ்சமாய் கோப்பியை பருகும் நேரம் மட்டும் லண்டனின் எந்த காலநிலையும் அழகாக தெரியுது .😀

3 hours ago, goshan_che said:

மகனே…சாமியாரின் சாபம் பொல்லாதது மகனே🤣

குருக்களின் சாபம் மாணவனுக்கு பலிக்காது பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழைப்பதற்கு இன்னும் ஓடவேண்டியிருப்பதால்  யாழுக்கு வருவது குறைந்து விட்டது.காலம் இன்னும் இருக்கு

 

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழை தூக்கி நிறுத்திய நிர்வாகத்தினருக்கு நன்றிகள். 

தொடர்ந்தும் இப்படியே செல்லாமல் பணமீட்டும் வழிகளை பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

1. அடுத்து என்ன புளிச்சல் ஜோக் எழுதலாம் எண்டு மண்டையை குடைந்து கொண்டிருந்தேன்

2. @Kapithan ஐ எப்படி ரஸ்யா விடயத்தில் பெட்டி அடித்து பிடிப்பது எண்டு தந்திரோபாய ஆலோசனையில் ஈடுபட்டேன்

3. @விசுகு @குமாரசாமி @தமிழ் சிறி@ஈழப்பிரியன்தாத்தாமாரின் உடல் நலம் இதனால் பாதிக்கபடக்கூடாது என வேண்டி கொண்டேன்

4. @கற்பகதரு  @tulpen @ஜீவன் சிவா  @நவீனன்இப்பவும் யாழை வாசிப்பாரோ எண்டு யோசித்தேன்

5. @Justin @நந்தன் @MEERA ஏன் முன்னர் போல எழுதுவதில்லை என யோசித்தேன்

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

7. @Nathamuni பாதிரியார் வழக்கின் முடிவை அறிந்திருப்பாரோ எண்டு யோசித்தேன்

8. @ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்

இப்பிடியொரு பச்சைக்கள்ளனை நான் பார்த்ததேயில்லை......என்னமா உருட்டுரானுகள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

Singing-frog GIFs - Get the best GIF on GIPHY

நுணலும் தன்  வாயால் கெடும்.......!  😢

நீங்கள் நுணல் இல்லை.

ஆங்கிலத்தில் canary in the coal mine என்பார்கள். நிலக்கரி எடுப்பவர்கள் சுரங்கத்துக்குள் கனரி பறவையோடு போவார்களாம், காபமொனொக்சைட் பரவி மனிதர் இறக்கும் முன் கனரி இறந்துவிடுமாம். கனரி இறந்து விட்டால் ஆபத்து என்று மனிதர் சுரங்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்களாம்.

ஒவ்வொரு திரியும் யாழில் தடம்மாறும் போது உங்கள் கருத்து ஒரு கனரியின் இறப்பு போல எச்சரிக்கை மணியாக வருவதை பலதடவை கண்டுள்ளேன்.

சில தடவை சுரங்கத்தை விட்டு வெளியேறி உள்ளேன். பலதடவை வெளியேறாமல் நின்று சாவடிபட்டுள்ளேன்🤣.

சுருங்கசொல்லின் யாழின் விதுரர் நீங்கள்.

13 hours ago, கிருபன் said:

வரலாற்று ஆவணங்கள் என்பதை விட காத்திரமான கருத்துக்கள் என்றுதான் கொள்ளலாம். அவற்றை மீள 10 வருடங்களுக்குப் பின்னர் வாசித்தால் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்🤣

போங்க ஜி. நான் 2013 ல எழுதினத வாசிச்சா இப்ப எனக்கே சிரிப்பு, சிரிப்பா வருது🤣.

13 hours ago, கிருபன் said:

நான் உண்மையாகவே ஆசானின் வெண்முரசு நாவலில் பல அத்தியாயங்களை வாசித்து முடித்திருந்தேன்! இப்போது கிறிஸ்மஸ் கொலிடேயில் தோழர் ஷோபாசக்தியின் நாவலைப் படிக்கத் திட்டம் போட்டுள்ளேன். 

ஒன்றில் பு மோ அல்லது சோபா சகதி 🤣.

ஆனால் சகதியின் எழுத்து, கதை சொல்லும் பாங்கு கட்டி போடும்.

12 hours ago, பெருமாள் said:

குருக்களின் சாபம் மாணவனுக்கு பலிக்காது பாஸ்

மங்களம் உண்டாகட்டும்

6 hours ago, நந்தன் said:

உழைப்பதற்கு இன்னும் ஓடவேண்டியிருப்பதால்  யாழுக்கு வருவது குறைந்து விட்டது.காலம் இன்னும் இருக்கு

 

இடைக்கிடை வந்து உங்கள் ஒற்றை வரியில் நூறு அர்த்தம் தொனிக்கும் பதிவுகளையாவது போடுங்கள்🙏🏾.

42 minutes ago, MEERA said:

மீண்டும் யாழை தூக்கி நிறுத்திய நிர்வாகத்தினருக்கு நன்றிகள். 

தொடர்ந்தும் இப்படியே செல்லாமல் பணமீட்டும் வழிகளை பாருங்கள். 

சாந்தாவை கட்டலாம் என்கிறீர்களா? 🤣

18 minutes ago, குமாரசாமி said:

இப்பிடியொரு பச்சைக்கள்ளனை நான் பார்த்ததேயில்லை......என்னமா உருட்டுரானுகள் 😂

நோ கொமெண்ட்ஸ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

உழைப்பதற்கு இன்னும் ஓடவேண்டியிருப்பதால்  யாழுக்கு வருவது குறைந்து விட்டது.காலம் இன்னும் இருக்கு

 

தலைக்கு இன்னும் பதினெட்டு வயசெண்டு நினைப்பு.. பெடியனுக்கே பதினெட்டு ஆகப்போகுது…பென்சன் எடுக்குற வயதில காலம் இன்னும் இருக்காம்…

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைக்கு இன்னும் பதினெட்டு வயசெண்டு நினைப்பு.. பெடியனுக்கே பதினெட்டு ஆகப்போகுது…பென்சன் எடுக்குற வயதில காலம் இன்னும் இருக்காம்…

நந்தன் எப்படி ஓடுவார் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்😂🤣

spacer.png

  • Haha 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.