Jump to content

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு

By RAJEEBAN

06 DEC, 2022 | 12:29 PM
image

ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து  வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டார் என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள கட்டிடமொன்றை சோதனையிட்டவேளை கத்தியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் இந்த கத்தியை அவர் தாக்குதலிற்கு பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் வேறு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு எதிராக பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்!

germany-1.jpg

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை காலை 

இல்லர்கிர்ச்பெர்க் (Illerkirchberg) கிராமத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து மாணவர்களைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கத்திக்குத்து இலக்காகிய 14 வயதுச் சிறுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் அங்கு உயிரிழந்தார். இச்சிறுதி துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்.

சந்தேகத்தின் பெயரில்  எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் எனக்கூறிய 27 வயது இளைஞரை ஜேர்மன் காவல்துறையினர் கைது செய்தனர்.

13 வயது சிறுமிக்கு கத்தியால் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் தாக்குதலில் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அகதிகள் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியுடன் அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சந்தேக நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் கத்தியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சந்தேக நபருக்கு மனநல பிரச்சினைகள் உள்ளதா என்பதையும், தாக்குதலுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளையும் அவர் அறிந்திருந்தாரா என்பதையும் உறுதி செய்ய வழக்கறிஞர்கள் முயன்றனர்.

வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவத்தை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்

இது தொடர்பான அனைத்தும் இதுவரை முற்றிலும் தெளிவாக இல்லை என்று காவலதுறைச் செய்தித் தொடர்பாளர் 

வொல்ப்காங் ஜூர்கன்ஸ் (Wolfgang Jürgens) செய்தியாளர்களிடம் கூறினார். 

இருப்பினும், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையை தீவிர வலதுசாரி AfD உடனடியாகக் குற்றம் சாட்டியது.

இல்லர்கிர்ச்பெர்க் என்பது 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமமாகும்.

துருக்கிய தூதர் அஹ்மத் பாசார் சென் செவ்வாயன்று பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் துணைத் தலைவருடன் கிராமத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேயர் Markus Häußler, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறினார். 

அதே நேரத்தில் ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் „பயங்கரமான செய்தி“ தன்னை உலுக்கியது என்றார்.

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் ட்விட்டரில் (ஜெர்மன் மொழியில்) எழுதினார்.

https://eelattamilan.stsstudio.com/2022/12/07/ஜேர்மனியில்-கத்திக்குத்/?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குளிருக்குள்…. அதிகாலை எழும்பி,
பல வித கனவுகளுடன் பாடசாலைக்கு சென்று கொண்டு இருந்த
மாணவச் செல்வங்களை…   கத்தியால் குத்திக் கொல்ல எப்படி மனசு வந்ததோ…
அகதி அடைக்கலம் தந்த நாட்டுக்கே இப்படிச் செய்தவனை தூக்கில் போடவேண்டும். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து இளைஞர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலின் போது 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

13 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்து மீண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடம் கோரி வந்த 27 வயது இளைஞரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் அருகிலுள்ள கட்டடத்தை சோதனையிட்டபோது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் அவர் இருப்பதைக் கண்ட பொலிஸார் அவரை கைது செய்தனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். அங்கு அவர் குறிப்பிடப்படாத காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸ்துறை ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நகரத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக மேயர் மார்கஸ் ஹூஸ்லர் கூறினார்.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரமான இந்த செய்தி என்னை உலுக்கியது. கொல்லப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன், காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இல்லர்கிர்ச்பெர்க் நகரம், 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நகரம் ஆகும்.

https://athavannews.com/2022/1314194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டார் என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

6 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் குளிருக்குள்…. அதிகாலை எழும்பி,
பல வித கனவுகளுடன் பாடசாலைக்கு சென்று கொண்டு இருந்த
மாணவச் செல்வங்களை…   கத்தியால் குத்திக் கொல்ல எப்படி மனசு வந்ததோ…
அகதி அடைக்கலம் தந்த நாட்டுக்கே இப்படிச் செய்தவனை தூக்கில் போடவேண்டும். 😡

ஜேர்மனி இப்ப நனைச்சு சுமக்கிற வேலைய பாக்குது எண்டு நினைக்கிறன். கண்ட கண்ட களிசடைகளை நாட்டுக்குள்ள வரவிட்டு சொந்த நாட்டு சனத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் செய்து கொண்டிருக்கு......

இனப்பிரச்சனையாக மாறக்கூடாது என்பதற்காக ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஆனால் உண்மை வெகு விரைவில் வெடிக்கும்.

இந்த  நாச வேலைகளை கிழக்கு ஜேர்மனியில் செய்ய முடியாது. அந்த அகதி முகாமையே எரித்து விடுவார்கள். ✔️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஸ்டொக்டேகிங்கில் first in, first out என்பார்கள், முதலில் வந்ததை முதலில் விற்க வேண்டும்.

அதே போல் ஜேர்மனியில் முதலில் வந்த வெளிநாட்டவரை முதலில் வெளியேற்ற வேண்டும் 🤣 (சும்மா பகிடிதான் நோ டென்சன்).

——

இது ஐரோப்பாவின் தாய் செய்த மொக்கு வேலை.  

9 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் குளிருக்குள்…. அதிகாலை எழும்பி,
பல வித கனவுகளுடன் பாடசாலைக்கு சென்று கொண்டு இருந்த
மாணவச் செல்வங்களை…   கத்தியால் குத்திக் கொல்ல எப்படி மனசு வந்ததோ…
அகதி அடைக்கலம் தந்த நாட்டுக்கே இப்படிச் செய்தவனை தூக்கில் போடவேண்டும். 😡

கிம் இதையேதான் அங்காலை செய்துள்ளார். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஸ்டொக்டேகிங்கில் first in, first out என்பார்கள், முதலில் வந்ததை முதலில் விற்க வேண்டும்.

அதே போல் ஜேர்மனியில் முதலில் வந்த வெளிநாட்டவரை முதலில் வெளியேற்ற வேண்டும் 🤣 (சும்மா பகிடிதான் நோ டென்சன்).

சிலோன் தமிழர் பெரியாய் பொதுசனத்துக்கு கெடுதல் செய்ய நினைக்காத சனம். இது ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச விசயம்.......😎
வேறை காரணம் எதும்  சொல்ல முடியுமெண்டால் சொல்லுங்கப்பு 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிலோன் தமிழர் பெரியாய் பொதுசனத்துக்கு கெடுதல் செய்ய நினைக்காத சனம். இது ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச விசயம்.......😎
வேறை காரணம் எதும்  சொல்ல முடியுமெண்டால் சொல்லுங்கப்பு 😁 

எனக்கு ஒரு ஜேர்மானிக்-சிலோனிஸ் தமிழரை தெரியும்.

அவர் ஒராள் போதும் மிச்சம் எல்லாரையும் கூண்டோட ஊருக்கு அனுப்ப🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

சிலோன் தமிழர் பெரியாய் பொதுசனத்துக்கு கெடுதல் செய்ய நினைக்காத சனம். இது ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச விசயம்.......😎
வேறை காரணம் எதும்  சொல்ல முடியுமெண்டால் சொல்லுங்கப்பு 😁 

எனக்குத் தெரிந்த ஒருவர் ஜேர்மனிப் பெண்ணைத் திருமணம் செய்தவர் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த உணவகம் ஒன்றை வாங்க்கினார். அந்த ஊரில் உள்ள சிலர் அவரிடம் வந்து, நீ உணவகத்தைச் சிறப்பாகப் பராமரிப்பவனாக இருக்கலாம். ஆனால் நீ வெளிநாட்டவனாக இருப்பதால் இங்கு வரமாட்டோம் என்று நேரடியாகச் சொன்னார்களாம். இவர் தானும் ஜேர்மன் பிரஜைதான் என்று வாதம் செய்யவில்லை. ஏனென்றால் வெளிநாட்டவர் வெளிநாட்டவர்தான் என்பது அவருக்குப் புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ஜேர்மனியர்களிடம் இனத்துவேஷம் உள்ளது என்பதை யாழ்களத்தில் பல தடவை எழுதியுள்ளேன்.

நான் இந்த திரியில் சொல்ல வந்த விடயம் சிலோன் தமிழர் கூடுதலாக  பொது  சனத்திற்கு அரபு,ஆபிரிக்க நாட்டவர்களைப்போல் கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அல்ல என்பதை மட்டுமே.

3 hours ago, goshan_che said:

எனக்கு ஒரு ஜேர்மானிக்-சிலோனிஸ் தமிழரை தெரியும்.

அவர் ஒராள் போதும் மிச்சம் எல்லாரையும் கூண்டோட ஊருக்கு அனுப்ப🤣

அப்பிடிப்பார்த்தால் பிரிட்டிஷ் ரமில்ஸ் எல்லாரையும்  அரியணையிலை வைச்சு கும்புடவேணுமாக்கும்..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அப்பிடிப்பார்த்தால் பிரிட்டிஷ் ரமில்ஸ் எல்லாரையும்  அரியணையிலை வைச்சு கும்புடவேணுமாக்கும்..😂

🤣 நோ..நோ…நாங்கள், இந்த நாட்டுக்கு இராணி கெஞ்சி கூப்பிடுறா எண்டுதான் வந்தனாங்கள்.

இனி அவ வந்து சொன்னால்தான் திரும்பி போவம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

எனக்குத் தெரிந்த ஒருவர் ஜேர்மனிப் பெண்ணைத் திருமணம் செய்தவர் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த உணவகம் ஒன்றை வாங்க்கினார். அந்த ஊரில் உள்ள சிலர் அவரிடம் வந்து, நீ உணவகத்தைச் சிறப்பாகப் பராமரிப்பவனாக இருக்கலாம். ஆனால் நீ வெளிநாட்டவனாக இருப்பதால் இங்கு வரமாட்டோம் என்று நேரடியாகச் சொன்னார்களாம். இவர் தானும் ஜேர்மன் பிரஜைதான் என்று வாதம் செய்யவில்லை. ஏனென்றால் வெளிநாட்டவர் வெளிநாட்டவர்தான் என்பது அவருக்குப் புரிந்தது.

ஜேர்மனியில் வெளிநாட்டு உணவகங்கள் அதிகம்.....ஜேர்மன் உணவகங்களில் சாப்பிடுவதை விட வெளிநாட்டு உணவகங்களில் நிறையவே ஜேர்மனியர். சாப்பிடுகிறார்கள்......சீனா யப்பன்.  இந்தியா  இத்தாலிய.....போன்ற உணவகங்களில்...சனி ஞாயிறு  தினங்களில் ஜேர்மன் சனம் அலைமோதுங்கள்.    நான் அறிந்த வகையில் மலிவு சுவை....தான் பார்ப்பார்கள்      எந்த நாட்டு உணவகம் என்று பார்பதில்லை.  ஜேர்மன் உணவகங்களிலும். சமையலில் இலங்கைத்தமிழர்கள்  வேலை செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அவர் சின்ன கிராமப்புறங்களிலை நடக்கிற விசயத்தை சொல்லுறார் போல கிடக்கு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற வசனத்தை நான் ஜேர்மனியில் சாலையோரம் கண்டது போல் யூகே அடங்கலாக வேறு எங்கும் காணவில்லை.

ஆனால் நான் அதிகம் ஹனோவர், நோர்த் றைன்லாண்ட் பகுதிகளில்தான் பிரயாணிப்பது. 

டிரெஸ்டென் பக்கம் எப்படியோ தெரியாது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.