Jump to content

யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா?

யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா?

யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல் தண்ணீரின் ஆதிக்கம் வலுப்பெற்று மக்களின் பணம் வீண்விரயமாகிறது.
அது மட்டுமன்றி போத்தல் தண்ணீருக்கான மக்களின் பணம் தென்னிலங்கை செல்கிறது. ஏழை வீட்டின் மரண சடங்கு முதல் தண்ணீர் போத்தலால் பணம் மேலதிக செலவாகிறது.

கடந்த சில காலத்திற்கு முன்பாக கிணற்று நீரில் ஒயில் கலந்துவிட்டது, நீர் மாசடைந்து விட்டது மற்றும் ஊற்றுக்கள் பயனற்றுவிட்டது என பல போராட்டங்கள் கலந்துரையடல்கள் என தொடர்சியாக இடம்பெற்றது. தற்போது இவை அமைதியாகிவிட்டது.

இதனை பயன்படுத்தி அன்று ஆரம்பித்த தண்ணீர் போத்தல் வியாபாரம் இன்று மரணசடங்குகள், வீட்டுவிழாக்கள், கலை நிகழ்வுகள் மற்றும் மண்டப விழாக்கள் என அனைத்து இடங்களிலும் கொடிகட்டி பறக்கிறது. போத்தல் தண்ணீரை பயன்படுத்தலாமா எங்கு எப்படி தயாராகுறது இவைதொடர்பில் வெளிப்படுத்தல்கள் இருக்கின்றனவா?

ஆரம்ப காலங்களில் ஆலயங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீரை விரும்பி குடிப்பார்கள் அதனைதீர்த்தம் என்றே குடிப்பார்கள். வீடுகளிலும் அவ்வாறே கிணற்றுநீரை பயன்படுத்தினார்கள்.
யாழ்ப்பாணத்து கிணற்று தண்ணீர் என்றாலே விரும்பி குடித்த காலம் மாறிவிட்டது. இன்று கிணற்றில் தண்ணீர் அள்ளினாலே பிரச்சினை என்கிறார்கள்.அந்தளவிற்கு போத்தல் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து பணத்தை வீண்விரயமாகிவருகிறது.

எனவே யாழ்ப்பாணத்து கிணற்று நீரை பயன்படுத்தலாமா இல்லையா என்பது பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானத் துறையை சார்ந்தவர்கள், விவசாயத் துறைசார்ந்தவர்கள், பொருளியல் துறைசார்ந்தவர்கள், அரசியல் பிரதிநிதிகள் ஒன்று கூடி குடாநாட்டின் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு சாதக பாதகங்களை அறிவிக்க வேண்டும்.

உண்மையாகவே மக்களின் பணத்தில் படித்தவர்கள், பட்டம்பெற்றவர்கள் என்ற உணர்வு இருந்தால் இந்த தேசமக்கள் மீது உணர்வு இருந்தால் தண்ணீருக்காக குரல் கொடுக்கவேண்டும்.

யாழ் குடாநாட்டு தண்ணீர் பழுதடைந்து விட்டது என பலரும் குரல் கொடுத்தார்கள் என்ன நடந்தது.

வடக்குமாகாண சபை இருந்தது. முதலமைச்சர் உட்பட பல பிரதிநிகள் இருந்தார்கள் என்ன செய்தார்கள் கிணற்று நீருக்கு முடிவுதான் என்ன? இது தொடர்கதையா?. எனவே குறித்தவிடயம் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் அக்கறை எடுத்து இதற்கான சரியான முடிவை அறிவிக்க வேண்டும்” என்றார்.

https://athavannews.com/2022/1314207

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் காத்திரமான கேள்வி.

போன முறை என்னையே பயபடுத்தி போத்தல் தண்ணி குடிக்க வச்சிட்டாங்கள்☹️

Link to comment
Share on other sites

பொதுவான கழிவு கால்வாய்கள் இல்லாமல் நெருக்கமான முறையில் யாழில் மலசல கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலத்தில் மழை முற்றாக இல்லாதபோது கழிவுநீர் மண்ணினால் வடிகட்டப்பட்டு கிணறுகளைச் சென்றடைய முடியும். இதனால் E. coli கிருமிகள் கிணற்று நீரில் உள்ளதாக முன்பு எங்கோ வாசித்த ஞாபகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, இணையவன் said:

பொதுவான கழிவு கால்வாய்கள் இல்லாமல் நெருக்கமான முறையில் யாழில் மலசல கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலத்தில் மழை முற்றாக இல்லாதபோது கழிவுநீர் மண்ணினால் வடிகட்டப்பட்டு கிணறுகளைச் சென்றடைய முடியும். இதனால் E. coli கிருமிகள் கிணற்று நீரில் உள்ளதாக முன்பு எங்கோ வாசித்த ஞாபகம்.

ஓம்.

அதே போல் (இது அனுராதபுரம் பக்கம் இன்னும் அதிகம்), நீரில் செறிவான கனிமங்கள் இருப்பதால் - சிறுநீரகம் விரைந்து பழுதாவதாயும் சொல்லபடுகிறது.

எது எப்படியோ போத்தல் குடி நீரில் தங்கி இருப்பது சரியாக படவில்லை.

பரிசில் எனக்கு பல விசயம் பிடித்தாலும் பிடிக்காத ஒன்று இந்த போத்தன் நீர் கலாச்சாரம். யூகேயில் முழுக்க முழுக்க பைப்தண்ணியைதான் குடிக்கிறோம். 

யாழிலும் இதை முழுமையாக ஆராய்ந்து, எந்த பகுதி நீரை குடிக்கலாம், எதை குடிக்க கூடாது, என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தேவை என செய்தால் நல்லம்.

பிலாஸ்டிக் பாவனையும் குறையும், காசு தெற்குக்கு போவதும் குறையும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

பொதுவான கழிவு கால்வாய்கள் இல்லாமல் நெருக்கமான முறையில் யாழில் மலசல கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலத்தில் மழை முற்றாக இல்லாதபோது கழிவுநீர் மண்ணினால் வடிகட்டப்பட்டு கிணறுகளைச் சென்றடைய முடியும். இதனால் E. coli கிருமிகள் கிணற்று நீரில் உள்ளதாக முன்பு எங்கோ வாசித்த ஞாபகம்.

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் எனக்கு முன்பு தெரிவித்திருந்தார் ஈகொலி பக்ரீறியா இருப்பதாக. பொதுமக்கள் குடிநீருக்கு பாவிக்கும் கிணற்று நீர் மாதிரிகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அச்சோதனைகளில் மாதிரிகளில் ஈகொலி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். சுண்ணக்கற்பாறை உடைவுகள் ஊடாக மலசலகூட கழிவு நீர் கிணறுகளில் கலப்பதாகவும் கூறினார்.

எனது கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லீற்றர் 2.50 ரூபாவுக்கு விளையாட்டுக்கழகத்தினால் விற்பனை செய்யப்படுகிறது. புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதி மூலதனத்தை கொண்டு வாங்கப்பட்ட சுத்திகரிப்பு கருவிகள்(UV FILTER INCLUDE) மூலம் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு பெண் தலைமைத்துவ குடும்ப பெண்மணி காலை 7.30-10 வரையும் மாலை 4-6.30 வரையும் பணியாற்றுகிறார். அவருக்கு மாதாந்தம் 15000ரூபா சம்பளம். செலவுகள் போக வரும் லாபம் விளையாட்டுக் கழக வங்கிக் கணக்கில் வைப்பிடப்படுகிறது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அருமை. உங்கள் ஊரில் பல முன்மாதிரி நிகழ்வுகள் நடக்கிறது. உங்களை போலவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் கிணற்று நீரையும் கொதிக்க வைத்து குடிக்கும் படி அறிவுறுத்தி இருந்தார்கள். எனது ஊர் கிணற்று நீர் எல்லாம் நிலம் தெரியுமளவிற்கு தெளிந்த  தண்ணீராக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் கிணற்று நீரையும் கொதிக்க வைத்து குடிக்கும் படி அறிவுறுத்தி இருந்தார்கள். எனது ஊர் கிணற்று நீர் எல்லாம் நிலம் தெரியுமளவிற்கு தெளிந்த  தண்ணீராக இருக்கும்.

இப்பவும் நிலம் தெரியுதண்ணை. ஈகோலாய் தான் கண்ணுக்கு தெரியாது.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் கிணற்று நீரையும் கொதிக்க வைத்து குடிக்கும் படி அறிவுறுத்தி இருந்தார்கள். எனது ஊர் கிணற்று நீர் எல்லாம் நிலம் தெரியுமளவிற்கு தெளிந்த  தண்ணீராக இருக்கும்.

அண்ணை நான் பில்ரர் தண்ணியையே கொதிக்க வைச்சு குடிக்கிறேன்!

எங்கட கிராமப்பகுதிகளில் முன்பு கோடையில் வயலில் உள்ள காணிக்கிணறுகளில் குடிநீர் மக்கள் பாவனைக்கு குடம், கான்களில் எடுத்துச் செல்வர், மாரிகாலங்களில் வீட்டுக் கிணற்று நீரை கொதிக்க வைத்துக் குடிப்பர். இப்போது வயல்களுக்கு போடப்படும் அதீத செயற்கை உரம் மற்றும் கிருமிநாசினிகளால் குடிநீர் மாசடைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இப்பவும் நிலம் தெரியுதண்ணை. ஈகோலாய் தான் கண்ணுக்கு தெரியாது.

16 minutes ago, ஏராளன் said:

அண்ணை நான் பில்ரர் தண்ணியையே கொதிக்க வைச்சு குடிக்கிறேன்!

எங்கட கிராமப்பகுதிகளில் முன்பு கோடையில் வயலில் உள்ள காணிக்கிணறுகளில் குடிநீர் மக்கள் பாவனைக்கு குடம், கான்களில் எடுத்துச் செல்வர், மாரிகாலங்களில் வீட்டுக் கிணற்று நீரை கொதிக்க வைத்துக் குடிப்பர். இப்போது வயல்களுக்கு போடப்படும் அதீத செயற்கை உரம் மற்றும் கிருமிநாசினிகளால் குடிநீர் மாசடைந்துவிட்டது.

இன்றைய சந்ததியை போல் அல்லாது அன்றைய சந்ததிக்கு (என்னையும் சேர்த்து 😁) நோய் எதிப்பு சக்தி அதிகமாக இருந்தது. ஏனெனில் உண்ட உணவுகள் கலப்படம் இல்லாதவை.அரிசி மூட்டையில் புழு கூடு கட்டினாலும் விக்கனமில்லாத அரிசி. இப்ப அப்பிடியில்லை. பார்க்க வடிவான அரிசி ஆனால் பின் விளைவு எக்கச்சக்கம்.

 இப்ப இஞ்சை ஜேர்மனியில மரக்கறி பழவகையிலை புழு பூச்சியள் குடியிருந்தால் தான் சுத்தம் சுகாதாரம் எண்டுறாங்கள் எல்லே...

கலங்கல் தண்ணியை விட பிளாஸ்ரிக் போத்தில் தண்ணி கெடுதல் கூட..... :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்ப்பாணக் கிணற்றுத் தண்ணீரில்  பிரச்சினைகள் இருக்கக் கூடும்:

1. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல ஈ.கோலை என்னும் பக்ரீரியாவின் எண்ணிக்கை அதிகம் (coliform count) இருக்கக் கூடும். இணையவன் சொன்ன காரணம் தான். இதனை கொதிக்க வைப்பதால் அல்லது புற ஊதாக் கதிர்வீச்சினால் சுத்தம் செய்வதால் இல்லாமல் செய்ய முடியும்.

2. அசேதன உரம் அதிகம் பாவிப்பதால், அதில் இருந்து உருவாகும் நைட்ரேற்றுகள் கிணற்று நீரில் சேரலாம். சுன்னாகம் எண்ணைக் கழிவுப் பிரச்சினையில்  நீரைப் பரிசோதித்த போது எண்ணையின் சுவடு இல்லையென்றும், ஆனால் நைட்றேற்றுகள் அதிகம் இருந்ததாகவும் சொல்லியிருந்தார்கள். எண்ணைப் பிரச்சினை பற்றிய அரசியல் சத்தம் காரணமாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஈ. கோலையை விட நைட்றேற்றுகள் ஆபத்தானவை: இதனால் குடல் புற்று நோய்கள் ஏற்படலாம். சிசுக்களின் உடலில் நைட்றைற்றுகள் சேர்ந்தால் "நீலக் குழந்தைகள்" (blue baby) நிலை உருவாகலாம்.

நைட்றைற்றுகளை சில காபன் வடிகட்டிகளால் தான் அகற்ற முடியும், கொதிக்க வைப்பதால் அகற்ற இயலாது.

3. இதை விட, இலங்கையின் வடக்கு, வட மத்திய மாகாணங்களில் "நாள்பட்ட சிறு நீரக நோய் (chronic kidney disease -CKD)" என்ற ஒன்றை பல காலங்களாக அவதானித்திருக்கிறார்கள். இதன் உண்மையான தோற்றுவாயாக ஒன்றைக் குறிப்பிட முடியாதெனினும், தண்ணீரின் அதிக கனிமச் செறிவும், அசேதன உரங்களின் சுவடுகளும், சில பிரதேசங்களில் லெப்ரொஸ்பைறோசிஸ் (Leptospirosis) எனப்படும் பக்ரீரியாத் தொற்றுக்களும் கூட்டுக் காரணிகளாக இருக்கலாம் என்கிறார்கள்.

Edited by Justin
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக்கு முக்கியமான தேவை, கறுப்புத்தண்ணீர் (குளிக்கும் தண்ணீர், மலசலகூட தண்ணீர்) வடிகாலமைப்பு.

விக்டோரியா மகாராணியார் காலத்தில், லண்டணில் அறிமுகப்படுத்திய போதே, கொழும்பிலும் அறிமுகப்படுத்தினார்கள். இது கொழும்பை விட பெரிய சென்னையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு டெல்லியில் இருக்கலாம். தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Sewage/ wastewater/ black-water ஐ சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அதாவது பாவித்த பின் உள்ள கழிவு நீர். இதில் குளிக்க, கழுவ பாவிக்கும் நீர் அதிக பாதிப்பை தருவதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் மலசல கூடங்களுடன் அமைந்துள்ள குழிகள் (பிட்) யாழ் தரை அமைபுக்கு உகந்ததாக இல்லை என நினைக்கிறேன்.

களிமண் பாங்கான இடங்களில் இவை நிலத்தடி நீருடன் கலப்பது குறைவு. ஆனால் ஒரு வடிகட்டி போல் இருக்கும் சுண்ணாம்பு பாறை மேல் அமைந்துள்ள யாழில் இது மிக இலகுவாக கலந்து விடக்கூடும்.

வளர்முகநாடுகளில் நீங்கள் சொன்ன வடிகாலமைப்பு பொதுவாக நகர் பகுதிகளில் அமைவதுதான் வாடிக்கை. ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தையும் இப்படி மாற்றுவது பெரும் செலவாக இருக்கும் (ரோட்டு போடவே மக்கள் போராடுகிறனர்).

ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குழியையும் நீர்கசியாததாக பூசுதல். பின்னர் கிரமமாக மனித கழிவை இந்த குழிகளில் இருந்து அகற்றி அதை சேதன பசளையாக்கல் போல ஏதும் செய்தால் பலனளிக்கலாம்.

இதுவும் செலவுதான் ஆனால் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

பிகு

சென்னை - ஆரம்பத்தில் கறுப்பு, வெள்ளை நகர் என இரு சென்னைகள் இருந்தன. வெள்ளை நகரில் வடிகாலமைப்பு உட்பட்ட வசதிகள் இருந்தன. பின்னர் காலப்போக்கில் நகர் பெருக்க, பெருக்க - நீர் நிலைகளை எல்லாம் வடிகாலாக, குப்பை குளங்களாக மாற்றி விட்டார்கள்.

கொழும்பு எவ்வளவோ திறம் ஆனால் அங்கும் கூட மிக அண்மை வரை கழிவு நீரை வாய்கால்களில் திறக்கும் பழக்கம் இருந்தது. வெள்ளவத்த-பம்பலபிட்டிய இடையே உள்ள முகத்துவாரம் கெட்ட நாற்றம் எடுக்கும்.

இவ்வளவு ஏன் இங்கே யூகேயில் கடலில் கழிவு நீரை கடந்த சில வருடங்களாக கலக்கிறார்கள். பிரான்ஸ் கூட அதை பிரச்சனை ஆக்கி இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குழியையும் நீர்கசியாததாக பூசுதல். பின்னர் கிரமமாக மனித கழிவை இந்த குழிகளில் இருந்து அகற்றி அதை சேதன பசளையாக்கல் போல ஏதும் செய்தால் பலனளிக்கலாம்.

இதுவும் செலவுதான் ஆனால் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

தற்போது பிரதேச சபை வீடு கட்ட அனுமதிக்கும் வரைபடத்தில் மலசல கூடத்திற்கு மூன்று தொட்டிகளை அமைத்து முதலாவதில் திண்ம கழிவாக தேக்கி 2வதிலும் 3வதிலும் தண்ணீரை தேக்க அனுமதிப்பதாக திட்டம். இதனை பொதுச் சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்திய பின்னர் மூடலாம். சிலர் பரிசோதகர் அப்பாலே செல்ல அடிப்பகுதியை துளையிட்டு கழிவு நீரை மண்ணிலே கலக்க விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு குழாய் நீர் தான் வீட்டில ஆனல் வயல் காட்டுல போனால்  அங்கு ஒரு பரளை கிணறு  போல நீர் இருக்கும் இடத்தில் இறக்கி விடுவார்கள் நல்ல தெளிவான ஊற்றை பார்த்து அந்த நீர் தான் குடிக்கிற ஒரு கோதாரியும் இல்லை  ( சுட வைத்து) ஆனால் இந்த குழாய் நீர் கரண்ட் இல்லையென்றால் நிப்பாட் போடுவாங்கள் விசரனுகள்  தொட்டி வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் தொட்டி இல்லாதவர்களுக்கு தான் நீர் இல்லாத போது பாரிய பிரச்சினை கிழக்கில் அநேகமானோர் குழாய் நீர் தான் அதுவும் இப்ப கட்டணம் அதிகம் பாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

ஏராளன் 80 திலேயே இந்த முறை பற்றி கேள்விப்பட்டேன். 3வதாக வரும் தொட்டியில் இருந்து தண்ணீரை குடிக்கலாம்.அவ்வளவு வடிகட்டி வரும் என்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

 பரிசோதகர் அப்பாலே செல்ல அடிப்பகுதியை துளையிட்டு கழிவு நீரை மண்ணிலே கலக்க விடுகிறார்கள்.

சனம் திருந்தாது 😡

நல்ல கட்டுரை. படித்தேன். நன்றி

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களுக்கு குழாய் நீர் தான் வீட்டில ஆனல் வயல் காட்டுல போனால்  அங்கு ஒரு பரளை கிணறு  போல நீர் இருக்கும் இடத்தில் இறக்கி விடுவார்கள் நல்ல தெளிவான ஊற்றை பார்த்து அந்த நீர் தான் குடிக்கிற ஒரு கோதாரியும் இல்லை  ( சுட வைத்து) ஆனால் இந்த குழாய் நீர் கரண்ட் இல்லையென்றால் நிப்பாட் போடுவாங்கள் விசரனுகள்  தொட்டி வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் தொட்டி இல்லாதவர்களுக்கு தான் நீர் இல்லாத போது பாரிய பிரச்சினை கிழக்கில் அநேகமானோர் குழாய் நீர் தான் அதுவும் இப்ப கட்டணம் அதிகம் பாருங்க

எப்போது முதல் உங்கள் ஊரில் குழாய் நீர் வந்தது?

நான் நினைத்தேன் மட்டகளப்பு, கல்முனை மாநகர் ஏரியா மட்டும்தான் குழாய் நீர் என்று.

எங்க இருந்து வருது? இங்கினியாகலவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

2. அசேதன உரம் அதிகம் பாவிப்பதால், அதில் இருந்து உருவாகும் நைட்ரேற்றுகள் கிணற்று நீரில் சேரலாம். சுன்னாகம் எண்ணைக் கழிவுப் பிரச்சினையில்  நீரைப் பரிசோதித்த போது எண்ணையின் சுவடு இல்லையென்றும், ஆனால் நைட்றேற்றுகள் அதிகம் இருந்ததாகவும் சொல்லியிருந்தார்கள். எண்ணைப் பிரச்சினை பற்றிய அரசியல் சத்தம் காரணமாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஈ. கோலையை விட நைட்றேற்றுகள் ஆபத்தானவை: இதனால் குடல் புற்று நோய்கள் ஏற்படலாம். சிசுக்களின் உடலில் நைட்றைற்றுகள் சேர்ந்தால் "நீலக் குழந்தைகள்" (blue baby) நிலை உருவாகலாம்.

நைட்றைற்றுகளை சில காபன் வடிகட்டிகளால் தான் அகற்ற முடியும், கொதிக்க வைப்பதால் அகற்ற இயலாது.

அப்பாடா இப்பத்தான்v................................. நீல குழந்தைகள் தேடலுக்கு விளக்கம் தந்ததுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

சனம் திருந்தாது 😡

நல்ல கட்டுரை. படித்தேன். நன்றி

எப்போது முதல் உங்கள் ஊரில் குழாய் நீர் வந்தது?

நான் நினைத்தேன் மட்டகளப்பு, கல்முனை மாநகர் ஏரியா மட்டும்தான் குழாய் நீர் என்று.

எங்க இருந்து வருது? இங்கினியாகலவா?

எங்களுடைய பகுதியில் சுனாமிக்கு முன்னர் வந்தது குழாய் நீர் அப்போது யாரும் எடுக்க வில்லை கிணற்று நீர்தான். சுனாமியின் பிறகு சகலரும் குழாய் நீர்தான் குடிப்பதற்காக, மலசலகூடம் பிற தேவைகளுக்கு கிணற்று நீர்

இங்கினியாகல  நீர்த்தேக்கத்திலிருந்து அம்பாறை பகுதிக்கும், உன்னிச்சை குளத்திலிருந்து மட்டக்களப்பிற்கும் ஆனால் மட்டக்களப்பு மேற்கு பகுதியில் கிணற்றை பயன்படுத்துகிறார்கள் குழாய் நீர் பழக்கமில்லாதவர்கள் சனத்தொகை பெருக பெருக நிலத்தடிநீரும் கெட்டுப்போகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நன்றி

நல்வரவு 🤗

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.