Jump to content

மாவீரர்நாள் செய்திகள் 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவு !

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவு !

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1311470

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing, fire and outdoors

வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது?
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது.
ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது.
ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யும் பணிகள்

By VISHNU

21 NOV, 2022 | 11:28 AM
image

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை கண்டலடி துயிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதன்போது பொது மக்கள் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் சென்று பார்வையிட்டதோடு கலந்துகொண்டார் கலந்து கொண்டார். 

அதன் போது கருத்து வெளியிட்ட அவர் மக்கள் இவ் சிரமதான பணியில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் அரசாங்கம் இணக்கம் தெரவித்துள்ளனர் பச்சைக் கொடி ஒன்றினை காட்டியுள்ளனர்.  

இருந்த போதிலும் எமக்கான உரிமைகளில் இதுவும் ஒன்றுஎமது அரசியல் உரிமைக்காக எமது விடுதலைக்காக போராடியவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூறும் இவ் நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் எவரிடமும் அனுமதி கூறி செயல்படுத்தும் நிகழ்வாக இருக்ககூடாது. என்று தெரிவித்தார். எமக்கான உரிமை எமது சுகந்திரத்தினை அரசு கட்டுப்படுத்தக்கூடாது. என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/140694

யாழ். பல்கலையில் மாவீரர் தின நினைவேந்தல் ஆரம்பம்

By VISHNU

21 NOV, 2022 | 01:00 PM
image

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.

 

20221121_120824.jpg

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

20221121_121907.jpg

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

20221121_121846.jpg

20221121_121807.jpg

20221121_121752.jpg

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140716

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக் கழக குமுகாயம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தலைவணங்குகின்றோம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to மாவீரர்நாள் செய்திகள் 2022
  • கருத்துக்கள உறவுகள்

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

விசுவமடு பகுதியில்  மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.

IMG_20221121_150334-600x338.jpg

IMG_20221121_153147-600x338.jpg

https://athavannews.com/2022/1311616

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். பல்கலையில் மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தின் முதல் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி, மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

https://athavannews.com/2022/1311519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல்

By VISHNU

21 NOV, 2022 | 08:23 PM
image

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்ததுடன், மாவீர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, மலர் அஞ்சலி இடம்பெற்றது.

இன்றிலிருந்து எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/140759

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை  பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

DSC_1362.jpg

DSC_1360.jpg

DSC_1368.jpg

DSC_1371.jpg

DSC_1373.jpg

DSC_1377.jpg

DSC_1378.jpg

DSC_1382.jpg

DSC_1379.jpg

DSC_1392.jpg

DSC_1390.jpg

DSC_1384.jpg

DSC_1386.jpg

DSC_1389.jpg

DSC_1407.jpg

DSC_1409.jpg

DSC_1397.jpg

DSC_1412.jpg

DSC_1403.jpg

https://athavannews.com/2022/1311659

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://twitter.com/senior_tamilan/status/1595098757699338240?s=20&t=17cP3Up62BnOY0YU_KtdkA

இணைப்பு உதவி குமாரசாமி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை  சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின்  நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனின் தலைமையில் குறித்த சிரமதானம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை காலை பத்து முப்பது மணி அளவில் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தினை அண்மித்த வளாகத்தில் தக்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே குறித்த சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1312107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு வருகைதந்து தகவல் கோரிய படையினர்

By VISHNU

24 NOV, 2022 | 02:43 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24) வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்களைத் தருமாறு கோரியுள்ளனர்.

IMG_9474.jpg

சீருடை தரித்த இரண்டு இராணுவத்தினர் தம்மை 591 ஆவது படைமுகாமிலிருந்து வருகின்றதாக அடையாளப்படுத்தியதோடு தமக்கு ஊடக அமையம் தொடர்பில் சில தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளனர்.

IMG_2581.jpg

ஊடக அமையத்தின் தலைவரோ அல்லது முகாமையாளரோ இருப்பார்கள் எனில் அவர்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்குமாறும் அவ்வாறான தகவல்களை பெற்றுவருமாறு தமது 591 பிரிகேட் படைமுகாமின் கட்டளை அதிகாரி பணித்துள்ளதாகவும் இதே போன்றே முல்லைத்தீவு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களின் தகவல்களும் தம்மால் திரட்டப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே ஊடக அமையத்தின் தகவல்களையும் கோருவதாக வருகைதந்த படையினர் ஊடக அமையத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் தெரிவித்தனர்.

IMG_9473.jpg

இவ்வாறு வருகைதந்த படையினருக்கு பதில் வழங்கிய ஊடக அமையத்தின் ஊடகவியலாளர் குமணன்  என்ன நோக்கத்துக்காக இந்த தகவல்களை திரட்டுகின்றீர்கள் என நாம்  தெரிந்துகொள்ள வேண்டும். 

cbbcd1d4-07d8-4f98-9902-9e65bc7be82c.jpg

என கோரிய நிலையில் எமக்கு தெரியாது எமது முகாமின் அதிகாரி விபரங்களை திரட்டுமாறு பணித்துள்ளார் அதற்காகவே பதிகின்றோம் முன்னர் இருந்த அதிகாரி மாற்றமாகி சென்றுவிட்டார்.

இப்போது புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறிய படியே பதிவுகளை மேற்கொள்கின்றோம் எமக்கு என்ன நோக்கத்துக்கு என தெரியாது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர் என்ன நோக்கத்துக்காக படையினர் எமது தகவல்களை கோருகின்றார்கள் என்பதை சரியாக  தெரிந்து கொள்ளாது எம்மால் நீங்கள் கேட்ட உடனே உடனடியாக தகவல் வழங்க முடியாது என மறுத்த நிலையில் அங்கிருந்து படையினர் திரும்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு படையினர் வருகைதந்த நேரம் ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளில் ஊடகவியலார்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்புகளோ அல்லது நிகழ்வுகளோ இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ஊடக  அமையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இராணுவ புலனாய்வாளர்கள் தொடர்சியாக கண்காணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று படையினர் வருகைதந்து தகவல்கள் கோரிய செயற்பாடு ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சதச்சத்தை ஊட்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் அன்று முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடி இருப்பதோடு மாவீரர் நாள் நினைவேந்தல் செயற்பாடுகளை வர்த்தகர்கள் தொடர்சியாக மேற்கொண்டு வருவது வழமை  இவ்வாறு தமது கடைகளை மூடியுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் படையினர் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தும் சம்பவங்கள் கடந்த வருடங்களில் பதிவாகியிருந்த நிலையில்  இவ்வருடமும் மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்களை  படையினர் திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/141097

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிரமதானப்பணி இடம்பெற்றது.

இதன்போது இதனருகில் சிதைவடைந்திருந்த நினைவிடத்தின் அருகே இருந்த பற்றைகளை வெட்ட முற்பட்டபோது இராணுவத்தினர் அதற்கு அருகில் எதுவும் செய்யமுடியாது என அறிவுறுத்தினர்.

இதனையும் மீறி பற்றை துப்பரவு செய்யப்பட்டது. இதன்போது இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது இராணுவத்தினரும், பொலிசாரும் சிரமதானத்தை தடுக்க முற்பட்டனர்.

தீருவில் மைதானத்தில் மட்டுமே உங்களுக்கு நகரசபை அனுமதி உள்ளது. ஆனால் புலிச்சின்னங்கள் மீது எதையும் செய்யவேண்டாம் என அச்சுறுத்தியதுடன் ஒளிப்படங்கள் மூலம் அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது நான்கு இராணுவத்தினர் தொடர்ச்சியாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

c489a645-bc5d-4ea1-8ad8-58bcc154136a.jpg

17c8cc7b-0561-4c4a-ac09-931d49c828b2-2.jpg

67618db4-0d8b-4555-8ac0-fde55182b7b4.jpg

17c8cc7b-0561-4c4a-ac09-931d49c828b2-1.jpg

https://athavannews.com/2022/1312305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு!

மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1312466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ் . சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில்  மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 27ஆம் திகதி  மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1312428

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி!

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி!

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.

இதன் போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீள் கொண்டுவந்து, மனிதவளம், இயந்திர வளங்களை அங்கு பயன்படுத்தல் மற்றும் மரக்கன்றுகளை வழங்கல் எனும் தீர்மானமும், பிரதேச சபை ஒதுக்கீட்டில் நலிந்த மாவீரர்களின் குடும்பங்களிற்கு உதவும் வகையில் ஒதுக்கீடுகளை ஒரு பெயரில் மேற்கொள்ளவும் தவிசாளரினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணையை ஆதரித்து பேசிய அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தவிசாளர் சபையில் அறிவித்தார்.

தொடர்ந்து, சபையில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1312499

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தில் வர்த்தக நிலையங்களின் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டிய வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணை !

By VISHNU

25 NOV, 2022 | 12:30 PM
image

கே .குமணன்

மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 அன்று நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள தமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் தமிழ் தேசிய கொடிகளை கட்டி நினைவேந்தல் வார்த்தை அனுஷ்டிக்க தயாராகிவரும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

IMG_9493.jpg

முல்லைத்தீவு சந்தை பகுதி மற்றும் கடற்கரை வீதி ஆகிய வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு கொடிகள் கட்டப்பட்டு வர்த்தகர்கள் நினைவு நிகழ்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

IMG_2631.jpg

இந்த விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் வாரம் என்பது எமது உறவுகளை மனதிருத்தி அவர்களுக்கு அஞ்சலிக்கும் முகமாக எமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டநிலையில் எமது வர்த்தக நிலையத்துக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் எமது வர்த்தக நிலையத்தை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள வர்த்தகர்களிடம் எமது குடும்ப விபரம் போன்ற எம்மைப்பற்றிய தகவல்களை கேட்டு வினவியுள்ளனர்.

மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தும் எம்மை அச்சுறுத்துவதன் ஊடாக ஏனைய வர்த்தகர்களையும் பயப்பீதிக்குள் வைத்திருப்பதற்கும் அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கும் இவ்வாறான முறையில் புலனாய்வாளர்கள் செயற்படுகின்றனர்.

IMG_2609.jpg

இருந்தபோதிலும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது நாம் எமது உறவுகளுக்கு நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவோம். எனவும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/141193

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களது பெற்றோர் கௌரவிப்பு

By VISHNU

25 NOV, 2022 | 03:13 PM
image

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் யாழ்ப்பாணம். வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

IMG-20221125-WA0081.jpg

முன்னாள் போராளி செழியன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

IMG-20221125-WA0078.jpg

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின்போது மாவீரர்களது நினைவுரைகள் இடம்பெற்றன. பின்னர் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

IMG-20221125-WA0079.jpg

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20221125-WA0075.jpg

IMG-20221125-WA0076.jpg

IMG-20221125-WA0077.jpg

IMG-20221125-WA0072.jpg

IMG-20221125-WA0073.jpg

IMG-20221125-WA0071.jpg

https://www.virakesari.lk/article/141225

Link to comment
Share on other sites

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இரத்ததான முகாம்

image

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று முல்லைத்தீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 25) காலை 9 மணி முதல் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் தன்னார்வத்தோடு இணைந்த இளைஞர்கள் பலர்  இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இரத்ததானம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரத்த வங்கிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள், தாமும் இரத்தம் வழங்கப்போவதாக பாசாங்கு செய்து, இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  

அத்தோடு இரத்ததானம் தொடர்பில் கார்த்திகைப்பூ பொறித்த இலட்சனை ஒன்றினை தமது ஆடையில் அணிந்தவாறு இரத்ததான முகாமில் பங்கேற்ற இளைஞர்களை அங்கு வந்த பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இரத்ததான முகாம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் மாவீரா் நாள் நினைவு மண்டபம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று (25) மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

3 மாவீரா்களின் தாய் ஒருவா் மாவீரா்களுக்கான பொதுச் சுடரினை  ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடா்ந்து, அஞ்சலி நடைபெற்றது. 

அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோா்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளா்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)

image_b6608d4ce7.jpg
 

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பருத்தித்துறையில்-மாவீரா்-நாள்-நினைவு-மண்டபம்/71-308003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!

Vhg நவம்பர் 26, 2022
Photo_1669435438359.jpg

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மனி நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

https://www.battinatham.com/2022/11/blog-post_445.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டது!

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டது!

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) அடம்பன் பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த வழக்கு குறித்து சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் கூறுகையில், ‘மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் அனுஷ்டிக்க இருப்பதாகவும் இவ்வாறு பிரதேச மக்கள் இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம் பெறலாம் என்றும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்றைய தினம் அடம்பன் பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை இன் பிரிவு 106 பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற மன்னார் நீதவான் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட 6 நபர்களின் பெயரை குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அடம்பன் பொலிஸ் பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து குறித்த வழக்கை மீளப் பெறுவதாக தெரிவித்த நிலையில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்த்த பட்டுள்ளது’ என கூறினார்.

அதே நேரம் குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக இவ்வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1312611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மனி நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1312583

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

By DIGITAL DESK 5

26 NOV, 2022 | 12:36 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2022 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளனர்.

received_1288665805291289.jpeg

received_857481212337606.jpeg

received_821575092438833.jpeg

received_488590039760051.jpeg

தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் இருபத்தேழாம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

received_667994248322023.jpeg

அந்தவகையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்ப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

received_1152551628956128.jpeg

இதேவேளை உறவுகளின் போக்குவரத்து வசதி கருதி நட்டாங்கண்டலில் இருந்து 2 மணிக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து பாண்டியன் குளம் பாலிநகர் அம்பாள் புரம் ஊடாக ஒரு போக்குவரத்து சேவை இடம்பெறும் எனவும் விநாயகபுரத்தில் இருந்து 2 மணிக்கு ஆரம்பிக்கும் மற்றுமொரு பேருந்து சேவை துணுக்காய் மல்லாவி ஊடக இடம்பெறும் எனவும் உறவுகள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்துமாறும் கோரியுள்ளனர்.

received_664661178651531.jpeg

அத்தோடு மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

received_700142061329305.jpeg

நினைவுக்கல்லுக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://www.virakesari.lk/article/141291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் மாவீரரின் பெற்றோர் கௌரவிப்பு

By DIGITAL DESK 5

26 NOV, 2022 | 01:57 PM
image

கிளிநொச்சி  பசுமைப்பூங்கா வளாகத்தில் நகரத்திற்கான மாவீரரின் பெற்றோர், உரித்துடையோர்களை  கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பகல் 11 மணிக்கு  உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

IMG20221126122833.jpg

IMG20221126122936.jpg

IMG20221126122941.jpg

இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

IMG20221126123108.jpg

IMG20221126123137.jpg

இந்நிகழ்வில் மாவீர்ர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்  தமிழ் உணர்வாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/141304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள்
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள்.
இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது.
இவர்களை நினைவுகூரத் தடை விதிக்கின்றனர்.
இவர்களின் கல்லறைகளைக்கூட இடித்து தள்ளுகின்றனர்.
ஆனால் தமிழ் மக்கள் கொட்டும் மழையிலும் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல,
மாறாக இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.
Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.