Jump to content

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!

By T. SARANYA

07 DEC, 2022 | 01:27 PM
image

கொழும்பு கோட்டை  ரயில்  நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட  விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்  நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக  ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இதன்போது  கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச்  செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

https://www.virakesari.lk/article/142431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீட் பிடிக்கும் ஆட்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ?

இரவு கொழும்பில் ஏறி காலையில் திருகோணமலை இறங்கும் புகையிரதம் ஒன்றில் ஏறினேன்.  அன்றுடன் ரயில் பயணம் வெறுக்காத  குறை. ஆசனம் முன்பதிவு செய்தும் அல்லோல கல்லோலப்பட்டேன். 

இரயில் பிளாட்போமில் வந்து நின்றதும் எல்லோரும் சீட் பிடிக்க பாய்ந்தடித்து ஓடியது முன்பு ஊரில் விமானம் குண்டுவீசவரும் போது பதுங்கு குழியினுள் விழுந்தடித்து ஓடுவதை நினைவுபடுத்தியது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வந்து நின்றதும் 

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

7 hours ago, ஏராளன் said:

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

இரவு  மெயில் ரயில் எண்டால் நான் சில வேளைகளில் KKS  போய் சீற் பிடித்து வந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

 

அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை ஏப்பம் விட்டு தின்ற காசில், சொந்த வாகனங்களில் பவுசாய் திரியும்போது குடிமக்கள் எஞ்சிய மிச்சம் சொச்சத்தில் உருவாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள மிருகத்தனமாய் போட்டி போடுகின்றார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னான நிலை.

£600-1200 தெண்டமாக அழுது, ஏதோ மரண தண்டனை கைதியின் எலெக்ரிக் கதிரையில் இருப்பது போல் 11 மணி நேரம் காலை மடக்கி வைத்து இருந்து, ஒரு பெட்டி போன்ற அறையில் உச்சா, கக்கா எல்லாம் போய், அதுக்கு பக்கத்தில் வைத்திருக்கும் சாப்பாடை கவ்வி மென்று முழுங்கி,

இலண்டனில் இருந்து போகும் விமான பயணத்தை விட ஊரில் இருக்கும் பலூன் பஸ்சிலோ அல்லது 1ம் வகுப்பு ரயிலிலோ போவது அவ்வளவு கடினம் இல்லை.

இலங்கையில் இப்போ 3ம் வகுப்பு (பழைய மர சட்ட இருக்கைகள்) இல்லை என நினைக்கிறேன். 2,1 தான்.

1ம் வகுப்பு முன் பதிவு செய்திருந்தால் யாரும் ஏறி சீட்டில் இருக்க மாட்டார்கள், இருந்தாலும் காவலாளியை விட்டு தூக்கி விடலாம்.

ஒரே பிரச்சனை - மலசலகூடம். நாசமறுப்பார் நாறி வச்சிருப்பார்கள்😷.

ஆகவே பயணம் முழுவதும் கழிவகற்றாமல் கடத்த முடிந்தால் போதும்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.