Jump to content

நடத்தை விதியை மாற்றியது கிரிக்கெட் அவுஸ்திரேலியா: வோர்ணர் அணித்தலைவராகுவதற்கு வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடத்தை விதியை மாற்றியது கிரிக்கெட் அவுஸ்திரேலியா: வோர்ணர் அணித்தலைவராகுவதற்கு வாய்ப்பு

By DIGITAL DESK 3

21 NOV, 2022 | 11:00 AM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் நடத்தை விதிமுறைகளை கிரிக்கெட் அவுஸ்திரேலியா மறுசீரமைத்துள்ளது. இதனால், அதிரடி வீரர் டேவிட் வோர்ணர் அணித்தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் டேவிட் வோர்ணர் தலைமைப் பதவிகளை வகிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுடனான டெஸ்;ட் போட்டியின்போது,  அவுஸ்திரேலிய வீரர் கெமரோன் பான்குரொப்ட் பந்தை மணற்கடதாசியினால் சேதப்படுத்தினார். 

இதையடுத்து, பான்குரொப்பட் போட்டிகளில் பங்குபற்ற 9 மாத தடை விதிக்கப்பட்டதுடன், அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு வருட போட்டித் தடையும் அதன்பின்னரான ஒரு வருடத்துக்கு தலைமைப் பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உப தலைவராகவிருந்த டேவிட் வோர்ணருக்கு ஒரு வருட போட்டித் தடையுடன் தலைமைப் பதவிகளை வகிப்பதற்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் புதிய நடத்தை விதிகளின்படி, வீரர்கள் தம் மீதான தடைகள் தொட்ரபில் செய்யக் கோருவதற்கு  விண்ணப்பிக்க முடியும். முந்தைய நடத்தை விதிகளில், ஒரு தடவை  தடையை ஏற்றுக்கொண்ட பின்னர், அது தொடர்பில் மீளாய்வு  செய்யக் கோருவதற்கு  அனுமதி இருக்கவில்லை.

David-Warner--cricketer---Australia-1200

புதிய நடத்தை விதிமுறைகளின்படி போட்டியாளர்களும், அணியின் பயிற்றுநர்கள், முகாமையாளர்கள் முதலானோரும் உண்மையான மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்குத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணி;த்தலைவரகா பட் கம்மின்ஸும் இருபது20 அணித் தலைவராக ஆரோன் பின்ச்சும் விளங்குகின்றனர்.

36 வயதான டேவிட் வோர்ணர் மீதான தடைகள் நீக்கப்பட்டால் அவர் இருபது20 அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அத்துடன், பட் கம்மின்ஸின் கீழ் உப தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவராக ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் ஹஸல்வூட் அலெக் கெறி ஆகியோரையும் கொண்ட குழுவில் டேவிட் வோர்ணர் உள்ளார்.

https://www.virakesari.lk/article/140687

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.