-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257ஆகும். வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை – 17,622 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 அதன் சதவீதம் – 15.6%. தேசிய மட்டத்தில் நிலை – 6 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்ட நிலை யாழ். கல்வி வலயம் – (25.37%) – 1 பொலநறுவை வலயம் – (21.71%) – 2 தங்காலை வலயம் – (21.51%) – 3 கம்பஹா கல்வி வலயம் – (21.44%) – 4 வலஸ்முல்ல வலயம் – (20.80%) – 5 பதுளை கல்வி வலயம் – (20.41%) – 6 நிக்கரவெட்டிய வலயம் – (20.03%) – 7 https://thinakkural.lk/article/236305 -
பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 25 ஆம் திகதி, திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ததுடன், அவரது இராஜிநாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/236332
-
By nunavilan · பதியப்பட்டது
இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள். மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை. இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=170201 -
By nunavilan · பதியப்பட்டது
யாருக்கும் தலைவணங்காத நாட்டை உருவாக்கி வருகிறோம் அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=170204 ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை! அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=170202 -
By nunavilan · பதியப்பட்டது
பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் விக்டோரியா நூலண்ட் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார். மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை விக்டோரியா நூலண்ட் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியா நூலண்ட் ஜனவரி 28 முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலங்கை, நேபாளம், இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்குப் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=170189
-
Recommended Posts