Jump to content

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார்.

ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார்.

ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடின் பெருமிதம் கொண்டார்.

ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாடு அணு ஆயுதங்களை தற்காப்புப் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கும் என்று புடின் முன்பு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1314586

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாய் சேகர் மாதிரியே பிஹேவ் பண்றார் புட்ஸ்.

சின்னபயல் உக்ரேன் - ஒரே குத்துல யூரின் டாங்கை உடைச்சிட்டாப்பல 🤣.

இப்ப இழந்த பெருமையை மீட்க நானும் ரவுடிதான் என்கிறார்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடின் பெருமிதம் கொண்டார்.

எலே! கிறிஸ்மஸ் புதுவரியம் கிட்டடியில வருகுதெல்லே! அதான் பூந்திரி, மத்தாப்பு, சக்கரவாணம் எல்லாம் தங்களிட்ட இருக்காம் எண்டு பெருமைப்படுறார்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை. 

இங்கே இதை பலர் பகிடியாக எடுக்கின்றனர். 

வெளிப்படையாக  புலப்படாத, முன் அறிவுக்கு எட்டாத,   அணு ஆயுத பிரயோத்துக்கான நிகழ்தகவு  உருவாகி இருக்கிறது,  அதிகரித்தும் வருகிறது. ஒன்றில் ஒரு பகுதி பாவிக்கலாம் அல்லது இரு பகுதியும் ஏறத்தாழ ஒரே தருணத்தில் பாவிக்கலாம்; அல்லது இடை வெளி விட்டு பாவிக்க கூடிய சந்தர்பங்களும் இருக்கிறது. மற்றது, விபத்தாகவும் பாவிக்க கூடிய நிலை இருக்கிறது.

ஜெர்மனி குறைந்து இருப்பதாக சொல்லி இருப்பது இரு விடயங்களில் அடிப்படையாக முரணாக உள்ளது - ஜெர்மனி நேரடியாக முகம் கொடுக்கவில்லை; மற்றது ஜெர்மனியிடம் அணு ஆயுதம் இல்லை.  

அனால், us, tactical nuclear ஆயுத முன்பிரயோக கோட்பாட்டை வைத்து இருக்கிறது. 

ஒன்று கேட்கிறேன் - களத்தில் உள்ள இரு பக்க  தளபதிகளின் மற்றும் அவர்களின் அரச அதிபர்களின், cabinet இன் சிந்தனைகளை எவராவது எதிர்வு கூற முடியுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாய் சேகர் மாதிரியே பிஹேவ் பண்றார் புட்ஸ்.

சின்னபயல் உக்ரேன் - ஒரே குத்துல யூரின் டாங்கை உடைச்சிட்டாப்பல 🤣.

இப்ப இழந்த பெருமையை மீட்க நானும் ரவுடிதான் என்கிறார்🤣.

உண்மைதான்

ஆனால் குலைக்கிற நாய்  கடிக்காது  என்று  கடந்து போகும் விடயமல்லவே  இது?😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இது உண்மை. 

இங்கே இதை பலர் பகிடியாக எடுக்கின்றனர். 

வெளிப்படையாக  புலப்படாத, முன் அறிவுக்கு எட்டாத,   அணு ஆயுத பிரயோத்துக்கான நிகழ்தகவு  உருவாகி இருக்கிறது,  அதிகரித்தும் வருகிறது. ஒன்றில் ஒரு பகுதி பாவிக்கலாம் அல்லது இரு பகுதியும் ஏறத்தாழ ஒரே தருணத்தில் பாவிக்கலாம்; அல்லது இடை வெளி விட்டு பாவிக்க கூடிய சந்தர்பங்களும் இருக்கிறது. மற்றது, விபத்தாகவும் பாவிக்க கூடிய நிலை இருக்கிறது.

ஜெர்மனி குறைந்து இருப்பதாக சொல்லி இருப்பது இரு விடயங்களில் அடிப்படையாக முரணாக உள்ளது - ஜெர்மனி நேரடியாக முகம் கொடுக்கவில்லை; மற்றது ஜெர்மனியிடம் அணு ஆயுதம் இல்லை.  

அனால், us, tactical nuclear ஆயுத முன்பிரயோக கோட்பாட்டை வைத்து இருக்கிறது. 

ஒன்று கேட்கிறேன் - களத்தில் உள்ள இரு பக்க  தளபதிகளின் மற்றும் அவர்களின் அரச அதிபர்களின், cabinet இன் சிந்தனைகளை எவராவது எதிர்வு கூற முடியுமா?

இது பற்றி கடைசியாக நாம் விவாதித்த திரியில் இதை எழுதி இருந்தேன். 
அணு ஆயுத பாவனை இரு வகைப்படும்

1. மூலோபாய அணு ஆயுத பாவனை (Strategic Nuclear Weapons use)

மூலோபாய அணு ஆயுதம் ஒரு ரஸ்ய ஜனாதிபதியால் எப்போ பிரயோகிக்க பட முடியும் என்பதை விபரிக்கும் ஒரு வரையறை உள்ளது. அதற்கு என்று ஒரு protocol உண்டு. அதற்கு ஜனாதிபதியும் தளபதிகளும் கட்டுப்பட்டோர்.

இதன்படி ரஸ்யாவின் இருப்பு கேள்விக்குறி (existential threat to Russia) என்றால் மட்டுமே ஒரு ரஸ்ய ஜனாதிபதி அணு ஆயுதத்தை பிரயோகிக்க முடியும்.

இந்த நிலைப்பாட்டில் ஒரு மாற்றமும் இல்லை என பல தடவைகள் புட்டினும், லெவெரோவ் உம், பெல்ஸ்கோவும் கூறி உள்ளனர். மேலே ஆதவன் பாதி விழுங்கி விட்ட செய்தியில் உண்மையில் புட்டின் இதை மீள வலியுறுத்தியே உள்ளார். அதாவது நாங்கள் பைத்தியகாரத்தனமாக அணு ஆயுதத்தை பாவியோம் என்று.

அத்துடன் உக்ரேனிடம் அணு ஆயுதம் இல்லை. ஆகவே ரஸ்யாவுக்கு எதிராக நேட்டோ மட்டுமே அணு ஆயுதத்தை பாவிக்க முடியும். யுத்தத்தில் நேட்டோ இறங்காத வரை - ரஸ்யாவுக்கு existential threat இந்த யுத்தத்தில் வர வாய்பில்லை. உக்ரேன் ரஸ்யாவின் நிலத்தில் ஒரு இஞ்சியைதானும் கைப்பற்றவில்லை.

ஆகவே ரஸ்யா உக்ரேனுக்காக மூலோபாய அணு ஆயுதத்தை பாவித்து, தானும் அழிந்து உலகையும் அழிக்காது. அப்படி செய்வதாயின் புட்டின், அவரின் கபெனிட், ஆயுதத்தை பாவிக்கும் அதிகாரிகள் வரை மூளை பிசகினால் மட்டுமே சாத்தியம்.

2. தந்திரோபாய அணு ஆயுத பாவனை

மீண்டும் இதை நேட்டோ செய்யாது. உக்ரேனால் முடியாது. ஆகவே ரஸ்யா உக்ரேனின் ஒரு நகர் மீது ஒரு குண்டை போடலாம் அல்லது செரெபியா உலை மீது தாக்கி கசிவை ஏற்படுத்தலாம்.

ஆனால் இங்கேதான் அமெரிக்காவின் எச்சரிக்கை நேரடியாக புட்டினுக்கு வழங்கபட்டுள்ளது. மூலோபாய ஆயுதத்தை உக்ரேனில் பாவித்தால் - பாரம்பரிய ஆயுதத்தை பாவித்து உங்கள் கருங்கடல்  கடற்படை அணியை முழுமையாக ஒழிப்போம். 

இதை செய்யும் வல்லமை அமெரிக்காவுக்கு உண்டு என புட்டினுக்கு தெரியும்.

இப்படி அமெரிக்கா செய்தால் மூலோபாய அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் ரஸ்யாவின் இயலுமை 90% க்கு மேல் முடக்கப்படும்.

அது மட்டும் இல்லை - உக்ரேனில் தந்திரோபாய/மூலோபாய அணு ஆயுத பாவனை தம்மை பொறுத்தவரை ஒரு இலட்சுமணரேகை என சீனா மிக தெளிவாக புட்டினுக்கு விளக்கி விட்டது.

மீறி அணு ஆயுதத்தை பாவித்தால் அமெரிகாவிடம் மட்டும் அல்ல, சீனாவிடமும் அடி வாங்க வேண்டி வரும் என புட்டினுக்கு தெரியும்.

ஆகவே புட்டினுக்கு அணு ஆயுத விடயத்தில் செக் மேட் வைக்கப்பட்டுள்ளது.

இப்போ அவருக்கு கொஞ்சம் கவுரவமாக face saving விதமாக இந்த சிக்கலில் இருந்து வெளிவர மேற்கு ஒரு வழியை தேடுகிறது. இராஜதந்திரிகள் இதை off ramping என்பார்கள்.

இப்போ புட்டின் அணு ஆயுதம் பற்றி கதைப்பது - இந்த இறுதி டீலில் தனது நிலையை அதிகரிக்கவே.

ஆங்கிலத்தில் nuclear sabre-rattling என்பார்கள்.

https://www.spectator.co.uk/article/the-red-line-biden-and-xis-secret-ukraine-talks-revealed/

👆🏼பைடன் - சொல்ஸ் - ஷி இடையே நடந்த உக்ரேன் பற்றிய இரகசிய உரையாடல் 

1 hour ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் குலைக்கிற நாய்  கடிக்காது  என்று  கடந்து போகும் விடயமல்லவே  இது?😪

நிச்சயமாக ஆனால் நாயின் வாயை கட்டும் வித்தை தெரிந்தால் இதை இலகுவில் கையாளலாம் (மேலே வாசிக்கவும்).

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முக்கியமான விடயம்.

வாழ்க்கையில் ஒரு போதும் பிளக்மெயில் பண்ணுவோருக்கு அடிபணியக்கூடாது.

இப்போ புட்ஸ் அணுஆயுதம் பாவிப்பார் என பயந்து உக்ரேனை தாரை வார்த்தால், இன்னும் 5 வருடத்தில் போலந்து…10 வருடத்தில் ஜேர்மனி…பிரான்ஸ் என்று போகும்.

ஆகவே மேற்கு+சீனா அணுகும் முறையே சிறந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இன்னுமொரு முக்கியமான விடயம்.

வாழ்க்கையில் ஒரு போதும் பிளக்மெயில் பண்ணுவோருக்கு அடிபணியக்கூடாது.

இப்போ புட்ஸ் அணுஆயுதம் பாவிப்பார் என பயந்து உக்ரேனை தாரை வார்த்தால், இன்னும் 5 வருடத்தில் போலந்து…10 வருடத்தில் ஜேர்மனி…பிரான்ஸ் என்று போகும்.

ஆகவே மேற்கு+சீனா அணுகும் முறையே சிறந்தது.

நான் நினைக்கிறேன் சண்டை  தொடங்கியவுடனேயே இந்த  முடிவுக்கு மேற்கு  வந்து விட்டது  என்று?

அதனால்  தான் மக்ரோன் உடனேயே புட்டினை  தோற்கடிக்கக்கூடாது என்றாரல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் சண்டை  தொடங்கியவுடனேயே இந்த  முடிவுக்கு மேற்கு  வந்து விட்டது  என்று?

அதனால்  தான் மக்ரோன் உடனேயே புட்டினை  தோற்கடிக்கக்கூடாது என்றாரல்லவா?

ஓம்.

இது அப்படியே 1930களின் மீள் ஒளிபரப்பு.

அப்போ சேர்ம்பலீன் இப்போ மேர்கல். 

அப்போ அடொல்வ் இப்போ விளாடிமிர்.

இதை இந்தமுறை மேற்கு ஐரோப்பா+ வட அமெரிக்கா மிக விரைவாக இனம் கண்டு விட்டது.

உண்மையில் 2014 இல் இறுக்கி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஓம்.

இது அப்படியே 1930களின் மீள் ஒளிபரப்பு.

அப்போ சேர்ம்பலீன் இப்போ மேர்கல். 

அப்போ அடொல்வ் இப்போ விளாடிமிர்.

இதை இந்தமுறை மேற்கு ஐரோப்பா+ வட அமெரிக்கா மிக விரைவாக இனம் கண்டு விட்டது.

உண்மையில் 2014 இல் இறுக்கி இருக்க வேண்டும்.

இந்தப்போரின் பின் அணுஆயுதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு  ஒன்றுமே புடுங்கமுடியாது  என்பது  நிரூபிக்கப்படும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இந்தப்போரின் பின் அணுஆயுதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு  ஒன்றுமே புடுங்கமுடியாது  என்பது  நிரூபிக்கப்படும்??

ஓம்.

அணு ஆயுத பாவனை என்பது இரு பெரிய அணுஆயுத நாடுகள் போரிடும், அல்லது முறுகிகொள்ளும் போது ஒரு விபத்தாக நடக்கவே வாய்ப்பு அதிகம், திட்டமிட்ட பாவனையை விட.

கியுபா மிசைல் பிணக்கு நேரம் இதுக்கு வாய்ப்பு இருந்தது.

நேட்டோ எட்டி நின்று ஒரு அணு ஆயுதநாடல்லாத உக்ரேன் மூலம் செய்யும் போரில் விபத்தான அணு ஆயுத பாவனைக்கும் வாய்ப்பு குறைவு.

உண்மையில் இந்த யுத்தத்தை ரஸ்யா வென்றால் அடுத்து நேட்டோ-ரஸ்யா நேரடி மோதல் வெடிக்கும்.

அப்போ இரு வகை அணு ஆயுத பாவனைக்குமான நிகழ்தகவு அதிகரிக்கும்.

ஆகவே,

அணு ஆபத்தில் இருந்து உலகை காக்க இந்த போரில் உக்ரேன் வெல்ல வேண்டும் ஆனால் ரஸ்யா முழுமையாக தோற்கடிக்கபடக்கூடாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

.

ஆகவே,

அணு ஆபத்தில் இருந்து உலகை காக்க இந்த போரில் உக்ரேன் வெல்ல வேண்டும் ஆனால் ரஸ்யா முழுமையாக தோற்கடிக்கபடக்கூடாது.

அதே

மக்ரோன் குறிப்பிட்டதும் அதே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கிரிகிஸ்தானில் வைத்து புட்டின் சொன்னது:

அமெரிக்கா எதிரியின் அணுஆயுத வல்லமையை இல்லாதொழிக்கும் தாக்குதல் (disarming) பற்றி முன்னர் கூறி உள்ளது.

அதேபோல் அணு ஆயுதபாவனை பற்றி முன்னரும் பலநாடுகள் கூறி உள்ளன.

எதிரி நாடு ஒன்று அணு ஆயுதத்தை ஏவியபின் ரஸ்யா ஏவுவது அதிக பலன் தராது, ஏனெனின் அந்த ஆயுதங்கள் எப்படியும் ரஸ்யாவின் நிலத்தில் வீழும்.

ஆகவே யுத்தத்தில் ரஸ்யா அணு ஆயுதத்தை முதலில் பாவிக்காது என்ற எம் நிலைப்பாட்டை, மீள்பரிசீலனை செய்வது பற்றி, யோசிக்கிறோம்.

1. புட்டின் தெளிவாக தனக்கும் ரஸ்யாவுக்கும் உள்ள அணுஆயுத பாவனை தொடர்பான கட்டுப்பாடு பற்றி விளங்கி கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது

2. மேலே அவர் கூறி இருப்பது ஒரு எச்சரிக்கை என்பது போல பட்டாலும், உண்மையில் அணு ஆயுதத்தை பாவிக்க முடியாமல் வைக்கப்பட்டுள்ள செக் மேட்டை உடைக்க முடியாமல் - அதே நேரம் அணு ஆயுதம் பாவிப்பேன் என்ற மிரட்டலை கைவிடவும் விரும்பாமல் அவர் திணறுவதையே இது காட்டுகிறது என நான் கருதுகிறேன்.

# முட்டுசந்தில் புட்லர்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.