கருத்துக்கள உறவுகள் கிருபன் பதியப்பட்டது December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 8, 2022 மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் மீது முட்டை வீசப்படுவது இது முதற் தடவை அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ் மற்றும்அவரது மனைவி ராணி கமிலா யார்க் நகரத்துக்கு சென்றபோது அவர்கள் மீது 23 வயதான இளைஞர் ஒருவர் முட்டை வீசியிருந்தார் என்பது, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மன்னர்-சார்லஸ்-மீது-மீண்டும்-முட்டை-வீச்சு/50-308636 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 7 hours ago, goshan_che said: தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார். செய்தி கனமானது இவர் தங்களுக்கு தலைமைதாங்கும் அரசராக இருக்க தகுதியற்றவர் உண்மையும் அது தானே?? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 7 hours ago, goshan_che said: தனியே முட்டையாக எறியாமல் கொஞ்ச வெங்காயம் பச்சை மிளகாயையும் அரிந்து எறிந்திருந்தால் மன்னர் பெருமான் ஆம்லெட் ஆவது போட்டிருப்பார். இங்கிலாந்துக்காரருக்கு…. குறி பார்த்து எறியத் தெரியாதா? 😂 இரண்டாவது தடவையும். முட்டை பக்கத்திலை தான் விழுந்து உடைஞ்சிருக்கு. 🤣 நான்… பார்த்து, ரசித்த… முட்டை அடி என்றால்… ஜெயலலிதா ஆட்சியில்… மதுரையில் வைத்து, சுப்பிரமணிய சாமிக்கு அடித்த முட்டைதான். அடித்த அடியில்…. தலை, வேட்டி எல்லாம் மஞ்சளாக்கி வழிந்து ஓடியிருந்தது. 😁 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 (edited) மகாராணியார் ஒரு விபத்து. இவர்களில் 1,2ம் எலிசபெத்தை தவிர மிகுதி எல்லாரும் தகுதியற்றோரே. ஆனால் நாட்டின் அடிமைபுத்தி இப்போதைக்கு மாறாது. @விசுகு Edited December 8, 2022 by goshan_che 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 1 hour ago, தமிழ் சிறி said: இங்கிலாந்துக்காரருக்கு…. குறி பார்த்து எறியத் தெரியாதா? 😂 இரண்டாவது தடவையும். முட்டை பக்கத்திலை தான் விழுந்து உடைஞ்சிருக்கு. 🤣 நான்… பார்த்து, ரசித்த… முட்டை அடி என்றால்… ஜெயலலிதா ஆட்சியில்… மதுரையில் வைத்து, சுப்பிரமணிய சாமிக்கு அடித்த முட்டைதான். அடித்த அடியில்…. தலை, வேட்டி எல்லாம் மஞ்சளாக்கி வழிந்து ஓடியிருந்தது. 😁 நாங்கள் ஒரு ஒன்லைன் எக் தொரோயிங் கோர்ஸ் ஆரம்பிப்பமா? நல்ல காசு பார்க்கலாம்🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 3 minutes ago, goshan_che said: நாங்கள் ஒரு ஒன்லைன் எக் தொரோயிங் கோர்ஸ் ஆரம்பிப்பமா? நல்ல காசு பார்க்கலாம்🤣 அதோடை…. ரொமாட்டோ தொரோயிங் கோர்சும் ஆரம்பித்தால் இன்னும் நல்லது. 😂 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 10 minutes ago, தமிழ் சிறி said: அதோடை…. ரொமாட்டோ தொரோயிங் கோர்சும் ஆரம்பித்தால் இன்னும் நல்லது. 😂 எக் அண்ட் டொமேட்டொ தொரோயிங் கம்பையிண்ட் கோர்ஸ். இந்த கோசில் சேர்ந்தால் ஒரு கிலோ முட்டைகோசு இனாம்! 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts