Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழருக்குள் வாழும் சிங்கள உயர் பிரிவினராகிய „கொவிகம’பிரிவினர்!… ஏலையா க.முருகதாசன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்குள் வாழும் சிங்கள உயர் பிரிவினராகிய „கொவிகம’பிரிவினர்!… ஏலையா க.முருகதாசன்.

cover-1-648x510-1-648x470.jpg

குறிப்பாக யாழ் குடாநாட்டுக்குள் தமிழர்களாக மாறிய சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என இவ்வாண்டு ஆரம்பித்தில் ஒரு பதிவை எனது முகநூலில் இட்டிருந்தேன்.

ஒரு சிலரால் அதை சீரணிக்க முடியாதிருந்தது.எப்பொழுதும் அது எவராக இருந்தாலும் தமக்குச் சாதகமில்லாத தகவல்களோ செய்திகளோ வந்தால் அவை கசக்கத்தான் செய்யும்.

ஐந்து பரம்பரைக்கு மேற்பட்டு மொழியாலும் பண்பாடுகளாலும் பெற்றுக் கொண்ட உணர்வுகளாலும் ஒருவர் தமிழராக வாழ்கையில் அவரிடம் நீ சிங்கள கொவிகம வம்சாவழியைச் சேர்ந்தவன் என்று சொன்னால் அதை அவரால் சீரணிக்க முடியாது.

ஆனால் அவர் கொவிகம என்ற வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதும் இல்லாது விடாது.தான் சிங்கள வம்சா வழியைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு இன்னொரு காரணம் சிங்களவனாக இருக்க விரும்பாததாகவும் இருக்கலாம்.

நீண்ட பல ஆண்டுகளானக இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் „கொவிகம’ பிரிவினர்: தமிழருக்குள் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்பதை அறிந்து கொண்டதும் அந்த அய்வுகளை நிறுத்தியது மட்டுமல்ல அதை வெளியில் சொல்லவும் தயங்கினார்கள். அதனைத் தடுப்பதில் தமிழ் அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்தது.

ஏன் இந்த வரலாற்றை மூடிமறைத்தார்கள் என்பதற்கு இரண்டு காரணங்கள் முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன.

முதலாவது காரணமாக தமிழர் பிரிவிற்குள் தாமே முதன்மையானவர்கள் மற்றைய அனைவரும் தமக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மேற்குடியானவர்களின் மனப்போக்குக்கு இது தடையாக இருந்தமை.

இலங்கை அரசிற்கு அது சாதகமாகிவிடும் என்பதற்காகவுமேயாகும்.

இன்றுவரை தம்மையே தமிழருக்குள் முதன்மையானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு தம்மைவிட உயர்ந்த பிரிவினர் தமிழ்ச் சமூகத்துக்குள் வாழ்வதை சகிக்க முடியாமையும் ஏற்றுக் கொள்ள முடியாமையுமேயாகும்.

„கொவிகம’ சிங்களச் சமூகத்திற்குள் எப்பிரிவு என்றால்,இவர்கள் விவசாயிகளாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும், அரச திணைக்களங்களில் அமைச்சுப் பணிமனைகளிலும்,சிங்கள மன்னர்களின் காலத்தில் சிற்றரசர்களாகவும்,மன்னர்களாகவும், அரச சபைகளில் பெரும் அதிகாரிகளாகவும் இருந்தவர்கள்(ஆதாரம்:தாய்வீடு பத்திரிகையில் திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரை வழியாக)

இவர்கள் எவ்வாறு தமிழ்ச சமூகத்திற்குள் கலந்தார்கள் என்ற ஆய்வுக்கு முன்னர்,தமிழகத்திலிருந்த பிரிவினரோடு இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் இருக்கும் பிரிவினரை ஒப்பிடுகையில்,இராஜராஜ சோழன் அனைத்துப் பிரிவினரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறான் என்பதையொட்டிப் பார்க்கையில் தமிழகத்திலுள்ள பிரிவினர் அனைவரும் இலங்கையில் இருக்கையில் தமிழகத்திலில்லாத ஒரு பிரிவினர் கொவிகம வம்சாவழிப் பிரிவினர்தான் என்பது உண்மையாகின்றது.KAN-300x218.jpg

இந்த கொவிகம பிரிவினர் எங்ஙனம் தமிழ்ச சமூகத்திற்குள் வந்தார்கள் என்ற ஆய்வு ரீதியாகப் பார்க்கையில் மன்னர் காலத்தில் தமிழக மன்னர்களின் இலங்கை மீதான படையெடப்புகளின் போது அதனை எதிர்த்த நின்றவர்களின் முதன்மையாக இருந்தவர்கள் கொவிகம என்ற சிங்கள உயர்குடிப் பிரிவினரே.இன்றும் நீங்கள் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் சிங்கள கொவிகம பிரிவினர்தான் சிங்கள வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதும்,அவர்கள்தான் முப்படைகளிலும் அரச திணைக்களங்களிலும்,சிலர் அமைச்சகர்களாக இருக்கிறார்கள் என்பதுடன் விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்தவர்கள் என்பதுமாகும்.

சோழர்கள் பாண்டியர்களை எதிர்;த்த இவர்களை பாண்டியர்களும் சோழர்களும் இவர்களை சிறைபிடித்து வந்து தமிழர் பகுதிகளில் குடியமர்த்தினார்கள்.அத்துடன் சிங்கள மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்ட போதும் வடபுலம் நோக்கியும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.(ஆதாரம்:இலங்கையில் தமிழ்ப் பண்பாடு)

இவர்களுடைய குடிபரம்பல் ஆங்காங்கே ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு தீவு போல இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்திலிருந்து இருபது முப்பது குடும்பங்களாக இருப்பார்கள்.

குறிப்பாக கொவிகமவினர் சங்கானை,அச்சுவேலி,சுண்ணாகம்,தெல்லிப்பழை, மல்லாகம்,சுளிபுரம்,தொல்புரம்,கொடிகாமம்,சாவகச்சேரி,உடுப்பிட்,கரணவாய்,அல்வாய்,நாரந்தனை,வேலணை,கரவெட்டி,வயாவிளான் ஆகிய இடங்களிலும் குடநாட்டுக்கு வெளியேயும் பரவலாக வாழுகின்றனர்.

இவர்களுக்கும் தமிழ்ச்சமூக மேற்குடியினர் என்று சொல்லப்படுகிறவர்களுக்குமிடையில் ஒரு உள்ளக பனிப்போர் இருந்து கொண்டேயிருக்கும்.

இவர்கள் இரு பகுதியினரும் திருமண உறவின் மூலம் இரந்த பந்தத்தினை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.அரிதாக நடக்கும் திருமண உறவுகளில்கூட இவர்கள் ஒட்டியம் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போலவே இருப்பார்கள்.

கொவிகம பிரிவினர் சிங்களச் சமூகத்தில் தமக்கு அடுத்தபடியாக உள்ள எவருடனும் திருமண உறவினை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.

தமிழ்ச் சமூக உயர் பிரிவினரைவிட கொவிகமப் பிரிவினரே உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் கொவிகமப் பிரிவினருக்கு ஒரு திமிர் உண்டு.சிங்கள கொவிகமப் பிரிவினருக்கு இருக்கும் வேகமாக கோப உணர்ச்சிப்படுதல், எதிர்த்து நின்று வாதாடுதல்,சண்டித்தனம் எல்லாம் உண்டு. சிங்களவர்களுக்கு உரிய குணங்களாகும் .ஆனால் நேர்மையானவர்கள் நயவஞ்சம் அற்றவர்கள்.

 

https://akkinikkunchu.com/?p=232271

 

 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாழ்பாணத்தில் வாழ்பவர்களிலும் கலப்பின தமிழர்கள் உள்ளார்களா? தூய தமிழர்கள் என்று  இல்லையா?

நான் நினைக்கிறேன் மனித இனம் என்பதே கலப்பபினம் தான் போலிருக்கிறது. அதற்குள்  இனத்தின் பெயரால் சண்டை, சச்சரவு, யுத்தம்,  கொலை, அழிவு……………..  

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிங்கள கொவிகமப் பிரிவினருக்கு இருக்கும் வேகமாக கோப உணர்ச்சிப்படுதல், எதிர்த்து நின்று வாதாடுதல்,சண்டித்தனம் எல்லாம் உண்டு. சிங்களவர்களுக்கு உரிய குணங்களாகும் .ஆனால் நேர்மையானவர்கள் நயவஞ்சம் அற்றவர்கள்.

 

Robert Knox அப்படி விளங்கவில்லை.

அவர் சொல்லியது - சிங்களவர்  தரம் குன்றிய தந்திர நயவஞ்சசகத்தை, அவர்களின் உயர்வான புத்திக் கூர்மையாக எண்ணுகிறார்கள்.

Robert Knox - சிங்களவர்களுடன் நட்பாகவும், சிங்களவர் மத்தியில் சிங்களரவர்களால் ஆபத்தான சந்தர்ப்பங்களிலும் வாழ்ந்தவர்.  


தமிழர்களை பற்றி   Robert Knox அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, Kadancha said:

 

Robert Knox அப்படி விளங்கவில்லை.

அவர் சொல்லியது - சிங்களவர்  தரம் குன்றிய தந்திர நயவஞ்சசகத்தை, அவர்களின் உயர்வான புத்திக் கூர்மையாக எண்ணுகிறார்கள்.

Robert Knox - சிங்களவர்களுடன் நட்பாகவும், சிங்களவர் மத்தியில் சிங்களரவர்களால் ஆபத்தான சந்தர்ப்பங்களிலும் வாழ்ந்தவர்.  


தமிழர்களை பற்றி   Robert Knox அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.

மெய்யுண்மை.😂

https://www.colombotelegraph.com/index.php/fell-into-a-well-at-night-fell-into-the-same-at-daytime/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இந்தா தொடங்கீற்று, குமுகாயப் பொறியியல்!
தமிழரை அக்குவேறு ஆணிவேராகப் பிரிப்பதென்றே முடிவுசெஞ்சீற்றாங்கள் போல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2022 at 08:28, island said:

அப்ப யாழ்பாணத்தில் வாழ்பவர்களிலும் கலப்பின தமிழர்கள் உள்ளார்களா? தூய தமிழர்கள் என்று  இல்லையா?

தூய இனம் என்று எங்கும் கிடையாது.

On 8/12/2022 at 08:28, island said:

நான் நினைக்கிறேன் மனித இனம் என்பதே கலப்பபினம் தான் போலிருக்கிறது. அதற்குள்  இனத்தின் பெயரால் சண்டை, சச்சரவு, யுத்தம்,  கொலை, அழிவு……………..  

🙁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பே கூறு கூறாகப் பிரிந்து எலக்சன் கேட்கப்போகுதாம்...இதுக்குள்ளை இந்த முருகையா இன்னமும் ஈசியாக கூறுபோட நினைக்குது....துவும் முக்கியமான இடங்களில்....இவரும் யாழில் அங்கத்தவரோ?

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.