கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி பதியப்பட்டது December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 8, 2022 சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை! சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள். நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம் அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று நாங்கள் கூறினோம். அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள் அவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம் ஒரு சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது. குறிப்பாக விழ விழ எழும்புவோம் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் அவ்வாறுதான் யுத்த காலத்தில் கூட எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக இந்த பகுதியில் மூன்று ஏக்கர் காணியினை கொள்வனவு செய்துள்ளோம் அதற்கு உதவிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு இந்தவீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வழங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற வாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்” என்றார். https://athavannews.com/2022/1314515 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை! சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1314503 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 கலாநிதி ஆறுதிருமுருகன் சிறப்பான வேலைகள் பலவும் செய்கின்றார்.......அன்னார் நீடூழி வாழவேண்டும்.......! 🙏 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 (edited) 23 minutes ago, suvy said: கலாநிதி ஆறுதிருமுருகன் சிறப்பான வேலைகள் பலவும் செய்கின்றார்.......அன்னார் நீடூழி வாழவேண்டும்.......! 🙏 கனடா செல்ல அமெரிக்க விசா எடுத்து, போகும் வழியி்ல், உறவினர்களைப் பார்கலாம் என்று சுவிஸ் விசா எடுக்கப்போன இடத்தில், அங்கிருந்த சிங்கள பெண் இவரது ஆவணமொன்றில் தவறை கண்டுபிடித்து, அமெரிக்க தூதரலாயத்துக்கு அறிவிக்க, அமெரிக்கவிசா ரத்தாகி, துர்க்கையம்மனால் தடுத்தாற்கொள்ளப்பட்டவர். பின்னர் ஆன்மீகவாதியாக, கனடா, சுவிஸ், இலண்டன் வந்து போனார். Edited December 8, 2022 by Nathamuni 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 அந்த சிங்களப் பெண்ணுக்கு நன்றி......! 😁 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 (edited) 11 minutes ago, suvy said: அந்த சிங்களப் பெண்ணுக்கு நன்றி......! 😁 அந்தப் பெண்ணின் பெயர்; லக்சுமி திசநாயக்கா!! 😁 Edited December 8, 2022 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 அட......அந்தப் பெண்னின்ர நேம் எல்லாம் க்நோ (know)பண்ணி வைத்திருக்கிறீங்கள்.......! 😂 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 (edited) 19 minutes ago, suvy said: அட......அந்தப் பெண்னின்ர நேம் எல்லாம் க்நோ (know)பண்ணி வைத்திருக்கிறீங்கள்.......! 😂 அவர் இனத்துவேசமாக செயல்படுகிறார் என்ற, பெட்டிசம் காரணமாக, விசா பகுதியில் இருந்து, மாத்தப்பட்டார்... 🤦♀️ 😎 Edited December 8, 2022 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கட்டடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 1 hour ago, Kapithan said: கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கட்டடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 500 மீட்டருக்குள் வரும். ஏன் கேட்டீர்கள்? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 20 minutes ago, goshan_che said: 500 மீட்டருக்குள் வரும். ஏன் கேட்டீர்கள்? செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும். இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியதில்லை. நாமே மறைத்துவிடுவோம். நாங்களே எல்லவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம். கவலைக்குரிய விடயம். 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 2 minutes ago, Kapithan said: செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும். இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். பள்ளி மாணவி கிருசாந்தியை மறக்க முடியுமா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 3 minutes ago, Kapithan said: செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும். இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியதில்லை. நாமே மறைத்துவிடுவோம். நாங்களே எல்லவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம். கவலைக்குரிய விடயம். எமது, எமக்கு முந்திய ஒரு பரம்பரைக்கு செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அடுத்த சந்ததிக்கு சந்தேகம்தான். இதில் கிருசாந்திக்கு ஒரு நினைவுக்கல் எழுப்புவது சிவலிங்கத்தை எழுப்புவதை விட எவ்வளவோ அனுகூலமானது என்பதும் மிக சரியே. ஆனால் அப்படி எழுப்ப விடுவார்களா? இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 (edited) 56 minutes ago, goshan_che said: எமது, எமக்கு முந்திய ஒரு பரம்பரைக்கு செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அடுத்த சந்ததிக்கு சந்தேகம்தான். இதில் கிருசாந்திக்கு ஒரு நினைவுக்கல் எழுப்புவது சிவலிங்கத்தை எழுப்புவதை விட எவ்வளவோ அனுகூலமானது என்பதும் மிக சரியே. ஆனால் அப்படி எழுப்ப விடுவார்களா? இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? யாழ் நூலகத்திற்கும் இதுதான் நடந்தது. இப்போது யாரும் இது எரிக்கப்பட்ட நூலகமாகக் கொள்வதில்லை. புத்தர் சிலை விவகாரம் என்பது நியாயமான சந்தேகமாத் தோன்றினாலும், இப்படி ஒரு சமய தூபி ஒன்று வருமுன்னர் புத்தர் சிலை வருமாக இருந்திருந்தால் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கும். இனிமேல் தாதுகோபுரம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. Edited December 8, 2022 by Kapithan Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 6 hours ago, Kapithan said: யாழ் நூலகத்திற்கும் இதுதான் நடந்தது. இப்போது யாரும் இது எரிக்கப்பட்ட நூலகமாகக் கொள்வதில்லை. புத்தர் சிலை விவகாரம் என்பது நியாயமான சந்தேகமாத் தோன்றினாலும், இப்படி ஒரு சமய தூபி ஒன்று வருமுன்னர் புத்தர் சிலை வருமாக இருந்திருந்தால் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கும். இனிமேல் தாதுகோபுரம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. யோசிக்க வேண்டிய, காத்திரமான கருத்து. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 8 hours ago, goshan_che said: இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? போட்டிக்கு சிலைகளை வைத்து கொள்ளட்டும் அதற்கு ஏன் முஸ்லிம் நாடுகள் போன்று பயமுறுத்துகிறார்கள். [யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். ] Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 7 minutes ago, விளங்க நினைப்பவன் said: போட்டிக்கு சிலைகளை வைத்து கொள்ளட்டும் அதற்கு ஏன் முஸ்லிம் நாடுகள் போன்று பயமுறுத்துகிறார்கள். [யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். ] 🤣 போட்டிக்கு இல்லை. எங்கள் மண்ணில் எமது கடவுளார் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே. அதில் யேசுவும் மேரியும் உள்ளடங்கலே. புத்தர் வரமுன்னம் போய் நாங்களாய் இடம்பிடிக்கிறோம் என்பது இவர்கள் சொல்வது. அதில் ஓரளவு நியாயம் இருப்பதாக தெரிந்தாலும், மேலே கற்பிதன் சொன்னது அதை விட நியாயாமாக படுகிறது எனக்கு. அறக்கட்டளை சொன்னது - அது சும்மா கப்ஸா -அவர்களே சிலையை துறந்து போட்டு அங்கால போய் ஒரு மட்டன் ரோலை லபக்கி இருப்பார்கள் - சும்மா ஒரு மைக் கிடைத்தபடியால் புனிதம், சிவபெருமான், பயபத்தி எண்டு அடிச்சு விட்டுள்ளார்கள். சனம் உண்டியலில் ஒரு ரூபாய் குத்திய போட்டமா, தின்னூறு சாத்தினமா போனமா எண்டுதான் இருக்கும்🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 2 minutes ago, goshan_che said: சனம் உண்டியலில் ஒரு ரூபாய் குத்திய போட்டமா, தின்னூறு சாத்தினமா போனமா எண்டுதான் இருக்கும்🤣 🤣 மைக் ஒன்று கிடைத்ததே எனபதற்காக சிவ பூமி அறக்கட்டளையினர் புனிதம், சிவபெருமான் , இறைபக்தி என்று அடிச்சு விட்டுள்ளார்கள் என்றால் மிகவும் நல்லது. பிரச்சனையே இல்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 சிவபூமியில் சிங்கள இராணுவ வெற்றிச் சின்னங்களும்.. அல்லாவும் புத்தரும் எழும்பும் போது சிவன் எழுவது மட்டும் தான் பிரச்சனையா..?! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 20 hours ago, nedukkalapoovan said: சிவபூமியில் சிங்கள இராணுவ வெற்றிச் சின்னங்களும்.. அல்லாவும் புத்தரும் எழும்பும் போது சிவன் எழுவது மட்டும் தான் பிரச்சனையா..?! 1) சிவ பூமி ? புரியவில்லை. யாழ்ப்பாணம் மட்டும்தான் சிவபூமியா? இந்த லிங்கத்தை பிரதிஸ்டை செய்திருக்க வேண்டிய இடம் பூனாவ தாண்டி வவுனியா வரும் எல்லைதான். 2) இங்கே பிரச்சனை சிவலிங்கம் அல்ல. அதன் அமைவிடம் மட்டுமே. பல்வேறு, சைவ சமய, பிற சமயம் தொடர்பான கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இங்கு செம்மணியில் எங்கள் இரத்த வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. குறிப்பு ; அண்ணமாருக்கும் அவர் வழி பிற சிறு தெய்வங்களுக்கும் எங்கள் சொந்த மண்ணில் இடமில்லை. ஆனால் எங்கள் சமயத்துடன் தொடர்பேயில்லாத அனுமானுக்கும், ஐயப்பனுக்கும் வானளவான கோயிலை எழுப்புகிறோம். பாவம் அண்ணமாரும் அவர் வழி சிறு தெய்வங்களும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் MEERA Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2022 6 hours ago, Kapithan said: அண்ணமாருக்கும் அவர் வழி பிற சிறு தெய்வங்களுக்கும் எங்கள் சொந்த மண்ணில் இடமில்லை. ஆனால் எங்கள் சமயத்துடன் தொடர்பேயில்லாத அனுமானுக்கும், ஐயப்பனுக்கும் வானளவான கோயிலை எழுப்புகிறோம். பாவம் அண்ணமாரும் அவர் வழி சிறு தெய்வங்களும். எங்கள் சொந்த மண்ணுடன் தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்? நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திருச்சபைகளை என்ன செய்வது? சிறு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் / நாட்டம் உள்ள உங்களின் வாகிபாகம் யாது இது தொடர்பாக? 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் MEERA Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2022 6 hours ago, Kapithan said: 2) இங்கே பிரச்சனை சிவலிங்கம் அல்ல. அதன் அமைவிடம் மட்டுமே. பல்வேறு, சைவ சமய, பிற சமயம் தொடர்பான கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இங்கு செம்மணியில் எங்கள் இரத்த வரலாறு புதைக்கப்பட்டுள்ளது நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 07/09/1996 இல் இருந்து 08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம். வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் & விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2022 (edited) 1 hour ago, MEERA said: நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 07/09/1996 இல் இருந்து 08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம். வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் & விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள். ஐயா, தாங்கள் சைவ சமயமா அல்லது இந்து மதமா? உத முதலில சொல்லுங்கோ. பிறகு மதவாந்தியை யார் எடுப்பது என்பதைப்பற்றித் தீர்மானிக்கலாம். 😏 மேரி மாதாவையும், யேசுநாதரையும் ஏற்றுக்கொண்டதுபோல, அனுமானையும் ஐயப்பனையும் கும்பிட ஆயத்தம், ஆனால் உள்ளூர் அண்ணமாரையும் சிறு தெய்வங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறீர்களா? ஏன் அப்படி ? 1 hour ago, MEERA said: நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 07/09/1996 இல் இருந்து 08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம். வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் & விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள். செம்மணி என்பது இரத்த வரலாற்றைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அந்த இரத்தத்தின் மீது இதுவரை யாரும் எதுவுமே செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போது அந்த இரத்தத்தின் மீதுதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 😉 Edited December 10, 2022 by Kapithan Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் MEERA Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2022 5 hours ago, Kapithan said: செம்மணி என்பது இரத்த வரலாற்றைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அந்த இரத்தத்தின் மீது இதுவரை யாரும் எதுவுமே செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போது அந்த இரத்தத்தின் மீதுதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 😉 வடக்கு கிழக்கே இரத்த வரலாற்றைக் கொண்டது. அதற்காக கட்டடம் கட்டாமலா இருக்கிறீர்கள்? மேலும் கிருசாந்தி புதைக்கப்பட்ட இடம் மட்டுந்தான் செம்மணி அல்ல. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் MEERA Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 10, 2022 5 hours ago, Kapithan said: ஐயா, தாங்கள் சைவ சமயமா அல்லது இந்து மதமா? உத முதலில சொல்லுங்கோ. பிறகு மதவாந்தியை யார் எடுப்பது என்பதைப்பற்றித் தீர்மானிக்கலாம். 😏 மேரி மாதாவையும், யேசுநாதரையும் ஏற்றுக்கொண்டதுபோல, அனுமானையும் ஐயப்பனையும் கும்பிட ஆயத்தம், ஆனால் உள்ளூர் அண்ணமாரையும் சிறு தெய்வங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறீர்களா? ஏன் அப்படி ? நான் எந்த சமயம் என்பது உங்களுக்கு தேவையற்ற விடயம். சிறு தெய்வ வழிபாடு வெள்ளையர்களின், அன்நியர்களின் வருகையோடு சீரழிந்தது. சிறு தெய்வ வழிபாட்டோ சைவ சமய வழிபாடோ நிறுவன மயப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெறவில்லை. ஆனால் நாடு விட்டு நாடு வந்த கொள்ளையர்கள் தமது சமய வழிபாட்டு இடங்களை அமைத்து அதனை சட்டரீதியாக பதிவு செய்து ( சட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்) எமது நிலங்களை அபகரித்தர்கள். அதன் தொடர்ச்சியே சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் சிறு தெய்வ வழிபாடு என்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள். Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts