Jump to content

"சூர்யகுமார் யாதவின் ஷாட்ஸ் உங்களை மட்டுமல்ல, அவரையும் ஆச்சரியப்படுத்துகிறது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சூர்யகுமார் யாதவின் ஷாட்ஸ் உங்களை மட்டுமல்ல, அவரையும் ஆச்சரியப்படுத்துகிறது"

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தினேஷ் உப்ரேதி
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கார்ட்டூன் சீரியல்களைப் பார்த்தால் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் எளிது என்று தோன்றும்.

பேட்ஸ்மேனை நோக்கி பந்து எவ்வளவு வேகமாக வந்தாலும் சரி, அது ஆபத்தான பவுன்சராக இருந்தாலும் சரி, கால் விரலை நசுக்கும் நோக்கத்தில் வீசப்படும் 'டோ பிரேக்கராக' இருந்தாலும் சரி, யார்க்கராக இருந்தாலும் சரி, அது கூக்லியாக இருந்தாலும் சரி, 'தூஸ்ரா'வாக இருந்தாலும் சரி, கார்ட்டூன் கதாபாத்திரம் தனது மட்டையை வீசும்போது பந்து காற்றில் பறந்து எல்லைக் கோட்டை தாண்டிச் செல்கிறது.

குழந்தைகள் இந்த காட்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள், கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

அத்தகைய அட்டகாசமான ஷாட்களை விளையாட ஆசைப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கற்பனை காட்சிகள், ஆடுகளத்தை அடைந்தவுடன் காற்றில் பறந்து விடுகின்றன.

 

ஆனால் இந்த நாட்களில் 'கார்ட்டூனை' யதார்த்தமாக்குவது போன்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர்தான் சூர்யகுமார் யாதவ்.

வலது கை பேட்ஸ்மேனான டி20 கிரிக்கெட்டின் இந்த மாஸ்டரை, கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் வானளாவ பராட்டி வருகின்றனர்.

சில உதாரணங்களை பாருங்கள்…

"அவர் ஏன் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நம்பர் ஒன் காட்டியுள்ளார். நான் போட்டியை நேரலையில் பார்க்கவில்லை. ஆனால் இந்த இன்னிங்ஸும் வீடியோ கேம் போல இருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்." - விராட் கோலி

"களத்தில் சூர்யகுமார் பேட்டிங் செய்வதை பார்க்க முடிந்தது என் அதிர்ஷ்டம்" - முகமது கைஃப்

"எனக்கு ஒரு சுவாசக்கருவி தேவை. சூர்ய குமார் யாதவ் என் மூச்சை நிறுத்துகிறார்." - ஹர்ஷா போக்லே

"இந்த நாட்களில் எப்பொதும் வானத்தை நோக்கி. எப்போதுமே தீப்பொறியாக. தன்னுடைய சொந்த பாணியில்." - வீரேந்திர சேவாக்

"நிச்சயமாக. உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்" – லக்ஷ்மண் சிவராமசிருஷ்ணன்

டி20 உலகக் கோப்பை போட்டியில் தன் முத்திரையை பதித்த சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து மண்ணிலும் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார்.

 

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில், சூரியகுமார் உமிழ்ந்த நெருப்புக்கு முன்னால் நியூஸிலாந்து அணி ஓடி ஒளிந்துகொண்டது போலக்காணப்பட்டது.

சூர்யா அதிரடியாக விளையாடினார். விராட் கோலி போன்ற வலுவான பேட்ஸ்மேனாக இருந்தாலும் மறுமுனையில் நிற்கும் பேட்ஸ்மேன் பார்வையாளராக மாறும் வகையில் சூர்யகுமார் ஆதிக்கம் செலுத்துகிறார்.

சூர்யகுமார் கிரீஸுக்கு வந்தபிறகு மற்ற வீரர் 38 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, சூர்யகுமார் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார்.

இந்த இன்னிங்ஸில் அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சேர்ந்து ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

72 நிமிடங்கள் கொண்ட இந்த இன்னிங்ஸில், சூர்ய குமார் யாதவ் நம்பவேமுடியாத பல ஷாட்களை விளையாடினார். அவை குறித்து மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

உதாரணமாக, இந்திய இன்னிங்ஸின் 19வது ஓவர் பற்றிப்பேசினால் வேகப்பந்து வீச்சாளர் லோகி பெர்குசன் கையில் பந்து இருந்தது.

 

சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா

அதிரடியான விளையாட்டு

சூர்யகுமார், ந்யூஸிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் அடித்துக்கொண்டிருந்தார். டெத் ஓவர்களில் பந்துவீசிய அனுபவமுள்ள 32 வயதான பெர்குசன், சூர்யகுமாருக்காக சில சிறப்புத் திட்டங்களை வைத்திருந்தார்.

பெர்குசன் அத்தகைய சந்தர்ப்பங்களில் (பவர் ஹிட்டர் மிகவும் ஆக்ரோஷமாக மட்டை வீசும் போது) மிகவும் பயனளிக்கும் யார்க்கர் பந்தை, மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். அதுவும் பேட்ஸ்மேனிடமிருந்து தூரமாக Wide லைனுக்கு மிக அருகில்.

ஒரு சாதாரண பேட்ஸ்மேனுக்கு இவ்வளவு வேகமான பந்தை தொடுவதுகூடக் கடினம். ஆனால் சூர்யா அதையும் புவுண்ட்ரிக்கு வெளியே விளாசினார்.

வர்ணனையாளர்கள் இந்த பவுண்ட்ரியைப்பற்றி விவாதிக்கவில்லை. மாறாக இந்த அதிவேகப்பந்தை சூர்ய குமார் தனது மட்டையால் எப்படி எட்டினார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

உண்மையில்  ஒரு ஷாட் விளையாடுவதற்கு சூர்யகுமார் தனது பிடியை(Grip) மிக விரைவாக மாற்றிக்கொள்கிறார்.

இதன் காரணமாக அவருக்கு பந்தை அடிப்பது எளிதாகிவிடுகிறது. கிரிக்கெட் கோச்சிங் புத்தகங்களில் இல்லாத, அவரே கண்டுபிடித்த பல ஷாட்கள் இவற்றில் இருந்தன என்று சொன்னால் அது தவறாகாது.

 

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமாரிடம் 'பவர் ஹிட்டிங்'  திறமை மட்டுமே இருக்கிறது என்று சொல்லமுடியாது. பந்தயத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப எங்கு கியரை மாற்ற வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.

மழையால் மிகவும் ஈரமாக இருந்த ஒரு விக்கெட்டில் நியூஸிலாந்து அணி மெதுவான பந்துகளை வீசி, இந்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விரும்பியது.

ஆனால் சூர்யகுமார் இந்த உத்தியை பலனற்றதாக ஆக்கிவிட்டார். நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பந்துகளை சூர்யகுமாரின் மட்டைக்கு அருகே சுழலவைத்தனர். ஆனால் இந்த பந்துகளை பவுண்ட்ரிக்கு வெளியே அடிக்க சூர்யகுமார் தவறவில்லை.

போட்டிக்கு தயாராக என்ன செய்வார்?

"நீங்கள் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும்போது உங்கள் எல்லா வேலைகளையும் மற்ற நாட்களைப் போலவே நீங்கள் செய்கிறீர்கள். ஒரு போட்டி நாளில் கூட நான் 99 சதவிகிதம் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

ஜிம் செய்வதோ, மதிய உணவு சாப்பிடுவதோ அல்லது 15- 20 நிமிட தூக்கமோ அது எதுவாக இருந்தாலும் சரி... அதன் பிறகு களத்தில் இறங்கியதும் நான் நன்றாக உணர்கிறேன்,” என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.,.

கிரிக்கெட் விளையாடாத போது...

"அப்போது நான் என் மனைவியுடன் நிறைய நேரம் செலவிடுவேன். என் பெற்றோருடன் பேசுவேன். நாங்கள் ஒருபோதும் போட்டியைப் பற்றி பேசுவதில்லை. இது என்னை காற்றில் மிதக்காமல் வைத்திருக்கிறது. விளையாட்டு பற்றி எந்த விவாதமும் இல்லை. எனவே நான் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”

உங்கள் ஷாட்ஸின் ரீப்ளேயை பார்ப்பீர்களா?

"கண்டிப்பாக.. ஹைலைட்ஸ் பார்க்கும்போது, என்னுடைய சில ஷாட்களைப் பார்த்து நானே ஆச்சர்யப்படுவேன். நான் நன்றாக விளையாடுகிறேனோ இல்லையோ, ஒவ்வொரு முறையும் போட்டியின் ஹைலைட்ஸை பார்ப்பேன்."

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

சூர்யகுமார் யாதவ்

உலக கோப்பை போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக: 15 ரன்

நெதர்லாந்துக்கு எதிராக: 51 ரன் (நாட் அவுட்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக: 68 ரன்

வங்கதேசத்திற்கு எதிராக: 30 ரன்

ஜிம்பாப்வே: 61 ரன் (நாட் அவுட்)

ரோஹித் ஷர்மாவின் 11 ஆண்டுகளுக்கு முன்பான ட்வீட் வைரலானது

சூர்ய குமார் யாதவுக்கு 20 மாதங்களுக்கு முன்புதான் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

பல வருடங்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதாவது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இறுதியாக நீல நிற ஜெர்சி கிடைத்தது.

ஆனால் டி20 அணிக்கு வந்தவுடனேயே உலக அளவில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறிவிட்டார் சூர்யா.

நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த பிறகு, இந்திய அணியின் வழக்கமான கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் 11 வருடங்களுக்கு முன்பான ட்வீட் மீண்டும் வைரலானது. அதில் அவர் சூர்யகுமாரை எதிர்கால வீரர் என்று கணித்திருந்தார்.

ரோஹித்தின் ட்வீட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் மறுட்வீட் செய்துள்ளது. 2011  டிசம்பர் 10 ஆம் தேதி ரோஹித் ட்வீட் செய்தார். "சென்னையில் பிசிசிஐ விருதுகள் விழா முடிந்தது…. சில சிறப்பான கிரிக்கெட் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்…. மும்பையின் சூர்யகுமார் யாதவ் எதிர்காலத்தில் கவனிக்கப்படவேண்டியவர்."

சூர்யகுமாரின் நீண்ட காத்திருப்பு

2010 டிசம்பர் 15 ஆம் தேதி, ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அறிமுகமான யாதவ், 2021 மார்ச் 14 ஆம் தேதி  நாட்டுக்காக விளையாடுவதற்கான முதல் வாய்ப்பைப் பெற்றார்.

அதாவது உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கான பயணத்திற்காக 11 நீண்ட ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்தபோதிலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் சூர்யகுமார் நம்பிக்கையை கைவிடவில்லை. போராட்ட நாட்களில் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை தனது ஆதர்ச குருவாக சூர்யகுமார். கருதினார். அவரது மனத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி எப்போதும்  இடம்பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்கள் இருந்ததால், ஹஸ்ஸியும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஹஸ்ஸி அதைப் பற்றி புகார் செய்யவில்லை, அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை, தொடர்ந்து ரன்களை அடித்து வந்தார்.

 

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசுர வேகத்தில் ரன் அடிக்கும் வரை இந்திய அணியின் கதவுகள் திறக்கப்படாது என்பதை சூர்யகுமார் உணர்ந்தார்.

ஐபிஎல் போட்டியில் சில நேரங்களில் மிடில் ஆர்டர், சில நேரங்களில்  ஃபினிஷர் என்று அவரது இடம் மாறிக்கொண்டே இருந்தது.

சக வீரர்களுக்கு இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தபோதும் சூர்யகுமார் மனம் தளரவில்லை.  30 வயதை கடந்த பின்னரே இந்தியாவுக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட்வீரர்களுக்கு  விளையாட்டின் இறுதிக் கட்டம் என்று கருதப்படும் முப்பதுகளில்,அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், இக்கட்டான சூழ்நிலையிலும் தன் பாணியை மாற்றிக் கொள்ளாமல் தைரியமாக விளையாடும் வீரராக சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து வருகிறார்  சூர்யகுமார்.

https://www.bbc.com/tamil/articles/cw0wg478znno

  • Like 1
Link to comment
Share on other sites

சூரியகுமார் போல தெரிவுகள் மொத்த இந்திய அணியில் இல்லை. குறிப்பாக பந்து வீச்சில் இல்லை என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.