Jump to content

நேர்காணல் : அவுஸ்ரெலிய உதயசூரியன் பத்திரிகை ஆசிரியர் யாழிற்கு வழங்கிய சிறப்பு பேட்டி !


Recommended Posts

எமது அழைப்பை ஏற்று எமது கலையகதிற்கு பல நேரசிக்கலிற்கும் மத்தியிலும் வருகை தந்த அவுஸ்ரெலியாவில் பலரின் உள்ளம் கொள்ளை கொண்ட பத்திரிகையான உதயசூரியன் பத்திரிகை ஆசிரியர் அவர்களிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு பேட்டிக்கு செல்வோமா............. :)

1)உங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை எமது யாழ் இணையதள நேயர்களுக்காக தரமுடியுமா ரத்தினம் அவர்களே?

நான் கிழகிலங்கையை சேர்ந்த ஒரு தமிழன்,நான் பாடசலையில் படித்து கொண்டிருக்கும் போது முதன்முதலா சிந்தாமணி பத்திரிகையில் பிரவேசம் ஆனேன் எனது சிறுகதைதொகுப்பு அதில் பிரசுரமாகி கொண்டிருந்தது இந்த சமயத்தில் நானும் பத்திரிகை ஆரம்பிக்க கூடாதா அதில் எனது ஆக்கங்களை இடலாம் என்ற ஒரு சிந்தனையின் வெளிபாடு தான் "இளைஞன்" என்ற பத்திரிகையை தாயகத்தில் ஆரம்பித்தேன் ஆரம்பகாலங்களிள் கைஎழுத்து பிரதியாக வெளியிட்டு 1966 அச்சு பிரதியாக தொடர்ந்து 3ஆண்டுகள் வெளியிட்டு வந்தேன் தொடர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சில தடைகளாள் அது கைவிடபட்டது என்பது என் மனவருத்தம்.........

2)தற்சமயம் நீங்கள் புலதிற்கு இடம்பெயர்துள்ளீர்கள் எப்போது புலம் பெயர்ந்தீர்கள் அவுஸ்ரெலியாவிற்கு உங்கள் பார்வையில தாய் நாடு சிறப்பா அல்லது புலம் பெயர் இவ் மண் சிறப்பா இதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

நான் 1996 ஆம் ஆண்டு இங்கு புலம் பெயர்ந்து வந்தவன்..............

என்ன தான் வசதிகள் வாய்புகள் இருந்தாலும் தாயை பிரிந்த சேயை போல் தாய் நாட்டை பற்றிய கவலையுடன் வாழ்ந்து கொண்டிருகிறேன்.....

3)எமது தமிழ் சமூகத்தில் பல பிரச்சினைகள் குறைகள் நிகழ்கிறதை நாம் அவதானிகிறோம் ஆனால் எம் பத்திரிகையாளர்கள் பலர் என்று குறிபிடலாம் ஒரு பக்க சார்பான செய்திகளை தருவதை அவதானிக்க கூடியதாக இருகிறது இதை பற்றைய உங்கள் கருத்து என்ன பத்திரிகையாளர் என்ற முறையில்?வளர்ந்து வரும் இளம் தமிழ் பத்திரிகயாளர்களிற்கு நீங்க சொல்ல விரும்புவது?

ஒரு பத்திரிகையாளனோ அல்லது படைபாளியோ நமது சமூகத்தில் நடைபெறுகின்ற குறை,நிறைகளை எடுத்து கூறுவதாகவே அமைய வேண்டும் என்பதே என் கருத்து,இதில் பாகுபாடு கருதாது கட்சி பேதங்களை மறந்து உண்மையாக எது சரி எது பிழை என்பதை வெளிசதிற்கு கொண்டுவரவேண்டும்,இதை தான் வளரும் இளைய பத்திரிகையாளர்க்கும் கூறுவதோடு தனது கருத்தை வெளிபடுத்துவதால் என்ன நடக்கும் என்று பயப்பிட கூடாது அப்படி பட்டவர்கள் இந்த துறைக்கு வரவும் கூடாது,அத்தோடு நீங்கள் கேட்ட கேள்வி மாதிரி இதை கேட்க கூடிய ஒருத்தராக இருப்பது அது மிகவும் முக்கியமான விடயம் பாரட்டுகள்.... :D

4)"தமிழீழம்" என்ற கோட்பாட்டில் நம்மவர்கள் உயிரை துச்சமாக மதித்து போராடுகிறார்கள் இவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இதை வழி நடத்தி செல்லும் எம் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபகரன் பற்றிய உங்கள் பார்வையில்?

உரிமைக்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை அது முறையானதாக நடைபெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம்,தமிழ் மகன் என்ற வகையில் நானும் தமிழீழத்தை தான் விரும்புகிறேன்.

தமிழர் தலை நிமிர்ந்து வாழ போராடி கொண்டிருக்கு ஒர் உன்னதமான தலைவர்.

5)தற்போது பிரதேசவாதம் முக்கியமாக நம் தமிழ் மக்களிடம் பேசபடும் விடயம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

தமிழர் என்பது ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து இதில் எந்தவொரு வேற்றுமையும் நான் விரும்பவில்லை இது தான் என் கருத்து.. :)

6)பத்திரிகையாளர் என்ற ரீதியில் உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை கூறமுடியுமா?

முடிந்தவரை எமது இளம் சந்தநியருக்கு எமது மொழி சிறப்பு பற்றியும் பாரம்பரிய கலாச்சாரத்தை பற்றியும் புலத்தில் வளரும் இளையவர்களிற்கு அவர்களின் விருப்படி கொண்டு செல்வது என்பது ஆகும்.எமது தமிழ் மொழியை காப்பாற்றுவது அதில் எனது முயற்சியை செய்து கொண்டிருகிறேன் என்னால் முடிந்தவரை.

7)தமிழ் மொழி மோசமாக பின்னடைந்து செல்கிறது இதை பற்றிய உங்கள் பார்வை அத்துடன் இளையவர்கள் முன் வந்து ஆக்கங்கள் மற்றும் பலதரபட்ட விடயங்களை மேற்கொள்ளும் போது சிலர் தமிழை அதிகம் பயின்றவர்கள் என்றே சொல்லலாம் அவர்கள் இவர்களிடம் பிழை பிடித்து உதாசீனம் செய்யும் சந்தர்பங்கள் அதிகம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

எனது பார்வையில் தமிழ்மொழி பேசுவது தலைகுறைவாக சிலர் வழமைபடுத்தி வருகிறார்கள் அது மிகவும் மனமருத்தமான விடயமாகும் தமிழ் ஆர்வம் என்பது இங்கு குறிப்பாக புலத்தில் குறைவாக இருகிறது என் கருத்து,தமிழ் மொழி இன்றைய நிலை தொடருமானல் என்னும் சிறிது காலத்தில் தமிழ் மொழி மறைந்து போகும் என்பது என் கருத்து... :D

யார் யாரிடம் திறமை இருக்குதோ அவர்கள் தங்கள் திறமைகளை கொண்டு வரும் உரிமை இருக்கு அதை யார் குறை சொன்னாலும் விரும்பினாலும் உண்மையை எடுத்து காட்ட வளரும் எழுதாளர்கள் தயக்கம் காட்ட கூடாது............

8)அடுத்து முக்கிய குறை பாடாக எமது சமூகத்தில் நிலவி வருகிறது அதாவது தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் கெளரவங்களை எமது ஈழத்து படைபாளிகளுக்கு கொடுபது மிகவும் அரிது இதை பற்றிய உங்கள் பார்வை?

எம்மிடையே தரம்மிக்க பல கலைஞர்கள் பலதுறை வல்லுநர்கள் வசிகின்றனர் இலைமறை காய் போல் போல் எம் கலைஞர்கள் எம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களின் படைப்புகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்,முதலுரிமையும் அவர்களிற்கு தான் கொடுக்க வேண்டும் தவிர வெறும் புகழிற்காக அயல் நாட்டு கலைஞர்களை கெளரவிப்பது மிகவும் வேதனைகுரிய ஒரு விடயமாகும் தமிழக கலைஞர்களை விட தலைசிறந்த பல கலைஞர்கள் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருகின்றனர் என்பது கடந்த ஒருவருடமாக எனகே புரிந்தது எனது பத்திரிகையில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

9)அவுஸ்ரெலியாவில் "உதயசூரியன்" பத்திரிகையை ஆரம்பிக்க உந்துலாக இருந்த காரணி எது என்பதை கூறமுடியுமா?

எமது இளம் சமுதாயம் பேசுகின்ற அரைகுறை தமிழ் மொழியை பல இடங்களிளும் பலமுறை கேட்டும் பல பெற்றோர்கள் வீட்டிலே தங்கள் குழந்தைகளுடன் ஆங்கில மொழியில் பேசுவதையும் கண்ணுற்று நான் என்னால் முடிந்த வகை எமது இனிய தமிழிமொழி மறையாது இருக்கு சிறுவழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதனை ஆரம்பித்தேன்,எம்மில் உள்ள பல கலைஞர்களை ஊக்குவிக்கும் ஆர்வத்துடன் தான் இதை ஆரம்பித்தேன்.

இலங்கையில் பிறந்து இங்கு வாழ்கின்ற 15- 25 வயதுகுட்பட்ட ஆண்,பெண்கள் தங்களது பெற்றோரின் பெயரை கூட எழுதமுடியாமல் தவிர்திருப்பதை பார்த்திருகிறேன் இப்படியான பல காரணங்களாள் தான் இந்த பத்திரிகையை ஆரம்பித்தேன் என்றே கூறலாம்.

10) உதய சூரியன் பத்திரிகைக்கு அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைத்திருகிறதா இதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் எதிரிபார்ததை விட எனது பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்,எனது முயற்சிக்கு வர்த்தக நிறுவனங்களும் உதவி வழங்குகின்றன,அவுஸ்ரெலியா மட்டுமல்லாது உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரிடம் உதயசூரியன் சென்றுவர வேண்டும் என்பது தான் அவா,ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் தற்போது நன்றாக இருகிறது....... :)

11)தற்போது தமிழ் மொழி குன்றி போய் வருகிறது அதை வளர்கிறோம் என்ற் சொல்லி கொண்டு வாயால் வளர்கிறார்கள் பலர் ஆனால் நம் போராளிகள் உயிரை தியாகம் செய்து தமிழை அழிய விடாம பாதுகாக்கிறார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

வாய் சொல் வீரடி என்று பேச்சிற்காகவும்,கெளரவத்திற்?ாகவும் மொழி பற்றை வெளியிடாம தினமும் தங்களை அர்பணித்து கொண்டிருக்கும் எமது வீரர்களை போல் அனைவரும் இறங்கினால் நல்லது என்பது என்னுடைய கருத்து......

12)தற்போது சாதி,மதம் என்றும் புதிய சாமிமார்கள் உருவாகுவதும் புல தமிழ் மக்களிடயே பிரபலம் ஆகி வருகிறது இதனை பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னை பொறுத்தவரையில் கடவுள் ஒன்று தான் அதை போல் படைப்புகளும் மனிதன் என்ற ஒரே இனம் தான்,இதற்குள் சாதி,மதம் இருப்பதாக தெரியவில்லை.தங்கள் வருமானதிற்காக மக்களை பிழையான வழியில் நடத்தி கொண்டிருகிறார்கள்.......

13)புலத்தில் ஒரு குறைபாடு இளைஞர்கள் தமிழில் நல்ல பல விடயங்களை செய்ய வந்தாலும் அதனை பெரியவர்கள் சிலர் அதை விடுவதில்லை என்றே கூறலாம்,அத்துடன் அவர்களை விழுத்த வேண்டும் என்று செயற்படுவார்கள் என்று கூறலாம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் எமது சமுதாயதில் தனனிவிட யாரையும் ஏற விடுவதில்லை இதனால் இளம் சந்ததியின் அபார மூளைகள் பாதிக்கபடுகிறது.ஆக்கங்களிற்?ும்,படைப்புகளிற்கும் மற்றும் முயற்சிகளிற்கும் நாம் வரவேற்பு காட்டாத காரணத்தால் எத்தனையோ பல நல்ல இளம் படைப்பாளிகள் வராமல் சென்று விடுகின்றனர்,இதை எமது மக்கள் கற்று கொண்டு நல்லதை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,இதில் வயது,படிப்பு,பட்டம் முக்கியமில்லை.

கம்பராமாயணம் இயற்றிய வால்மீகி ஒரு பயங்கர திருடனாக வாழ்ந்தவர் அவர் எமக்கு அன்று தந்த மகாகாவியத்தை இன்று நாம் அனைவரும் போற்றவில்லையா.........

14)காவியங்கள் பற்றி மேலே குறிபிட்டு இருந்தீர்கள் காவியங்கள் கற்பனைகுட்பட்ட விடயம் என்பது எனதும் சிலரினதும் கருத்து இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

காவியங்கள் கற்பனைகுரிய விடயங்கள் என்றாலும் அதில் காட்டபடுகின்ற கற்பனைகெட்டாத பல நல்ல விசயங்களை வாழ்கை முறை தத்துவங்களாக அதில் காட்டபடுவாதல் அதை ஏற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை,அவைகளிள் நல்லவற்றை எடுபோம் தீயவற்றை புறகணிபோம்.

15)பத்திரிகை துறை ஆரம்பித்து அதில் பல இறக்கங்களை கண்டு இன்று அவுஸ்ரெலியாவில் சிறந்த பத்திரிகையா உலா வருகிறது தற்போது ஏனையா நாடுகளிற்கும் பத்திரிகை செல்கிறது இது மிகவும் மகிழ்ச்சிகரமான விடயம் மற்றது 1 வருட பூர்த்தி பத்திரிகை ஆரம்பித்து இதுவரை நீங்கள் எதிரி கொண்ட பிரச்சினைகள் மற்றது வெற்றி என்பனவற்றை எங்களுக்கு கூறமுடியுமா?

பத்திரிகை ஆரம்பித்து அதன் வளர்ச்சிகாக சுமார் 6 மாதங்கள் பயங்கர கஷ்டம் இருந்தது ஆனால் முயற்சியை கைவிடவில்லை அத்தோடு வரவெற்பும் இருந்தது என்று சொல்லலாம் மறைமுக தாக்குதலும் இருந்தது அவை எல்லாம் 13 வெளியீட்டை வெளியிடும் இந்த வேளையில் மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது,எமதுஅனைத்து வாசகர்களிற்கும் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

16)பத்திரிகையளர் என்ற வகையில் உங்களிற்கு யாரை பிடிக்கும்?

எம் இனதிற்காக உண்மையாக சுயநலமில்லாம போராடுகின்ற அனைவரையும் பிடிக்கும்..........

17)"காதல்" இந்த வார்த்தை தற்போது தாரகமந்திரம் இதை பற்றி உங்கள் பார்வையில்?

காதல் என்பது கற்பை போல் புனிதமானது அதை காதலாக மட்டும் பாவிக்க வேண்டும் தவிர காமத்தை தீர்க்கும் ஆயுதமாக பாவிக்க கூடாது.......

18)"கற்பை" பற்றி குறிபிட்டு இருந்தீர்கள் ஆண்களிற்கும் கற்பு உண்டா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக பிறர் மனம் நோக்க ஆண்மை வேண்டும் இதை தான் வள்ளுவரும் கூறி இருகிறார் இது தான் ஆண்களின் கற்பு..........

19)நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்டு இருப்பீர்கள் இதனை எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?நம் சமூகத்தில் பலர் குறைவாக சொன்னா அதனை ஏற்று கொள்ளமாட்டார்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது இரண்டையும் நாம் ஏற்று கொள்ளாவிட்டால் பொது சேவையில ஈடுபடமுடியாது எதிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு ஏற்று கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு......

20)யாழ் இணையதளம் பற்றி நீங்கள் கூற விரும்புவது?

தொடர்ந்து 9 ஆண்டுகள் அரிய சேவை செய்து தற்போது 10 வருடத்தை நோக்கி பயணித்து அரிய சேவை ஆற்றி வரும் இவ் இணைதளம் தொடர்ந்தும் எமது சமுதாயத்தில் உள்ள குறை,நிறைகளை பொது மக்களிற்கு எடுத்து கூறுவார்கள் என்று நம்புகிறேன் இந்த முயற்சிக்கு "உதயசூரியன் பத்திரிகை" சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.................. :)

*எனக்கும் எனது பத்திரிகைக்கும் மதிபளித்து யாழிணையம் சார்பாக பேட்டி கண்ட உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இவர்களின் பணி மென்மேலும் தொடர வெற்றியடைய வாழ்த்துகள்.................. :)

Link to comment
Share on other sites

உதயசூரியன் ,அவுஸ்ரேலியாவில் இருந்து வாற பத்திரிக்கையா ....... ம்ம் பேட்டி ரொம்ப நல்லாயிருக்கு.... முந்தியவிட கேள்விகளிலும் நல்ல முன்னேற்றம் ஜம்மு...... உதயசூரியன் ஆசிரியருக்கும் ஜம்முவுக்கும் பாராட்டுக்கள்....!

டைகர்வானொலி ........ யாழ் உறவுகளைக் பேட்டி கண்டு பின் யாழில் உள்ள கலைஞர்களையும் பேட்டி கண்டு இப்ப பத்திரிக்கை ஆசிரியர் வரைக்கும் போய்ற்று ...... தொடருங்கள்.....! :D

Link to comment
Share on other sites

ஜம்மு கண்ட பேட்டியா இது?

ஜம்முவிடும் பகிடிகள் எங்கே

கேட்ட கேள்விகளின் தரம் எங்கே வாவ்

போகப் போக மெருகு ஏறுகிறதெண்டு சொல்வார்களே அதுதான்

ஜம்முவின் கேள்விகள் வெளிப்படுத்தும் திறமையா?

Link to comment
Share on other sites

கருத்துகள் கூறிய சுண்டல் அண்ணா,அனிபாட்டி,ஈழவன் அண்ணா,சிவா அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்................. :icon_idea:

---------------------------------------------------------------------------------------------

அனிபாட்டி உதயசூரியன் அவுஸ்ரெலியாவில் இருந்து வாற பத்திரிகை தான்........டைகர் வானொலி என்றா சும்மாவா அடுத்த கட்டமா தென்னிந்திய கலைஞர்களுக்கும் போக போகுது டைகர்வானொலி............ :huh: :P .

-------------------------------------------------------------------------------------------------

ஜம்மு விடும் பகிடிகள் தான் இன்று கேள்விகளாக மாறியுள்ளன............திறமையோ எல்லாம் யாழில கற்றது தான் சிவா அண்ணா........... :huh:

Link to comment
Share on other sites

ஜெனரல், வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! இந்திய குப்பைகளை பேட்டி காணாமல் முதலில் நம்மவர்களிற்கு முன்னுரிமை கொடுங்கோ! நன்றி! :D

Link to comment
Share on other sites

நன்றி ஜெனரல் அவர்களே.............இந்திய கலைஞர்களும்.......நம்மவர்களும் சமன் என்று இரண்டு பேட்டிகளையும் ஒன்றாக எடுத்தா தானே விளங்கும்....... எல்லாருக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் தானே ஜெனரல் அவர்களே.............:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.